• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-52

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-52

“ஷ்ஷ்..ஆனால்.. அந்த டிரங்க்ன் கிஸ்.. அது எல்லாத்தையும் சேஞ்ச் பண்ண ஆரம்பிச்சது. அப்புறம் வீட்டில்.. அதுவும்.. என்னை பிடிக்காமல் நிச்சயமாக நீ அதை செஞ்சுருக்க வாய்ப்பே இல்லைனு கன்ஃபார்மா தெரிஞ்சுது.. அதுக்குள்ள.. கிட்நாப்.. அப்புறம்.. மறுபடியும் சந்தேகம்.. ஒரு வேளை ஸ்டிரெஸ் ஆகி என்னைக் கிஸ்.. அந்த மாதிரி இருக்கலாம்னு தோணுச்சு. அதுக்குள்ள மேரேஜ் பத்தி அங்கிள் பேச.. உன்னை எப்படியும் என்பக்கம் வைச்சுக்கனும் ஆசை.. மேரேஜ்க்கு அப்புறம் சரிகட்டிக்கலாம் முடிவு செஞ்சேன்..”

இப்போது அவன் கழுத்து வளைவில் அவள் இதழ்கள் பதிந்து கொண்டிருந்தது. அதன் மென்மையில் கண்களை மூடிக் கொண்டான் வருண்.

பேசிக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“எனக்கும் தெரியலை.. உன்னை அந்த தஸ்வி கூட பார்க்கும் போதெல்லாம் இங்க வலிக்கும். ஆனால் உன் மேல் இருந்த கோபத்தில் அதை எல்லாம் நான் பெரிசா எடுத்துகிட்டது இல்லை. ” மார்பின் மையைப் பகுதியைக் காட்டியவள் , “அதைப் பத்தி பெரிசா திங்க் பண்ணது இல்லை.. நீயும் என்னை வெறுப்பேத்திட்டே இருப்ப.. என்னை ரொம்ப இளக்காரமாப் பார்க்கற மாதிரி இருக்கும். அதனால் ஒரு இன்செக்யூரிட்டி.. அதுக்கேத்த மாதிரி பணத்துக்காக உன்னை நான் செட்யூஸ் பன்றேன் தஸ்வி அடிக்கடி எங்கிட்ட சொல்லிட்டே இருப்பாள். அதனாலேயே உன்னை.. வீட்டுக்கு வரது எல்லாத்தையும் அவாய்ட் செய்ய நீ அதுக்கேத்த மாதிரி என்னை இரிடேட் செஞ்சுட்டே இருந்த.. இருந்தாலும் உன் மேல் ரொம்ப என்னால் கோபப்பட முடியாது.. தேர்ட் டைம் நடந்தப்பதான் எனக்கும் என்னை முழுசா புரிஞ்சுது.. உன் மேல் எனக்கு அட்ராக்சன் லவ் எல்லாமே இருக்குனு…

அதுக்குள்ள.. அவன் என்னைக் கொல்வானு நினைச்ச உடனே நினைவுக்கு வந்தது நீ மட்டும்தான். சாகும் போது நமக்கு ரொம்ப புடிச்சவங்க எல்லாரும் ஒரு தடவை நினைவில் வந்து போவாங்கனு. ஆனால் கடைசியாக ஒரு தடவை உன்னைப் பார்க்கனும் தோணுச்சு. ஹர்ட்புல்லா பேசுனதுக்கு சாரி கேட்கனும் தோணுச்சு. ஐ ஆல்வேஸ் லவ்ட் யூ. எனக்கு ரியலைஸ் பண்ண லேட்.. ஆகிடுச்சு.. நீ.”
அதற்குள் அவள் வார்த்தைகளை தன் இதழால் அணைத்திருந்தான் வருண். தன் தீராக் காதலை இதழ்கள் வழியே அவள் இதயத்திற்குக் கடத்த முயன்றான். அதில் அவள் தடுமாற அவளை விட்டு விலகி அவள் கண்களைப் பார்த்தான்.

நீ என்னை மூவ் ஆன் பண்ண சொல்ல.. எனக்கு ரொம்ப கோவம்.. மாப்பிள்ளையா வந்து நின்னை.. அப்புறம் கடமைக்கு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறேன் கிருஷ்கிட்ட பேசிட்டு இருந்த.. மொத்தமாக உடைஞ்சு போயிட்டேன். எங்க லவ்வுனு சொன்னால் கிண்டல் செய்வியோனு பயம்.. எல்லாமே பழைய மாதிரி ஆகிடும்னு தோணுச்சு. நீயும் நானும் சர்காஸ்டிக் கமெண்டெஸோட உனக்குப் பிடிக்காமல் என்னைக் கல்யாணம் செய்யறனு. எனக்கும் கல்யாணம் செஞ்சுக்க கூட ரொம்ப தயக்கமாக இருந்துச்சு.. லவ்லஸ் மேரேஜை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.. அதுவும் கடமைக்காக வாழறதில் எனக்கு உடன்பாடு இல்லை.” அவள் கண்களில் இருந்து சில நீர்த்துளிகள் அவன் கழுத்தை நனைத்தது.

“லவ்லெஸ்ஸா.. ஐ வாண்ட்டு யூ எவ்ரி சிங்கில் டே ஃபார் தி பாஸ்ட் செவன் இயர்ஸ்.. ஐம் ஏ மேன் பிருத்விகா. ஏன் இப்பக் கூட.. உன் பக்கத்தில் என்னைக் கன்ட்ரோல் செய்யறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. உனக்கு சர்பிரைஸா இருக்கட்டும்தான் வெட்டிங்க் அப்ப என்னோட லவ்வ சொல்லலாம்னு பிளான் பண்ணேன். உனக்கும் என் மேல் பீலிங்க்ஸ் இருக்கும்னு புரிஞ்சது. இருந்தாலும் அது டீப் ஆகட்டும்னு விட்டுட்டேன். நமக்கு இடையில் இன்னொருத்தன் வேற..” அவள் மென்மையாகப் தாடையைப் பிடித்துக் விழிகளைப் பார்த்து உரைத்தான் வருண்.

அவளை இறக்கி விட்டவன் நீச்சல் குளத்தில் காலைத் தொங்கப் போட்டபடி அமர அவளும் அருகில் அமர்ந்தாள். அவள் காலை மடியில் தூக்கிப் போட்டவன் குனிந்து அவள் பாதத்தை முத்தமிட்டான். காலை சட்டென விலக்கிக் கொண்டாள் பிருத்விகா. கூச்சத்தில் நெளிந்தாள்.

“என்ன வருண் செய்யற?”

“என்னோட ஹார்ட், சோல், பாடி எல்லாமே உன்னோட பாதத்துக்கு சமர்ப்பணம்..”

அவள் பார்வையில் நீதான் என் மொத்த உலகமும் என்பது போல் பார்த்து வைத்தான் வைத்தான் வருண். சில நொடிகள் அவன் கண்களைப் பார்த்து விட்டு நீரைப் பார்த்தாள்.
சில நொடிகள் நீரை வெறித்தவள், “நான் பாத்ரூமில் வழுக்கி விழுந்த நாளில்.. நீ காரில் நடந்துகிட்டது.. யோசிக்காமல் என்னோட காலுக்கு மருந்து போட்டு விட்டது.. அதெல்லாம் என்னை ரொம்ப அபெக்ட் செஞ்சுச்சு.. என் மனசு என்னை மீறி உங்கிட்ட சாய ஆரம்பிச்சுது. எனக்கே தெரியாமல் அது வரைக்கும் இருந்த பீலிங்க்ஸ் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சுது. நான் திட்டினாலும் நீ எப்போதும் என்னைக் கேர் பண்ணிட்டே இருந்திருக்கனு புரிஞ்சது. ஈகோஸ்யிடிக் வருண் பிருத்விகா காலைத் தொட்டு டிரஸ்ஸிங்கா.. வாய்ப்பே இல்லைனு தோணுச்சு..”

“அப்ப காலைப் பிடிச்சுருந்தால் முன்னாடியே விழுந்திருப்பேனு சொல்லு..” எனக் குறும்பாகக் கேட்க அவள் நீரை அவன் மீது லேசாக அடித்தாள்.

மீண்டும் அவன் மடியில் அவள் காலை எடுத்து வைத்தவன், “எனக்கு சின்ன வயசிலிருந்தே உன்னோட பீட்ஸ் ரொம்ப பிடிக்கும். கொலுசு போட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடிகிட்டே இருப்ப.. என்னோட கண்ணு.. உன்னோட கால் மேலதான் இருக்கு.. அழகாக கியூட்டா இருக்கும் உன்னோட பீட்.”

“என்னடா.. பசங்க எல்லாரும்.. அழகா இருக்கனும், முடி நீளமா இருக்கனும்… அப்படி இப்படி சொல்வாங்க.. நீ என்ன பீட் பத்தி..” அவன் தோளில் இடது கையால் விளையாட்டுக்கு அடித்தாள்.

“எனக்கு அதான் பிடிச்சுருக்கு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பேண்டசி. எனக்கு உன்னோட பீட். இப்ப என்ன?”
உடனே அவள் கால்களை நேராக இழுக்க முயல அவன் விட வில்லை. அவளையும் சேர்த்து மடியில் அமர வைத்துக் கொண்டான். அவன் வலதுபக்க மார்பில் பக்கவாட்டில் தலையைச் சாய்த்தவள் தன் கால்களை அவனுடன் சேர்த்து தண்ணீருக்குள் விட்டாள்.
வருணும் அவள் கால்களை நீருக்குள் மெல்ல வருடியபடி அசைத்துக் கொண்டிருக்க பிருத்விகாவும் காலை அசைத்துக் கொண்டிருந்தாள். கைகள் இரண்டும் அவன் தோளில் மாலையாய் கோர்த்திருந்தாள். இதுவரை இல்லாத அளவு அவள் மனம் அமைதியை அடைந்திருந்தது. வருணும் அப்படித்தான் அமர்ந்திருந்தான். இருவருக்கும் இடையில் மௌனம் சூழ இருவருமே அந்த நிமிடங்களில் லயித்துக் கிடந்தனர்.

அவன் டேட்டூவை இன்று பார்த்திருக்காவிட்டால் அவளுக்கு திருமணத்திற்குப் பின்புதான் உண்மை தெரிந்திருக்கும்.
அவன் டேட்டூவில் தீடிரென்று இதழ் பதிக்க வருண் அவளைப் பார்த்தான்.

“இப்படி எல்லாம் செஞ்சுட்டு இருந்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சுரும் பார்த்துக்கோ… ஸ்டாப் கிஸ்ஸிங்க் மீ தேர்.” என அவள் காதில் முனு முனுத்தான்.

புன்னகையுடன் நிமிர்ந்தவள் மேலும் ஒரு முத்தத்தை அவன் கழுத்து வளைவில் பதித்தாள்.

“பேபி..” என அவன் குரல் ஹஸ்கியாக ஒலித்தது. இன்று முதல் தடவையாக அவன் பேபி என்று அழைக்கும் போது கோபம் வரவில்லை.

“சைலண்டா இரு பேபி. செவன் இயர்சா.. அட்ராக்சன்.. ரொம்ப கன்ட்ரோல் செய்ய முடியாது. எத்தனை வருஷம் கழிச்சாலும் இந்த மொமண்ட் எனக்கு வேணும். இந்த இண்டிமசி வேணும் எனக்கு.பிசிக்காலா இல்லாமல் அந்த சோல் கனக்சன் வேணும். ஐம் பீலிங்க் தட் நவ்.”
இப்போது அமைதியாக அவன் கண்களை ஊன்றிப் பார்த்தாள் அவள்.

“அப்புறம் ஏண்டா.. உன்னோட ரோஸ் எதுவும் எனக்கு கொடுக்க மாட்ட.. என் அம்மா கேட்டால் மட்டும் கொடுப்ப?”

“ நீ அந்த ரோஸ் விஷயத்தை விட மாட்டியா? ஓ.. நீ இதுவரைக்கு எதாவது பங்க்சனில் வச்சது எல்லாம் ஷாப்பில் வாங்குன ரோஸ்னு நினைச்சியா? நான் ஆண்ட்டிட்ட கொடுத்தது.”

“நிஜமாவா?”

“உன்னோட அம்மாவுக்குக் கொடுத்தால் அவங்க கண்டிப்பாக உனக்குக் கொடுப்பாங்க. அதான். நீதான் நான் நேரடியாக் கொடுத்தால் மூஞ்சி திருப்பிட்டு போவியே..”

“அதுவும் உண்மைதான். இத்தனை நாள் உன்னை ஹர்ட் பண்ரதுக்கு எல்லாம் சாரி.”

“நானும் சாரி கேட்டுக்கிறேன். சில இடங்களில் உன்னைப் ஃபோர்ஸ் பண்ணியிருக்கேன். எனக்கு வேற வழி தெரியலை.”

“இனி ஒரு டீல் போட்டுக்கலாம்.”

“என்ன டீல்?”

“இனி எதா இருந்தாலும் ஓபன் கம்யூனிகேஷன் மட்டும்தான். ஓகேவா?”

“ஓபன் கம்யூனிகேஷன் இன் ஆல் வேய்ஸ். எனக்கு இந்த டீல் எல்லா விதத்திலும் பிடிச்சுருக்கு..” என அவள் காதில் முனுமுனுக்க பட்டென்று அவன் தோளில் அடித்தாள்.

“ஷ்ஷ்.. ஒன்னு கடிக்கற.. இல்லை அடிக்கற சேடிஸ்ட்”

“நான் சேடிஸ்டா? ஓ மை காட்.. அப்ப அந்த லான்ட்ரி ரூம்.. அன்னிக்கு வீட்டில்.. அதெல்லாம்..”

“உண்மைதான். ஒரு பேண்டசிதான். யூ நோ ... உனக்குப் பிடிக்குமானு தெரியலை.”

உதடுகளைக் கடித்து சிரிப்பை அடக்கியவள், “எனக்கு சப், டாம் எல்லாம் பிரிபரன்ஸ் இல்லை..” என்றாள்.

“ஆனால் கடிச்சு வைக்க மட்டும் பிடிக்கும்..” என அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“போடா..” அவனிடம் இருந்து எழுந்து நின்றாள்.

“நான் வீட்டுக்குப் போறேன்..”
நடக்க முயன்றவளை இழுத்துப் பிடித்தவன், “ஃபைனலா.. ஒன்னே ஒன்னு..” என்றவன் அவன் நெத்தியில் முத்தமிட்டான்.

புன்னகையுடன் அவனுடைய டேட்டூவில் மீண்டும் இதழ் பதித்தவள் நடக்க ஆரம்பிக்க வருண் அவளைத் தூக்கித் தன் தோல் மேல் போட்டுக் கொண்டான்.

“நான் எவ்வளவு பிராட் மைண்ட்டா இருந்தாலும் இத்தனை பேர் முன்னாடி இந்த டைமில் வெட் டிரஸ்சோட நடக்க விட மாட்டேன். போ என்னோட ரூமில் உன்னோட டிரஸ் இருக்கு. ஷவர். பண்ணிட்டு சேஞ்ச் பண்ணிக்கோ.. நானும் கீழே ஷவர் பண்றேன்.”

அவன் கூறியபடி இரவு உடையை அணிந்தவள் அமைதியாக கீழே வர அவளுக்காகக் காத்திருந்தான்.
புன்னகையுடன் இறங்கி வந்தாள் பிருத்விகா.

“பைக்ல டிராப் பண்றியா?”

“நோ.. வாய்ப்பில்லை.. கை கோர்த்துட்டு நடந்துட்டுப் போனால் இன்னும் கொஞ்ச நேரம் உங்கூட இருக்கலாம்..”
உடனே அவன் கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள் பிருத்விகா. இருவரும் அவனது தோட்டத்தின் வழியே நடக்க அதிலிருந்த் ஒரு சிவப்பு நிற ரோஜாவைப் பறித்து அவள் கையில் கொடுத்தான் வருண்.

“ஐ லவ் யூ.. இந்த ரோஸ் கார்டன் மட்டுமில்லை. நானும் என்னோட பிராப்பட்டிஸ் எல்லாமே உனக்குத்தான் எப்போதும் சொந்தம்.”

“நீ மட்டும் போதும்.”


பிருத்விகா அவன் தோள் மீது சாய்ந்தபடி கையை இணைத்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். அவளைத் தன் கை வளைவில் இடுக்கியபடி வருணும் நடக்க ஆரம்பித்தான். வானம் லேசாக தூரல் போடத் தொடங்கியது. மழையும், மண்ணும் சங்கமம் ஆக ஆரம்பித்தது.