• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 11

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
 அத்தியாயம் 11


அந்திமாலை பொழுது விடைபெற்று இனிய இரவு தொடங்கும் நேரத்தில் தனது மொட்டை மாடியில் நின்று கொண்டு வானத்தில் உள்ள நட்சத்திரங்களிடம் பேசிகொண்டிருந்தாள் ருத்ரா.

நீல வானமே நீ கொடுத்து வைத்தவள்

உன்னிடம் உள்ள எண்ணங்களை

நட்சத்திரங்களாக அள்ளி தெளித்து விட்டாய்..

என் மனதில் பல வேள்விகள் நிரம்பி வழிகின்றன

அதை நானும் அள்ளி தெளிக்க

நீ இடம் தருவாயா

இயற்கையின் அதிசயமே இது தானே.நாம் என்ன நினைத்து அதை பார்கிறோமோ அது போலவே அது காட்சி அளிக்கும்.மகிழ்ச்சியாக இருக்கும்போது கொட்டி கிடக்கு நட்சத்திரங்கள் சந்தோஷ முத்துக்களின் சிதறல்கள் .அதுவே வேதனையில் இருக்கும்போது அது நெருப்பில் இருந்து தெறிக்கும் தீபொறிகள் .

அப்போது “ருத்ரா இங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்று அழைத்த படியே மேலே வந்தார் வனஜா.

“அம்மா இங்கு பாருங்களேன் இந்த நட்சத்திரங்களுக்கு நடுவில் நீல வானம் எவ்வளவு நன்றாக இருக்கிறது.அதை பார்த்து கொண்டிருந்தேன்.பார்க்க பார்க்க மனதிற்கு இதமா இருக்கு.அதான் அப்படியே நின்று விட்டேன்” என்று வானத்தை பார்த்து கொண்டு சொன்ன மகளை ஆழ்ந்து நோக்கிய வனஜா

“ஆமாம் ருத்ரா. புரியாதா பல சங்கதிகளை இந்த நீல வானம் நமக்கு சொல்லி தரும்.நமக்கு அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் வேண்டும்” என் சொல்லிகொண்டே ஆதரவாய் அவள் தலையை தடவி கொடுத்தவள் “உன் அம்மாவும் அது போலதான்.உனக்கு எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும்.நீ கண்டதை போட்டு குழப்பி கொள்ளாதே....வந்து படு “என்று அவளை கீழே அழைத்து வந்தார்.

தனது அறையில் வந்து அமர்ந்தவள் சிந்தனையில் ஆழ்ந்தாள் .தான் செய்தது சரியா தவறா .அம்மா சொல்வது போல் அவசரபட்டு செய்து விட்டு யோசிக்கிறமோ என நினைத்தவள்

பெண் பார்க்க நாள் அன்று நடந்த நிகழ்ச்சி அவள் கண் முன் ஓடியது.

மாப்பிள்ளை வீட்டுகாரங்க வராங்க என்று அம்மா சொன்னதும் அதிர்ந்த ருத்ரா...”அம்மா என்ன இது.....யார கேட்டு வர சொன்னேங்க ...எனக்கு இப்போ திருமணம் வேண்டாம் என வேகமாக சொல்ல

இல்ல ருத்ரா....இன்னைக்கு ஏதோ ரொம்ப நல்ல நாலாம்.அதுனால இன்னைக்கு வராங்ககலாம்.எல்லாமே பொருந்தி வந்த்டுச்சுனா சீக்கிரம் திருமணத்தை வைத்து விடலாம்னு ப்ரோக்கர் சொன்னார்.நானும் விசாரிச்சுட்டேன்.தங்கமான பையன் ...இடமும் நல்ல இடம்...எனக்கு திருப்தி...அதான் சரின்னு சொல்லிட்டேன்.”என்று விளக்க

“இன்னைக்கு என்னால முடியாது.எனக்கு தலைவலி....அது இல்லாம இப்படி திடிர்னு ஒருத்தர் முன்னாடி போய் நின்னு சொல்றது எல்லாம் எனக்கு பிடிக்கல ...என்னை வற்புருத்தாதிங்க” என அவள் பிடிவாதம் பிடிக்க

“ருத்ரா நான் சொல்லிட்டேன்.அவங்க வராங்க...நீ இப்ப ரெடி ஆகிற..... சரியா.... என அழுத்தமான குரலில் சொல்லி விட்டு நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன்” என்று கிளம்பினார் வனஜா

“ருத்ரா பேக்கை தூக்கி எறிந்து விட்டு முனகிகொண்டே உள்ளே செல்ல,அப்போ ஷோபா போன் பண்ண ,வனஜா மாப்பிள்ளை மேட்டர் சொல்ல உடனே கிளம்பி வந்துவிட்டாள் அவள்.

“ஹாய் ருத்ரா வாழ்த்துக்கள்” என சொல்லிகொண்டே உள்ளே வந்தாள் ஷோபா .அங்க அறையில் அவள் தலையில் கை வைத்து அமருந்திருந்ததை பார்த்து “என்ன ஆச்சு ருத்ரா ஏன் இப்படி இருக்க? அம்மா போன் பண்ணி சொன்ன உடனே எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெர்யுமா ....கிளம்பு... கிளம்பு போய் குளிச்சுட்டு ரெடி ஆகு” என பரபரத்தாள்.

“அச்சோ...... நீ கொஞ்சம் சும்மா இருக்கியா.நானே என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சுட்டு இருக்கேன்....இதுல எனக்கு விருப்பமே இல்ல ஷோபா”

“ஏன் ருத்ரா....மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலையா”

“மாப்பிள்ளை யாருனே தெரியாது எனக்கு..... அப்புறம் எப்படி பிடிக்குது பிடிக்லைன்னு சொல்றது ...அது இல்ல” என சொல்ல

‘பின்ன வேற என்ன பிரச்சனை உனக்கு...நீ யாரையாவது காதலிக்கிறியா” என கேட்டாள்.

ஆமா இப்ப அது ஒண்ணுதான் குறைச்சல் ...அப்படி எல்லாம் ஏதும் இல்ல ...என்னனு சொல்றது...என் மனசுக்கு பிடிக்கலை ஷோபா என்றாள்.

“அவ்ளோதான ....முதல்ல அப்டிதான் இருக்கும் ....வீணா மனச போட்டு குழப்பிக்காத ...போய் குளிச்சுட்டு கிளம்பு” என அவளை தள்ள மனம் இல்லாமல் உள்ளே சென்றாள் ருத்ரா.

அந்த நேரத்தில் அவள் தொலை பேசி ஒலிக்க ...அதை எடுத்து பார்த்தவள் அதில் அஜுன் என்ற பெயர் வர சிறிது நேரம் யோசித்தவள் அதை ஆன் செய்தாள்.அர்ஜுன் தான் அவளை அழைத்து இருந்தான்.அவனிடம் பேசிவிட்டு வைத்த ஷோபாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

குளியல் அறையில் இருந்து சலிப்புடன் வெளியே வந்த ருத்ராவை தீர்க்கமாக பார்த்த ஷோபா

“ருத்ரா நான் கேட்பதற்கு மறைக்காம பதில் சொல்லு.AP இன்டர்நேஷனல் MD அர்ஜுன் பத்தி நீ என்ன நினைக்கிற என்று கேட்டாள்.


“என்னடி லூசுதனமா பேசற.....இது வரை நல்லாதான இருந்த ...இப்போ என்ன ஆச்சு” என அவளிடம் கேட்க

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என் ஷோபா அழுத்தி கேட்டதும்

“என்ன சொல்ல சொல்ற...அவரை முதல்ல அவங்க வீட்டு functionல தான் பார்த்தேன் என ஆரம்பித்து ...இன்று நடந்த சண்டை வரை” அவளிடம் சொல்லி முடித்தாள்.

“ஷோபா ஒன்னு சொல்லட்டுமா அவர் இன்னைக்கு என்னை திட்னத வச்சு தப்பா நினைக்காத.ரொம்ப நல்லவர் தெர்யுமா.நான் எத்தன டைம் அவரை இன்செல்ட் பண்ற மாதிரி பேசிருக்கேன்.ஆவர் சிரிச்சுகிட்டே அத ஈசியா எடுத்துக்குவார்.எங்கிட்ட அவோரோட எதிர்கால திட்டத்தை பத்தி எல்லாம் நிறையா சொல்லிருக்கார் என அடுக்கி கொண்டே போனவள்......ஆனா இன்னைக்கு நடந்தது கொஞ்சம் அதிகம்....இனி என் கூட பேசவே மாட்டார்னு நினைக்கிறன் ....என்னால அதை தாங்கிகவே முடியல...அதான் தலைவலின்னு வீட்டுக்கு வந்தேன்...இங்க வந்தா அம்மா இந்த குண்டை தூக்கி போடறாங்க” என வருத்ததுடன் சொல்ல

ஷோபா சிரித்து கொண்டே “நினச்சேன்...அடிகள்ளி .....இந்த பூனையும் பால் குடிக்குமானு எங்களையே ஆச்சிரியப்பட வச்சுட்டே.உன்னை என்னமோன்னு நினச்சேன் ...இப்படி கவுந்திடியே....உன்னை ஜான்சி ராணின்னு நினச்சேன்...இப்படி சக்குபாய் மாதிரி தடால்னு குப்புற விழுந்திட்டியே “ என கேலியாக சொல்ல

“என்னடி சொல்ற...உளராத...தெளிவா சொல்லு” என ருத்ரா எகிற....

“என் தங்கம் உன் அர்ஜுன் இப்பதான் போன் பண்ணார் ...உன் கிட்ட பேசணும்னு சொனார்” என சிரித்து கொண்டே சொல்ல

“ருத்ராவிர்க்கு இன்ப அதிர்ச்சியா இருக்க...உண்மையாவா சொல்ற...அர்ஜுன் போன் பண்ணாறா...என்மேல அவருக்கு கோபம் இல்லியா” என சொன்னவள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க

அப்போது ஷோபா ருத்ராவிடம்.......” நான் சொல்றத நீ எப்படி எடுத்துக்வேணு தெரியல .நான் நினைக்கிறேன் அவர் உன்னை காதலிக்கிறார்னு .நீ சொன்னதை எல்லாம் வைத்து பார்த்தால் நீ பேசினா பேச்சுக்கு வேற யாராக இருந்தாலும் அவங்க பதில் சொல்ற விதமே வேற மாதிரி இருந்திருக்கும்.ஆனா இவரு உன்னை ரொம்ப மென்மையாக கையாண்டிருக்கார்.மனதில் காதல் இருந்தால் மட்டுமே இது முடியும் ருத்ரா”....... என சொல்ல

“என்னடி சொல்ற நீ என அதிர்ந்த ருத்ரா ....அப்படி எல்லாம் இல்லை....நீ உளறாத...அவங்களோட நிலைமை என்ன ...அந்தஸ்த்து என்ன ...அவராவது என்னை போய்...உனக்கு கற்பனை ஏன் இப்படி போகுது” என கோபமாக சொல்ல

“ம்ம்ம்ம்....ருத்ரா உனக்கு இப்படி எல்லாம் பேச தெர்யுமா.....என் கண்ணை பார்த்து சொல்லு ....உனக்கு அவர் மேல எந்த ஈடுபாடும் இல்லயா ....அப்படி இல்லாமையா அஜுன் அவர் பெயரை போட்டு அதுக்கு நீ போட்ருக்க வைட் ரோஜா படத்தை பார்த்துட்டு தான் சொல்றேன் ..... ருத்ரா உன்னையே நீ ஏன் ஏமாத்திக்கிற.....உன் கண்ணு சொல்லுது உன்னோட காதலை...அவர் போன் பண்ணார்னு சொன்ன உடனே உன் முகம் சொல்லுது நீ அவர் மேல வச்சிருக்க அன்பை....உன் வாய் மட்டுமே இல்லைனு சொல்லுது.மற்றபடி உன் உடலில் உள்ள ஒவொவொரு உறுப்பும் நீ அவர எதிர்பார்க்கிறாய் அப்படிங்கறத நல்ல காட்டி கொடுக்குது.நீ அமைதியா இரவு உட்கார்ந்து யோசி.நல்ல முடிவா எடு.வாழ்க்கை ஒரு முறைதான் ருத்ரா...அதை நீ ஆசைபட்டவங்களோட வாழ்ந்து பாரு.அந்த ஆனந்தம் புரியும்.நான் அதை அனுபவிச்சதுனால் சொல்றேன் .... எனக்கு நேரமாச்சு.....நான் கிளம்பறேன்.ஆனா நீ அவரை விரும்பற ...நான் உறுதியா சொல்றேன் என சொல்லி விட்டு அவள் வெளியே செல்ல ...

வனஜா உள்ளே வர ...”என்ன ஷோபா கிளம்பிட்ட...என்ன ருத்ரா இன்னும் ரெடி ஆகலியா நீ” என வேகமாக கேட்க

“அம்மா எனக்கு இரண்டு நாட்கள் டைம் கொடுங்க...நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன்.அதற்க்கு பிறகு நீங்க அவங்கள வர சொல்லுங்க ப்ளீஸ்” என அழுபவள் போல் ருத்ரா கேட்க ....

குழம்பி நின்ற வனஜா..ஏதோ நடந்திருகிறது என் யூகித்து “சரி ...இன்னும் இரண்டு நாள் கழித்து நான் அவர்களை வரசொல்கிறேன்” என சொல்லிவிட்டு ருத்ரா முகத்தை யோசனயுடன் பார்த்து கொண்டே உள்ளே சென்றார்.

இரவு முழுவதும் எண்ண அலைகளில் அடித்து செல்லப்பட்ட ருத்ரா....அர்ஜுனை முதல் நாள் பார்த்த முதல் இன்று நடந்தவரை படமாக ஓட அவன் தன்னை எந்த அளவிற்கு பாதித்து இருக்கிறான் என அவளுக்கு புரிந்தது.அவனை பார்க்கும்போது மட்டும் அவளுள் ஒரு படபடப்பு எழும்....அதை மறைக்கவே அவள் கோபமாக பேசுவாள்....ஒ ஒ ஒ இதற்க்கு பேர் தான் காதலா என தனக்குள் சொல்லி சிரித்து கொண்டவள் ....என்னையவே சாச்சுபுட்டானே என நினைத்தவள் .......ஆனால் அவனோடிய மனநிலைமை என்ன என்று அறியாமல் ஆசையை வளர்த்து கொள்ள கூடாது .அவனோட அந்தஸ்த்து வேறு...என்னோட நிலைமை வேற .....சரி இப்போதைக்கு ரொம்ப போட்டு குழப்பிக்க வேண்டாம். .... மறுபடியும் நாளைக்கு யோசிப்போம் என தனக்குதானே சொல்லி கொண்டு அப்படியே உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலை அர்ஜுன் அழைத்ததும் ஒரு சின்ன சந்தேகம் மனதில் எழுந்தது.மனதை அடக்கி கொண்டு அங்கு சென்றவள் அவனை பார்த்த உடன் மனம் பரபரக்க...அவன் காதல் மொழியை கேட்ட உடன் நானும் அப்படிதான் என உடனே சொல்லிவிட்டாள்.

அந்த சந்திப்பிற்கு பிறகு அர்ஜுனை அவள் மீண்டும் பார்க்கவில்லை.புது ஆர்டர் வந்திருக்கு என் போன் பண்ணி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவன் அதற்க்கு பிறகு அவளை தொடர்பு கொள்ள வில்லை. அவளும் இரண்டு நாட்கள் எதுவும் கண்டு கொள்ள வில்லை....பின்னர் மனதில் மெதுவாக அவன் நினைப்பும் ...அவன் தன்னிடம் பேசவும் இல்லை என்ற ஏக்கம் வர அவன் அழைப்பிற்காக காத்திருந்தாள். ஆனால் அர்ஜுன் அவளை தொடர்பு கொள்ளவில்லை . அவளுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வர மேலும் முடிவாக இன்று மாலை அவளே தன் சுயமரியதையை ???? விட்டு அவனுக்கு போன் செய்ய அது ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. அந்த கோபத்தில் தான் நட்சத்திரங்களுடன் தன எண்ணத்தை கொட்டி கொண்டிருந்தாள்.

எவ்வளவு ஆசைகள் ,கனவுகளுடன் கோவிலில் இருந்து வந்தேன் ...அத்தனையும் கானல் நீர் போல் ஆகிவிட்டதே? எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு மெசேஜ் அனுப்பி இருகலாமல என மனம் ஏங்க உறங்காமல் புலம்பி கொண்டிருந்தாள்.


அப்போது போனில் ஒரு மெசேஜ் வர....ஹய் குட்டிமா குட் நைட் டியர் என்று இருக்க சென்டர் அர்ஜுன் என்று வர கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் ருத்ரா.

அர்ஜுனும் என்ன செய்வான்.நான்கு நாட்களாக வேலை அதிகமாக இருக்க வேற எந்த எண்ணமும் அவனுக்கு தோன்ற வில்லை.இன்று நண்பர்களை அனுப்பி விட்டு .அகிலை சென்று பார்த்து விட்டு ,அவனை பற்றி கார்த்திக்கிடம் விசாரித்து விட்டு வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்தவன் தனது போன் ஸ்விட்ச் ஆப் செய்தது நியாபகம் வர அதை எடுத்து உயிர்பிதான்.பெரும்பாலும் பார்ட்டிக்கு செல்லும்போது அவனோட போன் அனைத்தே வைக்க பாட்டிக்கும்.அதில் பத்து மிஸ்டு கால் ருத்ராவாக இருக்க

“ஆஹா...அர்ஜுன் சாமி மலையேரிடுசுடா....இன்னைக்கு மாட்னோம் தொலைஞ்சோம்....”.என் நினைத்தவன் அவளுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு அவள் இப்போதுள்ள நிலைமையை அறிந்த பின்பே பேசலாம் என் முடிவு பண்ணி அனுப்பினான்.ஆனால் மனமோ அர்ஜுன் நீ செய்வது ரொம்ப தவறு ..... காதலை சொல்லி விட்டு அதற்கு பிறகு அவளை பற்றி நினைக்க கூட இல்லை....என்ன ஆளுடா நீ என இடித்துரைக்க

நான் என்ன பண்ணட்டும்.வேலை என்று வந்து விட்டால் நான் நானாக இருப்பதில்லை.பாவம் என்னை ரொம்ப எதிர்பார்த்திருப்பா ...நான்கு நாட்கள்..... இப்போது நினைத்தால் எனகே ஆச்சிரியம்...எப்படி மறந்து போனேன் என் சொல்லி கொண்டே அவளுடிய பதில் மெசேஜ்க்காக காத்திருந்தான்.வெகு நேரம் பதில் வரவில்லை.அதற்க்குள் வீடு வந்து விட தனது அறைக்கு சென்றவன் மீண்டும் அதே மெசேஜ் அவளுக்கு அனுப்ப....

இங்கு அந்த மெசேஜ் பார்த்த சந்தோசத்தில் ஆத்திரமும் சந்தோசமும் ஒரு சேர வர வெகு நேரம் அதை பார்த்து கொண்டே இருந்தாள் ருத்ரா.மறுபடியும் மெசேஜ் வர வேகமாக டைப் பண்ணினாள்.

அங்கு பதில் மெசேஜ் வந்ததும் ஆவலோடு அதை ஓபன் பண்ண “போடா” என்று இருந்தது.

ஒரு நிமிடம் அதை பார்த்துக்கொண்டே இருந்தவன் பின்னர் மனம் விட்டு சிரிக்க அந்த நேரத்தில் ரேடியோவில்

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

என பாட.அர்ஜுனனின் மன நிலைமை பாட்டுடோடு ஒன்றி போனது .

“நீயும் அப்பிடிதான் குட்டிமா...ஆனா இப்போ இது போதும்...நாளைக்கு வந்து உன்னை மலை இறக்கி விடுகிறேன்” என சொல்லி விட்டு படுத்தவன் அசதியில் உறங்கிவிட்டான்.

அங்கு ருத்ராவோ அவன் மெசேஜ் பார்த்து கொண்டே உறங்காமல் விழித்து இருந்தாள்.

அழகிய காலை பொழுது ஆதவனுடன் மலர மஞ்சு சமையல் அறையில் டீ போட்டு கொண்டிருக்க ,பத்மநாபன் அதை குடிப்பதற்காக காத்திருக்க,அப்போதுதான் எழுந்து கீழே வந்தான் அர்ஜுன்.

“அம்மா டீ என கேட்டுகொண்டே “ சோபாவில் அமர்ந்தான்.

“குட்மோர்னிங் அர்ஜுன்” என சொன்னவர்...”என்ன நைட் செம பார்ட்டியாட்ட இருக்கு” என பத்மநாபன் சொல்லி சிரிக்க

“அச்சோ அப்பா கொஞ்சம் அமைதியா இருங்க...அம்மாக்கு தெரியாது ....நீங்க போட்டு கொடுத்துடாதிங்க” என மெதுவான குரலில் அவரை எச்சரிக்கை செய்ய

“அப்படியா அர்ஜுன்...சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என ஒரு ரகசிய குரல் இருவருக்கும் நடுவில் இருந்து கேட்க

அதிர்ச்சியில் இருவரும் திரும்பி பார்க்க அங்கு அபி கண்ணை உருட்டி கொண்டு ...நின்று கொண்டிருக்க

“நீயா ...நீ எப்போ வந்த” என கேட்டவன்

உடனே அபி ரஜினி ஸ்டைலில் “இங்கே பார் தம்பி நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது....ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்திடுவேன்” என சொல்ல

“அச்சோ காலையிலே இந்த கொசு தொல்ல தாங்க முடியலேயே....அம்மா “என அர்ஜுன் கத்த

“என்னடா இதோ வந்துட்டேன் “என சொல்லி கொண்டே டீ எடுத்து கொண்டு வந்த மஞ்சு அங்கு அபி நின்ற கோலத்தை பார்த்து

“ஏண்டி ஒரு பொம்பளபுள்ள இப்படிதான்” என ஆரம்பிக்க உடனே இருமல் வர....இரும்பிய பிறகு மீண்டும் “எழுந்து” என தொடங்க மறுபடியும் இருமல் வர

“அம்மா ...பொறு...பொறு...இப்ப உனக்கு என்ன வேணும்...என்ன திட்டனும் அவ்ளோதான...இதோ உன்னோட குரல்லே நீ திட்ரத கேளு என கையில் இருந்த அலை பேசியை அபி அழுத்த

அது உடனே ....”ஏண்டி ஒரு பொம்பளைப்பிள்ள இப்படிதான் எட்டு மணி வரைக்கும் தூங்குவியா...நாளைக்கு நீ போற வீட்டுல என்ன புள்ளைய வளர்த்தி வைச்ருகானு என்னை தான் திட்டுவாங்க...சீக்கிரம் எழுந்திருடி.....எனக்கு வந்து எப்படி தான் பொண்ணா பிறந்தியோ” என அவர் காலையில் புலம்புவது அதில் ரெகார்ட் வாய்சில் வர

“என்னடி இது” என கோபமாக மஞ்சு கேட்க


“இல்ல டார்லிங்...நான் usல இருக்கும்போது உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்.அதும் காலையில் உன் சுப்ரபாரதம் கேட்காம என்னால் எழுந்திரிக்கவே முடியல...அங்க இருக்க பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் எங்க அம்மா சுப்ரபாரதம் பாடுனாதான் நான் எழுந்திருபேனு சொல்ல...அவங்களும் அதை கேட்க ஆசை பட்டாங்க.அதுக்குதான் ஒரு நாள் நான் காலை நேரத்துல உனக்கு போன் பண்ணி தூங்கிட்டு இருக்கேனு சொல்ல நீ உடனே உன் ரேயடியோவ ஆன் பண்ண.... நான் பதிவு பண்ணிட்டேன்” என கண்ணடித்து கொண்டே சொன்னவள்

“ஆனா டார்லிங் இதுல சிரிப்பு என்னன்னா என் us பிரிண்ட்ஸ்ம் காலையில இத கேட்டு கன்னத்துல போட்டு கிட்டு தான் எழுந்த்ரிப்பாங்க” என சொல்ல

அர்ஜுனும் பத்மநாபனும் வாய் விட்டு சிரித்தனர்.

திரும்பி அவர்களை முறைத்த மஞ்சு ...”அவ என்ன கிண்டல் பண்றா ...நீங்க இரண்டு பெரும் சிரிகிரிங்க...இன்னைக்கு உங்க இரண்டு பேருக்கும் டீ கிடையாது போங்க” என சொல்லி விட்டு அதை உள்ளே எடுத்து செல்ல

“அம்மா ...அவ கிடக்கறா ...என் செல்ல அம்மா...ப்ளீஸ்மா எனக்கு உங்க டீ குடிச்சாதான் சுறுசுறுப்ப இருக்கும்” என அர்ஜுன் கொஞ்ச

“ஆமா அர்ஜுன் அப்பதான அடிச்சது தெளியும் என சொல்லி விட்டு...அச்சோ அர்ஜுன் சொல்லிட்டனே...என்ன பண்றது” என அவன் அருகில் வந்து ரகசியமாய் சொல்வது சத்தமாக சொல்ல

“என்ன நடக்குது இங்க...என்னடா அர்ஜுன் மூணு பெரும் சேர்ந்து என்கிட்ட ஏதோ மறைகிரிங்க “ என மஞ்சு வினவ

சதிகாரி...போட்டு கொடுத்துட்டாலே என மனதிற்குள அவளை திட்டியவன்...”ஹிஹிஹி அது ஒன்னும் இல்லமா ...வேலை விஷியமா ரொம்ப குழம்பி போய் இருந்தன நேத்து.... அதை சொல்றா ..இல்ல அபி என அவன் பல்லை நறநறவென்று கடித்து கொண்டு சொல்ல

“ஆமா அர்ஜுன் ...அப்படிதான்....என சொல்லிவிட்டு...நான் ஏதும் சொல்லல அர்ஜுன் ...அப்புறம் அம்மா போனதுக்கு அப்புறம் நீ என்னை திட்ட கூடாது...அம்மா கண்டு பிடிக்கலை பாரு” ..... என அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொல்லிவிட்டு...


‘அம்மா அர்ஜுன் நைட் என்ன பண்ணணு நான் ஏதும் உங்ககிட்ட சொல்லல...அத சொல்லிடுங்க அவன்கிட்ட” என சொல்லிவிட்டு நாக்கை அவனுக்கு துருத்தி காட்டியவள் அவன் முறைத்து எழுந்திரிக்க

“நான் போய் குளிச்சுட்டு கிளம்பறேன்மா” என் சொல்லிகொண்டே டீ எடுத்து கொண்டு மேலே ஓடி விட்டாள்.

“ம்ம்ம் என்னமோ நடக்குது ....கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகனும்” என பத்மநாபனை ஒரு மாதிரி பார்த்து கொண்டே மஞ்சு சொல்ல

“அய்யோ ...மஞ்சு ...இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல...என்னை நம்பு...டேய் அர்ஜுன் எல்லாம் உன்னால “என அவர் அவனை சாட

“எல்லாம் அந்த குட்டி பிசாசுனால...இருக்கட்டும் அவளுக்கு வைக்கிறேன் ஆப்பு “என சொன்னவன் ....”ஒண்ணுமில்லமா ...எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு ...நேரமே போகணும் டிபன் வேண்டாம்மா” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்.

மேலே வந்த அபி...ஹப்பா ...என சொல்லி சோபாவில் அமர்ந்தவள் நேற்று அழுது தீர்த்ததால் இன்று மனம் கொஞ்சம் தெளிவாக இருக்கு..இனி இதை பற்றி யோசிக்க கூடாது.இனி கடமை கண்ணாயிரமாக தான் இருக்கனும் என முடிவெடுத்தாள் .

எப்போதும் போல் கிளம்பி ஆருத்ரா ஆபிஸ் வரும் வழியில் ஒரு கார் தன்னை பின் தொடர்வதை கண்டவள் ...கொஞ்சம் மெதுவாக செல்ல ...அந்த காரும் மெதுவாக வர....அப்போது அந்த காரை நன்றாக உற்று பார்த்தவள் அதில் அர்ஜுன் தெரிய...அவளை அறியாமல் வண்டி தடுமாறி கீழே சாய ...அவளுக்கு காயம் இல்லை.அதற்குள் அர்ஜுன் இறங்கி வர அது ஒரு காலனி ஏரியா ...அங்கு அதிக நடமாட்டம் இல்லை.இவர்கள் இருவர் மட்டுமே..

“ஹாய் பட்டாசு எப்படி இருக்கடா என சொன்னவன்” வண்டி எடுத்து ஓரமாக நிறுத்தி விட்டு ...வா...வந்து கார்ல ஏறு என்றான்

அவனை பார்த்ததும் சந்தோஷத்தில் பார்த்து கொண்டே நின்றவள்.....அவன் காரில் ஏறு என இரண்டு முறை சொன்ன பிறகே சுய நினைவிற்கு வர ....

“ஏய் மிஸ்டர் ....யார் நீங்க......உங்களை யாருனே எனக்கு தெரியாது....இனி இந்த மாதிரி பேசறது எல்லாம் வேண்டாம்....எனக்கு போக தெரியும் “என சொல்லி விட்டு வண்டியை எடுக்க...அதன் சாவி அர்ஜுன் கையில் இருக்க

“மிஸ்டர் சாவி கொடுங்க...இல்லையினா கத்தி ஊரே கூட்டுவேன்” என சொல்ல

“கத்திக்கோ ....நானும் சொல்றேன்...இவ என் மனைவி ...ஒரு சின்ன சண்டைனு “என அவன் அசால்ட்டாக சொல்ல

ஒரு புறம் அந்த வார்த்தை சந்தோசத்தை தர...மறுபுறம் காதலை சொல்லி அடுத்த நிமிடம் நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தவன் என்ற எண்ணம் வர

“பரவில்லை ...நான் நடந்தே போய்கிறேன்” என அவள் கிளம்ப

“அப்போ நானும் நடந்தே வரேன்” என அவனும் கூட வர

அந்த நேரம் பார்த்து அங்கு துணி தேய்ப்பவன் வண்டில்

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்...
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்...
செல்லச்சண்டை.... போடுகிறாய்!
தள்ளிநின்று....தேடுகிறாய்!
ஹா ஹா அன்பே என்னை தண்டிக்கவும்
உன் புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா..?
இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி என்னாளும்
தீயாக பார்க்காதடி..!!

சின்னப்பிள்ளை போல நீ
அடம்பிடிப்பது என்ன சொல்ல!
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல!

சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணிச்சொல்ல கேட்டுக்கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்..

என பாட உடனே அர்ஜுன் ஜீவா போல் அவள் முன்னால் நடிக்க ஆருத்ரவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.சிரித்து விட்டாள் .

உடனே அர்ஜுன் “ஹப்பா சாமி மலை இறங்கிடுசுடா” என சொல்ல ....அவனை முறைத்தவள்

“இந்த மாதிரி சீன போட்டு நீங்க ஒன்னும் தாஜா பண்ணவேண்டாம்” என சொல்ல

“இல்ல குட்டிமா...இந்த பாட்டோட பீலிங்கும் என்னோட பீலிங்கும் ஒண்ணுதான்...நான் ஜீவா வா இல்லாம இருக்கலாம்...ஆனா நீ சமந்தா தான் குட்டிமா “என சொல்ல

“உங்கள...... “ என கையில் இருக்கும் பேகில் அவனை அடிக்க ...இது தான் சாக்கேன்று அவளை அப்படியே தூக்கி காருக்குள் போட்டு கதவை லாக் பண்ணிவிட்டான்.

காதல் என்பது வந்து விட்டால்

ஊடலும் கூடலும் இயற்கைதானே

புரிந்து கொண்ட உள்ளங்கள்

அதை விரும்பி அனுபவிக்க

புரியாத மனங்கள்

அதை எண்ணி தவிக்க

இந்த பறவைகள் எந்த வகை ????????? பார்ப்போம்.