• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எபிலோக்

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
மூன்று மாதங்களுக்குப் பிறகு

"நிலா.. என் டை எங்க...?"
"நிலா.. என் வாட்ச் எங்க...?"
"ஹேய் எங்கடி வச்ச சூ வ...?"

இப்படி நாலா பக்கத்திலிருந்தும் ரிஷியின் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆனால் மறுபக்கத்திலிருந்து பதிலைக் காணவில்லை.

கோபத்துடன் வெளியே வந்தவன் "சாப்பாடாச்சும் ரெடியாடி...?" என்று காட்டு கத்தல் கத்தினான்.

அதற்கு மட்டும் கிட்டசனிலிருந்து பதில் வந்தது.

"ம்ம் ஆச்சு ஆச்சு..." என தலையை மட்டும் நீட்டி அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவனுக்கு அவள் முழுவதுமாக தெரிந்தாள்.

சாரியை தூக்கி இடையில் சொருகி இருந்தவள், கூந்தள் மொத்தத்தையும் தூக்கி கொண்டை போட்டிருந்தாள்.

அப்படியே கரண்டியுடன் எட்டிப் பார்த்தவளைப் பார்த்து குபீரென்று அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அவள் முறைத்த முறைப்பில் கப்சிப்பானவன் அப்போது தான் அவளது முகத்தை ஊன்றி கவனித்தான்.

அவளருகில் அவசரமாக வந்தவன் அவளது நெற்றியில் கை வைத்து பார்த்துக் கொண்டே "நிலாம்மா என்னடியாச்சு.. ஏன் டல்லா இருக்க...?" என்றான்.

அவளோ முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு "என்னன்னு தெரியலங்க.. காலையில இருந்து இப்படித் தான் ஒரு மாதிரி இருக்கு..." என்றாள்.

குரலிலும் அத்தனை சோர்வு.

ரிஷியோ "என்னடி சொல்லுற.. மொதல்ல இதைத் தூக்கிப் போடு..." என்றவன் கரண்டியை பறித்து வைத்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு வந்து சோஃபாவில் அமர வைத்தான்.

அவளோ எழுந்து கொள்ள முயற்சிக்க "ஹே பேசாம இருடி.. உடம்புக்கு முடியலன்னா சொல்ல மாட்டியாடி.. என்னமோ இவ சமைச்சா மட்டுந்தான் இங்க பருப்பு வேகுற மாதிரி ஒரு பில்டப்.." என்றவன் நேரத்தைப் பார்த்தான்.

ஆபிஸிற்கு வேறு நேரமாகிக் கொண்டிருக்க மதியோ "அச்சோ இப்போ என்ன ஆச்சு..? ஏன் இந்த அலம்பல்..? எனக்கு ஒன்னுமில்லை. இதோ பத்து நிமிஷம், உடனே சமைச்சு முடிச்சிருறேன்..." என்றவள் எழுந்து கொள்ளவும், மீண்டும் அவளை இழுத்து அமர வைத்தவன் கோபத்துடன் "நீ ஒரு மண்ணும் செய்ய வேண்டாம்.. எப்படி செய்யனும்னு சொல்லு நான் செய்றேன்..." என்றவன் எழுந்து சமயலறைக்குள் நுழைந்து விட்டான்.

மதியோ வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டவள், அவனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போய் விட்டது.

இறுதியில் அவள் சொல்லச் சொல்ல எதையோ உருட்டிப் புரட்டி சமைத்து முடித்து விட்டான்.

அதனை கரண்டியில் எடுத்து அவளிடம் ருசி பார்க்கக் கொடுக்க, அவளோ அவனை முறைத்து விட்டு ருசித்துப் பார்த்தாள்.

கண்களை அகல விரித்தவள் "சூப்பர்.." என தலையாட்டி புன்னகைக்க அந்தப் புன்னகை அவனது உதட்டிலும் ஒட்டிக் கொண்டது.

பின் காலரை தூக்கி விட்டவனுக்கு ஆபிஸிற்கு வேறு அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயம்.

மதி உணவை எடுத்து தட்டில் தர, அவசரமாக சாப்பிட்டு முடித்தவன் அவளது முந்தானையிலேயே கையைத் துடைத்து விட்டு அறைக்குள் சென்றான்.

அவளிற்கோ சாப்பாடு தொண்டைக்குள் இறங்க மாட்டேன் என சண்டித்தனம் செய்தது.

அவசரமாக எழுந்தவள் ஓடிப் போய் சாப்பிட்டதையும் வாந்தி எடுத்து விட்டாள்.

"என்னங்க.." என்ற மதியின் ஈனமான குரலில் அவசரமாக ரிஷி வெளியே ஓடி வரவும் அவள் மயங்கி விழவும் சரியாக இருந்தது.

"ஹேய்..நிலா ...." என்று கத்திக் கொண்டு வந்தவன் அப்படியே அவளை மடியில் தாங்கி இருந்தான்.

"நிலா.. நிலாம்மா..." என ரிஷியோ கலக்கமாய் அவளது கன்னத்தை தட்ட, ம்ஹூம் அவளிடம் அசைவில்லை..

என்ன செய்வதென புரியாமல் "மித்ரன்..." என்று கத்திய கத்தில் மேலேயிருந்து பவியும் மித்ரனும் அரக்கப் பறக்க இறங்கி ஓடி வந்தனர்.

மதி கிடந்த கோலம் கண்டு அதிர்ந்தவன் "டேய் மச்சி என்னாச்சுடா...?" என்றவனிடம் ரிஷியும் தவிப்புடன் "தெ..தெரிலடா.. மார்னிங்ல இருந்து உடம்புக்கு முடியலன்னு சொன்னாடா.. சா.. சாப்பிட்டுட்டு இருந்தா.. திடீர்னு சத்தம் கேட்டு வந்து பார்க்குறேன்.. ம.. மயங்கிட்டாடா.. மச்சி எனக்கு ஒன்னும் புரியலடா.. வாடா ஹாஸ்பிட்டல் போகலாம்..." என்றான் தழதழுத்த குரலில்.

அவனது கண்களும் கலங்கி விட்டன.

பவிக்கோ எதுவோ புரிபட, உள்ளே சென்று டம்ளரில் தண்ணீருடன் வந்தவள் ரிஷியை விலக்கி விட்டு மதியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள்.

ரிஷி மித்ரனை புரியாமல் பார்த்து வைக்க, அவனோ கண்களை மூடி ஆறுதலளித்தான்.

சற்று நேரத்தில் மதியிடம் அசைவு தெரிய பதறிய ரிஷி "நிலா.. என்னாச்சுடி..?" என்றான்.

அவளோ அவனது கையைப் பற்றி இருக்க, முதலில் எதுவும் தெரியவில்லை.

பின் கண்களை மூடித் திறந்தவள் கஷ்டப்பட்டு நிமிர்ந்தாள்.

முடியாமல் போக அயர்ச்சியில் அப்படியே ரிஷியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

அவனும் "வா ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்று தூக்க முற்பட அவனைத் தடுத்த பவித்ரா "மதி..லாஸ்டா எப்போ வந்துச்சு...?" என்றாள்.

மதியோ புரியாமல் விழித்து விட்டு அடுத்த கணம் பொறி தட்டவும் "ட்டூ மந்த்ஸ் எகோ..." என்றவள் ரிஷியைப் பார்த்தாள்.

அவனோ பார்வையால் என்னவென புரியாமல் கேட்க , பவி தான் "எல்லாம் குட் நியூஸ் தான்.. நீங்க எதுக்கும் ஒரு தடவை ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிட்டு வாங்க..." என்றாள்.

மதிக்கோ அத்தனை சந்தோஷம்.

ரிஷியோ கலக்கமாய் "எ..என்னடி... எதுக்கு செக்கப்..?" என்றான் குழந்தை போல.

பவித்ரா மித்ரனைப் பார்த்து சிரிக்க அவனோ புன்னகைத்தவனாய் ரிஷியின் அருகில் வந்து "மச்சி கங்ராட்ஸ் டா.." என்றான்.

அவனுக்கோ எரிச்சலே வந்து விட்டது.
"டேய் நீயாச்சும் புரிற மாதிரி சொல்லித் தொலையேன்டா..." என்றான் பற்களை நறநறுத்தவனாக.

வாய் விட்டே சிரித்த மித்ரன் "மச்சான் நீயே இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்க.. உனக்கு ஒரு குழந்தை வரப் போகுது.." என கிண்டல் செய்ய , அவனை திட்ட எடுத்த ரிஷியின் வாய் அப்படியே பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டது.

வார்த்தைகள் வராமல் விழித்தவனுக்கு சந்தோஷத்தில் கண்களும் கலங்கி விட்டன.

மதியை குனிந்து பார்த்தவன் தன்னையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பவளிடம் "ம்ம்?" என தலையாட்டி கேட்கவும், அவளும் புன்னகையுடன் ஆமென தலையாட்டி வைத்தாள்.

எதையோ சாதித்த உணர்வு அவனுள். இடம் பொருள் மறந்து அப்படியே மதியின் கன்னத்தை தாங்கியவன் முகம் முழுக்க அவளுக்கு முத்தமிட்டான்.

பவித்ராவும் மித்ரனும் வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டு சிரிப்புடனே இடத்தை காலி செய்திருந்தனர்.

"நிலா.. ஐ லவ் யூ.." என மீண்டும் மீண்டும் முத்தமிட ஓர் கட்டத்தில் அவளுக்கே மூச்சு முட்டி விட்டது.

ம்ம்..ம்ம் என மூச்சுக்கு அவள் ஏங்க, அப்போது தான் அவனும் சுயத்தையடைந்தான்.

தன் தலையிலே மானசீகமாக தட்டிக் கொண்டவன் "சா..சாரி சாரி.." என்றவன் அவளது கண்களை பார்த்துக் கொண்டே "யூ ஹேவ் கிவன் மீ அ பிகெஸ்ட் சப்ரைஸ்.. ரியலி ஹேப்பி .." என நெகிழ்ந்து அவளது நெற்றியில் முட்டியவனை மென்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னர் "எதுக்கும் ஹாஸ்பிட்டல் போ..போய்ட்டு வந்துடலாம்..." என்றாள் கண்கள் கலங்க.

அவனோ "ம்ம் போய்ட்டு வருவோம்.." என்றவன் எழுந்து நின்று அவளும் எழுந்து கொள்ள உதவி செய்தான்.

சிறிது நேரத்தில் ஹாஸ்பிட்டல் போய் வந்தவர்களின் முகத்தில் அத்தனை பிரகாசம்.

பவியோ மதியிடம் "கன்ஃபோம் தானே..?" என ரகசியமாய் கேட்க, அவளும் வெட்கப்பட்டுக் கொண்டே "எஸ்.." என்றாள்.

அங்கே ரிஷியோ ஊரிலுள்ள அத்தனை சொந்தங்களுக்கும் இந்த சந்தோஷமாக தகவலை சொல்லி விட்டான்.

அநாத்ரயனுக்கே முதலில் சொல்லி இருக்க இதோ தங்கையைக் காண தவிப்புடன் வந்து விட்டான்.

"திலா..திலா..." என ஏலம் போட்டுக் கொண்டே வந்தவனின் சத்தத்தில் அருகிலிருந்த மித்ரனிடம் ரிஷி "இதோ வந்துட்டான் பாச மலர்.." என்றதும், மித்ரன் வாய் மூடி சிரிக்க, மதியோ அவனது தோளிலே ஒரு அடியைப் போட்டாள்.

தன்னையே முறைத்துப் பார்த்தவளிடம் "நீயும் இங்கேயாடி இருக்க செல்லம்.. ஏதோ தங்கு சிலிப் ஆகிட்டு.." என்று அசடு வழிந்தவாறு அவளது கன்னத்தில் கிள்ள, அவனது கையைத் தட்டி விட்டவள் "வா அண்ணா.. எப்படி இருக்க...?" என்று அவனை வரவேற்றாள்.

அவனும் "எனக்கென்ன செம்மயா இருக்கேன்.. நீ எப்படி இருக்க.. என்ன சொல்லுறா என மருமகள்...?" என கனிவுடன் அவளிடம் கேட்டு வைக்க, மதி பதில் சொல்வதற்குள் முந்திக் கொண்ட மித்ரன் "அதென்ன மருமகள்.. ஏன் மருமகனா இருக்க கூடாதா..." என்றான்.

அநாத்ரயனோ "எதுவா இருந்தா என்ன.. எப்படியும் என் மருமக்கள் தானே.." என்றான் கண்ணடித்து.

மித்ரனோ முகத்தை அஷ்டகோணலாக்கி "ம்கும்..எலி போகவே வழியில்லையாம்.. இங்க ஒருத்தர் என்னடான்னா தொடப்ப கட்டையும் சேர்த்து இழுத்துட்டு போறாராம்..." என்று கூறவும் ரிஷி அவனுடன் கையடித்து சிரித்துக் கொண்டான்.

சுற்றியிருந்த மற்றைய இருவருக்குமே மித்ரன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்து விட்டது..

அநாத்ரயனோ ரிஷியிடம் "மச்சான் யூ டூ...?" என்றான் உதட்டை வளைத்து.

சட்டென சிரிப்பை நிறுத்திய ரிஷி "ச்சே அப்படியெல்லாம் இல்லை.. நீ போய் வேலையைப் பாருடா..." என மித்ரனை கிளப்பி விட்டான்.

அதில் அவனை முறைத்து வைத்த மித்ரன் "குடும்பம்னு வந்ததும் ஃப்ரெண்ட கலட்டி விட்டுடுவிங்களே..." என்றவன் வேலையின் நிமித்தம் எழுந்து சென்றான்.

அப்படியே பொழுது சந்தோஷமாய் கழிய இரவு ரிஷியின் வீட்டு ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

ரிஷியின் தாய் தந்தையுட்பட அனைவரும் அன்றே மதியைக் காண வந்து விட்டனர்.

பல நல விசாரிப்புகள் ஆரம்பித்து இப்போது குடும்பமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ரிஷியோ அனைவருக்கும் நடுவில் தேவதையென அமர்ந்திருந்த தன்னவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுள்ளோ பழைய நினைவுகள் வந்து போயின.

யாருடைய வயிற்றில் தன் குழந்தை வளரக் கூடாது என்று நினைத்து அன்று முகம் சுழித்தானோ அதே அவளின் மணி வயிற்றில் இன்று தன் குழந்தை, இரத்தக் கட்டியாய் உருவாகி இருப்பதை எண்ணி சந்தோஷத்தில் கண் கலங்கினான் ஆடவன்.

வாழ்க்கை தான் தன்னை எப்படி மாற்றி விட்டது என்று எண்ணி வியந்தவனின் தோளைத் தொட்ட மித்ரன் "என்ன சைட் அடிக்கிறியா...?" என்று கிண்டலடித்தான்..

அவன் பக்கம் திரும்பிய ரிஷியின் கண்கள் பளபளத்திருப்பதைப் பார்த்த மித்ரன் "என்னடா..?" என்றான் கேள்வியாய்.

சட்டென கண்களை துடைத்துக் கொண்டே சிரித்தவன், திரும்பி மதியைப் பார்த்து "வாழ்க்கை எவ்வளவு அழகானதுன்றதை எனக்கு முதல் முதல் காமிச்சவ இவ தான். அவளை எவ்வளவோ திட்டியிருக்கேன், காயப்படுத்தி இருக்கேன். ஆனால் இவ காதல்ன்னா என்னனு எனக்கு புரிய வச்சவ. இவ இல்லைன்னா இன்னைக்கு நான் என்னாகி இருப்பேன்னு எனக்கே தெரியாது. தலைக்கணம் பிடிச்சுப் போய் எவளையோ கட்டிக்கிட்டு சீரழிஞ்சு இருந்திப்பேன்.. ஆனால் இப்போ..? ஏதோ லைஃப்ல ஃபுல் ஃபில் ஆன ஃபீல் மச்சி.. சீ இஸ் என் ஏஞ்சல்.. மை ஏஞ்சல்.." என்றவனின் பேச்சில் மித்ரன் மதியைப் பார்த்து சிரித்து வைத்தான்.

அந்த சிரிப்பிற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன.

அதில் ஒன்று, தன் நண்பனின் வாழ்க்கையை அர்த்தமாக்கிய நன்றி இருந்தது.

தன்னையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்த ரிஷியை எதேர்ச்சையாக திரும்பிப் பார்த்த மதியோ புருவத்தை உயர்த்தி என்னவென கேட்க.. அவனோ அங்கிருந்து கொண்டே கண்சிமிட்டி சிரித்தவன் இதழ் குவித்து பறக்கும் முத்தமொன்றை அனுப்பி வைத்தான்.

அவளோ தன்னவனின் குறும்பில் அதிர்ந்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தவள் பின் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டவள் ஓரக் கண்ணால் மீண்டும் அவனையே பார்த்தாள்.

அதில் பற்கள் தெரிய சிரித்தவனின் வாழ்க்கை அழகாய் அமைய வாழ்த்தி விடை பெறுகிறேன்...

த என்ட்.


தீரா.
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
304
117
43
Tanjur
மௌனமாய் ஒரு யுத்தம்
ஆசிரியர் - தீரா

நாயகன் - ரிஷி
நாயகி - மதிநிலா

இந்தக் கதை சிறுகதை போட்டியில் முதல் பைசு வாங்கினது. இதை படிச்சதும் வதனிக்காகிட்ட சொன்னேன், நாவலா எழுதினா நல்லா இருக்கும் க்கா..
நிஜமாவே நாவலா வரும்னு எதிர்பார்க்கல.
புது ரைட்டர் போலவே இல்லை. கதை அருமையா இருந்தது. வழக்கம்போல இருவருக்கும் பிடிக்காத கல்யாணம். ரிஷி அவளை வெறுக்க, நிலாவோ அவனை வம்பிழுக்க அதில் கடுப்பான ரிஷி அவளைத் திட்டுறது அவமானப்படுத்துறது. அதனால அவங்க பிரிவு, அதை எப்படி எடுத்துட்டு போயிருக்காங்க என்பது தான் கதையோட பலம். அதிலும் மதிநிலாவோட ஃப்ளாஸ்பேக் எதிர்பாராத ட்விஸ்ட். வருத்தமாவும் இருந்தது.

அதன் பிறகு ரிஷி திருந்தி அவளைத் தேடும் போது, எட்டா முடியாத இடத்துல அவ இருக்குறது என கதை ஒவ்வொரு இடமும் அருமை. அண்ணனாக அனாத்ரயன், ஃப்ரண்டாக மித்ரன் என ஒவ்வொரு கேரக்டரும் சூப்பர். பிரிந்தவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்று கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் மா..
 

sripavithraprakasham

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
1
0
1
Salem
தொடக்கம் முதல் முடிவு வரை அருமை