• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி...! - 18

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
18. எந்தன் ஜீவன் நீயடி..!

தம்பதிகள் இருவருக்குமே வீட்டில் நடந்தவை மனதுக்குள் இருந்ததால் மௌனமாக பயணம் செய்தனர். கோவிலை நெருங்கும்போது கீர்த்திவாசன் பேசினான்,"அம்மா, முன்னாடி எப்படியோ அப்படித்தான் மாமா முன்னாலயும் நாம நடந்துக்கணும். அதனால் முகத்தை கொஞ்சம் சிரித்தார்போல வைத்துக்கொள். இரண்டு தினங்களில் நமக்கு விடை கிடைத்து விடும். அதுவரை நீ இயல்பாக இருக்க முயற்சி செய்" என்று காரை அங்கிருந்த மரத்தடியில் நிறுத்தினான்.

"அவர் எனக்கு அப்பா, அவர் மீது எனக்கும் அக்கறை இருக்கிறது" என்று சொல்ல நினைத்ததை சொல்லாது விடுத்து,"சரி என்று விட்டு இறங்கினாள் அம்பரி .

வீட்டில் வேலை செய்யும் சிவகாமியை அழைத்து வந்து காத்துக் கொண்டிருந்தார் நித்யமூர்த்தி. மகளும் மருமகனும் சேர்ந்து வந்ததை பார்த்த போது, அவர்களின் ஜோடி பொருத்தம் கண்களையும் மனதையும் நிறைத்தது. இருவருமே திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தவர்கள். இப்போது ஒரு விஷயத்திற்காக, இந்த அவசர திருமணத்தை செய்து கொண்டிருந்தாலும்,
காலப்போக்கில் ஒருவரை ஒருவர், புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று அவர் மனதார வேண்டிக் கொண்டார்.

அதற்கு ஏற்றவாறு, அங்கே இருந்த அந்த நேரம் யாவும் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடந்து கொண்டனர். அம்பரி, பொங்கல் வைக்க, சிவசாமி உடனிருந்து உதவினாள். படையல் வைத்து விட்டு கணவனும் மனைவியும் கண்களை மூடி கடவுளை வணங்கினர்.

"என் அம்மாவோடு நான் இழந்த காலங்களை வாழவேண்டும். அவங்களை ஆரோக்கியமாக வைக்கணும் தாயே! அம்பரி க்குகாலம் முழுவதும், எந்த குறையும் இல்லாமல், அவள் மனதுக்கு பிடித்தமான நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடு தாயே" என்று கீர்த்திவாசன் மனமுருக வேண்டினான்.

"என்னோட அத்தை, சீக்கிரமாக குணமாகி எழுந்து நடமாட வேண்டும், நீண்ட காலம் அவர் எங்களுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அவங்க காலம் கடைசிவரை எந்த கஷ்டமும் மன குறையும் இன்றி கழியவேண்டும்" என்று அம்பரியும் மனமுருக வேண்டினாள்.

இருவருமே, அவர்களை அறியாமலே, பிரியாமல் இருக்கும் வாரத்தை மறைமுகமாக, ஒத்த மனதாய் வேண்டிக்கொண்டனர் .. ஆம்! ஆனந்தவள்ளியின் ஆயுள் கூடும் போது அவர்களின் பிரவு எப்படி சாத்தியமாகும்?

"நீங்க இரண்டு பேரும் இப்படியே எங்கேயாவது போய் வாங்க, நாங்க வீட்டுக் கிளம்பறோம்" என்று நித்யமூர்த்தி கிளம்பிவிட,


அடுத்து இருவருமாக சென்றது, பரிசோதனை கூடத்திற்கு, அம்பரியை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, கீர்த்திவாசன், உள்ளே சென்றான். அவன் வருவதற்கு சற்று நேரம் ஆயிற்று.

அம்பரிக்கு உடனடியாக வீடு செல்ல மனமில்லை. திருமணம் ஆன மறுநாளே தனியாய் அவள் எங்கே சென்றாலும் பார்ப்பவர்கள் வாய்க்கு அவலாகும்.. இருவருமே இப்போதுதான் கொஞ்சம் பேச ஆரம்பித்து இருக்கின்றனர், என்றாலும் கீர்த்தி, ஏதோ அதிகம் பேசிக் பழகியவன் போல, அவளுடன் இயல்பாக பேசுகிறான். அவளுக்குத்தான் இன்னும் நடப்பையே முழுதாக நம்பக்கூட முடியவில்லை! இதில் இப்போது அவனிடம் தன் மனநிலையை எப்படி சொல்வது என்று யோசனையுடன் அமர்ந்திருந்த போது..

காரை செலுத்தியவாறே, " நாம் இப்ப என்னுடைய வக்கீல் நண்பனின் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, அப்புறமாக வீட்டிற்கு போகலாம் அம்பரி" என்றதும் சற்று ஆசுவாசம் அடைந்தவளாக சரிதான் என்று தலை அசைத்தாள். ஆனால் மனம் அந்த சின்ன குழந்தையிடம் தாவியது. தாய் இல்லாமல் அந்த வயதில் அது எப்படி இருக்கும் என்று நினைத்தபோது மிகவும் தவித்தது மனது..!

"என்னாச்சு அம்பரி, உடம்புக்கு ஏதும் செய்யுதா? என்றான் கீர்த்தி.

"இ..இல்லை.. அந்த குழந்தையை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது...மேற்கொண்டு, வார்த்தை வராமல் துக்கம் தொண்டையை அடைக்க, சட்டென முகத்தை வெளிப்புறமாக திருப்பிக் கொண்டாள்.

கீர்த்திவாசனுக்கு அவள் வருந்துவது தாங்கவில்லை. இழுத்து தோளில் ஆதரவாக அணைத்துக்கொள்ள துடித்த கைகளை சிரமத்துடன் அடக்கிக் கொண்டான். உரிமை இருந்தும் தன் நிலையை எண்ணி அவனுக்கு, தன் மீது ஆத்திரம் உண்டாயிற்று, உடனேயே, இல்லை.. அவள் வாழ வேண்டியவள்.. என் ஆறுதல் அவளுக்கு வேண்டாம்.. என்று நினைத்தவன், நியாயமாக இப்போது அவள் அந்த குழந்தை அவனுடையதா இல்லையா என்றுதான் குழம்பியிருக்க வேண்டும்.. ஆனால் மாறாக குழந்தையை எண்ணி வருந்துகிறாளே? உள்ளூர அவளை எண்ணி வியந்தான்.
அவளது கலங்கிய முகம்
வேதனை அளித்த போதும் அவன் மௌனமாக காரை செலுத்தினான்.

ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு," நான்கூட இந்த வயதில் என் தாயை பார்த்தது இல்லை. எனக்கு அக்கா இருந்தாள், ஒரு பாட்டி இருந்தாங்க, எங்களை பார்த்துக்கிட்டாங்க. அவங்க இருந்த வரை எங்களுக்கு அம்மா இல்லாத குறை தெரியலை. அப்படித்தான் இங்கே வந்த பிறகு அத்தையும் பார்த்துக்கிட்டாங்க.. ஆனால் தாயும் இல்லாமல், வேறு உறவுகளும் இல்லாமல் அந்த குழந்தை பாவம் எப்படி இருக்கும்? எனக்கு நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கிறது.. வாசன்"

"சிலருக்கு விதித்தது இதுதான் அம்பரி. யார் என்ன செய்ய முடியும்? அது என் குழந்தையாக இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால், நாம் பிரின்ஸிக்கு உதவ முடியும். இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்து விட்டது. அதனால வெளிநாட்டிலேயே, அவளுக்கான நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணிவிடலாம்.. நம்மால் ஆனது அது மட்டும் தான்" என்றான் தீவிரமான குரலில்.

"நல்லது. ஆனால் ஒரு வேளை பிரின்ஸிக்கு ஏதும் ஆகிட்டால் அந்த குழந்தை என்னவாகும்? யாரிடம் இருக்கும்? அ.. அது பாவமில்லை? "

"பாவம் தான். ஒரு வேளை நூறில் ஒரு வாய்ப்பாக அது என் குழந்தையாக இருந்தால், அது பற்றி நான் யோசிக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில், அது நம்ம பிரச்சினை இல்லை அம்பரி.. பெத்தவள் தான் அதை முடிவு செய்ய வேண்டும்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்..

அவன் சொல்வதும் சரிதான் என்று தோன்ற, பேசாமல் இருக்கையில் சாய்ந்து கொண்டு வெளியே வெறித்தபடி இருந்தாள்.

சற்று நேரத்தில் வக்கீல் அலுவலகம் வந்துவிட, "அம்பரி, நான், இதை கொடுத்துவிட்டு சில லீகல் விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டு வர கொஞ்சம் நேரம் ஆகும்..! அதுவரை நீ வேண்டுமானால், அங்கே போய் சுற்றிப் பார், உனக்கு ஏதும் பிடித்தமாக இருந்தால் தயங்காமல் வாங்கிக்கொள், அது நம் கடைதான்" என்று அருகில் இருந்த அந்த AK ஷாப்பிங் காம்பிளக்ஸை காட்டிவிட்டு, சென்றான்.

அம்பரிக்கு, இருந்த மனநிலையில் அவளுக்கு எதுவும் வாங்க தோன்றவில்லை.. பேசாமல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் திடுமென அவளுக்கு அத்தையின் நினைவு வந்தது. இப்போதுதான் அத்தை கொஞ்சம் தேறி வருகிறார். இந்த குழந்தை விஷயம் அவருக்கு தெரிந்தால்? மறுபடியும் அவர் உடல்நலம் கெட்டுவிட்டால்? என்று எண்ணும்போதே மனது வெகுவாக பதறிப்போயிற்று..

அம்பரி நினைப்பது போல ஆனந்தவள்ளியின் உடல்நிலை மேலும் மோசமாகுமா? பரசோதனையின் முடிவு யாருக்கு சாதகமாகும்? பிரின்ஸிக்கா? கீர்த்திவாசனுக்கா?

@ஜீவ ராகம் தொடரும்..!
 

Attachments

  • eiH0XTA6785.jpg
    eiH0XTA6785.jpg
    61.6 KB · Views: 37

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️
முள் மேல் சேலை போல் தான் இந்த குழந்தை விஷயம் ☹️☹️☹️☹️☹️.ஜீவ ராகம் செம செம அம்மா 😍😍😍😍😍😍😍😍😍😍