• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 15

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் 15


மனம் எங்கும் சந்தோஷ சாரலுடன் உள்ளம் குதூகலிக்க

“நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே”

என பாடிகொண்டே உள்ளே நுழைந்தவன்,அங்கு கார்த்திக் நாற்காலியில் அமர்ந்திருக்க அவனை எழுப்பி அவன் கையை பிடித்து கொண்டு நடனம் ஆடியவன்,”டேய் கார்த்திக் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா.....இன்னைக்கு நான் நினச்சது எல்லாம் நடக்குதுடா”....என ஆர்பரிக்க

“என்னாச்சு அண்ணா... அண்ணி பேசிட்டாங்களா” என கேட்க

“ஹஹஹா ....அதை ஏன் கேட்கிற”என ஆரம்பித்தவன்,அப்படியே மௌனமாகி.... “அமாமில்லை....அவ எங்கிட்ட ஏதும் பேசிலையே” என யோசித்தவன்

“இல்ல கார்த்தி ஏதும் பேசலை....ஆனா இன்னைக்கு கோவில்ல என் கூடவே தான் இருந்தா” என சொன்னவன் ...அவளா இருந்தாளா!! ....இல்லை நீ அவளை விடாம பிடிச்சிருந்தியா! என அவன் மனம் அவனை கேட்க..... சட்டென மனதில் ஒரு நடுக்கம் வந்தது.

மனதின் மகிழ்ச்சி மறைந்து போக அமைதியாக தனது அறைக்கு சென்றவன்,அப்படியே படுக்கையில் விழுந்தான்.

அளவில்லா ஆனந்தத்துடன் உள்ளே வந்த அகில் தனது பேச்சினால் மகிழ்ச்சி தடைபட்டு அமைதியானது கார்த்திக்கிற்கு மிகவும் வருத்தமாக போய் விட்டது. அவன் எதார்த்தமாக கேட்டான்.இப்படி ஆகும் என்று நினைக்க வில்லை?.

மெதுவாக அகிலின் அறையை எட்டி பார்த்தவன் அகில் அப்படியே படுத்து கொண்டு மின்விசிறியை பார்த்து கொண்டிருப்பதை கண்டான்.அவன் அருகில் சென்றவன் “அண்ணா..... அண்ணா நான் எதாவது தவறாக கேட்டு விட்டேனா” என கேட்க

உடனே படுக்கையில் இருந்து எழுந்தவன் ....”இல்ல கார்த்தி நீ சரியாதான் கேட்ட....நான் தான் ரொம்ப உணர்ச்சி வசப்ட்டுடேன்.ஆனாலும் நீ சொன்ன விஷயமும் உண்மைதான்.எப்போதும் லொட லொடன்னு பேசும் மிது இன்னைக்கு ஏதும் என்னிடம் பேசவில்லை” என்றவன்

“என்னால இனி மித்துவ பிரிஞ்சு இருக்க முடியாது கார்த்தி.ஆனா நான் என்ன பண்றதுன்னு தான் எனக்கு தெரியல....ஒருபக்கம் அப்பா ஆசை,தன்மானம் மறுபக்கம் என் மித்து ....எனக்கு குழப்பமா இருக்குடா என தலையை பிடித்து கொண்டு புலம்பினான்.

“அண்ணா என்று மெதுவாக அழைத்தவன் நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துகொள்ள மாட்டீர்கள” என்றான்.

“கார்த்தி நான் அன்னைகே உன்னை என் தம்பியாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்.....என்னை தட்டி கேட்கும் உரிமையும்,தட்டி கொடுக்கும் உரிமையும் என் மிதுவுக்கு பிறகு உனக்கு தான்” என சொல்ல

கார்த்தி கண்களில் கண்ணீருடன் அவன் கைகளை பிடித்து கொண்டவன்,யாரும் இல்லாத அனாதைக்கு நீங்க இவ்ளோ உரிமை கொடுகிறது ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா” என்றவன்

“முதலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.உங்களுக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு தான” என கேட்க

அவனை முறைத்தவன் “அவ என் உயிர்டா....என் மூச்சு காத்துடா அவ” என சொல்ல

“அவங்கள திருமண செய்யறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” என கேட்க

இல்லைடா....அவ என் அத்தை பொண்ணா போய்ட்டா....அவங்கனாலதான் எங்க அப்பா ரொம்ப மனம் வருந்தினார்.இப்போ அவங்க என்னை எவ்ளோதான் நல்லா பார்த்தாலும் எங்க அப்பாவின் வருத்தம் என் நெஞ்சுக்குள் இன்னும் இருக்கு.அதுனால நான் மித்துவ திருமணம் செஞ்சா எங்க அப்பா ஆத்மா என்னை மன்னிக்காதோணு என் மனசுல ஒரு சின்ன சலனம் என வேதனையுடன் கூறியவன்,ஆனா மித்துவ தவிர வேற ஒரு பொண்ண என் மனம் என்னைக்கும் ஏற்க்காது” என்பதயும் அழுத்தி கூறினான்.

“அண்ணா ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.உங்க அப்பா உயிரோட இருந்திருந்தால் இப்போது உங்கள் அத்தை வாழும் வாழ்வை பார்த்து கண்டிப்பாக சந்தோசபட்டிருப்பார். நீங்களே பார்கிறீர்களதானே....உங்கள் அத்தை மிகவும் சந்தோசமாக இருக்கிறார்.தனது தங்கை தனது கணவன் வீட்டில் சிறப்பாக வாழ்வதை பார்த்தால் எந்த அண்ணனும் சந்தோசம்தான் படுவார்கள்.......அவரோடிய போதாத காலம் அவர் மரணம் விரைவில் வந்துவிட்டது.எல்லாமே நம் எண்ணத்தில் தான் இருக்கிறது.நல்லதாக நினைத்தால் நல்லதே” என சொன்னவன்

அடுத்தது தன்மானம்...உங்களுக்கு என்ன குறைச்சல்...எங்கு தேடினாலும் இது போன்ற நல்ல மாப்பிள்ளை அவர்களுக்கு கிடைக்க மாட்டான்.மேலும் பாதி நாள் அவர்கள் வளர்ப்பில் இருந்தீர்கள்.அப்புறம் என்ன?...இது நீங்களே போட்டு குழப்பி கொள்வது. இன்னும் தெளிவா சொல்ல வேண்டுமானால் உங்கள் அத்தையை திருமணம் செய்யும்போது உங்கள் மாமாவும் உங்க நிலைமையில் தான் இருந்தார்.அதற்கு பின்புதான் இந்த வசதி அவருக்கு வந்தது.அதை நினைக்கும்போது இதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.

அண்ணா என் மனதிற்கு பட்டதை சொல்கிறேன்.பிரச்சனை வெளியே இல்லை...உங்களுக்குள்ளே தான்.....அதுவும் தேவை இல்லாத குப்பை...அதை தூக்கி எரிந்து விட்டு நாளை புது மனிதனாக அண்ணியை சந்தித்து பேசுங்கள்.நாளைய பேச்சு உங்கள் திருமண பேச்சாக மட்டுமே இருக்க வேண்டும் என சொன்னவன்,
நிம்மதியா தூங்குங்க அண்ணா ... நானும் தூங்க போகிறேன்...குட் நைட் அண்ணா...என சொல்லிவிட்டு நகர்ந்தான்.



 இரவு முழுவதும் யோசித்தவன் ஒரு முடிவிற்கு பின் மனம் தெளிவாக விடிகாலை பொழுதில் உறங்க ஆரம்பித்தான்.

கார்த்திக் கிளம்பி அகிலை எழுப்ப....... கண்களை திறந்தவன் “நான் இன்னைக்கு லீவு....அர்ஜுன்கிட்ட சொல்லிடு...சரி விடு நானே சொல்லிடறேன்” என சொல்ல

“என்ன ஆச்சு அண்ணா...எதாவது உடம்பு சரியில்லியா” என பதறி தொட்டு பார்க்க

“ஹஹஹா என சிரித்தவன்...ஆமாம் கார்த்தி இங்கதான் சரி இல்லை என தன இதயத்தை தொட்டு காட்டியவன்,அதை சரி பண்ணத்தான் இன்னைக்கு விடுமுறை” என கூறி கண்ணடிக்க

“ஆஹா சிங்கம் கிளம்பிடுச்சுடா...இனி அண்ணி நிலைமை என்னவோ” என கிண்டல் செய்தவன்...”all the பெஸ்ட் பிரதர்” என சொல்லிவிட்டு கிளம்பினான்.

பின்னர் மெதுவாக எழுந்து நிதானமாக கிளம்பியவன் நேராக அபியின் வீட்டிற்க்கு வந்தான். அபியை வெளியே அழைத்து செல்லவேண்டும் என்பது அவனது திட்டத்தின் முதல் வேலை.எனவே சந்தோசமாக அவன் வீட்டிற்க்குள் நுழைய

அப்போது தான் ரகு அப்பா சொன்னதை கேட்க நேர்ந்தது.

அவர் அப்படி கேட்டதும் பத்மனாபனுக்கு ஒன்றும் புரியவில்லை...”என்ன ராமன் இப்படி திடிரென்று கேட்டால் என்ன சொல்வது” என சொல்லிகொண்டே திரும்பியவர் அங்கு அகிலை பார்த்ததும்

“அகில்...வா...வா “என அழைத்து அவர்களுக்கு அறிமுகபடுத்தியவர் ,இவர்கள் நம்ம அபியைய பெண் கேட்டு வந்திருக்காங்க என்றார்.

உடனே ராமன் என்ன பத்து ...”நம்ம ஆஸ்த்தி,அந்தஸ்த்து எல்லாத்துலயும் ஒரே மாதிரி இருக்கோம். அதே சமயத்தில் படிப்பும் இருக்கு.உங்க வீட்ல உங்க பொண்ண எப்படி பார்த்துகுவிங்களோ அதே மாதிரி எங்க வீட்லயும் பார்த்துக்குவோம் .இதுக்கு மேல என்ன வேணும் ?...அப்புறம் என்ன ? என கேட்க

“இல்ல எதுக்கும் நம்ம அபியை ஒரு வார்த்தை கேட்டு விடலாம்” என அர்ஜுன் சொல்ல

“நெஞ்சுல பல வார்த்தடா மச்சான்” என அகில் மனதில் அவனை பாராட்ட

“ok கேளுங்க ...அபி வீட்ல தான இருக்கா...கூப்பிடுங்க கேட்டு விடலாம்” என ராமன் சொல்ல

“அடபாவி இவன் பொண்ணு பார்க்காம போகமாட்டானாட்ட இருக்கே? ,இந்த உலகத்துல எத்தன பொண்ணுங்க இருக்காங்க ...என் மித்து தான் உனக்கு கிடைச்சாளா?....அன்னைக்கு போன் நம்பர் கேட்கும்போதே அவனை சாத்திருகனும்...அப்பவும் ஸ்ரீஜாவும் மதுவும் சொன்னங்க...நான் தான் ரொம்ப எமோஷன் ஆகிட்டேன்....இப்போ வில்லங்கம் வீடு தேடி வந்திடுச்சு” என மனதுக்குள்ளே அகில் அவர்களை கரித்து கொட்ட

“நீ என்ன சொல்ற பத்மநாபா” என ராமன் கேட்க

அவர் அகிலை பார்த்து கொண்டே “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை....அபி சரின்னு சொன்னா எனக்கும் சரி தான்” என சொல்ல

அங்கு ஒரு உள்ளம் அனைத்து கடவுளுக்கும் மொட்டை போடுவதாக வேண்டி கொண்டிருக்க

“அபி அபி” என்றுஅர்ஜுன் அழைக்க

“ஏண்டா கத்தற ...வரேன்...வரேன் “என சொல்லிகொண்டே தலையில் கிளிப்பை சரி பண்ணி கொண்டே கீழே வந்தவள்

அங்கு புதிய மனிதர்கள் இருப்பதை பார்த்து திரு திரு வென்று முழிக்க

திகைத்து பொய் நின்றவளை அருகில் அழைத்து தன்னுடன் அமறசெய்தார் mrs ராமன்.

உன் பெயர் என்னம்மா என கேட்க அபிமித்ரா என அவள் சொல்ல

“அபி நான் ரகுவோட அம்மா,இவர் அப்பா “ என அவர் தங்களை அறிமுகபடுத்தி கொண்டனர்.

பத்மநாபன் குடும்பத்தினரோ எதுவும் பேசாமல் நடப்பதை வேடிக்கை பார்க்க

mrs ராமன் “அபி எங்க ரகுவை நீ பார்த்து இருக்கிறாய் தான” என கேட்டார்.

உடனே அபியும் “பார்த்திருக்கேன் ஆன்ட்டி....உங்க கம்பெனிக்கு வந்து இருக்கேன்...உங்க கார்டன் சூப்பரா இருக்கும்...அங்க பெயிண்ட்டிங்சம் ரொம்ப நல்லா இருந்தது” என அவள் சந்தோசமாக கண்களை விரித்து சொல்ல

உடனே mrs ராமன் பத்மநாபனை பார்த்து சிரிக்க

“ரகு வரலையா ஆன்ட்டி என்றவள்,மறுபடியும் கம்பெனிக்கு வாங்கனு சொல்லி இருந்தார் ...என்னால்தான் போக முடியல,ஆனா கண்டிப்பா வரேன்னு சொல்லுங்க “ என்று பேசி கொண்டிருந்தவள்

“என்ன யாரும் பேசலை நம்ம மட்டும்தான் பேசிட்டு இருக்கமா” என சந்தேகபட்டு திரும்பி பார்க்க

அனைவரும் அவளை பார்த்த படியே அமர்ந்திருக்க

அப்போது தான் அகில் அங்கு இருப்பதையும் பார்த்தாள்...பார்த்த உடன் மனதின் சந்தோசம் கண்களில் தெரிய விழிகளை விரித்தவள்,அவன் விழிகள் கோப கனலை கொட்டியதும் சட்டென இவள் விழிகள் தாழ்ந்தன.

அவளும் பேச்சை நிறுத்தியதும் அந்த இடத்தில் அமைதி நிலவ,அதை மறுபடியும் mrs.ராமன் தான் கலைத்தார்.

“அபி உன்னிடம் ஒரு முக்கியமான விஷியம் கேட்கணும்.ரகுவ பத்தி நீ என்ன நினைக்கிற” என்றதும்

“ரொம்ப நல்லவர் ஆன்ட்டி...உங்களை மாதிரி ரொம்ப அன்பா பேசினார்.”என அவள் மனதில் பட்டதை சொல்ல

இங்கு ஒருவன் மனம் கொதிகனலென கொதித்து கொண்டிருந்தது .

“அப்புறம் என்ன பத்மநாபன் உங்க பொண்ணே பிடிச்சிருக்குனு சொல்லிட்டா...இனி தேதி குறிச்சிட வேண்டியதான” என ராமன் சொல்ல

உடனே பத்மநாபன் சிறித்து கொண்டே “அதற்கென்ன ராமன்....நான் சொல்லி அனுப்புகிறேன்” என சொல்லி விட்டு “அபி நீ மேலே போ”....என சொல்ல அவளும் சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பிறகு அகிலால் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்க முடியவில்லை.அபி சொன்ன வார்த்தையை அவனால் நம்ப முடியவில்லை.

mr.ராமன் ரகுவை பற்றி கேட்ட போது அவளோட கருத்தை சொன்னாலே தவிர,அவளுக்கு இவர்கள் பெண் கேட்டு வந்த விபரம் தெரியாது.ஆனால் கோபத்தில் இருக்கும் அகிலிற்கோ அது புரியாமல் அவள் ரகுவை பிடித்து இருக்கிறது என கூறுகிறாள் என்று நினைத்து கொண்டான்.

கோபத்தில் மறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை கூட கண்டு கொள்ளாமல் வேகமாக அபியின் அறைக்கு சென்றான்.

ஆனால் அங்கு பேசிகொண்டிருந்தவர்களில் ஒருவரின் கவனம் முழுவதும் அகிலின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டே இருந்தது.

கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே செல்ல,கணினியில் எதோ பார்த்து கொண்டிருந்த அபி ,அகிலை பார்த்ததும் மாமா!!! என சந்தோசமாக எழுந்தவள்,நேற்றிய நினைவில் நாணம் பொங்க ஏதும் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.

அவளது சிரித்த முகம் பார்த்த உடன் இவன் கோபம் கொஞ்சம் தனிய..... ,அதற்குள் அவள் முகம் மாறி அமைதியாக...... அகிலிற்கு தணிந்த கோபம் தலை தூக்க....” நீ சொன்னது எல்லாம் உண்மையா மித்து” என்றான்.

“அபிக்கு எதுவும் புரியாமல் எதை சொல்றிங்க”.... என தரையில் கண் பதித்த படியே கேட்க,அவள் நிமிர்ந்து பார்த்திருந்தால் அகிலின் சிவந்த கண்கள் அவனது மன நிலையை சொல்லி இருக்கும்.இவள் வெட்கத்தில் தலை குனிந்திருக்க,அவனோ தன்னை பார்க்க பிடிக்காமல் தலை குனிகிறாள் என நினைத்து கொண்டான்.

“அப்போ நீ இந்த திருமணத்திற்கு சரின்னு சொல்லற அப்படிதானே” என கேட்க

அவள் அவனோடு திருமணதிற்கு என்று நினைத்து வெட்க சிரிப்புடன் ஆமாம் என்று தலை ஆட்டினாள் .



“ஏய்................என அவன் கத்திகொண்டே அவளது தோளை பிடித்து எழுப்பியவன் ,தொலச்சுடுவேண்டி!!!!...என்ன திமிறா!! .....என் கண்ணை பார்த்து சொல்லு....நீ ரகுவை திருமணம் பண்ணிக்க போறியா என ஆக்ரோஷமாக கேட்க

“என்னது ரகுவா ....எந்த ரகு என்றவள்......அப்போ நீங்க கேட்டது நம்ம கல்யாணத்தை பற்றி இல்லியா” என அவள் கேட்க

சற்று தடுமாறிய அகில்,அவளது நமது கல்யாணம் என்ற பேச்சு அவனுக்கு இனிக்க,

“ஒ ...அதுக்காகத்தான் ரகுவ பத்தி என்கிட்ட கேட்டாங்களா” என்றாள்.அவளுக்கே இந்த தகவல் புதிதாக இருந்தது.

இப்போது அகிலும் குழம்பினான்.இவள் என்ன சொல்கிறாள்....கீழே எல்லாவற்றிற்கும் தலையை தலையை ஆட்டினாள் என யோசித்தவன்,பின்னர் “இங்கே வா மிது இப்படி உட்கார்” என அவளை அவள் காட்டலில் அமரவைத்து அவனும் அருகில் அமர்ந்தவன்....

“இங்கு பாரு மிது கீழே உன்னை பெண் கேட்டு ரகு அப்பா அம்மா வந்து இருக்காங்க....அதுக்குதான் உன்ன கீழே வர சொன்னது...நீயும் அங்கே வந்து ககபிக்கேன்னு உளறிட்டு வந்திட்ட...அங்கே நீ திருமணதிற்கு சரின்னு சொன்னேன்னு சொல்லி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்காங்க” என சொன்னான்.

“எனக்கு அதை பத்தி தெரியாது.அவங்க கேட்ட கேள்விக்கு தான் பதில் சொன்னேன்” என தெளிவாக சொன்னாள்.

இதை கேட்டதும் அகிலின் மனம் கொஞ்சம் ஆசுவாசப்பட ....அவளிடம் நெருங்கி அமர்ந்து அவள் கைகளை எடுத்து மடியில் வைத்தவன்,”மித்து சாரிடா ....உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்....ஆனா அதுக்கு கண்டிப்பா ஒரு கரணம் இருக்கு...அதை இப்ப சொல்ல முடியாது...நேரம் வரும்போது சொல்றேன்....உன்னை யார்காகவும், எதற்காவும் என்னால் விட்டு தர முடியாது மித்து.அதும் இப்போ அவங்க பேசின பேச்சை கேட்டு நான் செத்து பொலைத்தேன்....நீ இல்லாத வாழ்கையை என்னால் நினச்சே பார்க்க முடியாது.நீ எனக்கு மட்டுமே” என சொல்லி கொண்டே அவளை தோளோடு அனைத்து நெற்றியில் முத்தமிட

முத்தத்தின் மயக்கத்தில் சிறிது நேரம் தனை மறந்து இருந்தவள்,பின்னர் சடன விலகி அமர

“மித்து” என ஒரு வார்த்தை மட்டுமே அவன் சொல்ல

அவள் ஏதும் பேசாமால் அவனை நிமிர்ந்து அவன் கண்களை ஊடுருவி பார்த்தவள்,
இது எத்தனை நாளைக்கு மாமா......இன்னைக்கு இப்படி பேசுவிங்க....அப்புறம் கிளம்பி போய்டுவிங்க....காரணமும் சொல்ல மாட்டிங்க ....நான் மட்டும் உங்களையே நினச்சுகிட்டு இருக்கனும் அப்படிதானே.... காரணம் தெரியாமல் எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா ?சின்ன குழந்தை கையில் மிட்டாய் கொடுத்து உடனே பிடுங்கிது போல் ...உங்கள் மனதை கொடுத்து உடனே அதை எடுத்தும் சென்றுவிட்டீர்கள்.....நானும் உணர்சிகள் உள்ள ஒரு ஜீவன் தான்....நீங்கள் வேணும் என்கிறபோது வந்து நிற்கவும்....,வேண்டாம் என்றால் விட்டு விலகவும் நான் பொம்மை அல்ல... என நெருப்பாக வார்த்தையை கொட்டியவள், ...எனக்கு கல்யாணம் என்பதே வேண்டாம்.....நான் இப்படியே இருந்து விடுகிறேன்” என சொல்ல

அதற்குள் அகில் ..”இல்ல மித்து....எல்லாம் ஒரு காரணமாகத்தான் அப்படி நடந்தது” என விளக்கம் சொல்ல முற்ப்பட

கையை தூக்கி போதும் என்றவள்...”எத்தனை முறை கேட்டு இருப்பேன்.அப்போது சொல்லவில்லை...இப்போது அது எனக்கு தேவை இல்லை....என்னை பொறுத்தவரை நான் என் மாமா மனதில் இருக்கிறனா? என்ற சந்தேகம் இருந்தது.இப்போது அது நிவர்த்தியாகிவிட்டது.இப்போது வரை நான் மட்டுமே இருக்கேன்.எனக்கு அது மட்டுமே போதும்...வாழ்ந்து முடிச்சு திருப்தி வந்திடுச்சு.என் வயதிற்கு மீறி நான் வேதனையை வெளியே சொல்லாமல் அடக்கி வைத்து விட்டேன்.இனியும் இப்படி இருக்க முடியாது என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் அகிலிற்கு கோபம் வர....”அப்போ நான் மட்டும் சந்தோசாமாவா இருந்தேன்....நானும் எனக்குள்ளே போராடி செத்து செத்து பிழைத்தேன் மித்து...”.என வேகமாக ஆரம்பித்து வேதனையில் முடித்தவன்,

“போதுண்டி...இவ்ளோ நாள் நமுக்குள்ள நடந்த போராட்டம் போதும்...நான் உன்னை சிறுபெண் என நினைத்து என்னோட வேதனையை உன்னிடம் சொல்லாமல் விட்டதினால் வந்த இடைவெளிதான் இது....மித்து என் உடல் உன்னை விட்டு பிரிய பிரிய என் மனம் உன்னை நெருங்கி நெருங்கி வந்தது.உனக்காக மட்டுமே நான் மறுபடியும் இங்கே வந்தேண்டி....என்னை நம்பு என்றவன்...அவளை கைபிடித்து எழுப்பியவன் ,அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன்,அவன் பார்வையில் இருந்த காதல் அவள் உள்ளுத்தை ஊடுருவி உயிர் வரை செல்ல அவள் அதில் தனை மறந்து கண்களை மூட,அவளை அப்படியே இறுக்கி அணைத்தவன் மிது என் மூச்சு காத்து நீ.....எ உயிர் நீ....உன்னை இனி விடவே மாட்டேன்” என ஆத்மார்தம்மாக கூறினான்.

அவனது அணைப்பில் சில மணி துளிகள் இருந்தவள் பின்னர் அவனை விட்டு விலக ஆனால் அவன் அவள் கைகளை விட வில்லை.அவளை தன் அருகில் இழுத்தவன் ,”மித்து என்மேலான கோபம் உனக்கு உடனே போய்விடவேண்டும் என்று நான் சொல்லவில்லை.ஆனால் என் காதல் உண்மை மித்து.உன் மனதிற்க்குள் இப்போது பெரிய போராட்டமே நடந்து கொண்டிருகிறது என்று எனக்கு தெரியும்” என்ற சொன்னவுடன்,

கண்ணில் மின்னல் தோன்ற அவனை நிமிர்ந்து பார்த்தவள்,பின்னர் தலையை குனிந்து கொள்ள..... “ஆனால் அத்தனைக்கும் என்னால் விளக்கம் சொல்ல முடியாது.எனது நடவடிக்கையில் இனி தெரிந்து கொள்வாய் என்றவன், உன்னை பிரிந்து நானும் சந்தோசமாக இல்லை மித்து....உன்னை கம்பெனிக்கு வர வேண்டாம் என்று சொன்னது உனது திறமையை குறைத்து மதிப்பிட்டு அல்ல...உன்னை பார்த்தால் என்னால் வேலை செய்ய முடியவில்லை....என் மனம் உந்தன் பின்னாடியே சுற்றுகிறது.உனக்கு தெரியுமா ? அன்று இந்த ரகு உன்னிடம் பேசவேண்டும் என்று என்னிடமே உனது போன் நம்பர் கேட்டான்....எனக்கு அப்போ எப்படி இருந்தது தெரியுமா? ஆனா என் மனம் தெளிவில்லாத நிலையில் நான் என்ன செய்ய முடியும்.

“அதுதான் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டிங்களா” என அவள் கேட்க

சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தவன்,அவமானத்தில் தலை குனிந்து “முதல் முறை மித்து...என்னை எனக்கே பிடிக்க வில்லை...அவன் அப்படி கேட்டதும் அவனை அடிக்க இயலாத என கையாலாகாத தனத்தை நினைத்து நொந்து அப்படி பண்ணிவிட்டேன்....ஆமா உனக்கு எப்படி தெரியும்” என கேட்டவன்

அவள் எதுவும் பேசாமல் அவனை பார்த்து கொண்டே இருக்க...”இல்ல மித்து...இனி அப்படி நடக்காது” என சொல்ல

நான் கூட என்னை உங்களுக்கு பிடிகளையோ ...அதுனாலதான் சாப்பிட்டிங்கள் என்று நினைத்தேன்” என இவள் மெதுவாக சொல்ல

அதற்குள் அகில் “மித்து நீ என் உயிர்...நீ என்னை விட்டு பிரிந்தால் நான் பிணம் என்று அர்த்தம்” என சொல்ல அதற்குள் அவன் வாயை கைகளால் மூடியவள் விழிகளாலே வேண்டாம் என்று சொல்ல அப்படியே அவளை வாரி அணைத்தவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.


“இங்கே பாரு மித்து....நீ நல்ல யோசி...இன்னைக்கு மாலை 5 மணிக்கு உனக்காக நான் சாய்பாபா கோவில்ல காத்திருப்பேன். என்னோட நிலைமையை நான் சொல்லிட்டேன்.இனி நீதான் முடிவு பண்ணனும் என்று சொல்லி விட்டு நகர்ந்தவன் மீண்டும் வந்து அவளை அணைத்து “நீ வேணும்டி எனக்கு” என அழுத்தமாக கூறிவிட்டு வெளியேறினான்.

அவன் கீழே வர அங்கு பத்மநாபன்,மஞ்சு அர்ஜுன் மூவரும் பேசிகொண்டிருக்க....இவன் கீழே வந்ததும் இவன் முகத்தை அனைவரும் பார்க்க,

அகில் ஏதும் சொல்லாமல் “மச்சான் போலாமாடா” என கேட்க
“,கிளம்பிட்டேன்” என சொல்லிகொண்டே எழுந்து வந்தான் அர்ஜுன்..

“இவன் எதுக்கு வந்தான்...மேலே போனான்....அப்புறம் கிளம்பி போறான்...”என பத்மநாபன் ஏதும் தெரியாதவர் போல் மஞ்சுவை பார்த்து கேட்க

மஞ்சுவும் உங்களுக்கு நான் சளைத்தவள் இல்லை என்பதை போல் எதுவும் பேசாமல் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றார்.

“இவ குடும்பத்துக்கு இருக்க குசும்பு இருக்கே..... அப்பா.... சாமி..... என சொன்னவர் ,ம்ம்ம்ம்...இப்படி இன்னும் எத்தனயோ” என புலம்பிகொண்டே உள்ளே சென்றார்.


மித்துவோ சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின்னர் அவன் கூறியதை மனதிற்கு அசைபோட்டு பார்த்தாள்.நான்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள் அவன் செய்த காரியம் தவறு என்றாலும் அவளது மனம் அவனை தவிர வேறு யாரையும் எற்றுகொள்ளது என்பதில் தெளிவாக இருந்தது புரிந்தது.இனி இதை பற்றி சரியா தவறா என்று ஆராய்வதை விட...இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்துடன் நடப்பதே நல்லது என முடிவு பண்ணியவள் அவனை காண கோவிலுக்கு சென்றாள்.

அங்கு சாய்பாபா கோவிலில் அவளுக்காக காத்து இருந்தவன் அவளை பார்த்ததும்” மித்து!!!!!!!!!! என ஓடி வந்து அவள் கைகளை சின்ன குழந்தை போல பிடித்து கொண்டவன்,உன்கிட்ட அப்படி பேசிட்டு வந்திட்டேன்...ஆனா மனசுக்குள்ள பாயம் இருந்துகிட்டே இருந்தது....இப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா” என பேசிகொண்டே வர

அதற்க்குள் ஒருவர்...”ஏம்ப்பா காலைலல இருந்து இங்கே உட்கார்ந்திருந்தியே ...அங்க ஒரு பை வச்சு இருந்தனே பார்த்தியா” என கேட்க

“இல்ல சார்...நான் பார்கலை” என்றவன்

“அப்புறம் மித்து” என்று அவள் புறம் திரும்ப அவள் “நீங்க வீட்டுக்கு போகலையா” என கேட்டாள்.

“இல்ல மித்து...நான்தான் சொன்னேன் இல்லியா...மனசு பாரமா இருந்துச்சு...அதான் உங்க வீட்ல இருந்து நேர இங்க வந்துட்டேன்...உன்னை பார்க்கம போறதில்லைன்னு முடிவோடதான் காத்துகிட்டு இருந்தேன்” என்று சொல்ல

“மாமா!!!!!!!!! “என்று அவள் தோள் மீது சாய்ந்தவள், இனி எந்த காரணத்தை கொண்டும் இவனை விட்டு பிரியக்கூடாது என நினைத்தாள்.

“மித்து உன் கோபம் எல்லாம் போயடுச்சுல்ல” என மனதின் ஏக்கம் வார்த்தையாக வெளிவர

“போதும் மாமா...விட்டுட்டுங்க இனி பழசை எல்லாம் பேசவேண்டாம்...அதை எல்லாம் மறந்திடுவோம்....புதுசா ஆரம்பிப்போம்” என சொல்ல

அவளது கைகளை அழுத்தி பிடித்தவன் அப்படியே கோவிலுக்கு அழைத்து சென்று சாய்பாபா முன்பு கண்களை மூடி அமர்ந்தவர்கள்,பாபா என்னால் இனி மித்துவை விட்டு பிரிய முடியாது.அவளை அவள் விருப்பம்போல் சந்தோசமாக நான் வைத்துகொள்ள எனக்கு உதவுங்கள்என்று மனமுருக வேண்டினான்.

மித்துவோ பாபா என் மாமா எனக்கு கிடைத்து விட்டார்.எனக்கு அதுவே போதும்.இனி அவர் என்னை பார்த்து கொள்வார்.அவர் விருப்போம்போல் அவரை சந்தோசமாக நான் வைத்து கொள்ள வேண்டும்.அதற்க்கு எனக்கு உதவுங்கள் என வேண்டினாள்.உள்ளங்கள் ஒன்றானால் எண்ணங்களும் ஒன்றாகும் என்பது இயற்க்கை தானே!!


சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வெளியே வந்தவன்,”கொஞ்சம் பொறு நான் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றான்.

சிறிது நேரம் கழித்து வந்தவன் சாய்பாபா பிரசாதமாக வெண் பொங்கலை கொண்டு வர

அதை பார்த்ததும்..”.மாமா யாரும் தன் காதலிக்கு சாப்பிட இப்படி வாங்கி தரமாட்டங்க...”என சொல்லி சிரித்தவள்,

“ஆனா இதுல ஒரு நல்ல விஷயம்” என சொல்ல

“என்ன மித்து” என அவன் ஆர்வமுடம் கேட்க

“நான் கல்யானத்திற்க்கு பிறகு சாப்பாடு செய்யலைனாலும் கவலை இல்லை....நீங்க இப்படி வாங்கிட்டு வந்து கொடுத்தே என்ன காப்பத்திடுவிங்க” என கிண்டலாக சொல்ல

“கொழுப்புடி உனக்கு” என சிறித்து கொண்டே சொன்னவன்,”சாமி பிரசாதம்னு வாங்கிட்டு வந்தா கிண்டலா பண்ற நீ “என அவள் கன்னத்தை பிடித்து கிள்ள அங்கு சந்தோசம் என்ற சங்கீத ஸ்வரம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது.


பின்னர் நாட்கள் ரக்கை கட்டி பறந்தன.....அர்ஜுனும் அந்த ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுக்க தொழில் சாம்ராஜ்யத்தில் ஒரு நல்ல பெயர் இவர்களுக்கு வந்தது.

எல்லாம் முடிந்து அப்பாடா என்று பத்மநாபன் அமரும் நேரத்தில் ...எனக்கு இங்கு வேலை வேண்டாம் எனது ஊருக்கு செல்கிறேன் என வந்து நின்றான் அகில்.


சந்தோஷ வானில் மனம்

சதிராட்டம் போட

தோட்டத்தில் பூத்திருந்த

மலர்கள் எல்லாம்

துள்ளி வந்து அவர்கள்

கையில் விழ!!

அதற்காக காத்திருந்த வண்டு

அவர்களை சுற்று

சந்தோஷ ரீங்காரம் எழுப்ப!!

காத்திருந்த பறவைகள் எல்லாம்

இனிய கானங்களாய்

தன் குரலோசையை எழுப்ப!!

புயலாய் பறந்து வந்த காற்று

தென்றலாய் மாறி தாலட்ட!!

இயற்கையின் இன்ப சாரலில்

கலந்து இழைந்தது

இந்த இரண்டு உள்ளமும் !!!!!!!!!!

 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஐயோ ஐயோ இந்த அகில் பையனுக்கு எப்போ நல்ல மூட் இருக்கும் எப்போ விரைப்பா இருப்பான்னு புரியவே இல்ல இருந்தாலும் பின் காலத்துல அபி இவன் கிட்ட படாத பாடு படப்போறா 🤔🤔🤔🤔🤔🤔🤔
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஐயோ ஐயோ இந்த அகில் பையனுக்கு எப்போ நல்ல மூட் இருக்கும் எப்போ விரைப்பா இருப்பான்னு புரியவே இல்ல இருந்தாலும் பின் காலத்துல அபி இவன் கிட்ட படாத பாடு படப்போறா 🤔🤔🤔🤔🤔🤔🤔