• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 15

அடுத்த நாள் காலை ஆதி கடையை திறக்கும் சத்தம் கேட்கவும்

"காங்கிரட்ஸ் டா ஆதி!" என்று தியாகு கூறி வந்தான்.

"எதுக்கு ண்ணா?" என்று நெற்றி சுருங்க ஆதி கேட்க,

"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லவே இல்ல.. சீக்கிரமே கல்யாண மாப்பிள்ளை ஆக போற.. வாழ்த்துக்கள்" என்றதும் அதிர்ந்து தான் போனான் ஆதி.

கைக்கடிகாரத்தில் மணியைப் பார்க்க ஏழு ஐம்பது.. தியாகுவையும் அப்போது தான் நன்றாய் பார்த்தான்.

சில நிமிடங்களுக்கு முன் தான் எழுந்திருப்பான் போல.. டிஷர்ட் லுங்கி என இருந்திருந்தான் அவன்.

'இந்த அம்மாவை..' என நினைத்தவனுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை.

இப்படியாக விடியும்முன் தகவல் சென்றிருக்கும் என நினைக்கவே இல்லை அவன். தியாகுவின் பார்வை வேறு கிண்டலாய் இருக்க,

"ஒரு நிமிஷம் ண்ணா!" என்றவன் வீட்டிற்குள் ஓடியே விட்டான் அன்னையை தேடி.

"சரி சரி டா.. ஓடாத.. நான் போறேன்" என்ற தியாகு கிண்டல் செய்த குரல் வேறு சத்தமாய் ஒலித்தது.

எட்டு மணிக்கு கடையை திறப்பது தான் ஆதியின் வழக்கம்.. ஆதி தாமதமாகும் என்றால் மாரியை வரவழைத்து விடுவான்.. இன்று மாரிக்கு கல்லூரி.

என்னவோ இப்பொழுது கடையில் போய் அமரவே கூச்சமாய் இருந்தது ஆதிக்கு. நேற்று இரவு பதினோரு மணி வரை உடன் இருந்தவர்களுக்கு விடிந்தும் விடியாமலுமாய் அன்னை போய் இப்படி சொல்லி வைத்திருக்கிறாரே என்று அன்னையை தேடி சென்றான்.

"ம்மா! ம்மா!" என்று அழைத்தபடி சமையலறையில் பார்க்க அவர் இல்லை. அவர் அறை பக்கம் செல்ல,

"ஆமா டி.. உனக்கு மாதிரி தான் பண்ணலாம்னு இருக்கேன்.. அண்ணே வேற ஊர்ல இருந்து வர ஆறு மாசம் ஆகுமாம்.. அதான் நாம போய் பூ வச்சிட்டா கல்யாணத்துக்கு முன்ன நிச்சயம் வச்சிக்கலாம் பாரு" என்று போனில் பேசியபடி மீனாட்சி வர, நெற்றியில் கைவைத்து அமர்ந்துவிட்டான் ஆதி.

"எங்க டா போன? இட்லி ஊத்திட்டேன்.. இப்ப சாப்பிடுறியா இல்ல கடையை திறந்து வச்சுட்டு வர்றியா" என போனை காதில் வைத்தப்படியே கேட்க, அவரை பார்த்தப்படியே நின்றான் ஆதி.

"என்ன முறைக்குறான்.. வேதாளம் முருங்க மரம் எற போகுதுன்னு நினைக்குறேன்.. சுமதி நாள் குறிச்சுட்டு நான் உனக்கு அப்புறம் பேசுறேன்.." என்று வைத்துவிட்டு,

"என்ன ஆதி?" என்று கேட்க,

"என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கோபமாய் கேட்க நினைத்தவன் குரல் சிணுங்கல் போல தான் வந்தது.

"நான் என்ன பண்ணுனேன்?"

"தியாகுண்ணா பல்லு கூட விளக்காம வந்து வாழ்த்து சொல்றாங்க" என்று பல்லைக் கடித்து அவன் கூற,

'அவன் தான் சொரிஞ்சு விட்ருக்கானா!' என நினைத்தவர்,

"அதனால என்ன? கல்யாணம்னா எல்லாரும் சொல்றது தானே?" என்று சொல்லி தப்பிக்க பார்க்க,

"ம்மா.. இப்படியா விடிஞ்சும் விடியாமலுமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பிங்க? ஏன் மா.." என்றவன்,

"அங்க எல்லாம் இப்ப போக வேண்டாம்.. மத்தியானமா போய் பேசுங்க" என்று ஆதி சாரு வீட்டிற்கு செல்வதை சொல்லவும்,

"ஆதி!" என்று பாவமாய் பார்த்தார் மீனாட்சி.

"என்ன?" என்று புரியாமல் அவன் கேட்க,

"அங்க பேசிட்டு தான் தியாகு வீட்ல விஷயத்தையே சொன்னேன்" என்று கூறவும் கண்கள் இருட்டிவிட்டது ஆதிக்கு.

"ம்மா?" என்று அவன் ஸ்தம்பித்து கண்களை விரிக்க,

"அய்யோ ண்ணோவ்!" என்று ஓடி வந்து எதிர்பாரா நேரம் அணைத்திருந்தான் ஆதியை மாரி.

அந்த நேரத்தை பயன்படுத்தி நழுவி உள்ளே சென்றுவிட்டார் மீனாட்சி.

"சூப்பர் ண்ணா.. சூப்பர் ண்ணா.. எவ்வ்ளோ சந்தோசமா இருக்குது தெரியுமா? இப்போ தான் அம்மா சொல்லிச்சு.. நைட்டு கூட உன்கூட தான வந்தேன் ஒன்னுமே சொல்லல நீ? என்னவோ போ ஆனா ரொம்ப ஹாப்பி ண்ணா நான்.. சாருக்கா வீட்டுக்கு போனேன்.. அக்கா இன்னும் எழுந்துக்கல போல.. சரி சரி பரவால்ல நான் காலேஜ்க்கு போய்ட்டு வந்து அக்காக்கிட்ட ட்ரீட்டு வாங்கிப்பேன்.." என்ற மாரி ஆதியை பேசவே விடாமல் பேசி செல்ல, மயக்கம் வராத குறை தான் ஆதிக்கு.

"ஆச்சி! இப்ப தான இவனுக்கு டிரஸ் எடுத்தோம்னு எல்லாம் உன் கஞ்சத்தனத்த காட்டம சும்மா டாப் டக்கறா எனக்கு ஆதி ண்ணா கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுத்து தர்ற" என்றபடி சமையலறை உள்ளே சென்றவன் வெளி வரும் போது டம்பளரில் பாயசத்தோடு வந்தான்.

"இது வேறயா?" ஆதி சொல்ல,

"அப்புறம் ண்ணா.. எப்ப கல்யாணம்? சாருக்கா இங்க வந்துட்டா இன்னும் ஜாலியா இருக்கும்லண்ணா வீடு" என்றபடி பாயசத்தை பருக, அத்தனைக்கும் ஆதி ஒரு பார்வை மட்டுமே.

"ஏன் ஆச்சி அண்ணா இப்படி பாக்குது?" மாரி கேட்க,

"நீ வேப்பிலை அடிக்காம கிளம்பிட்டன்னா காலேஜிக்கு போவ.. இல்லைனா உன்பாடு கஷ்டம்" என்று மீனாட்சி செல்ல,

"வந்த டைமிங் சரி இல்ல போலயே!" என்ற மாரி உடனே கிளம்பாமல் வாயை மட்டும் மூடியவன் தன் சந்தோஷத்தை மீனாட்சியுடன் பகிர்ந்தே கிளம்பினான்.

"எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கேன்.. அசையுறாளா பாரு.." என்று இன்னும் கத்திக் கொண்டிருந்தார் தேவி.

மீனாட்சி வந்து ஆதியின் சம்மதத்தை சொல்லி சென்று இரண்டு மணி நேரம் ஆகிறது.

பத்து மணிக்கு செல்ல வேண்டிய வகுப்பிற்கு ஒன்பது மணிக்கு மேல் எழுந்து அரைகுறையாய் சாப்பிட்டு கிளம்பும் சாரு காலையிலேயே ஆதியின் சம்மதத்தை கூறினால் சந்தோஷமாய் எழுவாள் என நினைத்திருக்க,

"ஓஹ்!" என்றவள் இன்னும் இழுத்து போர்த்தி தூங்கினாள். சாரு வியந்து பார்ப்பாள் என தேவி நினைக்க, இங்கே அவளின் தொடர்ந்த தூக்கத்தில் அதிர்ச்சி தான் தேவிக்கு.

"என்ன டி இவ இப்படி இருக்குறா?" சின்ன மகளிடம் புலம்ப,

"க்கா! உனக்கு ஹாப்பியா இல்லையா?" என்றாள் அக்காவின் தலையணை அருகே அமர்ந்து தங்கை.

"அதெல்லாம் ஹாப்பி தான்.. தூக்கம் போகுற அளவுக்கு எல்லாம் ஹாப்பி இல்ல.. ஏதோ துக்கம் குறையுற அளவுக்கு தான் ஹாப்பி.. இதையே என்னனு சம்மதம் சொல்லிச்சோ வாத்தி" என்றாள் கண்களை திறவாமலே.

"என்னக்கா சொல்ற.. ஆனா நிஜமா அவங்களுக்கும் உன்னை புடிச்சிருக்கு.. ஜாடிக்கேத்த மூடி மாதிரி தான்" என்றாள் தங்கை நேற்று அவனின் பேச்சினை நினைத்து.

"உனக்கு அவ்வளவு நக்கலா போச்சா! அவரு மட்டும் இவ்வளவு நாள் வெயிட் பண்ண வைப்பாராம்.. நாங்க அவரு கூப்பிடாமலே வண்டில ஏறி வரணுமாம்.. கொழுப்ப பாரேன்.. கரைக்குறேன்" என்றாள் சபதம் போல.

"எப்படி தான் உன்கிட்ட மனுஷன் குப்பை கொட்ட போறாரோ.. என்ன பாடு படுத்துற நீ?" ப்ரீத்தி கிண்டல் செய்ய,

"எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு ப்ரீத்தி.. சும்மாவே ஆதி பேசவே மாட்டான்.. இவளை கல்யாணம் பண்ணின அப்புறம் இன்னும் சுத்தம்" என்றார் இவர்கள் பேசுவதை கேட்டபடி வந்த தேவி.

"சும்மா பச்சபுள்ள மாதிரி வாத்தியை கொஞ்சாதீங்க.. இப்படி இருக்கவங்களை தான் நம்ப முடியாது.. இப்ப கூட அது முழு மனசா சொல்லிருக்குமானு எனக்கு டவுட்டா தான் இருக்கு" என்றாள் சிந்தனையாய்.

அதன்பின் சாரு எழுந்து தன் காலை வேலைகளை செய்து கொண்டிருக்க, தேவியின் பேச்சும் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

"பூ வைக்கறது தான் பெட்டர்.. ஆறு மாசம்னு அப்பா சொன்னாங்க.. முடிஞ்சா மூணு மாசத்துல லீவ போட்டு வர சொல்லிட்டணும்" என்று பேசியபடியே உணவை எடுத்து வைக்க,

"ம்மா! எதுக்கும் நல்லா கேட்டுக்கோங்க.. ஏதாச்சும் ரூல் புக் போட்டு அவங்க அம்மா கையில குடுத்துருக்க போகுது வாத்தி" என்றாள் சாரு.

"என்ன டி இது வாத்தினு.. இனி அப்படிலாம் கூப்பிடாத.. மரியாதையா இருக்காது" என்றார் அவள் பேசியதை காற்றில்விட்டு.

"ம்ம் உங்களுக்கு கிளாஸ் எடுத்தா தெரியும்.." என்றவள் பேக்குடன் வெளியே வர, ஆதி மட்டும் கடையினில்.

'என்ன சில்றய காணும்!' சொல்லிக் கொண்டவள்,

"டேய் சில்ற!" என்ற அழைப்பில் ஆதி திரும்பினான்.

"அவன் இல்ல?" என்றவள் பதில் வரும் முன்பே "தேங்க்ஸ் வாத்தி!" என்றாள் தன் முன் தயாராய் நின்ற தன் வண்டிக்காக.

எதற்கும் பதில் சொல்லாமல் ஆதி பார்த்தபடி இருந்தான். வீட்டில் இருந்து வெளியே வந்து கடையில் அமர்வதற்குள் மூச்சுமுட்டி போயிருந்தது அவனுக்கு.

எந்த விகல்பமும் இல்லாது தன் இயல்பையும் மாற்றாது என அதற்கு அப்படியே எதிராய் இருந்தாள் சாரு. அதுவே அவளிடம் இன்னும் அதிகமாய் பிடித்தது கூட.

"கன்டென்ட் இருக்கு வாத்தியாரே.. அவன் இருந்திருந்தா செம்மயா கலாய்ச்சு விட்ருப்பேன்" ஆதி பார்வை புரிந்து சாரு சொல்ல, முகத்தை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை ஆதிக்கு.

"என்னவோ நான் உங்களை கொடுமப்படுத்துற மாதிரியே என் வீட்டுல ப்ளேட் போடுறாங்க வாத்தி.. ஒரு வார்த்தை கூட பேசியிருப்பேனா உன்கிட்ட?" சாரு கேட்க, வாயில் கைவைக்காத குறை ஆதிக்கு.

"பொண்ணு இவ்ளோ பேசுறா நீயும் இருக்கியே!" மனசாட்சி வேறு ஏற்றிவிட, "பாத்துக்கலாம்.. இன்னும் நாள் இருக்கு" என்பதாய் இருந்தது ஆதியின் பதில்.

"எங்களுக்கும் சில பீலிங்ஸ் எல்லாம் இருக்குது" சொல்லியபடியே சாரு வண்டியில் ஏறி அமர, ஓரக்கண் பார்வை மட்டுமே அவனிடம்.

"அப்படிலாம் லவ்வை ஓகே பண்ணாத பையன் பைக்குல சட்டுன்னு போய் உட்காந்துரமாட்டோம்" என்று கூறவும் வேறு பக்கமாய் அவன் திரும்பிக் கொண்டான்.

"இருக்கட்டும்.. எவ்ளோ நாள் திரும்புதுன்னு நானும் பாக்குறேன்" என்றவளுக்கு அவனின் ஒவ்வொரு அசைவும் அத்தனை துள்ளளைக் கொடுத்திருந்தது.

"அள்ளுது வாத்தியாரே! நான் கிளம்புறேன்.. இல்ல இங்கேயே சீட்டப் போட்டு உட்காந்துருவேன்" என்றவள் பறந்து செல்ல, அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன் முகத்தில் ஆர்ப்பரிப்பாய் புன்னகை.

எதிர்நோக்கும் அளவில் அவன் நேசம் வளரத் தொடங்க, வளந்துவிட்ட நேசம் அடுத்த கட்டத்தை எண்ணி அவளை உற்சாகமாய் பறந்து செல்ல வைத்தது.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
ஆதி அம்மா அமர்க்களம்......
அச்சோ..... ஆதி முடியல.....
சகஜமாய் சாரு....சூப்பர்...
அடுத்து என்ன???