அன்று மாலை கல்லூரி முடிந்து வெகுநேரமாக சாதனா சாகித்யா இருவரும் ருத்ரன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் வராமல் போகவே இருவரும் கடுப்பாகி நின்றுகொண்டிருந்தனர். சாகித்யா மனதில் "ஒருவேளை நேத்து நம்ம ரொம்ப ஓவரா கடுப்பேத்தி விட்டோமோ அதனாலதான் நம்மள கூப்பிட வராம இப்படி காக்க வச்சு வேடிக்கை பார்க்குது போல எரும" என்று எண்ணி கடுப்பாக நின்றுகொண்டிருந்தாள். ஆனால் சாதனா மனதில் "கண்டிப்பா அண்ணனுக்கு ஏதாவது முக்கியமான வேறயா இருக்கும் அதனால் தான் இவ்வளவு நேரம் வராமல் இருக்குது" என்று எண்ணிக் கொண்டாள்.
அந்நேரம் நேற்று இவர்களை நோட்டம் விட்டு வரும் கூட்டாளிகளில் ஒருவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அதை இருவரும் கவனிக்கவில்லை நேராக சாகித்யாவிடம் வந்தவன் "இங்க பாரு உன் புருஷன் ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கான் ஒழுங்கு மரியாதையா அமைதியா இருக்க சொல்லு, இல்ல அப்படின்னா உங்க ரெண்டு பேரோட மானம், உயிர் எதுக்குமே நாங்க பொறுப்பாக முடியாது" என்று அவளை மேலிருந்து கீழாக கேவலமாக பார்த்துக்கொண்டே கூறினான்.
இவ்வளவு நேரம் ருத்ரன் வரவில்லை என்ற கடுப்பில் இருந்தவள் கோபத்தில் இன்னும் எண்ணையை ஊற்றுவது போல் அவன் கூறியது சாகித்யாவின் கோபத்தை உச்சிக்கு ஏற்றியது. சாதனாவும் அவன் பேசியதில் கோபத்தில்தான் நின்றுகொண்டிருந்தாள். அப்போதுதான் ருத்ரன் கூறியதால் அவசரமாக இவர்கள் இருவரை நோக்கி சரவணன் வந்து கொண்டிருந்தான்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற சாகித்யா அவருடைய ஒரு கன்னத்தில் பளார் என்று அறைய சாதனா மறு கன்னத்தில் அறைந்தாள். இவர்கள் இருவரும் அடித்த அடியில் அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். இதை தூரத்தில் இருந்து பார்த்து வந்த சரவணன் ஆணி அடித்தார் போல் அதே இடத்தில் நின்று விட்டான்.
கீழே கிடந்தவனை கோபமாக பார்த்த சாகித்யா "அட அறிவு கெட்ட கூமுட்டை உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை நேரடியா அவன்கிட்ட மோதி ஜெயிக்கணும் இல்லியா மூடிட்டு போய்க்கிட்டே இருக்கணும். அத விட்டுட்டு எப்பப்பாரு பொண்ணுங்களோட உயிரும் மானமும் தான் பெரிய விஷயம் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டே இதில் எதுலயாவது கை வைக்கிறது உங்களுக்கு எல்லாம் ஒரு ஃபேஷனாக போச்சு. நீங்க இது மாதிரி பண்றது நால தான் எங்களுக்கும் அவனுக்கும் சண்டை வருது, இனி இந்த மாதிரி பேசிகிட்டே இருந்தே மகனே கையை பிடித்து இழுத்த இல்ல, நீ சொன்னியே எங்களோட மானம் அத களங்கப்படுத்த வந்த, அதனால உன்னை கொன்னு போட்டுட்டேன் அப்படின்னு உன்ன கொன்னுட்டு நேரா போலீஸ்ல போய் சரண்டர் ஆயிடுவேன். உனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் இந்த விஷயத்துக்காக பொண்ணுங்க கொலை பண்ணா அவங்களுக்கு ஜெயில் தண்டனை கிடையாது. அதனால நான் ஈசியா வெளிய வந்துருவேன் ஒழுங்கு மரியாதையா உன்னோட கூட்டத்துக்கு போய் இதை சொல்லு" என்று கூறிவிட்டு திரும்பிவிட்டாள்.
சாதனா "பொண்ணுங்கன்னா அவ்வளவு லேசா போச்சா உங்க எல்லாருக்கும், ஒழுங்கு மரியாதையா இருக்குற வழியை பாரு இல்ல அப்படின்ன நீ இருக்கிற இடமே தெரியாமல் அழித்துவிட்டு போய்கிட்டே இருப்பேன் ஜாக்கிரதை" என்று கூறிவிட்டு அவனைக் காலால் ஒரு மிதி மிதித்து விட்டு சென்றாள்.
சரவணன் நடந்த அனைத்தையும் திகைப்பு மாறாமல் வீடியோவாக எடுத்து ருத்ரன் போனிற்கு அனுப்பி வைத்தான். காரில் சக்தி, சத்யா, ருத்ரன், அசோக் மற்றும் விக்னேஷ் வந்து கொண்டிருக்க அலைபேசியில் ஏற்பட்ட சத்தத்தில் அதைத் திறந்து பார்த்தான் ருத்ரன். அதில் வந்த வீடியோவை பார்த்தவன் முகம் புன்னகையில் மலர்ந்தது. எதற்காக இவன் சிரிக்கிறான் என்று வாங்கி பார்த்த மற்றவர்கள் முகத்திலும் புன்னகை தெரிய ஆரம்பித்தது.
அப்போது சரியாக சாதனா மற்றும் சாகித்யா இருக்குமிடம் வந்து சேர்ந்து விட்டதால், அவர்கள் காரை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி சென்றனர். சரவணனும் தன்னை சுதாரித்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான்.
ஐந்து பேரும் ஒன்றாக வருவதை பார்த்த சாகித்யா அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சாதனா புறம் திரும்பி "ஏற்கனவே கார் ஃபுல்லா கூட்டமா இருக்கு இதுல நம்ம எங்கே போய் உட்கார்ந்து வீட்டுக்கு போய் சேர்கிறது" என்று கேட்டாள்.
சாதனா அதே கேள்வியை தாங்கி அங்கிருந்த அனைவரின் முகத்தையும் பார்த்தாள். ருத்ரன் சிரித்துக்கொண்டே இருவருக்கும் தங்கள் காரின் பின்னால் கை காட்டினான். அங்கே இருவருக்கும் பிடித்த கலரில் தனித்தனி ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது. அதை பார்த்த இருவரும் சந்தோஷத்தில் கத்திக்கொண்டே ருத்ரனை இறுக அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஸ்கூட்டி நோக்கி சென்றனர்.
மற்றவர்கள் அனைவரும் அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து தாங்களும் மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் ஏற்கனவே ஸ்கூட்டி ஓட்ட தெரிந்திருந்ததால் தங்களுடைய கல்லூரி பேக்கை வைத்துவிட்டு ஸ்கூட்டியில் இருந்த சாவியை வைத்து அதை ஆன் செய்தனர்.
இந்த நேரத்தில் சரவணனை பார்த்த ருத்ரன் "ரெண்டுபேரும் காலைல காலேஜ் வந்து சேர்ற வரைக்கும் நான் அவங்க பின்னாடி தான் வருவேன், அதே மாதிரி நீ எங்க வீட்டை தாண்டி தானே உன்னோட வீட்டுக்கு போவ அதனால இவங்க கூடவே எங்க வீடு வரை வந்து விட்டு அதுக்கப்புறம் உன்னால போக முடியுமா? ரெண்டு பேருக்கும் செக்யூரிட்டி போட்டாலும் நமக்கு நம்பிக்கையான ஒரு ஆள் கூட இருந்தா இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும், அதனாலதான் கேட்டேன் உன்னால முடியுமா?" என்று கேட்டான்.
சரவணன் "கண்டிப்பா அண்ணா சாயங்காலம் இவங்க ரெண்டு பேரும் வீடு வந்து சேர்ற வரைக்கும் கூடவே வந்து, இவங்க வீட்டுக்கு போறத நான் பாத்துட்டு அதுக்குப்பிறகு வீட்டுக்கு போறேன். இதனால எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று கூறினான்.
இருவரும் தங்கள் ஸ்கூட்டியில் கிளம்ப சரவணன் சென்று தன்னுடைய வண்டியை எடுத்து வந்தான். மற்றவர்கள் அனைவரும் காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர், முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த ருத்ரன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஆனால் இதுவரை நடந்த அனைத்தையும் இவர்கள் இருவரிடமும் அடி வாங்கியவன் கோபமாக பார்த்துவிட்டு சென்றான்.
அவன் சென்றதை மற்றவர்கள் பார்க்க தான் செய்தனர் ஆனால் இவர்கள் திட்டப்படி அவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றனர். அந்த சிரிப்பை அவன் பார்த்து இருந்தால் கண்டிப்பாக உஷாராக இருப்பான், ஆனால் விதியின் செயலால் அவனால் பார்க்க முடியவில்லை.
வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்ந்த பிறகு ஒன்றாக மாலை நேர சிற்றுண்டி சாப்பிட்டனர். அப்போது சாகித்யா ருத்ரனை பார்த்து "உங்க கிட்ட எல்லாம் நாக்கு தள்ள தள்ள டயலாக் பேசினா தான் காரியம் நடக்கும் போல இல்லனா எதுவுமே பண்ணாம கண்டுக்காம இருப்பீங்க போல, நேத்து அவ்வளவு கோபப்பட்டு நானும் இவளும் பேசல அப்படினா நீங்க இத செஞ்சிருக்க மாட்டீங்க தானே! உடனே நான் அதெல்லாம் செஞ்சு இருப்பேன் அப்படின்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு வராதீங்க. கண்டிப்பா அதுக்கு இன்னும் நாளாகும் நேத்து நாங்க போட்ட போடுல தான் இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நடந்து இருக்கு, இனிமே எதுவா இருந்தாலும் உடனே செய்ய பாருங்க இல்லனா அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்" என்று கூறிவிட்டு சாதனாவை அழைத்துக்கொண்டு ஹோம் வொர்க் செய்ய சென்று விட்டாள்.
அவள் சொல்லி சென்ற தோரணையை பார்த்து சக்தி மற்றும் சத்யாவை முறைத்து பார்த்த ருத்ரன் "என்னடா பிள்ளை வளத்து வச்சிருக்கீங்க? குற்றாலத்தில் இருந்து தப்பி வந்த மாதிரியே பண்றா, சத்தியமா முடியல நேத்து இந்த சில்வண்டு கத்தி பேசியதை எல்லாம் பெருசா எடுத்து விட்டு நான் இதை செஞ்சி இருந்தா என்ன மாதிரி ஒரு லூசு ஊர் உலகத்துல பார்க்கவே முடியாது. இது என்னடா அப்படினா இப்படி பேசிட்டு போகுது" என்று கேட்டான்.
அவன் கூறியதை கேட்டு மற்ற நால்வரும் சிரிக்க ஆரம்பித்தனர். அசோக் அப்புறம் விக்னேஷ் சிரிக்க காரணம் தொழிலில் எந்த ஒரு எதிரி என்றாலும் ருத்ரன் முன் நின்று பேச பயப்படுவான், அவ்வளவு கோபப்படும் அவன் இவன் வீட்டிலும் அவன் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து அல்லது அவரது பேச்சை எதிர்த்து யாரும் பெரிதாக பேசியது இல்லை. ஆனால் அவனுடைய மனைவி அவனை புலம்ப வைத்தது இருவருக்கும் சிரிப்பு வர வைத்தது.
சத்யா ருத்ரனை பார்த்து "இந்த குற்றாலத்தில் இருந்து தப்பி வந்த குரங்க தான் கல்யாணம் பண்ணிய ஆவேன் அப்படின்னு அடம் புடிச்சு கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு போனீங்க. நாங்களா உங்க தலையில கொண்டுவந்து வலுக்கட்டாயமா கட்டிவைக்க முடிவு பண்ணல. அத ஞாபகம் வச்சுக்கோங்க" என்று நக்கலாக கூறினான்.
ருத்ரன் சத்யா தலையில் கொட்டி "எங்க வீட்டில இருந்ததும் ஒரு குரங்கு, நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததும் ஒரு குரங்கு, ரெண்டு குரங்கையும் சத்தியமா என்னால சமாளிக்க முடியல. இன்னும் என்னென்ன பண்ண காத்திருக்கிறதோ இதுல புதுசா வேற பிரச்சனை வரப்போகுது" என்று புலம்பிக்கொண்டே அமர்ந்தான்.
சக்தி அவன் தோளில் தட்டி "விடுடா எல்லாம் சரியாகும் பாத்துக்கலாம் இப்ப வா போய் நைட்டுக்கு எல்லாரும் சேர்ந்து சமைப்போம்" என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு கிச்சன் பக்கம் சென்றான்.
அன்றைய நாள் அதன்பிறகு அவ்வாறே முடிய அதன் பிறகு தினமும் காலையில் சாகித்யா சாதனா இருவரும் கல்லூரிக்கு தங்கள் ஸ்கூட்டியில் செல்ல, ருத்ரன் அவர்களை பின் தொடர்ந்தான். அதேபோல் அவர்களை சீண்டிய அந்த வருணின் நண்பன் அதன்பிறகு அங்கு அவர்கள் முன்பு பார்த்தது இல்லை. மாலை தினமும் சரவணன் அவர்களுடன் வீடு வந்து சேரும் வரை ஏதாவது பேசிக்கொண்டு வந்தான் அவர்களும் இது ருத்ரன் ஏற்பாடு என்று தெரிந்ததால் அமைதியாக இருந்து கொண்டனர்.
இடையிடையே ருத்ரன் கடுப்பாகும் அளவிற்கு ஏதாவது செய்து சாதனா சாகித்தியா இருவரும் மகிழ்ந்து கொள்வார்கள். அவனும் என்னதான் கடுப்பாகி போனாலும் இவர்களின் சேட்டையை சில நேரம் ரசிக்கத்தான் செய்வான்.
சரியாக இரண்டு மாதம் கழித்து வீட்டில் உள்ள அனைவருடனும் சேர்ந்து ஒரு வார இறுதியில் உள்ள விடுமுறையை கொண்டு சென்றனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ப்ரீத்தி மற்றும் அவளது தாய் இருவரும் கோபமாக சாகித்யா முன்பு வந்து நின்றனர்.
அவர்களை ஏற்கனவே எதிர்பார்த்த சாதனா ஆதித்யா இருவரும் முகத்தில் எந்தவித பதட்டத்தையும் காண்பிக்காமல் எப்போதும் இருப்பது போல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருக்கும் தோரணையை அனைவருக்கும் தெளிவாக உணர்த்தி விட்டது. இவர்கள் இருவரும் ஏதோ செய்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை. அதனால் ருத்ரன் சக்தி பாலா மூவரும் சாகித்யா பக்கத்தில் நிற்க அசோக் விக்னேஷ் சத்யா மூவரும் சாதனா பக்கத்தில் நின்றனர்.
அதைப் பார்த்து கோபமடைந்த ப்ரீத்தியின் தாய் "ஏண்டி உங்க ரெண்டு பேருக்கும் எத்தனை ஆம்பள தான் வேணும் உங்க ரெண்டு பேரையும் பேச வந்தா இத்தனை பேர் வந்து நிக்கிறாங்க" என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினார். அங்கிருந்த அனைவருக்கும் அவருடைய பேச்சு முகம் சுளிப்பு தந்தது.
ருத்ரன் கோபமாக ஏதோ பேச வர அவனை தடுக்க சாதனா சாகித்யா இருவரும் ருத்ரனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தனர். அவனும் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக நின்று கொண்டு இருந்தான்.
ப்ரீத்தியின் தாய் இன்னும் ஏதோ பேச வருவதற்கு முன்பு ப்ரீத்தி அருகில் சென்று அவளுடைய தலை முடியை கொத்தாக பிடித்தனர். அதில் பதறிய அவளது தாய் "அடியேய் விடுங்க என் பொண்ண% என்று கத்த ஆரம்பித்தார். அவரைப் பார்த்த சாகித்யா நக்கலாக சிரித்துக் கொண்டே இன்னும் அழுத்தி பிடித்தாள். பின்பு "அதான் உங்க அம்மாவை சொல்றாங்க இல்ல உனக்கு எத்தன ஆம்பள வேணும் அப்படின்னு, உனக்கு அறிவு இல்ல வீட்ல வச்சு சொல்ல வேண்டியதெல்லாம் எல்லாரும் முன்னாடி சொல்றாங்க. உன்ன பத்தி தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே! இப்ப எதுக்கு வந்து உன்னோட பெருமையெல்லாம் இங்க பேசிட்டு இருக்காங்க" என்று அவள் வலியில் கதறுவதை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டாள்.
சாதனா "ஏண்டி வெக்கங்கெட்ட கிறுக்கி கல்யாணமாகி பொண்டாட்டி இருக்கிற எங்க அண்ணன கல்யாணம் பண்ண பொறுக்கி வேலை அவ்வளவு செய்ற, எங்கள பார்த்தா உனக்கு லூசு மாதிரி இருக்கா? இனி இந்த மாதிரி ஏதாவது வேலை பார்த்த இன்னைக்கு முடியை தான் புடிச்சு இருக்கிறோம் இனி இப்படி எல்லாம் சும்மா விடமாட்டோம்" என்று மிரட்டினாள்.
அவர்கள் இருவரும் தன்னை விரட்டுவதை பார்த்து கோபமடைந்த பிரீதி "நான் என்ன பண்ணேன் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க வலிக்குது விடு" என்று கத்தினாள்.
அவள் தன்னை விடச் சொல்லி கூறியதை கேட்ட சாதனா சாகித்தியா இருவரும் அவளை விட்டு விட்டனர். இவர்கள் விட்ட வேகத்தில் ப்ரீத்தி கீழே விழுந்தாள் அதைப் பார்த்த அவளது தாய் ஓடி சென்று அவளை தூக்கி கொண்டார். பின்பு அனைவரையும் பார்த்து "இது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி நீங்க எல்லாரும் கண்டிப்பா அனுபவிங்க" என்று கத்திகொண்டே தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.
அப்போதுதான் அனைவருக்கும் கொஞ்சம் நிதானமாக இருப்பது போல் இருந்தது ஏனென்றால் இன்னும் ஏதாவது பேசி வாக்குவாதம் பெரிதாக வந்துவிடுமோ என்று எண்ணி பயந்து இருந்தனர். ஆனால் இப்போதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ருத்ரன் இருவரையும் பார்த்து "எதுக்குடி இரண்டு பேரும் போயி அவள் கிட்ட சண்டை போடுறீங்க? அவங்க அம்மா லூசு மாதிரி ஏதாவது பேசினா நாங்க ஏதாவது பேசி சமாளிச்சி அனுப்பி இருப்போம். ஆனா நீங்க ரெண்டு பேரும் அவன் முடியை பிடித்து சண்டை போட்டு இருக்கீங்க கொஞ்சம் கூட அறிவே இல்லையா?" என்று கேட்டான்.
தன் அண்ணன் தன்னிடம் இவ்வாறு கேட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சாதனா கோபமாக உள்ளே சென்று விட்டாள் ஆனால் சாகித்யா "துரைக்கு நாங்க பேசினது பண்ணுனது எல்லாம் கோபமா? இல்ல நீங்க அவ கிட்ட பேச முடியவில்லையே அப்படிங்கற கோபமா?" என்று கேட்டாள். கோபமாக சென்ற சாதனா சாகித்யா கேட்ட கேள்வியில் திரும்பி வந்து சாகித்தியா அருகில் நின்று தன் அண்ணன் முகத்தைப் பார்த்தாள்.
அவ்வளவு நேரம் ருத்ரன் கோபமாக இருந்ததால் ஏதாவது அவசரப்பட்டு பேசி விடுவான் என்று எண்ணி கலங்கி இருந்த பெரியவர்கள் சாகித்யா கேட்ட கேள்வியில் தங்களுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பொறுமை காத்தனர். ருத்ரன் பல்லை கடித்துக்கொண்டு "எப்பப்பாரு ஏதாவது குதர்க்கமான கேள்வி கேட்பாயா?" என்று கேட்டான்.
சாகித்யா "அவளே எப்படா வாய்ப்பு கிடைக்கும் உன் மேல சாயலாம், உன் கிட்ட பேசலாம் அப்படின்னு கிளம்பி வர்றா. இதுல நாங்க கொஞ்சம் இடம் கொடுத்தா அவ மொத்தமா ஆப்பு வச்சுட்டு போவா. அதுவரைக்கும் பொறுமையா இருக்க சொல்றியா இல்ல அவள கொஞ்ச தோணினா அவ வந்த உடனே கூட்டிட்டு தனியா போயிருக்க வேண்டியதுதானே! இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்காது இல்ல உங்களோட ஆசை அத்தை பொண்ணு எங்ககிட்ட மாட்டிக்கிட்டு வலியில் அழுதிருக்க மாட்டா தானே@ இப்ப வந்து என்கிட்ட பாயுற போடா லூசு" என்று கூறிவிட்டு அவன் பேசுவதற்கு முன்பு சென்றுவிட்டாள்.
ருத்ரன் பல்லை கடித்து கொண்டு அவளைத் திரும்பிப் பார்க்க கண்டிப்பாக அவனிடம் மாட்டினால் தன் நிலைமை என்ன ஆகும் என்பதை தெரிந்த சாகி சிட்டாகப் பறந்து தன்னுடைய அறையில் அடைந்து கொண்டாள். சாதனா அவனை கேள்வியாக பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள். பெரியவர்கள் அவனைப் பார்த்து சிரித்தால் கண்டிப்பாக இன்னும் கோபம் அடைவான் என்று எண்ணி அமைதியாக இருந்தனர். ஆனால் மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து இருந்தனர்.
அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் கடுப்படித்த ருத்ரன் தன்னுடைய மனைவியை பார்க்க சென்று விட்டான். தன் ரூமுக்கு வெளியே நின்று கதவை திறக்க முயன்றபோது அது உள்புறமாக பூட்டி இருப்பதை உணர்ந்து கொண்டவன் கதவை தட்ட ஆரம்பித்தான்.
ஆனால் உள்ளே இருந்து சாகித்யா "கண்டிப்பா கதவு திறக்க மாட்டேன் ஓடிடு வெளியே இப்ப மட்டும் நான் கதவை திறந்தா கண்டிப்பா வேற ஏதாவது வேண்டாத வேலை பார்ப்பே, அதனால கதவை திறக்க மாட்டேன் ஒழுங்கா கீழ போ" என்று கூறினாள்.
ருத்ரன் "கதவை திறக்க மாட்ட அப்படி தானே?" என்று கேட்டான் அதற்கு சாகித்யா "கண்டிப்பா திறக்க மாட்டேன் போடா போய் உன்னோட ஆசை அத்தை பொண்ணு கூட ரொமான்ஸ் பண்ணு" என்று கூறினாள். அதற்கு அவன் ஏதோ கூற வருவதற்கு முன்பு ராணி கீழிருந்து ருத்ரனை அழைத்துச் அவனைக் கூட்டி சென்றார்.
அதன்பிறகு சாப்பாட்டிற்கு தான் சாகித்யா கீழே வந்தாள். அதன் பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து அதில் இருந்த சந்தோஷத்தில் நடந்த நிகழ்வை மறைத்து அன்றைய நாளை மகிழ்ச்சியாக கடத்தினார்கள்.
ருத்ரன் மனதில் சாகித்யா கூறியது ஒரு ஓரத்தில் கோபமாக இருந்தாலும் அதை அப்போதே அவன் வெளிக்காட்ட விரும்பவில்லை அதே போல் அவளும் சாதனாவும் என்ன செய்தார்கள் என்பதை சிறிது நேரத்தில் தெரிந்து கொண்டவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டான். வழக்கம்போல அதன்பிறகு நாட்களை வாழ ஆரம்பித்தான். அனைத்தும் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது என்று நினைத்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சாகித்யா சாதனா சரவணன் மற்றும் மதி யாரோ ஒரு சிலரால் கடத்தப்பட்டனர்.
இனி நடக்கப்போவது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் கோவை என்னுடைய பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.