• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம் -23 (முடிவு)

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
136
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -23


ராமு கையில் விலங்கை மாட்டியிருந்தார்கள். கௌரி மண்டையில் அடிப்பட்டு இறந்து கிடந்தாள்.

என்னடா.... கௌரி அம்மாவை நீ கொன்னுட்டியா?.... என்று அவன் சட்டையை பிடித்து கேட்டான் ரோஹன்.

சார்.... இவ்வளவு நாளா பாம்புக்கு பாலை ஊத்திக்கிட்டு இருந்திருக்கீங்க.... என்று ஆரம்பித்து கௌரி சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அப்போ நீ என் ஸ்வீட்டிக்கு அந்த பொடியை வாங்கி கொடுத்தியா.... அதான் அவ மயக்கமா இருக்காளா?

இல்ல சார்.... சத்தியமா இல்லை.... நான் மனசார தான் அவங்களை அக்கான்னு கூப்பிட்டேன்.... நான் அந்த கௌரி சொன்னதுக்கு ஒத்துக்கலைன்னா வேற யாரையாவது ஏற்பாடு பண்ணி அதே வேலையை செய்வாங்க.... அதான் நானே கடைக்குப் போய்.... கர்ப்பமா இருக்குறவங்க ஆரோக்கியத்துக்கு மருந்து கொடுக்க சொல்லி வாங்கிக்கிட்டு.... லைட் மைல்டா மயக்கம் வர மாதிரி பொடி கேட்டேன்.... முதலில் தர மறுத்த அந்த கடைக்காரர்.... ஒரு நல்ல விஷயத்திற்காக தான் கேட்கிறேன் ன்னு சொன்னதுனால கொடுத்தாரு....

அப்புறம்.... என்றான் ரோஹன்.

அதை வாங்கி வந்து கௌரி அம்மாவிடம் கொடுத்தேன்....

அம்மாவா.... அவளை அம்மா ன்னு சொல்லி அம்மான்ற வார்த்தையை கேவல படுத்தாதே.... என்றான் ரோஹன்.

அவங்க கிட்ட கொடுத்தேன்..... அப்புறம் அவங்க அதை ஒரு ஜூஸில் கலந்து.....
அதை அவங்களே எடுத்து கொண்டு போய் வனஜா அக்கா கிட்ட கொடுத்தாங்க....

அதை வாங்கி குடித்த வனஜா அக்கா மயங்கி விழுந்திட்டாங்க.... உடனே என்னிடம் வந்த இவங்க.... என் சட்டையை பிடித்து.... என்று அப்போது நடந்தவற்றை விளக்கமாக கூறினான் ராமு.

ஏய்.... என்னடா பொடி வாங்கிக்கிட்டு வந்த.... என்றாள் கௌரி.

நீங்க சொன்னதை தான் அம்மா.... என்றான் ராமு.

பொய் சொல்லாத டா.... எந்த மருந்து கொடுத்தா என்ன ஆகும் ன்னு எனக்கு தெரியும்.... நான் சொன்ன பொடியை வாங்கி வந்திருந்தன்னா.... அவ மயங்கி விழுந்திருக்க மாட்டா.... வயித்துல வலியில் துடித்திருப்பா.... என்றாள் கௌரி.

ஆமாம்.... நான் அந்த பொடி வாங்கல.... அவங்க வயித்துல வளரும் குழந்தை நல்லா ஆரோக்கியமா வளர பொடி வாங்கி வந்தேன்.... என்றான் ராமு.

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்ப.... என்று சொல்லி ராமுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கௌரி.

அவன் கீழே விழுந்தான். மறுபடியும் அவனை அடித்தாள். அப்போது அவன் அவளை தள்ளிவிட்டு எழுந்தான் அப்போது கிட்சன் மேடையின் முனையில் பின் தலையில் அடிப்பட்டு கீழே விழுந்தாள் கௌரி.

உடனே எழுந்து போய் கௌரியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அம்மா...
அம்மா.... என்று எழுப்பினான். அப்படியும் அவள் எழுந்திருக்க வில்லை.... மூக்கில் சுவாசம் வருகிறதா என்று பார்த்தான். இல்லை.... பயந்து விட்டான் ராமு. உடனே போலீஸூக்கு கால் செய்தான்.

சார்.... சாரி சார்.... என்றான் ராமு ரோஹனிடம்.

ஏய்.... நீ ஏன்டா சாரி சொல்ற.... நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.... என்று சொல்லிவிட்டு....

ராமு.... என் ஒயிஃபை காப்பாற்றியதற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.... உங்க அம்மா ஆப்ரேஷன் பத்தி கவலைப் படாதே.... நான் பார்த்துக்கிறேன் என்றான் ரோஹன்.

தேங்க்ஸ் சார்.... என்று ரோஹனின் காலில் விழ வந்தவனை தடுத்து கட்டிக் கொண்டான் ரோஹன்.

போலீஸ் அவனை கூட்டிச் செல்ல வந்தனர்.

சார்... இவன் வேண்டும் என்றே அப்படி செய்யல....

தெரியும் சார்.... இருந்தாலும் லீகல் பிரொசீடிங்ஸ் இருக்கு இல்ல.... நீங்க உங்க லாயர் கிட்ட சொல்லி பெயில் வாங்கிக்கோங்க.... ரொம்ப ஒண்ணும் அதிகமா தண்டனை கிடைக்காது.... தற்காப்பிற்காக தானே தள்ளிவிட்டிருக்கான்.... அதுவும் இல்லாம கண்ணால் பார்த்த சாட்சியும் இருக்கு.... ஸோ பிரச்சினை இருக்காது.... என்றார்.

தேங்க்ஸ் சார்.... என்று சொல்லி விட்டு....
லீலாவிற்கு கால் செய்து எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டான் ரோஹன்.

வனஜா வழக்கமாக பார்க்கும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறோம் என்று சொன்னாள் லீலா.

ரோஹன் அங்கு சென்றதும்....

லீலா எழுந்து வெளியே சென்றாள்.

ரோஹன் வனஜாவின் அருகில் அமர்ந்தான்.

என்னாச்சு எனக்குன்னு தெரியல டார்லிங்.... கௌரி அம்மா ஜூஸ் கொடுத்தாங்க.... குடிச்சேன்.... அவ்வளவு தான் தெரியும்.... அதோட இப்போ தான் கண் முழிச்சேன்....

அவள் தலையை கோதி விட்டான் ரோஹன்.

தேங்க்ஸ்.... என்றாள் வனஜா.

எதுக்கு ஸ்வீட்டி....

எனக்காக லீலாவை காப்பாத்த போனீங்களே அதுக்கு....

லீலா உனக்கு ஃபிரெண்டு.... எனக்கு தங்கச்சி.... என்றான் ரோஹன்.

கண்கள் கலங்க அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள் வனஜா.

சார் உங்களை டாக்டர் கூப்பிட்டார் என்று ஒரு நர்ஸ் வந்து கூறினார்.

இரு ஸ்வீட்டி இப்போ வந்திடறேன்.... என்று சொல்லி விட்டு டாக்டரை பார்க்க சென்றான் ரோஹன்.

அப்போது லீலா தினேஷ் மற்றும் ராஜூ உள்ளே வந்தனர்.

வனஜா.... இவர் பேரு தினேஷ்....

ஹலோ.... என்றாள் வனஜா.

வணக்கம் சிஸ்டர்.... என்றான் தினேஷ்.

இவரு என்னை சின்சியரா லவ் பண்றாரு....

அப்போ நீ பண்ணலையா?.... என்றான் தினேஷ் லீலா வை பார்த்து.

சும்மா இருங்க.... என்று சொல்லி வெட்கப் பட்டாள் லீலா.

அண்ணா.... என் லீலா ரொம்ப ரொம்ப நல்லவ.... அவளை நல்லா பார்த்துக்கோங்க.... ஐ ஆம் ஹேப்பி ஃபார் யூ டி என்று சொல்லி லீலா வை கட்டிக் கொண்டாள் வனஜா.

அப்போது உள்ளே வந்த ரோஹன்....

ஒரு ஹேப்பி நியூஸ்....

என்னோட ஸ்வீட்டி வயித்துல வளரும் குழந்தையை ஆரோக்கியமா இருக்காம்.... அவளோட நேர்வ்ஸ் எல்லாம் கொஞ்சம் ஹெல்தியா இருக்காம்.... மே பி அவங்க எடுத்துக்கிட்ட நாட்டு மருந்து அவங்க பாடிக்கு செட் ஆகியிருக்கும் ன்னு நினைக்கிறேன்.... ஒரு ஹேலோபதி டாக்டரா இருந்துகிட்டு நான் இதை சொல்ல கூடாது... அவங்க ஃபிட்ஸூக்கு ஹோமியோபதி டிரீட்மெண்ட் எடுத்துக்கோங்க.... பேபி நல்லா இருக்கும் ன்னு சொன்னாங்க.... என்றான் ரோஹன்.

லீலா - தினேஷ் மற்றும்
ரோஹன் - வனஜா (அ) ஷெரின் திருமணம் ரெஜிஸ்டர் ஆஃபீஸில் இனிதே நடைபெற்றது.

அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். லீலா மற்றும் ராஜூ ரோஹனின் ஆஃபீஸிலேயே வேலைக்கு சேர்ந்தனர். தினேஷ் போலீஸ் எக்ஸாம் எழுதி பாஸ் செய்துவிட்டு டிரெயினிங் முடித்து விட்டு டியூட்டியில் சேர்ந்தான். முதலில் மறுத்தாலும் பின்னர் தன் தம்பிக்காக லீலா வை ஏற்றுக் கொண்டாள் அர்ச்சனா.
இருவரும் சேர்ந்து அர்ச்சனாவிற்கு வரன் தேடினார்கள்.

லீலா மற்றும் தினேஷ் இருவரும் தினேஷ் அக்காவிற்கு திருமணம் ஆகும் வரை தங்களுடைய முதலிரவை தள்ளி வைத்திருந்தனர். தினமும் லீலாவிடம் தினேஷ்.... அன்னைக்கு கொடுத்த முத்தம் போல கொடு.... என்பான். இவள் கொடுத்ததும்.... இல்லை இப்படி இல்ல.... அது.... என்பான்.

யோவ்.... அப்போ நீ பயந்த.... அதனால அப்போ கொடுத்த முத்தம் உனக்கு வித்தியாசமா இருந்துச்சு.... இப்போ நீ பயப்படல.... அதான்.... என்றாள் லீலா.

ஓகே ஓகே.... ஒத்துக்கிறேன்.... என்று சொல்லி கட்டிபிடித்து தூங்கினார்கள்.

வனஜாவும்.... ஓ சாரி சாரி.... கெஸட்ல பெயரை மாற்றி விட்டான் ரோஹன்....

ஷெரின் மற்றும் ரோஹனும்.... வரப்போகும் தங்களுடைய குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.

இவர்கள் அனைவரும் நன்றாக வாழ நாமும் வாழ்த்துவோம்.... அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை அவர்களின் இப்போதைய வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க அவர்களுக்காக நாமும் பிரே பண்ணிக்கொள்ளலாம்.


முற்றும்.

அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
Last edited:

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
மிகவும் அருமையான கதைமா..
தலைப்ப பார்த்து நிரைய பேர் படிக்க யோசிக்கலாம். ஆனா அருமையா முடிச்சிருக்கீங்க.
இப்படியொரு தீம் எடுத்து எழுதினதுக்கே உங்களை பாரட்டனும். மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தொடர்ந்து எழுதுங்க
 
  • Like
Reactions: navivij

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
136
74
28
Maduravoyal
தேங்க் யூ ஸோ மச் மேடம்🙏🏻😊