அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா வந்துடுறோம் என்றார் தனலட்சுமி.
சந்தோஷம்பா எங்கே? என்றார் பாலமுருகன்.
நான் உங்களுக்கு லொகேஷன் whatsapp ல அனுப்புறேன், ஹோட்டல்ல தான் மாமா, ஒரு பார்ட்டி ஹால்ல.
ஓஹோ, சரிப்பா. ஏதாவது வாங்கிட்டு வரணுமா.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நான் வண்டி அனுப்புறேன் நீங்க அந்த கார்லயே வந்துருங்க நைட் திருப்பி அவங்களே கூட்டிட்டு வந்து உங்களை வீட்ல டிராப் பண்ணிடுவாங்க.
சரிப்பா,
அப்போ நாங்க கிளம்பட்டுமா, கொஞ்சம் அரேஞ்ச் பண்ண வேண்டிய வேலை எல்லாம் இருக்கு.
சரிப்பா சரி,
அப்புறம் வசுந்தரா கிட்ட இதைப் பற்றி சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸா பண்றேன்.
சரிப்பா, உண்மையிலேயே எங்க பொண்ணு கொடுத்து வச்சிருக்கனும் உங்களை போல ஒரு கணவன் கிடைக்க என்றார் தனலட்சுமி.
அப்படி எல்லாம் இல்ல அத்தை, வசு மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கேன். எவ்வளவு அட்ஜெஸ்டிங் பொண்ணு தெரியுமா அவ. அவளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும் உங்க பொண்ணை இந்த மாதிரி நல்லா வளர்த்துக்கும் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததுற்கும் என்றான் ஆதித்யா சந்தோஷமாக.
அவன் அவ்வாறு பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்தது பால முருகன் மற்றும் தனலட்சுமிக்கு.
ரொம்ப சந்தோஷம் பா என்றனர் கண்கள் கலங்க.
சரிங்க அத்தை வசுந்தராவை கூப்பிடுங்க.
வசு, என்று கூப்பிட்டார் தனலட்சுமி.
சொல்லுங்கம்மா என்று சொல்லிக் கொண்டே தன் ரூமில் இருந்து வெளியே வந்தாள் வசுந்தரா.
மாப்பிள்ளை கிளம்பனும்னு சொல்றாரு மா.
கிளம்பனுமா ஆதி.
ஆமா ஒரு முக்கியமான வேலை இருக்கு வசு.
ஓகே ஆதி கிளம்பலாம், என்று சொல்லி தன் தங்கையை கட்டிப்பிடித்து பை என்றாள் வசுந்தரா.
பை அக்கா, ஒன்ஸ் அகெயின் ஹேப்பி பர்த்டே டூ யூ.
கண்கள் கலங்க தேங்க்யூ மந்திரா என்று சொல்லிவிட்டு,
பிறகு தன் அப்பா அம்மாவையும் கட்டிப்பிடித்து பை சொல்லி விட்டு கிளம்பினாள் வசுந்தரா.
காரில் செல்லும்போது, அவள் இன்னும் மூட் ஆஃபாக இருப்பதை பார்த்த ஆதித்யா பேசத் தொடங்கினான்.
வசு,
சொல்லுங்க ஆதி.
நான் உன்னை உரிமையோட வா போ ன்னு சொல்றேன். ஆனா நீ இன்னும் வாங்க போங்கன்னே பேசுறீயே.
இது எனக்கு பிடிச்சிருக்கு ஆதி. பேர் சொல்லி கூப்பிட்டாலும் வா போன்னு சொல்ல ஒரு மாதிரி இருக்கு.
ஓகே வசு, ஆனா அப்படி கூப்பிட்டா இன்னும் கொஞ்சம் கிளோஸ் ஃபிரெண்ட்ஸா ஃபீல் பண்ணுவேன். இன்ஃபேக்ட் வாடா போடான்னு சொன்னா ரொம்ப ரொம்ப ஹேப்பி. மனதிற்குள் ஷைலஜா அப்படி தான் தன்னை கூப்பிடுவாள் என்று நினைத்துக் கொண்டான்.
என்ன ஆச்சு ஆதி, திடீர்னு சைலன்ட் ஆயிட்டீங்க?
இல்ல ஒன்னும் இல்ல வசு.
பிறகு ஒரு படத்திற்கு அழைத்த சென்றான்.
திருமணமான பிறகு முதல் முறையாக அவர்கள் இருவரும் செல்லும் திரைப்படம்.
சினிமாவுக்கு போறோமா. சூப்பர் சூப்பர், இன்னும் எவ்வளவு சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்க எனக்கு? நைட்டு நீங்க கொடுத்த ஜூவெல்லரி செட் ஷாக்ல இருந்தே நான் இன்னும் வெளியே வரல,
அதேபோல அஸ்வினியமும் அர்ஜுனும், எங்க அப்பா அம்மா மந்தரா இவங்க எல்லாரும் கொடுத்த கிஃப்ட் அது கூட எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் தான், ஏன்னா அத்தையாவது என்கிட்ட என்ன வேணும்னு கேட்டாங்க நான் சாதா புடவை சொன்னேன் அவங்க நான் கேட்ட கலர்ல பட்டுப்புடவையை வாங்கிட்டு வந்துட்டாங்க, இப்போ இது என்று சொல்லி சிரித்தாள்.
மனதிற்குள் ஒரு பாட்டு வந்தது அவளுக்கு.
"இதயம் எந்தன் இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ..... " என்று தல அஜித்குமார் நடித்த பில்லா 2 படத்திலிருந்து அந்த பாடல் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
உடனேயே அடுத்த வரி எனக்கு வரக்கூடாது கடவுளே என்று நினைத்துக் கொண்டாள்.
( இதயம் எந்தன் இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ).
அந்த மூணு மணி நேரமும் படத்தை பார்த்ததை விட தன் கணவனை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டாள். படத்தில் காமெடி வந்தபோது கூட சிரிக்க மறந்து விட்டாள். தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் சிரிக்க வில்லையே என்று தெரிந்ததும் அவளை திரும்பி பார்த்தான் ஆதித்யா.
சட்டென்று அவளையே சமாளித்துக் கொண்டு சினிமாவை பார்த்து சிரித்தாள் வசுந்தரா.
ஆதி என்று மிக மெதுவாக அவன் காதருகில் சென்று கூப்பிட்டாள் வசுந்தரா.
என்ன வசு என்றான் அவள் காதருகில்.
அவனுடைய மூச்சு சுவாசம் அவள் காதில் பட்டு உஷ்ணத்தை ஏற்படுத்தியது. ஒரு நொடி அதை அனுபவித்துவிட்டு, அவனிடம் உங்க கை விரல்ல என் கைவிரலை கோர்த்துக்கவா என்றாள்.
அவன் கைகளை விரித்து காட்ட, ஸ்மைல் செய்து கொண்டே அவனுடைய கைகளில் தன் கைகளை கோர்த்துக் கொண்டாள். அந்த மூணு மணி நேரமும் அவளுடைய வாழ்க்கையில் இன்னொரு மறக்க முடியாத தருணமானது.
பிரேக்கில் பாப்கார்ன், நேச்சோஸ், கூல்ட்ரிங்ஸ் வாங்கிய வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்று ஃபோனில் பர்த்டே பார்ட்டிக்கானா அரேஞ்ச்மென்ட்களை செய்யச் சொன்னான். பின்னர் அனைத்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
தன் ஃபோனில் அவளுடைய ஃப்ரண்ட்ஸ்களிடம் இருந்து வந்த பர்த்டே விஷஸ்களுக்கு ரிப்ளை செய்து கொண்டிருந்தாள் வசுந்தரா.
படம் முடிந்ததும், அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நடந்து கார் வரை சென்றனர் இருவரும்.
அது எங்க அம்மா வீட்ல சாப்பிட்டதே எனக்கு வயிறு ஃபுல்லு, இதுல இதெல்லாம் சாப்பிட கொடுத்துட்டீங்க, அனேகமா நான் வீட்டுக்கு போயி டின்னரே சாப்பிட மாட்டேன்னு நினைக்கிறேன்.
அதெல்லாம் இல்ல இன்னைக்கு ஸ்பெஷல் டின்னர், நீ கண்டிப்பா சாப்பிட்டே தான் ஆகணும்.
அய்யய்யோ இதுக்கு மேலயா. போதும் நீங்க கொடுத்த சர்ப்ரைஸே. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.
சரி வா ஷாப்பிங் போகலாம்.
எதுக்கு,
இவ்வளவு நேரம் ட்ரடிஷனலா இருந்த இல்ல,
இப்ப மாடர்ன் ஆகலாம்.
எதுக்கு ஆதி வீட்டுக்கு போய் டிரஸ் மாத்திக்கிட்டா போகுது.
நம்ம இப்போதைக்கு வீட்டுக்கு போக மாட்டோம்.
நைட்டு தூங்குறதுக்கு தான் வீட்டுக்கு போவோம் என்றான் ஆதித்யா.
அச்சச்சோ,அதுவரைக்கும் என்ன பண்ண போறோம் என்றாள் வசுந்தரா .
முதல்ல ஷாப்பிங் முடிச்சிடலாம் வா என்று சொல்லி கடைக்கு கூட்டி சென்று இரண்டு பார்ட்டி வேர் சுடிதார்களும், மூன்று நான்கு சாதாரணமாக வெளியே சென்றால் போடவும் வாங்கிக் கொடுத்தான்.
அவனுடைய செலெக்ஷன் உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது. அவன் சூஸ் செய்த அனைத்துமே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் ஒவ்வொரு டிரஸ்ஸும் அவளுக்கு ஃபிட்டாக இருந்தது. ஒரு வழியாக ஷாப்பிங் முடித்துவிட்டு காரில் ஏறினார்கள்.
நைட்டு தான் வீட்டுக்கு போகணும்னு சொன்னீங்க, இப்போ சீக்கிரமே முடிஞ்சிடுச்சே,
இப்ப என்ன பண்றது.
முடிஞ்சிடுச்சின்னு நான் சொல்லவே இல்லையே.
இன்னும் இருக்கா, எங்க போக போறோம் ஆதி,
சொல்றேன்,
பீச்சுக்கு போகலாமா ஆதி.
இப்போவா?
ஏன் வேண்டாமா?
இப்போது பீச்சுக்கு சென்றால் அவனுடைய பிளானில் சேஞ்சஸ் ஆகிடுமே என்று யோசித்தான். ஆனால் அவள் விருப்பத்துடன் கேட்பதால் அதை நிராகரிக்கவும் அவனுக்கு மனமில்லை. அவன் புக் செய்து இருந்த ஹோட்டல் பீச்சுக்கு பக்கத்தில் இருப்பதால் போகும் முன் அரை மணி நேரம் பீச்சில் செலவழித்து விட்டு செல்லலாம் என்று நினைத்தான்.
சரி போகலாம் என்றான்.
சூப்பர் ஆதி, தேங்க்யூ சோ மச். பீச் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா. கர மேல உட்கார்ந்துட்டு அந்த அலையை பார்த்துட்டே இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு அதை ரசிக்க போறேன் அதுவும் எனக்கு புடிச்ச உன்னோட, ஒரு நொடி அமைதியாக இருந்தவள்,
உன்னோடன்னு சொல்லிட்டேன் போதுமா?
என்று சொல்லி சிரித்தாள்.
ஸ்மைல் செய்தான் ஆதித்யா.
பிறகு பீச்சிலும் அரை மணி நேரம் அமர்ந்து விட்டு பார்ட்டி ஹாலுக்கு அழைத்து சென்றான் ஆதித்யா.
அவளுக்காக அங்கே அனைவரும் வந்திருப்பதை பார்த்து கண்கள் விறிய ஆச்சரியப்பட்டாள்.
என்ன ஆதி? என்றாள்.
சர்ப்ரைஸ், ஹாப்பி பர்த்டே என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
உடனே அனைவரும் முன்னிலையிலும் அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு, தேங்க் யூ தேங்க் யூ சோ மச் என்றாள் வசுந்தரா.
அனைவரும் கிளாப் செய்தனர். அதனால் வெட்கமடைந்தவள் உள்ளே ஓடி சென்றாள். அங்கே பியூட்டிஷியன் ரெடியாக இருக்க, இப்போது வாங்கி வந்த ஒரு கிராண்டான சுடிதாரை எடுத்து அவளிடம் கொடுத்தான் ஆதித்யா.
சீக்கிரமா ரெடி ஆகி வா, கேக் கட் பண்ணலாம் என்றான்.
கண்கள் கலங்க சரி என்று தலை அசைத்தாள்.
ஏற்கனவே அழகாக இருக்கும் நம் கதாநாயகி வசுந்தராவை, மேலும் அழகோவியமாக ஆக்கினார் அந்த பியூட்டிஷியன். ஒரு மணி நேரத்தில் ஏஞ்சல் போல வெளியே வந்தாள். அவளுக்கு மேட்ச் ஆக கோட் சூட் போட்டு இருந்தான் ஆதித்யா.
மிகவும் ஆனந்தமாக உணர்ந்தாள் வசுந்தரா.
அனைவரும் வாழ்த்து கூற கேக் கட் செய்து பின்னர் அனைவரும் டின்னர் சாப்பிட்டனர்.
வசுந்தராவுடைய இரண்டு மூன்று ஸ்கூல் மற்றும் காலேஜ் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்களும் வந்திருந்தனர். அனைவரையும் பார்த்து மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள் வசுந்தரா.
விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அனைவரும் கிளம்பினார்கள். ஆதித்யாவின் கையை பிடித்தவள் அன்று முழுவதும் விடவே இல்லை. சந்தோஷமாக இருந்தாள்.
திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது, மிகவும் தயாராக இருந்ததால் ஆதித்யாவின் தோளில் சாய்ந்து தூங்கி விட்டிருந்தாள் வசுந்திரா.
வீட்டிற்கு வந்ததும், அவளை மெல்ல மாக தட்டி எழுப்பினான் ஆதித்யா.
ஆதி ரொம்ப டயர்டா இருக்கு நான் கார்லயே தூங்குறேன் நீங்க வீட்டுக்கு போங்க என்றாள் தூக்க கலக்கத்தில்.
வந்துட்டோமா மாடில போய் நம்ம ரூம்ல படுக்கலாம் வாம்மா.
இல்ல ஆதி ப்ளீஸ்.
சரி நான் வேணும்னா உன்னை தூக்கிட்டு போகட்டுமா.
அதெல்லாம் உங்களால முடியாது.
அன்னைக்கு நீ மயக்கம் போட்டு விழுந்தியே அப்ப நான் தூக்கிட்டு தானே போனேன்.
அது அப்போ, இப்ப நான் அதை விட குண்டு ஆயிட்டேன். உன்னால தூக்க முடியாது.
சரி அதையும் தான் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டு தன் ரூமுக்கு சென்றான்.
மற்றவர்கள் எல்லாம் முதலிலேயே வந்து விட்டதால் அவர்கள் எல்லாம் அவரவர் ரூமில் இருந்தனர். அதனால் யாரும் இவர்களைப் பார்க்கவில்லை.
ஆதித்யா தூக்கி சென்றது, அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பெட்டில் அவளை படுக்க வைத்தான்.
டிரஸ் சேஞ்ச் பண்ணலையா.
பண்ணனும் ஆனா ரொம்ப டயர்டா இருக்கு ஆதி.
என்ன ஒரு நாள் வெளியே சுத்திட்டு வந்ததிலேயே டயர்டா இருக்கு டயர்டா இருக்குன்னு சொல்ற, நீ இன்னும் சரியாகலையா இன்னுமுமே ரொம்ப வீக்கா தான் இருக்கியா.
வீக்கா தான் இருக்கேன் நீ தான் என்னை ஹெல்தியா ஆக்கனும்.
அதனாலென்ன ஆக்கிட்டா போச்சு என்று சொல்லி சிரித்தான் ஆதித்யா.
சரி, நான் போய் குளிச்சிட்டு வரேன், அதுக்குள்ள நீ டிரெஸ் சேஞ்ச் பண்ணனும்னா பண்ணிடு.
ஓகே ஆதி, என்று சொல்லிவிட்டு அவன் குளித்துவிட்டு வருவதற்குள் டிரஸ் சேஞ்ச் செய்துவிட்டு அவனுக்காக வாங்கிய ரிட்டன் கிஃப்ட் மற்றும் அந்த பிரக்னன்சி ஸ்டிக் பேக் செய்ததை ரெடியாக தலையணை அடியில் வைத்தாள்.
உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது.
எப்போது வருவான் என்று காத்திருந்தாள்.
குளித்துவிட்டு டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு வந்தவன்,
என்ன அப்பவே டயர்டா இருக்கு தூக்கம் வருதுன்னு எல்லாம் சொன்ன, இன்னும் முழிச்சி கிட்டு உட்கார்ந்து இருக்க? என்றான் ஆதித்யா.
ஒன்னும் இல்ல கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசிட்டு தூங்கலாம்னு.
தூக்கம் போயிடுச்சா.
ஆமாம்.
சரி சொல்லு என்ன விஷயம்.
கண்ணை மூடுங்க,
பார்ரா இப்ப எனக்கு சர்ப்ரைஸா.
ஆமாம் ஆதி. ஆனா இது உங்களுக்கு ரொம்பவே மிகப்பெரிய சர்ப்ரைஸா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
சரி கொடு அப்படி என்ன கொடுக்குற நான் பார்க்கிறேன் என்று சொல்லி கண்கள் மூடினான்.
அவன் கைகளை விரித்து அவன் கை மேல் அந்த பாக்ஸை வைத்தாள்.
கண்களை திறந்தான்.
ஒன் மினிட் என்று சொல்லிவிட்டு கைகளைக் கூப்பி கடவுளை வேண்டிக் கொண்டாள்.
என்ன உன் சர்ப்ரைஸ் எனக்கு பிடிக்கும் கடவுள் கிட்ட வேண்டிக்கிறியா.
ஆமாம் ஆதி.
அப்போது அந்த பாக்ஸை பிரித்தான், பிரிக்கும் முன்னரே அதில் வாட்ச் தான் இருக்கிறது என்று அந்த பாக்ஸை வைத்து தெரிந்து கொண்டான். இருப்பினும் சர்ப்ரைஸ் ஆகுவது போல நடித்தான்,
வாவ் சூப்பர் வாட்ச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வசுந்தரா, என்று சொல்லி முடித்தவன் அதன் கீழே அந்த ஸ்டிக் இருப்பதை பார்த்து கையில் எடுத்தான். அவன் உடைய கண்கள் விரிந்தது.