• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 11

விடிந்தால் திருமணம்.. மாலை தான் அதற்கான நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்க, ஆதி பெரிதும் களைத்து போயிருந்தான்.

ஆனாலும் உற்சாகத்துக்கு குறைவில்லை.. எவ்வளவோ நாட்களாக அன்னையும் மகனும் எதிர்பார்திருந்த அந்த நன்னாள்.

மீனாட்சி சொந்தங்களுடன் மண்டபத்தில் தங்கி இருக்க, சுமதியை வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர் நிச்சயம் முடிந்த பிறகு.

ஆதி அன்னையையும் வீட்டில் சென்று ஓய்வு எடுத்து வருமாறு சொல்ல கேட்கவே இல்லை அவர்.

"இப்ப விட்டா இவங்களோட எல்லாம் எப்ப டா இருக்குறது?" என்று மீனாட்சி கேட்க,

சுமதி திருமணம் முடிந்து சென்றதும் அன்னை என்ன செய்வாரோ என்று வேறு கவலையாய் இருந்தது ஆதிக்கு.

"சுமதி துணைக்கு சாருவும் ப்ரீத்தியும் இருக்காங்க.. நீயும் மாரியும் கைடையில கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வாங்க" என்று அவர் சொல்ல,

"துணைக்கு வேற ஆளே கிடைக்கலையா?" என்று தெளிவாய் அன்னை காதில் விழும்படி தான் மண்டபத்தில் இருந்து கிளம்பி இருந்தான் ஆதி.

"ண்ணா! மாப்பிள்ளை பிரண்ட்டு என் கூட படிச்சவன் தான் ண்ணா.. இப்ப தான் பார்த்தேன்.. நானும் அவங்களோடவே தங்கிக்கிறேன்" என்று ஆதியிடம் வந்து மாரி சொல்ல,

"ஆமா அந்த பொண்ணுகிட்ட ஏதோ பேசிட்டு இருந்தியே? என்ன சொல்லுச்சு?" என்று வந்தான் தியாகு.

அதில் மாரியை ஆதி தீயாய் முறைத்து, "அதுக்கு தான் நேத்துல இருந்தே காலேஜ் போகாம சுத்திட்டு இருக்கியா?" என்றான் ஆதியும்.

"அய்யயோ! அட சும்மா இருண்ணா.. என்னவோ பிளே பாய் ரேஞ்சுக்கு பேசுற.. ஆதிண்ணா என்னை உனக்கு தெரியாதா?" என்று மாரி கேட்க,

"தெரிஞ்சதால தான் டா டவுட்டா இருக்கு" என்றான் ஆதியும்..

"பெருத்த அவமானம்!" என்றான் தலையில் கைவைத்து மாரி.

"இதுல பட்டு வேஷ்டி சட்டை வேற கல்யாணத்துக்கு.. ஆதி! எதுக்கும் இவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கோ" தியாகு சொல்ல,

"இதுக்கு நான் காலேஜ்க்கே போயிரலாம்.. ஒரு ரெண்டு நாள் லீவ போட்டு நிம்மதியா நடமாட முடியுதா உங்களோட?" என்றவன் ஆதியின் முறைப்பில்,

"நான் இங்கேயே தங்கிக்குறேன்.. எங்கம்மா கேட்டா உன்கூட தான் இருக்கேன்னு சொல்லிடுண்ணா" என்று ஓடி விட்டான் ஆதி.

தியாகுவுடன் ஆதியும் சிரிக்க, "ஆதி வீட்டுக்கு போறியா இங்க தானா டா?" என்றான்.

"போனும் ண்ணா.. அம்மா தாம்பூலத் தட்டை கொண்டு போக சொல்லுச்சு.. அதான் நிக்குறேன்" என்று கூற,

"அப்ப நானும் உன்னோட வந்துடுறேன்.. என்னை வீட்டுல ட்ரோப் பண்ணிடு" என்று கூறவும் மீனாட்சி வர, தட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினர் இருவரும்.

"முஹூர்த்தத்துக்கு வந்துடுங்க ண்ணா.. அம்மா அப்பா வருவாங்க தானே?" ஆதி கேட்க,

"வராமலா டா.. அதெல்லாம் நேரத்துக்கு வந்துடுவோம்.. நீயும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து கிளம்பு" என்று சொல்லிவிட்டு விடைபெற்றன் தியாகு.

முதல் முறையாய் தன் வீட்டிற்குள் செல்ல தயங்கி நின்றான் ஆதி. சாரு அங்கே இருப்பதாய் அன்னை சொல்லி இருக்க, கடையிலேயே இருந்து கொள்ளலாமா என்று நினைக்க, அதற்கு சாவி கூட வீட்டில் தான் இருந்தது.

சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டவன் பின் ஆழ மூச்செடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, சிரிப்பு சத்தம் பலமாய் கேட்டது.

சமையலறையில் கொண்டு தட்டை வைத்தவன் தன் அறைப் பக்கமாய் சாவி எடுக்க திரும்ப, கேட்ட முதல் குரலும் சாருவின் உடையது தான்.

அதில் மணியைப் பார்க்க, மணி பண்ணிரெண்டை தொட சில நிமிடங்களே இருந்தது.

'எப்ப தான் வாய் அடங்குமோ.. இந்நேரம் என்ன பேச்சு?' நினைத்ததோடு இல்லாமல் சுமதி அறை முன் சென்று நிற்க, மூவருமே திரும்பி இருந்தனர்.

'அவசரப்பட்டு வந்துட்டோமோ?' நேரம் கடந்தே நினைத்தவனை,

"வாங்க வாத்தியாரே! என்ன இந்த பக்கம்?" என்று வம்பிழுத்தாள் சாரு.

"ஏய்! சும்மா இரு" என்ற சுமதி, "சொல்லு ண்ணா" என்று கேட்க,

"அம்மா அவங்களோடவே தங்கிட்டாங்க சுமதி.." என்றான் சொல்ல வந்ததை சொல்லாமல்.

"போன் பண்ணினாங்க ண்ணா.. இப்ப தான் சித்தியும் பெரியம்மாவும் பத்திரம்னு சொல்லிட்டு கிளம்பினாங்க.. அதான் சாரு, ப்ரீத்தி இருக்காங்களே.." என்ன என்று கேட்காமலே சுமதி பேச,

"உங்க சிஸ்டர்கிட்ட கொசு கூட வர அல்லோ பண்ண மாட்டேன்.. போதும" என்றாள் சாருவும்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நேரமாச்சு.. ரெஸ்ட் எடுன்னு சொல்ல தான் வந்தேன்.. கொஞ்சமாச்சும் தூங்கி எழுந்துக்கோ.. காலையில சீக்கிரமே எழுப்பி விட்டுடுவாங்க" ஆதி சொல்ல,

"ஆமாமா! ரெண்டு பேரும் தூங்குங்க டி" என்றவள் பேச்சை சரியாய் கவனிக்கவில்லை ஆதி.

"சரிண்ணா.. நீங்க தூங்கல?" சுமதி கேட்க,

"தூங்கணும் டா" என்றவன் கிளம்பிவிட்டான் அங்கிருந்து.

சாவியை எடுத்துக் கொண்டு வீட்டின் முன்புறம் ஆதி நடக்க, உள்ளே பெண்கள் கதையளக்கும் சத்தம்.

"இப்ப எதுக்கு இங்க வர்ற?" பின்னால் திரும்பாமலே கொலுசு ஓசையை மறைத்து நடந்த சாருவை ஆதி கண்டுகொண்டு கேட்க, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சத்தமாய் கொலுசின் இசை கேட்க அவன் முன் வந்து நின்றாள் சாரு.

"உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சா? தங்கச்சி என்ன நினைக்கும்? இந்த நேரத்துல யாராச்சும்.. " என்று ஆதி ஆரம்பிக்க,

"அய்யய்யய்ய.. நாலு வார்த்தை பேசலாம்னு வந்தா... ஒரே டயலாக்கை மாத்தி மாத்தி எப்படி தான் பேச முடியுதோ உங்களுக்கு.. சலிக்கவே செய்யாதா?" என்றாள் சாரு.

"நான் என்ன சொல்றேன்.. நீ என்ன.."

"அட போதும் வாத்தி.. அம்மா வையும் சந்தைக்கு போனும்.. காசு குடுன்னு சொன்னதையே சொல்லிட்டு.." என்றவள் அவன் காதுக்கு அருகே குனிய, இவன் பதறி விலக,

"ஷ்யப்பா.. உங்க தங்கச்சிகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்னு சொல்ல வந்தேன்.. அதுக்கே இந்த அக்கப்போரு" என்றாள் சலிப்பாய்.

"என்னனு சொல்லிட்டு வந்த?" சந்தேகமாய் அவன் கேட்க,

'கரெக்ட்டா பாய்ண்டை புடிக்குறானே!' என திருதிருவென விழித்தவள்,

"இப்ப அந்த கதையை நான் சொல்லவா.. இல்ல எதுக்கு வந்தேன்ற கதையை சொல்லவா?" என்று பேச்சை மாற்றிவிட்டதாய் நினைத்து கேட்க,

"அப்ப ரெண்டுமே கதை தான?" என்றான் அவனும் விடாமல்.

"ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகி விட்டதே!" என்று அவள் கூற, அவனுக்கும் இது புதிதாய் இருந்தது.

விரட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அவனால் முடியாதது அல்ல.. தான் செல்ல வேண்டும் என முடிவெடித்து இருந்தாலும் தடுக்க யாரும் இல்லை.. ஆனாலும் அவளை கேள்வி கேட்பதாய் பாசாங்கு செய்து அவனுமே நின்றிருந்தான்.

"சரி சொல்லு.." அவன் கூறி கைகட்டி நிற்க,

"இப்படி திடிர்னு கேட்டா?" என்று கூறவும் அவன் முறைக்க,

"இரு வாத்தி.. ஒரு நல்ல பாயிண்டு சாக்கா வச்சிருந்தேன்.. அது மறந்து போ..." என்றவள், நியாபகம் வந்தவளாக,

"ஹான்.. ஒரு நிமிஷம்.." என்றபடி தனது மொபைலை எடுத்து என்னவோ செய்து அவனிடம் காட்ட, கண்களை அப்படி விரித்தான் ஆதி.

"நல்லாருக்குல்ல? இது தான் கேன்டி பிக்.. நம்ம சில்ற தான் அனுப்பினான்" என அவனையும் மாட்டிவிட, பல்லைக் கடித்தவன்,

"என்ன வேலை பாக்குறீங்க ரெண்டு பேரும்?" என்றான் கோபமாய்.

"ஒரு போட்டோ எடுத்தது குத்தமா? ஏசப்பா.." என்றவள்,

"வேணும்னா நீங்களும் நாளைக்கு நான் பாக்காதப்போ எடுத்துக்கோங்க.." என்று கூற தலையில் அடித்துக் கொள்ளலாம் போல வந்தது ஆதிக்கு.

"சரி சரி டென்சன் ஆக வேணாம்.. கல்யாண வேலைல சரியா தூங்கலையா? கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு?" என்று கேட்க, இன்னும் முறைத்தபடி தான் நின்றான் ஆதி.

"நீ எப்ப தான் வாத்தி என்னை முறைக்காம பார்ப்ப? அப்படி பார்த்தா உன் லுக் என்ன மாதிரி இருக்கும்? என்ன நினச்சுப் பார்ப்ப?" கற்பனை செய்வதை போல திரும்பி அவனிடமே அதுவும் ஒருமையில் கேட்டும் நிற்க, இப்பொழுது எப்படி பார்ப்பது என்றே மறந்து போய் நின்றான் ஆதி.

"இதுக்கு முறைக்குறதே பெட்டர்!" என்றவள்,

"ஆனாலும் செம்ம ஹண்ட்ஸம் வாத்தி நீ" என்று கூற, ஸ்தம்பித்து நின்று விட்டான் ஆதி.

"ரொம்ப டையார்ட்டா தெரியுறதால விடறேன்.. நாளைக்கும் இந்த மாதிரி பிரீ டைம் கிடைச்சா பேசலாம்" என்று ஹஸ்கி வாய்ஸ்ஸில் சொல்லி திரும்ப, உள்ளுக்குள் இருந்து ஒரு பந்து உருண்டு வந்தது ஆதிக்கு.

"ஒரு நிமிஷம்!" ஆதி அழைக்க, ஓடி வந்து அவன் முன் நின்றாள் சாரு.

"எஸ் வாத்தி!" என்று அவள் வந்த வேகத்தில் அவன் பின்னே செல்ல,

"ரொம்ப கஷ்டம் தான்" முணுமுணுத்து சாரு நிற்க, முறைத்தவன்,

"சாரி சொல்ல தான் கூப்பிட்டேன்" என்றான் தடுமாறி.

"எதுக்கு?"

"அது.. அன்னைக்கு.. அப்பா... வந்து.. அப்பாகிட்ட நான் சரியா பேசல.. அதாவது நான் கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாமோனு தோணுச்சு" அவன் சொல்ல,

"அதுக்கு தானா?" என்றவள்,

"ஏன் வாத்தி! இப்படி தோணினதுக்கு பதிலா, நாம ஏன் நல்ல பதிலா சொல்லிருக்க கூடாதுனு உனக்கு தோணியிருக்கலாம்ல? அடுத்த முறை இதை கன்ஸிடர் பண்ணு..ம்ம்!" என்று தலையாட்டி கேட்டு கண் சிமிட்டிவிட்டு அவள் செல்ல, பக்கென்றது அவள் சொன்ன செய்தியும் பார்த்த விதமும்.

"தேவையா! தேவையா? உனக்கு தேவையா?" தன்னை தானே கேட்டபடி
கடையை திறந்து உள்ளே சென்றவன் தண்ணீரைக் குடித்து ஆசுவசமாய் அமர இன்னும் அவள் தன்முன் நிற்பதை போல குறுகுறுப்பு.

"என்ன வாய் பேசுறா.. இவளுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்ததோ!" என்று தன்னை அவள் விரும்புவதை இருவிதமாயும் நினைத்துக் கொண்டான் ஆதி.

திருமணம் பற்றிய எண்ணம் இன்னும் அவனுள் மாறவில்லை என்றாலும் ஒரு விதை அவனுள் விழுந்திருந்தது அவன் அறியாமல்.

அந்த தடுமாற்றத்தையும் கூட சாரு அறிந்திருந்தாள் அவன் பேச்சில்.. அவள் விரும்பும் ஆதி முழுதாய் அல்லவா.. அதனால் அவள் காட்டிக் கொடுக்கவில்லை 'உன்னை நீயே பார்' என்று.

திருமண வேலையில் களைத்து சோர்ந்து போயிருந்த ஆதிக்கு இப்போது என்னவோ அத்தனை புத்துணர்ச்சி.. மொத்த தூக்கமும் அயர்வும் எங்கோ சென்று ஒளிந்திருக்க, படுத்தும் கூட புரண்டுக் கொண்டு தான் இருந்தான்.

அவள் பேசியதும் பேசிய விதமும் என, நினைக்காதே என்று சொல்லியே நினைத்த மனதையும் அடக்க தெரியவில்லை. ரசிப்பதையும் ஒத்துக் கொள்ள முடியவிலல்லை.

"நீங்க எல்லாரும் என்கிட்ட இவளை பத்தி பேசுறதுக்கு முன்னாடி கூட நல்லா தான் இருந்தேன்" என அன்னை, தியாகு, சாரு தாய் தந்தை என அனைவரையும் அந்த நேரத்தில் திட்டிக் கொண்டான்.

வேஷ்டி சட்டையில் யாரிடமோ பேசியபடி நின்ற ஆதியை மாரி அவனறியாமல் புகைப்படம் எடுத்து சாருவிற்கு கொடுத்திருக்க, 'உனக்கு இருக்கு டா' என மாரியையும் நினைக்க தவறவில்லை ஆதி.

தொடரும்..
 
  • Like
Reactions: Manojothi

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
நினைக்காத ஆதியை
நினைக்க வைத்தது சாருவின்
நினைவுகளாய் அவளின் பேச்சு....
நினைத்ததும் ஒரு நிம்மதி......
நினைத்து பார்க்க ஆதி தொடங்க.....
நினைவுகள் நிஜமாகும் காலம்????