• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 05

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் 5

அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்த மஞ்சு “அகில் ...வா...வா ....ஏன்டா அர்ஜுன் கூப்பிட்டதுக்கு வரலைனு சொன்னியாமா? “ என கேட்டு கொண்டே டைனிங் டேபிளில் அவனக்கும் உணவு எடுத்து வைக்க சென்றார்.....

“அப்படி எல்லாம் இல்ல அத்தை ...கொஞ்சம் வேலை அதான் வரமுடியலை என இழுத்தவன்.....அர்ஜுன்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கணும்...ரொம்ப அவசரம் ...அதான் நானே வந்தேன்.... இந்த பைல் உடனே அனுப்பி ஆகனும்.”என்றபடியே உள்ளே வந்தான்.

அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு அர்ஜுன் சாப்பாட்டில் இருந்து எழுந்து வந்து ...”என்னாச்சு அகில்...போன் பண்ணிருந்த நானே வந்து இருப்பேன்ல..... நீ எதுக்குடா சிரமபட்ற என்றவன் எதுல சைன் பண்ணனும்” எனக் கேட்டான்..




“பரவாயில்லைடா .... எனக்கும் வேலை இல்லை” என்றவன்

“நேற்று ராம் இண்டஸ்ட்ரிக்கு ஒரு கொட்டேஷன் தயார் பண்ணணும்ல...இன்னைக்கு தான் கடைசி தேதி ...அதான் உடனே அனுபிடலாம்னு வந்தேன் ” என வாய் சொல்லி கொண்டிருக்க,கண்கள் வீடு முழுவதும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அவன் கண்கள் பல இடங்களில் அலைபாய ....ஆனால் இரண்டு கண்கள் அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவன் “சரி அத்தை நான் கிளம்புகிறேன்” என கிளம்ப......

“என்ன அகில் சாப்பிடாம போற....வா...வா வந்து சாப்பிடு” ‘ என மஞ்சு அழைக்கவும்

“இல்ல அத்தை நான் சாப்பிட்டேன்....நேரமாகிடுச்சு கிளம்பறேன் இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுகிறேன்” என்றான்.

“அகில் பொறு நம்ம அபி வந்திருக்கா.....அவளை கூட பார்க்காம போற ....இரு அவளை கூப்பிடறேன்”....என சொல்லி விட்டு

“அபி இங்க வா...அகில் வந்திருக்கன் பாரு”...என தன் மகளை அழைத்தார் மஞ்சு .....

“அம்மா நான் குளிச்சிட்டு வந்தறேன்” என பதில் மட்டும் வெளியே வர

ஒரு நிமிடம் முகம் சுருங்கியவன் பின்னர் .ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அங்கு ஒரு மனமோ....”ஆமா பெரிய இவன்...என்ன பார்க்க வருவான்னு எவ்ளோ ஆசையா காத்துகிட்டு இருந்தேன்.வேலை இருக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டான்.இப்போ துரை வந்த உடனே நான் போய் தரிசனம் கொடுக்கணுமா ....கிடக்கட்டும்” என புலம்பி தள்ள ...

மஞ்சு அகிலிடம்...”நீ சாப்பிடதான் இல்ல...இந்தப்பா அபிக்கு பிடிக்குனு பால்கோவா செஞ்சேன்...இதாவது சாப்பிடு” என கொடுக்க ...மறுக்க முடியாமல் அதை வங்கி கொள்ள

அதற்குள் “அகில் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு...நான் ஈவ்னிங் ஆபிஸ் வரேண்டா” என கூறிவிட்டு அர்ஜுன் செல்ல ....பால்கோவா கப்போடு சோபாவில் அமர்ந்தான் அகில் .

வெகு நேரம் ஆகியும் அபி வெளியே வராததால் கோபமடைந்த அகில் ....”அத்தை எனக்கு ரொம்ப நேரமாகிடுச்சு ...நான் கிளம்பறேன்” என கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் விருட்டென்று வெளியே வந்தான்.

வெளியே வந்ததும் ஒரு நிமிடம் கண்களை மூடி தன்னை நிலை படுத்தி கொண்டவன் ...தன் வாகனம் இருக்கும் இடத்தை நோக்கி நகர

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க ...துடிக்க...

என்ற பாடல் கேட்கவும் ....பாட்டிற்கு உரியவர் யார் என தெரிந்தும் ஆத்திரம் கண்ணை மறைக்க திரும்பி பார்க்காமலே சென்றுவிட்டான்.

பாடிய உருவமோ “இதுக்கே கோப பட்ட எப்படி மாமு....இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லயே “என வாய்க்குள் முனகிய படியே வீட்டுக்குள் சென்றது.

தனது அலுவலக அறைக்கு வந்த பின்பும் அகிலிற்கு கோபம் குறையவில்லை .”என்ன ஒரு திமிர்...இன்னும் அவளுக்கு அது குறையல...அப்படியே இருக்கு” என தனக்குள் குமுறியவன் .....

அங்கு இருக்கும் கண்ணாடி முன்னால் போய் நின்றதும் ......”ஏன் அகில் இந்த கோபம் எதனால்......யாருக்காக.....” என்று கண்ணாடியில் இருக்கும் அந்த உருவம் நக்கலாக கேட்க...

சற்று அதிர்ந்து கண்ணாடியை பார்த்தவன்”......இல்ல...இல்ல...நான் அர்ஜுன்கிட்ட சைன் வாங்க தான் போனேன்.அவங்க தான் அபிய கூப்பிட்டாங்க...என் நேரத்தையே விரயமாக்கிட்டாங்க அதான் கோபம்” என சொல்ல

கண்ணாடியில் இருந்த உருவம்”அது மட்டும் தானா .....இல்லை எதையோ நம்பி போனவன் அது நடக்கவில்லை என்ற ஏமாற்றம் ....அதனால் வந்த கோபம் போல் தெரிகிறதே” எனக்கேட்க....

“அப்படி எல்லாம் இல்ல....போகணும்னு நினைச்சிருந்தா அர்ஜுன் கூப்பிடும்போதே போயிருப்பனே.....இப்போ வேலை விஷியமா போக வேண்டியதா போச்சு ...அதனால்தான்..... என்னை பத்தி எனக்கு தெரியும் யாரும் சொல்ல வேண்டாம்” என வேகமாக சொல்லி கொண்டே வெளியே வந்தவன் தன்இருக்கையில் அப்படியே கண் மூடி அமர்ந்தான்.


அங்கு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த மகளை முறைத்த மஞ்சு .”உனக்காக அகில் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணான்.இப்ப வர நீ” என முறைத்தவள்

‘‘ ...”அம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு போடறியா என மகள் கேட்டவுடன் மற்றது மறந்து போக வா...வா...உனக்கு பிடிச்சது எல்லாம் சித்து வச்சிருக்கேன் .நல்ல சாப்பிடுடா என்றவர் மகள் விரும்பி சாப்டுவதை பார்த்ததும்

நான் அப்பவே சொன்னேன் ...வெளிநாடு எல்லாம் வேண்டாம்னு கேட்டியா..... ..இப்படி துறும்பா இளச்சு போய் வந்திருக்க....எல்லாம் உனக்குதான் அபி என சுற்றிலும் இருக்கும் காய்கறி கனிகள் அனைத்தையும் , சாதத்துடன் தனது அன்பையும் சேர்த்து பரிமாறினார் அவள் அன்னை.

அன்னையின் அன்பில் மனம் நிறைய...... .கைபக்குவத்தில் வயறு நிறைய மன நிறைவுடன் சாப்பிட்டு எழுந்தவள் “அப்பா எங்கம்மா காணோம் என்று கேட்கவும் ....அவர் அறையில் இருக்கிறார் அபி” .என கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தார் மஞ்சு.

அப்பாவின் அறை வாசலில் நின்றவள் ஒரு நிமிடம் தான் எடுத்த முடிவு சரிதானா என தன் மனதிடம் கேட்டு கொண்டு.....இனி எது நடந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் என முடிவுடன் உள்ளே நுழைந்தாள் அபி.

அபியை பார்த்ததும் பத்மநாபன் “ வா அபி....சாப்பிட்டியா ....கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்றார்.……

“இப்பதான்பா சாப்பிட்டு வரேன்.அப்பா உங்க உடல்நிலை இப்போ எப்படி இருக்கு...சர்க்கரைக்கு மாத்திரை சரியாய் எடுத்துகிறீங்கலா” என பாச மகளாய் விசாரிக்க...

அவரோ மகளின் அன்பில் மனம் கரைந்து “எனக்கு ஒன்னும் இல்ல அபிம்மா....எல்லாமே நார்மல்....நான் சூப்பரா இருக்கேன் ” என தன் கைகளை தூக்கி காட்ட....

“ஹா ஹா ஹா ...என்னப்பா இது...இன்னும் நீங்க அந்த பழக்கத்தை இன்னும் விடலையா “என சிரித்துகொன்டே அவர் மடியில் தலை வைத்தாள்

தாய் மடியில் உறங்கும் கன்றாய் மகள் இருக்க அவள் படுத்திருக்க அப்போது “அபிம்மா இந்த நான்கு வருட பிரிவு உனக்கு நிறய அனுபவத்தை கொடுத்திருக்கலாம் .... நிறிய மாற்றம் உனக்குள் ஏற்பட்டு இருக்கலாம்.....ஆனால் உன் அப்பா அப்போ எப்படியோ அதை போல் தான் இப்பவும் இருக்கேன்.... நீ எப்பவும் போலவே என்கிட்டே பேசலாம்.....சரி சொல்லு....இப்போ அப்பா உனக்கு என்ன செய்யணும்?” ......என அவள் தலையை வருடியவாறே அவர் கேட்கவும்

“அவர் மடியில் இருந்து டக்கென்று எழுந்தவள் ....ஆனாலும் அப்பா நீங்க இவ்ளோ ஷார்ப்பா இருக்க கூடாது” என சிரித்து கொண்டே சொன்னவள்

“அப்பா என் பேஷன் டிசைன் கோர்ஸ் படிப்பு முடிந்து ப்ராஜெக்ட் மட்டும் இருக்கு.நான் மெட்டீரியல் சம்பந்தமா ப்ராஜெக்ட் பண்ணலாம்னு இருக்கேன்.அதுக்கு கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு நான் போகணும்” என சொல்லி நிறுத்தினாள்.
.
அவரோ “அபி நீ விருப்பபட்டேனு தான் அந்த கோர்ஸ்க்கு சரின்னு சொன்னேன். மற்றபடி நீ வேலைக்கு போகணும்னு எந்த அவசியமும் இல்லை ..... அதான் படிப்பு முடிந்தது இந்த ப்ராஜெக்ட் எல்லாம் வேண்டாம்.....வீட்ல கொஞ்ச நாள் அம்மாவுக்கு துணையா இருக்கலாம்ல .உங்களை எல்லாம் பிரிஞ்சு அவ ரொம்ப வேதனை பட்டுடா......கொஞ்ச நாளைக்கு வீட்ல அம்மா கூடவே இருடா” என மகளிடம் பொறுமையாக கூற ..

அப்போது “நல்லா சொல்லுங்க ...நீ ஒன்னும் வேலைக்கு போய் சம்பாரிக்க வேண்டாம்.முதல்ல வீட்ல இருந்து வீட்டு வேலைய கத்துக்க ....இன்னும் ஒரு வேலையும் உருப்படியா செய்ய தெரியாது...அன்னைக்கு தக்காளி சாதம் நல்ல இருக்கானு கேட்டா புளி சாதம் சூப்பரா இருக்குமானு சொல்றா...கேட்டா இரண்டும் புளிப்பாதான இருக்குதுன்னு பதில் சொல்றா....இவள என்ன செய்யறது” என வேலையயை முடித்து அறைக்குள் நுழைந்த மஞ்சு அவர்களின் பேச்சில் காதில் விழ தன் பங்கிற்கு அவளை பற்றி கணவரிடம் புகார் வாசிக்கவும்



பத்மநாபன் சிரித்து கொண்டே “அவ சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பா மஞ்சு” என மகளுக்கு சப்போர்ட் செய்யவும் ...



“நீங்க என்ன சொன்னாலும் சரி...அவ வீட்லதான் இருக்கனும்...இருந்து சமையல கத்துக்கட்டும்....நீங்க இந்த விஷியத்துல தலையிடாதிங்க” என மஞ்சு கறாராக கூறிவிட்டார்


அப்போது “அய்யகோ!!!!!! என்ன கொடுமை!!!!!!!!!......ஒரு இருபது வயது இளம் பெண்ணை வீட்டு சிறையில் வைத்து சமையல் வேலை என்று கொடுமை படுத்துவதா......வர வர உன் அடாவடிதனத்திர்க்கு அளவே இல்லாமல் போய் விட்டது மஞ்சு .இனியும் பொருத்து கொள்ள மாட்டாள் இந்த அபி ...

அப்பா என்ன இது .....நீங்களும் இதற்க்கு ஒத்துகொள்கிறீர்களா?...உங்கள் அன்பு மகள்...ஆசை மகள்...செல்ல மகள் வீட்டு சிறையிலா ....இதை கேட்க யாரும் இல்லயா ...”என நாடகபாணியில் இடை விடாமல் அவள் பேசவும் ...

மகளின் குறும்புதனத்தில் வாய்விட்டு சிரித்த பத்மநாபன் “அபி போதும்..போதும் ...நீ நாளைக்கே நம்ம கார்மென்ட்சக்கு போ ....நான் அர்ஜுன் கிட்ட பேசறேன்” என்றார்.

பின்னர் மனைவியிடம் திரும்பி “மஞ்சு உனக்கு எதுக்கு இந்த விஷ பரிட்சை....அவளை அவ போக்குல விடு .....கொஞ்ச நாள்ல எல்லாம் சரி ஆகிடும்” என கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆனார் பத்மநாபன் .

அப்பாவின் அனுமதி கிடைத்த சந்தோசத்தில் தன் அம்மாவை பார்த்து கண்களை உருட்டி வாயை குவித்து.....”என்ன மஞ்சு டார்லிங் ...எப்போதும் போல இந்த முறையும் உன்னோட கேஸ் ரிஜெக்ட் ஆகிடுச்சு” என கூறி பழிப்பு காட்டி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள். பின்னே இருந்தால் மஞ்சுவின் அக்னி பார்வையில் எரிந்து விடுவோம் என்று அவளுக்கா தெரியாது.

மறுநாள் காலை கிளம்பி தன் அறையை விட்டு வெளியே வந்தவள் ....தனக்கு முன்னே அர்ஜுனும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை பார்த்து......”அடடா!!!!!!!!....அர்ஜுன் நீ முன்னடியே வந்துட்டியா ...அப்போ எனக்கு எதுவுமே இருக்காதே” என சொல்லி கொண்டே “அம்மா என்ன டிபன்” என கேட்டு கொண்டே நாற்காலியில் அமர

“இட்லி.தோசை. பொடி... என ஆரம்பித்த மஞ்சு ...ஏய் கையை கழுவாம சாப்பிட உட்காரதனு எத்தன தடவ சொல்லிருக்கேன் ...போய் கையை கழுவிட்டு வா” என விரட்ட....

“அச்சோ இது வீடா...இல்ல மில்ட்டரி ஹோட்டலா.....அதைதொடாத...இதை செய்னு சேச்சே.....அம்மா வர வர உன் அராஜகம் தாங்க முடியல....நீ செய்து இருக்க விசகட்டியும் அதோட தங்கச்சியையும் ...அத சாப்பிடரதே பெரும் பாடு........இதுல வேற ஏகப்பட்ட ரூல்ஸ் ....என்ன பத்து இது எல்லாம் நீங்க கேட்கறதே இல்லயா” என அம்மாவில் தொடங்கி அப்பாவிடம் முடித்தாள் அபி.


“என்னது விசகட்டியா “என மஞ்சும் பத்மநாபனும் அதிர்ந்து கேட்க...”அதான்பா இந்த இட்லியும் ,தோசையும் சொன்னேன்” என அவள் சாவகாசமாக சொல்ல ....

“ஏய்...வாலு ....நீ பேசாம சப்பிடமாட்ட ....அங்க USA ல “என்னடா சாப்பாடு இது.....அம்மாவோட குழிபனியாரமும், பொங்கலும் சாப்பிடனும்னு ஆசையா இருக்குதுன்னு சொல்லிட்டு ...இங்க வந்து அம்மாவே கிண்டல் பண்ணிட்டு இருக்க நீ “என அர்ஜுன் செல்லமாக திட்ட ....

அவளோ அதை கண்டு கொள்ளாமல் “ஏய் அர்ஜுன்....அது என்ன உனக்கு மட்டும் தட்டுல சர்க்கரை பொங்கல் இருக்கு ....எனக்கு இல்ல...இது அநியாயம் ...திட்டமிட்ட சதி ...அர்ஜுனுக்கு மட்டும் தனிய கவனிகிறீங்க...பெண்களுக்கு மரியாதை இல்லையா ” என அவள் மீண்டும் குதிக்கவும் .....

“லூசு அங்க பாரு ...உன் தட்லையும் தான் இருக்கு....நீ எங்க பிளேட்ட பார்த்த......வந்ததுல இருந்து வாய் ஓயாம பேசிட்டு இருக்க “என அர்ஜுன் கூற......

“ஹிஹிஹி...என அசடு வழிந்தவள் ....சரி சரி சாப்பிடும்போது என்ன பேச்சு ....அமைதியா சாப்பிடுங்க” என எதோ மற்றவர்கள் பேசுவது போல் அவர்களை அடக்கிவிட்டு இவள் தனது சாப்பிடும் பணியை தொடர்ந்தாள்.

பத்மநாபன் மஞ்சுவை நிமிர்ந்து பார்க்க ...அவள் முகத்தில் என்றும் இல்லாத நிம்மதியும் சந்தோசமும் குடிகொண்டிருப்பதை பார்த்து தானும் புன்னகைத்து கொண்டார்.

அலுவலகம் கிளம்பும் நேரத்தில் பத்மநாபன் அர்ஜுனிடம் ....”நம்ம அபியும் ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா நம்ம கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வரணும்னு சொன்னாள்.அவளயும் கூட்டிட்டு போ” என கூறவும் ..

உடனே அர்ஜுன் “அங்க எல்லாம் எதுக்கு...வேண்டாம் அப்பா...எனக்கும் மீட்டிங் இருக்கு...இவளை கவனிக்க முடியாது” என சொல்ல..

“அர்ஜுன் நான் என் படிப்பு விஷயமாத்தான் வரேன்...என் வேலை முடிந்ததும் கிளம்பி விடுவேன்” என அபி அழுத்தமாக சொல்ல...

“இல்லைடா.....நீ முதல் தடவை கம்பெனிக்கு வரியா... உனக்கு யாரையும் தெரியாது......நானும் பிசியா இருப்பேன் ...உனக்கு யாரு ஹெல்ப் பண்ணுவா அதுக்கு சொன்னேன்டா” என்றவன்


தங்கையின் முகம் சுருங்கவும் காண பொறுக்காமல் ..”சரி வா “என அழைத்து சென்றான்.

நேற்றைய தலைவலி இன்றும் தொடர அகில் சிறிது குழம்பி போய் இருந்தான். தான் இங்கு வந்து இருக்க கூடாதோ என முதன் முதலாக வருத்தபட்டான்.

பின்னர் தான் கற்ற யோகா தனக்கு கை கொடுக்க சிறிது நேரம் தியானம் செய்தவன் பின்னர் மனதை சமன் படுத்தி அலுவலகம் கிளம்ப தயாரானான்.

அர்ஜுன் அலுவலகம் வந்ததும் அங்கு பணியில் இருக்கும் தாமரையை அழைத்து ,”தாமரை இவங்க அபிமித்ரா .இவங்க ப்ராஜெக்ட் விஷயமா சில விபரங்கள் வேனும்னு வந்திருக்காங்க...அவங்களுக்கு தேவையான உதவிகளை பண்ணி கொடுங்க” என கூறியவன்...

அபியிடம் திரும்பி “அபி இவங்க தான் மெட்டீரியல் செக்சன்ல இருக்காங்க. உனக்கு தேவையான விபரங்களை தருவாங்க..எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு..நான் கிளம்புகிறேன்” என கூறிவிட்டு சென்றான்.

தாமரை இந்த நிறுவனத்தில் ஐந்து வருடமாக இருக்கிறாள்.மிகவும் சுறுசுறுப்பான பொறுப்பான பெண்.கம்பெனியின் நம்பிக்கைக்கு உரியவள்.அதனால் தான் அகில்க்கு உதவியாளராக தாமரையை நியமித்து இருந்தார் பத்மநாபன்.

அபி பேஷன்டிசைனிங் படித்து கொண்டு இருப்பதால் அதில் மெட்டீரியல் சம்பந்தமான விபரங்கள் சேகரிக்கவே இங்கு வந்து இருக்கிறாள்.(நம்பனும் friends...அது தான் உண்மை.......அபியின் மைன்டு வாய்ஸ்)

அபிக்கு தேவையான விபரங்களை தாமரை பொறுப்பாக சொல்லி கொண்டிருந்தாள்.சில விபரங்கள் அவளுக்கு தெரியவில்லை.தனது பாஸ்ஸிடம் கேட்டு சொல்கிறேன் என்று. கூறினாள்.அபியும் சரி என்று கூறிவிட்டு அந்த கேள்விகளை அவளிடம் கொடுக்க ...

அதை வாங்கிய தாமரை “வெயிட் பண்ணுங்க.....நான் சார் கிட்ட இத பத்தின விபரங்களை கேட்டு வருகிறேன்” என சொல்லி விட்டு மற்றொரு அறையை நோக்கி சென்றாள்

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் ...”அபி... சார் எல்லா விபரங்களயும் மெயில் பண்றேன்னு சொல்லிருக்கார்.....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என கூற ..

உடனே அபி கண்களை உருட்டி கொண்டு அங்கும் இங்கும் பார்த்து விட்டு “தாமரை இங்க வாங்க...... ஒரு வேளை உங்க சார்க்கே விளக்கம் தெரியலையே என்னவோ ...யார்கிட்டையாவது பிட் அடிச்சு சொல்வார் பாருங்க”என ரகசியமாக சொல்ல ...

“அபி உனக்கு அவரை பற்றி தெரியாது . எங்க பாஸ் ரொம்பவும் அறிவாளி .... அவர்க்கு தெரியாத விபரம் ஏதும் கிடையாது. எந்த டாபிக் கொடுத்தாலும் பேசுவார்...... .எல்லா விஷயமும் அப்டேட் வச்சிருப்பார். ஒரு வேலைய ஆரம்பிசுட்டாருனா அத முடிக்காம தூங்க மாட்டார்.என்ன அதிகம் பேச மாட்டார் அவ்ளோதான் .இன்னைக்கு கொஞ்சம் மூடு அவுட்ல இருக்கார்.. அதான் நான் ஏதும் பேசாம அவர்கிட்ட அந்த விபரங்களை மட்டும் கொடுத்திட்டு வந்திருக்கேன்.இந்த மாதிரி நேரத்துல இப்படி தான் பண்ணுவோம்.அவரும் பதிலை மெயில் பண்ணிடுவார்” என கூறியவள் “எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு பார்த்துட்டு வந்து விடுகிறேன்.இங்கே இரு “என கூறி விட்டு சென்றாள்.

தனியாக அமர்ந்திருந்த அபியின் மனம் தனது சண்டிதனத்தை ஆரம்பித்தது.

“நம்ம ஆல் இங்க எங்க இருப்பான் ....யார கேட்கறது.......சரி தாமரையே கேட்ருவோம்” என அவள் இருப்பிடத்தை நோக்கி அபி செல்ல ,தாமரையும் அவளை நோக்கி வர “ஹே அபி வாங்க..மெயில் வந்திருக்கு பாருங்க” என கணினி முன் அமர வைத்தாள்.

அதை படித்து பார்த்த அபி” வாவ் !!!!!!!!!!!!! சூப்பர் தாமரை.....இதை தான் நான் எதிர்பார்த்தேன்.பரவாயில்லை உங்க பாஸ் ரொம்ப திறமைசாலிதான் ....ஆனால் அந்த பாலிகாட்டன் மெட்டீரியல் விபரங்கள் இல்லயே” என கேட்க...

“ஒ அப்படியா...இருங்க ...போன் போட்டு கொடுக்கிறேன் ...நீங்களே கேளுங்க “என அவள் தொலைபேசியை எடுக்க ....

“வேண்டாம் வேண்டாம் ....அவருக்கு மெயில் பண்ணி விடுகிறேன்”.என விபரங்கள் கேட்டு மெயில் அனுப்பினாள்


மெயிலை பார்த்ததும் அகில் சலித்து கொண்டே.....”யாருடா இந்த பொண்ணு....இப்படி குடைஞ்சு கேள்வி கேட்டுகிட்டு இருக்கு” என நினைத்தவன்,

“இந்த மெடீரியல்ஸ் நாங்க யூஸ் பண்றதில்லை ....SRM கார்மெண்ட்ஸ் தான் இந்த மெடீரியல்ஸ் யூஸ் பண்ணுவாங்க.....நீங்க அங்க போய் விபரங்களை கேட்டுக்குங்க “‘ என பதில் அனுப்பி வைத்தான்.

இதனை படித்தும் அபிக்கு சட்டென்று கோபம் வர உடனே இவாறு பதில் அனுப்பினாள்.....”‘என்ன சார் ....இந்த சிட்டியிலயே இது தான் பெரிய கார்மெண்ட்ஸ் கம்பெனி ......அதும் இந்த மெடீரியல்ஸ் உலகத்துல பாதி பேர் யூஸ் பண்றாங்க...விபரம் கேட்டா தெரியலன்னு சொல்றிங்க...இந்த கம்பெனில வேலை பார்த்துகிட்டு இன்னொரு கம்பெனி ரெக்கமண்டு பண்றிங்க ....நல்ல MD சார் நீங்க......இனி மேல் இப்படி சொல்லாதிங்க...மத்தவங்க நம்ம கம்பெனி பத்தி என்ன நினைப்பாங்க இது ப்ரீ ஒப் அட்வைஸ் ...கேட்டா கேட்டுக்குங்க.......கேட்காட்டி போங்க “என கூறி விட்டு மெயிலை அனைத்தாள்.

இதை படித்தும் அகிலிற்கு சட்டேன்று கோபம் வர...பின்னர் சிரித்து கொண்டே “ஏதோ சின்ன பெண்....பயங்கர வாலாட்ட இருக்கு.....இந்த மாதிரி விஷயம் எல்லாம் எங்கிட்ட கொண்டு வர கூடாதுன்னு தாமரை கிட்ட சொல்லி வைக்கணும்” என நினைத்து கொண்டே தன்னுடைய வேலையை தொடர்ந்தான்.

தான் வந்த வேலை பாதி முடிந்த நிலையில் மீதியை நாளை பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டு அகிலை பற்றி விசாரிக்க தாமரையிடம் திரும்பினாள் அபி.

“என்ன அபி வேலை முடிந்து விட்டதா.....நான் மீட்டிங் கிளம்பறேன். உன் வேலை முடிஞ்சா உன்னை வீட்ல விட்டு போகிறேன் என கேட்டு கொண்டே உள்ளே வந்தான் அவர்களின் அறைக்குள் வந்தான் அர்ஜுன்.,..

“இல்லை அண்ணா...இன்னும் சில விபரங்கள் வேணும்...SRM கார்மெண்ட்ஸ் வரை போகணும்...அங்கு தான் கிடைக்குமா” என அபி கூற

“அப்படியா......இங்கயே எல்லாமே இருக்குமே...அங்க எதுக்கு? என கேட்ட அர்ஜுன்

உடனே தாமரை” இல்ல சார்...பாஸ் தான் சொன்னார்.அந்த மெட்டீரியல் நம்ம யூஸ் பண்றதில்லைன்னு” என கூற

“ஒ அவன் சொன்னனா சரியாதான் இருக்கும்.ஆனா அபி நான் வெளிய போனா எப்போ வருவேன்னு தெரியாது” என ஒரு நிமிடம் யோசனை செய்தவன்....

தொலைபேசியை எடுத்து” டேய் இப்ப என்ன வேலையா இருக்கியா ...என கேட்டவன்........ இல்ல வேலையை முடிச்சுட்டேன் ...இப்ப ப்ரீ தான் என பதில் வந்ததும்...... அப்போ கொஞ்சம் வெளியே போகணும் இங்கே வா “என கூறிவிட்டு கட் பண்ணிவிட்டான்.

இப்ப எங்க வெளியே போகனும்க்றான்....என்னவா இருக்கும் என யோசனையுடன் அகில் அங்கு வர....... அங்கு அர்ஜுன் தாமரை இருவரும் இருந்தனர்.

“என்னாச்சு அர்ஜுன்....எங்க போகணும்” என அகில் கேட்க

“அதில்லடா....நம்ம SRM கார்மெண்ட்ஸ் வரைக்கும் போகணும்....எனக்கு வேலை இருக்கு நீ கூட்டிகிட்டு போறியா” எனக் கேட்க

“ஓகேடா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ...ஆனா யாரை கூட்டிகிட்டு போகணும்” என அகில் கேட்க

“எல்லாம் நம்ம அபிதானடா....ரெஸ்ட் ரூம் போயிருக்கா...வந்துருவா..... பார்த்து அவ வேலை முடிஞ்சதும் வீட்ல விட்டுடு” என சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அர்ஜுன் கிளம்ப ஒன்றும் புரியாமல் அகில் நிற்க

“என்ன அர்ஜுன் எனக்கு டிரைவர் ரெடி பண்ணிட்டியா” என கேட்டுகொண்டே உள்ளே வந்தவள் அங்கு அகிலை பார்த்ததும் திகைத்து போய் நின்றாள்..

கண்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று கலக்க

காத்திருந்த மனமோ கவிதை பாட

இவர்கள் இருவர் மட்டுமே

இந்த உலகில் இருப்பதாக தோன்ற

சில வினாடிகளே ஆனாலும் அதை அனுபவித்தனர் இருவரும்.

தாமரை அபி பார்த்து ......”.வாங்க அபி...இவர் தான் எங்க பாஸ்... Mr அகிலன் சார் “என சொல்ல

உடனே அபி “ஆமாண்டி இப்ப சொல்லு...ஆரம்பித்துல இருந்து பாஸ் மட்டும் சொன்னியே பேரை சொன்னியா ,நான் வேற என்ன என்னமோ பேசிட்டேன்...என்ன சொல்ல போறானோ” என மனதிற்கு புலம்ப

“சார் இவங்கதான் அபி...உங்க கிட்ட இப்போ மெயில்ல பேசினாங்கள அவங்க “என அறிமுக படுத்த

“அடி பாவி நீதான அது...அப்பவே நினச்சேன்...இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடிய ஆளு நீ ஒருத்தி தான்...என்னடா புதுசா வந்த பொண்ணு பேசுதேனு பார்த்தேன்...எனக்கு ப்ரீ அட்வைஸ் வேற ...எல்லாம் நேரம்....”என அவனும் மனதிற்கு புலம்பியவன் .........அவளை முறைத்து கொண்டே நிற்க

அபி உடனே “தாமரை நீங்க கிளம்புங்க ...நாங்க பார்த்துக்கிறோம் ரொம்ப நன்றி” என கூறி விட்டு அகிலிடம் திரும்பி

“போகலாமா........மா.......... .மா.”.என இழுத்தவள்

என்ன ..........என அவன் கர்ஜிக்க வும்

போலாமான்னு கேட்டேன் என வாய்க்குள் முன்முனுத்து கொண்டாள்.

“எங்க ....என மறுபடியும் அவன் கேட்க....

நீங்க என்ன மணிரத்னம் படத்துல நடிக்க போறிங்களா என அவள் வேகமாக கேட்டதும்

தாமரையும் அகிலும் புரியாமல் அவளை பார்க்க

“இல்ல எத கேட்டாலும் ஒரு வார்த்தை மட்டுமே பேசறிங்களே அதனால கேட்டேன்” என சொல்லி விட்டு

உடனே முகத்தை பாவமாக வைத்து கொண்டு அபி அமைதியாக நிற்க

தாமரை உடனே “அபி கவலைபடாதே....பேசறது தான் இப்படி...ஆனால் பக்க ஜென்டில்மேன் எங்க பாஸ்” என சிரித்து கொண்டே அவனுக்கு புகழாரம் சூட்டினாள்.

“அத எங்கிட்ட சொல்றியா நீ.... எனக்கு தெரியாதா இவனை பற்றி” என நினைத்து கொண்டு

“இல்ல தாமரை..... உங்க பாஸ் எப்பவும் இப்படி தான் ஜின்ஜெர் சாப்பிட்ட என்னமோ சொல்வாங்கலே மறந்திடுச்சு..... அது மாதிரி தான் முகத்தை வைத்து இருப்பாரோ” என இவள் ரகசியமாக தாமரையிடம் கேட்க
தாமரைக்கே சிரிப்பு வந்து விட்டது அவள் கேட்ட விதத்தை பார்த்து ....

”அச்சோ அவர் கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வேர்ட் குணம் அவ்ளோதான் ..இனி இந்த மாதிரி பேசாதிங்க” என மெதுவாக சொல்ல

பின்னர் அகிலிடம் சென்று “சார்....சின்ன பெண் ....கொஞ்சம் வாய் துடுக்கு....பாவம் உங்களை பார்த்து பயபட்ரா...பார்த்துக்குங்க சார்” என கெஞ்ச....

“இவள் என்னை பற்றி ஏதோ வில்லங்கமாக சொல்லி இருக்கிறாள்....அதான் தாமரை இப்படி சொல்கிறாள்...இவளா பயபடுவது...இவளை பார்த்து ஊரே பயபடுது...எப்படி நடிக்கிறா பாரு” என வாய்க்குள் முனகியவன் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என் இமேஜ் முழுவதும் டேமேஜ் ஆக்கி விடுவாள்.....முதல்ல இங்க இருந்து அவளை கிளப்பு அகில் என உள்மனது கட்டளை இட ......

தாமாரையிடம் திரும்பி” நான் பார்த்து கொள்கிறேன்.....நீங்கள் நான் கொடுத்த வேலையை முடித்து வையுங்கள்” என கூறிவிட்டு

“வா போகலாம் “என சொல்லி கொண்டே வேகமாக முன்னே நடந்தான்.

காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணியவன் ...அவள் வந்து முன் சீட்டில் அமர்ந்து அவனை பார்த்து கொண்டே இருக்க

சே என சலித்து கொண்டே ரேடியோவை ஆன் செய்ய அதில்

என்னை விட்டு ஓடி போக முடியுமா முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா தெரியுமா
என பாட

அபி சிரிக்க ,அவன் வேகமாக ரேடியோவை ஆப்பண்ணினான்.


காத்திருந்த இருவரின் மனமோ

தனது நேசத்தை சொல்ல துடிக்க

உள்ளேயுள்ள ஈகோவும் கோபமும்

அதை திரையிட்டு மறைக்க

காதலில் பொறுமையும் ஒரு அங்கம் தான்

என்பதை காதல் கொண்ட உள்ளம் ஏனோ

கண்டு கொள்வதில்லை.