• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி, பாகம்- 6

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
111
43
Maduravoyal
பாகம் -11





தூக்கிக் கொண்டு படியில் இறங்கி வந்து சோஃபாவில் படுக்க வைத்தான். பின்னர் வெளி கதவை திறந்து காரை ஓப்பன் செய்து காரில் பின் சீட்டில் அவளை படுக்க வைத்து விட்டு வீட்டு கதவை பூட்டி விட்டு காரில் ஏறினான்.



கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு. காலை தன் அம்மா எழுந்தவுடன் சொல்ல சொல்லி விட்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்.



வசுந்தராவால் பேச முடியவில்லையே தவிர ஆதித்யா டாக்டரிடம் பேசியது, தன் தூக்கிச் சென்றது, செக்கியூரிட்டியிடம் பேசியது அனைத்தும் காதில் விழுந்தது.



ஹாஸ்பிட்டலில் டியூட்டி டாக்டரை பார்த்த போது.



ஃபீவர் 104 இருக்கு சார், அதனால இன்னைக்கு ஒன் நைட் இவங்க இங்கேயே அப்சர்வேஷன்ல இருந்தா பெட்டர். அதுவும் இல்லாம ரொம்ப வீக்கா இருக்காங்க சாப்பிடலைன்னு நினைக்கிறேன். டிரிப்ஸ் போடச் சொல்றேன். அப்படி டிரிப்ஸ் போட்டாலும் ஃபீவர் அதிகமாகும், அப்போ இன்ஜெக்ஷன் போடுவோம் ஸோ இங்க இருக்கிறது தான் ஸேஃப்.



ஓகே டாக்டர், என்றான் ஆதித்யா.



பிரைவேட் ரூம் சொன்னதால் அங்கே வசுந்தராவிற்கு டிரிப்ஸ் போட்டுவிட்டு சென்ற நர்ஸ்.



சார் இந்த பாட்டில் முடிஞ்சதும் சொல்லுங்க என்றார்.



ஓகே சிஸ்டர், எவ்வளவு நேரமாகும்.



இரண்டு மணி நேரமாகும் சார்.



ஓகே சிஸ்டர் என்று சொல்லிவிட்டு, தன் ஃபோனில் அலாரம் வைத்துக் கொண்டு, அந்த ரூமில் இருக்கும் அட்டென்டர் பெட்டில் படுத்து தூங்கினான் ஆதித்யா. ஐந்து நிமிடம் முன்னாலேயே அலாரம் வைத்து எழுந்துக் கொண்டான். பின்னர் டிரிப்ஸ் முடியும் காத்திருந்து முடிந்ததும் அதை கிளோஸ் செய்துவிட்டு நர்ஸிடம் போய் சொன்னான்.



என்ன சார் கம்ப்ளீட்டா ட்ரைன் ஆன பிறகா சொல்லுவீங்க, அதை உடனே கிளோஸ் பண்ணனும் இல்ல என்று சொல்லிக்கொண்டு வேகமாக சென்ற நர்ஸ் ஏற்கனவே க்ளோஸ் செய்யப்பட்டது அதுவும் ட்ரெயினும் ஆகவில்லை என்று தெரிந்தவுடன் சாரி சார் என்றாள்.



எங்க அம்மாவுக்கு நிறைய முறை டிரிப்ஸ் போட்டு இருக்கோம். அப்போ நான் பார்த்து தெரிஞ்சுகிட்டேன் எப்படி க்ளோஸ் பண்ணனும்.



சாரி சார் எனக்கு தெரியாது நான் புதுசா சேர்ந்திருக்கேன். டாக்டர் கிட்ட நான் சொன்னதை சொல்லிடாதீங்க சார் பிளீஸ்.



ஓகே, டோன்ட் ஒரி என்று சொல்லிவிட்டு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அலாரம் வைத்தான்.



சார், இது முடிய ஃபோர் ஹவர்ஸ் ஆகும். நீங்க அலாரமை மாத்திக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்றாள் நர்ஸ்.



ஓகே சிஸ்டர் என்று சொல்லி அலாரத்தை மாற்றி வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.



மணி ஆறு அலாரம் அடிக்கும் முன்னர் மகேஸ்வரியிடம் இருந்து ஃபோன் வந்தது.



என்னப்பா என்னாச்சு வசுந்தராவுக்கு என்று பதட்டமாக பேசினார்.



இரவு நடந்ததை கூறினான் ஆதித்யா.



ஏன்பா என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல.



இல்லம்மா ரொம்ப லேட் ஆயிடுச்சு, அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்.



சரிப்பா இப்பவே நானும் அர்ஜுனும் வரோம்.



இல்லமா வேண்டாம், இப்ப ட்ரிப்ஸ் முடிஞ்ச உடனே வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாரு டாக்டர். நானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடறேன். அஸ்வினியை தனியா விட்டுட்டு நீங்க வர வேண்டாம்.



சரிப்பா சரி என்று அவனிடம் சொல்லிவிட்டு தன் கணவன் வாசுதேவனிடம் விஷயத்தை கூறினார் மகேஸ்வரி.



அஸ்வினி கூட இந்த ஹாஸ்பிடல்ல, அப்புறம் உங்க அப்பாவ பார்த்த அந்த ஹாஸ்பிடலுக்கு போயிருந்தா இல்ல, அதான் இன்ஃபெக்சன் ஆகி ஜுரம் வந்திருக்கு.



நேத்து பூரா எதுவும் சாப்பிடவில்லை என்று சொல்லி இருக்கிறார் டாக்டர். நான் கேட்டதுக்கு அந்த பொண்ணு சாப்பிட்டு விட்டேன் என்கிட்ட சொன்னா.



மகேஸ்வரி, என்னதான் இருந்தாலும் இப்பதான் புதுசா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா. பசிக்குது சாப்பாடு போடுங்கன்னு எப்படி கேட்பா, அவ வேண்டாம்னு சொன்னாலும் நம்ம தான் கம்பெல் பண்ணி கொடுத்திருக்க வேண்டும்.



நீங்க சொல்றதும் சரி தாங்க. நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.

அவ வரும்போது டல்லா இருந்தா. நைட்டும் சாப்பிடல வாந்தி வர மாதிரி இருக்கு வேண்டாம் அத்தைன்னு சொல்லிட்டா. நானும் அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்.



சரி சரி நீயும் என்ன பண்ணுவ. சாப்பிட சொல்லியும் அவ வேண்டாம்னா நீ என்ன கம்பல் பண்ணி ஊட்டி விடவா முடியும்.



அமைதியாக இருந்தார் மகேஸ்வரி.



நீங்க கிளம்ப போறீங்களாங்க.



இல்ல மகேஸ்வரி வசுந்தரா வந்ததும் பார்த்து விட்டு அப்புறமா கிளம்பறேன்.



ஏங்க,



என்ன சொல்லு.



இன்னைக்கு மட்டும் ஆதி அவ கூட இருக்கட்டுமே, நீங்களே கம்பனில மேனேஜ் பண்ணிக்கோங்க. வேணும்னா அர்ஜுனை கூட வச்சிக்கோங்க.



ஆதித்யாவுக்கு பத்து நாள் லீவு கொடுத்தேன். அதுவும் இல்லாம கல்யாணம் ஆகி மூணு மாசம் கழிச்சு தான் அவனை போர்டு மெம்பர் அண்ட் சிஇஓ வாக ஆக்குவதாக சொல்லி இருக்கேன்.



அடுத்த மாசம் வேணும்னா பத்து நாள் லீவு கொடுங்க.



எதுக்கு.



இப்போ அவளுக்கும் உடம்பு சரியில்ல, அவளோட அப்பாவுக்கும் அடுத்த வாரம் ஆப்பிரேஷன் அதனால இப்போ அவங்களை ஹனிமூன் அனுப்ப முடியாது. அதுக்காக சொல்றேன்.



உன் கவலை உனக்கு.



எனக்கு என்ன கவலை.



பின்ன என்ன, உன் பையனுக்கு கல்யாணம் ஆன அடுத்த வருஷமே உனக்கு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுத்திரனும்னு நினைக்கிற சரி தானே.



சிரித்தார் மகேஸ்வரி.

உங்களுக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன.



இல்லாமல் இருக்குமா, ஆனா அவங்களுக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க டைம் கொடுக்கனும் இல்ல. அதனால ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆன்வசரில நம்ம மருமக பிரெக்னென்டா ஆயிட்டா கம்பனியை ஹேண்ட் ஓவர் பண்றதா அவன் கிட்ட சொல்லி இருக்கேன்.



ஓ, உங்க மேல இருக்கிற கோவத்தினால தான் உங்க கிட்ட பேசாம இருக்கானா ஆதி.



ஆமாம் ஆமாம். அவனை கம்பல் பண்ணி கல்யாணம் பண்ணிக்க சொன்னதாலேயும் இந்த மாதிரி கண்டிஷன்ஸ் போட்டதுனாலேயும் தான் என் மேல கோவமா இருக்கான்.



கவலைப்படாதீங்க, ஆதித்யா சீக்கிரமா நம்மள புரிஞ்சிக்குவான்.



ஹூம், அதை தான் நானும் நம்புறேன்.



ஹாஸ்பிட்டலில் கண் விழித்தாள் வசுந்தரா.



இப்போ எப்படி இருக்கீங்க வசு.



பெட்டர் ஆதி. தேங்க் யூ ஸோ மச்.



எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க வசு.



எனக்காக நீங்க சிரம பட்டதுக்கு என்றாள் வசுந்தரா .



சிரமம் எல்லாம் ஒண்ணும் இல்ல வசு.

நீங்களும் என் ஃபேமிலி தான். நான் ஏன் உங்களுக்கு செய்யுறதை சிரமமா நினைக்கப் போறேன் என்றான் ஆதித்யா.



பாகம் -12



என் ஃபேமிலின்னு ஆதித்யா சொன்னது வசுந்தராவுக்கு என்னவோ போல் இருந்தது.



சார், டாக்டர் உங்களை வரச் சொல்றார் என்று நர்ஸ் வந்து சொன்னதும்.



ஓகே, ஒன் மினிட் இதோ வரேன் என்று வசுந்ராவிடம் சொல்லிவிட்டு சென்றான் ஆதித்யா.



அவன் சென்றதும் நர்ஸ் வசுந்தராவிடம் பேசினாள்.



இப்போ எப்படி இருக்கீங்க மேடம்.



குட், தேங்க் யூ சிஸ்டர்.



மேடம், உங்க கிட்ட ஒன்னு கேட்கவா. தப்பா நினைக்க மாட்டீங்களே.



நினைக்க மாட்டேன். கேளுங்க.



உங்களுடையது லவ் மேரேஜா.



இல்லையே, ஏன் கேட்கறீங்க.



நீங்க உண்மையிலேயே ரொம்ப லக்கி மேடம்.



என்ன சொல்றீங்க சிஸ்டர்.



ஆமாம் மேடம், நானு நர்ஸா சேர்ந்த ஆறு வருஷத்துல நாலு ஹாஸ்பிடல் வேலை செஞ்சு இருக்கேன். நிறைய முறை வைஃபுங்க ஹஸ்பண்டை பார்த்துக்கிட்டத பாத்திருக்கேன். ஆனா முதல் முறையா ஒரு ஹஸ்பண்ட் தன் வைஃபுக்காக அலாரம் வச்சு எழுந்து இந்த அளவுக்கு லவ் அண்ட் கேரிங்கா பார்த்துக்கிட்டதை நான் பார்த்ததில்லை. அதனால தான் சொல்றேன் நீங்க ரொம்ப லக்கினு.



ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.



கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகுது மேடம்.



முந்தா நேத்து தானே எங்களுக்கு கல்யாணம் ஆச்சு.



முந்தா நேத்தா.



ஆமாம் சிஸ்டர்.



அரேஞ்சிடு மேரேஜ்ன்னு சொல்றீங்க. ரெண்டு நாளு தான் இருக்கு கல்யாணம் ஆகி. அதுக்குள்ள உங்களை இப்படி பாத்துக்குறாரு. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் நேற்று சாப்பிடல.



நான் சாப்பிடலைன்னு அவர் கிட்ட சொல்லிட்டீங்களா.



கண்டிப்பா டியூட்டி டாக்டர் சொல்லி இருப்பாரு.



ஹோ நோ.



என்னாச்சு ஏதாவது பிரச்சனையா.



இல்ல, ஒன்னும் இல்லை எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல அதனால நான் கவலையில் இருந்ததால சாப்பிடல. அது தெரிஞ்சா என்னோட மாமியார் வீட்ல இருக்கவங்க எல்லாரும் கஷ்டப்படுவாங்க. அதனால தான் நான் யார்கிட்டயும் சொல்லவே இல்ல நேத்து நான் சாப்பிடலன்னு.



ஓ, ஓகே மேடம். நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க. உங்களுக்கு சிரப்பு, மாத்திரை, மருந்து எல்லாம் எழுதி கொடுப்பாங்க. அதை கரெக்டா சாப்பிடுங்க. அப்புறம் மேடம் அந்த மாத்திரை மருந்து எல்லாம் விட்டமின் அயர்ன் சத்து இருக்கும் அதனால நீங்க இப்போ குழந்தை பெத்துக்கனும்னு நினைச்சா அதுக்கும் சரியா இருக்கும் என்று சொல்லி சிரித்தாள் நர்ஸ்.



ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.



நர்ஸ் சென்றதும், அங்கே இருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க முயன்றாள். பெட்டில் இருந்து எழுந்தவளுக்கு கண்கள் இருட்டி தலை சுற்றியது. நிலை தடுமாறி தரையில் விழுவதற்கு முன் ஆதித்யா வேகமாக உள்ளே வந்து அவளைத் தாங்கி பிடித்து பெட்டில் அமர வைத்தான்.



என்னாச்சு வசு எதுக்கு எழுந்தீங்க.



இல்ல தண்ணி குடிக்கணும்னு பார்த்தேன்.



தண்ணி தானே இருங்க நான் எடுத்து தரேன் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த டம்பளரில் தண்ணீரை விட்டு அவனே அவளுக்கு குடிப்பாட்டினான்.



இல்ல பரவால்ல நானே குடிக்கிறேன் கொடுங்க என்றவளிடம்.



இட்ஸ் ஓகே நோ இஷ்யூஸ் குடிங்க என்று சொல்லி குடிப்பாட்டி விட்டு.



அவளை கை தாங்கலாக பிடித்துக் கொண்டு தன் காரில் ஏற்றினான்.



பிறகு வீட்டிற்கு சென்றனர் இருவரும்.



பின் சீட்டில் அமர்ந்து கண்ணாடி வழியாக ஆதித்யாவை பார்த்தாள் வசுந்தரா. முன்ன பின்ன தெரியாத எனக்கே இந்த அளவுக்கு அக்கறையுடன் நடந்து கொள்கிறவன் எப்படி லவ் பண்ண பொண்ண கொலை செஞ்சிருப்பான். கண்டிப்பா ஏதோ தப்பு நடந்திருக்கு. யாரோ வேணும்னே ஆதித்யா மேல பழி சுமத்தி இருக்காங்க. ஆதித்யா நல்லவன் தான் என்று நினைத்துக் கொண்டாள் வசுந்தரா.



ஏதேயச்சையாக கண்ணாடி வழியாக பின்னே பார்த்தவன், வசுந்தரா தன்னை பார்ப்பது தெரிந்தது. இவன் பார்க்கிறான் என்று தெரிந்தவுடன் அவள் கண்களை தாழ்த்திக் கொண்டாள். வெளி பக்கமாக வேடிக்கை பார்ப்பது போல நடித்தாள்.



வசு,



சொல்லுங்க,



நான் பாக்கும்போது நீங்க கையில காண்ட்ராக்ட் அக்ரிமெண்ட் பேப்பர் வைத்திருந்தீங்க, எனக்குள்ள ஒரு கில்டி ஃபீலிங் என்னால தான் உங்களுக்கு ஃபீவர் வந்துச்சோன்னு.



இல்லை இல்லை. எனக்கு ஃபீவர் வந்ததுக்கு காரணம் நீங்க இல்ல.



அவளை இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதித்யா.



எங்க அம்மா. எனக்கு தெரியாம அவங்க என்கிட்ட இருந்து சைன் வாங்கி உங்களுக்கு அக்ரிமெண்ட் பேப்பர்ஸ் கொடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சது என்னால தாங்கிக்க முடியல. அதனாலதான் நான் ரொம்ப மனசு உடைஞ்சுட்டேன். நான் எங்க அம்மா மேல ரொம்ப ரொம்ப பாசம் வச்சிருக்கேன். அதனாலதான் அவங்களோட செயல் என்னால தாங்கிக்க முடியல என்று சொல்லி கண்கள் கலங்கினாள்.



உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா.



எந்த பொண்ணுக்கு சார் விருப்பம் இருக்கும் இந்த மாதிரி ஒரு அக்ரிமெண்ட் கல்யாணம் பண்ணிக்க. இதெல்லாம் சினிமாவுக்கு தான் ஒத்து வரும், நிஜ வாழ்க்கையில யாரும் இந்த மாதிரி நினைக்க மாட்டாங்க. அதுவும் உங்க அக்ரீமெண்ட் படி ஒரு வருஷம் கழிச்சு டைவர்ஸ், ஒரு குழந்தையும் பெற்று தரணும்னு சொல்றீங்க. அப்புறம் அந்த குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க.



இதுக்கெல்லாம் ஒரு பொண்ணு ஓகே சொல்றானா, கண்டிப்பா அவளுக்கு பணம் மட்டும் தான் முக்கியமான காரணமா இருக்கும். ஆனா எனக்கு உங்களோட பணம் தேவை இல்லை. எங்க அப்பாவுக்கு நல்லபடியா ஆப்ரேஷன் நடந்தா மட்டும் போதும்.



அமைதியாக இருந்தான் ஆதித்யா.



எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா.



சொல்லுங்க வசு.



நான் ஒன் இயர் கழிச்சு உங்களுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடுகிறேன். நீங்க கேக்குற மாதிரி குழந்தையும் பெற்று தருகிறேன். ஆனா குழந்தை மட்டும் என்கிட்ட கொடுத்துடுறீங்களா.



அதிர்ச்சியாக அவளை கண்ணாடி வழியாக பார்த்தான் ஆதித்யா.



குடும்ப வாரிசு வேணும்னு தான் எங்க அப்பா

இப்படி ஒரு இக்கட்டான கண்டிஷன் போட்டு இருக்காரு. அப்படி இருக்க குழந்தையை எப்படி நான் உங்ககிட்ட தர முடியும்.



ஆதித்யா, உங்களுக்காகவும் உங்க குடும்பத்துக்காகவும் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்குற எனக்கு நீங்க இதை ஒரு சின்ன உதவியா நினைச்சு இத செய்யுங்களேன்.



இத தவிர வேற எது வேணா கேளுங்க.



ஒரு நிமிடம் யோசித்தவள்.



என்னை டைவர்ஸ் பண்ண அப்புறம் நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க போறீங்களா என்றாள் வசுந்தரா.



இல்ல நிச்சயமா கிடையாது என்றான் ஆதித்யா.



#############



தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.