அத்தியாயம் 2
மறுநாள் காலை பொழுது அர்ஜுனுக்கு அழகாக விடிய உற்சாகத்துடன் கிளம்பி மாடியில் இருந்து கீழே வந்தான் . அவனுக்கு முன்னரே அவனது தந்தை டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க விசில் அடித்து கொண்டே கீழே வரும் மகனை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் அவன் அன்னை மஞ்சுளா .
“என்னம்மா அப்படி பார்கிறிங்க....இன்னைக்கு என்ன ஸ்பெஷல்” என கேட்டு கொண்டே தந்தையின் அருகில் அமற “உனக்கு பிடிச்ச சர்க்கரை பொங்கலும் ரசமலாவும் செஞ்சுருக்கேன்” என சொல்லி கொண்டே பரிமாறினாள்.
“நீங்களும் உக்காருங்க அம்மா சேர்ந்து சாப்பிடலாம்” என அவன் கூற...
“என்ன அர்ஜுன் இவ்ளோ சந்தோசமா இருக்க .உன் முகத்தை பார்க்கவே எவ்ளோ நல்ல இருக்கு தெரியுமா?....இப்பதான் என் பழைய ராஜாகுட்டிய பார்க்கிறேன்”என்றவர் கொஞ்ச நாள் வெளியூருல இருந்த ...இங்க வந்ததுக்கு அப்புறம் வேலை வேலைன்னு அலைஞ்சுகிட்டே இருப்ப....உன்கிட்ட பேசவே முடியறதில்லை. என வருத்தத்துடன் மஞ்சுளா சொல்ல
“அப்படி எல்லாம் ஏதும் இல்லம்மா ....புது ப்ராஜெக்ட் ...அதான் கொஞ்சம் வேலை அதிகம்” என்றான் அர்ஜுன்.
“இல்லைடா அவ இருந்த வரைக்கும் தெரியலை.அவ போனதுக்கு அப்புறம் நீயும் வீட்ல சிரிச்சு பேசறதே இல்ல ...அப்படியே பேசினாலும் பிசினஸ் பத்தி பேசுவிங்க ...நான் ஒருத்தி இருக்கிறதே உங்க கண்ணுக்கு தெரியாது .நீ இப்போ இப்படி கேட்டது மனசுக்கு எவ்ளோ நிறைவா இருக்கு தெரியுமா?.... என்று சொல்லும்போதே மஞ்சுளாவிற்கு கண்களில் கண்ணீர் வழிந்தது .
மஞ்சுளா.... பத்மநாபனின் காதல் மனைவி ......ஆஸ்திக்கு ஒன்று ,ஆசைக்கு ஒன்று என இரண்டு குழந்தைகள் .அவளை பொறுத்தவரை பத்மநாபன் மட்டுமே உலகம் .அன்பான தாய் ,அமைதியான மனைவி இதுவே மஞ்சுளா .
“மஞ்சுளா என்னமா இது ....நான் உன்கிட்ட என்ன சொன்னேன் ....இனி நடக்கறது எல்லாம் நல்லதாதான் நடக்கும்னு சொன்னேன்ல ....இப்ப எதுக்கு கண் கண்கலங்குற” என பத்மநாபன் அதட்ட
“ அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு ....நான் எப்பவும் போலதான் இருக்கேன் .வேலை அதிகம்..... அதனால உங்ககிட்ட பேசமுடியல அவ்ளோதான்........ அது உங்க மனச இவ்ளோதூரம் பாதிக்கும்னு எனக்கு தெரியலை. இனி என் செல்ல அம்மாவை கொஞ்சாம எங்கும் போக மாட்டேன் ...போதுமா” என சொல்லிகொண்டே தன் தோளோடு அம்மாவை அணைத்து ஆறுதல் சொன்னான் அர்ஜுன் .
“என்ன மஞ்சும்மா நீ.....பையன் இன்னைக்குதான் நம்ம எக்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரீக்கு GM பொறுப்பை ஏத்துக்க போறான் ....இப்போ போய் கண்கலங்கிட்டு ....வாழ்த்து சொல்லி அனுப்புவியா” என சூழ்நிலையை சகஜ நிலைக்கு பத்மநாபன் கொண்டுவர முயற்சிக்க ..
உடனே “அடடா ஆமாம் ....அர்ஜுன்...இரு...இரு..உனக்கு பிடிச்ச ரசமல்லாய் செஞ்சிருக்கேன் எடுத்திட்டு வரேன்” என மஞ்சுளா செல்ல ....... .
கண்களாலே தன் தந்தைக்கு நன்றி சொன்னான் அர்ஜுன்.
ரசமல்லாவை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க “அம்மா நீங்களே ஊட்டி விடுங்கள்” என அவன் வாய் திறக்க ஆசையுடன் அவனக்கு ஊட்டிவிட்டவள் ....... “ராஜாகுட்டி இந்த சந்தோசம் தொடர்ந்து உனக்கு நிலைச்சு இருக்கணும்டா” என வாழ்த்தினாள்.
தந்தையும் மகனும் அலுவலகம் புறப்பட அவர்களை வழியனுப்பிவிட்டு தோட்டத்தை சுத்தம் செய்ய கிளம்பினாள் மஞ்சுளா .
காருக்குள் அர்ஜுன் தன் தந்தையிடம் “என்னாச்சுப்பா அம்மாவுக்கு ....இன்று இவ்ளோ உணர்சிவசபடறாங்க....நம்ம சரியா அம்மாவ கவனிக்காம விட்டுடோமோ” என கேட்க
“இல்ல அர்ஜுன்.....அவளுக்கு இப்ப என்ன தேவைங்கிறது எனக்கு புரியுது .நான் பார்த்து கொள்கிறேன் ...நீ கவலைபடாதே ...... முதன் முறையாக நமது நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் அமர்கிறாய்....... .உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் நம்ம கோபாலன் சார் இருக்கிறார் .அவரிடம் கேள் .அவர் உனக்கு உதவி செய்வார் . நீ தொழிலில் மட்டும் கவனம் செலுத்து...மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்றார். .
அதற்குள் AP இன்டர்நேஷனல் நிறுவனதிருக்குள் கார் நுழைந்ததும் “அர்ஜுன் நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும் .ALL THE BEST” என கைகளை உயர்த்தி அவனை வாழ்த்தி விட்டு அலுவலகத்திற்குள்ளும் அவனை அழைத்து சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். .
“சரி அர்ஜுன் நீ உனது அறைக்கு செல் .அங்கு உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கு” என சிரித்து கொண்டே சொன்னவர்” எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புகிறேன்” என சொல்லிவிட்டு வெளியேறினார் .
“அப்பா என்ன இப்படி சொல்லி விட்டு போகிறார். இந்த பொறுப்பே நமக்கு சர்ப்ரைஸ் தானே .இன்னும் வேற என்ன இருக்கு” என சிந்தித்து கொண்டே அறையின் கதவை திறந்தவன் அங்கு அமர்ந்திருக்கும் நபரை பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான் .
காலை நேரத்தில் ஆடிட்டர் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது .அங்கு “ஓகே சார்,,,,,, , ஒன்னும் பிரச்சனை இல்லை ,நான் பார்த்துகிறேன் ,நீங்க ஓய்வு எடுங்க” என்று தொலைபேசியில் தலையை ஆட்டி ஆட்டி பேசிகொண்டிருந்தாள் ஆருத்ரா.
அவளது தலையாட்டலை பார்த்து யார் என்று அக்கௌன்டன்ட் ஷோபா கேட்க சைகையாலே பாஸ் என கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தாள் ஆருத்ரா.
பின்னர் தன் இருக்கையில் அமர்ந்தவள் “சார்க்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லையாம் .அதனால் அலுவலக வேலைகளை என்னை பார்த்துக்க சொன்னார்” என்றவள் .
“ஆமாம் அந்த மாடர்ன் இண்டுஸ்ட்ரீ கணக்கு என்ன ஆனது.... .அப்புறம் V V அசசோசியேட்ஸ் கொடுத்த டாக்குமென்ட்டில் சில முக்கிய ரசிது இல்லை .அதை அவர்களிடம் சொல்லிவிடு” என அலுவலகத்தின் தலைமை பொறுப்பை புரிந்து கட்டளை பிறப்பித்து கொண்டிருந்தாள் .
“அட கொஞ்சம் ...பொறு...பொறு ..அதை எல்லாம் வாங்க மணி அப்போதே சென்று விட்டார். நீ நேற்று AP INDUSTRY பார்ட்டிக்கு போயிருந்தியே எப்படி இருந்துச்சு .பெரிய கோடீஸ்வரங்க வீட்டு பங்சன் இல்லயா அதான் கேட்டேன்” என கண்களை விரித்து கொண்டு ஆசையாக கேட்ட ஷோபாவை முறைத்தவள்
“ஆமா இப்ப அது ரொம்ப முக்கியம் .பணகாரங்கனாவே தெரியாதா ,எதுக்கெடுத்தாலும் பார்ட்டி வைப்பங்கனு ......இது அவங்க பையன் அந்த நிறுவனத்திற்கு புதுசா தலைமை பதவி ஏத்துக்க போறாராம் ,அதுக்குதான் இந்த பார்ட்டி....உழைத்து சம்பாறிச்சு உயரத்திற்கு வந்திருந்தா இதுல ஒரு அர்த்தம் இருக்கும் .அப்பா காசுல உக்காந்து வாழ்றவங்க இப்படிதான் பந்தா பண்ணுவாங்க” என சலித்தபடி சொன்னாள்.
நீ ஏண்டி அதுக்கு இவ்ளோ சலிச்சுக்கிற .இது எல்லா இடத்திலும் நடக்கிற ஒன்னுதான. நீ போனமா வாழ்த்து சொன்னமா ,சாப்பிட்டு வந்துகிட்டே இருக்க வேண்டியது தானே” என ஷோபா சொல்ல
“ஆமாமா எல்லாம் பணம் இருக்கிற திமிரு” என சொல்லும்போதே அர்ஜுன் முகம் நினைவில் வர அதற்க்கு மேல் அவள் வாயில் வார்த்தை வர மறுக்க சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்
“சரி சரி வளவளனு பேசாம்ம வேலையை பாரு, சும்மா துருவி துருவி கேள்வி கேட்டுகிட்டு” என எரிச்சலுடன் பேசிகொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ஆருத்ரா .
“நல்லாதான இருந்தா ...திடீர்னு என்ன ஆச்சு?” என அவளை ஏற இறங்க பார்த்த ஷோபா இரு இரு மதியம் உன்ன கவனிச்சுகிறேன் என மனதில் நினைத்த படி வேலையை தொடர்ந்தாள் .
தனது அறையில் அவனை எதிர்பார்க்காத அர்ஜுன் ,” டேய்ய்ய்ய் அகில் வாட்ய சர்ப்ரைஸ்..........நேத்து கூட போன்ல பேசினோம். நீ வரேன்னு சொல்லவே இல்ல” என சந்தோசத்தில் அவனை இழுத்து அணைத்து கொள்ள ,
அவனோ “இல்ல அர்ஜுன் .....நான் இன்று காலை தான் வந்தேன் .நேரா வீட்டுக்கு போய் குளிச்சுட்டு ரெடியாகி இப்ப வரேன் .உனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும்னுதான் மாமா சொல்ல வேண்டாம்னு சொன்னார் என்றான். .
“அப்போ அப்பாவுக்கு நீ வந்தது” என இழுத்தவன் ......
“ஓ....அதான் அப்பா சர்ப்ரைஸ்னு சொன்னாரா .சரி சரி.....என்னமோ நடக்குது .....நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம்” என்றவன்
“அகில் இனி நீ எங்கும் போக வேண்டாம் .இங்க என் கூடவே இருந்திடு இப்பவாவது நான் சொல்றத கேளுடா” என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க
அகில் சிரித்து கொண்டே “அதுக்கு அவசியமே இல்ல ...ஏன்னா உனக்கு அரை மணிநேரத்திற்கு முன்னடியே நான் இந்த கம்பெனில ஜாயின்ட் பண்ணிட்டேன்” என கூற ..
“டேய் மாப்புள எல்லாவற்றிலும் நீ ஸ்பீட் தாண்டா என அவன் வயிற்றில் செல்லமாக குத்தி விட்டு ...ஓக்கே அப்புறம் சொல்லு” என சாவகாசமாக டேபிளில் மீது அர்ஜுன் அமர
“ம்ம்ம்....நான் போய் என் வேலைய பார்கிறேன் .நீயும் உன் வேலையே தொடங்கு .இன்று நம் இருவருக்குமே முதல் நாள் .வேலையும் புதிது .ஆல் தி பெஸ்ட்” என வாழ்த்து கூறிவிட்டு தனது இடத்திற்கு சென்றான் அகில் .
“இது தாண்டா உன்கிட்ட பிடிச்சதே .எந்த சூழ்நிலையிலும் உன் கடமையில் இருந்து தவறது இல்லைடா நீ” என மனதில் நினைத்தவாறு இருக்கையில் அமர்ந்தான் அர்ஜுன்.
யார் இந்த அகில் ? அர்ஜுனுக்கே ஆர்டர் போடுபவன் ...கொஞ்சம் பார்ப்போமா ..........
அகில் என்ற அகிலன் .இஞ்சினீரிங் கல்வித்தகுதி .சராசரி கிராமத்து இளைஞனின் தோற்றம் .உழைப்பு மட்டுமே மூலதனம்.ரோசம் அதிகம்.எந்த கெட்ட பழக்கமும்கிடையாது .வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால்,
அர்ஜுனனின் அன்னையும் அகிலனின் தந்தையும் அண்ணன் தங்கை உறவு .பெற்றவர்களை மீறி மஞ்சு தான் காதலித்த பத்மநாபனை திருமணம் செய்து கொள்ள அதனால் கோபமடைந்து அகிலனின் தந்தை தங்கையிடம் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டார் .திருமணதிற்கு பிறகு பத்மநாபன் தொழிலில் உயர்ந்து நல்ல நிலைமைக்கு வர ,விவாசாயத்தை நம்பி இருந்த அகிலனின் குடும்பம் மழை இல்லாமல் விவசாயம் நலிவுற அவர்களின் வசதியும் குறைந்து கொண்டே வந்தது.ஆனால் எந்த சூழ்நிலையிலும் தங்கையிடம் சென்று அவர் நிற்கவில்லை.தானாக மஞ்சு உதவி செய்ய வந்த போதும் அவர் ஏற்று கொள்ளவில்லை .
அகிலனுக்கு 15 வயது ஆகும்போது ஒரு ஆக்சிடெண்டில் அவனது தாயும் தந்தையும் இறந்து விட தனி மரமாக நின்றான் அகிலன்.அப்போது அவனை வாரி அனைத்து கொண்டது பத்மநாபன் குடும்பம் .
ஆனால் சிறுவயதில் இருந்தே நாம் எதற்காகவும் யார் உதவியும் எதிர்பார்க்க கூடாது .நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை கொண்டு நாம் சந்தோசமாக வாழ வேண்டும் என அவன் தந்தை சொன்னதை கேட்டு வளர்ந்தபடியால் அவனால் அவர்களுடன் ஒன்றமுடியவில்லை.
அவர்கள் வீட்டில் ஒரு வாரம் இருந்தவன் பின்னர் மஞ்சுவிடம் வந்து “அத்தை என்னை ஹாஸ்ட்டலில் சேர்த்து விடுங்கள். நான் அங்கு இருந்து படித்து கொள்கிறேன். அப்படியே ஊரில் இருக்கும் நிலத்தையும் விற்க ஏற்ப்பாடு பண்ணுங்கள் .எனது படிப்பு செலவிற்கு தேவைபடுகிறது” என கூற.... மஞ்சு அதிர்ந்து விட்டார்.
“ஏண்டா......என்னடா ஆச்சு உனக்கு .......யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க
“அது எல்லாம் ஒன்றும் இல்லை அத்தை. எனக்கு இங்க இருக்கிறது உங்களை தொந்தரவு தர மாதிரி தெரியுது .ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்குங்க” என அவன் கெஞ்ச ....
இந்த விசியத்தை தன் கணவனிடம் சொன்னாள் மஞ்சு. “என்னங்க நடந்திருக்கும் .ஏன் இப்படி பேசறான்” என கேட்க
“நீ உன் மருமகனை புரிந்து கொண்டது அவ்வளவுதான் .அவன் ரோசக்காரன்.தன் அப்பா உதவி கேட்டு வராத இந்த வீட்டிற்க்கு தான் வந்து நிற்பதா என யோசிக்கிறான்.உன் அண்ணனுக்கு மகனாக பிறந்து விட்டு இந்த அளவு கூட பேசலைனா எப்படி” என சிறித்து கொண்டே கூறியவர் ,
“நீ கவலை படாதே ....அவனை நம்ம அர்ஜுன் படிக்கிற ஸ்கூல் சேர்த்திடலாம் .ஹாஸ்டல்ல தங்கிகிட்டும். லீவுக்கு நம்ம வீட்டுக்கு வரட்டும் .நிலத்தை விற்று பேங்க்கில் பணம் போட்டு விடலாம்.வீடு மாட்டும் ஊர்ல அப்படியே இருக்கட்டும் .என்ன சொல்ற” என கேட்ட கணவனை பெருமையுடன் கண் இமைக்காமல் பார்த்தார் மஞ்சு.
“என்னடி இந்த லுக் விட்ற......ஆகா பத்மநாபா இன்னைக்கு உன் காட்டுல மழைதாண்டா” என சரசமாக சொல்ல வெட்கத்தில் அவர் மார்பிலே சாய்ந்தாள் மஞ்சு.
அர்ஜுன் படிக்கும் பள்ளியில் அவனை சேர்த்து விட விடுதியில் தங்கி படித்து கொண்டு விடுமுறைக்கு மட்டும் அத்தை வீட்டிற்கு வந்து செல்வான் அகிலன்.
படிப்பிலும் விளையாட்டிலும் அர்ஜுனுக்கும்,அகிலனுக்கும் போட்டி இருந்து கொண்டே இருக்கும்.அர்ஜுன் பிறப்பில் இருந்தே பணத்தில் வளர்ந்ததால் அவன் அதிகம் செலவு பண்ணுவான். அவனை சுற்றிலும் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் அகிலன் அப்படி இல்லை.அதிகம் பேசமாட்டான். ஆர்ப்பாட்டம் இருக்காது . தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான். ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் அவனது கோபத்திற்கு முன்னால் சுட்டெரிக்கும் சூரியனும் சுருங்கிவிடும். அதனாலே அர்ஜுனனுக்கு அகிலனை ரொம்ப பிடிக்கும். இருவரும் ஒரே வயதாக இருப்பதால் எங்கு போனாலும் அவனை இழுத்து கொண்டே சுத்துவான் .
கல்லூரி படிப்பும் முடிந்ததும் பத்மநாபன் இருவரையும் அழைத்து மேற்படிப்பு பற்றி விசாரிக்க அர்ஜுன் எம் பி ஏ படிக்க வெளிநாடு செல்ல விரும்புவதாக கூற ,அகிலனோ தான் வேலைக்கு செல்ல விரும்புவதாக கூறினான்.
பத்மநாபன் அகிலனை தனது நிறுவனத்தில் ஒன்றில் நீ எடுத்து கொள் .உன்னுடிய திறமையை அதில் காட்டு என்றுகூற ,உடனே அகிலன் மறுத்து பேச முயல சம்பளத்திற்குத்தான் என அவர் சொல்ல அவன் யோசித்து சொல்கிறேன் என கூறினான்.
பின்னர் அர்ஜுனனிடம் சொல்லி அவனை ஒத்துக்க வைத்தனர். வேலையில் சேருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென்று பத்மநாபனுக்கு தொலைபேசியில் அழைத்தவன் “மாமா நான் வெளியூர் செல்கிறேன் .தயவு செய்து என்னை வேற எதுவும் கேட்காதிர்கள்” என கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டான் .
அவனை பற்றி தெரிந்ததால் பத்மநாபனும் அவனை வேறு எதுவும் கேட்க வில்லை.மஞ்சு அர்ஜுனனிடம் மறுபடியும் அவனிடம் பேச சொல்ல ஆனால் அகிலன் மறுத்து விட்டான்.அர்ஜுனனும் அவனுடிய பிடிவாதம் தெரிந்ததால் விட்டு விட்டான்.
அதற்க்குள் அர்ஜுன் வெளிநாட்டில் mba முடித்துவிட்டு இரண்டு வருடம் வேறு நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு இப்போது தான் வருகிறான்.
அகிலனும் நான்கு வருடம் கழித்து இப்போது வந்திருக்கிறான். அதுவும் பத்மநாபன் வற்புறுத்தி அழைத்ததால் மட்டுமே .....
தனது இருக்கையில் வந்து அமர்ந்த அகிலனின் மனம் நிலையில்லாமல் தவித்தது . தான் எடுத்த முடிவு சரிதானா....தான் இங்கு வந்திருப்பது முறைதானா? என மனம் குழம்ப
மாமா வற்புறுத்தி அழைத்தார் ...எப்படி அதை மறுப்பது என ஒரு மனம் சொல்ல
உண்மையாக சொல் ....நீ அதற்க்கு மட்டுமா வந்தாய் என இன்னொரு மனம் கேட்க
“இல்லை...இல்லை மாமா அழைத்ததால் மட்டுமே வந்தேன்....என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை” என தனக்குத்தானே சொல்லிகொண்டான் .
எண்ணத்தின் ஓட்டத்தை
தடை போடும் வேலி ஏது
தடுக்கும் கலை கண்டறிந்தால்
இன்றைய படைப்புகள் பாதி கூட இருக்காது.
கடவுளின் எண்ணத்தின் வண்ணமே இயற்க்கை
மனிதன் மனதில் ஓடும் எண்ணங்களின் வண்ணமே
அவனது வாழ்க்கை .............