19. எந்தன் ஜீவன் நீயடி..!
வேலைக்காரியை தங்கள் ஊருக்கு போகும் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு, வண்டியை தேனியில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்கு செலுத்த சொன்னார் நித்யமூர்த்தி. முன்பெல்லாம் தனியாக அவரே தான் காரை ஓட்டுவது வழக்கம். என்றைக்கு அவருக்கு மயக்கம் வந்ததோ அதன் பிறகு புதிதாக ஒரு காரோட்டியை தனக்காக நியமித்துக் கொண்டார்.
மருத்துவமனைக்குள்..
மருத்துவர் பானுபிரகாஷ். நித்யமூர்த்தியை வரவேற்று அமர வைத்தார்.
"வாங்க மிஸ்டர் மூர்த்தி? நான் சொன்னதைப் பற்றி இப்பவாச்சும் யோசிச்சீங்களா? உங்களுக்கு அதிக அவகாசம் இல்லைனு ஏற்கனவே நான் சொல்லிட்டேன்..! நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நாளும் பிரச்சினை கூடுமே தவிர, குறைய வாய்ப்பு இல்லை " என்றார் மருத்துவர் அழுத்தமாக.
"நான் அதுபற்றித்தான் பேச வந்தேன் டாக்டர்..! எப்போது என்று நீங்க சொன்னா நான் கிளம்பிடுவேன்" என்றார் நித்யமூர்த்தி.
"ரொம்ப நல்ல முடிவு மூர்த்தி.. ! உங்க ரிப்போட்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?
"ஆமா டாக்டர்" என்று தன் பையிலிருந்து எடுத்து கொடுத்தார்.
அதை வாங்கி பார்த்த பானுபிரகாஷ், உடனே தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ தொடர்பு கொண்டு சிறிது நேரம் பேசினார். பேசி முடித்துவிட்டு," நான் சொன்ன டாக்டர் அருணன்,
ஒரு கருத்தரங்கிற்கு சென்று இருக்கிறார். நாளை மறுநாள் வந்துவிடுவார். நீங்க அதற்கு மறுநாள் போய் அவரைப் பாருங்க..! நான் உங்களுக்கு லெட்டர் கொடுக்கிறேன், என்றவாறு அவரது லெட்டர் பேடில் ஏதோ எழுதி, கையெழுத்திட்டு நித்யமூர்த்தியிடம் கொடுத்தார்.
டாக்டரிடம் இருந்து விடை பெற்று
வீட்டை நோக்கி பயணமான, நித்யமூர்த்திக்கு, மனது நிறைவாக இருந்தது. சின்ன மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற அவரது ஒரே ஆசை நிறைவேறிவிட்டது. அவர் ஏற்றுக்கொண்ட இரு பெண்களின் கடமையில் ஒன்றில் தவறியிருந்தாலும், மற்றவளின் கடமையை நல்ல முறையில் நிறைவேற்றிவிட்ட திருப்தி உண்டாயிற்று!
வீட்டிற்கு வந்ததும் ஆனந்தவள்ளியை பார்த்து சற்று உடல்நலம் பற்றி விசாரித்தவர் பிள்ளைகள் திருமணம் நல்ல முறையில் நடந்தால், காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் வைத்திருப்பதாக தெரிவித்து, அதன் காரணமாக, தான் சில நாட்கள், கோயில் குளம் என்று வெளியூர்களுக்கு செல்ல இருப்பதை தெரிவித்தார். அம்மாள் யோசனையாக தம்பியை நோக்கிவிட்டு, தனக்கும் சில வேண்டுதல் இருப்பதாக சொல்லி, அதையும் சேர்த்து நிறைவேற்றும்படி, சொன்னவர், சற்று சீக்கிரமாக திரும்பி வந்துவிடும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின் உணவருந்திவிட்டு, தன் இருப்பிடம் சென்றார்.. !
நித்யமூர்த்திக்கு தனக்குள் இருக்கும் ரகசியத்தை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது புரிந்தது..!
அங்கே...
"நீ அனாவசியமாக பயப்படுகிறாய் அம்பரி. குழந்தை யாருடையது என்று தெரியாதவரை நமக்கு அவகாசம் இருக்கு. அதுவரை பிரின்ஸியை வீட்டில் இருக்கவிட மாட்டேன். நாம் வீட்டிற்கு போனதும் அவளை நம் கொடைக்கானல் ரிசார்ட்டில் தங்கச் சொல்லி அனுப்பிவிடுவேன். ரிசல்ட் வரும் போது எதுவானாலும் அப்போது பார்த்துக் கொள்ளலாம்... சரிதானா? என்றதும் அவள் மனதின் பாரம் நீங்கியவளாக நிம்மதியானாள்.
கார் வீட்டை நோக்கி பயணமானது. சற்று நேரம் அம்பரி வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள். அவனும் மௌனமாக காரை செலுத்திய வண்ணம் இருந்தான். பிறகு திடுமென நினைவு வந்தவனாக,"லீவு, முடிந்து நீ எப்போது வேலையில் சேர வேண்டும் அம்பரி? என்றான் கீர்த்திவாசன்.
அம்பரிக்கு ஒருகணம் அவன் கேட்பது புரியவில்லை. அதன்பிறகு தான், விஷயம் புரிய, உள்ளுர ஆச்சர்யமானாள். அவள் வந்து ஐந்து நாட்கள் தான் ஆகிறது என்றால் நம்ப முடியவில்லை..
அவன் காத்திருப்பது புரிந்து, "இன்னும் ஐந்து நாட்களில் கிளம்ப வேண்டும்...! ஆனால் இப்போது கிளம்ப முடியாது. அதனால லீவை நீட்டிக்கலாம்னு நினைக்கிறேன்" என்றாள் சிறு குரலில்..
"அப்படி எத்தனை நாட்களுக்கு நீடிக்க முடியும்? அதற்கும் ஒரு அளவு இருக்கிறதுதானே? என்றான்.
"ஒரு மாதம் வரை எடுக்கலாம். வேலை வேண்டாம் என்றால் இப்போதே தெரிவிக்கிறது நல்லது..!" என்றதும் சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது, பிறகு கீர்த்திவாசன் பேசினான்.
"இது உனக்கு கேம்பஸில் கிடைத்த வேலை அல்லவா? இத்தனை வருஷம் வேலை பாத்திருக்கிறாய், நல்ல பதவியிலும் இருக்கிறாய்.. ! வருமானமும்கூட பெரிய தொகை தான்..! அப்படியிருக்க, வேலையை விடுவதில் உனக்கு சம்மதமா அம்பரி?
"நீங்க சொல்றது எல்லாம் சரிதான். வேலையை விடுவது வருத்தம் தான் வாசன். ஆனால் அதனால் கிடைக்கக்கூடிய நன்மையை பார்க்கும்போது, பெரிய இழப்பெல்லாம் இல்லை. இதே போல இல்லாவிட்டாலும் நல்ல வேலை எனக்கு எப்போதும் கிடைக்கும் வாசன். அதனால இந்த வேலையை நான் வி, இப்ப முடிவு பண்ணிட்டேன்" என்றாள் அம்பரி தீர்க்கமான குரலில்..!
"அவசரப்படாதே, அம்பரி, அம்மாவுக்காக என்று என்னை திருமணம் செய்த கொடுமை ஒன்று போதும். இந்த வேலையையும் நீ விட வேண்டாம்"
என்றவன், அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்துவிட்டு ,
"சரி, சரி, அதை வீட்டிற்கு போய் பெரியவர்களோடு கலந்து கொண்டு முடிவு செய்யலாம்..! என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான். அதன் பிறகு மதிய உணவுக்கான நேரம் வந்துவிட, இருவரும் ஒரு இடத்தில் உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேரும்வரையிலும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கியிருந்தனர்.
வீடு வந்ததும் இருவரும் ஆனந்தவள்ளியை சென்று பார்த்தனர், அவர் அப்போதுதான் தூங்க ஆரம்பித்தார் என்று நர்ஸ் சொல்லவும், அறையில் இருந்து வெளியே வந்தனர்..
"அம்பரி, நான் போய் பிரின்ஸியை கொடைக்கானல் அனுப்பறதுக்கான, ஏற்பாடுகளை செய்துட்டு,வர்றேன். நீ போய் கொஞ்சம் நேரம் ஓய்வெடு..! என்றுவிட்டு அலுவலக அறைக்கு சென்றான் கீர்த்திவாசன்.
வெளியே, லேசாக தூரல் போட தொடங்கியது...!
மாலையில் மழை தீவிரமாக பொழிய ஆரம்பித்த வேளையில், வெளியே சென்றிருந்த ஈஸ்வரி மற்றும் சங்கரியின் குடும்பம் வீடு வந்து சேர்ந்தனர். வந்தவர்கள், பகல் முழுவதும் அலைந்ததில் களைத்து போனவர்களாக அறைகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.
அம்பரி அவர்களது,தேவைகளை வீட்டுப் பெண்ணாக அம்பரி, பார்த்து பார்த்து பூர்த்தி செய்தாள்.
அதில் இரு சகோதரிகளுக்கும், தாய் வீட்டில், அன்னைக்கு பிறகு தங்களை தம்பி மனைவி கைவிட மாட்டாள் என்று நிம்மதியடைந்தனர்.
அன்றைய மழையின் காரணமாக கீர்த்திவாசன், சொன்னது போல பிரின்ஸியை, கொடைக்கானல் அனுப்ப முடியாமல் போயிற்று. அதில் அவனுக்கு சற்று மனத்தாங்கல் தான். என்ன செய்வது, என்ன திட்டம் போட்டாலும் இறைவனின் திட்டத்தை மாற்ற முடியாதே..!
அன்றய இரவு..
நித்யமூர்த்தியுடன் அமர்ந்து, கீர்த்திவாசனும், அம்பரியும் உணவருந்திக் கொண்டிருந்தனர். வெளியே சரசரவென்று மழை நிற்காமல் பெய்து கொண்டிருந்தது..!
முதலில், சாதாரணமாக மறுநாள் ஈஸ்வரி, சங்கரி குடும்பத்தினர் கிளம்புவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு பிரின்ஸியைப் பற்றிய பேச்சு வந்தது..!
"கீர்த்தி, அந்தப் பொண்ணு இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே தங்குவதாக இருக்கிறாள்? என்றார்.
"இன்னும் நாலு நாட்கள் இருப்பாள் மாமா. அவளுக்கு தமிழ்நாட்டை சுற்றிப் பாக்கணுமாம்.. ! ஏன் மாமா? என்றான்.
"சும்மா தான் கீர்த்தி. நீங்க புதுசாக கல்யாணம் ஆனவங்க, நாலு இடத்துக்கு விருந்து அதுஇதுன்னு போய் வர இருப்பீங்க, அப்படியிருக்க இந்த பெண்ணை வீட்டுல விட்டுட்டு போனா நல்லா இருக்காதே.. ! அதான்..!
பெற்றவருக்கே உண்டான கவலை என்று நினைத்துக் கொண்டான் கீர்த்தி. அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க மாமா!
"நீ இருக்கிறப்போ எனக்கு என்ன கவலை தம்பி? இது கிராமம். சட்னு ஊர்ல கண்ணு காது வச்சு கது கட்டிருவானுங்க..! அதுதான் நீ எதற்கும் அவளை சீக்கிரமாக அனுப்ப வழி செய்" என்றவர், அப்புறம், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் நித்யமூர்த்தி
"இப்பவா மாமா? என்றான் கீர்த்திவாசன்.. !
"ஆமா, கீர்த்தி , இத்தனை நாட்களாக நான் வீட்டுப் பொறுப்பையும் வரவு செலவு கணக்குகளையும் பார்த்துட்டு இருந்தேன். இனிமே அதை அம்பரி தான் பார்த்துக்கணும். அதை தவிர, வேறு சில தொழில் விஷயங்களும் இருக்கு, அதை உன்கிட்ட சொல்லிட்டா, எனக்கு கவலை இல்லாமல் இருக்கும், என்றவர் "நான் நாளைக்கு காலையில் வெளியூர் கிளம்பறேன், அந்த விவரமும் உன்கிட்டே சொல்லணும்" என்றார்.
அம்பரிக்கு ஏனோ வயிற்றை கலக்கியது, இந்த வீட்டின் பொறுப்பை நான் பார்ப்பதா? ஏன் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்? ஏதோ மாதக்கணக்கில் வெளியூர் போகப்போவது போல வேறு பேசுகிறார். எப்போதும் அவரிடம் கேள்வி கேட்டு பழகியிராததால்,
கேள்வியாக தந்தையையும் கணவனையும் பார்த்தாள்..!
"ஊருக்கா? ஏதும் பிஸினஸ் விஷயமாகவா மாமா?
என்றான் கீர்த்திவாசன்.
"நான் தான் எல்லாம் உன்கிட்டே விட்டுட்டேனே கீர்த்தி. இனிமே நான் இந்த தொழில் விவகாரங்களில் எல்லாம் தலையிடுவதாக இல்லைப்பா. ஆலோசனை கேட்டால் மட்டும் சொல்வேன்..! என்றவர், "நான் அவுட் ஹவுஸில் இருக்கிறேன்.
நாளைக்கு ஊருக்கு போறதுக்கான பேக்கிங் செய்யணுமே, நீ சாப்பிட்டு விட்டு வா" அதற்கு மேல் பேச இடம் கொடாமல் எழுந்து சென்று விட்டார்.
"அப்படி எங்கே கிளம்பறார் அப்பா? அதுவும் திடீரென்று? அண்ணிங்க எல்லாம் நாளை மதியம் கிளம்பறாங்க, அதுவரை கூட இருக்காமல் அப்படி என்ன அவசரம்? மனதோடு நிறுத்தாமல் படபடத்தாள் அம்பரி.
அதே யோசனையில் இருந்தவன், மனைவி, இயல்பாக படபடப்பதை, ஒருகணம் ஒருவித ரசனையோடு பார்த்துவிட்டு, "அதுதான் என்னை வரச்சொல்லியிருக்காரே, நான் போய் என்னானு கேட்டுட்டு வர்றேன். நீ ரூமுக்கு போ. நான் வர லேட்டானால், எனக்காக காத்திருக்காதே அம்பரி. தூக்கம் வந்தால் தூங்கு..! என்று எழுந்து கைகழுவ சென்றான்...
நித்யமூர்த்தி சொல்லப் போகும் ரகசியம் என்ன? அவர், சிகிச்சைக்காக போகப் போவதை மருமகளிடம் தெரிவிப்பாரா மாட்டாரா? சிகிச்சை முடிந்து திரும்புவார்?
@ஜீவராகம் தொடரும்..!