• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-29

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
106
40
28
Tiruppur
அத்தியாயம்-29

“வருண்.. லீவ் மீ..”

“வருண்ண்.. எனஃப்.. எனக்கு எந்த பிட்டியும் வேண்டாம்.” பிருத்விகா அவனை விலக்கினாள்.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இறுதியாக உள்ளே நுழைந்தவன் மெத்தையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தவளை அணைத்திருந்தான்.

“நத்திங்க் வில் ஹேப்பன் டூ யூ பேபி. அதுக்கு நாங்க விட மாட்டோம். போனை வச்சுட்டு தூங்கு..”

எதிர்பாராமல் அவன் இப்படி அணைப்பான் என்று நினைக்காத பிருத்விகா கைப்பேசியை மெத்தையில் தவற விட்டிருந்தாள்.

“பிருத்வி..” என்று அவள் பெயரை கிருஷ் கூறிக் கொண்டிருப்பது வருணுக்கு கேட்கவும் கைப்பேசியை எடுத்து, “கிருஷ் இட்ஸ் மி. மார்னிங்க் பேசலாம்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அவனாக விலகியதும், “இப்ப எதுக்குடா.. ஹக் பன்ன?” கோபத்துடன் கேட்டாள்.

“ஜஸ்ட் கொடுக்கனும் தோணுச்சு. அவ்வளவுதான். ஜஸ்ட் சப்போர்டிவ். வேற எந்த மீனிங்கும் இல்லை.”

“வாட்?.. ஒ.. மை காஷ்.. அவுட் நவ்.” என்று அறை வாயிலை ஆள்காட்டி விரலால் காட்டினாள்.

அவன் அந்த அறையை விட்டு நகரவில்லை.
“இப்ப எதுக்கு ஓவர் ரியாக்ட் செய்யற?” அவளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

“வாட்?”

“நான் ஓவர் ரியாக்ட் செய்யறனா? பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் மார்னிங்க் நீ என்ன செஞ்ச?”

“வாட்?” சட்டென்று வருணுக்குப் புரியவில்லை. சில நொடிகளுக்குப் பின் புரிய அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது.

தான் கேட்பதற்கு புன்னகைப்பவனை அமைதியாகவும், ஆழ்ந்தும் பார்த்தாள் பிருத்விகா. ஏனோ அவன் புன்னகை கோடை காலத் தென்றல் போல் மனம் வருடிச் சென்றது. ஆனால் மறு நொடியே சட்டென்று கோபம் வந்தது.

“எதுக்கு வருண் சிரிக்கற?”

“இல்லை.. நான் எதுவும் செய்யலை. நீ என்ன இமேஜின் செஞ்ச?”
அவன் அவ்வாறு கூறவும் ஒரு நொடி தன்னையே சந்தேகித்தாள் பிருத்விகா.

ஒரு வேளை அவன் தன் முகத்தை வருடியதைப் போன்று கற்பனை செய்து விட்டோமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

“சரி.. விடு. பார்ட்டி அன்னிக்கு நடந்தது நியாபகம் இருக்கா?” என இவன் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

“பார்ட்டி அன்னிக்கு என்ன நடந்துச்சு?”

“மேடம் டூ டேஸ் பெட் ரெஸ்ட் தான?.. யோசிச்சு பாரு..”

“வருண்… வருண்..” அவள் கூப்பிடுவதைக் காதில் கேட்காமல் தன்னுடைய அறைக்குச் சென்றான் அவன். வெள்ளி நிறத்தில் அந்த ஆதாம் கடித்த பொருள் அவன் அறையில் கம்பீரமாய் வீற்றிருந்தது. அதற்கு உயிர் கொடுத்தவன் அதன் தொடு திரையை நோக்கினான்.

“எர்த்” என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டு ஒரு கோப்பு இருந்தது. அதைத் திறந்தவன் தட்டச்சு ஆரம்பித்தான்.

‘Oh my GOSH! Can you believe it! She is going to stay with me for atleast one month. Eventhough I feel very sorry for her. But I am selfish that I would be able to stay with her. I am a doctor, but I want to kill those who will lay a finger on her. She is before everything.’
அன்றைய தேதியிட்டு அனைத்தும் பதிவாகி இருந்தது.

அந்த மாத இறுதியில் நடக்கப் போவதை அறியாமல் வருண் பிருத்விகாவின் மேலுள்ள அழுத்தமான அன்பை ஆப்பிளின் கீ போர்டை அழுத்திப் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.
இங்கு அவன் இப்படி இருக்க இரவு முழுவதும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் பிருத்விகா. அவள் உள்ளத்தில் ஒய்வு இல்லை. அவளுடைய பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் கண் முன் வந்து நின்றது. அது அனைத்தையும் விட அவளுக்கு பிரச்சினையாய் தெரிபவன் வருண். வருண் தான் அந்த இரவை உறங்கா இரவாய் மாற்றிய காரணி.

முதல் முறை வருணை ஒரு புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தாள். பிருத்விகா. அது அவளை மருட்டியது. அந்த மருட்டல் மனதில் உருட்டி உருட்டி உறக்கம் தொலைத்தாள் அந்தப் பாவை.

அதிகாலையில் நித்ரா தேவி அவளை இதற்கும் மேல் விட்டால் ஆபத்து என்று அரவணைத்துக் கொள்ள தூங்க ஆரம்பித்தாள் பிருத்விகா.

அதிகாலை ஐந்தரை. இரவு தாமதமாக உறங்கினாலும் வருண் விழித்து விட்டிருந்தான். எழுந்தவன் முகத்தைக் கழுவிட்டு முதன் முதலில் வந்து பிருத்விகாவின் அறைக்கு வந்து அதைத் திறந்தான்.
தேவகி அம்மாள் இடை இடையே வந்து போக வசதியாக பிருத்விகாவின் அறை பூட்டப்படவில்லை. அதனால் வருணால் உள்ளே நுழைய முடிந்தது. அது மட்டுமின்றி எழுந்து வரும் நிலையிலும் பிருத்விகா இல்லை.

இரவு விளக்கொளியில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். போர்வையை அங்கும் இங்கும் உதைத்து விட்டிருந்தாள் பிருத்விகா.

“இன்னுமே இந்தப் பழக்கம் போகலை..” என முனு முனுத்தவன் போர்வையை நன்றாகப் போர்த்திவிட்டு விலகும் போது அவன் கையைப் பிடித்தாள் பிருத்விகா.

ஆனால் இன்னும் அவள் கண்களைத் திறக்கவில்லை. இப்போது வருணுக்கு அவள் விழித்திருக்கிறாளா இல்லை விழிக்கவில்லையா என்ற சந்தேகம் வந்து விட்டது.

“டேய்.. வருண்.. வர வர உன்னோட தொல்லை ரொம்ப தாங்க முடியலை..” என்றவள் அவன் கையை விட்டு விட்டு மீண்டும் போர்வைக்குள் புதைந்து கொண்டாள்.

இப்போது நிஜத்தில் பேசினாளா இல்லை கனவில் பேசினாளா என்று தெரியாத வருண் அவள் அறையை விட்டு குழப்பத்துடன் வெளியே வந்தாள்.

அப்போதுதான் ஹாலில் கொண்டையை முடிந்தப்படி தேவகி அம்மாளும் வந்தார்.
“தம்பி…” அவள் குரல் கண்டனத்துடன் ஒலித்தது.

“தேவகிம்மா… ஐ ஸ்வேர்.. அவ எப்படி இருக்கானு பார்க்க மட்டும் தான் போனேன். மத்தபடி எதுவும் இல்லை.”

“ம்ம்ம்..”

“தம்பி.. திரும்பவும் சொல்றேன். நீங்க எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி பிருத்வி பாப்பாவும் ரொம்ப எனக்கு முக்கியம். அவங்க சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது..”

“ஓகே..” என்று பதில் அளித்தவன், “அதை உங்க பாப்பாகிட்ட சொல்லனும்.. கன்செண்ட்னா.. என்னனு?” என்று முனு முனுத்தப்படியே அங்கிருந்து நகர்ந்தான்.

தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தான் வருண். தேவகி அம்மாளின் எச்சரிக்கை அவன் மனதில் வந்து போனது. தன்னுடைய ரோஜாத் தோட்டத்தைப் பார்த்ததும் ஒரு புன் முறுவல் வந்து ஓட்டிக் கொண்டது. ‘அதை எல்லாம் தேவகி அம்மா பார்க்கலை. பார்த்திருந்தால் என்னோட நிலைமை என்னாகி இருக்குமோ?’ என நினைத்துக் கொண்டான்.

தேவகி அம்மாள் அனைவருக்கும் முன் அவனுடைய ரகசியத்தைக் கண்டறிந்தவர் ஆயிற்றே. ஏனென்றால் வருண் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே அவனை வளர்த்தவர் ஆயிற்றே.

தன்னை எந்த விஷயத்திற்கும் எதுவும் சொல்லாதவர் கண்டனம் செய்தது இந்த விஷயத்திற்கு மட்டுமே.

“தம்பி இப்ப உங்க கண்ணு படிப்புல மட்டும் தான் இருக்கனும். வேற எதிலும் இருக்கக் கூடாது. பெரிசானா எல்லாம் தானா நடக்கும். ” திருஷ்டிப் பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்துச் சொல்லி விட்டார்.

“தேவகிம்மா..”

“தேவகிம்மாதான் சொல்றேன் தம்பி. நீங்க இரண்டு பேருமே எனக்கு முக்கியம். வேற வேறயாப் பார்க்க முடியலை. அதான் மனசு கேட்காம சொல்லிட்டேன். நான் வேணா உங்களுக்கு வேலைக்காரியா இருக்கலாம். ஆனால் நான் தோளில் தூக்கிப் போட்டு வளர்த்த பிள்ளை நீங்க. அது தானா எங்கிட்ட வந்த புள்ளை.”

அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான் வருண்.
“என்ன தேவகிம்மா இப்படி சொல்லிட்டீங்க? உங்களை நான் அப்படியா நினைக்கிறேன்.”

“இல்லை தம்பி.. உண்மை இதுதானே.”

“நானும் அப்படி நினைக்கலை. அப்படி நினைச்சா அந்த ராட்சசி என்னை சும்மா விடுவானு நினைக்கிறீங்களா?” எனச் சிரித்தான்.

“இப்படியே பேசி சிரிக்க வச்சுரு தம்பி. ராட்சசி மாரியா பார்ப்பா இருக்கு. மஹா லட்சுமி மாதிரி இருக்கு.”

“ஆமா… ஆமா மஹா லட்சுமி.. அது மாரியாத்தா மாதிரி ஆடி நான் மட்டும் தானே பார்த்துருக்கேன்.” என்றான்.

“சும்மா புள்ளையை அப்படி சொல்லாதீங்க தம்பி.”

“சரிங்க.. உங்க புள்ளையை நான் அப்படி ஒன்னும் மரியாதை இல்லாம பேசலைங்க.” எனக் கேலி செய்தான்.

“போங்க தம்பி. கோயம்புத்தூர்காரகவங்கனு சரியாதான் இருக்கு.”

“நீங்க மட்டும் எந்த ஊராம். இதே ஊர் தான?”

“சரி தம்பி. உங்களுக்கு தெரியாதது என்ன? பார்த்து பத்திரமா நடந்துக்குங்க. யாரவது என்னை மாதிரி கண்டுபிடிச்சா என்ன செய்யறது?”

“தேவகிம்மா இங்கதான் மரமாகி இருக்கு. அங்க இன்னும் செடியே முளைக்கலை.”

“சரி தம்பி எனக்கு வேலை இருக்கு.” என கிட்சன் பக்கம் நகர்ந்தார் தேவகி அம்மாள்.

அன்று நடந்த உரையாடலை நினைத்தவுடன் வருணின் முகத்தில் புன்னகை ஒன்று குடி வந்தது.

‘உனக்கு எத்தனை பாதுகாப்பு பார்த்தியாடி பேபி.. இப்ப இருக்கற ஆபத்தைப் பத்தி தேவகிம்மாவுக்கு தெரிஞ்சுதுனா என்ன ஆகுமோ?’ என்ற யோசனையில் முகம் சுருங்கியது.

என்னவோ தெரியவில்லை. மனது மிகவும் பாரமாக நொடியில் மாறிப் போய் விட்டது. அதைக் குறைக்கும் வகையில் அவன் கால்கள் தானாக ரோஜாத் தோட்டம் பக்கம் தேடிச் சென்றது. செடிகளுக்குத் தண்ணீர் பாய்க்க ஆரம்பித்தான். ஏற்கனவே பனித் துளியில் குளித்திருந்த ரோஜாக்கள் மேலும் நீர்த் துளிகளை தங்கள் மீது வாங்கிக் கொண்டு பனித் துனிகளை நழுவ விட்டன. ஒவ்வொரு ரோஜாச் செடியாக ஆராய்ந்தவன் அதற்கு தண்ணீர் விட்டான், சில செடிகளுக்கு உரங்களும் வைத்தான். அதற்கான கிளவுஸ் எல்லாம் ஓரிடத்தில் பத்திரமாக நீர் படாமல் ஒரு சிறிய காங்கிரீட்டால் ஆன வீடு போன்ற அமைப்பு அழகாகக் கட்டப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து உரத்தை எடுத்தவன் தேவைப்படும் ரோஜாச் செடிகளுக்கு அதை இட்டான். இதிலேயே ஒரு மணி நேரம் சென்றது. பின்பு வீட்டிற்குள் சென்றவன் இருபது நிமிடம் டிரட் மில்லில் செட் செய்து விட்டு ஓட ஆரம்பித்தான்.

உடல் உழைப்பு அவன் மனதை ஒரு வாறாக சமன் செய்தது. குளித்து விட்டு கீழே வந்தவன் மீண்டும் பிருத்விகாவின் அறைக்குச் சென்றாள்.

இந்த முறை போர்வைக்குள் கோழிக் குஞ்சாய்க் குறுக்கிப் படுத்திருந்தாள். கண்களும் மூக்கும் மட்டும் மேகத்தில் மறைந்த நிலவு போல் காட்சி அளித்தது. அறையின் ஏசியை ரிமோட்டால் குறைத்தவன் அவள் அறையை விட்டு வெளியேறினான்.


ஹாலில் அமர்ந்தவன் தொலைக்காட்சியினை ஆன் செய்து அதன் ஒலி அளவைக் குறைத்து விட்டான். செய்தி அது பாட்டுக்கு ஓட ஆரம்பித்தது. டிபாயில் இருந்த செய்தித் தாளை எடுத்து அதையும் படிக்கத் தொடங்கினான்.