• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 09

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
 அத்தியாயம் 9

அபியை வெளியே பார்த்ததும் ஒரு நிமிடம் தயங்கி நின்றவன் ,பின்னர் ஒன்றும் பேசாமல் சென்று விட்டான்.

தனது அறையில் வந்து அமர்ந்தவன் மனதிலோ பெரும் குழப்பம்.”தான் ஏன் இப்படி பண்ணுகிறேன்.நானும் நிம்மதி இல்லாமல் அவளயும் நிம்மதியாக இருக்க விடாமல் தவிக்கிறேனே என மனதிற்கு புலம்பியவன்.....இவள் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் இது தான் பிரச்சனை...அதான் நான் அவளை வேண்டாம் என்று சொல்கிறேன்” என நினைத்து கொண்டிருக்க...

நினைவின் நாயகியே கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள்......... “இங்க பாருங்க உங்க மனசுள என்ன நினச்சுட்டு இருக்கீங்க .நான் அப்பா கிட்ட எவ்ளோ கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கினேன் தெர்யுமா.இப்போ என்னதான் பிரச்சனை உங்களுக்கு?நான் இங்க வேலை செய்யறது உங்களுக்கு பிடிக்கலியா ...இல்லை என்னையே உங்களுக்கு பிடிக்கலையா இந்த வார்த்தையே சொல்லும்போதே அபியின் தொண்டை கமற,நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் எதிர்பார்களை மாமா .இவ்ளோ வெறுப்பா என் மேல உங்களுக்கு.........பரவாயில்லை ஆனா நான் இந்த வேலையே கண்டிப்பா எடுத்து செய்வேன். என்ன உங்க முன்னாடி வரகூடாது அவ்ளூதான ...நான் வரலை....... ....ஆனா மறுபடியும் அப்பாகிட்டயும் அர்ஜுன்கிட்டையும் எதாவது சொன்னேங்க அவ்ளோதான்” என ஆத்திரமும் கோபமும் கொந்தளிக்க கொட்டி தீர்த்து விட்டு புயலென வெளியேறினாள்.

அவளது பேச்சில் சிலையாக அமர்ந்திருந்தவன் அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர்.இப்படி பேசி பேசி தானடி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருகிறாய்.

என் எண்ணம் உனக்கு புரியவில்லையா
நெருப்பாய் நின்று உன்னை
விலக்க நினைக்கிறன்
ஆனால் நீயோ எண்ணெய்யாக மாறி .
என்னுடனே கலந்துவிட துடிக்கிறாய்
புயலாய் வீசி உன்னை
புறம் தள்ள நினைக்கின்றேன்
ஆனால் நீயோ
நாணல் போல் வளைந்து கொடுத்து
என்னை வசபடுத்துகிறாய்
முடியவில்லையடி என்னால்
உன் முகம் பார்க்கும் போது
என் முகம் மறந்து விடுகிறது
என் எண்ணமெல்லாம் நீயாக
என் சுவாசமெல்லாம் நீயாக
என் உயிரெல்லாம் நீயாக நிரம்பி இருக்கிறாயடி
விலகி இருந்தால் நினைவு மறையும்
என்று நினைத்தேன்
ஆனால் நித்தமும் உன் நியாபகம்
உயிரோடு என்னை கொல்லுதடி
தொலைவில் இருக்கும்போது
உன் நினவு என்னை கொல்ல
அருகில் வந்தால்
என்தன்மானம் என்னை வெல்ல
உன் நினைவிற்கும்
என் தன்மானத்திருக்கும் இடையே
சிக்கி சின்னாபின்னமாகிறேன்
இதற்கு முடிவு தேடி
என் மனம் துடிப்பதை நீ அறிவாயா !!!!!!!

என புலம்பி தவித்தவன்,மனதின் பாரம் தலையில் ஏற விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வந்தான்.

மாலை அர்ஜுன் அகிலை தேடி வந்தான்.”என்ன ஆச்சு அகில் ...போன் ஸ்விட்ச் ஆப்னு வருது...என்னாச்சுடா .....ரொம்ப டல்லா தெரியற ....எதாவது பிரச்சனையா ......யாராவது எதாவது சொன்னங்கலா” என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அர்ஜுன் ...கொஞ்சம் பழைய நினைவுகள் அவ்ளோதான்” என சொன்னான்.

“ஏண்டா அப்பா அம்மா நியாபகம் வந்திடுச்சா”என்று அவன் கேட்க
எதுவும் பேசமல அமைதியாக கீழே பார்த்த படி அமர்ந்திருந்தவன் ....”விடுடா......கொஞ்சம் குழப்பம் அவ்ளோதான்” என கூறிவிட்டு “ஆமா நீ வீட்டுக்கு போகலியா” என கேட்க

இல்ல அகில் இந்த ஆர்டர் கிடச்சிருக்குள்ள ...பிசினெஸ் வட்டாரத்துல ஒரு சின்ன பார்ட்டி கொடுக்கணும்...அதுக்கு நீயும் வந்தா நல்லா இருக்கும்....அதான் கூப்பிட வந்தேன்.வரலைன்னு சொல்லிடாத...இது நம்ம கொடுக்கிறோம்.நீ வந்தே ஆகணும்” என்று அவனை வற்புறுத்தி அழைத்து சென்றான்.

அங்கு நண்பர்கள் நிறைந்து இருக்க அகில் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தான்.அர்ஜுனை சுற்றி ஒரு கும்பல் மொய்த்து கொள்ள அகில் தனியாக சென்று அமர்ந்தான்.


“என்ன அகில் எப்படி இருக்க......மறுபடியும் வரேன்னு சொல்லிட்டு போனிங்க...காணோம் என கேட்டு கொண்டே அவன் அருகில் அமர்ந்தான்” ரகு .

அகில் அவனை பார்த்து புன்னகைத்தவன்....”இப்போ கொஞ்சம் பிசி ....கண்டிப்பா வரோம்” என சொன்னதும்

“பரவில்லை அகில் ....அபி எப்படி இருக்காங்க...ஸ்வீட் கேர்ள்.......அவங்க டேஸ்ட் என்னோட டேஸ்ட் ஒன்னா இருக்கு...அவங்ககிட்ட நான் அவங்கள ரொம்ப கேட்டதா சொல்லு.....அப்புறம் இன்னொரு விஷயம் என ஆரம்பித்தவன் ...இல்ல நான் அதை அர்ஜுன்கிட்ட சொல்லிகிறேன்” என சொல்லி விட்டு எழுந்தவன்

“அகில் நீங்க தப்பா நினைகளைனால் அபியோட போன் நம்பர் கொடுக்கரின்களா” என கேட்க ....

அகில் ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு” அதை அர்ஜுனிடம் கேட்டு வங்கி கொள்ளுங்கள்” என சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.ஆனால் அதற்கு மாறாக மனம் கொதித்து கொண்டிருந்தது.என்ன திமிர் இருந்தால் எங்கிட்ட வந்து நம்பர் கேட்ப்பான் என பொருமிகொண்டிருக்க

அப்போது அங்கு ட்ரிங்க்ஸ் வர ஒரு வேகத்தில் அதை எடுத்தவன் அப்படியே குடித்து விட்டான்.ரகு “அச்சோ அகில் போதும் என்ன இது...இவ்ளோ குடிக்க கூடாது”என தடுக்க ...அவனை முறைத்தவன் அதில் இருக்கும் எல்லா மதுவையும் காலி செய்தான்.

அர்ஜுன் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே திரும்பி பார்க்க

அங்கு அகில் நிதானம் இல்லாமல் இருப்பதை கண்டு விரைந்து அவனருகில் வந்தான்.

அருகில் ரகு நிற்க ...”என்னாச்சு ரகு ...நீ அவனை கட்டாயாபடுத்தினியா ...அவனுக்கு இது பழக்கம் இல்ல” என சொல்ல

“இல்ல மச்சான் நான் ஒன்னும் சொல்லல...அவனேதான் சொல்ல சொல்ல கேட்காம எடுத்து குடிச்சான்” என்றான்.

“என்னாச்சுடா அகில்....இன்னைக்கு ஏன் இப்படி இருக்க” என கேட்டு கொண்டே

ரகு நான் இவனை வீட்ல விட்டுவரேன்.அது வரைக்கும் கொஞ்சம் மேனேஜ் பண்ணுடா” என சொல்லி விட்டு அகிலை அழைத்து சென்றான்.
அகிலின் வீட்டிற்க்கு சென்று அழைப்பு மணி அடித்தது அர்ஜுன் உதவியாளர் கார்த்திக் வந்து கதவை திறந்தான்.

அகிலும் கார்த்தியும் ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தனர்.கார்த்திக் இவர்களை விட சிறியவன் இவன் கல்லூரியில் படிக்க அர்ஜுன் தான் உதவி செஞ்சான்.படிப்பு முடிந்ததும் தன்னுடனே அவனை வைத்து கொண்டான்.கார்த்தியும் அலுவலகத்தில் அர்ஜுனை தெரிந்தது போல் காட்டி கொள்ள மாட்டான்.

கதவை திறந்தவன் அர்ஜுன் அகிலை தாங்கி பிடித்திருந்ததை பார்த்ததும் “என்னாச்சு பாஸ் “என்று வந்தவன் அவனும் சேர்ந்து அவனை கை தாங்களாக உள்ளே அழைத்து சென்றான்.

“கார்த்திக் ஒன்னும் இல்ல.கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டிருக்கான் .இவனை பார்த்துகொள்.மற்றவர்கள் எனக்காக காத்து இருப்பார்கள்.நான் அவர்களை அனுப்பி விட்டு வந்து பார்கிறேன்” என சொல்லி விட்டு கிளம்பினான்.

கார்த்திக் அகிலை அவனது அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து உடைகளை சரி செய்தான்.

அப்போது “ஏண்டி என்னை கொல்ற .....நீ எனக்கு வேணும்டி......நீ இல்லாம என்னால இருக்க முடியாது....ஆனா வேண்டாம்......அச்சோ அது தப்பு “என அகில் கண்டபடி உளற

“சார் என்ன ஆச்சு...... சார்... “என கார்த்தி அவனை உலுக்க
அவனை நிமர்ந்து பார்த்தவன் ...”கார்த்தி நீயா...என்னால முடியலடா...என்னால அவளை மறக்க முடியலடா,...இன்னைக்கு ரொம்ப கோபமா பேசிட்டா தெர்யுமா...ரொம்ப கஷ்டமா போச்சு ...இந்த ரகு வேற என்கிட்ட வந்து அவ போன் நம்பர் கேட்கிறான்.என்ன பார்த்தா எப்படி தெரியுது எல்லாருக்கும் ......எனக்கும் மட்டும் ஏண்டா இப்படி எல்லாம் நடக்குது ...

அவளை பிடிக்கலையானு கேட்கராடா...அது எப்படி அப்படி கேட்கலாம்.அவதானடா என் உயிரே,,,நானே அவதானடா....ஆனா அது நடக்குமா என அச்சத்துடன் கேட்டவன்....... நடக்காதே அவோளோட நான் வாழ்வது நடக்காதே ...அதான் பிரச்சனை” என தன மனதில் உள்ள வேதனையை வார்த்தையால் வடிக்க முடியாமல் உளற

“சார்...சார் கொஞ்சம் அமைதியாக இருங்க என சொல்லி விட்டு அவரின் அருகில் அமர்ந்து நாங்க இருக்கோம் உங்களுக்கு ...என்ன பிரச்னை சார்...என்ன உங்க தம்பியா நினைத்து கொள்ளுங்கள் ,நான் உங்களை என் சகோதரனாகதான் பார்கிறேன்” என சொல்ல

அகிலின் கண்களில் இருந்து கண்ணீர் வர அதை பார்த்த கார்த்திக் அதிர்ந்து விட்டான்.அவன் இது வரை பார்த்த அகில் வேற.எப்போதும் ஒரு கம்பீரம் ,குறைவான பேச்சு ,தெளிவான முடிவு ,எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாத ஒரு இயந்திர மனிதன் எனபது அகில் பற்றிய அவனது அபிபிராயம் .அவன் கண்களில் கண்ணீரா ....கார்த்திக்கால் நம்ப முடியவில்லை.

“சார் அழாதிங்க ....சார் இதை நீங்க எப்படி எடுதுக்குவிங்கனு தெரியல...மனசில் இருகிறதா வெளியே கொட்டிடுங்க ....உங்களுக்குள்ளே வச்சு புளுங்காதிங்க” என சொல்ல

மடை திறந்த அருவி போல கொட்டி தீர்த்தான் அகில்.

“கார்த்தி நான் அவளை பார்க்கும் போது 9 வயது இருக்கும் அவளுக்கு.குட்டியா துரு துறுன்னு சுத்திகிட்டே இருப்பா” என்று சொன்னவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.

தாய் தந்தை இழந்து அத்தை வீட்டிற்கு முதன் முதலில் வருகிறான் அகில்.வீட்டை பார்த்ததும் மலைத்து நின்றவன் ,இங்கு உள்ள மனிதர்கள் எப்படி இருப்பார்களோ என்ற எண்ணத்துடனே உள்ளே நுழைந்தான்.


“டேய் அண்ணா நில்றா....அந்த பார்பிய கொடுத்திடு” என மழலை குரலில் கத்தி கொண்டு ஒரு குட்டி தேவதை ஓடிவர

“நான் கொடுக்க மாட்டேன்.ஏய் குட்டி பிசாசு என் வாட்ச் எங்க வச்சேன்னு சொல்லு அப்பத்தான் தருவேன்” என சொல்ல

“எனக்கு நிஜமா தெரியாது அர்ஜுன் ...நான் பார்க்கவே இல்ல” என கண்களை உருட்டி முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சொல்லும்போதே ,

“எனக்கு தெரியும் நீதான் எடுத்த ...அதை கொடு ..இல்ல இந்த பார்பிய தூக்கி போட்டுடுடவேன்”என சொல்லி கொண்டே அர்ஜுன் அதை தூக்கி போட

“அச்சோ என் பார்பி போச்சே” என கத்தி கொண்டே ஓடியவள் “போடா.......உன்னோட வாட்ச் பிஷ் டேங்கல போட்டத நான் சொல்ல மாட்டேன் என கத்தி கொண்டே ஓடினாள்.

“என்னது.....பிஷ் டேங்கள போட்டியா” என அதை நோக்கி ஓடினான் அர்ஜுன்.உள்ளே நுழைந்த அகிலின் கையில் அந்த பொம்மை விழ அதை கையில் பிடித்தவன் திருப்பி திருப்பி பார்க்க

வேகமாக வந்தவள் அவனை பார்த்ததும் அப்படியே நின்றவள்,மூச்சு வாங்க கண்களை விரித்து அவனை பயத்துடன் பார்க்க

அதை பார்த்த அகிலிற்கு சிரிப்பு வந்து விட்டது.ஒரே பையனாக வளர்ந்ததால் அவளை பார்த்த உடன் அவனுக்கு பிடித்து போனது.அதுவும் அவள் பயத்துடன் மிரண்டு முழிக்க அந்த முகம் அவன் நினைவில் பதிந்து போனது .அவன் அந்த பொம்மையை அவளிடம் கொடுக்க ,அவள் மிரண்டு பின் வாங்க


‘ஏன் உனக்கு இது வேண்டாமா” என அவன் வேகமாக கேட்க அபி அழ ஆரம்பித்து விட்டாள்.

அப்போது அங்கு வந்த மஞ்சு “டேய் அகில் வா...வா...மாமா எங்கே....போன் பேச போய்ட்டாரா ...வாடா ...உள்ளே வா “ என அழைத்து செல்ல

அகில் அபியை பார்க்க......... அந்த பார்வை அந்த குழந்தைக்கு முறைப்பது போல் தோன்ற பயந்து கொண்டு ஓடிவிட்டாள்.அகிலும் அந்த பொம்மையை எடுத்து கொண்டு உள்ளே சென்றான்.

எனக்கு அத்தை தனியாக ஒரு அறை கொடுக்க அங்கு தங்கி கொண்டேன்.கிராமத்தில் எல்லாருடனும் சேர்ந்து இருந்து விட்டு இப்படி தனியாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.ஆனால் வேறு வழி இல்லை.எனக்கு தான் யாருமே இல்லையே என எனக்கு நானே தேற்றிக்கொண்டேன்.

அர்ஜுன் என்னுடன் நன்றாக பழகினான்.அபி தினமும் எனது அறைக்கு வந்து எட்டி பார்த்து விட்டு செல்வாள்.நான் பார்க்காதது போல் அதை பார்த்து கொண்டே இருப்பேன்.

அவள் என் அறைக்கு வந்து அந்த முட்டை கண்ணை உருட்டி சுற்றிலும் பார்த்து விட்டு உள்ளே வரும் அந்த காட்சி பார்ப்பதற்கே சிரிப்பா இருக்கும்.

ஒரு நாள் அவளை பிடித்து என்ன வேணும் என கேட்க

பேந்த பேந்த முழித்தவள் கண்கள் கபோர்டில் செல்ல அங்கு அவளோட பார்பி பொம்மை இருந்தது.

“அது வேணுமா உனக்கு...அப்போ என்கூட நீ பேசுவியா “என கேட்க நான் பேச ஆரம்பித்தலே அவள் அழுக ஆரம்பித்து விடுவாள்.என்னோட பேச்சு கிராமத்து வழக்கில் இருக்கும்.அதும் தவிர கொஞ்சம் மிரட்டுவது போல் இருக்கும்.அவள் பயந்து விட்டாள்.

அவள் அழுது கொண்டே “எனக்கு வேண்டாம்.நான் போகணும் ...இனிமேல் இங்க வர மாட்டேன்” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.நான் என்ன சொல்லியும் அவள் அமைதியாக வில்லை.

“ச்ச்....இப்ப அழுகைய நிருத்தறியா இல்லயா” என நான் அதட்ட அவள் பயந்தவள்

“போடா” என சொல்லி விட்டு ஓட

அப்போது அத்தை உள்ளே வர “அபி அகிலை வாடா போடான்னு சொல்ல கூடாது.மாமான்னு சொல்லணும்” என்று சொல்ல

அவள் ஏதும் சொல்லாமல் அமைதியாக நிற்க”...ம்ம் மாமாகிட்ட சாரி கேளு” என அத்தைமிரட்ட

கார்த்தி “அவ அப்ப அத்தையின் பின்னாடி மறைந்து கொண்டு "மாமா சாரி"......என கேட்டா பாரு ...அந்த சனம் என்னால மறக்கவே முடியாது.அது இப்பவும் என் கண்ணு முன்னால இருக்கு .அவளுடைய குழந்தை முகம்,கண்களில் மிரட்சி .வார்த்தையில் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து அவள் சொன்ன அந்த வார்த்தை அவள் என் மனதில் அப்போதே அன்பிற்கு போட்ட பிள்ளயார் சுழி.

என்னது இப்பதான் பிள்ளயார் சுழியே போடறிங்களா ...அப்போ இன்மேல்தான் கதை ஆரம்பிகுதா ....ஆனா நல்ல தான் இருக்கு ...நீங்க சொல்லுங்க சார் என அவன் சுவாரசியமாக கேட்க…….

அங்கு அபி வீட்டில்...... அவள் அறையில் அழுது கொண்டிருந்தாள்.“அவனுக்கு என்னை பிடிக்க வில்லையா ....என் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் இவன் அப்படி சொல்லி இருப்பான்.அந்த அளவிற்கு நான் என்ன செய்தேன்.அறியாத வயதில் நான் அவனை கண்டு பயந்தேன்.விவரம் தெரிந்த பின்பு அவனது அன்பில் கரைந்து போனேனே..அதை அவன் அறியவில்லையா!!!!!!

எனது சிறுவயதில் மாமா என்று நான் அழைக்க மறுத்தது உணமைதான்.ஆனால் இப்போது அந்த ஒரு வார்த்தை மட்டும் தானே எனக்கு வேதமாக இருக்கிறது .இதை இவன் எப்போது புரிந்து கொள்வான்.

அவன் என் வீட்டில் இருக்கும் வரை நான் அவனை கண்டு பயந்தேன் .அவனை பார்த்தாலே ஓடி மறைந்து கொள்ளுவேன்.அவனும் வேண்டும் என்றே என்னை சீண்டுவதற்காக அடிக்கடி ...அபி...இங்க வா என்று கூப்பிடுவான்.என்னால் மறுக்க முடியாமல் நான் முழிக்க சிரித்து கொண்டே சென்று விடுவான்.

பின்னர் அவன் ஹோச்டேல் சென்று விட அப்போது தான் எனக்கு நிம்மதி.ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் வருவான்.வரும்போது கண்டிப்பாக சாக்லேட்டும் கூட வரும்.
முதல் முறை அவன் கொடுக்கும்போது பயந்து கொண்டு நான் வாங்க வில்லை.உனக்கு பிடிச்ச டைரிமில்க் சாக்லேட் தான் என்று சொன்னதும் பயமா ,சாக்லேட்டா என்று யோசிக்க இறுதியில் சாக்லேட் ஜெயித்தது.அதில் இருந்து அவன் வரும்போது எல்லாம் டைரி மில்க் தான்.இதற்காகவே அவனை எதிர்பார்ப்பேன் என்று நினைத்தவளின் இதழில் புன்னகை தானாக பரவியது.

ஆனாலும் என் ஆசை மாமா நீ கள்ளண்டா .எதை கொடுத்தா நான் வழிக்கு வருவேன்னு தெரிஞ்சு காய் நகரத்தின ஆளு நீ என அவனை மனதிற்குள் செல்லமாக கொஞ்சினாள்.


அம்மா ஒரு சமயம் மூன்று பேருக்கும் ice கிரீம் போட்டு தர .அர்ஜுனும் நீயும் சாப்பிடுவதற்கு முன்பே நான் சாப்பிட்டு விட்டு மறுபடியும் அம்மாவிட போய் நிற்க

“முடியாது அபி.அவ்ளோதான்...தீர்ந்திடுச்சு” என அம்மா மறுத்து விட
நான் அழுது அடம்பிடிக்க

அர்ஜுன் சந்தோசத்தில் குதிக்க

“அத்தை எனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் ... நான் இங்க வச்சிருக்கேன்” என சொல்லி விட்டு என்னை பார்த்து கொண்டே அங்கு வைத்து விட்டு சென்றான்.உனக்காகதான் வைத்திருகேனு சொல்லாமல் சொன்னது அந்த பார்வை.

நான் பென்சில் ரப்பர் பேனா சில சமயம் ரெகார்ட் நோட் எல்லாம் தொலைத்து விட்டு அம்மா திட்டுவார்களே என்று முழித்து கொண்டு நிற்க

அந்த சமயத்தில் நீ உன்னுடைய பொருட்களை நான் இல்லாத போது என் பையில் கொண்டு வந்து வைத்ததை நானும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒவ்வொவொரு விஷியமும் எனக்காக பார்த்து பார்த்து செஞ்ச நீங்க இந்த அளவுக்கு வெறுக்க என்ன காரணம் ...எனக்கும் ஒன்றும் புரியவில்லயே.......

மாமா ஒரு முறை நம்ம எல்லாரும் கடைக்கு போனப்ப ஒரு பார்பி டால் அழகா இருக்குனு கேட்டேன்.ஆனா அம்மா அதை வாங்கி தரமாட்டேனு சொல்லிட்டாங்க.அழுதுகிட்டே வந்துட்டேன்.ஆனா என் பிறந்த நாள் அன்னைக்கு எனக்கு அதை நீங்க பரிசு பொருளா கொடுத்த போது எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா?

ஆனா அந்த பொம்மையை வாங்க ஸ்கூல்ல எல்லாரும் டூர் போகும்போது நீங்க மட்டும் போகாம அப்பா அதுக்கு கொடுத்த பணத்த வச்சுதான் இதை வாங்கினிங்கனு அர்ஜுன் சொல்லும் போது எனக்கு உங்க மேல ஒரு மரியாதையும் மதிப்பும் வந்துச்சு.

இன்னைக்கு வரைக்கும் அது குறையில.ஆனா நீங்க ஏன் மாறி போனிங்க என மனதுக்குள் புலம்பி தீர்த்தாள்.

இங்கு அகில் கார்த்திக்கிடம் ...கார்த்தி நான் ஹச்டேல போனதுக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு வந்ததே அவளை பார்க்கதான்.

அர்ஜுனை பள்ளியில் பார்த்துடுவேன்...அத்தை மாமா வாரத்திருக்கு இரண்டு முறை என்னை வந்து பார்திடுவங்க.இவளுக்காக மட்டுமே வீட்டுக்கு வருவேன்.

நான் கிரமத்தில் வளர்ந்தவன்.அங்கு பெண்கள் அதிகம் பேசமாட்டங்க...வெட்கப்பட்டு ஓடிடுவாங்க .இங்க இவ இப்படி கலகலப்பா இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சுது.செம வாலு.பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா.எனக்கு நேர் எதிர் குணம்.அதுவும் அவளை எனக்கு பிடிக்க ஒரு காரணம்.

காலேஜ் படிக்கும்போது அவளை சில சமயம் நான் வெளியே கூட்டிட்டு போற மாதிரி வரும்.என்கூட வரும்போது மட்டும் ஏதும் பேசமட்டா.எனக்கே சில சமயம் எரிச்சல வரும்.

ஒரு சமயம் நண்பர்களுடன் பேசிகொண்டிருகும்போது மாமா போன் என அபி வர,ஹே இங்க பாருடா..மாமாவா...மச்சான் கலக்கரடா என நண்பர்கள் கிண்டல் செய்ய அந்த வயசுல எனக்கு அது வெட்கமாக பட ,அபி இனி வெளி இடத்துல என்னை மாமானு கூப்பிடதேனு கோபமா சொல்லிட்டேன்.பாவம் முகம் சுருங்கி சரின்னு சொல்லிட்டு போய்ட்டா.

அவ எங்கிட்ட பேசறதே குறைவு.அதிலயும் இப்படி சொன்னதால ரொம்ப குறைஞ்சு போச்சு.ஆனா வீட்ல குறும்பு அதிகம் ஆகிடுச்சு.நான் இருக்கும்போது என்ன பத்தி பேச மாட்டா.நான் இல்லாத நேரத்துல என்னையும் சேர்ந்து கிண்டல் பண்ணுவா.ஒரு நாள் அவங்க வீட்டுக்கு நுழையும்போது அதை கேட்டேன்.

“ஏன் அபி இப்படி பண்ற ...ஒரு வேல செய்ய மாட்டேங்க்ற ....எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற செல்லம்.யாருக்கும் பயப்படவும் மாட்டேங்க்ற .அகில்க்கு மட்டும் தான் கொஞ்சம் அடங்கற” என மஞ்சு சமையல் கட்டில புலம்ப ....

உடனே இவள் “யாரு....அந்த வில்லேஜ் சிட்டிசனா ....சிரிகிரதுனா என்னனு தெரியுமா அவனுக்கு ...பாவம் பயபுல்லைன்னு விட்டு வச்சிருக்கேன்.நீங்க எல்லாம் போர் அடிச்சிங்கனா அடுத்த டார்கெட் அவன் தான்.....சொல்லி வை அந்த உம்மனாமூஞ்சி கிட்ட....நாங்க எல்லாம் எலிக்கே ஏரோப்லன் ஓட்ட கத்து கொடுத்தவங்க...இவன் எனக்கு எந்த மூல” என சொல்லி கொண்டே திரும்ப....... அங்கு நான் கைகளை கட்டி கொண்டு அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவள்

“மஞ்சு என்ன பண்ணிட்டு இருக்க...நான் வெளியே போகணும்னு சொன்னேன்ல...எல்லாம் ரெடியா” என் கேட்டு கொண்டே மாடிக்கு ஓடி விட்டாள்.

“நான் ரெடி பண்ணிட்டேன் இந்தா என மல்லிகை பூ சரத்தை கையில் எடுத்து கொண்டு அத்தை வர ...என்னை பார்த்தும் வாடா அகில் ...ஒ நீ வந்த நாலதான் அமைதியாகிட்டலா ...கம்னு நீ இங்கே இருந்திடு.இவ குறும்பு கொஞ்சம் குறையும் “என சிரித்து கொண்டே சொன்னார்.

அப்போ அங்கு வந்த அர்ஜுன்..”.டேய் அகில்...வந்திட்டியா ...நான் வாலிபால் மேட்ச் போகணும் ....அபிய கொஞ்சம் கூட்டிட்டு போயிட்டு வரியா” என சொல்லி கொண்டே போய் விட்டான்.

எங்கே போகணும் என கேட்க”,ஏதோ பிரண்டு பிறந்த நாள் பார்ட்டியாம்” என அத்தை சொல்ல சரி அத்தை என சொன்னேன்.

“அம்மா நான் கிளம்பிட்டேன் “என அவள் கீழே இரங்கி வர நிமிர்ந்து பார்த்த நான் ஸ்தம்பித்து விட்டேன்.

என்னை அறியாமல் என் வாய் இந்த பாட்டை முனுமுனுத்தது .

கண்ணை பார்த்ததும் வேகமாய்
மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே
தேகம் பறக்குது விண்ணிலே
இந்த புது உயிரை
நீ தந்ததாய்
என் புலன் ஐந்தும்
நன்றி சொல்லுது
ஒரேதாய் இறகாய்
அலைந்து வந்தேன்
உன் இமையின் நுழைப்பால்
தரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும்
மோதிரம் ஆகியதே.......

கனவு நினைவு ஆகுமா ??????????????