• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே - புவனேஸ்வரி கலைசெல்வி -1

BOOMI_AK

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 26, 2021
6
5
3
Singapore
(அத்தியாயம் ஒன்று )

க்கராயி அம்மன் கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த சுற்றுலா வண்டி.



"ஏ மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே ..

அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே..

வேலா எப்ப வர போறான்..

வேலா எப்போ வர போறான்", வானொலியில் ஒலித்த பாடலுடன் இணைந்து பாடிய பவானியின் காதை செல்லமாக திருகினார் பாட்டி வைதீஸ்வரி. வண்டியில் இருக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவளாய்,



"ஆ..ஐயோ வலிக்குது ஈஸ்வரி..” என்றாள் அவள்.



“ஏ புள்ள எத்தனை தடவை சொல்லுறேன், வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு? எங்கயாச்சும் என் பேச்சை கேட்கிறாயா நீயி ?” என்று வழக்கம் போல ஆரம்பித்தார் வைதீஸ்வரி.



“வேலாங்குற பேர வேலான்னு கூப்பிடுறது ஒரு தப்பா ஈஸ்வரி? அப்ப எதுக்கு நீ பேர் வச்ச?” என்று பவானி மீண்டும் சீரவும், பாட்டி அவளை அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க



"அப்படி நல்லா கேளு பேத்திமா" என்று இடைப்புகுந்தார், தாத்தா கரிகாலன்.



"தாத்தோய் ..எனக்கு சப்போர்ட் பண்றது இருக்கட்டும், முதல்ல உங்க மனைவிய கொஞ்சம் அடக்கி வைங்க. பேச்சு பேச்சா இருக்கும் போதே கை நீட்டுறாங்க.. என் காதைத் திருகித் திருகியே ஒருவழியாக்கிடுவாங்க போல .. அப்புறமா உங்க பேத்திக்கு ஒரு பக்கம் காது இல்லன்னு சொல்லி எனக்கு கல்யாணமே நடக்காம போயிடும் பாருங்க! அதுக்கப்புறம் வேல்ஸ்கும் நீங்க தான் பதில் சொல்லணும்" என்று மீண்டும் வேலனின் பெயரை பரிகசித்து பாட்டியை மறைமுகமாய் சண்டைக்கு இழுக்கத் தொடங்கினாள் பவானி.



அவளை கண்ணாலேயே எரித்த வைதீஸ்வரி, பேத்தியின் தரப்பு நியாயத்தை கேட்க வாகாக திரும்பிய கணவனை தன் பக்கம் இழுத்தார்.



"ஏங்க வயசு புள்ள கொஞ்சம் கூட நாவடக்கமே இல்லாம பேசுது.. நீங்களும் அதை ரசிச்சுக்கிட்டு இருக்கீங்க? நான் எல்லாம் அந்த காலத்துல எதிர்த்து பேசினா கண்ணாலேயே மிரட்டி வைப்பீங்களே" என்று பாட்டி அவர் பக்கம் இருந்த நியாயத்தை எடுத்துக் கூற எண்ணி ஆரம்பிக்க, தாத்தா உடனே ஒரு காதல் பார்வையை வீசினார்.



" மனசு தொட்டு சொல்லு வைதீஸ்வரி, நான் உன்ன மிரட்டியா பார்த்தேன்?" என்று சிரித்து கண் சிமிட்டவும் பாட்டியின் முகத்தில் வெட்கம் லேசாக எட்டிப் பார்த்தது. கூடவே கொஞ்சம் சங்கடமும் தான்.



" இந்த ஆளு ஒரு விவரம் கெட்ட மனுஷன்!! பேரன் பேத்திகள் பார்த்த பொறவும் இங்கிதம் இல்லாம கண்ணடிக்கிறத பாரு !"



அவ்வளவுதான் அதோடு பாட்டியின் கோபம் எங்கேயோ மறைந்து போய்விட்டது. அதை கண்டு கொண்ட பவானி ரகசியமாக தாத்தாவிற்கு கை கொடுத்தாள் . வெகுநேரமாக வண்டியில் கடிமான மௌனமே தடித்திருக்க இவர்களின் சம்பாஷணை மற்றவர்களையும் கொஞ்சம் இலகுவாக்கியது. ஆனாலும் , பவானியின் மனது வேலனை தேடாமல் இல்லை . உள்ளே எரிமலை வெடிக்க , வெளியில் குளிர்பனியாய் சிரித்தபடி முகத்தை வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்க , விதி "இந்த ஆப்பு போதுமா ? "என்று பாடாத குறையாய் பாடியது.



தே வண்டியில் இருந்த அவளது சுட்டித் தங்கை,

" அக்கா இந்த இன்டர்வியூல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று பவானி அண்மையில் கொடுத்த நேர்காணல் காணொளியை அலைபேசி மூலமாக காட்டினாள். மீண்டும் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் , கலக்கம் அதிருப்தியென பல உணர்வுகள் பிரதிபலித்தன.



" நீயும் ஏன்டீ ஒரு பக்கம் இப்படி ஏழரை இழுத்து விடுற?" என்று மனதிற்குள் பொறுமியவள், மௌனமாகிவிட்டாள். அதுவரை கொஞ்சமேனும் இயல்பாகி பேசிக்கொண்டிருந்த தனது மகள் மௌனமானதும், அங்கிருந்த அழகருக்கு மனம் பொறுக்கவில்லை.



" பவானி நீ கொடுத்த இன்டர்வியூ நானும் பார்த்தேன்.. நீ ஒரு தப்பும் பண்ணல.. அதனால இப்படி சோகமாகாத செல்லம்!" என்று கூறவும், உடனே சீறினார் அவருடைய சரி பாதி கண்மணி.



" இப்படி கொம்பு சீவி விட்டுக்கிட்டே இருங்க! இவ நாளாப் பக்கமும் எதிரிகளை சம்பாதிச்சுக்கிட்டே போகட்டும்.. என்ன வயசு ஆகுது இவளுக்கு ? இந்த வயசிலும் எதை பண்ணனும் , எதை பண்ணக்கூடாதுன்னு தெரியாதா ? இவ போற இடத்துக்கெல்லாம் நீங்க போய் பாதுகாப்பு கொடுப்பீங்களா? பொம்பள புள்ளைய பெத்து வச்சுட்டு எப்போ என்ன நடக்கும்னு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டே நான் சுத்தணுமாக்கும்? அப்பவே சொன்னேன் இந்த டைரக்க்ஷன் வேலை எல்லாம் தேவையில்லை.. அந்த படிப்பும் வேணாம்ன்னு.. என் பேச்சை யாரு கேட்டீங்க ?"

"..."



" ஏதோ ஒரே ஒரு வாய்ப்புன்னு சொல்லி அந்த டிவி சேனலுக்கு போனாள்.. அவளோட திறமைக்கும் நல்ல நேரத்துக்கும் சேர்த்து , அவளுக்கு அங்கீகாரம் கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்தான்! நம்ம பொண்ணு ஒரு சீரியலுக்கே டைரக்டர்னா அது பெருமைதான். ஆனாலும் இவ இன்னும் கத்துக்குட்டி தானே? இப்பவே இவ்வளவு பேசி எதிரிகளை சம்பாதிச்சுக்கணுமா?" என்று கண்மணி தனது ஆதங்கத்தை அடுக்கிக் கொண்டே போக, பவானியாள் பொறுக்கமுடியவில்லை..









"அம்மா, நான் ஒன்னும் ஊர் உலகத்துல இல்லாததையோ, இல்ல யாருக்கும் தெரியாததையோ சொல்லல! சம காலத்துல எடுக்குற சீரியல்களில், பத்துல ஒன்பது சீரியல் மோசமா தானே இருக்கு? சொல்லப்போனா பாட்டு, படம், இதெல்லாம் கூட ஒரு தடவையோ ரெண்டு தடவையோ மக்கள் மனச பாதிச்சிட்டு காணாம போயிடும்! அடுத்தடுத்து வர்ற படைப்புகள் மக்களை மறக்க வைச்சுடும்!



ஆனால் சீரியல் அப்படியா? வயசுக்கு வரைமுறையே இல்லாம காலைல இருந்து மாலை வரைக்கும் அதை தானே பாக்குறாங்க எல்லாரும் ? அப்படிப்பட்ட நிகழ்ச்சியில எப்பப் பார்த்தாலும் தப்பான விஷயங்களையே காட்டிட்டு இருந்தா, அடுத்தடுத்து மாற்றமே வராமல் போயிடும் இல்லயா? நாம இன்னும் எந்த காலத்துல இருக்கோம் ? ஒரு பையனுக்காக ரெண்டு பொண்ணுங்க அடிச்சுக்குறதுதான் எல்லா சீரியல்லயும் கதையா இருக்கு! அதுவும் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும் அவனேதான் வேணும்ன்னு இன்னொரு பொண்ணு நினைப்பாளாம். ஒரு பொண்ணு அவனேதான் வேணும்ங்கிறதுக்காக வில்லியாக மாறுவாளாம். நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. சில வருஷத்துக்கு முன்னாடி பொறந்த பிள்ளைக்கு கள்ளிப்பால் கொடுக்குற வழக்கம் பெண் குழந்தைங்க மேல தானே நடத்துனாங்க ? அதையே கணக்கா வெச்சாலும் , இப்போ பசங்களுக்கு பொண்ணுங்களே போதலன்னு சொன்னாக்கூட போனால் போகுதுன்னு ஏத்துக்கலாம் .. ஆனா ஊரு உலகத்துல நல்ல பசங்களே இல்லாத மாதிரியும், பொண்ணுங்க ஒரே பையன் பின்னாடி சுத்தற மாதிரி கதை எழுதுறாங்க இதெல்லாம் பார்க்க நல்லாவா இருக்கு பசங்க மாதிரி டிரஸ் போடணும் பசங்க மாதிரியும் காட்டுறதுதான் புதுமையா ? "



"..."



" முடி வெட்டணும்; பசங்க மாதிரி பைக் ஓட்டணும்; இதுக்கெல்லாம் பெண்ணியம் பேசிக்கிட்டு டெய்லியும் நிறைய பேரு வராங்க.. ஆனா சீரியல்ல பொண்ணுங்களை இவ்வளவு கேவலமாக காட்டுகிறாங்க.. அதை படைப்புன்னு கடந்து போகாமல் , அன்றாட வாழ்க்கையில ஒரு அங்கமா ஆயிடுது . தெரிஞ்சோ தெரியாமலோ உளவியல் ரீதியா அது சமூகத்தை பாதிக்கும்ன்னு யாருக்கும் தோணாதா ? " என்று பவானி கேட்க, கண்மணி கொஞ்சம் அமைதியானார்.



அவருடைய மௌனத்தை சாதகமாக்கிக் கொண்டு மேலும் பேசினாள் பவானி. " அது மட்டும் கிடையாது. இப்போதெல்லாம், கொரியன் சீரிஸ், ஓ டிடி ன்னு சாதாரண மக்களே போன் மூலமாக பலவிதமான நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. இன்னமும்கூட பழைய கதையையே சீரியலில் காட்டி ஏமாத்தறது நியாயமா?பயன்தான்னு நினைக்கிற ஊடகமே, பங்கம் விளைவிக்கிது; கைக்குள்ள அடக்கமா இருக்குற செல்போன் நம்மையே அடக்கி ஆளுது; மறைமுக அரசியல் எல்லாம் இல்லாமல் நேரடியாகவே சாமர்த்திய அரசியல் நடக்குது! இதையெல்லாம் எளிய மக்களுக்கு புரிய வேண்டாமா ? போயி சேர வேணாமா ? "



".."



"அதையெல்லாம் விட்டுட்டு, சாமி வந்து இத செஞ்சுச்சு அத செஞ்சுச்சுன்னு காட்டி ஏமாத்துறாங்க.. ஒன்னு சீரியல்ல சாமி வரணும்; இல்லனா பேய் வரணும்! ஏன் சயின்ஸ் வரக்கூடாதா ? தன்னம்பிக்கை வரக்கூடாதா? உழைப்பின் பலன் வரக்கூடாதா ? " என்று பவானி கேட்கவும், அடங்கி இருந்த கண்மணி வெடுக்கென ,



" உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லங்குறதுக்காக ஓவரா பேசாதடீ" என்றார்.



"அம்மா கொழந்தையில இருந்து என்னை நீங்க பாக்குறீங்க.. இன்னுமா என்னோட நம்பிக்கையப்பத்தி புரியல உங்களுக்கு ? கடவுள் இல்லைன்னு நான் சொல்லல.."



" இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வரீங்க தானே அக்கா" என்று இளையவள் இடைப்புக மீண்டும் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் பவானி .



"குள்ள பிசாசு இன்னொரு வாட்டி நீ குறுக்க பேசிப்பாரு .." என்று காதில் சன்னமாக சொன்னவள் , சொல்ல வந்ததை தொடர்ந்தாள்.



"அம்மா எனக்கு குலதெய்வம் மேல நிறைய நம்பிக்கை இருக்கு.. அதனாலதானே நீ சொன்ன உடனே உன் கூட சேர்ந்து இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு நானும் குலதெய்வ கோவிலுக்கு வந்திருக்கேன்? மனுஷங்களோட மனுஷங்களா இருந்து; பழகி; அவங்களுக்கு நல்லது செஞ்சு; உயிரையும் தியாகம் பண்ணிட்டு போன; கடவுள் எல்லாமே இன்னமும் வாழறாங்க.. அவங்க நம்மளை காப்பாற்றுவாங்க அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..



".."



" எப்படி நம்ம வீட்டுல யாராவது இல்லாம போயிட்டாங்கன்னா, அவங்க இன்னும் ஆத்மாவா நம்ம கூடத்தான் இருக்காங்கன்னு நாம நம்புறோமோ, அதேமாதிரி குலதெய்வமும் இருக்கு அப்படிங்கறத நான் நம்புறேன். அதுக்காக சாமி வந்து, இத செஞ்சது அத செஞ்சது; கண்ண குத்தும்; கேள்வி கேட்கும்; இந்த மாதிரி மூடநம்பிக்கை எல்லாம் என்னால நம்ப முடியாது! கோயிலுக்குள்ளேயே தப்பு நடந்ததுன்னும் , கோவில் பேரை சொல்லி தப்பு நடக்குறதும் சாமி பார்த்துட்டு தானே இருக்கு ? ஒரு சாமி இருந்த இடத்தை இன்னொரு சாமிக்கு தரணும்ன்னு மக்கள் சொல்றத சாமி பாக்குது தானே ? இதையெல்லாம் ஏன் சாமி தடுக்கல ?



" .."



"அப்ப நான் எப்படி கடவுள நம்ப முடியும் நீங்களே சொல்லுங்க ? கடவுள் பெயரை சொல்லி நீங்க நூறு பேருக்கு அன்னதானம் பண்ணுனா அந்த கடவுளை நானும் தூக்கி வெச்சுக்க தயார்.. ஆனா அதே கடவுள் பெயரை சொல்லி நீங்க ஒரே ஒருத்தரை ஏமாத்தி பிழைச்சா அங்க நான் கடவுளை எதிர்த்து தான் ஆகணும்! இதுதான் என்னுடைய தெளிவு!" என்று கூறி பெருமூச்சு விட்டாள் பவானி.



"சீரியலில் அவங்க கடவுளை காட்ட வேணான்னு நான் சொல்லல ..ஆனா கடவுளுக்கு நிகரா நம்ம உலகத்துல என்னென்னமோ நடக்குது.. இயற்கை பேரிடர், மாற்றப்பட்ட சட்டத் திட்டங்கள், மாற்றவேண்டிய சட்டத் திட்டங்கள், கல்வி திட்டம், ஊடகத்தினால் வர பிரச்சனை, உளவியல் பிரச்சனை, இதப்பத்தி யாரும் பேசுறது இல்லையே ? எப்போ இதெல்லாம் திரைக்கு வரும்? அதுதான் என் கோபம்! அதனாலதான் ஒரு கதையை தேடித்தேடி கண்டுபிடிச்சு அதை என் சேனல்கிட்ட கஷ்டப்பட்டு பேசி அனுமதி வாங்கி சீரியல் பண்ணிட்டு இருக்கேன்.."



" யாரோ ஒருத்தர் எழுதின கதையை நீ காட்சியா காட்டுற அதுக்கே உனக்கு இவ்வளவு பேச்சு.. இதுல நீயே கதை எழுதி இருந்தா இன்னும் என்னவெல்லாம் ஆகி இருக்குமோ" என்று கண்மணி முணுமுணுக்க, பவானி முகம் இருண்டு போனது.



யாரோ ஒருத்தி ! அந்த யாரோ ஒருத்தி தான் அடுத்து வரும் நாட்களில் இவளை இக்கட்டில் இழுத்து விடுவாளோ என்று பயம் கண்மணிக்கு மெல்ல எழுந்தது. அவள் மிகவும் பெருமிதமாக சொன்ன அந்த வலுவான கதையை எழுதும் கரங்கள் இப்போது சோர்வாகி எழுதுவதையே நிறுத்திவிட்டதாக ஒரு செய்தி வந்த


தன்னால் அவிழ்க்கமுடியாத அந்த எழுத்தாளினியின் கை விலங்கை வேலனால் அவிழ்க்க முடியும் என்பது பவானியின் அனுமானம். வேலன் ஐயா என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Attachments

  • Capture.JPG
    Capture.JPG
    19.9 KB · Views: 31

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
அழகான ஆரம்பம்..
வெல்கம் சிஸ்...
வாழ்த்துக்கள்
 
  • Love
Reactions: BOOMI_AK

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஊடகங்களின் உண்மை தன்மையை பவானியின் மூலம் சொல்லியது மிக சிறப்பு சகி. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் அவர்களுக்கு உடைய தன்மை என்றும் மாறாது, மாற்ற முயற்சித்தாலும் முழுமையடையாது 👍👍👍👍👍👍👍👍👍👍👍சூப்பர் சகி 😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
  • Like
  • Love
Reactions: BOOMI_AK and Vimala

BOOMI_AK

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 26, 2021
6
5
3
Singapore
ஊடகங்களின் உண்மை தன்மையை பவானியின் மூலம் சொல்லியது மிக சிறப்பு சகி. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் அவர்களுக்கு உடைய தன்மை என்றும் மாறாது, மாற்ற முயற்சித்தாலும் முழுமையடையாது 👍👍👍👍👍👍👍👍👍👍👍சூப்பர் சகி 😍😍😍😍😍😍😍😍😍
ஊக்கமளிக்கும் கருத்தினால் உவகையுறுகிறேன் , நன்றி மா