அத்தியாயம் 27
ஆதி சாரு திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்திருந்தது.
சாரு போகவே மாட்டேன் என அடம் பண்ணியவளை அப்படியே அவள் போக்கில் விடாமல் மீண்டும் பாட்டு வகுப்பு, கம்ப்யூட்டர் என செல்ல வைக்க ஆதியும் அடம் செய்ய, இவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்தவர்கள் பாடு தான் தலையில் கைவைக்கும்படி ஆனது.
"உன் புருஷனுக்கு என்ன தான் ஆச்சு? இப்போ எதுக்கு உன்னை வேலைக்கு போக சொல்லுறான்?" என மீனாட்சியே மருமகளுக்கு பரிந்து வர,
"ஆதி சொன்னா அர்த்தம் இருக்கும் டா மா.. நீ கிளாஸ் போயேன்" என வெளிநாட்டில் இருந்து போன் செய்தார் தந்தை ஸ்ரீரங்கம் சாருவிற்கு.
"வீட்ல இருந்து என்ன பண்ண போறா? கடைல நின்னு அவன்கூட சேர்ந்து அரட்டை அடிக்குறா.. ரெண்டும் சும்மாவே ஆடும்.. இப்ப சொல்லவே வேண்டாம்.. அவ போகட்டும்" என்றான் ஆதி.
கடையை விரிவு படுத்திய பின் நன்றாய் பிரபலமாகி இருக்க, லாபமும் இரட்டிப்பாகி இருந்தது ஆதிக்கு.
அதற்கே மருமகளை தாங்கிய மீனாட்சிக்கு மாலை சுமதி நாட்கள் தள்ளி சென்ற செய்தியை அலைபேசியில் கூறவும் சாருவை தான் கொண்டாடி தீர்த்தார்.
"உன் வாய் முஹூர்த்தம் பளிச்சுடுச்சு சாரும்மா.." என்று சொல்லியவர் கண்ணீரோடு சாருவை அணைத்துக் கொள்ள புன்னகைத்து பார்த்து நின்றிருந்தான் ஆதி.
அன்று இரவு சாரு அறைக்கு வந்த போது தனியாய் நின்று அப்படி ஒரு சிரிப்பு ஆதி சிரித்துக் கொண்டிருக்க, பார்த்ததும் சாருவுக்கும் அது ஒட்டிக் கொண்டது.
"ஏன் இப்படி சிரிக்குறிங்க வாத்தியாரே?" ஒன்றும் புரியாமலே சிரித்து அவள் கேட்க,
"உனக்கு இன்னும் அம்மாவை பத்தி தெரில சாரு" என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
புரியாமல் சாரு பார்க்க, "காலையில தெரியும்" என்றவன் புன்னகை மட்டும் நின்ற பாடில்லை. கேட்டும் அவன் சொல்லாமல் போக,
"ரொம்பத்தான் பிகு பண்றீங்க.. நான் மீனாம்மாகிட்டயே கேட்டுக்குறேன் காலையில" என்றவள் அவனிடம் கேட்காமல் விட, அவன் நினைத்து நினைத்து சிரித்தபடி தான் நடந்தது காலையும்.
"மீனாம்மா எனக்கு டீ" என சாரு எழுந்து வர,
"சாரு.. அத்தை ஆகிட்டியாமே... வாழ்த்துக்கள்.. கூடிய சீக்கிரம் நீயும் நல்ல செய்தி சொல்லணும்" என்றார் தியாகுவின் அன்னை மாடியில் நின்று.
சாருவிற்கு புரிந்தாலும் காலையிலே அவர் கூறியதில் விழித்து நிற்க, பின்னால் வந்த ஆதி வாய் மூடி சிரித்து நின்றான்.
அடுத்ததாய் சாருவின் அன்னை கூட வந்துவிட சாரு குழப்பமாய் பார்க்க, அவரும் மீனாட்சியிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
"என்ன வாத்தி நடக்குது இங்க?" சாரு கேட்க,
"ம்ம் உங்க மீனாம்மா வேலை தான் எல்லாம்.. அவங்களுக்கு இதான் வேலையே.." என்றவன் இதற்கு முன்பு நடந்ததை சொல்ல,
"அய்யயோ மீனாம்மாக்கு இப்படி ஒரு வியாதி வேற இருக்கா?" என்றதில்,
"அடிங்.. வியாதியா?" என்றவன் வீட்டின் முன்புறம் என்பதை மறந்து துரத்த, சாரு ஓட இரு அன்னைகளும் சிரித்தபடி உள்ளே சென்றுவிட்டனர்.
சுமதி மாமியார்க்கு சந்தோசம் தாங்கலையாம் தேவி.. சுமதி விஷயத்தை சொன்னதுல இருந்து அவளை விழுந்து விழுந்து கவனிச்சுக்குறாங்களாம்" மீனாட்சி கூற,
"அவ்வளவு தான் தேவி ம்மா.. மனுஷங்க எல்லாம் அப்படி தான.. அதுவும் சீரை எப்படி வாங்கனு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு இப்படி ஒரு நல்ல செய்தி.. இனி சீர் வந்தாக தான செய்யணும்னு ஒரு கணக்கு போட்ருப்பாங்க" என்று தேவி சொல்ல, அது உண்மை தான் என்பதாய் தலையாட்டினார் மீனாட்சி.
"ஆதி மட்டும் இல்ல தேவி.. சாருவும் சேர்ந்து அமர்க்களமா சுமதிக்கு எல்லாம் நல்லா செய்வாங்க.. எனக்கு அந்த நம்பிக்கை எப்பவோ வந்துடுச்சி.. இப்ப சுமதி வாழ்க்கைக்கும் ஒரு நல்ல வழி கிடைச்சிருக்கு.. பசங்க நிம்மதியா சந்தோசமா வாழ்ந்தா போதும்.. வேற என்ன வேணும்" என்றவருக்கு மனம் நிறைவாய் இருந்தது.
"இதுங்களுக்கு சுத்தி போட்டுடனும் தேவி!" என்கவும் மறக்கவில்லை மீனாட்சி.
மீனாட்சியோடு சேர்ந்து புதுப்புது நாடகங்களைப் பார்ப்பது அவருடன் கதை பேசுவது என மீனாட்சிக்கான நாட்களையும் அழகாக்கி இருந்தாள் சாரு.
திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில் ஆதி சாரு இடையில் நெருக்கம் வந்ததோடு தினம் ஒரு பஞ்சாயத்து இல்லாமல் இருக்காது.
இடையே மாரியை வேறு இழுத்து விடுவாள் சாரு. அவனும் நானும் நாட்டாமை தான் டோய் என ஓடி வர இது சரி வராது என்று தான் ஆதி இந்த முடிவிற்கு வந்ததே.
"தோ பாருங்க.. நல்லா யோசிச்சிக்கோங்க.. நான் கண்டிப்பா கிளாஸ் போனுமா?" சாரு முடிவாய் கேட்க,
"போயே ஆகணும்!" என்று ஆதியும் சொல்ல,
"இதுக்கு எதுக்கு டா கல்யாணம் பண்ணின?" என்று மீனாட்சி கேட்க,
"அதுக்கு தான் மெதுவா பண்ணலாம் சொன்னேன்.. கேட்டீங்களா?" என்று ஆதி கேட்டதும் அடுத்த பஞ்சாயத்தாக்கினாள் சாரு.
"ஓஹ்! அப்ப நான் கல்யாணம் பண்ணி வந்தது உங்களுக்கு பிடிக்கல அப்படி தான?" என்று கேட்க,
"நான் எப்ப அப்படி சொன்னேன்?" என்றான் ஆதி.
"பின்ன இப்ப சொன்னியே?" என்று மீனாட்சி வேறு கோர்த்து விட, 'ஷ்யாப்பா' என நொந்து கொண்டான் ஆதி.
"ஏய்! நான் அப்படி சொல்லல சாரு..." என்ற ஆதியை இடையிட்டவள்,
"நான் போறேன்.. ஆனா கம்ப்யூட்டர் கிளாஸ் போகல.." சட்டென்று கூறியவள் தோரணையில் ஆதி சந்தேகமாய் பார்க்க, அலுவலகம் செல்லப் போவதாக சொல்லவும் ங்யே என திருட்டு விழி விழித்தான் ஆதி ஏற்கனவே அந்த அலுவலகத்தை அறிந்தவன்.
அது பகுதி நேர வேலை மையம். திருமணத்திற்கு முன் நண்பர்களுடன் விளையாட்டாய் நேர்முகதேர்வு சாரு சென்றிருக்க, அதில் வெற்றி பெற்றதை பற்றியும், இவள் செல்ல விரும்பாமல் இருந்தது பற்றியும் என ஏற்கனவே ஆதியிடம் கூறி இருக்கிறாள்.
அது எல்லாம் முக்கியம் அல்லவே. வேலை நேரம் மதியம் இரண்டு மணி முதல் இரவு ஒரு மணி வரை. அதற்காகவே அவன் அவ்வாறு விழிக்க, அது தெரியாமலே,
"அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம் சாரும்மா.. அவன் கிடைக்குறான்.. அடுத்த மாசம் சுமதிக்கு அஞ்சாவது மாசம்.. அண்ணி முறைக்கு நீ தான் வளையல் போடணும்" என்று பேச்சை மாற்றியபடி உள்ளே அழைத்து செல்ல, ஆதியைப் பார்த்தபடியே சென்றாள் சாரு.
ஆதி அவள் அலுவலகம் செல்லப் போவதாய் சொன்ன போதே அமைதியாகி இருக்க, அவள் பார்வையில் மொத்தமாய் ஆஃப்.
இரவு உணவின் போது தோசை வார்ப்பதாய் சொல்லி சாரு உள்ளேயே நின்று கொள்ள, ஆதிக்கு அன்னை பரிமாறினார்.
சாரு கோபம் தெரிந்தவன் அமைதியாய் சாப்பிட்ட பின் அறைக்கு சென்றுவிட, மீனாட்சிக்கும் புரிந்தது அவர்களின் ஊடல்.
சாரு அறைக்கு வந்தவள் அவனை முறைத்துவிட்டு படுக்கைக்கு செல்ல,
"இங்க வா சாரு!" என்றான் ஆதி தன்னிடம் வராமல் செல்பவளை.
"இன்னைல இருந்து உங்களுக்கும் எனக்கும் எட்டு மாசத்துக்கு பேச்சு இல்ல.. நீங்களும் பேச வேண்டாம்.. நானும் பேச மாட்டேன்.." என்றவள் படுத்துக் கொள்ள,
"ப்ச்! சாரு! இப்ப என்ன? அதான் அம்மா போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க இல்ல.. விடு போ வேண்டாம்.. கடைக்கு வந்து அந்த ஓட்ட வாய் கூட சேர்ந்து வாயாடு.. போதுமா?" என்று கேட்க,
"ஓஹ்! அப்ப சார் அம்மா சொன்னதால என்னை போக வேண்டாம்னு சொன்னிங்க.. நான் சொன்ன ஆபீஸ் எல்லாம் உங்களுக்கு பிரச்சனை இல்ல அப்படிதான?" என்று கேட்க,
"ஏய்! அடங்கு டி.. பேச்சும் அதிகம்.. கோபமும் அதிகம்.." என்றவன் அவள் பக்கமாய் சாய,
"பிச்சு பிச்சு.. தள்ளி போங்க.. என்ன சொன்னிங்க? மெதுவா கல்யாணம் பண்ணிருக்கலாம் சொன்னிங்க தான? அதான்.. கல்யாணம் ஆகி நாலு மாசம் தான முடிஞ்சிருக்கு.. நீங்க சொன்ன கணக்குக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு.. அந்த கணக்கு முடியட்டும்.. மறுபடி கல்யாணம் பண்ணிட்டு தான் மத்ததெல்லாம்..." என்றவள் பேச்சில் உதடு மடித்து சிரித்தவன்,
"ஓஹ்! அப்போ இந்த நாலு மாசமும் நான் உன்னை..." என்றவன் வாயை உருண்டு அவன் புறம் வந்து அடைத்தவள்,
"இந்த பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம்.. அதை எல்லாம் காந்தி கணக்குல வச்சுக்கோங்க.." என்றவளை அவன் அணைத்துக் கொண்டு,
"இதையும் அதே கணக்குல வச்சுக்கோ!" என்றவன்,
"அன்னைக்கு உன்னை தேடி வந்து கல்யாணத்தை அப்புறம் வச்சுக்கலாம்னு சொன்னப்ப உங்க இஷ்டம் வாத்தினு சொன்ன தான? இப்போ ஒரு பேச்சுக்கு அதை சொன்னா அதையே புடிச்சுக்குவியா?" என்று கேட்க,
"ஹான்.. நியாபகம் இருக்குல்ல? அது தான்.. அதே தான்.. உங்க இஷ்டம்னு சொன்னேன்ல? அப்போவே சரினு விட்ருக்க வேண்டியது தான? இப்போவும் உங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்து அதையே சொல்லிட்டு இருந்தா நான் கேட்டுட்டு இருக்கணுமா? முடியாது.. இன்னும் எட்டு மாசத்துக்கு நீ யாரோ நான் யாரோ?" என்றவள் இன்னும் அவன் அணைப்பில் தான் இருந்தாள்.
"பேசி டையார்ட் ஆயிட்டியா? அப்படியே தூங்கு பார்க்கலாம்" என்றவன் தன் மேல் இருந்தவளை தட்டிக் கொடுக்க,
"யோவ்! உனக்கெல்லாம் கோபமே வராதா?" என்று கேட்க,
"அப்படின்னா?" என்று கேட்டு இன்னும் வெறுப்பேற்றினான்.
"உன்னை..." என்றவள் அடித்து கடித்து வைக்க,
"பழி வாங்குறேன்னு சொன்னதுக்கு இது சரியா போச்சு" என்று அவள் கடித்த தடத்தை காட்டியவன்,
"இந்த ஆபீஸ் போற எண்ணத்தை இன்னைக்கு இந்த நிமிஷமே குழி தோண்டி புதச்சிடு" என்று கூற, அவனை மடக்கும் வழியை கண்டு கொண்டாள் அவள்.
"மாட்னியா? நான் போவேன்.. அதுவும் நாளைக்கே போவேன்.. ஆபீஸ் ஒரு மணிக்கு முடியும்.. கேப் ஒன்றைக்கு தான்.. வீட்டுக்கு வர எப்படியும் மூணு மணி ஆகிடும்.. ரைட்டு.. நான் முடிவு பண்ணிட்டேன்.. நான் நாளைக்கே போய் ப்ரோசீஜர் கேட்டுட்டு வர்றேனா இல்லயா பாருங்க" என்று கூறி இதழ்களுக்குள் சிரிக்க,
அலட்டலே இல்லாமல் அவள் முகம் பார்த்தவன் "என்னை விட்டுட்டு போ பார்க்கலாம்" என்று கூற, அடுத்த நொடி பாவமாய் விழிப்பது அவளானது.
"வாயாடி! ஒரு நாள் நான் இல்லாம அம்மா வீட்டுல போய் தங்குறது கிடையாது.. இதுல இவங்க ஆபீஸ் போவாங்கலாம்.. மூணு மணிக்கு வருவாங்களாம்.. போய் பாரேன்" என்று சொல்ல, உதட்டை பிதுக்கி அவள் பார்த்த பார்வையில் உருகி போனான் ஆதி.
"ஏன் சாரு இப்படி இருக்க?" என்று சிரித்தவன் அவள் கண்ணத்தோடு இழைந்து கொள்ள,
"சாரு சாருன்னு இந்த சாரு பைத்தியத்தை வச்சிட்டு ஒரு கோபத்தை கூட சரியா காட்ட முடியல" என்றாள் இன்னும் கோபமாய்.
ஊடல் கூடல் என்பதை விட கூடல் மட்டும் தான் அங்கே அதிகமாய் இருக்கும்.. கோபமே உருவாய் நின்ற ஆதி அதை மறந்தே போயிருக்க, அதனாலேயே கோபம் என்றால் என்ன என்று கேட்கும் சாரு அவனிடம் கோபம் கொண்டு அவனை ஆட்டி வைப்பாள் அன்பாய் அழகாய்.
சுபம்..