• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனக்கென பிறந்தவளே 6

Hem chandra

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 17, 2023
6
1
3
Pune
முருகேசன், லலிதா, அம்பிகா, பாப்பாத்தியம்மாள் அனைவரும் மகேந்திரன் பதிலுக்கு காத்திருந்தனார். தம்பி நாளைக்கு நம்ம ஜோசியர வீடுக்கு வர சொல்லு நிச்சயதுக்கு நாள் குறிக்கணும்.

அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அம்பிகா போய் உன் புள்ளைய கூப்புடுவா அவங்கிட்ட கொஞ்சம் பேசணும். சரிங்க இதோ போய் கூப்புடு வரேன்.

ராஜா ராஜா , என்ன அம்மா, கண்ணு வா அப்பா உன்ன கூப்புடுறாரு, எதுக்கு மா, தெரியல வா வந்து என்னனு கேளு. சரியா வா மா, அம்மா அப்பா கோவமா ஏதும் இருக்காங்களா சீச்சீ அப்படிலாம் இல்லடா நார்மலா தான் இருக்காரு வா.

அப்பா கூப்புடிங்களா, இங்க வா வாசு (தன் அருகில் அமர வைத்தார் ).சாப்பிட்டையா சாப்பிட்டேன் பா, வாசு நான் நேர விசயத்துக்கு வரேன். நீ லவ் பண்ணுறானு கேள்விப்பட்டேன் அப்படியா. வாசுவின் முகம் வெளிறி போய்விட்டது.

உன்ன தான் வாசு கேக்குறேன் சொல்லு என வீடே அதிரும் அளவு கத்தினார். ஒரு நிமிடம் வாசுவின் உடல் நடுங்கிவிட்டது. பெரியவனே, அண்ணா, மாமா, பெரியமாமா என அனைவரின் குரலும் கேட்டு . மகேந்திரன் சற்று நிதானமானார்.

அமைதியாக வாசு இங்க வா இங்க உக்காரு இப்போ சொல்லு நீ லவ் பண்ணுரையா, வாசு தலை கவிழ்ந்து ஆமாம் என்றான். நீ லவ் பண்ணுற பொண்ணு யாருனு தெரியுமா நம்ம குடும்ப எதிரி முனியாண்டி யோட பொண்ணு. வாசுவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாசுவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது தான் காதல் நிறைவேறப் போவதில்லை என்பதால்.

வாசு மிகவும் தைரியசாலி, அறிவாளி எந்த பிரச்சனை என்றாலும் சமாளிக்க தெரிந்தவன்.உடல் வலிமையாலும் புத்தி கூர்மையாலும் நினைத்ததை முடிப்பவன். அப்படி பட்டவன் இப்படி கண்ணீர் விடுக்கிறான் என்றால் அது அவன் காதலுக்காக (ரேணு காக) மட்டுமே.


வாசுவின் கண்கள் கலங்குவதை கண்ட மகேந்திரன் மனம் கவலை கொண்டது. உனக்கு எப்படி அந்த பொண்ணை தெரியும் வாசு. அதுவந்து அப்பா என்று தான் அன்னை இருவரையும் பார்த்தான்.

ஆறு மாசத்துக்கு முன்னாடி வண்டில இருந்து கீழ விழுந்தேன்ல அது நானா விழுகல பின்னாடி இருந்து ஒரு வண்டி இடுச்சி தான் விழுந்தேன் . அனைவரும் அதிர்ச்சியில் உரைந்தனர். அந்த இடத்துல யாருமே இல்லபா அப்போ, இடுச்சா வண்டிக்குடா நிப்பாட்டமா போய்ட்டாங்க நான் ரோட்ல விழுந்து கிட்டந்தேன் ஹெல்ப் பண்ண கூட பக்கத்துல யாரும் இல்லபா.

அப்போ ஒரு பொண்ணு என் பக்கத்துல ஓடிவந்தா என் முகத்துல தண்ணியா அடிச்சி என்ன தெளிய வச்சி குடிக்க தண்ணீர் குடுத்து பயப்படாம இருங்க உங்களுக்கு ஒன்னும் ஆகலனு எனக்கு தைரியம் சொன்ன.

என் தலைல இருந்து இரத்தம் வந்தாத பாத்துட்டு அவளோட பேக் வச்சி இருந்து புது ஷால எடுத்து என் தலைல கட்டுப்போட்டு விட்டபா.
அப்பறம் என் போன்ல இருந்து ஆம்பிலன்சுக்கு கூப்பிட்டு அது வரதுக்குள்ள சிவாக்கு கால் பண்ணி வர சொல்லிடா .

நான் அப்பா சித்தப்பாக்கு கால் பண்ணனுன்னு சொன்னே உங்கள இப்படி இரத்தம் வழிய பார்த்த ரொம்ப பயந்துருவாங்க. முதல்ல ஹாஸ்பிடல் போய்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்ச அப்பறம் போன் பண்ணி சொல்லிக்கோங்க.

கொஞ்ச நேரத்துல சிவா வந்துட்டான் அவன் பின்னாடியே அம்பிலன்ஸ் வந்துருச்சி அதுல என்ன ஏத்திவிட்டுட்டு. சிவா கிட்ட பத்திரமா கூட்டிட்டு போங்க அவருக்கு ஏதும் ஆகாது தைரியமா இருங்கன்னு சொல்லிடு தான்பா போன அந்த பொண்ணு.

நான் யாருனு கூட அவளுக்கு தெரியாதுபா நடுரோட்ல அடிபட்டு கிடந்த எனக்கு ஹெல்ப் பண்ணபா. இப்போ கூட நான் தான் அவ ஹெல்ப் பண்ண பையன்னு அவளுக்கு தெரியாது.

எனக்கு அடி பட்டு ஒரு மாசம் கழிச்சு சிவாவ காலேஜ்ல பாத்துட்டு நேர சிவா கிட்ட வந்து எனக்கு எப்படி இருக்கு சரியாகிருச்சா கேட்டபா. இதுல கொடுமை என்னனா சிவா பக்கத்துல தான் நானும் இருந்தேன். சிவா என்ன பார்த்தான். நான் சொல்லதான்னு சொல்லிட்டேன்பா.


அவனுக்கு இப்போ சரி ஆகிருச்சிமா தேங்க்ஸ் மா நீங்க பண்ண ஹெல்ப் க்கு. தேங்க்ஸ்லாம் எதுக்கு இப்போ அவருக்கு சரியாகிருச்சுல அது போதும்னு சொல்லிடு போய்டாப்பா அவ மட்டும் இல்லானா இப்போ என் நிலைமை. வாசு கூறியதை கேட்ட அனைவருக்கும் அந்த நாளின் நினைவு வந்தது.