• அத்தியாயம் 14
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட அபி சுருசுருப்பாக தயாராகி கீழே வந்தாள்.மனம் படபடக்க, .எண்ணகுதிரை அவள் கட்டுபாட்டை மீறி ஓட, ,நினைவுகளை ஒருமுகபடுத்தி கடவுள் முன் கை கூப்பி நின்றாள்.கடவுளே என்னோட திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய பலன் கிடைக்கும் நாள் இது.என்னோடைய டிசைன்ஸ் அனைவர்க்கும் பிடிக்கணும்.அதற்கு நீங்கள் அருள்புரியவேண்டும் வேண்டிகொண்டிருந்தாள் .
அப்போது எழுந்து வெளியே வந்த மஞ்சு அதிசியத்து நிற்க ,பத்மநாபன் அவள் அருகில் வந்து
“என்ன மஞ்சு நம்ம பொண்ணுதானா அப்படின்னு சந்தேகம் வந்திடுச்சா” என சிறித்து கொண்டே கேட்டார்.
வியப்பில் பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டும் மஞ்சு ஆட்ட
“இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப தெளிவா இருக்காங்க .தனக்கு என்ன வேனும் என தெரிஞ்சு புரிஞ்சு நடந்துகிறாங்க .எந்த சூழ்நிலை வந்தாலும் அதற்க்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திகிறாங்க.நம்ம காலம் மாதிரி இல்லை” என என சொன்ன பத்மநாபன்...
“சரி ...சரி...நீ போய் காபி எடுத்துட்டு வா.....அதுக்குள்ள என் பொண்ணு கடவுளோட பேச்சுவார்த்தையை முடிச்சுட்டு வந்திடுவா “என சொல்லிகொண்டே சோபாவில் அமர்ந்தார் .
மனதின் உணர்வுகள் விழிகளில் தெரிய ...இதழில் புன்னைகயுடன் தன்னை நோக்கி வரும் மகளை பார்த்த பத்மநாபன்
“அபி என்னடா ....காலையிலே இப்படி எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிற” என கிண்டலாக கேட்க
“அப்பா இன்னைக்கு BUYERS எல்லாம் வராங்க இல்லையா ...இன்று என் திறமைக்கான அக்னி பரீட்சை ........ அதான் கொஞ்சம்” என அவள் இழுக்க
“அபி உண்மையான உழைப்பிற்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு .நீ கவலை படாதே ....பயபடாத....தைரியமாக இரு ...உன்னோட நம்பிக்கை தான் உன் படைப்புகளை இன்னும் மிளிர செய்யும்” என அவளுக்கு உற்சாகம் ஊட்டினார்.
முகத்தில் தெளிவுடன் “ரொம்ப தேங்க்ஸ் பா” என அவர் தோள் மீது சாய
அவளை பாசத்தோடு அணைத்துகொண்ட பத்மநாபன் “அபி அங்க உனக்கு BUYERSயிடம் இருந்து எந்த மாதிரி பதில் வந்தாலும் நீ இதே சிரிப்போடுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் “ என சொல்ல தலை ஆட்டல் மட்டுமே அவளிடம் இருந்து பதிலாக வந்தது.
அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிகொண்டு அவள் அலுவலகம் வர அபி வருவதற்குள் அங்கு அகிலும் அர்ஜுனும் நின்று கொண்டு இருந்தனர்.
நேராக அந்த சாம்பிள் அறைக்கு சென்றவள் மற்ற டிசைநேர்ஸ் படைப்புகளை பார்த்ததும் அவள் பயம் மேலும் அதிகரித்தது.மற்ற டிசைநேர்ஸ் வரைந்த டிசைன்களோடு வைக்கப்படாமல் அபியோடது தனியாக வைக்க பட்டிருந்தது.அனைவருமே தொழில் முறையில் என்ன செய்ய வேண்டுமோ அது போல் தங்களது டிசைன்களை வடிவமைத்திருந்தனர்.ஆனால் அபி மட்டும் தனது கனவுகளை வண்ணமாக்கி வரைந்திருந்தாள்.அதனால் தான் அவளுக்கு அந்த குழப்பம்....
குழப்பத்துடனே தனது இருக்கைக்கு வந்த அபிக்கு படபடப்பு குறையவில்லை.
தாமரை அவள் அருகிலே இருந்தாள். .“அபி கவலை படாதிங்க ...உங்களோட டிசைன்ஸ் எல்லாமே நல்லா இருக்கு .கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும்” என அவளை ஊக்கபடுத்த
“இல்ல தாமரை ...ஏன் என்னோட டிசைன்ஸ் மட்டும் தனியா வச்சுருக்காங்க” என கேட்க
“அகில் சார் தான் சொன்னார் அபி என்றாள் தாமரை .இவ்வளவு நாள் பழக்கத்தில் அபியும் தாமரையும் தங்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு தோழிகளாக மாறி இருந்தனர்.
அகிலின் பெயரை கேட்டதும் மேலும் மனம் இறுக ....”நான் இதில் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் தாமரை” என சொன்னவளின் மனதின் உறுதி வார்த்தையில் வெளிப்பட்டது.
அர்ஜுனுக்கும் அகிலுக்கும் மனதில் படபடப்பு இருந்தாலும் அவர்களின் அனுபவமும் அவர்களின் பதவியும் அதை வெளியில் தெரியாமல் மறைத்தன.
இந்த ஆர்டர் இந்த தொழில் சாம்ராஜ்யத்தில் தனக்கு ஒரு தனி மதிப்பை பெற்று தரும் என் முழுதாக நம்பினான் அர்ஜுன்.
அர்ஜுனனின் கனவு,அகிலின் உழைப்பு,அபியின் திறமை ஆகிய அனைத்திற்கும் இன்னும் சிறிது நேரத்தில் பலன் தெரிந்து விடும்.
ஜப்பானில் இருந்து வந்த BUYERS சாம்பிள் பார்வையிட .அவர்களின் பதிலை எதிர்பார்த்து பல உள்ளங்கள் காத்திருக்க
“சூப்பர் .....எல்லாமே ரொம்ப நல்ல இருக்கு...நாங்க இந்த அளவுக்கு இருக்கும்னு எதிர்பார்க்கலை .....இவ்ளோ டிசைன்ஸ் இங்கதான் பார்க்கிறோம்”.....என வியந்து அவர்கள் பாராட்ட ...அதற்க்கு பின்பு தான் விட மறந்த மூச்சு காற்றை இழுத்து விட்டனர் அர்ஜுனும் அகிலும்.
“இந்த டிசைன்ஸ் ரொம்ப நல்ல இருக்கு என அபி வரைந்த டிசைனை பாராட்டியவர்கள்....இந்த மெடீரியலில் இந்த டிசைன்ஸ் இப்பதான் நான் பார்கிறேன்.....ரொம்ப நல்ல இருக்கு” என அவர்கள் பாராட்ட அபியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.பலநாள் தேடிய பசு தன் கன்றினை கண்டது போன்ற நிம்மதி பெருமூச்சு அபியிடம் இருந்து வந்தது.
வேகமாக அங்கிருந்து வெளியில் வந்தவள் தனது அறைக்கு சென்று தேம்பி தேம்பி அழுது விட்டாள்.அங்கு வந்த தாமரை அவளை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு ...
“ம்ம்ம் ...இனி அபி பெரிய டிசைநேர் ஆகிட்டிங்க....அப்படியே எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க,இப்படி அழுதா நாங்க ட்ரீட் கேட்காம விட்ருவமா” என அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு கிண்டலாக கேட்டாள்.
“போ தாமரை கிண்டல் பண்ணாத என சொல்லிவிட்டு எல்லாவற்றிற்கும் காரணம் நீதான் .யாருமே என் மேல் நம்பிக்கை வைக்க வில்லை.ஆனால் நீ எனக்கு கொடுத்த உற்சாகம் தான் நான் இந்த அளவுக்கு வர காரணம் “என சொல்லி கொண்டிருந்தவள் அதற்குள் அர்ஜுனனிடம் இருந்து அழைப்பு வர கான்பரன்ஸ் அறைக்கு சென்றாள்.
அங்கு இருந்த இருந்த buyers அவளை பாராட்ட ,அவளை அறியாமல் அவளுக்குள் ஒரு நிமிர்வு வர அது கண்ணில் தெரிய ,அவளது ஒரு டிசைனை பாராட்டி அதற்கான விளக்கம் கேட்க ,அதற்க்கு அவள் சொன்ன விதத்தை பார்த்து buyers மட்டும் அல்ல அர்ஜுனும் அகிலுமே அதிசியத்து நின்றனர்.
அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த அர்ஜுனும் அகிலும்
“ஹே அபி கலக்கிட்டா....எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...இந்த குட்டி மூளைக்குல்ல இவ்ளோ திறமையா” என அர்ஜுன் பாராட்ட
“தேங்க்ஸ் அர்ஜுன்” என சிரித்து கொண்டே சொல்ல, அருகில் இருந்த அகில் “கங்கிராட்ஸ் அபி” என சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஏதும் சொல்லாமல் தனது அறைக்கு வந்தாள்.
என்ன டிசைனர் மேடம் எனக்கு ட்ரீட் ஏதும் இல்லியா என சிரித்து கொண்டே தாமரை மறுபடியும் கேட்க ,அதற்குள் அங்கு வந்த கார்த்திக்
“மேடம் சூப்பர்.உங்களை பத்திதான் buyers அதிகம் நேரம் பேசினாங்க.அதும் அந்த பாலிகாட்டன்ல உங்களோட டிசைன் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு...ஆர்டர் அதுல அதிகமா கேட்டு இருக்காங்க,நம்ம பாஸ்க்கு சந்தோசம் தாங்க முடியலை” என்றான்.
“இந்த வெற்றியில் பாதி நம்ம தாமரைக்கு தான் சேரும்.ஏன்னா அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச அந்த டிசைன் ,அந்த மெடீரியல் பத்தி எங்கிட்ட சொன்னது தாமரை தான்” என அபி அவளை பார்த்து சொல்ல
அவள் உடனே” இல்லை அபி.உண்மையா இது எங்க பாஸ்க்குதான் போகணும்.இந்த ஐடியாவ சொன்னதே அவர்தான். அவர் சொன்ன மாதிரிதான் நடந்தது.இது கண்டிப்பா தனியா தெரியும் அப்படின்னு சொன்னார்.அதனாலதான் உங்களோட டிசைன்ஸ் தனிய டிஸ்ப்ளே பண்ண சொன்னார்” என சொன்னதும் அபியின் முகம் சந்தோசத்தில் ஒருமுறை மின்னி மறைந்தது.தனக்காக செய்து இருக்கிறான் என் நினைப்பே அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க,அவன் தன்னை வெறுத்து சட்டென்று நினைவிற்கு வர மனம் சுருங்க
“ஒ ...அப்படியா ...சரி...சரி என்றவள்...நான் கிளம்பறேன்...அம்மாகிட்ட சொல்லணும்” என சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தாள்.
வீட்டிற்க்கு வந்தவள் தனது சந்தோசத்தை மஞ்சுவிடமும் பத்மநாபனிடமும் பகிர்ந்து கொண்டவள் தனது அறைக்கு சென்று முடங்கி கொண்டாள்.அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வார்த்தைகளாக வெளியே வர
“இவன் மனசுல என்ன நினச்சுட்டு இருக்கான்.இவனே என்னை வேண்டாம்னு சொல்வான்.அப்புறம் எனக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து செய்வான். இவனை நான் கேட்டனா? ...எனக்கு உதவி வேணும்னு ...இப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா ?இப்போ எனகே சந்தேகம்.என்னோட சொந்த முயற்சியாள இந்த வெற்றியா? இல்ல இவன் எனக்கு உதவி பண்ணினது நாள இந்த வெற்றியானு?அச்சோ ...இவனால் எனக்கு எப்பவும் குழப்பம் தான்” என புலம்பி தள்ள
“அபி என்ன பண்ற ...கோவிலுக்கு போயிட்டு வரலாமா என கேட்டு கொண்டே பத்மநாபன் வர
உடனே தன்னை சரி செய்து கொண்டவள் ...என்னப்பா ...என்ன விஷேசம் ...அதும் நீங்க கோவிலுக்கு வரிங்கன்னா கண்டிப்பா எதோ முக்கியமான விசேஷமா தான் இருக்கும்” என சொன்னவள்
“ஆமா அபி...இன்னைக்கு என் செல்ல குட்டி என் வாரிசுன்னு ப்ரூப் பண்ணிருக்கு.புலிக்கு பிறந்தது பூனை ஆகுமான்னு நிருபிச்சிருக்கு.நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.அதான்” என அவரின் மகிழ்ச்சி அவர் முகத்திலும் வார்த்தையிலும் வெளிப்பட, அவள் அருகில் அமர்ந்தவர் ,”நான் முதல்ல உன்னை இந்த வேலை பண்ண வேண்டாம்னு சொன்னபோது உனக்கு ரொம்ப வருத்தமா இருந்திருக்குமல்ல” என அவர் வேதனையாக கேட்க
அப்படி எல்லாம் ஏதும் இல்ல அப்பா.ஆனா நான் இதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ?அப்பதான் நினச்சேன் நீங்க ஏன் வேண்டாம்னு சொன்னிங்கன்னு ....ஆனாலும் நான் உங்க பொண்ணு இல்லையா ...எடுத்த காரியத்த வெற்றிகரமா முடிக்கணும் இல்லையா அதான்பா இரவு பகலா உழைத்தேன்” என சொல்லி கொண்டே அவர் மடியில் படுக்க
“அபிம்மா ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா நான்....என் குட்டி பொண்ணு இப்போ எவ்ளோ மெசூருட்டியோட பேசறா”...என பாராட்ட...
அந்த சந்தோசம் அபியும் தொற்றிகொண்டது.”தேங்க்ஸ் அப்பா” என அவர் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவள் “இதோ பத்து நிமிசத்தில் ரெடி ஆகி விடுகிறேன்’ என்றாள்.
அபி மஞ்சு பத்மநாபன் மூவரும் கிளம்பி கோவிலை அடைந்தனர்.
“என்னங்க அர்ஜுன் வந்திடுவானா” என மஞ்சு கேட்க
“அவன் அப்பவே வந்துட்டேன் போன் பண்ணானே என சொன்னவர் அதோ அங்கே நிக்கிறான் பார்” என காட்ட
அதற்கு அவர்களை பார்த்து அர்ஜுனும் அகிலும் அங்கு வர
காரை விட்டு மஞ்சு இறங்க
“என்னப்பா அபி வரலையா” என அர்ஜுன் கேட்க
“உள்ளதான் இருக்க...அவ friendகிட்ட போன் பேசிட்டு இருக்கா” என அவர் சொன்னார்.
“அபி சீக்கிரம் இறங்கு...எப்ப பார்த்தாலும் போனை காதுல வச்சுக்க வேண்டியது “என மஞ்சு கத்த
“வந்துட்டேன் ...நீங்க மியூசிக்கை ஆரம்பிசுடதிங்க” என சொல்லி கொண்டே காரில் இருந்து இறங்கினாள்.
“நம்ம அபியா இது!!!!!!!!” என அர்ஜுன் வியந்து கேட்க
“உடனே மஞ்சு ஆமா அர்ஜுன்...நானே வீட்ல பார்த்துட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என சொல்ல
இப்போ எல்லாரும் எதுக்கு என் பொண்ண கிண்டல் பண்றிங்க...அவளே என்னைக்காவது ஒரு நாள் இப்படி மாறுகிறாள்....அது உங்களுக்கு பிடிகலையா” என கேட்க
“அப்பா நீங்களுமா” என அவள் வெட்கப்பட்டு சினுங்க
“அச்சோ என் பொண்ணு வெட்கபட்டுடாடா...இதே சந்தோசத்தோட உள்ள போயிடலாம் வாங்க” என அவர்கள் முன்னே நடந்தனர்.
அர்ஜுனை பார்த்து கொண்டிருந்தவள் அவன் பின்னால் நின்ற அகிலை பார்க்கவில்லை.ஆனால் அகில் இவளை தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை.
அபியை காணோம் என்று அர்ஜுன் கேட்ட உடன் காருக்குள் பார்த்தவன் உருவம் சரியாக தெரியவில்லை.
பின்னர் அவள் காரை விட்டு வெளியே வந்ததும் அப்படியே உறைந்து போய் நின்றான்.நீல வண்ண பட்டு உடுத்தி,நெற்றியிலே செஞ்சந்து பொட்டும்,காதில் ஜிமிக்கியும்,கழுத்தில் அட்டிகையும் ,கைகளில் பொன்கலரில வளையல்கள் குலுங்க வான தேவதை வீதி உலா வந்தது போல் அவள் ஜொலிக்க... அகிலின் மனம் அவனிடம் இல்லை.அதற்கு பிறகு அர்ஜுனோ பத்மநாபன் பேசியதோ எதுவும் அவன் காதில் விழ வில்லை. அவனுக்கு கேட்டது எல்லாம்
அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே
நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தோன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி
செல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போர் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமதடி அடியே போகுமதடி
மரியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பெயர செல்லச் செல்லி
உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
என்ற பாடல் வரி மட்டுமே.....அவன் அவனாக இல்லாமல் விக்ரமாக மாறி அந்த பாடலில் மூழ்க
மூவரும் சென்ற பின்னர் இவள் போனை காருக்குள் வைத்து விட்டு நிமிர்ந்தவள் அங்கு அகிலை பார்த்ததும் அவளும் ஆடி போய்விட்டால்.அதிலும் அகிலின் பார்வை அவளது பெண்மையை உசுப்பி விட அவளை அறியாமலே அவளது முகம் செங்காந்தல் மலரை சூடி கொண்டது.இருவரும் விழிகளும் பார்த்து கொண்டே இருக்க
“அபி,அகில் வாங்க “என அர்ஜுன் குரல் அபஸ்வரமாக ஒலித்தது.
முதலில் சுதாரித்த அபி வேகமாக முன்னே செல்ல சட்டென்று அவள் கைகளை பிடித்தவன்,கண்களாலே அவளை தன அருகில் அழைக்க...
அவளும் மெதுவாக அவன் கூட நடக்க அகிலின் மனம் சந்தோஷத்தில் ததும்பி கொண்டிருந்தது..இப்போது அவனுக்கு யாரும் தெரியவில்லை.அவன் மித்து இரண்டு பேர் மட்டுமே இருப்பது போல் அவனது நடவடிக்கை இருந்தது.வெளிப்ரகாரத்தை சுற்றும்போதும் மஞ்சுவும் பத்மநாபனும் முன்னே செல்ல அர்ஜுன் டிக்கெட் வாங்க சென்றதால் அவன் வர வில்லை.பின்னே அகில் அபியின் கைகளை விடாமல் பிடித்தபடியே நடந்தான்.அவள் கடவுளை கரம் கூப்பி வணங்க கூட கையை விட வில்லை,
அவனது கரத்தின் பிடியில் இருந்து தனது கையை எடுக்க அவள் முயற்சி செய்ய பிடி இறுகியதே தவற எடுக்க முடியவில்லை.
ஆமாம் இதற்கொன்றும் குறைச்சல் இல்லை என மனதிற்குள் நினைத்தவள் ஏதும் பேசாமல் அவனுடனே நடந்தாள்.
அபியின் மனதும் வெகு நாளைக்கு பிறகு மகிழ்ச்சியில் திளைத்தது.எத்தனை நாள் இதற்காக காத்திருந்தாள்.அவளுக்கும் இப்படி செல்வது மிகவும் பிடித்து இருந்தது.அங்கு வார்த்தை பரிமாற்றம் இல்லை.ஆரவாரம் இல்லை,அத்துமீறல் இல்லை.ஆனால் ஒரு காதல் நாடகம் அழகாக அரேங்கேறிகொண்டிருந்தது.மௌனமே வார்த்தைகளாக, பொங்கி ததும்பும் அன்பே ஆரவாரமாக,விழிகளின் சங்கமமே காக்கும் அரணாக அங்கு இருந்தன.உள்பிரகாரத்தில் சாமி கும்பிட அபி மஞ்சுவின் அருகில் செல்ல “மித்து இங்கே வா” என ஒரே வார்த்தை அவன் பேசியது.யாரவது பார்கிறார்களா என அவள் சுற்றும் முற்றும் பார்க்க அதற்குள் அகில் அவளை இழுத்து தன் அருகில் நிறுத்தி கொண்டான்.
கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்தவர்கள் சிறிது நேரம் பிரகாரத்தில் அமர
“அச்சோ இந்த புடவை கட்டி கிட்டு உட்காரவே முடியலை” என அபி தடுமாற
“ஏண்டி இப்படி பண்ற....அதுக்குதான் சொன்னேன்....புடவை கட்டி பழகுன்னு கேட்டியா “ இங்க வந்து டான்ஸ் ஆடிட்டு இருக்க ...எல்லாரும் பார்கிறாங்க.....எனக்குதான் வெட்கமா இருக்கு என மஞ்சு ஆரம்பிக்க
“அம்மா வேண்டாம்..... இதோ உட்கார்ந்துட்டேன்” என சப்பாணி போல் அப்படியே அவள் அமர
சூப்பர் அபி...அப்படியே சாணி இருந்ததுன்னு வச்சுக்கோ தட்டி தட்டி அந்த சுவற்றில அடிச்சா இந்த போஸ்க்கு இன்னும் சூப்பரா இருக்கும்” என அர்ஜுன் சொல்லி சிரிக்க
“டேய் நீ சொல்லாத அதை.....அப்புறம் நான் லட்டு மேட்டர் சொல்ல வேண்டியதா இருக்கும்” என கண்களை உருட்டி மிரட்ட
“அது என்ன லட்டு மேட்டர்” என அகில் கேட்க
“டேய் மச்சான்....நமக்கு கொஞ்சம் வேலை இருக்கு வா போகலாமென “அவனை கிளப்ப
“ம்ம்ம்ம் ...அந்த பயம் இருக்கட்டும்” என அபி சொல்லி சிரித்தாள்.
“டேய் சும்மா இருங்கடா....இன்னைக்கு என் பொண்ணு எவ்ளோ பெரிய சாதனை பண்ணிருக்கா” என பத்மநாபன் பெருமையுடன் சொல்ல
ஆமாப்பா.....எனகே ஆச்சிரியம்....BUYERS இவளோட டிசைன்ஸ் ரொம்ப பாராட்னாங்க....அதும் அந்த பாலிகாட்டன் டிசைன்ஸ் ரொம்ப அவங்கள இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு” என்று சொல்ல அந்த நேரத்தில் அபி அகிலை பார்க்க அகில் அபியை பார்க்க இரு விழிகளும் பேசிய கதை என்ன??
சரிப்பா எங்களுக்கு வேலை இருக்கு நாங்க கிளம்பறோம் என அர்ஜுன் கிளம்ப அங்கு இருமனங்கள் பிரியா மனம் இல்லாமல் பிரிந்தன.விழிகளாலே அகில் விடைபெற, பிரிய மனமின்றி அவள் விழிமூடி திறக்க ஒரு இனிய சந்திப்பு நடந்து முடிந்தது.
மறுநாள் காலை அனைவரும் கிளம்பி கொண்டிருக்கும் வேளையில்
“என்ன பத்மநாபா எப்படி இருக்க” என கேட்டு கொண்டே உள்ளே வந்தனர் ராமன் தம்பதியினர்.
“வாங்க வாங்க mr.ராமன் ...எப்படி இருக்கீங்க....மஞ்சு இங்க யார் வந்த்ருகாங்கனு பாரு” என அவரை வரவேற்று உபசரித்தார் பத்மநாபன் .
“வாங்க அண்ணா.....எப்படி இருக்கிங்க...இப்பதான் நம்ம வீடு தெரிஞ்சுதா” என சொல்லி கொண்டே அவர்களுக்கு டீ கொடுத்தார் மஞ்சு.அதற்குள் அர்ஜுனும் கீழே இறங்கி வர அங்கு நலம் விசாரிக்கும் படலம் இனிதே நடந்து முடிந்தது.
பொதுவான விசியங்களை பேசி முடித்த பின்பு ...பத்மநாபன் ராமனிடம் “என்ன mr.ராமன்...திடிரென்று வந்து இருக்கீங்க ...எதாவது விசேஷமா” என கேட்க
“இனி எல்லாம் அப்படிதான் பத்மநாபா ...இனி அடிகடி இப்படி வர போற வீடுதான” என அவர் சொல்ல
“என்ன சொல்றிங்க” என பத்மநாபன் புரியாமல் கேட்க
“என் பையன் ரகுக்கு உன் பொண்ணை ரொம்ப பிடிச்சருக்கு...அதான் உங்ககிட்ட பெண் கேட்டு வந்திருக்கோம்” என சொன்னார்.
இதை கேட்டு அவர்கள் மட்டும் அல்ல ....அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருந்த இன்னொரு உருவமும் அதிர்ச்சியில் சிலையாக நின்றது.
கண்களில் விழுந்து உயிரினில்
கலந்த காதல்
காரணம் இல்லாமல் காயப்பட
வேதனை படும் நேரத்தில்
விடியலாய் விடி வெள்ளிதோன்ற
காயப்பட்ட மனதிற்கு
மருந்தாய் வரபோவது யாரோ ?
மனதில் இருப்பவனா ?
விடியலாய் வருபவனா ???????
விடை கண்டுபிடித்தவர்கள் கூறுங்களேன்.