• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம் 18

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -18

நீயா.... என்றாள் வனஜா சற்றே பயந்தவாறே.

ஆமாம்.... நல்லா கண்டுப்பிடிச்சிட்டியே.... அதான.... என் குரலை மறந்தாலும் நீ குளிக்கும் போது தினம் தினம் என்னை நினைக்க தான உடம்பில சூடு வச்சேன்...... அந்த மூணு சூடும் இப்போ எப்படி இருக்கு.... ஆறிடுச்சா.... இல்ல இன்னும் தழும்பு இருக்கா .... என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சேகர்.

உனக்கெப்படி.... என்னோட நம்பர் கிடைச்சுது?

பெரிய மகாராணி.... இந்தம்மா நம்பர் கண்டுபிடிக்க அவ்ளோ கஷ்டமா....

சரி.... உனக்கென்ன வேணும்....

எவ்வளவு பேர் கூட படுத்தாலும் உன் கூட படுத்த மாதிரி இல்லடி.... உனக்கு அடுத்த வாரம் கல்யாணமாமே....அதுக்கு முன்னாடி ஒரே ஒரு முறை என் கூட படுக்கிறீயா?.... என்றான் அசடு வழிந்து கொண்டே....

சீ.... பொறுக்கி நாயே.... நீ இப்படி என் கிட்ட பேசுனன்னு என் புருஷனுக்கு தெரிஞ்சுது.... அவ்வளவு தான்.... உன்னை கண்டந்துண்டமா வெட்டி போட்டிடுவாரு.... என்றாள் வனஜா.

யாரு ரமேஷா?

சீ.... அவன் மனுஷனே கிடையாது.... அவனை என் புருஷன் ன்னு சொல்வேனா.... என்றாள்.

அப்போ யாரை சொல்லுற.... உன்னோட வருங்கால புருஷனையா....

ஆமாம் டா.... என்றாள் வனஜா.

நானும் உன்னோட முன்னாள் புருஷனும் சேர்ந்து அவனுக்கு ஸ்கெட்ச் போட்டிட்டோம்.... இனிமே கடவுளே வந்தாலும் அவனை காப்பாத்த முடியாது.

என்னடா சொல்ற....

ஆமாம் டி வனஜா செல்லம்.... உனக்கு டவுட்டா இருந்தா உன் வருங்கால புருஷனுக்கு கால் பண்ணி பாரு.... இல்ல அந்த ஆஃபீஸ்ல ஒரு கிழவன் இருப்பானே.... அவன் பேரு.... ஹாங் பிரசாத் சாரு ன்னு சொல்லுவீங்களே அந்த ஆளுக்கு கால் பண்ணி உன்னோட புருஷன் ரோஹன் வந்திட்டானா ன்னு கேளு....

உடனே ஃபோனை கட் செய்து விட்டு ரோஹனுக்கு கால் செய்தாள்.... அவனுக்கு லைன் கிடைக்கவில்லை. பிரசாத் சாருக்கு கால் செய்தாள்.

இன்னும் ஆஃபீஸூக்கு வரலையே மா.... என்றார் அவர்.

வாட்ஸ் அப்பில் சிக்னலில் ரோஹன் காரில் நிற்கும் ஃபோட்டோவை அனுப்பினான் சேகர்.

உடனே நடுக்கத்துடன் சேகருக்கு கால் செய்து....

டேய்.... அவரு ரொம்ப நல்லவர் டா.... தயவு செஞ்சு அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்க.... உங்களுக்கு தான் பத்து லட்சம் காசு கொடுத்திட்டாரு இல்ல....

ஐம்பது லட்சம் கேட்டதுக்கு பத்து லட்சம் கொடுத்தா.... எப்படி நாங்க சும்மா இருக்க முடியும். அவன் கொடுத்த காசு வச்சே அவனை கொல்ல போறோம்.

ஏய் பிளீஸ்.... வேண்டாம்.... அவரை விட்டிடுங்க.... என்றாள் வனஜா அழுதுகொண்டே.

சரி.... அப்போ நீ வரீயா.... இப்பவே அந்த பிளானை டிராப் பண்ணிடறோம்.... என்றான் சேகர்.

சரி.... எங்க வரணும்.... என்றாள் வனஜா.

லொகேஷன் அனுப்பறேன்.... ஆட்டோ சொல்லி வா.... போலீஸூக்கோ இல்ல வேற யாரையாவது கூட்டிக்கிட்டு வந்த ஒரே மெஸேஜ் போதும்.... அவனை போட்டு தள்ள ஆளு ரெடியா இருக்காங்க.... என்றான் சேகர்.

வாட்ஸ் அப்பில் மெஸேஜ் வந்தது.

கண்கள் கலங்க ஃபோனை எடுத்து லீலாவிற்கு கால் செய்தாள் வனஜா.

ஃபோனை எடுத்து தேம்பி தேம்பி அழுதாள்.

ஏய் என்னாச்சு டி.... ஏன் இப்படி அழுவுற.... என்றாள் லீலா.

சேகர் கால் செய்ததையும் ரோஹன் உயிருக்கு ஆபத்து என்றும் கூறி அழுதாள்.

நீ அந்த லொகேஷனை எனக்கு அனுப்பு.... தைரியமா வா.... பாதி வழியில் நான் ஏறிக்கிறேன். ராஜூ கிட்ட என்னோட லைவ் லொகேஷன் சொல்லி போலீஸோட அங்க வரச்சொல்றேன். தைரியமா வா.... பயப்படாத.... இவனுங்க எல்லாம் சரியான உதாரு பசங்க.... என்றாள் லீலா.

சரி லீலா.... என்று சொன்னாலும் உள்ளுக்குள் பயந்து கொண்டே இருந்தாள் வனஜா.

ஃபோனை வைத்த லீலா.... இது எல்லாம் ரோஹனே போட்ட பிளானாக இருக்குமோ‌.... என்று நினைத்து கொண்டாள்.

சேகர் ரமேஷிடம்.... என்னடா பிளான் படி எல்லாம் கரெக்டா நடக்குமா.... என்றான்.

கவலையே படாதே மச்சி.... பிளான் எப்படி இருந்தாலும் நடக்கும்.

அவ என் கூட படுப்பா ன்னு நினைக்கிறீயா?

அவ உன் கூட படுக்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டா....

அப்புறம்.... எப்படி நம்ம வீடியோ எடுத்து அவ வருங்கால புருஷனை மிரட்டுறது....

அவளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து.... அப்புறம் எல்லாம் முடிச்சிக்கலாம்.... வீடியோ எடுத்துக்கலாம்.... அதுக்கு அப்புறம் அதை காட்டி மிரட்டி மிரட்டி அவன் கிட்ட இருந்து காசு வாங்கி இந்த ஜென்மத்துக்கும் உட்கார்ந்தே சாப்பிடலாம்.... என்றான் ரமேஷ்.

மச்சான்.... உனக்கு உடம்பெல்லாம் மூளை டா.... என்றான் சேகர்.

சரி.... எப்படி ரோஹனுக்கு கால் போகல அவ பண்ணும் போது.... அவனோட ஃபோட்டோ எப்படி கிடைச்சுது?

அதுவா... அவனோட நம்பருக்கு இரண்டு மணிநேரம் கால் பிளாக் செய்யச்சொல்லி அந்த நெட்வொர்க்ல இருக்குற ஆளுக்கு காசு கொடுத்திட்டேன். ஒரு ஆளை அவனை ஃபாலோ பண்ண சொல்லி ஃபோட்டோ எடுத்து அனுப்ப சொன்னேன்....என்னையே அடிச்சிட்டான்...என்னை பார்த்தாலே பயந்து நடுங்குறவ.... அன்றைக்கு என்னையே கை நீட்டி அடிச்சிட்டா.... இதுக்கெல்லாம் நான் நஷ்ட ஈடு வாங்க வேண்டாமா.... என்று சொல்லி ஆக்ரோஷமாக சிரித்தான் ரமேஷ்.

கூடவே சேகரும் சேர்ந்து சிரித்தான்.

வனஜா வீட்டு வாசலில் இருந்த ஒரு ஆள் ரமேஷூக்கு கால் செய்தான்.

ரமேஷூ.... இப்போ தான் ஆட்டோ கிளம்புது....

கூட யாராவது இருக்காங்களா....

இல்ல ரமேஷூ....

சரிடா.... தேங்க்ஸ்.... நீ போயிக்கோ.... நான் இதுக்கு மேல பார்த்துக்கிறேன்.

லீலா ராஜூ விடம் விஷயத்தை கூறி.... நீ அர்ச்சனா மேடம் கிட்ட சொல்லி என் நம்பரை ஃபாலோ பண்ணிக்கிட்டு வாங்க.... என்றாள்.

அக்கா.... எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு....

பயப்படாத டா.... தைரியமா போ.... என்று சொல்லி அனுப்பினாள்.

பாதி வழியில் வனஜாவுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் லீலா.

லீலா வை பார்த்ததும் வனஜாவிற்கு உயிரே வந்தது போல இருந்தது. அவளை கட்டிக் கொண்டாள்.

எப்படி இருக்க வனஜா....

ரொம்ப ரொம்ப டையர்டா இருக்கு.... ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு போனாரு.... அவரையே.... என்று சொல்லி அழத் தொடங்கினாள் வனஜா.

பிளீஸ் வனஜா.... அழாதே.... நீ அழுதா உன் வயித்துல இருக்குற குழந்தையையும் அது பாதிக்கும்.

கண்களை துடைத்துக் கொண்டு தன் வயிற்றை தடவிக்கொண்டே பேசினாள் வனஜா.

செல்லக்குட்டி.... நீ நான் அப்புறம் நம்ம லீலா மூணு பேரும் சேர்ந்து உங்க அப்பாவை காப்பாத்தனும்.... என்றாள்.

சரியான லூசா ஆயிட்டாளே இந்த வனஜா.... என்னவோ ஃபைட் பண்ணி காப்பாத்த போற மாதிரி.... என்று நினைத்து கொண்டவள்..... திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஒருவேளை இது எல்லாமே ரோஹனோட பிரீ பிளான்டா இருந்தா.... அவ வயித்துல வளரும் குழந்தையை அழிக்க அவனே போட்ட பிளானாக இருக்குமோ‌ என்று யோசித்தவள்.... ஒரு சிக்னலில் நிற்கும் போது....

வனஜா.... நான் ஒண்ணு சொன்னா கேட்பீயா....

கண்டிப்பா டி....

கீழே இறங்கி நீ உன் வீட்டுக்கு போ....

என்னடி சொல்றே....

ஆமாம்.... நான் போய் பார்க்கிறேன்....

இல்ல உன்னை தனியா அனுப்பிட்டு நான் எப்படி நிம்மதியா இருப்பேன்.

உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?

அதுக்கு சொல்லல டி....

நீ கர்ப்பமா இருக்க.... அங்க எதாவது சண்டை பிரச்சனைல உன்னை கீழே தள்ளி விட்டுட்டாங்கன்னா கூட நல்லது இல்ல.... நீயே ரொம்ப வீக்கா இருக்க.... பிளீஸ்.... நான் சொல்றதை கேளு.... இறங்கு என்று சொல்லி வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு விட்டு அவளுடைய ஃபோனை மட்டும் வாங்கிக் கொண்டு அதே ஆட்டோவில் அந்த லொகேஷனுக்கு சென்றாள்.

வனஜா வேறு வழியின்றி வேறு ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றாள்.


தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
48
28
Trichy
சூப்பர் சூப்பர்
ரொம்பவும் அருமையான பகுதி சிஸ் 🥰🥰