• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur

அத்தியாயம் 3

புதிதாதக பதிவியேற்ற இருவரும் தமது கடமைகளை உணர்ந்து வேலைகளை சரிபார்த்து கொண்டிருக்க ,சார் ....உள்ளே வரலாம்மா என கேட்டுகொண்டே கோபாலன் உள்ளே வந்தார்.

“சார் இந்த வருடம் இன்கம்டாக்ஸ் நாம் கட்ட வேண்டிய தொகை இவ்வளவ்வு ....ஆடிட்டர் ஆபிஸில் இருந்து அனுபிருக்காங்க” ....என ஒரு பைலை அவரிடம் நீட்ட

“டேபிளில் வைத்து விட்டு செல்லுங்கள் சார்.நான் பார்த்து விட்டு சொல்கிறேன்” என அர்ஜுன் கூற

“சார் அடுத்தவாரம் கடைசி டாக்ஸ் கட்றதுக்கு ......அதனால் நீங்க பார்த்துட்டு சொன்னிங்கன்னா” என கோபாலன் தயங்க

“கண்டிப்பா சார்......நாளைக்கு உங்களுக்கு செக் கொடுத்தறேன் போதுங்களா” என சிரித்த படி அர்ஜுன் கூற

ஓகே சார் என தலையாட்டிவிட்டு கோபாலன் அறையை விட்டு வெளியே வந்தார்.

தன் வேலையை முடித்து விட்டு அந்த டாக்ஸ் பைலை எடுத்து பார்த்தவனின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது .உடனே அகிலனிற்கு போன் செய்து அவனை தனது அறைக்கு வர சொல்லிவிட்டு...........அக்கௌன்ட் செக்சனுக்கு போன் பண்ணி தனக்கு வேண்டிய சில விபரங்களை தந்து கணினிக்கு அனுப்ப சொன்னான்.
அகிலன் வந்ததும் இருவரும் அதை பற்றி விவாதித்தனர்.பின்னர் அகிலன் மறுபடியும் அந்த பைலை சரிபார்தவன்

ஆமாம் அர்ஜுன் ....”எனக்கும் நம்ம இன்னும் கொஞ்சம் வரியை குறைக்கலாம்னு தோனுது. INCOME TAX DEDICTIONக்கு நிறைய சலுகைகள் இருக்கு .அதை யாரும் சரியாய் பயன்படுத்தறது இல்ல.நம்ம அதை சரியா பயன்படுத்திக்கணும் .சில விஷ்யங்கள மாமா தனது பர்சனல் அக்கௌன்ட் மூலம்மா செஞ்சிருக்கார்.அதை நம்ம கம்பெனி அக்கௌன்ட் மாத்துனா நமக்கு இன்னும் பெனிபிட் ஜாஸ்தி.”

“நானும் அதுதான் யோசிக்கிறேன் அகில் ....எனக்கும் வீவிங் பாக்டரி நாமே சொந்தமா ஆரம்பிக்கணும்னு ஆசை . இதை எல்லாம் பார்த்தா பேசாம்ம லோன் போட்டு அந்த தொழிலை ஆரம்பிச்சா இன்னும் டாக்ஸ் குறைய சான்ஸ் இருக்கு என்ன சொல்ற” என சொல்லிகொண்டே அவன் முகத்தை பார்த்தவன் ,

“சூப்பர் யோசனை அர்ஜுன்......கண்டிப்பா பண்ணலாம்...... .ஆனா இது எல்லாம் ஆடிட்டர்கிட்ட கன்செல்ட் பண்ணனும் . அதுக்கு முன்னாடி நீ மாமாகிட்ட இத பத்தி பேசு” .......

“சரிடா....நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன் ....சரி...சரி கிளம்பு ...சாப்பிட போகலாம்” என அர்ஜுன் புறப்பட ...

“நானா”....... என இழுத்த அகில்...”இங்க கேண்டின்ல எனக்கு பிடிச்ச பிரியாணி” என சொல்ல ..

அவனை முறைத்த அர்ஜுன்.....”டேய் உன்னால நான் தினமும் எங்க அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன். வந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்த ...அப்புறம் எட்டியே பார்க்கல.....நீ இன்னைக்கு வர ...... உன் பாசக்கார அத்தைக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்....வாடா” என அவனை இழுத்து சென்றான் அர்ஜுன்.

வீட்டிற்க்கு வந்ததும் அகிலனை பார்த்த மஞ்சு மிகவும் சந்தோசப்பட்டாள் .உடனே ஒரு இனிப்பு செய்து உணவின் போது அதையும் சேர்த்து பரிமாறினாள் .

“அத்தை இந்த இனிப்பு சூப்பர்”........ என அகில் பாராட்டிகொண்டே “என்ன சொல்றிங்க மாமா என பத்மநாபனை பார்க்க “

“என் பொண்டாட்டி 15 நிமிடத்தில் இனிப்பு செய்வாள் என்பது அவளுடன் 25 வருடம் குடும்பம் நடத்திய எனக்கே.... இப்பதான் தெரியுது .இவ்வளவு நாள்ல நீ இப்படி செஞ்சதே இல்லையே மஞ்சும்மா” என பத்மநாபன் கிண்டலாக கேட்க

“நான் செஞ்சுட்கிட்டு தான் இருக்கேன்.உங்களுக்கு தெரியல ...நான் என்ன பண்றது” என என வேகமாக கூறியவள் ...”அகில் இன்னும் கொஞ்சம் வைச்சுகப்பா”என அவனுக்கு அதிகம் வைத்தாள்.

உடனே பத்மநாபன் .....”ஆனாலும் அர்ஜுன் இந்த பெண்கள் இருக்காங்களே...... தனது பிறந்த வீட்டு ஆளுங்க வந்துட்ட எப்படி எல்லாம் மாறி போறாங்க பாரு......தடாலடி விருந்து ....உடனடி ஸ்வீட் கலக்கறாங்க....அகில் இதுகாகவாது நீ அடிகடி வீட்டிற்க்கு வந்து போ” என கலாய்க்க...

உடனே மஞ்சு “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.....எப்ப பார்த்தாலும் என்ன கிண்டல் பண்ணிகிட்டே” என வெட்கப்பட...... அந்த இடம் சந்தோஷத்தில் நிறைந்தது .

உணவு வேலை முடிந்ததும் மூவரும் வரவேற்ப்பு அறையில் வந்த அமர்ந்தனர்.அர்ஜுன் இன்கம் டாக்ஸ் விபரங்களை சொல்ல உடனே

பத்மநாபன் “அர்ஜுன் இது சம்பந்தமா நீ எது செஞ்சாலும் நம்ப ஆடிட்டர் கிட்ட கேட்டுட்டு செய் .அவருக்கு அனுபவம் ஜாஸ்தி” என கூறினார் .

அர்ஜுனும் உடனே அவருக்கு தொலைபேசியில் அழைத்து விபரத்தை கூற தான் நாளை நேரில் வருவதாக கூறினார் ஆடிட்டர் .

இன்று ஜப்பானில் இருந்து buyers வந்து இருப்பதால் அர்ஜுன் நேரமே கிளம்பி அலுவலகம் சென்று விட்டான் .பத்மநாபன் எழுந்து வாக்கிங் முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தவர்.... “எங்கே அர்ஜுன் காணோம் “என்று கேட்க “ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குனு நேரமே கிளம்பி போய்விட்டான்” என சுரத்தே இல்லாமல் மஞ்சுளா பதில் சொல்ல பத்மநாபன் முகம் யோசனையில் ஆழ்ந்தது .


ருத்ரா அலுவலகம் வருவதற்கு முன்பே வந்திருந்த ராமநாதன் அங்க இருக்கும் பைல்களை சரிபார்த்து கொண்டிருந்தார்.

ஆருத்ரா உள்ளே நுழைந்த உடன் “குட் மார்னிங் சார் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என கூற
“இல்ல ருத்ரா நீ சரியான நேரத்திற்குதான் வந்து இருக்கிறாய் ,நான் தான் நேரமே வந்துவிட்டேன் என சிரித்து கொண்டே” அவர் கூற

“நீங்க ஓய்வு எடுக்க வேண்டியதுதான சார் ....நான் தான் ஆபிஸ் பார்த்துகிறேனு சொன்னேன்ல” என உரிமையோடு கோபமாக கேட்க

“எனக்கு இப்போ பராவாயில்லை.நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை”... என சிரித்து கொண்டே சொன்னவர்

“இன்னைக்கு AP இன்டர்நேஷனல்க்கு போகணும்.புது MD அர்ஜுன் வர சொல்லிருக்கார் .ஏதோ விளக்கம் கேட்கனுமாம் .அது தான் எல்லாம் தயார் செய்துட்டு இருக்கேன்” .

“ஏன் சார் என்ன ஆச்சு........அதுதான் எல்லாம் முடிச்சு இவ்ளோ டாக்ஸ் கட்டணும்னு சொல்லிட்டமே ...அப்புறம் என்ன” என வேகமாக கேட்க

“ஆருத்ரா முதலில் கோபத்தை குறை ....இப்ப என்ன நடந்திருச்சு ....புது MD...அதனால நம்ம கிட்ட பேசணும்னு கூப்பிட்டு இருக்கலாம் .முதலில் அங்கு போய் பார்த்தால் தான் தெரியும்” .

“சரி சரி நான் கிளம்புகிறேன் .சீக்கிரம் பார்த்து விட்டு வீட்டிற்க்கு செல்கிறேன் .அப்புறம் உன் ஆன்ட்டி அவ்ளோதான்” என சிரித்துகொண்டே கிளம்ப

“சார் நான் வேண்டுமானால் உங்களுடன் வரட்டுமா ......நீங்கள் இந்த நிலையில் தனியாக செல்ல வேண்டாம் .

மேலும் அந்த நிறுவனத்தின் கணக்குகளை எல்லாம் நான் தான் சரிபார்த்தேன் .அதனால் நானும் வருகிறேன்” என கிளம்பி அவருடன் சென்றாள் .

அங்கு BUYERS மீட்டிங்கில் அர்ஜுன் இருந்தான். யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியதால் அவன் தொடர்பான அனைத்து தகவல்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதனால் mr.ராமநாதன் வந்த தகவலும் அவனுக்கு செல்லவில்லை .சிறிது நேரம் காத்திருந்த ராமநாதன்....


“ஆருத்ரா அர்ஜுன் ஏதோ முக்கியமான மீட்டிங்க்ல இருக்காறாம்.நேரமாகிறது நாம் கிளம்பலாமா”எனக் கேட்க

ஆருத்ரா “சார் நீங்க கிளம்புங்க ...நான் வேண்டுமானால் அவர்கள் வந்ததும் இந்த விபரங்களை கொடுத்து விட்டு வருகிறேன்” என கூறினாள்.

ராமநாதனும் “சரிம்மா முடிச்சுட்டு எனக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு இங்கு இருந்து கிளம்பு” என சொல்லி விட்டு கிளம்பினார்.

1மணி நேரம் மீட்டிங் 21/2 மணி நேரமாக இழுக்க 1௦ மணிக்கு வந்த ஆருத்ரா 12.3௦ மணி வரை வரவேற்பறையில் அமர்ந்திருக்க......
..
இன்னும் என்ன பண்றாங்க என நினைத்தவள் அர்ஜுன் ஞாபகம் நினைவில் வர “இவன் போன வாரம் தான் பொறுப்பு ஏத்துகிட்டான் .அதுக்குள்ளே இவ்ளோ சீன போடறான் ......

ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசறதுன்னு தெரியலை...இவன் மீட்டிங்க்ல என்ன பேசபோறான்....ஹா ஹா ஹா இவன் எங்க பேச போறான்....... .டீ ,வடை சாப்பிட்டு அவங்க அப்பா பேசினார்ன அவர் வாயை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான்” என மனதில் அவனை கரித்துகொட்டி கொண்டிருந்தாள்.

“மனம் ஒருவரை நினைக்க ஆரம்பித்து விட்டால் அன்பைவிட அவர்கள் மீது கோபம் தான் அதிகம் வரும் என்று சொல்வார்கள் ...அது ஆருத்ரா விஷியத்தில் உண்மையோ...அவளுக்கு வரும் கோபத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது .......பொறுத்திருந்து பார்ப்போம்.

மீட்டிங் முடிந்து அவர்களை அனுப்பி விட்டு மிகவும் களைப்பாக தனது அறைக்கு வந்தவன் அப்படியே இருகையால் சாய்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தவன் பின்னர் தனது உதவியாளர் கார்த்திக்கை கூப்பிட்டு..... “நான் வீட்டிற்க்கு செல்கிறேன் ...கையெழுத்து இடுவதை மதியம் பார்த்து கொள்கிறேன்” என கிளம்ப

உடனே கார்த்திக் “சார் நீங்க வர சொன்னதா ஆடிட்டர் வந்து இருந்தார் என கூற ......

“அட ஆமா சொல்லிருந்தேன்” ....ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கலாம் அங்கிள்...அவரை உள்ளே அமர வைத்தாயா..... என கடிந்து கொண்டேஅவசரமாக எழுந்து வெளியே சென்றவன்...... அங்கு வரவேற்பறையில் ஆருத்ராவை பார்த்ததும் அப்படியே நின்றான் .

உடனே கார்த்திக் சார்...”நான் அதான் சொல்லவந்தேன்.....அவர் சென்று விட்டார்.மிஸ் ஆருத்ரா மேடம் தான் வெயிட் பண்றாங்க” என கூற

சிறிது நேரம் யோசித்தவன் இதழில் ஒரு விஷம புன்னகையோடு” ஒரு 1௦ நிமிடம் கழித்து அவர்களை உள்ளே அனுப்பு” என கூறிவிட்டு இருக்கையில் சாய்ந்தான் .

கார்த்திக் ஆருத்ராவிடம் வந்து “மேடம் ஒரு 1௦ நிமிடம் வெயிட் பண்ணுங்க....சார் இப்போதான் வந்தார்...நீங்கள் காத்திருப்பதை

இவ்ளோ நேரம் காத்திருந்தது கூட பெரியதாக தெரியவில்லை ....அவன் அறைக்கு வந்த பிறகும் 1௦ நிமிடம் காத்திருப்பது ஆருத்ராவிர்க்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .



“பெரிய இவன் ....மீட்டிங்க்ல இவ்ளோ நேரம் தூங்கிட்டு தானே இருந்திருப்பான்.இன்னும் என்ன ரெஸ்ட் எடுக்கிறான்”......... என புலம்பிகொண்டே ,கையில் இருக்கும் கைக்குட்டையை முறுக்கி கொண்டும் அவன் அறை கதவையும் .வெளி வாயிலின் கதவையும் அடிகடி பார்த்துகொண்டுர்ந்தவளை உள்ளே இருந்து சிறிது நேரம் ரசித்தவன்


இன்னும் தாமதித்தால் ஒன்று உள்ளே வந்து நமக்கு அடி விழும்..... ,இல்லை கிளம்பி போய்கொண்டே இருப்பாள் என முடிவு செய்தவன் தானே வெளியில் வந்து


“ஹாய் ஆருத்ரா ...மன்னிக்கவும் ....ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால் வர தாமதமாகிவிட்டது .அங்கிள் போன் செய்து விட்டு வந்து இருக்கலாம்” என அவனே நேரில் வந்து அழைக்க


ஒரு நிமிடம் இதை எதிர்பார்க்கதவள் ...திகைத்து விட்டு..”.வணக்கம் சார்..பரவாயில்லை சார்....இனி வரும்போது போன் பண்ணிவிட்டு வருகிறோம்” என அமர்த்தலாக கூற


உதட்டை பிதுக்கி தோலை குளுக்கியவன் ....தனது இருக்கையில் அமர்ந்தான்.அவள் எதிரில் அமர்ந்ததும்


“எப்படி இருக்கீங்க ....முதலில் என்ன சாப்பிடரிங்க” என கேட்க
,அவள் ஏதும் வேண்டாம் என்று சொல்ல ...


ஆமாமா... “நீங்க தான் எங்களோட சாப்டமாடிங்கலே” என கிண்டலாக கூறிகொண்டே


ஆனால் எனக்கு பசிக்கிறது .தொலைபேசி எடுத்து கார்த்திக் எனக்கு பிஸ்கட் டீ அப்புறம் ஒரு பர்க்கர் அனுப்பி வை என்று சொன்னவன்,


அவள் பக்கம் திரும்பி” நான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் எடுத்து வந்திருகின்களா” எனக்கேட்க


அவனிடம் அந்த பைலை கொடுத்தாள் ஆருத்ரா .அதை வாங்கி பார்த்தவன் சிறிது நேரம் யோசனை செய்து விட்டு


சில சந்தேகங்களை அவளிடம் கேட்க அவள் அதற்க்கு சொன்ன பதில்களில் அவன் அசந்து போனான் .பரவாயில்லை முன்கோபத்தோடு மூளையும் கொஞ்சம் இருக்கிறது என மனதில நினைத்தவன் அதை அப்படியே தவறி சொல்லிவிட.......


அவனை நிமிர்ந்து பார்த்தவள் ...அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து “என்னை பற்றிய ஆராய்ச்சி உங்களுக்கு தேவை இல்லாததது .நான் அலுவலக வேலையாக வந்து இருப்பதால் அமைதியாக இருக்கிறேன் ...சீண்டி விடாதீர்கள்” என கர்ஜிக்க


“ஆகா அர்ஜுன் சும்மா இருந்தவளை ஏன்டா சொரிஞ்சு விட்ற” என மனதிற்குள் சொல்லி கொண்டு


இங்க பாருங்க மிஸ் ஆருத்ரா “நான் இங்கு புதிதாக இருப்பதால் நிறைய விஷயங்கள் உங்களிடம் கேட்க வேண்டும்.அதற்க்கு நீங்களும் முறையாக பதில் சொல்ல வேண்டும்.ஏனெனில் எங்கள் நிறுவன கணக்குகள் அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது.உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் ....இல்லையென்றால் அங்கிள் வர சொல்லுங்கள் நான் பேசிகொள்கிறேன்” என கொஞ்சம் அவன் குரலை உயர்த்த


அதில் உள்ள உண்மை புரிய ...ஆருத்ரா மிகவும் அமைதியாக”கேளுங்கள் சார் சொல்கிறேன்” என கூற


அப்பா.....சாமி...... தப்பிச்சோம்....கொஞ்சம் குரலை உயர்த்துனா அமைதியாகிடறா....இப்படிதான் இவள இனி டீல் பண்ணவேண்டும் என நினைத்தவன்


அதற்குள் அவன் சொன்ன பலகாரங்கள் வந்து விட அதை அங்கு வைத்து விட்டு பேச்சை தொடர


“சார் நீங்க சாப்பிடுங்க ....பார்க்கும்போதே ரொம்ப டையர்டா தெரியறிங்க “என அவள் கூற
“இல்லை ஆருத்ரா ....உங்களை விட்டு நான் எப்படி.........” என தயங்குவது போல் அவன் நடிக்க
பரவயில்லை சார்....நீங்க சாப்பிடுங்க ....நான் வெயிட் பண்றேன் என்று சொல்ல ...
“இல்ல ஆருத்ரா ....எனக்கு யாராது பரிமாறுனாதான் சாப்பிடுவேன்.எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க...வரட்டும் பார்க்கலாம்” என கூற

நான் பரிமாறுகிறேன் சார்...என் எழுந்தவள் அங்கு இருக்கும் தட்டில் அனைத்தையும் வைத்து அவனை அழைக்க

“இல்லை நீங்களும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுங்க ....கொஞ்சம் எடுத்துக்குங்க” என அவளுக்கு ஒரு பகுதியை கொடுக்க....அவள் அதை வாங்கி கொள்ள

படபடபட்டாசு எப்படி இப்படி வண்ண மத்தாப்பாக மாறியது!..... உண்மையா என அர்ஜுன் ஒரு நிமிடம் தன்னை கிள்ளி பார்த்தவன்

சண்டைகோழியாய் சீறி கொண்டு நின்றவளை......இன்று சாப்பாடு பரிமாறும் அளவிற்கு கொண்டு சென்று விட்டாயே ......நீ கில்லாடி அர்ஜுனா என மனதுக்குள் தன்னை புகழ்ந்து கொண்டவன்...........பின் மெதுவாக அவளுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சிக்கும்........ அப்போதே அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினான்.....

“ஆருத்ரா புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் .அதற்க்கு உங்களுடிய ஒத்துழைப்பு வேணும் .இன்று அங்கிளை வர சொன்னதும் அதுக்குதான்.பிறகு தனி கணக்கில் உள்ள ஒரு சில செலவுகளை நிறுவன கணக்கிற்கு கொண்டுவர வேண்டும்.இதை பற்றி விரிவாகபேச வேண்டும் ...... நாளை பேசலாமா ...உங்களால் வர முடியுமா” என அவன் கேட்க ..

“கண்டிப்பாக சார்...நானே வருகிறேன்.உங்க கணக்குகள் எல்லாம் நான் தான் பார்கிறேன்.உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்கள்”என அவள் கூற

ஹப்ப்பா.......... எப்படியே நாளையும் தேவியின் தரிசனம் உறுதியாகி விட்ட சந்தோசத்தில் “சரி ஆருத்ரா.....நீங்கள் கிளம்புங்கள் நேரமாகிறது” என கூறியவன் ...
“ஆமாம் நீங்கள் எப்படி போவீர்கள் ...அங்கிள் சென்றுவிட்டரே என கேட்க...இல்ல ஆட்டோவில் சென்று விடுகிறேன்” என கூறி வேகமாக வெளியேறினாள்.

இன்று இது போதும் ....இனி நாளை பார்த்து கொள்ளலாம் என மனதில் நினைத்துகொண்டே வீட்டிற்கு கிளம்பினான் அர்ஜுன் .

விடிகாலை பொழுது வெண்ணிலவு மறைந்து ஆதவன் வெளியில் வர அழைப்பு மணி ஓசை கேட்டு வாசல் கதவை திறந்த மஞ்சுளா அப்படியே அதிர்ச்சியாகி நின்றாள்!.


“என்ன மஞ்சு டார்லிங் எப்படி இருக்க”என குதுகலமான குரல் எதிர்புறம் இருந்து வர


சிறிது நேரம் திகைத்து நின்றவள்........ அபி ....அபிம்மா.......... என மஞ்சு கண்ணீர் மல்க ஓடி அணைத்து கொண்டாள் தன் மகளை ....


சிறிது நேரம் அப்படியே இருந்தவள்...பின்னர் மகளை விடுவித்து ...”என்னடி இது சொல்லாம வந்திருக்க ....நீ வந்தது அப்பாவுக்கு தெரியுமா ?......யார் கூட வந்த ....யாரும் எங்கிட்ட சொல்லவே இல்ல” என படபடவென்று பேசிகொண்டிருந்தவளை..


அட மஞ்சு ...”நிறுத்து............நிறுத்து ....ஒரு பொண்ணு நான்கு வருஷம் கழிச்சு வந்திருக்கா...உடனே நீ என்ன பண்ணனும் ....


ஏய் ....ராக்காயி ..மூக்காயி ...பாவாயி...என் பொண்ணு லண்டன்ல இருந்து வந்திட்டா ...எல்லாரும் ஓடி வாங்கடியோ கூப்பிடுவேணு பார்த்தா ...இப்படி கண்ணீர் விட்டு டயலாக் பேசிகிட்டு இருக்க ....என்னம்மா நீ” என அவள் சலித்து கொள்ள ....


“ஏய் இன்னும் உனக்கு இந்த வாய்கொழுப்பு குறையல ....உள்ள வா...வா..”என அவளை உள்ளே இழுத்து சென்ற மஞ்சு திடீர்ரென அவள் புறம் திரும்பி... “ஆமா நீ யார் கூட வந்த?.... எனக் கேட்க


“அதான் டார்லிங் தெரியாம ஒரு தடவை உனக்கு தாலிகட்டிட்டு காலம் பூரா ஆயுள்தண்டனை அனுபவிக்கிறாரே அவரோடு தான்” என சிரித்து கொண்டே சொன்னவள் ....


பின்புறம் திரும்பி....... “கூடவேத்தானே வந்தார்........எங்கே போனார்.....என் தந்தையே ...மனிதர்குல மாணிக்கமே.... நீங்கள் எங்கே போனீர்கள் ....இந்த மஞ்சுவிற்கு பயந்து பின்தங்கி விட்டிர்களா.....இந்த மஞ்சுவை பஞ்சு போல் கசக்கி ஜூஸ் பிழிந்து விடலாம்.... ...........கவலை வேண்டாம் தந்தையே ......உங்கள் தளபதி நான் இருக்கிறேன்.... ...துணிந்து வெளியே வாருங்கள்” ...... என வீர வசனம் பேசிகொண்டிருந்தவளை ...


முதுகில் செல்லமாக தட்டி ...”வந்த உடனே என்னை பலி ஆடு ஆக்கிட்டியா........நீ வருவதை அவளிடம் சொல்லாமல் இருந்ததற்கே என் மேல் கோபத்தில் இருக்கிறாள் ...நீ வேறு அவளிடம் எதையாவது சொல்லி அவளை மேலும் ஏத்தி விடாதே தாயே” என பத்மநாபன் அவளிடம் கெஞ்சி கேட்க ...


இல்ல பத்து (மகள் அப்பாவை அழைக்கும் செல்ல பெயர் ...என்ன கொடுமை) உனக்கு சப்போர்ட் பண்ணலாம்னுதான் என அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு.......” நீ சொல்லி கொடுத்த மாதிரிதான சொன்னேன்......நம்ம கார்ல வரும்போது கூட சொல்லி காட்னானே...நீ கூட சத்தம் கொஞ்சம் ஜாஸ்தி கொடுன்னு சொன்னியே” .....எனக் கேட்க


“அய்யோ மஞ்சு...நான் எதுவும் சொல்லவில்லை......அபி நான் உன் அப்பா ...என்ன விட்டுடு” என அவர் கெஞ்ச........


“பத்மநாபனை முறைத்து விட்டு உங்கள அப்புறம் கவனிச்சுகிறேன்”....என அபியின் பக்கம் திரும்பிய மஞ்சு “ஏண்டி வந்ததுல இருந்து இந்த பையை தூக்கிட்டே இருக்க ...கீழே வைக்க மாட்டியா ...என பையை வாங்கியவள் “


இங்கே உட்கார்.....எப்படி இருக்க...என்னடி இப்படி இளைச்சு போய்ட்ட,.....நான் கொடுத்த தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணியா இல்லியா ...முடி எல்லாம் இப்படி காஞ்சு போய் இருக்குது......”என தன மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியபடி கேட்ட மஞ்சுளாவின் முகத்தில் தாய்மையின் பாசம் தெரிய


“மஞ்சும்மா அவ இப்பதான வந்திருக்கா...கொஞ்சம் அவளை ரெஸ்ட் எடுக்க விடு....இனி இங்க தான் இருக்க போறா ......மெதுவா கேட்டுக்கோ எல்லாம்” ...அபிம்மா நீ உன் அறைக்கு போய் நல்ல ரெஸ்ட் எடு என பத்மநாபன் சொல்ல


“என் செல்ல அப்பானா அப்பாதான்.மஞ்சு கொஞ்சம் வெயிட் பண்ணு.2 மணிநேரத்துல வந்துவிடுகிறேன்.அதுக்கு அப்புறம் நம்ம கச்சேரிய வச்சுக்கலாம்” என முகத்தை சுளித்து அழகு காட்டி விட்டு சென்றாள் பத்மநாபன் மஞ்சுளாவின் கடைக்குட்டி அபி என்கிற அபிமித்ரா .

 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
முழுநிலவு போல் செதுக்கி வைத்த முகம்,கவி பாடும் கண்கள் .மாங்கனி நிறம்,உயரம் மட்டும் சற்று குறைவு அவள் தாயை போல்.............. அறுந்த வாலு...குறும்பு தேளு....கொட்டும் நீர் வீழ்ச்சி ..... அவள் இருக்கும் இடத்தில சந்தோசமும் கொண்டாட்டமும் நிரந்தர வாசம் செய்யும் .மொத்தத்துல நம்மள மாதிரிப்பா(okva friends )சரி சரி விட்ருங்க ...விட்ருங்க


முக்கியமான மீட்டிங் இருப்பதால் நேரமே கிளம்பி கீழே வந்த அர்ஜுன் அங்க bag எல்லாம் இருப்பதை பார்த்து


“அம்மா என்ன பெட்டி எல்லாம் இங்க இருக்கு” என கேட்டு கொண்டே சமையல் அறைக்கு வந்தான்.


அங்கு மஞ்சு சுட சுட பால்கோவா செய்து கொண்டிருக்க ...என்னமா விஷேசம் ......


“பெட்டி எல்லாம் வெளியே இருக்கு...இங்க பால்கோவா ....ஆஹா நம்ம குட்டி சாத்தான் ஊர்ல இருந்து வந்துட்டாளா” என ஆவலாக கேட்க


“ஆமா அர்ஜுன்...காலைலதான் வந்தா ...வீட்ட ரண்டுபண்ணிட்டு இப்பதான் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு போயிருக்கா”.....என சிரித்து கொண்டே சொல்ல


“நான் போய் பார்த்துட்டு வந்தறேன்மா எனக் கூறிவிட்டு வேகமாக நடந்தவன்...... .....சிறிது நேரம் யோசித்து பின் மறுபடியும் சமயலறைக்கு வந்தவன்


“ அம்மா அந்த தண்ணீர் ஜாடி எடுங்க” என சிரித்து கொண்டே கேட்க


எதுக்குடா...எனகேட்டு கொண்டே அதை மஞ்சு எடுத்து கொடுக்க
....
”எத்தன டைம் என்மேல தண்ணீர் ஊத்திருப்பா....இன்னைக்கு மாட்னா ....”


என சொல்லிகொண்டே மாடியில் அவளது அறைக்கு சென்று கதவை திறக்க தானாக திறந்து கொண்டது .”இன்னைக்கு மாட்ன.. நீ” என சொல்லிகொண்டே அவள் படுக்கைக்கு அருகில் சென்றவன்


“அய்யோ.......... அம்மா............... அபி........ என்னாச்சு என கத்திகொண்டே அப்படியே அந்த ஜாடியை கீழே போட்டு விட்டு அவளின் அருகில் அமர்ந்தவன்.......


படுக்கையில் வாயிலில் இருந்து நுரை தள்ள கண்கள் மூடி படித்திருந்த தங்கையை பார்த்ததும் அவன் துடித்து போய்விட்டான்

.அபிம்மா ...அபிம்மா என கூறிகொண்டே அவன் அலைபேசியில் டாக்டரை அழைக்க


“ஹெலோ டாக்டர் நான் அர்ஜுன்” என அவன் முடிக்கும் முன்பே


“என்னது டாக்டரா ...என அலறி அடித்து கொண்டு எழுந்தவள் டேய் ஒட்டகம்........... எனக்கு டாக்டர்........ ஊசினா...... பயம்னு........ உனக்கு தெரியாதா” என கத்திகொண்டே


கதவை நோக்கி ஓடியவள் அங்க ஜாடியில் இருந்தத அந்த தண்ணீரை எடுத்து அவன் மேல ஊற்றி விட்டு “என்மேலய தண்ணீ ஊத்தற நீ” என பழிப்பு காட்டி கொண்டே.....


“அம்மா இந்த அர்ஜுன் என்ன அடிக்க வரான் “ என கத்திகொண்டே கீழே ஓடி அம்மாவின் பின்னால் நின்று கொண்டாள் .


அதுவரை பிரம்மை பிடித்தது போல நின்று இருந்தவன் பின்னர் சுதாரித்து “ஏய் குட்டி சாத்தான் என கத்திகொண்டே அங்கு வந்தவன் அம்மா இவ பண்ண வேலைய பாரும்மா என காட்ட


மஞ்சு சிரித்து கொண்டே...”என்னடா இது......நீ என்னோமோ அவ மேல தண்ணீ ஊத்றேய்னு எடுத்துட்டு போன...இப்போ நீ தொப்பைய நலஞ்சுவந்து நிக்கிற” என கேட்க


“எல்லாம் இவளால என அவளை முறைத்தவன் ...அவள் முகம் பழிப்பு காட்டி சுழித்ததும்...அதில் மனம் மயங்கி அவள் அருகில் சென்று அவள் தலையை தடவி கொண்டே


“எப்டிடா இருக்க குட்டிமா....உன்ன விட்டு வந்து 6 மாசம் ஆச்சு ...உன்ன ரொம்ப மிஸ் பண்ணேண்டா...”என பாசத்துடன் பேச


அன்னையை விட்டு அண்ணன் மார்பில் சாய்ந்தவள்....... நானுதான் அர்ஜுன்.அங்க ரொம்ப போர் அடிச்சுது என தங்கை உருக...... அங்க ஒரு பாசமலர் லைவ் ஷோ ஓடிகொண்டிருக்க....


என்ன நடக்குது இங்க என கேட்டுகொண்டே வந்த பத்மநாபன் அர்ஜுனை பார்த்ததும்.......


என்ன அர்ஜுன் ....”இப்படி தொப்பலா நனைஞ்சு வந்து நிக்கிற...வீட்டுக்குள்ளே மழை வந்துடுச்சா” என கேட்டுகொண்டே தன் மகளை பார்த்தவர் ...


“சரி...சரி....இனி அடிக்கடி இப்படி புயல்,வெள்ளம்,மழைன்னு வரும்...... என்ன அபிம்மா” என சிரித்து கொண்டே கேட்க்க


மீண்டும் பழைய நிலைக்கு வந்த அர்ஜுன் “அபி உனக்கு எதாவது அறிவிருக்கா ....உன்ன பார்த்ததும் பயந்துட்டேன் ....இனிமேல் இப்படி பண்ணாதடா” என கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான் .


அபி சிரித்து கொண்டே “இல்ல அண்ணா ...உன் சத்தத்தை கேட்டதும் உன்ன பார்க்க கீழே வந்தனா...அப்பத்தான் நீ அம்மாகிட்ட வீர வசனம் பேசிகிட்டு இருந்தியா ....எனக்கே தண்ணீயானு யோசிச்சு....... உடனே பேஸ்ட் எடுத்து அந்த நுரையை அப்படி செட் பண்ணேன் .


பேஸ்ட் வாசத்த வச்சு கண்டு பிடிச்சுடுவேணு நினைச்சேன்...ஆனா நீ அப்படி பண்ணாம்ம மஞ்சுவோட பையன்கிறத ப்ரூப் பண்ணிட்ட” என கண்ணடித்துகொன்டே சிரிக்க...


“இல்லைடா......... நீ இப்பதான ஊர்ல இருந்து வந்திருக்க...அதுநாள் இந்த குரங்கு சேட்டை எல்லாம் பண்ணமாட்டேன்னு நினச்சேன்.......... ஆனா நீ அப்படி இல்ல...........நான் பத்மநாபன் பொண்ணுதான் ப்ரூப் பண்ணிட்ட செல்லம்” எனக் அர்ஜுன் சிரித்து கொண்டே சொல்ல


“அர்ஜுன் அப்பாவ திட்றதா இருந்தா நேரா திட்டிடு...இப்படி குரங்குன்னு என்ன திட்ற மாதிரி அப்பாவ திட்டாத” என அவள் அப்படியே மாத்தி சொல்ல


அர்ஜுன் என்னடா இது என பத்மநாபன் கேட்க.........


“ஐயோ அப்பா......... இவள பத்தி தெரியாதா.....இவ தொல்லை தாங்க முடியாமதான இங்க வந்தேன்.....யாரு இவளை வர சொன்னா...இன்னும் உனக்கு ட்ரைனிங் இருக்கே” என கேட்க


அப்பாதான் வர சொன்னார் ... நீ அவரை கேட்டுக்கோ .......என அவர் மேல் பழியை போட்டு விட்டு


என்ன மஞ்சு எவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கோம்...கொஞ்சம் அந்த சுடு தண்ணீ............ அதான் அந்த காபின்னு ஒரு தண்ணீ கொடுப்பியே...... அதை கொஞ்சம் கண்ல காட்றது என அபி நக்கலாக சொல்ல


திமிராடி உனக்கு..... வந்ததுல இருந்து பார்கிறேன்.....ஓவரா பேசிட்டு இருக்க நீ.......... உன்ன ......... என மஞ்சு அவளை துரத்த அந்த இடம் பூக்கள் பூத்து குலுங்கும் பூங்காவனம்மாக மாறியது .

வீடு என்னும் தோட்டத்தில்


அன்பு பாசம் சந்தோசம்


என்னும் மலர்கள் பூத்து குலுங்கி


மனதிற்கு மகிழ்வை கொடுக்க


அழகான குடும்பமும் நிறைவான வாழ்க்கையும்


நிறைந்த அந்த இடத்தில்


இறைவனும் இளைப்பாற இடம் தேடி


வருவதில் வியப்பென்ன ................