• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் சிரிப்பின் முகவரியே..12

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
நீ எனக்கு பட்ட கடனை வேற மாதிரி நமக்கு சாதகமாவும் அடைக்கலாம் என அவன் புதிர் போட்டதிலேயே உள்ளுற கொஞ்சமாக திடுக்கிட்டவளுக்கு அவன் பேச்சின் மெய்யான அர்த்தம் இது தான் என தெளிவாக கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும் அவனின் பேச்சில் துருத்தி நின்ற ஏதோ ஒன்று அவன் பேச்சில் அமைத்தை உள்ளரத்ததிற்கு அவள் மனம் பல வடிவம் கொடுத்ததில் தோன்றியது தான் இந்த லேசான நடுக்கம்..

பு...புரி..யலையே என ஒரு வார்த்தையையே அத்தனை பிராயத்தனபட்டு அமைத்து தன் சிறு வாயின் வழி வெளி தள்ளியவளை ஸ்வாரஸ்யமாக பார்த்து வைத்தவன்...

இப்போ நா உனக்கு ஒரு விஷயத்துல ஹெல்ப் பண்ணா நீ எனக்கு வேற ஒரு விஷயத்துல ஹெல் பண்ணுறது நியாயம் தான பப்ளி பக்கா நியாயஸ்தனாக கேட்டவனின் வாய் வழி வந்த தனக்கான உரிமையான விளிப்பு இப்போது தான் அவளுக்கு உறைத்ததாக...

அவன் சொன்னதை எல்லாம் அப்போதைக்கு புறந்தள்ளி விட்டு
குனிந்து யோசனை சுமந்தப்படி சிறத்தையாக அவன் கூறுவதை உள் வாங்கி கொண்டிருந்தவள் பப்ளி என்ற அவன் அழைத்ததில் பட்டென நிமிர்ந்து வாய்விட்டு எதுவும் கேட்டுக்கொள்ளாமல் தலை சாய்த்து பார்த்தவளின் விழியினோடு தன் விழியை உன்றியவன் என்ன என்பதாக புருவத்தை உயர்த்தியதும் மீண்டுமாக தலை தாழ்த்தி கொண்டாள்...

சொல்லு பப்ளி நியாயம் தான என்ற போதும் பெந்த பெந்த விழித்தவளின் விழி பாவனை அவனை மயக்கியதின் அடையாலமாய் அவளை கண்களில் மயக்கம் தொனிக்க பார்த்தப்படி தன் பின்னந்தலையை அழுந்த கோதி கொண்டான் அந்த மகா உத்தமன்..

அவன் சொன்னதிற்கு ஆம் என்பது போல் தலையை ஆட்டியவளை பார்த்து எக்ஸாட்டிலி அதான் நானும் சொல்லுறேன் அப்போ உனக்கு கடனை அடைக்க இது ஒரு வழி தான என்றவனை பார்த்து இன்னும் குழப்பம் தீர்ந்தப்பாடு இல்லாததில் மூளையின் அடி தட்டில் இன்னும் குழப்பமே மிஞ்சுவதாய்...

இரு நீ ரொம்ப குழப்பிக்கிற லெட் மீ எக்ஸ்பிளேன் என்றவன் மேலும் தொடர்ச்சியாக அவனே தொடர்ந்து நீ எப்பையும் என் கூட இருக்கனும் இப்போனு இல்லை எப்பையும் ஆன்ட் இதை நா ரெக்வெஷ்டா கேட்களை பப்ளி காட் இட் என்றவனை பட்டென நிமிர்ந்து பார்த்தவள் விஷயத்தின் சாரம்சத்தை உணர்ந்து கொண்டதாய் ஆர் யூ இன் ல.ல..லவ் வித் மீ என வெகுவாக தடுமாறியபடி கேட்டவளை பாவம் மாறாது பார்த்திருந்தவனை கண்டவளுக்கு தன் கனிப்பு தான் தப்போ என்று தோன்றியதாக..

அவன் சொல்லும் முன் அவளே தலையை ஆட்டி மறுதலித்து கொண்டு இல்லை அப்படி இல்லை தான என்று அவனிடம் கேட்டவளுக்கு இதற்கு மேல் பொறுமையும் இல்லை இதற்கு மேல் தன்னை குழப்பி கொள்ளவும் விருப்பம் இல்லாததாக...

சார் நீங்க சொல்லுறது ஒன்னுமே புரியலை தெளிவா சொல்லுங்க அப்பறம் கண்டிப்பா உங்க கடனை நா அடைச்சுருவேன்...

நா உனக்கு கடனா கொடுத்ததா சொல்லவே இல்லையே பப்ளி இட் ஜெஸ்ட அ ஹெல்ப் அவ்வளவு தான் அதுக்கு நீ எனக்கு திருப்பி ஒரு ஹெல்ப் பண்ணனும் அதான் சொல்லுறேன்..

என்ன ஹெல்ப் என்கிட்ட எதுவும் இல்..லையே என்றவளுக்கும் அவன் தன்னிடம் இருந்து பொருளாக எதையும் ஏதிர் பார்க்கவில்லை என்றும் தெரியும் இருந்தாலும் கேட்டு வைத்தவளை பார்த்து..

நீ ஹாஸ்டல் ஸ்டுடன்ட் என்றதற்கு ஆம் என தலை ஆட்டியவளின் முகத்தை விட்டு தன் பார்வை கீழ் இறங்காதது அவனுக்கே ஆச்சர்யம் தான்..

அதற்காக அவளின் முகத்தை தாண்டி அவனுக்கு ரசிக்கும் எண்ணம் இல்லை என்பது அர்த்தமாகாது..ஏனினின் அவனின் பார்வை ஏதர்ச்சியாக அதாவது ஏதர்ச்சியாக மட்டுமே பெண்ணவளின் உடலில் படிந்த இடத்தை எல்லாம் பிரித்தடுத்து சோதித்தால் இந்த மகா உத்தமனின் வன்டவாலம் தண்டவாளம் ஏறும் என்பதில் ஐயம் இல்லை..

எப்போல இருந்து ஹாஸ்டல் படிக்கிற என்றவனை பார்த்து தயக்கமாக ஏறிட்டவள் அது வந்து அப்பா அம்மா எல்லாம் பாரின்ல இருக்காங்க அதுனால ஸ்குல் காலேஜ் ரெண்டுமே ஹாஸ்டல் தான்...

ம்ம் என்று கேட்டு கொண்டவன் அவளின் மொத்த சத்திரத்தையும் தோன்டி துருவ விரும்பவில்லை என்றால் அவளும் தன்னை பற்றிய மொத்த கதைகளையும் சொல்ல துனிந்திருக்கவில்லை..

நீ என் கூட தங்குறீயா என நேராடியாக கேட்டவனின் வார்த்தைகள் கோரிக்கையின் வகைராவில் சேர்ந்தாலும் அதில் தொனித்த அழுத்தம் நீ என்னுடன் தங்கியே ஆக வேண்டும் என்று மறைமுகம கட்டளையை விதித்ததை அவளும் உணர்ந்து கொண்டாள்..

அதிர்ச்சி மேலிட அவனை பார்த்தவள் அது கஷ்டம் அப்பாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும் என ஏதேதோ காரணத்தை முன் நிறுத்தி மறுக்க பார்த்தவளை விட்டு இப்போது தான் நகர்ந்து எழுந்து அவளுக்கு ஏதிரான இருக்கையில் அமர்ந்தபடி அவளை பார்வையால் ஊன்றியவன்..

தலை அசைத்து ஒகே அப்போ டெயிலி காலேஜ்க்கு கிளம்புற டைம் அப்பறம் நைட் தூங்குற டைம் என் கூட தான் இருக்கனும் என்று கூறியவனின் வார்த்தையோடு பின் தொடர்ந்த ஒரு வித அழுத்தம் அவளை சம்மதிக்க வைத்திருந்ததோ அவளும் சம்மதித்தாள்...

குட் என்று எழுந்து தன் இருக்கையில் இருந்தவளை எழுப்பி விட்டு தான் அமர்ந்து கொண்டவன் நின்றிருந்தவளை பார்த்து வீட்டுக்கு போகலையா டைம் ஆச்சே என தன் கை கடிகாரத்தை அவள் முன் நீட்டி சுட்டி காட்டியவனை பார்த்து என்ன மாதிரி ஏதிர் வினை ஆற்றுவது என அறியாதவளாய் விழித்தவள் பின் கண்டப்படி என்னேனவோ பாவமும் தோற்றமும் காட்டியவள் மறு நிமிடம் வெளி ஒடியிருந்தாள்...

இத்தனை நேரம் அவன் கொடுத்த அதரிச்சியில் முழுதாக சுவாச காற்றை வெளியிட மறந்தவளாய் பாதி பாதியாக உள்ளிழுத்தும் வெளியிழுத்தும் விட்டு கொண்டிருந்தவள் இப்போது தான் சுவாசப்பையின் அடி ஆழம் வரை மூச்சிழுத்து தேங்கிய பழைல காற்றையும் சுத்திகரித்து கொண்டிருந்தவளின் முன் வந்து நின்ற அவனின் பி.ஏ அவன் விட்ட வேலையை தொடர்ந்ததாய் ஆசுவசமாக கொஞ்சம் நேரம் எடுத்து நின்றிருந்தவளை அழைத்து பயமுறுத்தியிருந்தான்..

ஆஆ என கத்தியவள் பின் தன்னை ஒர் அளவிற்கு நிதானப்படுத்தி கொண்டு திரும்பி தன் பின் நின்றவனை பார்த்தவள் என்ன சார் ஏன் பயமுறுத்துரீங்க மெல்ல கூப்பிட தெரியாதா என அவனிடம் சாட முடியாமல் போன குறையை இவனிடம் தீர்த்து கொண்டதாய்..

சாரி மேடம் என பனிவாக சிரம் தாழ்த்தியவன் சார் உங்களை பத்திரமா உங்க ஹாஸ்டல்லை விட்டுட்டு வர சொன்னாங்க போகலாமா என்றதும் சற்று யோசனையோடு தயக்கத்தையும் சுமந்தவளாய் நானே போய்கிறேனே..

இல்லை சாரோட ஆடர் மீற முடியாது எனவும் அவனோடே சரி என கிளம்பியிருந்தாள்...

காலை பதினோரு மணி அளவில் ஹாஸ்டலை விட்டு கிளம்பியவள் இப்படி நேரம் கடந்து இரவை தொடும் நேரத்திற்கு உள் நுழைய போவதை நினைத்து மருகியதற்கு தூரியன் முன்னமே வழி செய்திருந்தான்..

அவளை உள்ளேயே கொண்டு வந்து விட்டவன் நேராக வார்டனிடம் என்ன கதையை அவிழ்த்து விட்டானோ தெரியவில்லை எப்போதும் சொர்னா அக்கா போல் தொண்டை கிழிய கத்தும் மானவர்களால் செல்லமாக அலைக்கபடும் அந்த கொரிலா குரங்கு கேள்விகள் இன்றி அமிழ்ந்து போனது..

கதிரவனின் கொடுங்கொள் ஆட்சிக்கு சற்று ஆசுவாச இடைவெளியாய் ஆட்சியை பிடித்த சந்திரவனின் ஆட்சியில் தங்கள் கூட்டுக்குள் இதமாக பதுங்கி கொண்ட மக்கட்க்கூட்டமும் பறவை கூட்டமும் அவன் ஆட்சியில் தேக்கிய சுகங்களை சேர்ந்து களைப்பதற்காகவே மீண்டும் ஆட்ச்சியை கைப்பிடித்து வந்த கதரிவனின் மீண்டும் தன் கதிர்களால் எல்லொரையும் தீண்டி கொடுமையாக தொடங்கியிருந்தான்...


நேரம் எட்டை தொட்டதிருந்ததில் ஹாஸ்டலில் அனைவரும் எழ வேண்டும் என்பதற்கு கடைப்பிடித்த நெறிமுறையாக வழக்கமாக கட்டாகும் கரன்ட் அன்றும் விதிவிலக்கின்றி அனைக்கப்பட்டதில் உறக்கம் களைந்து எழுந்த இதழியழுக்கு எழுந்ததுமே வந்து ஒட்டி கொண்ட தலைவலியில்..

தலையை பிடித்தவள் என்னோட கிரைம் ரேட் கூடிட்டே போகுதே என்று தனக்குள் புலப்பியபடி படுக்கையை விட்டு எழுந்து நின்றவளுக்கு கிளம்பி காலெஜிற்கு போகவே பெரும் மலைப்பாய் இருந்ததோடு...

நேற்று அதிர்ச்சின்‌‌ முனை திரியை பற்ற வைத்தது போலான அவன் கொடுத்த வெகு சில அதர்ச்சிகளையே சுமக்க முடியாது தடுமாறியவளுக்கு இன்று அவன் திரியை தாண்டி வெடியை வெடிக்க வைப்பது போல் எத்தனை அதிர்ச்சியை அடுக்குவானோ என உள்ளோடு தொன்றிய தடுமாற்றம் ஓவர் புளோவாகி அவளை வெளியோடும் சற்று நடுங்க செய்தது என்பது உன்மை..

ஒருவழியாக கிளம்பி கெம்பஸினுள் நுழைந்து தன் கிளாசை அடையும் முன்பே தொடங்கி இருந்த கிளைசை கண்டு போச்சு கொஞ்ச நாளா எனக்கு கட்டம் வட்டம் சதுரம் எதுவும் சரி இல்லை போல என்று தன்னோடே புலம்பி கொண்டவளுக்கு அங்கே சாவகாசமாக வகுப்பெடுத்து கொண்டிருக்கும் லெட்சுமி மேமை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் பயம்...

தன் வேலையில் சரியாக இருந்தாலும் கலில் இருந்து நார் உரிப்பதை போல் குத்தம் கண்டறிந்து வாட்டி எடுக்கும் அந்த மேமின் கிளாஸிற்கே லேட்டாக வந்தால் கொஞ்சம் ஜெர்காவதில் அதிசயம் ஒன்றும் இல்லையே...

ஆனால் அன்று அவளின் நல்ல நேரமோ என்னவோ அதி பட்ச்ச தண்டயாக அவர் முறைப்பு மட்டுமே அவளை கண்டித்ததில் அன்று தப்பித்திருந்தாள்..

நேராக வந்து தன் இருக்கையில் இடைம்பிடித்து கொண்டவள் தன் பக்கம் இருந்த காலி இருக்கையை பார்த்து இன்னைக்கு இவ வேற வரலையா என சற்றே சலிப்போடு எண்ணி கொண்டவள் ஆசிரியர் வெளி செல்ல காத்திருந்தாள் தன் நன்பர்களிடம் ஏன் சிந்தியா வரவில்லை என கேட்டறிய...

மொத்த வகுப்பின் நேரத்திலும் ஏதோ ஓர் யோசனையோடு பாடம் கவனிப்பது போலான பாவலாவோட கடத்தியவளுக்கு மணி அடித்து ஆசிரியர் வெளி சென்றது கூட உறைக்காத அளவிற்கு யோசனை முழ்கி முத்தெடுக்கும் முயற்ச்சியில் முன்னேற்றம் இன்று தத்தளித்து கிடந்தாள்..

அப்படியே அமர்ந்திருந்தவளின் அருகே வந்த அமர்ந்த தனுஜா ஒய் யாரு இல்லாத இடத்தை என்ன வெறிச்சு பாத்துட்டு இருக்க இப்போ தான் யாரும் இல்லையே அப்பறமும் ஏன் இன்னும் கிளாஸை கவனிக்கிற மாதிரி சீன் போடுற என கேட்டபடி அவள் உலுக்கியதில் உணர்வுக்கு மீன்டவள்...

தூக்கம் களைந்த நொடி வந்து தாக்கிய அதிர்ச்சி போல் ஹான் என திடுக்கிடலுடன் கேட்டவளை பார்த்து சிரிதாக இதழ் வளைத்தவள்..

ஹெய் யாழி என்னாச்சு உனக்கு ஏன் ஸ்டிரேஞ்சா பிஹேவ் பண்ணுற..

என்றவளை பார்த்து சிரித்து சமாளித்தவள் அடுத்ததாக சிந்து இன்னைக்கு வரலையா என பேச்சையும் மாற்றி இருந்தாள்...

ஏன் நாங்க எல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியலையா வராத அவ தான் உனக்கு தெரியுறாலா என்று குதற்க்கமாக கேட்டவளை பார்த்து அப்படி இல்லை டி என்றவளின் பேச்சை இடைவெட்டியவள்..

உனக்கு என்ன அப் ஆன்ட் டவுன் எமோஷன்ஸ் வந்தாலும் அவ கிட்ட தானே ஷேர் பண்ணுவ அதுனால அவளை தேடுற கரேக்டா என்றவளை உணர்வின்றி பார்த்து வைத்தவளை பார்த்து..

ஏன் உனக்கு எங்க கிட்ட ஷேர் பண்ண தோனலை கௌதமும் நானும் உன் பிரன்டு தான சரி அதை விடு என்ன பிரச்சனைனு சொல்லு என்னால முடிஞ்சா ஸ்லுயுஷன் சொல்லுறேன் என்றவளுக்கு மற்றவர்களின் புலம்பலை கேட்பதில் ஆரவம் இல்லை என்றாலும் அவர்கள் புலம்பலின் கருவை வைத்து புரணி வாயாட ஆரவம் மிகுந்திருந்ததில் அந்த கேள்வியை கேட்டிருந்தாள்..


அவளிடம் மொத்தமாக பகிர்ந்து கொள்ள தோன்றவில்லை என்றாலும் தலை கோதும் படியான மேலோட்ட விஷயங்களை பகிர முயன்றவளாய் வாழ்க்கை ரொம்ப டப்பா போற மாதிரி இருக்கு தனு திரும்பிற இடத்துல எல்லாம் எனக்காகவே ஒரு பிரச்சனை முளச்சு இருக்க மாதிரி இருக்கு என்றவளை ஒரு மாதிரியாக சிரித்தவள்..

உனக்கு என்னடி பிரச்சனை அப்பா அம்மா பாரின்ல இருக்காங்க இங்க நீ ப்ரீ பர்ட் காசுக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை மாசம் மாசம் உன் கை தேடி வருது அப்பறம் என்ன என்றவளை ஆயாசமாக பார்த்து வைத்தவளுக்கு இவளிடம் தெரியாமல் கூட ஆறுதல் அடைய நினைத்தது தவறோ என்று தோன்றியதில் ஒரு திருப்தியின்மையை கண்களில் தேக்கியபடி உச்சு கொட்டியவளை பார்த்து..

என்னடி உச்சு கொட்டுற சரி உன் பிரச்சனை தீர நா வேணும்னா சில டிப்ஸ் சொல்லவா என்றவளை பென்ச்சில் சாய்ந்தபடி தலைக்கு ஒரு கையை முட்டு கொடுத்த ஏந்தியபடி நிமிர்ந்து வேண்டாம்னு சொன்னா விட்டுறுவிய என கேட்க..

கன்டிப்பா விட மாட்டேன் சொல்ல வந்ததுதை சொல்லியே தீருவேன்..

அப்போ ஏன் பர்மிஷன் கேட்கிற சொல்லு என்றவளை பார்த்து ஆர்வம் தொனிக்க பிடிக்காத லைப்பை கூட நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கனும் மே பி அதுக்கு ஏதாவது செலவான கூட ஒகே தான் உனக்கு அதுலை என்ன குறை என சுற்றி சுற்றி பனத்திலே வந்து பேச்சை முடித்தவளின் குனமே இது தான் என தெரிந்தாலும் இப்போது இதனை எல்லாம் கேட்க ஏரிச்சல் மன்டியது...

பெயருக்காக தலை அசைத்தவள் இவளின் குனத்தால் தான் கௌத்தமிடம் கூட தன்னை பற்றிய சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டாலும் கவனமாக தனுவிடம் மட்டும் பெரும்பாலும் தவிர்த்து விடுவாள்...

எனக்கு டிப்ஸ் கொடுக்குறிய நீ இந்த மாதிரி தான் அப்போ பாலோ பண்ணுவியா என்று கேட்ட இதழை இதழ் சுழிய புருவம் உயர்த்தி நா ஒன்னு நெனச்சா அது எனக்கு கண்டிப்பா வேணும் தான் அதை காசு கொடுத்து கூட காம்பென்சேட் பண்ணிக்க மாட்டேன் என அவள் சொல்லி முடிக்கவும் அடுத்த கிளாஸிற்கான ஆசிரியன் வரவும் சரியாக இருந்ததில் அனைவரின் கவனமும் அதில் முழு முச்சாகா பதியாவிட்டாலும் பதிந்தது போல் பாவலா காட்டவே நேரம் சென்றிருந்தது..

கடைசி வகுப்பும் முடிந்து கௌத்தம் மற்றறும் தனுவிடம் சொல்லி கொள்ளாமல் கூட தன் ஹாஸ்டல் பிளாக் பக்கம் நகர்ந்தவளை பப்ளி என்ற விளித்தபடி அவளின் முன் வந்து நின்றான் தீலிப் தூரியன்...

தொடரும்...
 
Last edited: