• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் 4

மாலை பொழுது மனதிற்கு இதம் தர சாமி அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு சிறிது நேரம் கண்களை மூடி தன் மனதில உள்ள எண்ணங்களை இறைவனிடம் இறக்கி வைத்து விட்டு மனம் சிறிது லேசாக......... கண்களை திறந்தவள்..... அங்கு தீப ஒளியின் வெளிச்சத்தில்முருகனின் முகம் ஜொலிக்க அதை மனதில் நிரப்பி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார் வனஜா .

“மணி ஏழு ஆக போகிறது ....இன்னும் இவளை காணோம்....”என புலம்பிகொண்டே இரவு உணவுக்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

அலுவலகத்தில் இருந்து நேராக வீட்டிற்கு வந்தவள் ....”அம்மா என்ன பண்றிங்க .....என்னம்மா டிபன் இன்னைக்கு” என கேட்டுகொண்டே சோபாவில் அமர்ந்தாள் ஆருத்ரா.

“உனக்கு பிடிச்ச ஆப்பம்,தேங்காய் பால் ,பாயா ருத்ரா ...குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என சொன்னவள் ....ம் ம் ம் .......ருத்ரா அப்படியே உங்கிட்ட முக்கியமான விஷியம் பேசணும் .அதனால சீக்கிரம் வந்து சேர்” என்றார்.

“என்னம்மா விஷியம்” என யோசனையாக தாயை பார்த்தவள் .....

“நீ நினைக்கிற மாதிரி இல்லைடா ....நல்ல விஷயந்தான்.......”என சொல்லிகொண்டே சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

குளித்து முடித்து விட்டு இரவு உடையில் வெளியில் வந்தவள் ....”அம்மா நான் வந்துவிட்டேன்” என கத்தி கொண்டே அவள் அருகில் சென்று அவளை கட்டி பிடித்ததும் ....”அச்சோ ....ருத்ரா என்ன இது...விடு...”என சலித்த வாரே அவளிடம் இருந்து வெளியே வந்தார்..வனஜா .

“அம்மா இன்னைக்கு நிலா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? ....நம்ம மொட்டை மாடியில் சாப்பிடலாமா” என ஏக்கமாக கேட்க

“சாப்பிடலாமே “....என சிரித்து கொண்டே சொன்ன வனஜா எல்லாவற்றையும் மொட்டை மாடிக்கு எடுத்து வந்தார்.

நிலவின் ஒளியில் தாயின் மடியில் உணவு உண்பது என்பது எவ்வளவு சுகம்.....அதை அவள் அனுபவித்து கொண்டிருந்தாள்.

“இன்று மதியம் நீ சாப்பிடலையா ....சாப்பாடு அப்படியே இருந்தது” என அவளுக்கு ஊட்டி கொண்டே வனஜா கேட்க

“அச்சோ ...அம்மா...சொல்ல மறந்துட்டேன் .இன்னைக்கு AP இன்டர்நேஷனல் போயிருந்தேனா.....அங்கு MD சாப்பிட சொன்னார்.சாப்பிட்டேன்” என அங்கு நடந்ததை ஒன்று விடாம்மல் தன் தாயிடம் சொன்னாள் ருத்ரா.

அமைதியாக கேட்ட வனஜா “அன்று பார்ட்டிக்கு போனேன்னு சொன்னது அவங்களுடையது தான” என கேட்க ...

“ஆமாம்மா ...”என வேகமாக தலை ஆட்டியவள்..........பின்னர் யோசனையுடன் “அம்மா” என்று இழுக்க ....

“இல்ல அப்போ வீட்டுக்கு வந்ததும் அவ்ளோ கோபமாக பேசின ....இன்னைக்கு இப்படி பேசற அதனால கேட்டேன்” என்றார் வனஜா.

“அதில்லமா ...அர்ஜுன் நல்லவர் தான். நான் தான் கொஞ்சம் தவறா புரிஞ்சுகிட்டேன் ......இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன். மீட்டிங் இருந்ததால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு......அவரே வந்து சாரி நேரமாகிடுச்சு னு சொன்னார் தெரியுமா? .... என்கிட்ட அப்படி கேட்கனும்னு அவசியம் இல்லை. ஆனா கேட்டார் என்றவள்

அப்புறம் புதுசா தொடங்க போற தொழிலுக்கு என்னோட ஹெல்ப் வேணுன்னு கேட்டு இருக்காரு” என அவள் பேசி கொண்டே போக

“அதற்கு நீ என்ன சொன்ன” என வனஜா கேட்டார்.

“கண்டிப்பா செய்யறேன்னு சொன்னேன்மா” என்றவள் என் திறமையை நம்பி கேட்கிறார் ..... எப்படி இல்லைன்னு சொல்ல முடியும்” என்றாள்.

“அங்கிள் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான சரின்னு சொன்ன” என வனஜா மீண்டும் கேட்க

“வேகமாக... இல்லம்மா.......அது ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று சொன்னவள் சட்டென்று நிறுத்தி விட்டு தன தாயை நிமிர்ந்து பார்த்து “அம்மா .......”.என அழுத்தி அழைத்தவள்

“இல்லை ருத்ரா அன்று அவர்களை பிடிக்கலை என்று அப்படி பேசினாய்....இன்றோ அவர்களை பற்றி புகழ்ந்து பேசுகிறாய்.தொழில் சம்பந்தமாக எந்த முடிவு எடுத்தாலும் அங்கிளிடம் கேட்காமல் ஏதும் செய்யாதே “.....என்றார்.

“நான் அங்கிளிடம் சொல்லிடுவேன்மா” என அவள் மெதுவாக சொல்ல

“அதற்கு சொல்லலை ருத்ரா....... உனக்கு எதற்கெடுத்தாலும் அவசரம். ஒருத்தரை பற்றி தெரியாமல் தவறாக பேச கூடாது . அப்போது தவறாக தெரிந்தவர் இப்போது அவர் நல்லவராக தெரிகிறார்.”...இப்போ புரிகிறதா ....இனி இந்த மாதிரி யாரையும் பேசாத என அறிவுரை சொல்லவும்

“அம்மா இப்போ நீங்கள் என்ன சொல்ல வறீங்க” என அவள் வேகமாக கேட்க

“பாரு இப்பதான் சொன்னேன் .எதற்கு இந்த வேகம். இது தான் எனக்கு பயமே .......இங்க பாரு ருத்ரா உனக்கு எவ்ளோ தான் திறமை இருந்தாலும் உன்னோட அவசர புத்தியினால் அது பயனில்லாமல் போய் விடும்” என கவலையாக பேச

“அம்மா என்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.உங்களுக்கு தலை குனிவோ ,வருத்தமோ ஏற்படற மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேன்” என கூறியவள்

“அம்மா நான் உங்கள் மகள் கண்டிப்பாக எந்த தவறான செயலும் என்னால் ஏற்படாது” என அவள் கன்னத்தை கிள்ளி கொண்டே சொன்னவள்.... “ஏதோ முக்கியமான விஷியம் பேசணும்னு சொன்னிங்களே ..என்ன அது “என பேச்சை மாற்றினாள்.

ம்ம் அதான் “உனக்கு திருமணம் செய்யலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.ஒரு ஜாதகம் வந்திருக்கு” என அவர் ஆரம்பிக்க

“அம்மா எனக்கு இப்போ திருமணதிற்கு என்ன அவசரம்....இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா ...உன்கூட நான் இந்த மாதிரி நிறைய நேரம் செலவழிக்கணும்....உனக்கு நிறையா செய்யணும்” என அவள் கனவுலகிற்கு செல்ல

“ருத்ரா இது கேட்க நல்ல தான் இருக்கு.ஆனா ஒரு அம்மாவா எனக்கு இது எல்லாம் பெரிய சந்தோசம் அல்ல ...உன்ன நல்லபடியா திருமணம் செய்து கொடுத்து நீ சந்தோசமா வாழ்றத பார்க்கணும் .அதான் எனக்கு சந்தோசம் “ என்றார்.

“என்னமா நீங்க....எல்லா அம்மா மாதிர்யே டயலாக் பேசறிங்க...என் அம்மா வித்தியாசமான அம்மான்னு நான் பெருமையா நினச்சுட்டு இருக்கேன்” என அவள் பேச்சை மாற்ற

“ருத்ரா நீ பேச்சை மாத்தாத.....நீ என்ன ஐடியாவுள இருக்க ....உன் மனதில் எது இருந்தாலும் எங்கிட்ட வெளிப்படையா சொல்லிடு ....நீ மட்டும் தான் எனக்கு உயிர் ....அதைவிட எனக்கு வேற எதுவும் பெருசு இல்ல” என அவர் கூற

கண்களில் கண்ணீர் நிரம்ப தன் தாயை நிமிர்ந்து பார்த்தவள் “அம்மா எனக்காக நீ எவ்ளோ துன்பங்களை தாண்டி வந்திருகேன்னு எனக்கு தெரியும்மா .இதுவரைக்கும் நான் கேட்பதற்கு முன்னடியே நான் நினைப்பதை நீங்க செஞ்சுடுவிங்க...அதே மாதிரிதான் இதுவும்.....உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்ங்க” என்றவள் “எனக்கு தூக்கம் வருகிறது வாங்க போலாம்” என கூறி விட்டு வேகமாக முன்னே நடந்தாள்.


மகளின் வார்த்தைகல் மனதில் பதிய என் மகள் என்ற பெருமை முகத்தில் ஜொலிக்க ....வானத்தை பார்த்துகொண்டே அப்படியே அமர்ந்திருந்தார் வனஜா.

தனிமையில் இருந்து நிலவை ரசிக்கும்போது நினைவுகள் தடம் மாறுவது இயற்கை தானே.

மனதில் பூட்டி வைத்த எண்ணங்கள் மடை திறந்த வெள்ளம் போல் கொட்ட ,நிலவு மகளும் அதை அமைதியாக உள் வாங்கி கொள்வது இயற்கை நமக்கு அளித்த கொடை அல்லவா....

சந்தோஷ உணர்வுகள் ,மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்து உணர்வுகள் என பாரபட்சம் இல்லாமல் கொட்டி தீர்ப்பது இது போல் தனிமையில் தான்.....

இதை தான் வைரமுத்துவும்
“வானம் எனக்கு ஒரு போதி மரம்
நாளும் எனக்கு அது சேதி தரும்”
சொல்லி இருக்கிறார்.

மொட்டை மாடியில் அமர்ந்திருந்த வனஜாவின் எண்ணங்கள் பலவண்ணங்களாக பிரிந்தது .

ரகுநாதன் வனஜா திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சியக்கபட்ட திருமணம் தான்.இருவரும் அந்தஸ்த்தில் சரி நிகர் தான்.ஆனால் வனஜா வீட்டில் எல்லாமே அசையா சொத்துகளாக இருந்தது. ரகுநாதன் வீட்டில் பெரிய அரண்மனை போன்ற வீடு, கார்கள், எஸ்ட்டேட் என கொஞ்சம் ஆடம்பரமான சொத்துக்கள். அவர்களது எண்ணங்களும் அப்படிதான்.

கிராமத்தில் பாசமும் ,மண்ணின் வாசமும் நிறைந்த இடத்தில் வளர்ந்த வனஜாவிற்கு இந்த சூழ்நிலை புரிந்து தன்னை நிலை படுத்தி கொள்வதற்கே வெகு நாள் ஆனது,

ரகுநாதன் தன் மனைவியின் மேல் உயிரே வைத்து இருந்தார்.அதனால் அங்கு இருப்பவர்களை பற்றி வனஜா கவலை படவில்லை.அவர்களது சந்தோஷ வாழ்கையின் அடையாளம் ஆருத்ரா ஜனனம் ஆனதும் இன்னும் அதிகமானது.

நிலையில்லா வாழ்வில் இது தான் நிரந்திரம் என்று நினைத்து வாழ ஆரம்பித்து விட்டால் ஏற்ப்படும் இழப்புகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

ரகுநாதனின் எண்ணமும் அது போலதான்.அவர் எந்த அளவு பாசமானவரோ அந்த அளவு அவசரகாரரும் கூட. இதை பல தடவை வனஜா எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை.தொழிலில் நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில் அவருடன் இருந்த சிலர் அவரை தூண்டிவிட தொழிலில் அதிக முதலிடு செய்ய ஆரம்பித்து விட்டார்.

பல இடங்களில் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்தார்.தொழிலில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் தான்.வனஜாவிற்கு தொழிலை பற்றி ஒன்றும் தெரியாது.ரகுநாதன் எது சொன்னாலும் நம்புவாள். ரகுவும் வனஜாவிற்கு எந்த துன்பமும் வராமல் பார்த்து கொண்டார்.

தொழிலில் இறங்குமுகம் வரவும் ரகுவால் தாங்க முடியவில்லை.அதை சமாளிக்க இருக்கின்ற எல்லா சேமிப்புகளையும் தொழிலில் முதலீடு செய்தார்.மீண்டும் ஓரளவிற்கு தேறி வரும்போது அவருக்கு கெட்ட நேரமும் கூட வந்தது.

ம்ம்ம் அது மட்டும் நடந்திருக்காவிட்டால் இன்று என் மகள் இருக்க வேண்டிய இடமே வேற என மனதில் நினைத்தவள் .அந்த நினைவுகளை .....

மறக்கத்தான் நினைக்கின்றேன்,
நிலை மாறி விடுமா என்று தவிக்கின்றேன்,
நினைவுகளின் தவிப்புகளால் அவள் துடிக்க,.........
நம்மால் முடியும் நான் இருக்கிறேன் ,
சொல்லாமல் சொன்னது மகளின் அணைப்பு .


“என்னம்மா...பழைய நினவுகளா......” என தன் தாயை அவள் தோளோடு அணைத்து ஆருத்ரா நின்ற போது வனஜாவின் மன ஓட்டத்தை அளவிட முடியும்மா என்ன...


கொட்டும் மலையில் மகளின் அரவணைப்பில் தாயின் நெஞ்சம் தஞ்சம் அடைய மழை நீரோடு அவளின் மன கவலைகளும் கரைந்து கொண்டிருந்தது.


கீழே வந்து படுத்த ஆருத்ரா இடி மின்னல் சப்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க .....வனஜா அறையில் இல்லை என்றதும் அம்மா இன்னும் மேல என்ன செய்யறாங்க என மேலே வந்தவள்....... தன் நிலை மறந்து வனஜா எண்ண ஓட்டத்தில் மூழ்கி இருக்க........ அங்கு வந்து ஆருத்ரா தன் தாயை பார்த்ததும் அவரின் நிலை புரிந்து கொண்டு அவரை தன் தோளோடு அணைத்து கொண்டு வீட்டிற்க்குள் சென்றாள்.


ஆடிட்டர் அலுவலகம் ரொம்ப பிசியாக இயங்கிகொண்டிருந்தது.”ஷோபா அந்த VV கார்ப்பரேஷன் அக்கௌன்ட்ஸ் எல்லாம் முடிச்சுட்டியா.......,மணி எங்க போனான்...... இந்த டாகுமென்ட் ஜெராக்ஸ் எடுத்துட்டு வர சொல்லு” என நிற்க நேரமில்லாமல் வேலைசெய்து கொண்டு இருந்த ஆருத்ராவை ,தொலைபேசி அழைப்பு இடையுறு செய்ய ..


அதை காதில் வைத்தவள்......... குட் மார்னிங் ...என்ன மேடம் வரேன்னு சொன்னிங்க ....ஆளவே காணோம் என்று என எதிர்புறத்தில் இருந்து கேள்வி வர, வேலை அவசரத்தில் “ஏய் மிஸ்டர் யார் நீங்க.....சம்பந்தம் இல்லாம பேசறிங்க...ராங் நம்பர்” என கூறி தொலைபேசி அணைப்பை அணைத்தாள்.


எதிர்புறத்தில் இதை கேட்ட அர்ஜுன் கண்கள் கோபத்தில் துடித்தது.”என்ன நினைச்சிகிட்டு இருக்கா இவ மனசுல...........நானும் போன போகுதுன்னு இறங்கி போனா ரொம்ப துள்ரா............இருக்கட்டும் இப்ப தெரியும் நான் யாருன்னு....... “என மீண்டும் அழைத்தான்.


இங்கு ஆருத்ராவுக்கோ அர்ஜுனின் தொலைபேசி எண் தெரியாது. பேசியபோது அவனும் அர்ஜுன் பேசுகிறேன் என்று கூறவில்லை.அதனால் அவள் ராங் நம்பர் என்று எண்ணி அதை கட் செய்தாள்.


அலுவலக தொலைபேசி அழைக்க அதை எடுத்து காதில் வைத்தவள் ,”ஆருத்ரா என்னமா இது......நம்ம கிளையண்ட்ஸ் கிட்ட எப்படி பேசறதுன்னு மரியாதை தெரிய வேண்டாமா.....நான் உங்கிட்ட பல தடவை சொல்லிருக்கேன்.....உன்னோட அவசர புத்தியினால் எவ்ளோ பிரச்சனை பாரு....நானே நேத்து AP இன்டர்நேஷனல் வேலையை முடிச்சுட்டு வந்திருப்பேன்.இப்போ அவர் கூப்பிட்டு எங்கிட்ட ரொம்ப வருத்த படறார்.....”என ராமநாதன் கோபமாக சொல்ல......


“என்னாச்சு சார்”.... என கண்களில் கண்ணீருடன்,அதே சமயத்தில் இதுவரை திட்டாத அங்கிள் இப்போ திட்டுகிறாரே என வருத்தத்துடன் கேட்க.....


“AP இன்டர்நேஷனல் இருந்து போன் பண்ணாங்களாம்...நீ ராங் நம்பர்னு சொல்லி கட் பண்ணியாம்” என அவர் சொல்லவும்


அப்போது தான் ஆருத்ராவுக்கு புரிந்தது...தனக்கு வந்த அழைப்பு அர்ஜுனடமிருந்து என்று.....ஒரு நிமிடம் சுள்ளென்று கோபம் வர பின்னர் அதை கட்டுபடுத்தியவள்....”சாரி சார்......இனி இந்த தப்பு நடக்காம பார்த்துகிறேன்” என கூறி அலைலைபேசியை கீழே வைத்தாள்.


முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வேகமாக கிளம்பியவள் தன் தாயின் முகம் நினைவிற்கு வர...கோபத்தை குறைத்து கொண்டு AP இன்டர்நேஷனல் அடைந்தாள்.


ஆருத்ரா வந்திருக்கும் செய்தி அர்ஜுனுக்கு செல்ல அது வரை கோபத்தில் இருந்தவன் அவளை பார்க்கபோகிறோம் என்று தெரிந்த உடன் கோபம் குறைந்து குதூகலம் மனதில் குடியேறியது.


அவளை தனது அறைக்கு வர சொன்னவன் ,தனது இருக்கையில் அமர்ந்து முகத்தில் புன்னகையுடன் “வாங்க மேடம்”என அழைக்க முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவன் முன் அமர்ந்தாள் ஆருத்ரா.


“குட் மார்னிங் சார். இந்தாங்க நீங்க கேட்ட விபரங்கள் “என ஒரு பைலை அவனிடம் நீட்ட


அவள் முகத்தை பார்த்துகொண்ட அந்த பைலை வாங்கியவன்,”நம்ம கொடுத்த ஷாக் ரொம்ப வேல செஞ்சுச்டுசோ யோசித்தவன்......பின்ன என்ன திமிர் இருந்தா என்ன ராங் நம்பர்னு சொல்லுவா .....நான் அவளே நினைச்சுட்டு இருக்கேன்....இவ என்னடானா என் நினைப்பே இல்லாம இருக்கா” என மனதில் தன் செய்த செயலுக்கு தானே சமாதனம் சொல்லி கொண்டவன்.....


அந்த பைலை பார்த்து விட்டு ...” ஓகே ரொம்ப தேங்க்ஸ் ....அப்புறம் என்ன சாப்பிடறிங்க” என கேட்டான்.


“மன்னிக்கணும் சார்.எனக்கு வேலை இருக்கு......நான் கிளம்பறேன் என”சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தாள் ஆருத்ரா.


உடனே அவன் “என்னாச்சு ...அதுக்குள்ள கிளம்பறிங்க .....நான் புதிய தொழில் சமபந்தமா பேசணும்னு சொல்லிருந்தேன் இல்லயா” என கேட்கவும்


“அது நீங்க எங்க பாஸ் கிட்ட கேட்டுக்குங்க சார்” என கூறி விட்டு கதவை நோக்கி நடந்தாள்.


“ஆருத்ரா நில்லு.....உன்ன அங்கிள் எதாவது சொன்னாரா” என அவன் கேட்க ....


“உனக்கு தெரியாதா.......அங்கயும் போட்டு கொடுத்துட்டு ...என்கிட்டயும் நல்ல பையன் மாதிரி நடிக்கிறிய நீ” என அவள் கண்களால் கேட்க


“உன்ன வேற எப்படியும் வரவைக்க முடியாது....அதான் இப்படி”....என அவனும் அவளது பாணியில் பதில் சொல்ல


அவனை முறைத்தவள்.....”இங்க பாருங்க மிஸ்டர் அர்ஜுன்” என ஆரம்பிக்க


“EXCUSEME “ என கேட்டுகொண்டே அகில் உள்ளே வரவும் அமைதியானாள் ஆருத்ரா.


“டேய் மச்சான் நீ தெய்வமடா என மனதில் அகிலை பாராட்டியவன்.....அகில் வாடா என்றான்.



உள்ளே நுழைந்தவன் அர்ஜுனை முறைத்து கொண்டிருக்கும் பெண்ணை கேள்வியை பார்க்க ...உடனே சுதாரித்த அர்ஜுன் .....ம்ம் அகில் இவங்க மிஸ் ஆருத்ரா CA முடிச்சுட்டு நம்ம ஆடிட்டர் கிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டு இருக்காங்க “ என அறிமுகபடுத்ததினான்......


உடனே அகில் “ஹலோ” என்றவன் .......அர்ஜுனிடம் திரும்பி அந்த டேக்ஸ் மேட்டர் பத்தி பேசிட்டியா எனக் கேட்டான்.



அதுக்காகத்தான் இவங்களை வரசொன்னேன் அகில்......இப்ப நீயும் வந்துட்ட ...இப்பவே பேசிடலாமா என அவளை பார்த்து கொண்டே சொன்னான் அர்ஜுன்....இப்பவாவது என்னை நம்புகிறாயா என்பது போல அவன் பார்வை இருக்க ...........


“பேசிடலாம் அர்ஜுன்....முக்கியமான மேட்டர் இல்லயா ....தாமதிக்க வேண்டாம்” என்றான் அகில்.


அந்த சமயத்தில் நான் கிளம்புகிறேன் என்று சொல்ல முடியாமல் ஆருத்ரா தடுமாறிகொண்டிருக்க .....


அப்போது “ஒரு நிமிடம் வெயிட் பண்ணு......நான் பிஏகிட்ட கொஞ்சம் இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்துட்டு வந்துவிடுகிறேன் “ என அகில் வெளியில் செல்லவும் ...


அர்ஜுனோ “அடபாவி இந்த நேரத்தில தனியா விட்டுடு போறியேடா “என மனதில் புலம்பிபடி ஆருத்ராவை பார்க்க ......


அர்ஜுனை திரும்பி முறைத்தவள் அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அகிலும் வந்து விட மூவரும் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.


“சார் உங்க அப்பா கடந்த சில வருடமா லாபத்தில் ஐந்து பங்காக பிரித்து அதில் உங்க நான்கு பேர் பங்கு மட்டும் கணக்கில் கொண்டு வந்து விட்டு கணக்கில் வராத கணக்காக அந்த ஒரு பாகம் இருக்கிறது. அதையும் கணக்கில் கொண்டு வந்தால் தொழிலை விரிவு படுத்த நீங்கள் வங்கியில் கடன் வாங்குவதற்கும் உதவியாக இருக்கும்” என ஆருத்ரா சொல்ல .......


“அப்படியா......நான் என் தந்தையிடம் கேட்கிறேன்.வேறு என்ன பண்ணலாம் சொல்லுங்கள்” என கேட்டான் அர்ஜுன்.


“அர்ஜுன் வீவீயங் பாக்டரி ஆரம்பிக்க நம்ம ரூரல் ஏரியாவ தேர்ந்தெடுத்தமனா அதுக்கும் நமக்கு சலுகைகள் கிடைக்கும்” என அகில் சொல்லவும்


“ஆமா அகில் சார் ...இதுவும் சரியான ஐடியா தான்..........நிறைய சலுகைகள் உண்டு” என ஆருத்ராவும் ஆமோதிக்க ....


“சரி...சரி அப்படியே பண்ணலாம்.....அப்புறம் “என அரம்பித்தவன் தொலைபேசி அழைப்பு பேச்சை நிறுத்தி விட்டு...... அதை காதில் வைக்க......”இதோ வந்தறேன்மா ....கொஞ்சம் வேலை அதான்......மறக்காம கூட்டிட்டு வந்தறேன்” என பதில் சொல்லி விட்டு அலைலைபேசியை அனைத்தான்.


“சரி ....இன்னைக்கு இது போதும்.......நாளைக்கு மறுபடியும் இத பத்தி பேசலாம்” என கூறியவன்........


“இல்ல .........எனக்கு நாளிக்கு வேலை இருக்கு ” என ஆருத்ரா ஆரம்பிக்க .


“நான் அவசரமா கிளம்பனும்.....மிஸ் ஆருத்ரா நாளை பேசிக்கலாம் ” என அவளை பேச விடாமல் தானே பேசிகொண்டிருந்தவன்
“ஆமா உங்களை ட்ராப் பண்ண சொல்லட்டுமா “என அவளிடம் கேட்டதும்.....


அவள் எதுவும் பேசாமல் ....வெளியே செல்ல ......


ஹப்ப்பா ...என தன்னை அறியமால் பெருமூச்சு விட்டு கொண்டே தனது இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான் அர்ஜுன்.


இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அகில்” என்னடா நடக்குது இங்க “எனக் கேட்க ...


“டேய் நீ இங்க தான் இருக்கியா” ..... என விழித்தவன்....


“சரி...சரி...வா வா ...அம்மா உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க.”.... என பேச்சை மாற்றினான்.


“என்னடா விஷேசம் இன்னைக்கு” என கேட்டான் அகில்.


“நம்ம அபி வந்திருக்கால ...அதான் “என கூறிகொண்டே அவனை இழுத்து சென்றான் அர்ஜுன்.


அபி என்ற வார்த்தையை கேட்டதும் அகில் முகத்தில் ஒரு மாற்றம்.....அது சந்தோசமா...வருத்தமா அவனுக்கே தெரியவில்லை ....அர்ஜுனும் கவனிக்க வில்லை.


“இல்ல அர்ஜுன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு.....நான் இன்னொரு நாளைக்கு வரேன்” என கூறிவிட்டு அவன் கையை உதறி விட்டு மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தான் அகில்.


“மனம் நிலையில்லாமல் தவிக்க ,மூளைக்கும் மனதிற்கும் நடுவில் நடந்த போராட்டத்தில் அவன் தத்தளிக்க, எண்ணங்களின் ஓட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் நிலை தடுமாறி நின்றான் அகில்.


மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களுக்கும்


உருவம் கிடைத்து விட்டால்


வாழ்க்கை பயணத்தில் சுவாரசியமே இருக்காது

இதுவும் கடந்து போகும் என்னும் எண்ணமே


இன்றிய மனித வாழ்விர்க்கு அச்சாணி


வாழ்வின் நேரத்தை தன வசமாக்கி கொண்டால்


எல்லா நாளும் இனிய நாளே .............
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஆஹா ருத்ரா, அர்ஜுன் ரெண்டுபேரும் ஒரே டிஸும் டிஸும் தான், அகில் வேற அபியை பார்க்க தயங்குறான் என்னமோ இருக்கணுமே 😁😁😁😁😁😁
 
  • Love
Reactions: Relay Stories

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
ஆஹா ருத்ரா, அர்ஜுன் ரெண்டுபேரும் ஒரே டிஸும் டிஸும் தான், அகில் வேற அபியை பார்க்க தயங்குறான் என்னமோ இருக்கணுமே 😁😁😁😁😁😁
என்ன இருக்கும்
தேங்க்யூ மா