அத்தியாயம் 8
ஆருத்ரா எதுவும் புரியாமல் அவனுடன் சென்றாள். அங்கு கடவுள் முன் சாமி கும்பிட்டவன் “அம்மா நான் உங்களை நம்பி இந்த காரியத்தை செய்கிறேன்.நீங்கள்தான் இதை நல்ல படியாக முடித்து தர வேண்டும்” என் மனதில் வேண்டினான்.
ஆருத்ராவிர்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.அவளும் கண்களை மூடி “தாயே உன்னை நம்புகிறேன்.எல்லாம் நல்லதாகவே இருக்க வேண்டும்” என் வேண்டினாள். ஆகமொத்தம் இருவரும் நடக்க போகும் செய்யல நல்லதாக இருக்க வேண்டியும் என்று வேண்டிகொண்டனர்.
கோவிலை 3 முறை இருவரும் வலம் வந்தனர்.பின்னர் அவன் ஆருத்ராவை அந்த மண்டபத்தின் படியில் அமர வைத்து தானும் அமர்ந்தான்.
பின்னர் அவளை பார்த்து “ஆரூ என்னை பார்...என்னை பார்த்தா உனக்கு பயமா இருக்க....இல்ல என்ன பத்தி எதாவது தப்பா கேள்விபட்டியா .....எனக்கு உண்மைய சொல்லு” என கேட்டான்.
ஆருத்ரா அவன் முகத்தை பார்த்தவள்,அவன் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலை குனிந்தவள் அமைதியாக இருக்க
“ஆரூ சொல்லு....நான் உன்கிட்ட சில விஷயம் சொல்லணும்...சொல்லு” என அர்ஜுன் சொல்ல
“என்னால முடியல சார்...உங்க கண்ண பார்த்து என்னால பேச முடியல,அத பார்த்தவே என்னை என்னமோ பண்ணுது...அதான் பிரச்சனையே...அதான் உங்கள பார்த்தா நான் திட்டிடு கிளம்பிடறேன்....நான் என்ன பண்ணுவேன்..”
இதை கேட்டதும் அர்ஜுனனின் மனம் கொட்டும் அருவி போல் துள்ளி குதிக்க....”குட்டிமா நிஜமாவாட.....உண்மையதான சொல்ற” என அவள் முகத்தை கையில் ஏந்தி கண்களில் ஏக்கத்தோடு கேட்க
“ஆமாம் என்று தலை ஆட்டியவள்...நான் எப்போ இப்படி ஆனேன் என்று எனக்கே தெரியல சார் ....நானே இத பத்தி உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்...நேத்து என்மேலையும் தப்பு இருக்கு..... சாரி” என வருத்தம் நிறைந்த குரலில் கூறினாள்.
“ஆரூ இங்க பாரு....... முதல்ல இந்த சார விட்டுடு....... அர்ஜுன் கூப்பிடு,அப்புறம் என் மேலதான் தப்பு....நான்தான் உன் கிட்ட சாரி கேட்கணும் என்ன.......
“இல்ல சார் என்றவள் அவன் முறைத்ததும் இல்ல அர்ஜுன் நான் அப்டி பேசினனாலதான நீங்க பேசினிங்க என்றாள்”.
“சரி அப்போ நான் சொல்றத நீ இப்போ அமைதியா கேட்கணும்” என சொல்லி விட்டு அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன்,ஆரூ உன்னை எனக்கு ரொம்ப பிடிசுருக்குடா....என் வீட்டு function பார்த்த அன்னைக்கே என் மனச நீ திருடிட்ட” என சொல்ல
அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள்....”என்ன சொல்றிங்க நீங்க...வேண்டாம் அர்ஜுன்.....நீங்க வேற ,நான் வேற ...”என கூறிவிட்டு அவனிடம் இருந்து தன கையை எடுத்து கொண்டு அந்தபுறம் திரும்பி அமர்ந்தாள்.
“இங்க பாரு ஆரூ...இங்க பாருன்னு சொன்னேன். “என அவன் வேகமாக சொல்ல
“என்ன ரொம்ப மிரட்ரிங்க” என வேகமாக சொல்லி கொண்டே திரும்பியவள் அவன் முகத்தை பார்த்ததும் மௌனமாகி விட
“ஆரு உன்ன பத்தி எனக்கும் எதுவும் தெரியாது அது உண்மை.ஆனா நீ தான் என் மனைவி அதும் உண்மை.கண்டிப்பா உன்ன முழுசா தெரிஞ்சுகிட்டுதான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்.நீயும் அதுக்குள்ள என்ன பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு.ஆனா குட்டிம்மா நீ எனக்கு உயிர்...அத யாருக்கும் விட்டு தர மாட்டேன்....அதுக்குள்ள அவன் பொண்ணு பார்க்கவந்தன்,,இவன் வந்தான்னு போய் நின்ன...அவ்ளோதான் தொலைச்சுடுவேன் உன்ன “ என மென்னமையாக ஆரம்பித்து மிரட்டலில் முடித்தான் .
அவன் சொன்ன விதத்தில் ஆருத்ராவிர்க்கு சிரிப்பு வர..”.ஒ நேத்து பொண்ணு பார்க்க வந்த மேட்டர் தான் இதுக்கு காரணமா” என கேட்க
“பின்ன என்னடி...ஒரு மனுஷன் 6 மாசமா உன்ன நினச்சு உருகிட்டு இருக்கேன்...எத்தன திட்டு ...அப்பப்பா ...நீ என்னடான்னா திடிர்னு ஒருத்தன் பொண்ணு பார்க்க வரான்னு போய் நிக்கிற. கேட்ட உடனே அப்டியே உயிரே போய்டுச்சு தெரியுமா..அதான் உன்ன பத்தி அப்புறம் தெரிஞ்சுக்கலாம்...முதல்ல லவ் மட்டர் சொல்லிடலாம்னு வர சொன்னேன்.”
“ஆரு உனக்கு என்ன பிடிச்சிருகுதான” என அவள் கைகளை தன கைகளுக்குள் வைத்து அவள் முகத்தை பார்த்து கேட்க
அவன் முகத்தை பார்த்து கொண்டே “பிடிக்காமயா நீங்க இவ்ளோ நேரம் பேசினத கேட்டு இருந்தேன்....என்ன இத வந்த உடனே சொல்லி இருக்கலாம்....கைய புடிச்சு கோயிலுக்கு உள்ள கூட்டிட்டு போய் இவ்ளோ பில்டப் கொடுத்திருக்க வேண்டாம்”என் அவள் அசால்ட்டாக சொல்ல
“என்னது என அதிர்ந்தவன் அடி பாவி ...விடிய விடிய தூங்காம எவ்ளோ ப்ளான் பண்ணி எத்தன டைம் இந்த டயலாக் சொல்லி ....இங்க வந்து என்ன நடக்கும்னு திக் திக்னு உகார்ந்திருந்தா...இப்படி சொல்லிட்டியே “என நெஞ்சை பிடித்து வருத்தமாக சொல்வது போல் நடிக்க
இந்த டயலாக் பேசறதுக்கேவா...என சொன்னவள்
“எனக்கே நேத்துதான் அர்ஜுன் புரிஞ்சுது.என்னால இன்னொரு ஆண் மகன் முகத்தை பார்க்கவே பிடிக்கலை.எனக்குள்ளே நான் யோசித்து பார்த்த போது தான் என் மனசு உங்களை தேடுவது தெரிஞ்சுது.அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சியே நிறுத்திட்டேன்”.
ஹேய் ஆரூ அப்போ நீ என்ன லவ் பண்ற மேட்டர் உங்க அம்மாகிட்ட சொல்லிட்டியா” என அவன் சந்தோசமா கேட்க
“என் அறிவுகொளுந்தே.... நீங்க என்ன லவ் பண்றதே இப்பதான் எனக்கு தெரியும்....அப்புறம் எப்படி நான் சொல்லுவேன்....உடம்பு சரி இல்லை இன்னொரு நாளைக்கு வச்சுக்கலாம்னு சொன்னேன்.அம்மாவும் போன் பண்ணி சொல்லிட்டாங்க” என சிரித்து கொண்டே சொன்னாள்.
ஹப்பா!!!!!!!! என பெருமூச்சு விட்டவன் “ஆரூ “என ஆசையோடு ஆழைக்க.....அவன் குரல் அவளை ஏதோ செய்ய ...”ம்ம்ம் சொல்லுங்க “என்றாள் அவனை நிமிர்ந்து பார்காமலே..
“என்னை பாரு ஆரூ “..என்றவன்...... அவள் முகத்தை தன் இருகைகளால் மேல் தூக்கி அவள் கண்களை பார்த்து கொண்டே ...எந்த சூழ்நிலை வந்தாலும் நம்ம இரண்டு பேரும் பிரியக்கூடாது....என்னடா “என் அவன் சொல்ல
“அஜுன் என்னையும் மீறி நான் எதாவது தப்பு செஞ்சாலும் நீங்க என்ன வெறுக்க கூடாது....நீங்க சொல்லுங்க திருத்திக்கிறேன்” என அவள் சொல்ல
:ஹேய் இப்ப என்ன சொன்ன அஜுனா...சூப்பரா இருக்குடி...மனசுக்குள்ள இவ்ளோ ஆசைய வச்சுக்கிட்டு என்ன சுத்தா விட்டுட நீ “ என்று சொன்னவன்
அவளை மறுபடியும் கோவிலுக்குள் அழைத்து சென்று அங்கு கடவுளிடம் தங்களுடைய முடிவை தெரிவித்து அங்கு இருக்கும் குங்குமத்தை எடுத்து ஆருத்ராவின் நெற்றியில் வைத்தான் அர்ஜுன்.
இந்த நிமிடம் இந்த நிமிடம்
இப்படியே இருக்காதா
என ஆருத்ராவின் மனம் ஏங்க அவளை தன தோளோடு அணைத்தவன் இனி நீ என் மனைவி.என்னை பொறுத்த வரை இந்த நாள் என் வாழ்கையின் ஒரு பொன்னான நாள்” என்று சந்தோசத்துடன் சொன்னான்.
இருவரும் பேசிகொண்டே வெளியே வர ...”அஜுன் எனக்கு லேட் ஆகிடுச்சு நான் கிளம்பறேன்” என கிளம்ப ...
“என்ன ஆரூ அதுக்குள்ள கிளம்பற...சரி உன்னை மறுபடியும் பார்க்கிற வரைக்கும் நினைப்பு இருக்குற மாதிரி ஸ்ட்ராங்க ஒன்னு கொடுத்துட்டு போ” என சொல்லி கொண்டே முகத்த அவள் அருகில் கொண்டு செல்ல...
“ஸ்ட்ராங்கா ...அப்போ இரண்டு அடிதான் கொடுக்கணும் என சொல்லிகொண்டே அவனை தள்ளி விட்டவள் இது கோயில் அர்ஜுன்.நாளைக்கு பார்க்கலாம்” என சொல்லி கிளம்பி விட்டாள்.
அர்ஜுனும் கிளம்பி தனது கம்பெனிக்கு வந்தான்.மனதின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய,புன்னைகையோடு உள்ளே வந்தான்.
“டேய் அர்ஜுன்.....வாழ்த்துக்கள்டா” என அவனை கட்டி அணைத்தான் அகில்.
அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை...”இவனுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சா.....யார் சொல்லி இருப்பா....யாருக்குமே தெரியாதே” என அவன் யோசனையுடன் முழித்து கொண்டு நின்றான்.
அகில் “என்னடா முழிக்கிற.....நமக்கு அந்த ஜப்பான் கம்பெனியல பத்து கோடிக்கு ஆர்டர் கிடைத்திருக்கு “ என சொன்னவன் சந்தோஷத்தில் குதிக்க
அர்ஜுனுக்கோ இன்னைக்கு நடப்பது எல்லாமே கனவா என்பது போல் வாயை பிளந்து நின்றான்.
அப்போது எங்கே அபி வர அவள் உள்ளே நுழைந்ததும் “ஹே மித்து நமக்கு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு ...இத மட்டும் நம்ம நல்லா பண்ணிட்டோம் ...இந்த வருடம் நம்ம தான் பிஸினஸ்ல டாப்பெர்ஸ் “ என சொன்னவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வெளியே சென்றான்.
அபிக்கு ஒன்றும் புரியவில்லை....ஆனாலும் அகில் செய்த காரியத்தில் அவள் முகம் சிவக்க ...யாரவது பார்த்து விட்டார்களா என சுற்றிலும் பார்த்தவள் ...அர்ஜுனும் அலைபேசியில் வேறுபுறம் திரும்பி பேசிக்கொண்டு இருக்க...ஹப்பா என்று பெருமூச்சு விட்டவள்....”சும்மா சண்டபோட்டுகிட்டே இருப்பான்...இல்லேன்னா இப்படி எதாவது பண்ணிடறான்...இவன வச்சு நான் எப்படி தான் சமாளிக்க போறோனோ “என புலம்பி கொண்டே வெளியே வந்தாள்.
அகில் மறுபடியும் அர்ஜுனின் அறைக்கு வந்தவன் “அர்ஜுன் இனி அடுத்தது என்ன செய்யணும்னு முடிவு பண்ணனும்.நமக்கு அவங்க கொடுத்திருக்க டைம் ரொம்ப கம்மி.அதுக்குள்ள நம்ம ஆர்டர் முடிச்சு ஆகணும்.என்ன பண்ணலாம்” என கேட்க
அதான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கேன்.நம்ம டிசைனர்ஸ் வேற அவங்க விடுமுறையில் போய்ட்டாங்க...என்ன பண்றது “என யோசித்தான்
“சரி விடு...நான் வேற பக்கம் கேட்கிறேன்” என சொல்லி விட்டு வந்தவன் அங்கு stictching மேனேஜர் அழைத்து “எனக்கு உடனடியாக 1௦௦ ஆட்கள் வேலைக்கு வேண்டும்.உடனே ஏற்ப்பாடு செய்” என்றான் .
அவனோ “சார் அர்ஜென்டுனா சம்பளம் அதிகமா கேட்பாங்க....எப்படி வசதி” என்று கேட்க
“அதெல்லாம் கொடுக்கமுடியாது...எப்பவும் கொடுக்குற சம்பளந்தான் அத கரெக்டா சொல்லிடு” என சொல்லிவிட்டான் அகில்
உடனே அவன் “என்ன சார் நீங்க ஓனர் மாதிரி பேசறிங்க...நீங்களும் எங்கள மாதிரி சம்பளத்துக்கு இருக்கறவர்தான...என்ன சொந்தகாரங்க அவ்ளோதான்...நீங்க பாஸ் கிட்ட கேட்டு வந்து சொல்லுங்க” என அவன் கூறியவுடன்
அகிலிற்கு தனது மொத்த சந்தோசமும் வடிந்தது போன்ற உணர்வு.எதுவுமே பேசாமல் நின்றவன் பின்பு “நான் வாங்கிற சம்பளத்திற்கு சரியாக வேலை செய்கிறேன்.நீ சென்று நான் சொன்னதை மட்டும் செய்” என சொல்லிவிட்டு விறு விறு வென்று நடந்து தன் அறைக்குள் சென்று விட்டான்.
இவை அனைத்தையும் தாமரையின் அருகில் நின்று பார்த்து கொண்டிருந்தாள் அபி.அகில் முகத்தை பார்த்தே அவனது மனநிலை என்ன என்பதை அறிந்து கொண்டவள் ,தற்போது தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலைமையை எண்ணி வருந்தினாள்.
ஏனெனில் இந்த நிலைமையை ஏற்படுத்தி கொண்டவனும் அவன் தான்.பத்மநாபன் பாட்னர் என்று உன்னை அறிமுகபடுத்துகிறேன் என்று சொன்னதற்கு அவன் மறுத்து என்னையும் இங்கு உள்ள பணியாளர்கள் போலவே நடத்துங்கள் என கேட்டு கொண்டான்.அதனால் இப்போது அவளால் ஏதும் செய்ய முடியவில்லை.
கிடைத்த சந்தோசம் அதிக நேரம் நீடிக்காமல் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில் அவள் அப்படியே அமர்ந்து விட
எதோ ஒன்று தன்னிடம் இருந்து சென்று விட்டதாக எண்ணி அகில் மனத்திற்குள்ள வருந்த
தனது வாழ்கயில் இன்று ஏற்பட்ட பல மாற்றங்களை எண்ணி இன்ப கனவுகளில் அர்ஜுன் மூழ்கி இருக்க
விதி இவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தது.
இரவு உணவு வேலையின் போது தொழில் விஷயமாக அப்பாவிடம் பேசி கொண்டிருந்தான் அர்ஜுன் .
“அப்பா டிசைனர்ஸ் தான் இல்ல. இரண்டு பேர் இருக்காங்க.எப்படி சமாளிக்கறதுன்னு தெரியவில்லை” என புலம்பி கொண்டிருந்தான்.
“என்ன பண்ணலாம் அர்ஜுன்...புது டிசைனர்ஸ் யாரவது பணியில் அமர்த்தலாம் .அவங்க சொன்ன நேரத்திற்குள் நம்ம ஆர்டர் முடிச்சு குடுக்கணும்...நானும் முயற்சி பண்றேன்” என கூறினார்.
இரவு அனைவரும் படுக்க செல்ல அபி மட்டும் யோசனையாக தோட்டத்தில் அமர்ந்து இருந்தாள்.வாக்கிங் வருவதற்க்காக வெளியே வந்த பத்மநாபன் அவளை பார்த்து கொண்டார்.
“அபிம்மா என்ன ஆச்சு....தூங்கலியா....இங்க உட்கார்ந்திருக்க” என கேட்டு கொண்டே அவள் அருகில் அமர்ந்தார்.
அவரை நிமிர்ந்த பார்த்தவள் “அப்பா நான் ஒன்று கேட்பேன் ..நீங்கள் அதற்க்கு மறுக்க கூடாது “என கேட்க
“என்னடா கண்ணா ...நீ கேட்டு நான் எதாவது இல்லைனு சொல்லிருக்கனா.....உனக்கு என்ன வேனும் கேளு” என அவர் சிரித்து கொண்டே சொல்ல
“அப்பா இந்த ஆர்டர்ல நான் டிசைனரா வேலை பார்கிறேன் .எனக்கும் ஒரு அனுபவம் கிடச்ச மாதிரி இருக்கும்.வேலையும் நடக்கும்” என ஆர்வத்துடன் கேட்டாள்.
அவ்ளோதான அபிம்மா ...நீ நம்ம கம்பனில் வேலை பாரு ...வேண்டாம்னு சொல்லல...ஆனா இந்த ஆர்டர் வேண்டாம்.இது ரொம்ப பெரியது.வேலையும் அதிகம்.நீ சின்ன பொண்ணு.உனக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டம்.எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.இதுக்குதான் இங்க உட்கார்ந்திருக்கியா ...போ போய் படுத்து தூங்கு” என அவளிடம் பொறுமையாக சொன்னார் பத்மநாபன்.
“அப்பா என்னால் முடியும்.நான் கண்டிப்பா நல்ல பண்ணுவேன் ...எனக்கு நம்பிக்கை இருக்கு.எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கொடுங்கப்பா என கெஞ்சினாள்” அபி.
அவளின் வார்த்தையில் இருந்த அழுத்தம் அவரை யோசிக்க செய்தது.இதுவரை அபி கேட்டு அவர் இல்லையென்று சொன்னதில்லை .
“சரிடா நான் அர்ஜுன் கிட்ட சொல்றேன் என சொன்னவர் இப்போ சந்தோசம் தானே...போய் தூங்கு போ என்றது தேங்க்ஸ் பா” என அவரின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள்.
மறுநாள் பத்மநாபன் இந்த விஷயத்தை அர்ஜுனிடம் சொன்னதும் அவன் ஒத்து கொள்ளவில்லை .
“அப்பா அவள் சின்ன பெண்.புரியாமல் பேசுகிறாள் என்றால் நீங்களும் கூட சேர்ந்து அதே சொல்றிங்க.அது எல்லாம் ஒத்துவராது” என மறுக்க
அர்ஜுன் அவள் ஆசைபடுகிறாள்.அவளை சும்மா கூட வைத்து கொள்.நம்ம வேற அனுபவம் வாய்ந்த டிசைனர வைத்து கொள்ளலாம் என சொல்ல
என்னமோ பண்ணுங்க....அவளை அகிலை போய் பார்க்க சொல்லுங்க...நான் பேங்க் போகணும் என கூறிவிட்டு கிளம்பினான்.
டிசைனர் இல்லாமல் எப்படி சமாளிப்பது என அகில் குழம்பி கொண்டிருக்கும்போது அபி உள்ளே நுழைந்தாள்.
அவளை பார்த்தவன் “இங்க பாரு அபி...இனி வேலை எங்களுக்கு அதிகமாக இருக்கும் .உன்னோட ப்ராஜெக்ட் எல்லாம் இப்ப பண்ண முடியாது.நீ கிளம்பி வீட்டிற்க்கு போ” என சொல்லி விட்டு கணினியில் வேலையை தொடர்ந்தான்.
அவள் அசராமல் அப்படியே நிற்க ....”உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா.....நீ நினச்சுதுதான் செய்யணும்னு எப்பவும் பிடிவாதம்.நாங்க இங்க பிசியா இருக்கோம்னு தெரியும் தான உனக்கு அப்புறம் என்ன” என கத்த
“சும்மா கத்தாதிங்க ...நான் ஒன்னும் என் ப்ராஜெக்ட் விஷயமா வரல.....இப்போ எடுத்ருக்க ஆர்டேற்கு டிசைனரா வந்திருக்கேன்” என சொல்லி கொண்டே அவன் முன் அமர்ந்தவள் .........என்ன பண்ணனும்னு எனக்கு விளக்கமா சொல்லுங்க நான் பண்றேன்....அப்புறம் இந்த மாதிரி திட்ற வேலை எல்லாம் வச்சுகாதிங்க .....என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்றாங்க ...உங்க மாமா எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி கோபமா இருக்கங்கனு” என சொல்ல
“மாமான்னு வெளியே கூப்பிடாதேன்னு சொன்னேன்ல” என அவன் கோபபட
சும்மா இருங்க மாமா ....மாமாவ மாமான்னு கூப்பிடாம வேற எப்படி கூப்டுவாங்கலானு என் தோழி கார்த்தி கிண்டல் பண்றா
ஒரு மனுஷன் 24 மணிநேரமும் கோபப்பட்டா எப்படின்னு பிரத்தியு திட்றா
இந்த தேனு என்னடான்னா இன்னைக்கு நீங்க 2பேரும் வாயல சண்டை போட்டிங்களா ,கண்ணால சண்டை போட்டிங்கலானு ரன்னிங் கமெண்ட்ரி கேட்கறா எல்லாம் உங்களால தான் என அவன் மேல் குற்றம் சொல்ல
“யாரு இந்த அண்ணாச்சி பேக்கரில ஒரு குருப்பா உக்காந்து கடலை போட்டுட்டு இருப்பிங்கலே அந்த கும்பலா ...அவங்க எல்லாம் அறுந்த வாலுங்க...அவங்களோட சேராதேன்னு எத்தன டைம் உன்கிட்ட சொல்றது” என அகில் சொல்ல
“அதை விடுங்க மாமா நீங்க. பேச்சை மாத்தாதிங்க இனி இப்படிதான் கூப்டுவேன்.
நான் அப்பா கிட்ட சொல்லிட்டேன்.அர்ஜுனும் சரின்னு சொல்லிட்டான்.நீங்கதான் இப்போ பிரச்சனை பண்றிங்க” என சொன்னாள்.
ஒரு நிமிடம் யோசித்தவன் “சரி நீ தாமரை அறையில் இரு .நான் கூப்பிடுகிறேன்” என்று சொன்னான்.
பின்னர் அர்ஜுனக்கு போன் செய்தவன் ...அவன் வந்து கொண்டிருப்பதாக கூற அவனுக்காக காத்து இருந்தான்
அப்போது பத்மநாபனும் வர அவரது அறைக்கு அகிலும் அர்ஜுனும் சென்றனர்.
“என்னாச்சு அர்ஜுன் பேங்க் மேனேஜர் என்ன சொன்னார்” என பத்மநாபன் கேட்க
“எல்லாம் பேசிட்டேன்பா.....அந்த சைடு ஒன்னும் பிரச்சனை இல்லை .இன்னும் கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ் கேட்டு இருக்காரு அவ்ளோதான்” என்றான்.
“அகில் உன் சம்பந்தட்ட வேலைகள் எந்த லெவெல இருக்கு என பத்மநாபன் கேட்க,
டைலர்ஸ் எல்லாம் ரெடி மாமா .மெட்டீரியல் ஸ்டாக்கும் இருக்கு. இந்த டிசைனர்ஸ் தான் இப்போ பிரச்சனை ...நானும் சொன்ன இடத்துல இருந்து ஆல் வரலை ...அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான்.
“சரி அதுக்கு என்ன பண்ணலாம்னு பார்த்து சீக்கிரம் வேலைய ஆரம்பிங்க “என சொன்னவர்...”சரி அகில் நீ போய் உன் வேலையை கவனி,அர்ஜுன் அந்த பையர் அனுப்புன மெயில் எனக்கு எடுத்தட்டு வா” என்று சொன்னதும் அர்ஜுன் வெளியே செல்ல அபி உள்ள நுழைந்தாள்.
அந்த சமயத்தில் அகில் அவன் மாமாவிடம் “மாமா அபி வேற என்னோமோ வந்து உளறிட்டு இருக்கா....இந்த ப்ராஜெக்ட் டிசைனர் தான் எடுத்து பண்றதா....... நீங்களும் சரின்னு சொன்னிங்களா “என்று கேட்டான்.
ஆமா அகில் ....என்கிட்டையும் கேட்டா ....நானும் எவளவ்வோ சொல்லி பார்த்தேன் கேட்கல .....சின்ன பொண்ணுதான...விளையாட்டுதனமா கேட்கிறா...வேலைய பார்த்ததும் பயந்து அவளே வேண்டாம்னு சொல்லிடுவா...அதும் உன்னோட பொறுப்புள இருக்கறதால சீக்கிரம் வேண்டாம்னு சொல்லிட்டு வந்திடுவா கவலை படாதே” என அவர் சிறித்து கொண்டே சொல்ல
“இல்ல மாமா இது ஒத்து வராது.அவளை வர வேண்டாம்னு சொல்லுங்க...அப்புறம் இங்க மத்த வேலை எல்லாம் பாதிக்கும்” என்று சொல்ல
“அப்படியா ....சரி அகில் நான் மறுபடியும் பேசி பார்கிறேன்” என்றார்.
சரி என்று சொல்லி விட்டு வெளியே வர அங்கு கதவு அருகில் அனல் கக்கும் கண்களோடு அபி அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
பெண்ணே உந்தன் ஒர் பார்வையில்
என் உயிரை சிறை பிடித்தாய்
உனது இதய சிறைக்க்குள்
ஆயுள் தண்டனை அனுபவிக்க
ஆசையுடன் காத்திருக்கிறேன்
அன்பே
என இரண்டு புறாக்கள் சிறகடித்து பறக்க
உள்ளம் முழுதும் உன் நினைவுகள்
என் உதடுகள் உதிர்க்கும் வார்த்தை
உன் எண்ணத்தின் ஓசை
அது உனக்கு புரியவில்லையா
ஒரு குயில் கானம் பாட
காலத்தின் பதில் என்னோவோ??????????????????