அத்தியாயம் -16
அனைத்தும் நல்லபடியாக முடிய ஆசுவாசமாய் அமர்ந்த பத்மனாபனுக்கு அதிர்ச்சி தரும் செய்தியோடு வந்து நின்றான் அகில்.
“என்ன அகில் சொல்ற” என கேட்க“மாமா எனக்கு இங்க இருக்கறதுல எந்த கஷ்டமும் இல்ல...ஆனா ஒரு சில விஷயங்களை நான் தனிப்பட்ட முறையில செய்யணும்னு நினைக்கிறேன் அதனாலதான்” என இழுக்க
“அதை இங்கிருந்தே செய்ய முடியாதா அகில்” என்றார்.
“இல்லை மாமா இது நான் முதல்ல எடுத்த முடிவு....இந்த ஆர்டர்காகத்தான் தான் வெயிட் பண்ணேன். அதும் நல்லபடியா முடிச்சுட்டோம்.இனி அர்ஜுன் பார்த்துக்குவான்.நான் கிளம்பறேன்” என்றான்.
“இந்த விஷியம் எல்லாருக்கும் தெரியுமா?” என்று கேட்டவர்....எல்லாருக்கும் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்க
“இல்ல மாமா ....முதல்ல உங்க கிட்டதான் சொல்றேன்” என்றான்.
ஒரு நிமிடம் அவனை உற்று நோக்கியவர் “எனக்கு 1 வாரம் டைம் கொடு....அது வரை கொஞ்சம் பொறுமையாக இரு ....அப்புறம் பேசிக்கொள்ளலாம்” என்றார்.
இது வரை இவர் இப்படி பேசியது இல்லை.அவரது குரலின் மாற்றம் அவனுக்கு ஏதோ உறுத்த “சரி மாமா....தயவு செய்து என்னை தவறாக மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்றான்.
அவர் அதற்க்கு எந்த பதிலையும் சொல்லாமல் மெதுவாக தலையை மட்டும் அசைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“அம்மா டிபன் ரெடியா ....எனக்கு நேரமாச்சு” என கத்திகொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள் ருத்ரா,
“என்னடி இது இவ்ளோ நேரமே கிளம்பிட்ட.......பொறு 5 நிமிசத்துல ரெடி பண்ணிடறேன்” என வேகமாக செய்ய
அம்மாவின் முகத்தை பார்த்தவள் அவளின் செயல் மனதை உறுத்த ...”அம்மா மெதுவா செயுங்க ....ஒன்னும் அவசரம் இல்லை” என்றவள் யோசனையுடன் தன் அறைக்கு சென்றாள்.
நினைவுகள் நேற்று நடந்தவையை அசை போட்டது.காலை நேரம் ஆடிட்டர் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.
“ருத்ரா மேடம் உங்களை பாஸ் கூப்பிடுகிறார்” என சொல்லி விட்டு போனான் ப்யூன்..
“சார்” என அழைத்து அனுமதி கேட்டு விட்டு ராமநாதன் அறைக்குள் நுழைந்தாள் ருத்ரா .
“வா ருத்ரா ....அந்த V.V சிட்பண்ட்ஸ் அக்கௌன்ட் விபரங்கள் என்ன ஆச்சு “என்று கேட்க
“சார் அது எல்லாம் முடிச்சு அப்பவே அனுப்பிட்டேன் சார்....நம்ம மாதவன் &கோ அக்கௌன்ட்ஸம் முடிச்சு அனுப்பியாச்சு” என்றாள்.
“வெரி குட் ...இந்த குணம் தான் எனக்கு பிடிச்சதே ...சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சிடற” என பாரட்டியவர்
“நாளைக்கு எதாவது வேலை இருக்கா உனக்கு” என கேட்டார் .
“இல்ல சார் ஞாயிற்று கிழமை வீட்ல படுத்து தூங்கிற வேலைதான்” என சொல்ல
“இல்ல கிரானைட் கம்பெனி மீட்டிங் இருக்கு...அதான் நீ போக முடியுமானு கேட்டேன்” என்றார்.
“ஓகே சார் போகிறேன்” என்றவள் அப்போது அவள் அலை பேசி ஒலிக்க
“ஒரு நிமிடம் சார்”என சொல்லி விட்டு வெளியே வந்தவள்,போனை காதில் வைத்தவள் அஜுன் என்ன இது இந்த நேரத்துல கூப்படறிங்க ...எதாவது முக்கியமான விஷயமா?” என கேட்க
“ஆமா ஆரு....ரொம்ப முக்கியமான விஷயம் ...எங்கிட்ட இருந்த ஒரு முக்கியமான பொருள் காணாம போய்டுச்சு...அதை நீதான் கண்டுபிடிச்சு தரனும்” என கூற
“அச்சோ!!!!! என்ன அர்ஜுன் அது....எப்போ காணாம போச்சு....யாரு எடுத்தா” என பதட்டமாக ,வரிசையாக கேள்வி கேட்க
எடுத்தவங்களே இவ்ளோ கேள்வி கேட்கும்போது கொடுத்தவன் என்ன பதில் சொல்றது குட்டிம்மா...என் இதயம் தான் “ என அவன் சரசமாக சொல்லி விட்டு சிரிக்க
“டேய் அர்ஜுன்....உன்ன அ அ அ அ அ அ “ என அவள் கோபமாக கத்த
“என்ன செல்லம் ...இழுத்து அணைச்சு ஒரு உம்மா கொடுக்கனும்போல இருக்கா” என அவன் கேட்டு விட்டு ...நான் ரெடி ....எங்க வரணும்” என சிரித்து கொண்டே கேட்க
“ம்ம்ம்ம்......நீ எங்கயும் வர வேண்டாம் ...அங்கேயே இருங்க” என இவள் கோபமாக சொல்ல
“குட்டிம்மா எனக்கு இப்ப உன்னை பார்க்கனும்போலே இருக்கு ...லீவ் போட்டுட்டு வறியா....எங்காவது வெளியே போலாமா” என்றான்.
அவன் குரலில் இருந்த ஏக்கம் அவள் மனதை தொட,”இல்லை அர்ஜுன் வேலை இருக்கு.... லீவ் போட முடியாது....இப்ப கூட பாஸ் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்....உன்னொட கால் வந்ததும் தான் வெளியே வந்தேன்....புரிஞ்சுகோடா ப்ளீஸ்” என இவள் கெஞ்ச
“உன்ன பார்த்து 3 நாள் ஆச்சு ஆரூ....மெசேஜ் மட்டும் தான் பண்ற ....அவனவன் ஒரு நாள்ல காதலை சொல்லி,ஒரு வாரத்துல ஊரே சுத்திட்டு, ஒரே மாசத்துல கல்யாணத்தையும் முடிச்சறான்”.
“லவ் பண்றதுக்கு முன்னாடியாவது அடிகடி பார்த்துகிட்டோம்.ஆனால் இப்போ..... கொஞ்ச நாள் நான் பிசி ....இப்போ நீ பிசி ....என்ன வாழ்க்கைடா இது என்றவன் அதெல்லாம் முடியாது....சரி இன்னைக்கு வேண்டாம்....நாளைக்கு நம்ம அவசியம் வெளியே போறோம்...நீ அதுக்கும் காரணம் சொல்லாத ...போறோம் அவ்ளோதான் என வேகமா சொல்லி விட்டு போனை வைத்தவன்....ஹப்பா....ராட்சசி...,,,இப்பவே நம்மள பேச விடமாட்டேன்கிறா .....ம்ம்ம் ...கல்யாணத்திற்கு அப்புறம் என் நிலைமை மௌன சாமியார் நிலைமை தான் என புலம்பியவன் ஆனாலும் இந்த படபட்டாசு தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே” என சொல்லி சிரித்து கொண்டான்.
இங்கு ருத்ராவிர்க்கோ பலமான யோசனை....அவளுக்கும் ஆசைதான்.அர்ஜுனை பார்த்து மூன்று நாட்கள் ஆச்சு.மற்ற நாட்களிலும் ஒன்று கோவிலில் சந்திப்பார்கள்....இல்லையெனில் காரில் சிறிது நேரம் அமர்ந்து பேசுவார்கள்....அதிலும் பாதி நேரம் சண்டையில் தான் முடியும்.அதனால் அவள் மனதும் இதற்க்கு ஒத்து ஊத.... சரி போய்தான் பார்க்கலாம் என்ற முடிவோடு அவள் மீண்டும் அலைபேசியை அழுத்த
அதற்க்குள் ஷோபா “ஹே ருத்ரா ...என்ன இங்க நிற்கிற...பாஸ் கூப்பிடாருனு போன” என கேட்க
“அட ஆமா ....அதுக்குள்ள இந்த அஜுன் போன் பண்ணி.....அச்சோ!” என சொல்லி கொண்டே வேகமாக உள்ளே சென்றாள்.
வேகமாக அவள் உள்ளே வருவதை பார்த்த ராமநாதன் “என்ன ருத்ரா.... போன்ல எதாவது முக்கியமான விஷயமா ... என கேட்க
“இல்ல சார் அது வந்து” என இவள் இலுக்க
“சரி...சரி....அப்போ நீ நாளைக்கு அந்த மீட்டிங் கலந்துகிறதான” என்றார்.
“நாளைக்கா என்றவள்....சார் நாளைக்கு வர முடியாது..”.என சொல்ல
“ஏம்மா ...நீ தான் நாளைக்கு ப்ரீன்னு சொன்ன” என கேட்க
“இல்ல சார் அம்மா இப்பதான் போன் பண்ணங்க...நாளைக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு ...போகணும்னு சொன்னங்க” என அவள் படபடவென்று பேசி முடிக்க
“சரி...சரி....நான் வேற ஆளை பார்த்துகிறேன்....நீ போய் வேலை பாரும்மா” என்று அனுப்பி வைத்தார்.
இருக்கையில் அமர்ந்தவள் “எல்லாம் இவனால் வந்தது...அங்கிள் என்ன நினச்சிருப்பர் “என என புலம்பி கொண்டே வேலையை தொடர்ந்தாள்.
அதற்க்கு பிறகு அர்ஜுன் போன் செய்ய வில்லை....எங்கே பேசினால் அவள் வர மறுத்து விடுவாள் என எண்ணி பேசவே இல்லை.
அன்று காலை எட்டு மனியளவில வெயிட் பண்ணுவதாக மெசேஜ் மட்டும் வந்தது.அதனால் தான் கிளம்பி அம்மாவை அவசரபடுதினாள் .ஆனால் வனஜாவின் முகத்தை பார்த்த பின்புதான் தவறு மனதை உறுத்த யோசித்தவள் பின் மீண்டும் வனஜாவிடம் சென்று “அம்மா என்று அவளை பின்புறமாக கட்டி அணைத்தவள்....அம்மா நான் உங்க செல்ல பொண்ணுதானே.....நான் என்ன சொன்னாலும் என்ன திட்ட மாட்டிங்கள” என கேட்க .......
வனஜாவோ வேலை செய்யும் அவசரத்தில்” எத சொல்றதா இருந்தாலும் அப்புறம் சொல்லு ....இப்ப நீ முதல்ல சாப்பிடு என அவளுக்கு ஊட்டியவள் ...ஆபிஸ் வேலையா ருத்ரா” என கேட்க
“ம்ம்ம் ...ஆமாமா என வேகமாக சொல்லியவள்...பின்னர் இல்லை என்று தலை ஆட்டியவள் ... இட்லி போதும்மா .... அம்மா நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் மாலை வந்து சொல்கிறேன் .......நான் கிளம்பறேன்” என சொல்லிகொண்டே வேகமாக வெளியே வந்து வண்டியை எடுத்தாள்..
அவள் வருகைக்காக முன்பே வந்து காத்திருந்தான் அர்ஜுன்.,
இவளோ பல சிந்தனைகளில் வண்டியை ஓட்டி கொண்டு வந்தாள். அவனை பார்த்ததும் சிந்தனை அனைத்தும் மறந்து அவன் நினைவு மட்டுமே சிந்தையில் இருந்தது.
கருப்பு ஜீன்ஸ் ,ப்ளூ டீ சர்ட் ,ஸ்டைலிஷான அவனது கேசம் அவன் தலை அசைதளுக்கு ஏற்ப அசைய ,பார்ப்பவரை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கு அவனது புன்னகையுமாய் ஆறடி அடி உயரத்தில் அம்சமாய் நின்றவனை பார்த்து அசந்து போய் அப்படியே நின்றவள்...அவனை காதலாய் ஒரு பார்வை பார்க்க
பார்வையின் மாற்றத்தை புரிந்து கொண்டவன் ,அருகில் வந்து புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க
அவள் வெட்கத்தில் முகம் சிவந்து தலையை இருபுறமும் அசைக்க
“என்ன பாஸ் மார்க்கா நானு” என அவன் கிண்டலாக கேட்க
“போங்க அஜுன் “என அவள் வெட்கப்பட
“ஆகா ...என் ஆரு கூட வெட்கபட்றாடா என சொல்லி சிரித்தவன் ,என்னன்னு சொல்லு” என நெருங்கி வந்து கேட்டான்.
“நீங்க ரொம்ப ஹான்ட்சமா இருக்கீங்க” என அவள் நாணத்துடன் மெதுவாக சொல்ல
“அப்படியா ஆரூ ...நீயும் தான் இப்ப பூத்த ரோஜா மாதிரி ப்ரெஷா இருக்க” என சொல்லி கொண்டே மேலே கைபோட
“ம்ம்ம் ...இந்த வேலைதான வேண்டாங்கிறது” என சொல்லி அவனை தள்ளி விட
“இப்படியே பேசிகிட்டு இருந்தா நேரமாகுது...நீ வறீயா...இல்ல அன்னைக்கு மாதிரி உன்ன உள்ள தூக்கி உட்கார வைக்கனுமா” என சொல்லிகொண்டே அவன் அருகே வர
“வேண்டாம்...வேண்டாம்...என ஓடி சென்று காரில் அமர்ந்தாள் .
“அதான நீயாவது கொஞ்சம் romance பண்ண விடறதாவது” என சொல்லிகொண்டே காரை கிளப்பினான்.
ஆருவிர்க்கு மனம் முழுவது ஒரே சந்தோசம்.அவனுடன் முதன் முறையாக வெளியே வருகிறாள்.மனதின் துள்ளல் முகத்தில் தெரிய,அதற்க்கு ஏற்றார் போல் அந்த பாடலும் ஒலித்தது.
அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!
ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ. ஆனந்தமே
“என்ன குட்டிம்மா ஏதும் பேசாம வரிங்க ...எனது ஆருவானு எனகே சந்தேகமா இருக்கு” என கேட்டான் அர்ஜுன்.
அவள் சிரித்து கொண்டே “என்ன பேசறது அஜுன்...நீங்களே எதாவது சொல்லுங்க என்றாள்..
“அதான உனக்கு திட்றதுனா ஈஸியா வரும்....சந்தோசமா பேசறதுனா கொஞ்சம் கஷ்டம்தான்” என அவன் நக்கலாக சொல்ல
அவனை பார்த்து முறைத்தவள்...”இப்ப என்ன சொல்றிங்க...ஆமா நான் கோபகாரிதான்...என்னை நீங்க சமாளிச்சுதான் ஆகணும்...நீங்க மட்டும் சரியா ...அன்னைக்கு அப்படிதான்” என ஆரம்பிக்க...
“போதும்...போதும்...சரி...சரி உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு” என்றான்.
“அப்படின்னா” என அவள் கேட்க
“உனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்,நீ ஆசைபடற விஷயம் அதை சொல்லு என்றான்.அதும் இப்போ நம்ம இரண்டு பேர் மட்டுமே .... உன் மனதுக்கு என்ன தோணுது”
“முதல்ல நம்ம இரண்டு பேரும் மட்டும் கோவிலுக்கு போகணும்...அங்க எந்த கூட்டமும் இருக்க கூடாது...கடவுளோட அருள் முழுவதும் நமக்கே கிடைக்கணும்.அப்புறம் அப்படியே பீச்சுக்கு போகணும்...அங்க எவ்ளோ கும்பலாக இருந்தாலும் கண்டுக்காம நம்ம ஓடி பிடிச்சு விளையாடனும்,அப்புறம் பைக்ல ரொம்ப தூரம் 12௦km ஸ்பீட்ல நீங்க போகணும்...உங்க பின்னாடி நான் உங்கள இறுக்க கட்டி பிடிச்சுகிட்டு வரணும்.அப்புறம் ரோட்ல இருக்கிற கடையில பணியாரம் சாப்பிடனும்...அதுல இருக்க மிளகாய் எல்லாம் நீங்க எனக்கு எடுத்து தரனும்...ம்ம்ம் இன்னும் நிறிய இருக்கு அர்ஜுன்” என சொன்னவள்
அவளது பேச்சின் நடுவில் அவன் காரை நிறுத்தியதோ ,அவளையே பார்த்து கொண்டிருந்ததியோ அவள் கவனிக்கவில்லை.
பேசி முடித்து திரும்பியவள் அவன் தண்ணியே பார்த்து கொண்டிருப்பதை கண்டதும்,”என்ன அர்ஜுன் ஏதோ உளறனா என சொல்லி சிரித்தவள்,அதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்” என சிணுங்க
அவன் ஏதும் பேசாமல் அவளையே மீண்டும் பார்க்க
“அர்ஜுன்...நான் எதாவது தப்பா சொல்லிட்டனா” என லேசான பயத்துடன் அவனை பார்த்து கேட்டாள்..
“குட்டிம்மா ...உன் அப்பாவை நீ ரொம்ப மிஸ் பண்றியா” என கேட்டான்.
ஆருவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட அவள் ஏதும் சொல்லாமல் அவனையே பார்க்க
அவளை இழுத்து தன்னோடு அனைத்து கொண்டவன் ..”உனக்கு எல்லாமுமாக நான் இருப்பேன் குட்டிம்மா" என அவன் காதலுடன் சொல்ல”... அவன் நெஞ்சில் மேலும் முகம் புதைந்தாள் அவன் மனம் கவர்ந்தவள்.
அந்த நேரம் கார்ல
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லி தான்
உனக்கேற்ற துணையாக என்னை மாற்ற வா
குல விளக்காக நான் வாழ வழிகாட்டவா....
என்ற பாடல் ஒலிக்க...அது ஆருவின் மனதை சொல்ல..... சிறிது நேரம் அப்படியே அமர்ந்தவன்...பின்னர் அவள் தலையை நிமிர்த்தி “ஆரூ...அரு...இங்க பாரு ...என்னை பாரு என்றவன் அவளது கண்ணோடு தன கண்ணை கலக்க விட்டவன் “நான் இருக்கேன்” என்றான்,அந்த வார்த்தை அவனது உள்ளத்தில் இருந்து அல்ல அவனது உயிர் துடிப்பில் இருந்து வருகிறது என்பது அவன் சொல்லும் விதத்திலே புரிந்தது ஆருத்ராவிர்க்கு.
பின்னர் அவள் ஆசை பட்ட படி அன்றைய நாள் முழுவது அவளுக்காக செலவளித்தான். மாலை நேரமாகிவிட
அஜுன் நேரமாகிடுச்சு ...வீட்டுக்கு போகணும் என புலம்ப ஆரம்பித்தாள் ருத்ரா.
சரி சரி நீ ஆரம்பிச்சுடாத...அவ்ளோதான் என்றவன் ஒரு நகை கடை முன் வண்டியை நிறுத்தினான்.அவளை அழைத்து சென்று அவளுக்கு பிடித்த மாடலில் ஒரு வைர மோதிரம் வாங்கியவன்....ஆனா இது இப்போ கொடுக்க மாட்டேன்...அதற்கென்று ஒரு நேரம் இருக்கு அப்ப கொடுக்கிறேன் என சொல்லி விட்டு நேராக நர்சரியில் வண்டியை நிறுத்தியவன் அவளுக்கு வெள்ளை ரோஜா செடியை வாங்கி கொடுக்க
“குட்டிம்மா...இது உன் அருகிலே இருக்கணும்.உனக்கு எப்ப என்ன தோன்றினாலும் இந்த பூவிடம் சொல்லு...அது எனக்கு கண்டிப்பாக தெரியபடுத்தும்” என கூறி அதை கொடுத்தான்.
அவனது அன்பில் திகைத்தவள்.”அஜுன் நான் ஏதும் உங்களுக்கு கொடுக்கலையே “என சிறு குழந்தை போல் கேட்க
அவளை காருக்கு அழைத்து வந்தவன்,”ஆரு உன்னோட இந்த குழந்தை முகமே எனக்கு போதும்டா....நீயே எனக்கு கிடைத்த பெரிய வரம்....மீதியை கல்யாணத்திற்கு பிறகு மொத்தமா வசுல் செய்துகிறேன் என சொல்லி விட்டு கன்னடித்தவன்...இப்போ நீ உதட்டில் வேண்டுமானால் எதாவது கொடுக்கலாம்” என சொல்லி முடிப்பதற்குள் அவனது இதழ்கள் அவளது இதழ்களால் சிறை செய்ய பட்டு இருந்தது.
சில நிமிடங்க அப்படியே இருந்தவள்...பின்னர் தானே விலகி....போகலாம் என சொல்ல
அந்த மயக்கத்தை கலைக்க விரும்பாமல்,அதை ரசித்தபடி எதுவும் பேசாமல் கிளம்பியவன் அவளை ஏற்றிய இடத்திலே இறக்கி விட்டான்.
கீழே இறங்கியவள் கண்காளாலே அவனிடம் விடை பெற.அவனும் மௌனத்தையே இசைவாக தந்தான்.
வீட்டிற்க்குள் நுழைந்தவன் அதே நினைப்பில் மேலே செல்ல
கீழே அபியும் பத்மநாபனும் அமர்ந்திருப்பதை அவன் கவனிக்க வில்லை.
என்ன அர்ஜுன் போன வேலை நல்ல படியா முடிஞ்சுதா என பத்மநாபன் கேட்க
“சூப்பர்பா ...நான் எதிர்பார்க்கவே இல்லை” என அவன் அவளது முத்தத்தின் நினைப்பில் சொல்ல
“என்னது எதிர்பார்கலியா...எதை எதிர் பார்க்கல” என அவர் கேட்க
“என்ன அர்ஜுன் இன்னைக்கு 3 வது லட்டா “என அபி கிண்டலாக கேட்க
“ஆமாம்” என தலை ஆடியவன்...
“என்னம்மா அது லட்டு” என பத்மாநாபன் கேட்க
அப்போது தான் அவர்கள் பேசியதை கவனித்தவன்
“என்னது...என்ன கேட்டிங்க என வேகமாக கீழே வந்து அமர்ந்தவன்....நான் எதாவது உளறிட்டனா” என்றான்.
“இது வரைக்கும் இல்ல ...ஆனா இப்ப உளறிட்ட ...ஆனாலும் இது ரொம்ப ஓவர்.”...என அவள் போட்டு வாங்க..
.
“ஆஹா...இவளை நம்ப கூடாதே”.....நம்ம என்ன சொன்னோம் என யோசித்து கொண்டே திரும்பியவன் அங்கு பத்மநாபன் அவனை பார்த்து சிரிக்க
“அப்பா ....அப்படி எல்லாம் ஏதும் இல்லை .இவள் பொய் சொல்றாள்” என பதற
“நான் எதுமே கேட்கலைப்பா”...என அவரும் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல
அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா . என அபி பாட
இந்த விளையாட்டுக்கு நான் வரலை....அர்ஜுன் எஸ்கேப் என சொல்லி கொண்டு வேகமாக மேலே மாடிக்கு ஓடினான்.
மனமெங்கும் சந்தோஷ சாரல் வீச
சாரலில் நனைந்த மனங்கள் இரண்டும்
மகிழ்ச்சி கடலில் மூழ்க
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
இவர்களுடன் சேர்ந்து ஆட
வரபோகும் சுனாமி
இவர்களை சுருட்டி விடுமா?
இல்லை சுகம் கொடுக்குமா ?
பதில் தெரிந்தவர்கள் கூறுங்களேன்!!!!!!!!