• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் உயிரிலே நினைவுகள் டீசர்

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
73
61
18
Chennai
என் உயிரிலே நினைவுகள் டீசர்


பரந்து விரிந்த கடலலையின் கடற்கரையை ஒட்டி வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அந்தக் கார்.அப்பொழுது பின்னால் அமர்ந்திருந்தவன்
“வண்டியை கடலோரமாக நிப்பாட்டுங்க” என்று முன்னால் இருந்த ஓட்டுநரிடம் சொன்னான்.


அவரும் “சார் நிகழ்ச்சிக்கு போகனுமே”


“ம்ம்… போகலாம் கொஞ்ச நேரம் நிறுத்துங்க” என்றான்.


ஓட்டுநரும் அவன் சொன்னதைப் போலவே கடற்கரை மணலில் கொஞ்ச தூரம் சென்று ஓரமாக நிறுத்தினார்.


காரில் இறங்கியவன் சில்லிட்ட கடற்கரை மணலில் தனது காலணிகளை கழற்றி பாதம் மண்ணில் புதைய நடந்தவன் அங்கே ஓரமாக இருந்த பெரிய பாறையின் லேசாக சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான்.


எதிரே தெரிந்த நீண்ட உயரமான மலையும் அங்கே இருந்த இடங்களையும் பார்த்தவனின் விழிகள் நினைவுகள் எங்கோ சென்றது.


ஆனால் எதுவும் நினைவில்லாமல் வெறும் தெளிவில்லாத பிம்பங்களாக அவன் முன்னால் தெரிந்தது.அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக அவனுடைய கைப்பேசி அடித்தது.


அழைப்பை எடுத்தவன் “ஹலோ”


“ஹனி எப்போ இங்கே வருவீங்க? நீங்க வந்த பிறகு தான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கனும் ஏன்னா உங்க டிரெஸ் தான் முதல்ல வரனும்” என்றாள்.


நீண்ட பெருமூச்சு விட்டவன் “இன்னும் இருபது நிமிசத்துல நான் அங்கே இருப்பேன் டியர் வந்துடுறேன்” என்ற போது அவனே எதிர்பாராத நேரத்தில் ஒரு பெரிய அலை வந்து அவன் மேலே மோதியது.


பக்கத்தில் இருந்த பாறையின் மேல் பட்டு அவனை மொத்தமாக நனைத்தது.சட்டென்று நனைத்த கடல்நீரால் உடம்பில் ஒருவித நடுக்கமும் சிறு பதற்றமும் குளிர்ச்சியும் அவனுள்ளே நினைவுகளை மீட்டது போல் இருந்தது.


அதுவரை குழப்பத்தில் நின்றிருந்தவனின் மனமோ ஏதோ ஒன்றை கண்டுக் கொண்டதாக ஆனந்த அதிர்ச்சியில் இருந்தது.


*****


“எல்லாம் ரெடியாகிடுச்சா நாம போகலாமா?” என்றான் அவன்.


“ம்ம்… என்னங்க அத்தைக்கு பிடிச்ச கலர்ல இரண்டு காட்டன் புடவை வாங்கி இருந்தேன் அது பீரோல இருக்கு எடுத்துட்டு வாங்க நான் ரித்திஷீம் நாமளும் போகும் போது சாப்பிடுறதுக்கு கொஞ்சமா ஸ்நாக்ஸ் செய்தேன் அதை டப்பால போட்டுறேன்” என்று அதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.



ரித்திஷ் தனது விளையாட்டு பொம்மைகளை வைத்திருந்த பையை தோளில் மாட்டியபடி அவர்கள் செல்ல வேண்டிய இனாம் காருக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தான்.


மூவருமாக எல்லாப் பொருட்களையும் காரில் ஏற்றி விட்டு பயணத்தை ஆரம்பிக்க முன்னர் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் யோசனையாக “இப்போ திரும்ப ஊருக்கு போறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லைல வேண்டாம்னா நாம இங்கே இருக்கலாம்” என்றான் ராகவன்.


“அதெல்லாம் ஒன்னுமில்லை நாம போகலாம்” என்றாள் புன்னகை ததும்பும் வதனத்தோடு…


ரித்திஷ் பின்னால் அமர்ந்திருந்தவன் “அப்பா பாட்டு போடுங்க கேட்டுட்டே போகலாம்” என்றான்.அவனோ சரியென்று சொல்லவும் அருகில் இருந்தவளோ “வண்டியை பார்த்து கவனமா ஓட்டுங்க என்ன இருந்தாலும் இது உங்க ப்ரெண்டோட வண்டி நல்லபடியா ஊருக்கு போயிட்டு வந்து திரும்ப கொடுக்கனும்” என்றதும் அவனோ “சரிங்க மேடம் நீங்க சொல்லிட்டா அது சரியாத் தான் நான் கவனமாக போறேன்” என்று அவர்கள் தங்களுக்கான பயணத்தை ஆரம்பித்தனர்.
 

Attachments

  • InShot_20250803_110931357.jpg
    InShot_20250803_110931357.jpg
    125.2 KB · Views: 6
Last edited:
  • Love
Reactions: Sailajaa sundhar

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
73
61
18
Chennai
நல்லா இருக்கே எப்போ ஆரம்பிப்பீங்க
போட்டிக் கதை எழுதிட்டு இருக்கேன் சிஸ் அப்புறம் தான் ஆரம்பிக்கனும் மனமார்ந்த நன்றிகள் 😍😍
 

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
73
61
18
Chennai
அந்த ஸ்டோரி எப்போட முடிப்பீங்க?
அதுவும் அடுத்து எழுத ஆரம்பிடுச்சிடுவேன் சிஸ்