அத்தியாயம் – 06
காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.”என்ன சார் இங்க நிருத்திடிங்க...வேலை இருக்கா.......ஒன்னும் பிரச்சன இல்ல...நான் நடந்தே போய்கிறேன் பக்கம் தான்” என கூற“நிறுத்தியதே உனக்காக தான் நீ நடந்து போறியா...”என மனதில் நினைத்தவன்.....
“இல்ல ஆருத்ரா முதல் முறை நீங்க என்கூட வரிங்க...அதான் லைட்டா எதாவது சாப்பிட்டு போலாம்னு” என அவன் சிரித்து கொண்டே சொல்ல
ஆருத்ராவின் முகம் இறுக,”மன்னிக்கணும் சார்.நான் அலுவலகம் போக வேண்டும்.இது வரை என்னை அழைத்து வந்ததற்கு நன்றி.நான் நீங்கள் நினைக்கிற பெண் இல்லை..அதற்கென்று சில பேர் இருக்கிறார்கள்.அவர்களை நீங்கள் அணுகுங்கள்.”என கோபமாக கூறிவிட்டு காரின் கதவை திறந்து இறங்கினாள்.
அர்ஜுனுக்கு சுள்ளென்று கோபம் வர , அவளை பார்த்து “இப்ப என்ன கேட்டேன்னு நீங்க கார்ல இருந்து இறங்கிரிங்க ....
வரேனா வரேன்னு சொல்லுங்க இல்லையினா வேண்டாம்னு சொல்லுங்க ...அதுக்கு எதுக்கு இப்படி பேசறிங்க ......நான் உங்களை எந்த மாதிரி நினைக்கிறேனு உங்களுக்கு தெரியுமா ? ஆமா முதல்ல நீங்க என்ன பத்தி என்ன நினச்சுட்டு இருக்கீங்க ?.........ஆரம்பத்துல இருந்தே இப்படி தான் பேசிட்டு இருக்கீங்க....உலகத்துல நீங்க தான் நல்லவங்க....மத்தவங்க எல்லாம் கெட்டவங்க மாதிரி......ஏதோ தலைவலிக்கு ஒரு டீ குடிக்கலாம்னு கூப்பிட்டேன்.....நீங்க என்னடான்னா இப்படி பேசறிங்க...”என மூச்சு விடாமல் அவன் கோபத்தில் கத்த ....
அதிர்ந்து போய் அப்படியே சிலையாக நின்ற ஆருத்ரா ....பின்னர் சுதாரித்து சுற்றிலும் பார்க்க ,அனைவரும் இவர்களையே பார்த்து கொண்டிருக்க ...எதுவும் பேசாமல் மீண்டும் காரில் ஏறி அமர்ந்தாள்.
பேசி முடித்த பின்பு தான் அர்ஜுனுக்கு புரிந்தது ...தான் கார்ல இருந்து இறங்கி வெளியே நின்று கத்தி கொண்டிருந்தோம் என்பதே ...ஒரு நிமிடம் தலை குனிந்தவன் .......ஆனால் அவள் சொன்ன சொல் இதயத்தை ரணபடுத்த...வேகமாக தன கைகளை மடக்கி காரில் குத்தியவன், அப்போதும் தன ஆத்திரம் குறையாமல் உள்ளே பார்த்தான் ....அவள் முகம் பயத்தில் மிரண்டு போயிருக்க ...பேசரதியும் பேசிட்டு எப்படி உட்கார்ந்திருக்கா பாரு என நினைத்து கொண்டே காருக்குள் அமர்ந்து அவள் முகத்தை திரும்பி பார்க்க
எதுவும் சொல்ல வேண்டாம்....பேசாமல் வண்டியை எடுங்க என அவள் சைகையில் சொல்ல ... கோபத்தில் வண்டியை கிளப்பினான் அர்ஜுன்.
ஆடிட்டர் அலுவலகம் முன்பு வண்டி நிற்க,அவள் எதுவும் பேசாமல் இறங்கி உள்ளே சென்றாள்.
வேகம்மாக உள்ளே நுழைந்தவளை ஷோபா” ஏய் ஆருத்ரா என்ன இவ்ளோ நேரம்...என்னாச்சு” என் கேட்க,அவள் கண்கள் அவளயும் அறியாமல் கலங்க .
“ஷோபா ஒரு நிமிடம் வெயிட் பண்ணு ...ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தறேன்” என் கூறிவிட்டு உள்ளே சென்றவள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.அவள் கண்கள் சிவந்திருப்பது அவளது மனநிலையை எடுத்து கட்ட ...ஷோபா அவள் அருகில சென்று “என்னாச்சுடா ...எதாவது பிரச்சனையா என கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்க்காமல் “எனக்கு கொஞ்சம் தலைவலி...நான் வீட்டிற்க்கு செல்கிறேன்...சார் கிட்ட சொல்லிடு” என கூறி விட்டு விடு விடுவென்று வெளியே வந்தாள் ஆருத்ரா.
அர்ஜுன் காரில் இருந்து ஆருத்ரா இறங்கியதில் இருந்து அவள் கிளம்பி செல்லும் வரை இரண்டு கண்கள் அவளை கண்காணித்து கொண்டே இருந்தது...அந்த கண்களில் தோன்றுவது...கோபமா...இல்லை ஏமாற்றாம ....இறைவனுக்கே வெளிச்சம்.
வீட்டிற்கு சென்ற பின்பும் அர்ஜுன் மனதில் கோபம் அடங்க வில்லை.”என்ன வார்த்தை சொல்லி விட்டாள்.நான் எத்தன பெண்களை அழைத்து போயிருக்கிறேன்......இவள் என்னோமோ நேர்ல பார்த்த மாதிரி பேசறா...எல்லாம் திமிர்....இவ பின்னாடியே சுத்தரன்ல அந்த கொழுப்பு “என் பொருமி கொண்டே இருந்தவன் அங்கும் இருக்க பிடிக்காமல் கம்பெனிக்கு வந்தான்.அன்று முழுவதும் அவனுக்கு வேலை ஓடவில்லை.அவளை பற்றியே எண்ணங்கள் சுற்றி கொண்டிருந்தன .மீண்டும் வீட்டிற்க்கு வந்தான்.
வீட்டிற்க்குள் ஆருத்ரா நுழைந்ததும் ...”ஹே ருத்ரா நானே போன் பண்ணனுன்ம்னு நினச்சேன்......மாப்பிள்ளை வீட்டுகாரங்க வராங்க நேரமே வானு....... நீயா வந்துட்ட ...போடா போய் குளிச்சுட்டு நீட்டா டிரஸ் பண்ணி இரு...... நான் பூ கடை வரை போய்ட்டு வந்தறேன்” என சொல்லி விட்டு கிளம்பினார் வனஜா.
காரில் அமைதியாக அகில் வர அபி அவனியே பார்த்து கொண்டிருந்தாள்.நான்கு வருடத்தில் எவ்ளோ மாற்றம் இவனிடம் என யோசித்து கொண்டே வந்தவள்....
அவன் முகத்தை பார்த்தவாறே “எப்படி இருக்கீங்க மா.....மா “ என இழுக்க
அவன் திரும்பி அவளை பார்த்து முறைத்து விட்டு அமைதியாக மீண்டும் வண்டி ஓட்ட
“சரி மாமான்னு கூப்பிடல” என்று சொன்னவள்
“ஆமா நீங்க காலையில கஞ்சி சாப்டிங்களா “என சம்பந்தம் இல்லாமல் கேட்கவும்
அகில் அவளிடம் முகத்தை சுளித்து........ “என்ன ?” என கேட்க
“இல்ல காலைல இருந்து விறப்பாவே இருக்கிங்கலே அதான் கஞ்சி சாப்டிங்கலான்னு கேட்டேன்” என அவள் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சொன்னாள்.
வேகமாக வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவன் ....இப்ப என்ன நினச்சுகிட்டு இருக்க மனசுல ....ரொம்ப ஓவரா பேசிகிட்டு இருக்க ...அப்படியே இறக்கி விட்டுடு போய்டுவேன் ஜாக்கிரத......அமைதியா வரதனா வா...இல்ல அவ்ளோதான் “என ஒத்த விரலை நீட்டி கர்ஜித்தவன் அப்படியே கோபமாக அமர்ந்திருக்க ....
அவனை கோபத்தை கண்டு முதலில் அரண்டவள் ...பின்னர் தன்னை நிலை படுத்தி கொண்டு......”சரி நான் பேசல ....கிளம்புங்கள் போகலாம்... “என ஆர்டர் போட்டவள் அவன் முகத்தை திரும்பி பார்க்கவே இல்லை.
srm கார்மெண்ட்ஸ்க்குள் வண்டி நுழைந்ததும் அதன் பிரமண்டமான தோற்றத்தை பார்த்து வாயை பிளந்தவள்”...ஹப்பா...எவ்ளோ பெரிய பில்டிங்.கார்டன் எல்லாம் ரொம்ப அழகா இருக்குள்ள.....ஹய் அங்க பாருங்களேன் பௌண்டன் எல்லாம் வச்சுருக்காங்க..... ரொம்ப நல்லா இருக்கு” என் சின்ன குழந்தை போல் அவள் துள்ளி குதித்து கொண்டே ரசித்ததை அகிலின் மனமும் ரசித்தது.
அவன் கோபம் தணிந்து முகத்தில புன்னகை மலர” ஆமா ...ஆமா...வா உள்ள போலாம் “என்று உள்ளே அழைத்து சென்றவன். வரவேற்ப்பில் ap கார்மெண்ட்ஸ்ல இருந்து வந்திருப்பதாக சொல்லி தன் விசிடிங் கார்டு கொடுத்தவன் ,md யை பார்க்க விரும்புவதாக கூறினான்.
தொலைபேசியில் அனுமதி கேட்ட அப் பெண் அவர்களை உள்ளே செல்லுமாறு கூற “ வா...”என சொல்லி விட்டு முன்னே நடந்தான்.
ஒற்றை வார்த்தையில் மனம் சுருங்கிய அபி அவன் பின்னே அமைதியாக நடக்க ...
உள்ளே நுழைந்தது ..”.டேய் அகில் நீயா...வா...வா எப்போ வந்த ....நீ நார்த் சைடு வொர்க் பன்றேனுதான சொன்னங்க ...உட்கார்...என்ன சாப்பிடற” என பேசிகொண்டே சென்றவன் பின்னல் நின்ற அபியை பார்த்ததும் அப்படியே சிலை போல் நின்றான்.
சிறித்து கொண்டே அமர்ந்தவன் நான் இங்க வந்து 1 மாதம் ஆகுது ...ஆமா உங்க கார்மெண்ட்ஸா ரகு இது” என கேட்டவன் ...எதிர்புறம் பதில் வராமல் போக அவன் பார்த்த திசையை பார்த்தவன் அங்கு அபி அவர்களை கவனிக்காமல் அங்கு வரைந்திருந்த ஒரு ஒவியியத்தை ரசித்து கொண்டிருக்க ...ரகு அவளை ரசித்து கொண்டிருப்பதை பார்த்தவன் எரிச்சலுற்று ...”இவளை என்ன சொன்னாலும் கேட்கமாட்டா” என வாய்க்குள் முனவி கொண்டே
“அபி இங்க வா...வந்து உட்கார்” என்று அவன் அழைக்க ...அவனது குரலில் தெரிந்த மாற்றத்தில் தடுமாறியவள் அவன் அருகில் வந்து அவனுக்கு ஒரு இருக்கை தள்ளி மறு இருக்கையில் அமர்ந்தாள் .
ரகு இப்போது அபியை பார்த்து “ஹாய் ஐ யம் ரகு” என அவன் கை நீட்ட
“.....ஹலோ என் பெயர் அபிமித்ரா” என இவள் கைகளை குவித்து வணக்கம் சொல்ல அகிலின் மனதிலோ இளம் சாரல்.
“என்ன விஷயமா வந்திருகிங்க” என அபியை பார்த்து கேட்க
அவளோ அகிலை பார்க்க
உடனே அகில்...”ரகு இவங்க நம்ம அர்ஜுனோட தங்கை .பேஷன்டிசைனிங் படிக்கிறாங்க ...ஒரு ப்ராஜெக்ட் விஷயமா பாலிகாட்டன் மெடீரியலைபற்றி விபரம் வேணும்.அது நீங்க அதிகம் பையன்படுத்ரதால அத பத்தி தெரிஞ்சுக்க வந்திருகாங்க” என வந்த காரணத்தை விளக்கினான்.
“ஏன் அவங்க கார்மெண்ட்ஸ்ல அது யூஸ் பண்றதில்லையா” என கேட்டவன்.....ok ஒன்னும் பிரச்சனை இல்லை ..உங்களுக்கு என்ன டீடெய்ல்ஸ் வேனும் எல்லாம் சொல்ல சொல்றேன்” என சொன்னவன் உடனே அந்த பணியில் இருக்கும் மேலாளரை அழைத்து “இவங்க எனக்கு தெரிந்த நபர்.இவர்கள் கேட்கும் விபரங்கள் அனைத்தும் கொடு” என் சொன்னான்.
பின்னர் அபியிடம் திரும்பி “அபி நீங்க இவங்க கூட போங்க...உங்களுக்கு என்ன விபரம் வேணும்னாலும் தயங்காம கேளுங்க...இதுவும் உங்க கம்பெனி மாதிரிதான்” என அவன் சொல்ல
“கண்டிப்பா சார்...ரொம்ப நன்றி” என மகிழ்ச்சிய்டன் சொன்னவள் அந்த மேலாளரின் பின்னால் சென்றாள்.
அவள் செய்த பெரிய தப்பு அகிலிடம் சொல்லாமல் சென்றது தான்.அகிலிற்கு சுறுசுறுவென்று கோபம் அதை காட்டும் இடம் இதுவல்ல என உணர்ந்தவன் அமைதியாக தன்னை அடக்கி கொண்டான்.
ரகு பின்னர் அகிலிடம் திரும்பி “...அப்புறம் அகில் இப்ப என்ன செஞ்சுட்டு இருக்கீங்க ...இங்க எங்க வொர்க் பண்றிங்க” என கேட்க
“நானும் அர்ஜுனும் ஒன்னதான் பிஸினெஸ் பண்ணிட்டு இருக்கோம்” என்று சொன்னவன் பின்னர் பொதுப்படையாக சில விஷயங்களை பேசினர்.
அதற்குள் அபி திரும்பி வந்து விட ரகு அகிலை விட்டு விட்டு அபியிடம் பேச ஆரம்பித்தான்.
“என்ன அபி எல்லா விபரமும் கிடைச்சுதா” எனக் கேட்டான் ...
“இல்ல சார்....ஒரு சில விபரங்களை நாளை தருவதாக சொல்லி இருக்காங்க” என கூறியவள் அகிலை பார்த்து புன்னகை செய்ய ,அவன் அதை கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்ப...நல்லத்தான இருந்தான்...அதுக்குள்ள என்ன என மனதில் நினைத்தவள்
“அப்போ கிளம்பலாமா” என்று பொதுப்படையாக சொல்ல
“என்ன அபி இப்ப தான வந்திங்க... என்ன சாப்ட்ரிங்க......வாங்க எங்க கம்பெனி சுத்தி பார்த்திங்களா” என அவன் கேட்க
“பார்த்தேன் சார் ...சூப்பராக இருக்கு.அதும் அந்த கார்டன் ரொம்ப நல்லா இருக்கு” என அவள் குதுகலத்துடன் சொல்ல
உடனே ரகு “அப்படியா ....இன்னும் நிறிய இருக்கு வாங்க காட்றேன்” என அவளை அழைத்து செல்ல அபியும் அந்த ஆர்வத்தில் மறுபடியும் அகிலிடம் சொல்லாமல் அவன் பின்னால் சென்றாள்.
ரகு அபியிடம்” உங்களுக்கு இன்டீரியர் டிசைனில் ஆர்வம் அதிகம் போல என கேட்டவன் ...எனக்கும் அப்படிதான் ....இங்க பாருங்க” என பல விதமான ஓவிங்களை காட்டியவன் அதன் பின்னணியை சொல்ல வாயைபிளந்து கேட்டு கொண்டிருந்தாள் அபி .
அவளோட அந்த குழந்தைதனம் ரகுவிற்கு மிகவும் பிடித்த்து போக அவனும் ஆர்வத்துடன் விளக்கினான்.
அங்கு ஒரு மனமோ கொதிலன் கீழே உள்ள தணல் போல என கொதித்து கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் பார்த்து விட்டு வந்த அபி அங்கு அகில் அமர்ந்திருக்கும் நிலைமையை பார்த்த உடனே கண்டுபிடித்து விட்டாள்.அச்சோ “இவர இங்க அம்போன்னு விட்டுடு போய்ட்டோம்.ஏற்கனவே நான்கு கால்ல தண்டுவான்.....இன்னைக்கு என்ன நடக்க போகுதோ” என யோசித்தாள்....
“சரி எவ்ளோவோ பார்த்துட்டோம் ...இத பார்க்க மாட்டமா”............ என மனதில் நினைத்தவள்...
“அப்போ நாங்க கிளம்பறோம் சார்...............மா..மா....என ஆரம்பித்தவள் பின்னர் போலாம் “என அவனை பார்த்து சொன்னதும்,
“சரி அப்போ நாங்க கிளம்பறோம் “என ரகுவிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன் முன்னே நடக்க
ஏதோ நடக்க போகிறது என உள்மனம் எச்சரிக்க அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள்.
எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்
இரண்டு மனங்கள் இணைவது தான் காதல்
ஆனால் அந்த காதல் ஆரம்பித்த உடன்
எதிர்பார்ப்பும் ஆரம்பித்துவிடுகிறது
இவள் தனக்கு மட்டும் தான்
என அவன் நினைக்க
நானே இவானாக இருக்கும்போது
வேறு யார் ஊடே வருவார்
என அவள் நினைக்க
நினைவுகள் இருவர் மனதிலும் இருக்க
அதை வெளிக்கொணரும் வார்த்தையில்
ஏனோ தடுமாற்றம்.
இது தான் அன்பு கொண்ட
மனங்களின் அறிசுவடியோ ...காத்திருப்போம் அறிந்து கொள்ள .......