• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 07

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் 7


காரில் அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.அமைதியான பயணம்.இருவரின் மனதிலும் பல எண்ணங்கள் ஓடிகொண்டிருந்தன.
.
“என்ன எதுவும் பேசாம வரிங்க” என முதலில் ஆரம்பித்தாள் அபி .

“என்ன பேசணும்னு சொல்ற” என்றான் அகில்.

“என்கிட்ட எதுவும் பேசணும்னு உங்களுக்கு தோன்றவில்லியா” என்று கேட்டாள்

அகிலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

“நான்கு வருடத்திற்கு பிறகு பார்க்கிறோம்.ஒருத்தர ஒருத்தர் தெரியாத மாதிரி பேசறது நல்லாவா இருக்கு என்றாள்.

எப்படி இருக்கீங்க.....இந்த நான்கு வருசத்துல எங்கிட்ட பேசணும்னு கூட உங்களுக்கு தோனல.....ஒரு மெயில் கூட பண்ணல...பண்ண மெயிலுக்கும் பதில் இல்ல ...எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா” என வருத்தமாக கூறினாள்.

அவளின் அந்த பேச்சு அவனை மேலும் பழைய நினைவுகளுக்கு அழைத்து செல்ல பேசாமல் வண்டியை ஓட்டி கொண்டிருந்தான்.

நான் எதாவது தப்பு செஞ்சுட்டனா ...ஏன் என்ன முறைசிங்க” என தெரியாதவள் போல் அவள் மெதுவாக கேட்க

“ஆமா இப்படிதான் யார் கூப்பிட்டாலும் எழுந்து போயிடுவியா ....பக்கத்துல நான் உட்கர்ந்த்ருகன்ல கேட்கனும்னு உனக்கு தோனல ...உனக்கு டிரைவர் வேலை பார்க்கவா நான் வந்தேன்......ஆமாமா நீ ஆரம்பத்துல இருந்து அப்படித்தான நினச்சுகிட்டு இருக்க” என அவன் தன கோபத்தை வார்த்தையாக கொட்ட

“இல்ல ......நான் அப்படி நினைக்கலை... என தடுமாறியவள் சாரி என கெஞ்சும் குரலில் சொல்ல “அவன் எதும் சொல்லாமல் தனது வேலையை தொடர்ந்தான்.


“நிறுத்துங்க...நிறுத்துங்க” என்று அவள் வேகமாக கத்த

அப்படியே பிரேக் போட்டு நிறுத்தியவன் “ என்னாச்சு ...என்னவேணும் ...எதுக்கு கத்தின” என அவன் பதறி கேட்க

“இல்ல மாமா..பசிக்குது...அங்க ஐஸ்கிரீம் கடை இருக்கு அதான்” என அவள் மெதுவாக சொல்ல

“அவள் செயலில் சிரித்தவன் ....இன்னும் நீ மாறவே இல்லை மித்து ...அப்படியே இருக்க “என சொல்லிகொண்டே காரை அந்த கடைக்கு திருப்பினான்.

இப்போது அதிர்ந்து உட்கார்வது அபியின் முறையாகி போனது.ஏனெனில் அவன் மட்டும் உரிமையாக செல்லமாக அழைக்கும் பெயர் மித்து.அபிமித்ரா என்ற பெயரில் எல்லாரும் அபி என்று அழைக்க அவன் மட்டும் மித்து என்றே அழைப்பான்.குறிப்பிட்ட வயது வந்த பின்பு அனைவரும் அதை கிண்டல் பண்ண மற்றவர்கள் முன்னால் அபி என்று அழைத்தாலும் இவர்கள் இருவரும் இருந்தால் மித்து என்று தான் அழைப்பான்.

அவன் அந்த வார்த்தையே உச்சரிக்கும்போதே ஒரு உரிமை உணர்ச்சி அதிகமாக இருக்கும்.அபிக்கு அது ரொம்ப பிடிக்கும்.

இப்போது அவன் அந்த பெயரை உச்சரிச்த்த உடன் அபி அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.அவள் முகம் மகிழ்ச்சியில் மிளிர ,துள்ளி குதித்து கீழே இறங்கி வந்தாள்,

அவளது முகத்தை பார்த்தவன் அப்படியே தன்னை மறந்து நின்றுவிட...பழைய சந்தோஷ நினைவுகள் மனதில் நிழலாட அதே சந்தோஷத்தில் அவனும் அவளை பார்க்க

கண்கள் இரண்டும் கலக்க ,மனம் மகிழ்ச்சியில் சிறகடிக்க தன் கையை அவள் புறம் நீட்டியவன் அதை அவள் ஆசையுடன் பற்றி கொண்டதும் சந்தோசத்துடன் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே சென்று அமர்ந்தவர்கள்”என்ன சாப்பிடர என்று கேட்டவன் .அதற்குள் பேரர் வந்துவிட fruit salad with pista என சொல்ல,அதே சமயத்தில் அவளும் kasatta icecreem என்று சொல்ல இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு ஒருவரை ஒருவர் பார்க்க...

“அதை இன்னும் நீங்க மறக்கவே இல்ல...... அப்புறம் ஏன் மாமா இப்படி பண்ண” என வருத்தத்துடன் கேட்டாள்.

அகில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தான்.

அகில் சொன்ன fruit அபிக்கு பிடித்தது.அபி சொன்ன kasatta அகில்க்கு பிடித்தது.அந்த இடத்தில மௌனம் குடியேற இருவரும் அமைதியாக இருந்தனர்.

பின்னர் ice creem வர அதை இருவரும் உண்டனர்.அகில் சாப்பிட்டு முடித்து எழுந்தவன்...... அவள் அவனை ஒரு மாதிரி பார்க்க.....

“வேண்டாம் மிது...வேண்டாம்....உனக்கு ஒத்துக்காது” என அவன் மிரட்ட....

“மாமா ப்ளீஸ் ....கொஞ்சம்........பாதி உங்களுக்கு ...பிளீஸ்” என செல்லம் கொஞ்ச

உன்னை திருத்தவே முடியாது என சொன்னவன் மறுபடியும் fruit salad ஆர்டர் பண்ணினான்.அதை சாப்பிட்டு முடித்தவள் மாமா என மறுபடியும் ஆரம்பிக்க

“பிச்சுடுவேன் ஜாக்கிரதை” என மிரட்டி அவளை அங்கிருந்து இழுத்து சென்றான்.

காரில் ஏறி அமர்ந்ததும் அந்த சந்தோசத்தை கெடுக்க மனம் இல்லாமல் இருவரும் அமைதியாக வீடு வந்தனர்.


அந்த சந்தோசத்தில் வீட்டிற்கு சென்றவள் ..”.மஞ்சு டார்லிங் எங்க இருக்க “என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“அம்மா வெளியே போயிருக்காங்க” என வேலைகாரர்கள் சொல்ல

சரி என்று சொல்லி விட்டு மேலே சென்றவள் அர்ஜுன் அறை திறந்து இருக்க

“இவன் எங்க இந்த நேரத்துல இங்க இருக்கான்.கம்பெனிக்கு போகலையா “என சொல்லிகொண்டே உள்ளே நுழைந்தவள் அங்க அவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு....

“என்னாச்சு அர்ஜுன்.....தலை பிடிச்சுட்டு உட்கார்ந்திருக்க...எதாவது யோசனை பண்ணிட்டு இருக்கியா .....இருக்காதே ....அது எல்லாம் மூளை இருக்கறவங்க செய்ய வேண்டிய வேலை ஆச்சே ......அதை நீ செய்ய மாட்டியே........என்ன ஆச்சு...எதாவது தப்பு பண்ணிட்டியா ....கவலை படாதே ....எங்கிட்ட சொல்லு.....நான் உனக்கு உதவி பண்றேன்....... என கிண்டலாக சொல்லி கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் “....அச்சோ ...இவளுக்கு எக்ஸரே மூளையாச்சே.......மைன்டுல என்ன ஓடுதுன்னு அப்படியே சொல்லிடுவாலே.....இவ கிட்ட இருந்து முதல்ல தப்பிக்கணும்” என்று நினைத்தவன்

“வா அபி...சும்மாதாண்டா....ஆமா நீ போன காரியம் என்ன ஆச்சு....ரகு என் நண்பன் தான்.எல்லாம் விபரமும் கிடைச்சுதா” என பேச்சை மாற்ற

“ம்ம்ம்ம் ...எல்லாம் கிடச்சுது...மீதிய அப்புறம் பாத்துக்கலாம்னு வந்துட்டேன்” என்று சொன்னவள்

“டி காபி எதாவது கொண்டு வர சொல்லட்டுமா” என அவள் கேட்க

“வேண்டாம் அபி.இப்போ நல்ல இருக்கு.சரி நீ களைப்பா வந்திருப்ப....போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா” என அவளை அனுப்புவதிலே குறியாக இருந்தான்.

“சரி....சரி நான் கிளம்பறேன்....ஆனா அர்ஜுன்.....எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ....அத நானே கண்டு பிடிக்கிறேன்” என ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு சிறித்து கொண்டே அங்கு இருந்து வெளியே வந்தாள்.

மனம் நிலை இல்லாமல் தவிக்க.....தான் செய்ததும் தவறுதான் என அர்ஜுனுக்கு உரைக்க இறுதி முடிவாக அவளுக்கு போன் செய்தான்.

ஆருத்ராவின் அலைபேசி ஒலித்து கொண்டிருக்க ...அவள் பாத்ரூமில் இருக்க ....அங்கு இருந்த ஷோபா அந்த போனை ஆன் செய்தாள் .

தலைவலி என்று வீட்டிற்கு வந்தவள் எப்படி இருக்கிறாள் என பார்க்க வந்த ஷோபாவை வனஜா ஆருத்ராவிர்க்கு துணையாக இருக்க சொல்ல அப்போது தான் அர்ஜுன் அழைத்தான்.

ஹெலோ என்ற குரல் கேட்ட உடன்” மிஸ் ஆருத்ரா இருக்காங்களா” என அர்ஜுன் கேட்க

“நீங்க யாரு” என ஷோபா கேட்க

“ஒரு நிமிடம் யோசித்தவன் நான் AP இன்டர்நேஷனல் MD அர்ஜுன் பேசறேன்” என்று சொன்னான்.

“சார் வணக்கம் சார் ...நான் ருத்ராவின் தோழி ஷோபா பேசறேன்.இன்னைக்கு அவங்க வீட்ல சின்ன விஷேசம் .ருத்ராவ பொண்ணு பார்க்க வராங்க ...அவ கொஞ்சம் வேலையா இருக்கா......என்ன விஷயம்னு சொன்னிங்கனா நான் சொல்லிடறேன்”என பணிவாக அவள் சொல்ல

அர்ஜுன் எதிர்புறம் அதிர்ந்து போய் நின்றான்.

“சார்....சார்” என எதிர்புறம் சத்தம் கேட்க

“நானே நேர்ல பேசிக்கிறேன்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

சில நிமிடம் அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவன் காரை எடுத்து கொண்டு கடற்கரைக்கு சென்றான்.அங்கு மணலில் அமர்ந்து யோசனையில் மூழ்கினான்.

இனி தான் அடுத்தது என்ன செய்ய வேண்டும்.முதலில் ஆருத்ரா தனக்கு ஒத்து வருவாளா என நினைத்தவன்.....அவள் இல்லாத வாழ்வை நினைத்த பார்க்க முடியாது என காதல் கொண்ட மனம் சொல்ல ....ஆனால் அவளது அவசர புத்தியும் ,கோபமும், திமிரும் உனக்கு ஒத்து வருமா என மூளை கேள்வி கேட்க..........,ஹஹாஹ் ...முதலில் அவளின் திமிரான அந்த பார்வையில் தானே நான் வீழ்ந்தேன்......நான் பணக்காரன் என்று தெரிந்த பின்பும் எந்த அலட்டலும் இல்லாமல் அவள் நடந்து கொண்ட விதம் தானே அவளிடம் எனக்கு பிடித்தது என மனம் அதற்க்கு ஈடு சொல்ல,இப்போது அப்படிதான் இருக்கும்.சிறிது நாள் கழித்து அதுவே பிரச்சினையாக மாறி விடும்.இந்த வயது அப்படி என அறிவு மறுபடியும் தடை சொல்ல.....இல்லை அவள் அதிக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறாள்....நான் அவளை மாற்றி விடுவேன்....இல்லை என்றாலும் நான் அப்படியே அவளை ஏற்று கொள்வேன்...முதன் முதலில் என் மனதை திருடியவள் அவள் தான்...இனி அவள் தான் என் மனைவி என் தன மனதின் முடிவுக்கு கட்டு பட்டவன்....நாளை என்ன செய்யவேண்டும் என முடிவு எடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் காலை ஆருத்ராவிர்க்கு போன் செய்தான் அர்ஜுன்.
ஆருத்ரா நான் அர்ஜுன் பேசறேன் ...இப்ப நீ எங்க இருந்தாலும் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள மகாலட்சுமி கோயிலுக்கு வந்திடு....சாக்கு ஏதும் சொல்லாத....நீ வர....இல்ல நீ இருக்கிற இடத்துக்கு நான் வந்து உன்ன தூக்கிட்டு வந்திடுவேன் என வேகமாக சொல்லி விட்டு தொலைபேசியை வைத்து விட்டவன் ,
ஹப்ப்பா.....நல்ல வேலை அவ பேச ஆரம்பிக்கல...இல்ல மவேனே அர்ஜுன் நீ மாட்னடி.......என் சொல்லி தனக்கு தானே சிறித்து கொண்டான்.

ஆருத்ராவிர்க்கு ஒன்றும் புரியவில்லை....அவள் அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தாள். என்ன செய்யலாம்.....நேத்து திட்டினதுக்கு இன்னைக்கு பலி வாங்க கூப்பிடறானோ......அவன் தான திட்டினான்.....போலாமா வேண்டாமா என அவள் யோசிக்க, ஆனால் மனமோ நீ செல் ...அவன் என்ன சொல்கிறான் என்பதை கேட்கலாம் என சொல்ல சரி என்று முடிவு பண்ணியவள் சார் வந்ததும் சொல்லி விட்டு கிளம்பினாள்.

அவள் வருவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்த அர்ஜுன் படபடப்புடன் இருந்தான்.தான் என்ன சொல்லணும்...அதற்கு அவள் எப்படி பதில் சொல்வாள்...கத்தி கூச்சல் போட்டால் எப்படி சமாளிப்பது என எண்ணங்கள் தாறுமாறாக ஒடிகொண்டிருந்தன.

நினைவுகள் மனதில் ஓடிகொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவன் சிலையான நிற்க .அங்கு ஆருத்ரா வந்து கொண்டிருந்தாள்.பச்சை மஞ்சள் காமிநேசனில் மணிப்புறி காட்டான் புடைவயும் ,தலையில் மல்லிகைபூ சரமும்.காதில் புதிதாக ஜிமிக்கியும்,கழுத்தில் சின்ன செயுனும் அணிந்து அவள் அன்னம் போல் நடந்து வர

தேவதை போல் ஒரு பெண்

இங்கு வந்தது தம்பிஉன்னை நம்பி

என இளயராஜாவின் இசை அவன் காதில் ஒலிக்க இசையோடு அவளையும் சேர்த்து ரசித்து கொண்டு நின்றான்.

அவன் அருகில் வந்தவள் வணக்கம் சார்...என்னை எதுக்கு வர சொன்னிங்க என அவள் கேட்டாள்.

எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டிருந்தவன் ...பின்னர் ஒருபெருமூச்சு விட்டுக்கொண்டு என்னுடன் வா என அவளை கோவிலுக்குள் அழைத்து சென்றான்.


மனதில் நினைத்தவளை அடைந்தே தீர வேண்டும்

என்று அவன் நினைத்தான்.

அவளோ மனம் என்ன சொல்கிறது என்பதையே அறியதவளாய்

குழம்பி போய் இருந்தாள்

திட்டம் போட்டு ஒரு மனம் செயல்பட

திக்கு தெரியாமல் ஒரு மனம் தவிக்க

இந்த இரு மனங்கள்கள் வாழ்வில் இணையுமா ??????????????????