• அத்தியாயம் 18
அன்று ஞாயிற்றுக்கிழமை மெதுவாக எழுந்து சோம்பல் முறித்த ருத்ரா அறையை விட்டு வெளியே வந்தாள்.
“அம்மா ....அம்மா எனக்கு காபி” என சொல்லிகொண்டே கைகளில் செய்திதாளோடு மேஜை முன் அமர்ந்தவள், எதிரில் தலையை தன் இருகைகளிலும் பிடித்த படி அமர்ந்திருந்த வனஜாவை கவனிக்கவில்லை.
“அம்மாஆஆஅ என்ன பண்றிங்க என கத்திகொண்டே” செய்தித்தாளை கீழே வைத்தவள்,வனஜாவை பார்த்ததும் அதிர்ந்து
“என்ன ஆச்சுமா....உடம்பு சரி இல்லியா?என பதறி எழுந்தவள் அவள் நெற்றியும்.கழுத்தையும் தொட்டு பார்த்தவள் ...ஜில்லுனுதான்மா இருக்கு “என்றாள்.
வனஜா ஏதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க....”அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு....நம்ம சொந்தகாரங்க யாரவது வந்தாங்களா ...உங்களுக்கு எதாவது பிரச்சனயா ?எங்கிட்ட இருந்து எதோ நீங்க மறைகிறீங்க ....உண்மையை சொல்லுங்க ......உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா ..எதா இருந்தாலும் சொல்லுங்கம்மா ப்ளீஸ்” என அவள் கெஞ்சினாள்.
நிமிர்ந்து அவளை பார்த்தவர் .............”இதே வார்த்தையை நான் திருப்பி சொன்னா....நீ எங்கிட்ட மறைகிறேனு “ என கேட்க
“என்னம்மா சொல்றிங்க......எனக்கு புரியல .....நான் என்ன மறைச்” என பேச்சே பாதிலே நிறுத்தியவள்
“அம்மா” ....என்று இழுக்க
வனஜா ஏதும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தார்.
“அம்மா அத வந்து ....அம்மா ....நானே சொல்லனும்னு தான் நினச்சேன் “என திக்கி திக்கி பேச
எதிர்புறத்தில் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்த ருத்ரா
“அம்மா நானும் அர்ஜுனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம் .AP இன்டர்நேஷனல் பத்மநாபன் சார் பையன்.நான் கூட உங்ககிட்ட அவர பத்தி சொல்லிருக்கனே.ரொம்ப நல்லவர்மா அவர்.என்மேல உயிரே வச்சிருக்கார்” என அவனை பற்றி சொல்லும்போதே மனதில் சந்தோசம் துள்ளி எழ அது வார்த்தையிலும் வெளிவந்தது.
திரும்பவும் வனஜாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால்
“சாரிம்மா......உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கலை.நான் கூட அன்னைக்கு சொன்னேன் இல்லியா ....ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு ....இதான்மா அது” என்றாள்.
“எங்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன உனக்கு அர்ஜுனோட வெளியே போறேன்னு சொல்ல முடியல இல்லையா” ...என வனஜாவின் குரல் அழுத்தமாக வெளிவர
அதுவரை நம்பிக்கையோடு பேசி வந்த ருத்ராவிர்க்கு மனதில் லேசான பயம் எட்டி பார்த்தது .
“இல்லைம்மா .....அது வந்து என இழுத்தவள் என்னை மன்னிசுடுங்கம்மா “என அவள் காலின் கீழ் அமர்ந்து அவள் மடியில் தலை வைக்க
சட்டென்று எழுந்த வனஜா “எப்போ மூன்றாவது மனிதர் மூலமா என் பொண்ணோட நடவடிக்கைகள் எனக்கு தெரிந்ததோ அப்பவே இந்த வனஜா மனசளவுல செத்திட்டா .....நான் உன்னிடம் ஒரு தோழி போலதான் நடந்துகிட்டேன்.என்னைக்காவது அம்மா மாதிரி நடந்திருகேனா?...ஆனால் நீ? மாப்பிள்ளை வேண்டாம் என்று சொன்னபோதும் நான் ஏதும் பேசாமல் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நான் உன்னை கட்டயபடுத்தவில்லை.மேலும் உன்னை கேட்டு தான் நான் மாப்பிள்ளை பார்க்கவே ஆரம்பித்தேன்.எல்லாவற்றிலும் உனக்கு நான் எவ்ளோ மதிப்பு கொடுத்தேன்.ஆனால் நீ அதற்கு எனக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டாய்.உன் மேல் நம்பிக்கை வைத்ததால் தானே நான் அதற்கு பிறகு உன்னை கட்டாயபடுத்தவில்லை.இனி நான் உன்னை எப்படி நம்புவது?நீ என்னிடம் ஏன் மறைத்தாய் என்று தெரியவில்லை ....இல்லை இவளிடம் சொல்வதா என்ற அலட்சியமா என்றும் புரியவில்லை” என அமைதியாக அதே சமயத்தில் அழுத்தமாக தன கோபத்தை வனஜா வெளிபடுத்த
“அம்மா அப்படி எல்லாம் இல்லை என அவர் வாயை மூடிய ருத்ரா ....இப்படி எல்லாம் பேசாதிர்கள் அம்மா ...நான் உங்களிடம் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.நீங்கள் போக வேண்டாம் என்று தடுத்து விடுவீர்கள் என்ற பயம் தான்” என அவள் வார்த்தையை மென்று முழுங்க
“இதுவரை நான் செய்ததது எல்லாம் உன் நல்லதுக்கு மட்டும் தானே ...இனிமேலும் அப்படிதானே செய்வேன்.இப்போ உனக்கு ஏன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது” என்றார் வனஜா .
“அம்மா...அது வந்து...இல்ல......”என அவள் தடுமாற
“நான் காதலுக்கு எதிரி அல்ல.ஆனால் என் மகள் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து விட்டது.நீ காதலித்ததை தவறு என்று சொல்ல வில்லை....ஆனால் அதை என்னிடம் இருந்து மறைத்தாய் அல்லவா...அப்போதே நம் இருவருக்கும் நடுவில் இருந்த நட்பு என்னும் நூல் அறுந்து விட்டது.எந்த இடைவெளி வரகூடாது என்று உன்னை பார்த்து பார்த்து வளர்த்தினனோ அந்த இடைவெளி வந்து விட்டது.இனி அது அப்படியே இருக்கட்டும் என்றவர் இனி இதை பற்றி பேசவேண்டாம்.உன் திருமணம்...உன் முடிவு....என்னைக்கு திருமணம் என்று சொல்....அதுவும் நீ என்னிடம் மறைக்க நினைத்தால் நான் வருத்த படபோவதில்லை.எங்கிருந்தாலும் நீ நன்றாக இருந்தால் சரி என சொல்லி விட்டு ...காபி சமையல் அறையில் இருக்கிறது...டிபனும் பண்ணிவச்சுட்டேன்...நீ சாப்பிடு....என்னை தொந்தரவு பாண்ணாதே” என சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டார்.
வனஜா இப்படி பேசுவார் என்று ருத்ரா எதிர்பார்க்கவே இல்லை.அதிர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.தனது பக்கம் எந்த எதிர்ப்பும் வராது என நம்பி கொண்டிருந்த ருத்ரா ...வனஜாவின் பேச்சு ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கண்களில் கண்ணீருடன் அவள் அறைக்கு சென்றவள்.... “அம்மா மன்னித்து விடுங்கள்....இனி இப்படி செய்ய மாட்டேன்” என பல முறை அழுதும் வனஜாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அந்த நேரத்தி அலைபேசி ஒலிக்க ...அதை காதில் வைத்தவள்....”சொல்லுங்க...இல்ல கொஞ்சம் வேலை இருக்கு...அதான்....சரி...சரி....நானே வரேன்......இல்ல கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு என சொன்னவள் வேகமாக தனது அறைக்கு சென்று கிளம்பி வெளியே வந்தவள்....தான் செல்லும் இடத்தி வனஜாவிற்கு மெசேஜ் மூலமாக அனுப்பி விட்டு கிளம்பினாள்..
“அர்ஜுன் ...அர்ஜுன்” என TV பார்த்துகொண்டிருந்த மகனை அழைத்தார் மஞ்சு.
“என்னம்மா”.... என்று படி எழுந்து வந்தான் அர்ஜுன்.
அந்த பொண்ணு எப்படிடா இருப்பா? நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதானா” என சலித்து கொண்டே கேட்பதை போல் ஆனால் தெரிந்தும் ஆவலில் கேட்க
அவன் சிரித்து கொண்டே “அம்மா “என ஆரம்பிக்க
“அதற்குள் பத்மநாபன் என்ன மஞ்சு இரண்டு நாளா அவன் முதல்ல உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லைலைன்னு கோவிச்சுகிட்டு இருந்த...இப்ப சமாதானம் ஆயாச்சா” என்றபடியே மஞ்சுவின் அருகில் வந்து அமர்ந்தார்.
அன்றைய பேச்சின் போது அபி சொன்னதின் முழு விபரம் மஞ்சுவிற்கு புரியாமல் என்னவென்று கேட்க.....அது வந்து என அர்ஜுன் இழுக்க
“அகில் நீ சொல்லு என்று மஞ்சு கேட்டதும் அவன் அனைத்தையும் சொல்லிவிட்டு ....என்ன அர்ஜுன் நீ அத்தைகிட்ட போய் மறச்சிட்டியே” என அவனை மாட்டி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
நகர்ந்தவன்... அர்ஜுனிடம் மெதுவாக “மச்சான் இதாண்டா சாமியார் ஸ்டைல் ....என்ஜாய் பண்ணு ...பிகர கண்டா friends கலட்டி விடரிங்களா நீங்க ...மாட்ன நீ” என சொல்லி சென்றான்.
“அடபாவி நீண்ட நாள் ஆசையைய தீர்த்துகிட்டானே” என மனதுக்குள் புலம்பிய அர்ஜுன்
“அம்மா அது வந்து அந்த பெண் “என ஆரம்பிக்க நீ ஒன்னும்
சொல்லவேண்டாம்.எங்கிட்ட ஏன் முதல்ல சொல்லல என கோபித்து கொண்டு விபரம் கேட்காமேலே சென்று விட.....பத்மநாபன் நான் பார்த்து கொள்கிறேன் என அவனிடம் சொல்ல அவனும் சற்று அமைதி ஆனான்.
பொறுத்து பார்த்த மஞ்சு தானே இரங்கி வந்து இப்போ விபரம் கேட்க அதற்குதான் பத்மநாபன் கிண்டலாக சொன்னார்.
“நீங்க பேசாதீங்க......நீங்களும் சேர்ந்து எங்கிட்ட மறச்சுட்டிங்க” என மஞ்சு கோபம் கொள்ள
“மஞ்சு எனக்கும் யாருன்னு தெரியாது....அபி கிண்டல் பண்றதை வைத்து நானே அனுமானித்து கொண்டேன்.மற்றபடி இப்போ அர்ஜுன் விளக்கமாக சொன்னால் தான் எனக்கும் தெரியும்” என்றார். ஆனால் அபி சொன்னுடன் ஆபிசில் விசாரித்து விட்டார் பத்மநாபன்.அர்ஜுனாக சொல்லும் வரை அவர் அதை வெளிபடுத்த விரும்பவில்லை.
“சரி நீ சொல்லுடா...என் மருமகள் பத்தி” என அவள் குழந்தைதனத்துடன் கேட்க
“அம்மா அவள் பெயர் ஆருத்ரா.CA முடித்து விட்டு நம்ம ராமநாதன் அங்கிள்கிட்டதான் இருக்கா....ஒரே பொண்ணு.....அப்பா இல்ல ....அவளும் உன்ன மாதிரிதான்மா ....ரொம்ப சிம்பிளா இருப்பா ...மரியாதையா பேசுவா” என சொல்லிகொண்டே செல்ல
“வசதி எல்லாம் எப்படி அர்ஜுன்” என கேட்க
“அம்மா “என அர்ஜுன் தயங்க .....
“என்ன மஞ்சு நீ “என பத்மநாபனும் அதிர
இல்லைங்க வசதி குறைவா இருந்தாலும் பரவயில்லை அப்படின்னு சொல்ற்துகுதான் கேட்டேன்” என்றாள்.
ஹப்பா!!!!!! என அர்ஜுன் பேரு மூச்சு விட
“என்ன அர்ஜுன் அதுக்குள்ள சந்தோசபடாத...இன்னும் இருக்கு” என அவர் அர்த்தம் பொதிந்த பார்வையில் சிரித்தார்.
“அச்சோ அப்பா ப்ளீஸ்” என அவன் கண்காலாலே கெஞ்ச
சரி சரி கிளம்பு......இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான ...நம்ம போய் பொண்ண பார்த்துட்டு வந்திடலாம்” என மஞ்சு வேகமாக சொல்ல
“என்ன மஞ்சு அதுக்குள்ள அவசரபட்ற..கொஞ்சம் பொறு” என பத்மநாபன் சொனார்.
இல்லைங்க...எனக்கு உடனே பார்க்கணும்.....எனக்கு என் மருமகளை பார்க்கணும் என மஞ்சு கிளம்ப
“அம்மா பொறுங்க....நான் அலைபேசியில் கேட்டுவிட்டு சொல்றேன்...என அவளை அழைக்க ஸ்விட்ச் ஆப் என்று பதில் வந்தது. ....அம்மா இன்னைக்கு சாயந்திரம் போலாம்.நானும் அதற்குள் அவளிடம் பேசிவிடுகிறேன்” என்றான்.
“சரி....சரி ம்ம்ம் மஞ்சு இன்னைக்கு மதியம் ஆசிரமத்துக்கு போகணும்...நமது சார்பில் அங்கு குழந்தகளுக்கு விருந்து சொல்லிருக்கேன்.நீ கிளம்பி இரு” என சொல்லிவிட்டு நகர்ந்தார் பத்மநாபன். .
அர்ஜுன் மாடிக்கு செல்ல அப்போது பத்மநாபன் “அர்ஜுன் ஒரு நிமிடம் இங்க வா “ என்று அழைத்தார்.
அம்மாவிடம் சம்மதம் வாங்கின சந்தோசத்தில் என்னப்பா என சிரித்து கொண்டே வர
அவனை உற்று நோக்கியவர் ....”நானும் விசாரிச்சேன் அர்ஜுன்....உனக்கு ஒத்து வருமா ?இல்ல அந்த பொண்ணு கொஞ்சம் கோபகார பொண்ணுன்னு சொல்வாங்க ...மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு அதான்” என அவர் இழுக்க
“அப்பா....எனக்கு தெரியும்பா ...அவ குழந்தை மாதிரி.....சொன்ன புரிஞ்சுக்குவா” என அர்ஜுன் சொல்ல .
“சரி அர்ஜுன்...உனக்கு ஓகேனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
நடப்பவை அனைத்தும் மனதிற்கு சுகம் தர அந்த இனிய கனவுகளோடு மாடிக்கு சென்றான் அர்ஜுன்.
“என்ன மஞ்சு ரெடியா ?கிளம்பு கிளம்பு நேரமாகிடுச்சு ....இந்த அபி எங்க போனாள்....அர்ஜுன்” என பத்மநாபன் அழைக்க
“வந்துவிட்டோம்” என மூன்று குரலும் கோரசாக ஒலிக்க அவர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இவருக்கு பெரும் மனநிறைவை அளித்தது.இந்த சந்தோசம் எப்போதும் இவர்களுக்கு நிலைத்து இருக்க வேண்டும் என மனதில் நினைத்து கொண்டார்.
ஆசிரமத்தை அடைந்ததும் அவர்களை நிர்வாகி வரவேற்றார்.சிறிது நேரம் நலம் விசாரிப்புக்கு பிறகு
“குழந்தைகளை பார்க்கலாமா” என மஞ்சு கேட்க
ஒரு நிமிடம்...அவர்களுக்கு மிகவும் பிடித்த ,செல்லமான அவர்களின் அக்கா வந்திருக்கா.....அவளோடு அனைத்து குழந்தைகளும் விளையாடிட்டு இருக்காங்க....கொஞ்ச நேரம் பொறுங்க...பிரேயர் முடிஞ்சதும் வந்திடுவாங்க” என்றார்.
“அப்படியா .....இருக்கட்டும் ....என்ன பண்றாங்க அவங்க” என பத்மநாபன் விசாரிக்க
“இங்க தான் ஆடிட்டரா பயிற்சி எடுத்திட்டு இருக்கா...ருத்ரானு பெயர்...ரொம்ப நல்ல பொண்ணு.....15 வருசமா நம்ம ஆசிரமத்துக்கு வந்திட்டு இருக்க....அவங்க அம்மாவும் கூட வருவாங்க....இன்னைக்கு அவளோட பெஸ்ட் friend அருண் 5 வயது குழந்தை அவளை பார்க்கணும்னு அடம் பிடிச்சான்.அதான் வரசொன்னேன்...வந்திருக்கா....குழந்தைகளுக்கு அவளை ரொம்ப பிடிக்கும்” என சொல்லி கொண்டு போக
அங்கு அர்ஜூனால் நிற்க முடியவில்லை....தன் மனம் கவர்ந்தவளை பற்றி அடுத்தவர் பெருமையாக சொல்லும்போது மனம் மகிழ்ச்சியில் குதுகளிக்கதானே செய்யும்.
.அபி அவன் அருகில் வந்து “அண்ணா லட்டு வா இது “என கேட்க
சந்தோசத்தில் தலை ஆட்டியவன்...”அபி நான் போய் அவளை பார்த்து வருகிறேன்...நீ அம்மாகிட்ட சொல்லிடு “என கூறிவிட்டு அவளை தேடி போனான்.
“அப்படியா ...இவ்ளோ சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு இவ்ளோ பொறுப்பா என மஞ்சு வியந்தவள்.....பரவாயில்லை....நாங்கள் காத்திருக்கிறோம் ...அவர்கள் முடித்து விட்டு வரட்டும்” என சொல்லிவிட்டு வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தார்.
பத்மநாபன் “என்ன மஞ்சு உன் மருமகளை பத்தி இப்பவே புகழ ஆரம்பிச்சுட்ட ....பாரு அபி.......இனி மாமியார் மருமகளும் ஒன்னு ஆகிடுவாங்க ....ம்ம்ம் எனக்கு தான் செட் இல்லை” என அவர் வருத்தமாக சொல்ல
"என்னது அந்த பொண்ணா இது என்றவள் ...என் பையன் புத்திசாலி.....குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதான் தேர்வு செஞ்சுருக்கான் " என மகிழ்ச்சியுடன் கூறினார் மஞ்சு .
“ஆமாப்பா ....நான் மாமியார் மருமக சண்டையை பார்க்கவே முடியாதா....என்னப்பா நீங்க....வேண்டாம்ப...வேற பொண்ணு பார்க்கலாம் அர்ஜுனுக்கு” என முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொல்ல
“பிச்சுபுடுவேன் ...எனக்கு அவதான் மருமக......உங்களுக்கு நாங்க சண்டை போட்டுகிட்டா அவ்ளோ சந்தோசம்.....என்னை எப்படி பேசின...இப்போ பாரு என் மருமக எப்படி தங்கமான பொண்ணுன்னு “என பெருமையாக பேசிகொண்டிருந்தார் மஞ்சு.
அப்போது
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா
மெய்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா
நொய்மையற்ற சிந்தையாய் வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே
சீர்த் தேசமீது தோன்ருவாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும்
உதய ஞாயிறோப்ப வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன்போலே
கலைசிறக்க வந்தனை வா வா வா
விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா
விந யநின்ற நாவினாய் வா வா வா
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா
முழுமைசேர் முகத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே -நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல்செய்வாய் வா வா வா
என பாரதியாரின் பாடல் இனிய குரலோசையில் மிதந்து வர அனைவரும் அந்த அந்த பாடலிலும் அந்த குரலிலும் மயங்கி கேட்டு ரசித்து கொண்டிருந்தனர்.
ருத்ரா தான் பாடறாங்க என நிர்வாகி சொல்ல எனது மருமகள் என்கிற ஒரு சின்ன கர்வம் மஞ்சுவிற்கு முகத்தில் வந்து சென்றது.
இவர்களின் நிலையே இப்படி இருக்கும்போது....அவள் இவ்ளோ நான்றாக பாடுவாள் என்பதே அர்ஜுனுக்கு இப்பதான் தெரியும்.அவள் குழந்தைகளோடு விளையாடுவதை அவளுக்கு தெரியாமல் ரசித்து கொண்டிருந்தவன் ...அப்போது ஒரு குழந்தை அக்கா நீங்க பாடுங்க என அடம்பிடிக்க அவர்களுக்காக அவள் பாடிய பாடல் அது.
பாரதியார் சுதந்திரத்தாயை வரவேற்று பாடிய பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல்.அதும் MS சுப்புலஷ்மி அம்மாள் இந்த பாட்டை பாடிய CD மட்டும் பலமுறை கேட்டு இருக்கிறாள்.தற்போது உள்ள மனநிலையில் தனக்கும் அந்த பாடல் தேவை என நினைத்து அதில் மனம் லயித்து இவள் பாட அங்கு பலருடைய மனதில் இவளின் மதிப்பு உயர்ந்து நின்றது.
“அம்மா அண்ணி சூப்பரா பாடறாங்க ....அண்ணா செலக்சன் சூப்பர் என அபியும் மனம் திறந்து பாராட்ட” அவர்களின் மனதில் இருந்த சிறு சலனமும் தகர்ந்தது.பத்மநாபன் முகத்திலும் தெளிவு வந்தது.அனைவரும் இங்கே மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருக்க
அர்ஜுனோ நிலைமையோ வானத்தில் பறப்பது போல இருந்தது.அந்த சந்தோசத்தில் அவள் முன் சென்று நின்றான்.
ஒரு நிமிடம் அப்படியே நின்றவள்...பின்னர் கனவு என்பது போல முகத்தை சுளித்து கொண்டு திரும்பி செல்ல
“குட்டிம்மா” என அவன் அழைக்க ...அவன் மெதுவாகத்தான் உச்சரித்தான். அந்த வார்த்தையை...அதில் இருந்த காதல் அவளை சுண்டி இழுக்க மீண்டும் திரும்பி பார்த்தவள் அங்கு அர்ஜுன் இருப்பதை கண்டது...நிஜம் தானா என சொல்லிகொண்டே “அர்ஜுன்!!!!!!!! என ஓடி வந்து அவனை இறுக்க பற்றி கொண்டாள்.
அவள் இருந்த மனநிலைக்கும்...இப்போது அர்ஜுனை கண்டதும் இருக்கும் மன நிலைக்கும் நிறிய மாற்றங்கள்.எதோ ஒன்றை அவள் தவற விட்டது போல்...இப்போது அதை பிடித்து கொண்டது போல் அவளோட அணைப்பு இருந்தது.
அதற்குள் குழந்தைகளை அங்கு இருக்கும் பணியாளர்கள் அழைத்து செல்ல இவர்கள் மட்டுமே இருந்தனர்.
“அஜுன்...அஜுன்” என்று அவனது பெயரை இடைவிடாமல் ஜெபித்து கொண்டிருக்க....
“நான் அஜுன் தான்....கலக்கற குட்டிம்மா ....சூப்பரா இருந்தது உன் பாட்டு...நீ எங்கிட்ட இவ்ளோ நல்ல பாடுவேன்னு சொல்லவே இல்ல” என அவளை செல்லமாக கடிந்து கொண்டான்....
“அப்புறம் உனக்கு ஒரு பெரிய ஆச்சிரியம் காத்திருக்கு.....வா...வா...வந்து பாரு “என அவளை அழைக்க
“என்ன அர்ஜுன்...நான் இப்போ எங்கும் வரலை” என அவள் வேதனையாக சொல்ல
ஆனால் அதை அவன் உணரும் நிலையில் இல்லாததால் அவனால் அவள் மாற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
“நீ இப்போ வர....நம்ம நினைச்சுது எல்லாம் நடக்க போகுது “என அவன் சந்தோசமாக சொல்லி கொண்டே அவளை வரவேற்பு அறையை நோக்கி அழைத்து வந்தான்.
அதற்குள் மஞ்சு பத்மன்பனிடம் “என் மருமகளை முதன் முதலில் பார்க்கிறேன்...கொஞ்சம் பூ வாங்கிட்டு வர சொல்லுங்க டிரைவரை ...அப்புறம் அப்படியே ஸ்வீட் கொஞ்சம் வாங்கிகோங்க” என அவர் அடுக்கி கொண்டே செல்ல
“அப்பா ...அம்மா டோட்டல் சரண்டர் அண்ணிகிட்ட......இதுக்கு நம்ம அர்ஜுன் பரவாயில்ல” என அபி கிண்டல் பண்ணி கொண்டிருந்தாள்.
“மஞ்சு அது எல்லாம் வேண்டாம்....நம்ம முறையா அவங்க வீட்டுக்கு போகும்போது கொண்டு செல்லலாம்” என பத்மநாபன் அதட்ட மஞ்சு அமைதி அடைந்தார்.
அதற்குள் அர்ஜுன் அங்கு ஆருத்ராவோடு வர
அம்மா உங்க மருமக என அவர் முன் நிறுத்த
ருத்ராவை பார்த்ததும்..... நீயாயாயாயா !!!!!!!!!!!! என அவர் அதிர்ச்சி அடைய
ருத்ராவோ அவரை பார்த்ததும் பிரம்மை பிடித்தவள் போல் அப்படியே நின்றாள்.
கனவுகள் அனைத்தும்
கண்முன்னே அரேங்கேற
இனிமையாக எல்லாம் முடிந்தது
என இறுமாந்திருக்கும் நேரத்தில்
இடியென ஒரு நிகழ்வு நடக்க
இடிந்து போனதே நெஞ்சம்
நினைத்தவை நிறைவேறுமா
இல்லை
அவை நெஞ்சில் நினைவுகளாக
மட்டுமே நிலைபெறுமா?
கேள்விகளால் என் மனம்
நிறைந்திருக்க
விடை சொல்பவளோ
விழி பிதுங்கி நிற்கின்றாளே!!!!!!!!!!!!!!