• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

என்னை மீட்டும் யாழ் இவளோ....?

பிரியபாரதீ

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 28, 2022
23
17
3
Srilanka
யாழ் - 01

கன்னங்கள் மென்மை இல்லை ஆனால்
அவள் இதழ்களில் ஈரம் இல்லாமலில்லை.
கண்களில் காந்தமில்லை, ஆனால்
அவள் பார்வையில் தாக்கம் இல்லாமலில்லை.

இறுக்கமான முகம்தான். கருகுவதற்கு சில விநாடிக்கு முன்னரான காய்ந்த பப்பாசி இலையொன்றினை நன்கு இழுத்து போர்த்தி பொருத்தியது போன்ற அவளது முகமோ அவன் பார்வையினால் வார்னிஸ் பூச்சியாயால் ஒப்பனை செய்துக்கொண்டது.

அவள் நாணம் அவனை அடங்கவிடவில்லை.

அன்று அவனும் அவளும் அந்த பொழுதிற்கே புத்தாண்டு கொண்டாட்டம் தான்.

சூரியனும் மழைத்துளியும் மாறி மாறி ஒன்றையொன்று பின்னோக்கி இழுத்துக்கொண்டு அவர்களை காண முந்திக்கொண்டிருந்தன. இறுதியாய் மழையே வென்றது.

அவள் வெட்கத்தை மறைக்க மழைக்கு குடை விரித்தாள். மழை தோல்வியில் வெட்கித்தது.

மழை நனைக்காத அவள் இதழ்களை அவன் நனைத்தான். மழைத்துளிகளால் கருகிக்கொண்டே குடைமேல் விழுந்து அவள் பாதங்களை மட்டுமே தொட்டுச் செல்லத்தான் முடிந்தது.

குடைக்குள்ளிருந்து இரு இதயங்கள் சுரணை அற்ற உடல்களைவிட்டு தூரமாகிப்போயின.

உடல்கள் மட்டுமே பேசிக்கொண்டன. இதழ்களுக்கு கவிதை மொழி குருவினால் மாணவனுக்கும் மாணவனால் குருவிற்கும் கற்றுக்கொடுக்கப்பட்டது. முட்கள் நிமிடங்களை கடந்தன.

யாருமில்லா அந்தச் சாலையில் தூரமாய்போயிருந்த அந்த இரு இதயங்களின் ஆத்மாக்களும் அந்த மழையிலும், வெயிலில் காய்ந்த சருகுகளாய் வந்து சரசரப்பை ஏற்படுத்தின . அந்த சரசரப்பே அந்த உடல்களுக்கு இடையூராகிப்போக,

அவள் ஈரடி பின்னகர்ந்தாள்.

"நனையாதடிம்மா, குடைக்குள்ள வாடி"

அவளின் இடுப்போடு அணைத்து இழுத்தான் அவன்.

"சொரி டி........"

நான்காண்டு பழக்கத்தில் முதல் முறையாய் எல்லை மீறியிருக்கிறான் அவன்.

நான்காண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான்.....,

"நீங்களும் என்கிட்ட இததான் எதிர்பார்க்கிறிங்களா? "

அவளது பிறந்தநாள் பரிசாக இவளுக்காகவே வித்தியாசமாக அவனே அழைந்து திரிந்து சொல்லி செய்த கைக்கடிகாரம். அது பன்னிரெண்டு எண்களுக்கு பதிலாக பன்னிரெண்டு தமிழ் உயிரெழுத்துக்களும் இடப்பட்ட ஒரு தமிழ் கைக்கடிகாரம்.

அவளுக்கு பிடிக்குமென அவன் அழையாய் அழைந்து செய்துகொண்டு வந்திருந்தான். அதை பரிசளித்துவிட்டு.....

முதல் முத்தமாய் நெற்றியில் இதழ் பதித்தப்போது துடித்துப்போனவளாய் அவள் கேட்டக் கேள்வி தான் அவனை அவளிடம் இத்தனை நாட்களுக்கு நெருங்கவிடாமல் வைத்திருந்தது.

"நீங்களும் என்கிட்ட இததான் எதிர்பார்க்கிறீங்களா?"

நேசிக்கின்ற ஆணின் முதல் முத்தம் எத்தனை இன்பங்களை வரவழைத்திருக்க வேண்டும். முதல் முத்தம் தாயாக நினைக்கின்ற நெற்றி முத்தமாக கிடைக்கப்பெற வேண்டும் என்பது எத்தனை பெண்களின் தவம். அவள் உள்ளம் பூரித்திருக்க வேண்டாமா? இதழ்கள் உள்ளன்பின் மகிழ்வில் மின்னி ஜொலித்திருக்க வேண்டாமா?

ஆனால் இந்த பெண்ணுக்கு அந்த முத்தம் கூட கொடுமையாகிப்போனதுதான் இவளுக்கு விதி செய்திருந்த கொடுமை.

அவளது உடலுள் இயங்கும் ஆத்மாவே அவனாக இருக்கின்ற போது இப்படியொரு கேள்வியை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.

பாசமாய் "நீ எனது " என்னும் உரிமையில் கொடுத்த முத்தத்திற்கு இப்படியொரு கேள்வியா !

பிறந்தநாளன்று அவளை அவனது அன்புக்குள்ளேயே பொத்தி வைத்திருக்க நினைத்திருந்த அவனுக்கு இந்த கேள்வி ஒரு வெறுப்பையே ஏற்படுத்தியது.

சாதாரண ஒருவன் என்றால், திட்டிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்திருப்பான். ஏன் அவளை வாழ்விலிருந்தே ஒதுக்கியிருந்திருப்பான்.

ஆனால் அவன் அவளைப் புரிந்துக்கொண்டான். அவள் மனதை வெல்ல முன் அவளை தொட நினைத்தது அவன் தவறு என உணர்ந்தான்.

அவளது கடந்தகாலத்தை தெரிந்திருந்த அவன், அவளது இந்தக் கேள்வி , இந்த பயம், இந்த நடுக்கம் நியாயமானது என்றே புரிந்துக்கொண்டான்.

அன்று விலகி நின்றவன், இன்றுதான் அவளை நெருங்கினான். அவளுக்கு அவளது மனதை மாற்றி அவனுக்காக இசைந்துப்போக நான்காண்டு காலம் தேவைபட்டிருந்தது. உண்மையாய் நேசித்த அவனுக்கு பொறுமை அதிகம் என்பதை விட அவள் மீது பாசமும் மரியாதையும் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்காண்டுகளின் பின்னரான முதல் முத்தமே இதழ் முத்தமாகத்தான் இருந்தது. அன்று நெற்றி முத்தத்தையே நிராகரித்தவள் இன்று....? அவளும்தான் புன்னகைத்தாள்.

இது நம்பிக்கையின் உச்சம். உயிரானவன் மீது அவள் கொண்ட காதல் மழையோசையின் இசையில் பாடல் வரிகளாக அவள் இதயத்தில் இழையோடியது.

"என் மனதோடு பேசத் தெரிந்த மனமே
உள்ளன்போடு என்னை மீட்டும் குணமே
தாயாக நானும் பெயர் சூட்ட வா
குழந்தையாக தினம் உன்னை அழைத்திட வா..."

முதல் முத்தமாய் மழை முத்தம் தந்தாய்
காதல் மொத்தம் தந்தாய்
கலையாத கனவாக தினம் நீ வேண்டும்
மனதருகினில் மனமான என் மகௌரனே...."


தாய் தந்தையருக்குப் பின் பெயர் சூட்டும் உரிமை மனைவிக்கே இருக்கிறது. அதனால்தான் மாகாபரதத்தில் பஞ்சபாண்டவர்கள் காட்டிற்குச் சென்ற பொழுது அங்கு பஞ்சபாண்டவர்களுக்கு திரௌபதியே புதியப் பெயர் சூட்டினாள். இதைச் சொல்லியே இவளும் இவனுக்கு இப்பெயரைச் சூடாடினாள்.

நானும் உனக்கு பெயர் சூட்ட அனுமதிப்பாயா பெண்ணே? வினவினான் காதலன்.

" ம்" என்றாள் காதலி.

"பச்சைமண் பாசக்காரியே
பாரமில்லா சுவாசக்காரியே
சில்லிதயத் தென்றலே
என் இதயக்கல்லில்
சிற்பமான சிற்பிகா நீயே"


முதல் வருட பிறந்தநாள் பரிசானது, அவளது மணிக்கட்டில் அவர்களது இதயத்துடிப்பை விட குறைந்த வேகத்திலேயே "டிக் டிக் " என நகர்ந்துக்கொண்டிருந்தது.

மகௌரன் சிற்பிகா காதல் பயணம் தொடரப்போகிறது.

யாழ் இசை தொடரும்......
 
Last edited: