அத்தியாயம் 10
எத்தனயோ அலங்காரத்தில் அவளை பார்த்து இருக்கிறேன். ஆனால் இது போன்ற உணர்வு எனக்கு தோன்றியது இல்லை.கண்கள் அவளை விட்டு நகர மறுக்க ,நினைவுகள் சிறிது நேரம் ஸ்தம்பிக்க பார்த்து கொண்டே நின்றேன்.
‘அகில் டேய் அகில்” என அத்தை இரண்டு முறை அழைத்த பிறகே சுயநினைவிர்க்கு வந்தேன்.பார்த்து கூட்டிட்டு போடா ...”போய் வள வளன்னு பேசிட்டு இருக்க போறா ...நீ இருந்து அவளை கூட்டிட்டு வந்திடு” என சொன்னார்.
“ஏன் அர்ஜுன் வரலையா ....நான் அவன் கூட போகிறேமா ப்ளீஸ்” என அபி கெஞ்ச
எனக்கு உடனே கோபம் வர....... “ஏன்...... என் கூட மகாராணி வரமாட்டாங்களா” என மனதில் நினைத்து கொண்டே அவளை முறைக்க.... அவள் என்னை பார்க்காமல் தலை குனிந்தாள்.
“இல்ல அபி அவன் வேலை இருக்குனு போய்ட்டான்.அதான் அகில் வரான்ல...கிளம்பு நீ ....நானும் கோவிலுக்கு போகணும்” என்று சொல்லி விட்டு அவர் உள்ளே சென்று விட ,வாய்க்குள் முனகி கொண்டே காரில் ஏறினாள் அபி.
காரில் ஏதும் பேசாமல் அமைதியாக வர” எங்கே போகணும் “என்று நான் கேட்க
அவள் திரும்பி என்னை பார்த்தவள் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க
“எங்க போகணும் அபி...சொன்னாதான போக முடியும்”
“அது வந்து.....வந்து.....”என அபி இழுக்க
வண்டியயை ஓரமாக நிறுத்தி விட்டு ..”இங்க பாரு அபி....இடம் சொன்னாதான போக முடியும்...சொல்லு” என நான் கேட்க
அவள் என்னை நிமிர்ந்து பார்த்தால்.அவள் கண்களில் இருந்த பயமும்,தயக்கமும் என்னை ஏதோ செய்ய
அவள் அருகில் சென்று “அபி என்னனு சொல்லு....இப்ப எங்க போகணும் ...இல்ல வீட்டுக்கு போலாமா” என நான் மென்மையாக கேட்க
“இல்ல...அது வந்து....நான் அம்மாகிட்ட friend வீட்ல பார்ட்டினு சொன்னேன்.ஆனால் பார்ட்டி ஹோடேலதான் .அங்க போகணும்” என்று திக்கி திணறி சொல்ல
“அப்போ பொய் சொல்லிட்டு வந்து இருக்க இல்ல” என நான் கோபமாக கேட்க
“இல்ல மாமா “என்று வேகமாக சொன்னவள் ...பின்னர் நாக்கை கடித்து கொண்டு” சாரி “என்று சொன்னாள்.
“பரவாயில்ல நீ மாமானு கூப்பிடு.friends இருக்கும்போது தான் அப்படி கூப்பிட வேண்டாம்னு சொன்னேன்....என சொல்லி விட்டு இப்போ நீ அப்படி கூப்பிடனும்னு எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா என்று மனதில் நினைத்து கொண்டு ........நீ இனி நம்ம இரண்டு பேரும் இருக்கும்போது மாமானு கூப்பிடு” என்று சொன்னேன்.
“தேங்க்ஸ் மாமா.நான் அர்ஜுன் கிட்டயும் அப்பா கிட்டயும் உண்மையா சொல்லிட்டேன்.அம்மா சொன்னா விடமாட்டங்க .அதான் அர்ஜுன் கிட்ட சொல்லி அவனை சரி கட்டி வைத்திருந்தேன் அதுக்குள்ள” என்று அவள் இழுக்க
“கோட்டானாட்ட நான் வந்து குட்டையா குழப்பிட்டனா” என நான் சிரித்து கொண்டே கேட்க
“ம்ம்ம் ..ஆமா” என தலை ஆட்டியவள்
“என்ன....” என்று என்றதும்
“இல்ல...இல்ல ...என வேகமாக தலை ஆட்டி விட்டு “ஹிஹிஹி” என வழிந்தாள்.
“பார்த்து ரொம்ப வழியுது...துடைச்சுக்கோ என சிரித்து கொண்டே வண்டியை எடுத்தவன் எந்த இடம்னு சொல்லு” என கேட்டேன்.
“மாமா நீங்க இப்டி சிரிச்சு பேசினா எவ்ளோ நல்ல இருக்கு தெர்யுமா” என அவள் சொல்ல
“என்ன அபி என்கிட்டேவா ...உன்னை பத்தி எனக்கு தெரியாது ...நான் அத்தை கிட்ட போட்டு கொடுத்ருவேனுதான இப்படி ஐஸ் வைக்கிற” என்று சொன்னதும்
“அய்யோ மாமா நீங்க இம்புட்டு புத்திசாலியா இருக்க கூடாது .சரியா கண்டுபிடிசிட்டிங்கலே” என சொன்னவள் அவனை திரும்பி பார்க்க
அவன் முறைக்கவும்...”.ஹிஹி.... சும்மா ....நீங்க யாரு...உங்க திறமை என்ன” என அவள் ஆரம்பிக்க
“போதும் அபி...வில்லேஜ் சிட்டிசன் ,உம்மனாமூஞ்சி இந்த மாதிரி சிறப்பு பெயர் எல்லாம் யாரோ என்னை சொன்னதாக நியாபகம் ....உனக்கு தெர்யுமா என சொல்லிவிட்டு” அவளை ஒரு மாதிரி பார்த்துகொண்டே......”நான் அத்தைகிட்ட கண்டிப்பா சொல்வேன்.ஆனால் உன்னை திட்டாத அளவிற்கு சொல்றேன் போதுமா” என்று சொன்னேன்.
“சூப்பர் மாமா .நீங்க எப்பவும் இப்படியே இருங்க மாமா” .என்று சொன்னவள்
என்னை பார்த்து கொண்டே”நீங்க இப்படி எங்கிட்ட சிரிச்சு பேசறது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா....நீங்க இப்படி எல்லாம் கூட இருப்பிங்களா......எவ்ளோ நாள் மாமா ....இதுக்காக எவ்ளோ நாள் காத்திருந்தேன்.நீங்க எனக்கு பார்த்து பார்த்து செஞ்சது எல்லாம் எனக்கு தெரியும் மாமா “ என்று அவள் ஏக்கத்துடன் சொன்னதும்
“நிஜமா கார்த்தி அவள் கண்களில் பொய் இல்லை.அவளோட குழந்தை முகம்,அவள் என்னிடம் எதிர்பார்ப்பது எல்லாம் எனக்கு அந்த நிமிடத்தில் புரிந்தது.”
அபியின் மனதில் அப்போது என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் அவள் என்னிடம் ஏதோ எதிர்பார்கிறாள் என்று மட்டும் எனக்கு புரிந்தது .இப்போது அவள் நிலையில் நான் இருந்தேன்.என் மனதில் தோன்றிய உணர்வை உடனே வெளிபடுத்த வேண்டும் என்ற ஆவல் எனக்குள் தோன்ற
வண்டியை மறுபடியும் ஓரமாக நிறுத்தி விட்டு “...அபி...அபி “என நான் அழைக்க அவள் கீழே குனிந்தவள் என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“மித்து ...மித்து என அழைத்ததும் சடாரென்று என்னை நிமிர்ந்து பார்த்தவள்...மாமா...என்றதும் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட...மாமா இது நிஜம் தான ....எனக்கு இந்த பேர் ரொம்ப பிடிச்சருக்கு மாமா.நீங்க மட்டும் என்னை இப்படி கூப்டுங்க” என்று அவள் குழந்தை தனமாக கேட்டது இன்னும் என் மனதில் இருக்கிறது.
அவள் கண்களில் இருந்து கண்ணீரை துடைத்து விட்டு...”எதுக்கு இப்போ அழற”...என நான் கேட்டதும்
“தெரியல மாமா....எனக்கு அழனும் போல இருக்கு...அதான்....”என்று அவள் சொல்ல
“மிது..மித்து இங்க பாரு.....நான் எப்பவும் உன் மேல பாசமாதான் இருக்கேன்....நீ இந்த அளவுக்கு என்ன எதிர்பார்பேனு நான் நினைக்கல...சாரி...”என்று சொன்னேன்.
பரவாயில்ல மாமா.....எனக்கு காரணம் தெரியல....ஆனா நீங்க வந்தாலே என்னோட பேசமாடிங்கலானு ரொம்ப ஏக்கமா இருக்கும்” என்று அவள் சொல்ல
“நீதான என்ன பார்த்து பயந்து ஓடின” என்று அவன் கேட்டதும்...
ஆமா நீங்க அப்பா,அம்மா அர்ஜுன் கிட்ட எல்லாம் எவ்ளோ பாசமா பேசறிங்க...ஆனா என்ன பார்த்த மட்டும் மிரட்ற மாதிரி பேசறீங்க ...அதான்...ஆனா நீங்க கிளம்பிற வரைக்கும் மேல இருந்து பர்த்துட்டே இருப்பேன் தெரியுமா” என அவள் சிறுபிள்ளை போல சொல்ல
அந்த முகத்தை அப்படியே அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கணும்னு என மனம் ஏங்க..... இனியும் இப்படி இருந்தால் ஆபத்து என்று எண்ணி வண்டியை மீண்டும் கிளப்பினேன்.
“மாமா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா” என்று குதுகலத்துடன் சொல்ல
“நானும் தான் அபி.அதும் இந்த ட்ரெஸ்ல நீ கலக்கிற” என்று நான் சொன்னதும்
ஹஹஹா ...தெரியுமே...அதான் வாயில இருந்து வாட்டர் பால்ஸ் வருவது கூட தெரியாம நின்னுட்டு இருந்திங்கலே” என சொல்லி விட்டு அவனை பார்த்து கண்ணாடிக்க
“அடிபாவி...எல்லாத்தயும் நோட் பண்ணிருக்க நீ” என அவன் செல்லமாக கடிந்து கொள்ள
“பின்ன ஆஞ்சேநேயர் பக்தன் திடீர்னு ஆரியா பக்தனாக மாறி ஜொள்ளு விட்டா தெரியாதா” ‘ என கேலியாக சொல்ல
“மிது நான் ரொம்ப நல்லவன்மா .நம்பு ...”
“அப்படியா ...நம்பிட்டேன் மாமா என சொன்னவள் இங்க தான் நிறுத்தங்க” என கூறவும் அந்த ஹோட்டல் முன்னால் வண்டியை நிறுத்தினான்.
“சரி அபி நீ போ...நான் வெயிட் பண்றேன்..சீக்கிரம் வரணும்” என சொல்ல
“மாமா நீங்களும் வாங்களேன்.”என அழைக்க
“வேண்டாம் மிது..நான் வரல” என அவன் தயங்க
‘மாமா நானே கூப்டறேன் வாங்க...அங்க உங்க கற்புக்கு நான் கேரண்டி” என சொல்ல
கொஞ்சம்.விட்டா போதுமே......... நீ ரொம்ப பேசற...அடி வாங்க போற பாரு...சரி நீ போ...நான் வண்டியைய நிறுத்திட்டு வரேன்” என் சொல்லி விட்டு நகர்ந்தேன்.
வண்டியை போட்டு விட்டு அத்தைக்கு போன் பண்ணி விட்டு நான் உள்ளே செல்ல அதற்குள் அபி அவள் தோழிகளுடன் பேசிகொண்டிருந்தாள் நான் ஓரமாக அமர்ந்தேன்.
அப்போது 2 பெண்கள் என்னை பார்த்து ஏதோ சொல்ல....நான் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க
வேகமாக அங்கு வந்த அபி” மாமா வாங்க போலாம்” என்று சொல்ல
“ஏன் அபி...இன்னும் function முடியல ...அதுக்குள்ள கிளம்பற” என நான் கேட்டதும்என்னை முறைத்து விட்டு கையை பிடித்து இழுத்து கொண்டு வெளியே வந்தாள்.
“ஏண்டா...என்னாச்சு “என நான் கேட்டதும் “ஒன்னும் இல்ல மாமா ...அம்மா திட்டுவாங்க போகலாம்” என கிளம்பினாள்
“மிது என்னாச்சு சொல்லு என நான் மிரட்ட...இல்ல அதுவந்து ...அவங்க உங்கள ஒரு மாதிரி பேசிட்டாங்க மாமா ...எனக்கு பிடிக்கலை” என்றாள்.
“மிது என்ன சொன்னங்க என்றதும்...இல்ல நீங்க ரொம்ப சிம்பிளா வந்து இருக்கீங்களா....அவங்க வேண்டாம்...வாங்க போலாம்” என்று சொல்ல
“மித்து சொல்லு என்று அதட்ட டிரைவர்னு நினசுட்டாங்க மாமா..”என்றதும் என்னை அறியாம என் மனம் சுருங்கி போனது.
நான் என்ன அப்படியா இருக்கேன் என என்னை நானே பார்த்து கொள்ள,அட ஆமா இன்று இங்கு வருவது தெரியாததால் சாதரண டிரஸ் போட்டு இருந்தேன்.அதும் இல்லாமல் எனக்கு இந்த சிட்டி ஸ்டைலே ஒத்து வராது ...அதுவும் மித்துவின் இந்த அலங்காரத்தில் யார் கூட நின்று இருந்தாலும் அப்படிதான் தெரிவார்கள்.
‘சரி விடு மிது. அவங்க சொல்றதும் சரிதான ....நான் அப்டிதான் இருக்கேன்.நீ போய் முடிச்சுட்டு வா.நான் கார்ல வெயிட் பண்றேன் “என்றதும் ....என்னை முறைத்தவள்
“உங்களுக்கு மரியாதையை இல்லாத இடம் எனக்கு தேவை இல்லை மாமா” என சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்..
இது என்ன விதமான பாசம் இது.இங்கு வருவதற்கு அவள் அம்மாவிடம் பொய் சொல்லி ...இவ்வளவு அலங்காரம் பண்ணி வந்தவள் என்னை ஒரு வார்த்தை சொன்னதும் கிளம்பிவிட்டாள் என்றால் நான் இதற்க்கு தகுதியானவனா குழம்பி போனேன் .
மேலும் அவளுடன் இன்றுதான் நான் மனம் விட்டு பேசினேன்...அதற்குள் நான்தான் முக்கியம் என்று இவள் வருகிறாள் என்றால் ...எனக்கு மித்துவின் முகத்தை பார்க்க பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.நான் இன்னும் என் காதலை அவளிடம் சொல்லவே இல்லை.ஆனால் அவள் என்னிடம் காட்டிய அந்த உரிமை
கார்த்தி நிஜமாக சொல்கிறேன் .அந்த மனநிலைமையை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியாது.அதை அனுபவித்து பார்க்கணும்.மனதிலே சந்தோசம் பொங்கி தளும்ப பூரிப்புடன் வண்டியை கிளப்பினேன்.
வண்டியில் சிறிது தூரம் வந்த பின் மாமா என்றாள் ....
என்ன மித்து ...என்ன வேணும் என்றேன்.
ஐஸ்கிரீம் சாப்பிடலாமா என்றால்.சரி என்று இருவரும் கடைக்கு சென்று அமர்ந்தோம்.அங்கு பேரர் வர நான் அவளுக்கு பிடித்த fruidsalad withஐஸ்கிரீம் சொல்ல ,அவள் எனக்கு பிடித்த kasatta சொல்ல இருவருமே எப்படி தெரியும் என்று ஒரே நேரத்தில் கேட்டு விட்டு சிறித்து கொண்டு அவள் தான் சொன்னால்.நான் நீங்க இந்த ஐஸ்கிரீம் வாங்கி சாப்டறத நிறய டைம் பார்த்திருக்கேன் மாமா என்று சொன்னவள் ...உங்கள கேட்கமாட்டேன்.ஏன்னா எனக்கு என்ன வேணும் பிடிக்கும் அப்படிங்கிறது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் என்று அவள் சொல்ல என் மனம் முழுவதும் அவளே நிறைந்து போனாள்.
அதிகமா நாங்க வெளி இடத்துல சந்திக்கல...அதிக காதல் வார்த்தை பேசல ...ஆனா எங்களுக்குள்ள ஒரு அன்னியோன்யம் இருந்தது கார்த்தி.அது எப்டின்னு சொல்ல தெரியல...ஒருவேளை அத்தைபொண்ணு மாமா பையன் இயற்கைல அந்த உரிமை வந்துச்சான்னுதெரியலை...ஆனா அதுக்கு அப்புறம் மித்து என்கூட சாதரணமா பேச ஆரம்பிச்சா.நான் கூட என்னை சில விஷ்யங்கள மாத்திகிட்டேன். 2
நானும் கல்லூரி படிப்பபை முடிச்சேன்.ஒரு நாள் அத்தை வீட்டுக்கு வந்தவன் அத்தை நான் ஊரு பக்கம் போயிட்டு வரலாம்னு இருக்கேன் என்று சொன்னதும் அதையும் நானும் வரேன் அகில்.ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்ல,மாமா வேலை இருக்குனு சொல்லிட்டார்.
அப்புறம் அத்தை அர்ஜுன்,நான் மித்து நான்கு பெரும் ஊருக்கு போனோம் .முதல்ல மித்து யோசனை பண்ணா...அது ரொம்ப கிராமமா இருக்கும்...நான் வரல மாமா என்றால்.நான் எதுவும் பேசல ..உன்னோட விருப்பம்னு சொல்லிடு வந்துட்டேன்.அப்புறம் அவளும் கிளம்பி வந்துட்டா.
என்னதான் அத்தை பொண்ணா இருந்தாலும் நான் கட்டிக்க போறவனு உரிமை வந்துட்டாவே அவ நம்ம வீட்டுக்கு வரும்போது ஒரு படபடப்பு இருக்கும் தான ...எனக்கும் அப்டிதான் இருந்தது.என் அம்மாவோட அண்ணன் வீடு அங்க இருந்தாங்க.அவங்களை விட்டு வீடு எல்லாம் சுத்தம் பண்ணி வைக்க சொன்னேன்.
முதன் முதலில் மித்து என் வீட்டுக்குள் வரா.நானும் அவளும் சேர்ந்து உள்ள வரணும்னு நினச்சேன்.அதுனால கார்ல வரும்போதே மித்துக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்.அவளும் காத்திருந்தா....அர்ஜுனும் அத்தையும் முதலில் உள்ள போக மிதுவும் நானும் சேர்ந்து உள்ளே நுழைந்தோம்.
அப்போது என்னோட மனநிலை என்னாலையே விவரிக்க முடியல.அவ்ளோ சந்தோசமா இருந்துது.
என் மனதிற்குள
ஒரு தேவதை வந்து விட்டால் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தோளிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
என்று இளயராஜாவின் பாடல் என் அருகில் ஒலிக்க என் கனவு தேவதை என் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.
பின்பு நான் உடை மாற்றி கொண்டு வந்து அவளை வீடு முழுக்க சுத்தி காட்னேன்.”சூப்ப்பரா இருக்கு மாமா” என குதுகலித்தாள்.
மேலே எனது அறைக்கு அழைத்து சென்றேன்.கிடுகிடுவென்று உள்ளே நுழைந்தவள்” இது யாரோடது “என கேட்டு கொண்டே சுற்றி பார்த்தாள்.
“என்ன மாமா கேட்டுகிட்டு இருக்கேன் பதில் ஏதும் இல்லை” என சொல்லிகொண்டே என்னை திரும்பி பார்க்க ...நான் அவளை பார்த்துகொண்டே இருக்க...எனது பார்வையின் மாற்றத்தையும்,என் எண்ணத்தின் போக்கையும் புரிந்து கொண்டவள் முகம் சட்டேன்று சிவக்க
“ஒ இது உங்க படுக்கை அறையா என உள்ளே போன குரலில் சொன்னவள் ..நல்லா இருக்கு கிளம்பலாம்” என அவள் நகர
அவள் கையை மெதுவாக பற்றி அருகில் இழுத்தவன்...மித்து ...மிது என நான் மெதுவாக அழைக்க
என்குரலின் தாபம் அவளுக்கு புரிந்திருக்கவேண்டும்.தலையை குனிந்தவள் நிமிராமலே சொல்லுங்க மாமா என உதடு அசைந்ததே தவிர வார்த்தை வெளியே வரவில்லை
அவள் இடுப்பில் கை போட்டு இறுக்கி அணைத்தவன் ...என்னடி நல்லா இருக்கா...நம்ம காதல் கவிதை அரங்கேற போற இடம்” என சரச குரலில் கேட்க
“ம்ம்ம்ம் ...என்றவள்...அப்போ இப்பவே அதுக்கு ஒத்திகை பார்த்துடலாமா என சொல்லிகொண்டே அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க
அப்படியே துவண்டு என் கையில் விழுந்தவள் “வேண்டாம் மாமா ....திருமணத்திற்கு அப்புறம் வச்சுகலாம் “என வாய் சொன்னது .ஆனால் உடல் துவண்டு என் கையில் கிடக்க....
அந்த நேரத்தில் அர்ஜுன் ...”டேய் அகில் உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க” என்று சொல்ல
“கரடி மாதிரி வரதே உங்க அண்ணனுக்கு பொழப்பா போச்சு என சொல்லிகொண்டே அவளை விடுவித்து...மீதி வந்து சொல்றேன் என கொஞ்சிவிட்டு...... அர்ஜுனை நோக்கி சென்றேன்.
அங்கு என்னை பார்க்க என் அம்மாவின் அண்ணன் சொக்கலிங்கம் மாமா வந்திருந்தார்.கைலி வேஷ்டியும் பணியனுமாக நான் இறங்கி வர ...பின்னால் செம்மை படர்ந்த முகத்துடன் மித்து இறங்கி வர எங்கள் இருவரையும் மாத்தி மாத்தி பார்த்துகொண்டே இருந்தார்.
‘எ‘ன்ன மாமா என்ன வேணும் என்று கேட்க...
இல்லப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு விருந்தாளி வந்திருகாங்க...... அதான் பார்த்து விட்டு போலான்னு வந்தேன்” என மஞ்சுவை பார்த்து சொல்ல
“நான் விருந்தாளி இல்லை...இந்த வீட்டு பொண்ணு மாமா ....இப்ப நீங்கதான் விருந்தாளி “என்று அவள் சொல்ல
“ஆமாமா ...இருபத்தி மூணு வருசத்திற்கு முன்னாடி இப்படி நினச்சிருந்தா இன்னைக்கு இந்த குடும்பம் இப்படியா இருக்கும் என அவர் பழைய கதையே தூசு தட்ட.... அத்தை எதுவும் பேசாமல் தலை குனிந்தார்.அவர் கண்களில் இருந்து கண்ணீர்,என் தங்கச்சி புருஷன் ரோசக்காரன் ...கடைசி வரைக்கும் மானத்தோட வாழ்ந்திட்டு போய்ட்டான்” என அவர் என்னை பார்த்து சொல்ல நான் அப்படியே சிலை போல நின்றேன் .
அதற்க்கு பிறகு இரண்டு நாட்கள் அனைவரும் என்னுடன் இருந்தார்கள்.ஆனால் என்னால் அவர்களுடன் எப்போதும் போல் ஓட்ட முடியவில்லை.மித்துவும் சொக்கலிங்கம் மாமா மகள் ரேவதியோடு சேர்ந்து கொண்டாள்.
அத்தை என் மனநிலையை கண்டு பிடித்து விட்டர்காளா...இல்லை மாமா போன் செய்து வர சொன்னர்களா என்று தெரியவில்லை.இரண்டு நாள் கழித்து கிளம்பி விட்டார்கள்.
மித்து கிளம்பும் போது என் அருகில் வந்தவள் ....டேய் மாமா உன்ன சிட்டி சிட்டிசனா பார்கிறத விட இதுலதாண்டா நச்சுனு இருக்க ....ஐ லவ் யூ என சொல்லிவிட்டு நச்சென்று ஒரு முத்த்தை கொடுத்து விட்டு ஓடிவிட்டாள்.அப்படியே preeze ஆகி நின்றேன் நான்.
அவர்கள் கிளம்பிய பிறகு சொக்கலிங்கம் மாமா என் வீட்டிற்க்கு வந்தார்.
“என்ன மாப்பிள்ளை அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா” என்றார்.
என்னை எப்பவும் அகிலா என்று அழைப்பவர் அன்று மாப்பிள்ளை என்று உரிமையாக அழைக்கும்போதே எனக்கு சந்தேகம்.
“ம்ம்ம் கிளம்பிட்டாங்க மாமா .நீங்க எல்லாம் எப்டி இருக்கீங்க” என்று கேட்டேன்
எங்களுக்கு என்ன மாப்பிள்ளை ...உங்கள இப்படி அந்த துரோகி வீட்டுக்கு விட்டு கொடுத்து விட்டோமே என நான் எண்ணி வருந்தாத நாள் இல்லை.நான் என்ன பண்றது ........ எனக்கும் அப்போ வருமானம் இல்லை.அவன் காசு பணம் இருக்கிறவன் .அதான் அவன் உன்னை விலைக்கு வாங்கிட்டான்” என்று அங்கலாயிக்க...
“விடுங்க மாமா..முடிஞ்சு போன கதை ....வேற என்ன சேதி...காட்ல என்ன போட்ருகிங்க” என பேச்சை மாற்றினேன்.
அனால் அவரோ “ஏன் மாப்பிள்ளை படிப்ப முடிச்சுடிங்களா...இப்போ வேலைக்கு போனா என்ன சம்பளம் கிடைக்கும்” என கேட்க
நானும் “அதுகென்ன மாமா 1 லட்சம் பக்கத்துல கிடைக்கும்” என்றேன்.
சிறிது நேரம் யோசித்து விட்டு” சரி மாப்பிள்ளை கடைசியா உங்க அப்பா ரொம்ப கஷ்டபாட்டு சம்பாரிச்சது ஏதும் இல்ல.உங்க மாமனும் எல்லா நிலத்தையும் வித்திட்டு பணத்த எடுத்துகிட்டான்.நீயாவது நல்ல சம்பாரிச்சு உங்க அத்தை புருசுனுக்கு சமமமா வரணும்.உங்க அப்போவோட ஆசையும் அதான்” என்றார்.
எனக்கு என்ன சொல்றதுனே தெரியல...”இல்ல மாமா நான் தான் அந்த நிலத்தை விற்க சொன்னேன்.என் படிப்பு செலவுக்கு ஆகும்னு” என சொன்னேன்.
“ஒ அப்போ நீ உன்னோட காசுலதான் படிச்சிருக்க.மானஸ்தண்டா நீ ...எங்கடா நம்ம வீட்டு குல வாரிசு அடுத்தவன்கிட்ட கையேந்தி நிக்குதேன்னு எவ்ளோ கவலை பட்டேன் தெர்யுமா ...நீ நம்ம வம்சம்னு நிருபிச்சுட்ட மாப்பிள்ளை.அப்புறம் நீ உன்னோட காசுலதான படிச்ச.... .இனியும் நீ அங்க இருக்கிறது நல்லது இல்லை.அப்புறம் உங்க அப்போவோட ஆத்மா உன்னை மன்னிக்காது.அவன் சாகிற வரைக்கும் அவங்க முகத்துல முழிக்காமலே இருந்து இறந்தான்.அவன் மகன் நீ...புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா...நீ வெளியே வந்து நல்ல சம்பாரிச்சு உங்க அப்பா கனவை நிறைவேத்தனும் மாப்பிள்ளை என சொன்னார்.மேற்படியும் அவர் சில மணி நேரம் பேசிகொண்டிருந்தார்,
ஆனா கார்த்தி அவர் பேசினது ஏதும் என் காதில் விழல .”உன் அப்பா மானஸ்தன்.கடைசி வரைக்கும் ரோசத்தோட வாழ்ந்து இறந்தான்.நீதான் அவரோட கனவை நிறைவேத்தனும்” இந்த வார்த்தை மட்டும் தான் என் காதில் ஒலித்து கொண்டிருந்தது.
சரி மாப்பிளை நான் கிளம்பறேன்...நீ நல்ல யோசி என சொல்லி விட்டு வெளியே வந்தவர், நல்லவேளை பையன் யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.இவன் இப்டி வருவான்னு நான் நினைச்சனா ...இவனுக்கு இருக்கிற கோபத்துக்கு எங்கயாவது சண்டியரா சுத்திட்டு இருப்பானு நினச்சேன்.இவன் இப்படி 1 லட்சம் சம்பளம் வாங்கரானு தெரிஞ்சதுக்கு அப்புறம் என் பொண்ணுக்கு கட்டாம விட்ருவனா.அதுக்கு அங்க தொடர்ப முதல்ல கட் பண்ணனும். என அவர் மனதில் நினைத்தது அகில்க்கு தெரிய வாய்ப்பில்லை.
இரண்டு நாலா நல்லா யோசிச்சு பார்த்தேன் கார்த்தி .எனக்கு எதுமே பிடிபடல.மாமா வேற கிளம்பு போது தான் அவர் நிறுவனத்துள வேலை செய்யரையானு கேட்க நானும் சரின்னு சொல்லி இருந்தேன்.இப்போ என் மனம் இருக்கிற நிலையில் அங்க வேலை செய்ய தோனலை.
மறுபடியும் ஊருக்கு போய் மாமாகிட்ட நேர்ல சொல்ல தைரியம் இல்லாம போன்ல முடியாதுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.அர்ஜுனும் அத்தையும் எவலோவோ கெஞ்சி பார்த்தாங்க.நான் முடியாதுன்னு மறுத்திட்டேன்..
உடனே கார்த்தி ...அண்ணா மிது அண்ணி ஒன்னும் சொல்லலையா என்றான்.
ஆகில் அவனை பார்க்க...நீங்க விரும்பினாலும் விரும்பாட்டியும் நீங்க எனக்கு அண்ணாதான்.சொல்லுங்க அண்ணி ஏதும் சொல்லலையா என்று கேட்டான்.
இல்ல கார்த்தி நான் கிளம்பும்போது அவள் இல்லை.... காலேஜ்ல டூர் போயிருந்தா ...அதற்கு பிறகு அவ என் கூட பேசறதுக்கு பல டைம் முயற்சி பண்ணா.ஆனா நான் தவிர்த்துட்டேன்.
“உண்மையா சொல்லுங்கண்ணா ...உங்களுக்கு அவங்க பிரியறது கஷ்டமா இல்லயா...அவங்களை நீங்க நினைக்கவே இல்லயா..”என கார்த்தி கேட்க
“அவளை எப்டிடா நான் நினைக்காம இருப்பேன்.அப்போ எனக்கு ரோசம் கண்ணை மறைச்சிடுச்சு .அப்பாவோட ஆசைதான் முக்கியம்னு கிளம்பிட்டேன்.ஆனா என்னால அவளை விட்டு இருக்க முடியலடா..அதான் மாமா கூப்பிட்ட உடனே மறுபடியும் கிளம்பி வந்துட்டேன்.நான் இங்க வந்ததற்கு ஒரே கரணம் என் மித்து மட்டுமே.
நான் போனதும் அவளும் மனம் உடைந்து அர்ஜுனுடன் us போய்ட்டதா சொன்னங்க.
அப்புறம் மாமா போன் பண்ணி அத்தை உடல்நிலை மன நிலை ரொம்ப மோசமா இருக்கு.மனதிற்குள் போட்டு குழப்பிகிறா.உன்னோட அம்மாவா இருந்தா நீ இப்படி விட்டுடுவியா அப்படின்னு கேட்டார்.அதான் வந்தேன்
.
கார்த்தி நான் உண்மையா சொல்லட்டுமா...மிதுகாக தாண்டா நான் வந்தேன். அத்தை மாமா எல்லாம் நான் என் மனதிற்கு சொல்றது.மிதுவையும் இங்க வரவைக்கிறேனு மாமா சொன்னார்.அதான் வந்தேன் என்றவன் இதழில் அப்போது தான் லேசான புன்னகை எட்டி பார்த்தது.
அண்ணா நீங்க பயங்கரமான ஆளு..அமைதியா இருந்துட்டு அண்ணிய என்ன பாடு படுத்திட்டிங்க என கிண்டல் பண்ண
“அதாண்டா இப்போ பிரச்சனை ....அவளை பார்க்காத வரை எப்போ பார்பேன்னு ஏங்கிட்டு இருந்தேன்.அவளை பார்த்ததுக்கு அப்புறம் மனசுல ஏதோ ஓர் விலகல்,,,,எனகே என்ன பண்றதுன்னு புரியலைடா?
இந்த வேதனையில் நான் இருக்க...இந்த ரகு எங்கிட்ட வந்து போன் நம்பர் கேட்கிறேன்..அந்த கோபத்துலதான் இப்டி பண்ணிட்டேன்” என்று சொல்லி விட்டு தலை குனிய
“விடுங்க அண்ணா .....இப்போ ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க...அதனால அண்ணிய நினச்சிகிட்டு படுத்து தூங்குங்க....அதிலயும் அவங்கள முறைச்சுகிட்டே இருக்காதிங்க “என்று கிண்டலாக சொல்ல
“அடபோடா ...அவ இப்போ என்ன படுத்தற பாடு இருக்கே ...முடியலடா...என் ஸ்வீட் ராட்சசி அவ” என இவன் காதலுடன்சொல்ல
“ஆஹா!!!!!! அண்ணா ரொமான்ஸ் மூடுக்கு வந்துட்டார்...கார்த்தி இனி இங்க இருந்தேனே நிறிய சென்சார் பிரச்சன வரும் ...அதுனால விட ஜூட்” என்றவன்...
“அண்ணா இந்த சந்தோஷ மனநிலமையில் படுத்து தூங்குங்க...உங்கள நான் தொந்தரவு பண்ணல...நானும் தூங்க போறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்..
இங்கு வீட்டில் அகிலை நினைத்த படியே அமர்ந்திருந்த அபி அப்படியே உறங்கி போனாள்.
அழுத இதயங்கள் உறங்க ........அங்கு காதல் கொண்ட ஒருமனம் கொதித்து கொண்டிருந்தது.
விண்ணில் தோன்றும் விடி வெள்ளியாக
என் வாழ்வில் நீ வந்தாய்
அந்த மகிழ்ச்சியை நான் உணரும் முன்னே
மழையும் இடியும் தாக்க
மேக கூட்டங்களில் நீ மறைய
விழிகளில் கவிதையுடன்
காத்திருக்கிறேன் உன் தரிசனத்திற்காக!!!!!!!!!!!!
கொதிக்கும் மனதிருக்கு குற்றால நீர்வீழ்ச்சியாய் வரபோவது யாரோ ??????????????????