• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 17

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
 அத்தியாயம் -17


நிலா மகள் தன் பணியை முடித்து விட்டு செல்ல,கதிரவன் தன் சிறகினை விரிக்க முயற்சிக்க ,மலர்கள் தன் இதழ்களை விரித்து புன்னகையுடன் இந்த இனிய நாளை வரவேற்க்க காத்திருக்க நடக்க போகும் நிகழ்வை அறியாமல் இலைகளின் மேல் இருக்கும் பனித்துளி போல் புத்துணர்ச்சியுடன் கண்விழித்தாள் அபிமித்ரா .

கீழே இறங்கி வந்தவள் ...வீடே அமைதியாக இருக்க ...சுற்றிலும் பார்த்தவள் .... மஞ்சு பூஜை அறையில் எதோ செய்து கொண்டிருக்க,அர்ஜுன்,பத்மநாபன் இருவரும் பேப்பர் படித்து கொண்டிருக்க, இப்படி இருக்க கூடாதே...இது தப்பாச்சே என நினைத்தவள் திடீரென்று மனதில் ஒரு எண்ணம் தோன்ற அதை செயல் படுத்தி விட்டு வந்து அமைதியாக அர்ஜுன் முன்பு அமர்ந்தாள்.

பேப்பரை கீழே இறக்கி அவளை பார்த்தவன் ,அவள் தனது முட்டை கண்ணை வைத்து கொண்டு அங்கும் இங்கும் பார்ப்பதை பார்த்தவன் ஆஹா ....இந்த குட்டி பிசாசு எதோ வில்லங்கம் பண்ண போகுது என நினைத்தவன், ......என்ன பண்ணபோரானு தெரியலியே என அவன் யோசிக்க

அதற்குள் “டேய் அர்ஜுன் நீ நேத்து வாங்கிட்டு வந்த அந்த அபிராமி அந்தாதியை பிளேயர்ல போட்டு விடுடா,அப்படியே அந்த சாம்பிராணி டப்பாவை எடுத்து வா” என சொல்லி விட்டு அவள் பூஜையை ஆரம்பிக்க

“ஆமா அர்ஜுன் நேத்து உங்க அம்மா...இதை பத்தி பேசி எனக்கு காதுல ரத்தமே வந்திடுச்சு....என் பையன் வாங்கி கொடுத்தான்னு ஒரே சந்தோசம்...அதை போட்டு விட்டுடு” என பத்மநாபன் சொல்ல

உடனே அபி...”.நான் போட்டு விடறேன்” என எழுந்து ஓட

“நீ வேண்டாம்......உனக்கு அப்டினா என்னனே தெரியாது....அவன் என்னகாக நேத்து வாங்கிட்டு வந்தான்.....எத்தன மணிக்கு எழுந்திரிச்சு வர நீ ...உன்ன வந்து பேசிக்கிறேன்” என சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தார் .

அர்ஜுன் அவளை ஒரு ஏளன பார்வை பார்த்து கொண்டே அந்த சாம்பிராணியை மஞ்சுவிடம் கொடுத்து விட்டு பிளேயர்ரை ஆன் பண்ண

அது உடனே..... அட்ரா அட்ரா நாக்கு முக்க நக்கு முக்க என கத்த

கையில் சாம்பிராணி வைத்திருந்தவர் அதிர்ச்யில் அதை தனலுக்குள் தவற விட

“டேய் அர்ஜுன் என்னடா இது” என பத்மநாபன் அலற

அர்ஜுனோ அவசர அவசரமாக அதை நிறுத்த முயற்சிக்க ஸ்டாப் பட்டனை வொர்க் ஆகவில்லை .அவனும் அந்த பிளயரை அங்கும் இங்கும் திருப்பி பார்க்க

சட்டென்று உரைக்க அபியை திரும்பி பார்க்க

அவள் லேசான புன்னகையுடன் பேப்பரை பார்த்து கொண்டிருக்க அவனுக்கு புரிந்து போனது.

“உன்னஅஅஅஅஅஅ....” என அவன் அவளை துரத்த

அவள்” பத்து காப்பாத்துங்க” .....என அவர் பின்னால் மறைய

அதற்குள் கீழே விழுந்த சாம்பிராணி புகை வீடு முழுவதும் புகை மண்டலாமாக காட்சி தந்தது.

சாம்பிராணிக்குள் சூடத்தை உதிர்த்தி கலந்து விட்டாள் அபி.அதனால் அது தணலுக்கு விழுந்த உடன் அதிக புகையை உருவாக்கி விட்டது.

கையில் கிடைத்த பொருளை அர்ஜுன் அபியை நோக்கி வீச

அவள் அருகில் இருந்த மீன் தொட்டியின் மூடியை தடுப்பு கவசமாக பயன்படுத்தி கொண்டு ஓடினாள்.

“விடுடா...விடுடா ...சின்ன பொண்ணுதான “என அவர் அர்ஜுனை சமாதான படுத்தி விட்டு திரும்ப

அங்கு மஞ்சு காளி அவதாரம் எடுத்துகிட்டு நிற்க

பத்மநாபன் அமைதியாக தனது அறையை நோக்கி சென்றார்.

“பத்து எங்க உங்க தளபதியை விட்டுடு போறீங்க...போர்கலத்தில் புறமுதுகு காட்டிவிட்டு போவது ஒரு நல்ல வீரனுக்கு அழகில்லை” என வசனம் பேசிகொண்டே அவரின் பின்னால் செல்ல

எதிரே வந்த உருவத்தின் மீது மோதி நின்றவள் தடுப்பு கவசம் முகத்திற்கு முன் இருந்ததால் முகம் தெரியாமல் அர்ஜுன் என்று நினைத்து,

“டேய் அர்ஜுன் வேண்டாம்...விட்டுடு .....நான் ரொம்பபாவமல்ல....அறியா பொண்ணு தெரியாம செஞ்சுட்டேன்...ப்ளீஸ் ...ப்ளீஸ் என சொல்லி கொண்டே மூடியை விலக்க அங்கு அகில் அவளை பார்த்து சிரிக்க

“அச்சோ ....மாமா என்றவள், மாமா ப்ளீஸ் ப்ளீஸ் என்னை காப்பத்துங்களேன்...இந்த மஞ்சுவும் அர்ஜுனும் என்ன அடிக்க வராங்க” என சொல்லி அவன் பின்பு ஒன்டினாள்.

அதற்குள் அவனை கண்ட அர்ஜுன் “டேய் அகில் வாடா” என அழைத்தான் .

“எங்க வரது....ஒரே புகைமூட்டமா இருக்கு” என சொல்லிகொண்டே அருகே வர ,அபியும் அவன் கையை இறுக்க பிடித்து கொண்டவள்,கண்டிப்பாக இதற்க்கு அம்மாவிடம் திட்டு விழும் என்ற பயத்தில் அவனை ஒட்டிகொன்டே நிற்கிறோம் எனபதே அவள் உணரவில்லை.ஆனால் அகில் அவளது அருகாமை ரசிக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தவித்து போனான்.

அகிலை கண்டது மஞ்சு கோபம் குறைந்து “வா அகில்....இவ பண்ணி வச்சிருக்க வேலையை பாரு...காலையில சாமி கும்பிடற நேரத்துல இப்படி பண்ணி வச்ருக்கா” என குற்ற பத்திரிக்கை வாசிக்க

அவள் மேலும் அகிலிடம் ஒன்ற.அகில் ஹிஹிஹி...என வலிந்தவன்....”மிது கொஞ்சம் நகர்ந்து நில்லு” என மெதுவாக சொன்னான் .

அவன் சொல்வது புரியாமல் ,அவன் திட்டுகிறான் என நினைத்தவள் ...”இல்ல மாமா சும்மா விளையாட்டுக்குதான் ...நேத்து இவன் இந்த பிளேயர் வாங்கிட்டு வந்துட்டான் அம்மா ரொம்ப பீத்திகிட்டாங்க அதான்” என காரணத்தை விளக்கினாள்.

“சரி கொஞ்சம் என்னை விட்டு தள்ளி நிக்கிறியா ....அத்தை அர்ஜுன் எல்லாம் இருக்காங்க” என பல்லை கடித்துகொண்டே மறுபடியும் அவன் காதில் சொல்ல அப்போதுதான் தன் நிலையை உணர்ந்தவள் சட்டென்று அவனை விட்டு நகர்ந்தவள்

“சாரி மஞ்சு” என முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு நிற்க

“உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா...சாமி விஷயத்துல இப்படிதான் பண்ணுவாங்களா” என மஞ்சு ஆரம்பிக்க,

உடனே அவளது பாசமலர் சகோதரன் , “விடுங்க அம்மா ...அவளை பத்தி தான் தெரியும்ல...சரி சரி போ போய் முகம் எல்லாம் கழுவிட்டு வா” என அனுப்பி வைத்தான் அர்ஜுன் .

“அப்புறம் மச்சான் என்ன இந்த நேரத்துல வந்திருக்க” என்றான்அர்ஜுன்.


“டீ சாப்பிடு அகில்....அபி வரும்போது அப்படியே அகில்க்கும் அர்ஜுனுக்கும் டீ எடுத்திட்டு வந்திடு” என்றாள் மஞ்சு.

“இல்ல அத்தை இப்பதான் சாப்பிட்டேன்...மாமா எங்கே” என கேட்க

“அவர் அறையில் இருக்கார்.ஏன் அகில்” என மஞ்சு கேட்க

“அவர் தான் வர சொன்னார்” என்றவன்,அதற்க்கு மேல் ஏதும் பேசாமல் தலை குனிந்தான்.

அதற்குள் “அம்மா டீ தூள் எங்க இருக்கு” என அபி கத்த மஞ்சு உள்ளே சென்றார்.

“என்ன அகில் எதாவது பிரச்சனையா” என அவன் அருகில் வந்து அமர்ந்து அர்ஜுன் மெதுவாக கேட்க

அந்த சமயத்தில் டீயை அவன் முன் நீட்டியவள் அவனை ஆழ்ந்து நோக்க

“மாமா எனக்கு போன் பண்ணிருந்தார்.உடனே கிளம்பிவானு சொன்னார் அதான் “என்றான்.

“அப்படியா!! ...அப்பா எங்கிட்ட ஒன்னுமே சொல்லலேயே” என்றான் அர்ஜுன்.

அதற்க்குள் பத்மநாபன் வர அந்த இடத்தில் ஒரு சின்ன அமைதி நிலவியது.

“வா அகில் என்றவர் மஞ்சு அகில்கு டீ கொடுத்தியா” என கேட்க

“கொடுத்திட்டேன்பா” என அபி பதில் சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயல

“அபி இங்க வாடா” என அவளை அழைத்து தன் அருகில் அமர்த்திகொண்டவர் மஞ்சுவையும் அங்கு அமற சொன்னார்.

அர்ஜுனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.அகில் சம்பந்தமாக ஏதோ சொல்ல போகிறார் என புரிந்து கொண்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“இவங்ககிட்ட சொல்லிட்டியா அகில்” என பத்மநாபன் கேட்க
இல்லையென்ற தலை அசைப்பு மட்டுமே அவனிடம் பதிலாக வந்தது.

“ஏன் அகில் எப்படி இருந்தாலும் இவங்களுக்கு தெரியதான போகுது” என்றார்.அவரது குரலில் இருந்தது கோபமா,வருத்தமா என்று அகிலினால் உணர முடியவில்லை.

மஞ்சுவிற்கு லேசான பதட்டம் வர “....ஏன் ....என்னாச்சு ....ஏதாவது பிரச்சனையா “என பதற

அர்ஜுனும் மித்துவும் எதுவும் பேசாமல் அவனை பார்த்துகொண்டே இருந்தனர்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அத்தை .நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன் அதான்” என மெதுவாக சொல்ல

“ஏன் அகில்....இங்க இருக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்.....யாரவது எதாவது சொன்னங்களா....அர்ஜுன் இல்ல அபி” என சொல்லி கொண்டே அவர்கள் இருவரயும் மஞ்சு பார்க்க

அதற்குள் அகில் “இல்ல இல்ல அத்தை. நானாகத்தான் இந்த முடிவு எடுத்தேன்” என்றான்.

“இப்பதான் இந்த வீடே கலகலப்பா இருக்கேனு சந்தோசப்பட்டேன்.என் கண்ணே பட்டுடுச்சு ....இப்போ நீ புது பிரச்சனைய கிளப்பிற” என சொல்லி கொண்டே சோர்வாக சோபாவில் அமர

“மஞ்சு என்ன ஆச்சு.”..என பத்மநாபன் அருகில் வர

அர்ஜுன் அவனிடம் வந்தவன்.... “ஏன் போறேன்னு நான் உன்னை கேட்கமாட்டேன்.ஆனால் இது விளையாட்டல்ல அகில்.நீ முதல் முறை இப்படி பண்ணும்போது எனக்கு தவறாக தோணலை....ஆனால் இப்போ எதோ தவறா தோணுது....எதா இருந்தாலும் மனசு விட்டு பேசு.....உன் மனசுக்குள்ளே வச்சிருந்தா எங்களுக்கு எப்படி தெரியும்.எங்க வீட்டை பொறுத்த வரை நீயும் எங்களில் ஒருத்தன் தான்.

அம்மாவும் அப்பாவும் உன்னை மகனாகதான் பார்க்கிறாங்க....உனக்குன்னு பார்த்து பார்த்து எத்தன விஷயம் செஞ்சிருகாங்க...இதெல்லாம் சொல்லி காட்டணும்னு நான் சொல்லலை...நாங்க உன்னை எங்களுக்குள் ஒருத்தனாதான் நினைக்கிறோம்...நீ ஏன் பிரிஞ்சு போகணும்னு நினைக்கிற ...எனக்கு புரியலை அகில் என்றவன்.நானும் உன்கிட்ட இது வரை ஒரு நண்பனா சகேதரனா தான் பழகிறேன்.அபி” என சொல்லி ஒரு நிமிடம் நிறுத்தியவன்

அவன் சட்டையை பிடித்து “வேண்டாண்டா ......உன்னால் இங்க யாருடைய மனதாவது வேதனை பட்டுதுனா நான் சும்மா இருக்க மாட்டேன் என அபியை பார்த்து கொண்டே சொன்னவன் .இங்க இருக்கிறவங்க எல்லாம் உயிருள்ள மனிதர்கள்.....அவங்க மனசுல அன்பை விதைச்சிட்டு நீ இப்படி திடீர்னு கிளம்பறது நல்லதில்லை அகில்.இந்த நான்கு வருசமா நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்.உன்னை போல இறுகின மனசில்லடா இங்க இருக்கிறவங்களுக்கு. உன்னை நான் இங்க இருக்க சொல்லி வற்புறுத்தல ..ஆனால் இந்த முடிவால ஏதாவது பிரச்சனை....யாரவது பாதிக்க படறாங்கன்னு தெரிஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்” என கோபத்தில கண்கள் சிவக்க வார்த்தைகள் தணலாக வெளிவந்தது.

அர்ஜுனுக்கும் அபியும் அகிலும் விரும்புவது தெரியும். ஆனால் அது அவன் வாயில் இருந்து வர வேண்டும் நாமாக சொல்ல கூடாது.இதுவரை அபியும் இதை பற்றி அர்ஜுனிடம் பேசியது இல்லை.அதனால் தான் அபியை மனதிள் வைத்து கொண்டு பொதுப்படையாக பேசியது போல அர்ஜுன் தன் கோபத்தை கொட்டி தீர்த்தான்.

அவன் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த அகில் அவன் பிடியில் இருந்து தன்னை மெதுவாக விடுவித்தவன் அவனை கட்டி அணைத்து “உங்களோட பாசத்துக்கு நான் தகுதியானவனா என்று எனக்கே தெரியவில்லை” என்றான்.

பின்னர் நிதானமாக”மாமா ,அத்தை அர்ஜுன் நான் இப்போ சொல்றது நீங்க எப்படி புரிஞ்சுக்க போறிங்கனு எனக்கு தெரியலை.ஆனால் என் மனதில் உள்ளதை நான் சொல்லி விடுகிறேன்



 நான் உங்க வீட்டிற்கு வந்த போது நீங்க என் மேல காட்டுன அக்கறை எனக்கு என் அப்பா அம்மாவை நினைவுபடுத்தி கொண்டே இருந்தது.அவங்க என்னை எப்படி பார்த்துகிட்டாங்களோ அதே போல்தான் நீங்களும் பார்த்துகிட்டீங்க .அதே போல எங்க அப்பா எனக்கு சொன்ன வார்த்தையும் நினைவு படுத்திச்சு.அத்தை நாலதான் எங்க குடும்பம் இப்படி ஆச்சுனு அவங்க இறந்த போது ஊர்ல எல்லாம் பேசினது என் மனசில பதிஞ்சிடுச்சு.”

“இல்லை அகில் ...நான் அண்ணன் கிட்ட எவளவோ போராடி பார்த்தேன்” என மஞ்சு அவசரமாக சொல்ல

“மஞ்சும்மா என அவளை அணைத்த பத்மநாபன் கொஞ்சம் பொறுமையா இரு அவன் பேசட்டும்” என்றார்.

“மாமா என்னை நீங்க தப்பா நினைத்தாலும் பரவாயில்லை.நான் முன்பு ஏன் கிளம்பினேன்?......இப்போது ஏன் கிளம்பறேன்? என்று உங்களுக்கு சொல்லி விட்டு அபியை பார்த்தவன் புரிய வைக்க எனக்கு வேறு வழி தெரியலை என்றவன்,

நான் ஹாஸ்டல் போனதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் எல்லாமே மறந்து நல்ல தான் இருந்தேன் “என சொல்லி கொண்டே மித்துவை பார்க்க அவளோ தலையை கீழே குனிந்தவள் நிமிரவே இல்லை.ம்ம்ம் என பெருமூச்சு விட்டவன்

“நான் மறுபடியும் ஊருக்கு போனோம் இல்லயா ...அப்போதான் பிரச்சனை ஆரம்பமாச்சு என அவன் மாமா கூறியதை சொன்னவன் அவர் கூறியது எல்லாம் சரி என்று என் மனம் ஏற்று கொள்ளவில்லை...ஆனால் எனக்குள் சிறு தடுமாற்றம்.நம்ம அப்பா இருந்தால் இதற்க்கு அனுமதித்திருப்பரா.....கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார் என நானே முடிவெடுத்து குழம்பி போனேன் .அந்த நிலையில் இங்கு இருந்தால் மேலும் குழப்பம் தான் வரும் என முடிவு பண்ணிதான் நான் கிளம்பினேன் “என தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தான்.

“இதை நீ எங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமல அகில்...நாங்களும் எங்க நிலைமயை உனக்கு புரிய வச்சிருப்போம் இல்லையா” என பத்மநாபன் கேட்க

“மாமா புரிஞ்சுக்குங்க...உங்களை அத்தை எல்லாம் நான் தவறாகவே நினைக்கலை ...எனக்கு ஏற்பட்ட குழப்பத்தை சரி பண்ணவே நான் போனேன்” என்றான்.

பின்னர் அர்ஜுனிடம் சென்றவன் ...”டேய் மச்சான் ....எனக்கு அப்பா ,அம்மா,சொந்தம் பந்தம் எல்லாரும் கொடுக்க வேண்டிய அன்பை மொத்தமா நீ ஒருத்தனா கொடுத்த எனக்கு....உன்னோட சப்போர்ட் இல்லையனா நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பனான்னு எனகே தெரியாது என அவன் கைகளை பிடித்து உணர்வு கொந்தளிக்க பேசியவன் ஆனால் இன்னைக்கு நீ பேசின பேச்சு என் நண்பனைவிட ஒரு அண்ணனா நீ உன் கோபத்தை கோபத்தை கொட்டியது மேலும் உன்னை ஒரு படி உயர்திடுச்சு.

மச்சான் நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு புரியுது.மாமா,அத்தை உங்களுக்கும் எல்லாமே தெரியும்னு நினைக்கிறேன்.ஆமா...நான் மித்துவை விரும்பறேன்.....என் உயிரை விட மேலா விரும்பறேன் என சொல்லி கொண்டே அவள் அருகில் சென்று அவள் கைகளை இருக்க பற்ற ....மிதுவின் கைகள் ஜில்லீன்று இருந்தது.நான் இங்க திரும்ப வந்ததுக்கு காரணம் இவதான்.இப்ப நான் கிளம்பறதுக்கு காரணமும் இவதான் என்றான்.என் மித்து இங்க எப்படி இருந்தாளோ அதை விட வசதியா சந்தோசமா அவளை வச்சுகனும்னு ஆசைபடறேன்...எனக்காக அவ ரொம்ப கஷ்டபட்டா...இனி அந்த நிலைமை அவளுக்கு வரகூடாது’ அதற்க்கு தான் என்றான்..

“அதை நீ இங்கிருந்தே பண்ணலாம்ல அகில்” என அர்ஜுன் கேட்க

“இல்ல மச்சான்....எப்படி சொல்றது....நான் இங்க படிச்சு வளர்ந்தாலும் என்னோட ஊர்ல எனக்குன்னு சில மரியாதை வேணும்னு எதிர்பார்கிறேன் அர்ஜுன்.அது கிராமம்.அங்க உயிரை விட மானத்தை பெருசா நினைப்பாங்க......எனக்கு மாமா அத்தை மேல கொஞ்சம் வருத்தம்...பொறுமையா இருந்து எங்க அப்பாவுக்கு அவங்க அன்பை புரிய வச்சிருக்கலாம்.....இவங்க அவசரப்பட்டு வெளியே வந்ததால நிறிய பிரச்னை ஆகிடுச்சு.காசு பணம் இருகிறதால இவங்க மகனும் அவங்க பின்னாடி போய்ட்டானு எங்க அப்பா அம்மாவை யாரும் தப்பா யாரும் பேசகூடாது.இதை ஊரு வாய் அடைக்க மட்டும் சொல்லலை....எனக்கே இதான் சரின்னு பட்டது.

அதுவும் இல்லாம நானும் சொந்தம்கிற ஒரு தகுதியை மட்டும் வச்சு பொண்ணு கேட்காம ரகு அப்பா சொன்ன மாதிரி ஆஸ்தி,அந்தஸ்த்து எல்லாம் வளர்த்துகிட்டு வந்து மித்துவ கல்யாணம் பண்ணா இன்னும் சிறப்பா இருக்கும்னு என் மனசுக்கு படுது அதான்” என்றான்.

அவன் சொன்னதும் அவனை தாவி அணைத்த அர்ஜுன் “அகில் சாரிடா ....நான் பேசினது உன் மனச காயபடுத்திருந்தா என்ன மன்னிச்சுடுடா “என்றான்.

அப்போது பத்மநாபன் அவனிடம் இரண்டு பத்திரங்களை நீட்டினார்.

“என்ன மாமா இது” என கேட்டான் அகில்.

“அகில் உன் மனசுல இருகிறதா நீ கொட்டி தீர்த்துட்ட....இத்தன வருசத்துக்கு மேல நான் செஞ்சது சரியா தவறானு நான் பேச விரும்பலை.என்னை பொறுத்த வரைக்கும் நான் உன் மேல உண்மையான பாசம்தான் வச்ருக்கேன். என்உயிரோட ஆணி வேர் உங்களோடது என சொல்லி கொண்டே மஞ்சுவை தோளோடு அணைத்தவர் ......யாருமே என்னை நம்பாம இருந்த நேரத்துல என்னை நம்பி இவ வந்தா....அதுக்காக அவ இழந்தது நிறைய....ஆனா இது வரைக்கும் அவ அதை பத்தி எங்கிட்ட பேசினதே இல்ல...இன்ன வரைக்கும் அவளை நான் சந்தோசமாத்தான் வச்சிருகேனு நினைக்கிறேன்...அவ இல்லின நான் இல்ல என்றவர்....... என் மஞ்சுவோட அண்ணன் பையன் ஒரே காரணத்துகாகதான் நான் உன்னை இங்க அழைச்சுட்டு வந்தேன்.ஆனா அதற்க்கு பிறகு உன்னையும் அர்ஜுனையும் நான் பிரிச்சு பார்த்தது இல்லை.

எப்போ உன்னோட சொத்துகளை எல்லாம் விற்று பாங்க்ல பணம் போடுங்கனு சொன்னியோ அப்பவே அதை எல்லாம் விற்று விட்டேன்..ஆனா அந்த பணத்தை நம்ம கம்பனில இன்வெஸ்ட் பண்ணி உன்னையும் ஒரு பங்குதாரரா மாத்தினேன்.அந்த தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டாங்க...அதை என் நண்பன் மூலமா குத்தகைக்கு விட்டு அந்த பணத்தை உனக்காக செலவு பண்ணேன் என்றார்..

“இல்ல மாமா நீங்க உங்க பணத்த தான் எனக்கு செலவு பண்ணிங்க...எனக்கு தெரியும்” என்றான் அகில்.


அவனை ஆழ்ந்து பார்த்தவர்...”அப்புறம்” என்றார் .

“என்னை மன்னிச்சுடுங்க மாமா...எனக்கு அது இப்பதான் தெரியும்.பாங்க்ல இருந்து என் அக்கௌன்ட்ல பணம் ரொம்ப நாளாக அப்படியே இருக்கு...டெபோசிட்டா மாத்துங்கன்னு கடிதம் வந்திச்சு...அப்போ போய் பார்த்தேன்....நானே அதை பத்தி உங்க கிட்ட பேசணும்னு நினச்சேன் “ என்றான்.

“அர்ஜுன் அன்னைக்கு நீ அக்கௌன்ட்ல வராத பணம் யாருதுன்னு கேட்டில...அந்த பணம் அகிலோட பணம் தான்” என்றார்.

மாமா!!!!!!!! எனது அகில் அதிர்ச்சியுடன் கேட்க

ஆமா அகில்...AP இன்டர்நேஷனல் நீயும் ஒரு பங்குதாரர் தான்.நேரம் வரும்போது அதை சொல்லலாம் என்று நினைத்தேன்.இப்போ அதற்க்கான நேரம் வந்து விட்டது.இவை எல்லாம் உன்னோட சொத்துகள்தான் என அவனிடம் டாகிமேண்ட்ஸ்களை ஒப்படைத்தார்.

“அப்போ நீங்க அன்னைகே அந்த பணத்தை கொடுத்து இருக்கலாமே மாமா...நாங்க எவ்ளோ கஷ்டபட்டோமே” என அகில் அவர் மேல் புகார் கூற

பத்மநாபன் சிரித்து கொண்டே..”.இல்ல அகில்....இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சு நீ கொடுத்தா பரவில்லை...உன்னோட அனுமதி இல்லாமல் அதும் நமக்கு உறுதியாக இந்த ஆர்டர் கிடைக்குமா என தெரியாதா நிலையில் எப்படி கொடுப்பது அதான்” என்றார்.

“மாமா நான் எதாவது தவறா பேசி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க” என உணர்ச்சி பெருக்குடன் அவர் காலில் விழ குனிந்தவனை எழுப்பி அணைத்து கொண்ட பத்மநாபன் “உன்னை பார்த்தால் எனக்கு பெருமையாக இருக்கு அகில்.இந்த துணிச்சல் எனக்கு அன்றைக்கு இல்லாமல் போய் விட்டது .ம்ம்ம் சரி முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும்.இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்றார்.

மஞ்சு அகிலின் அருகில் வந்தவர்,”அகில் இன்னும் அத்தை மேல கோபமா” என ஏக்கத்துடன் கேட்க

அச்சோ அத்தை என்ன இது....உங்க மேல எனக்கு எப்போதும் கோபமும் கிடையாது..சில விஷயங்களை நான் தவறா புரிஞ்சுகிட்டேன்.இப்போ தெளிவாகிட்டேன்.உங்க பொண்ணோட அன்புதான் எனக்கு அதை புரிய வச்சுது .நீங்களும் என்னை புரிஞ்சுக்குங்க...நான் ஊருக்கு போறதுக்கு நீங்களும் சம்மதிக்கணும்” என்றான்.

“அகில் செம ஆளு நீ....சந்தடி சாக்குல நீ எடுத்த முடிவுல உறுதியா இருக்கேனு சொல்லிட்ட” என பத்மநாபன் சிரிக்க

“பின்ன என்ன மாமா நான் யாரு....உங்க வளர்ப்பு இல்லியா” என சொல்லி சிரித்தான்.

அங்கு ஒரு சந்தோஷ அலை வீச,அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் ஓர் ஜீவன் அமைதியாக அமர்ந்து இருந்தது.

அவளை கவனித்து கொண்டே இருந்த அர்ஜுன் அவள் அருகில் சென்று...”அபி நீ என்னடா சொல்ற...அகில் கிளம்ப்ரானு வருத்தமா” என கேட்க

“அவர் ரொம்ப நாளைக்கு இங்க இருக்க மாட்டார்னு எனக்கு முன்பே தெரியும் அர்ஜுன்” என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு “என்னது!!!!!! உனக்கு தெரியுமா என மூவரும் ஒரே குரலில் கேட்க,அகில் மட்டும் அவளை நோக்கி வந்தவன் மெதுவாக அவள் முகத்தை உயர்த்தி நேருக்கு நேர் பார்த்தவன்,அவன் கண்கள் கேட்கும் கேள்விக்கு அவளது இமைகள் பதில் சொல்ல அவளை மெதுவாக அணைத்து அவள் உச்சந்தலையில் தன் இதழ்களை பதித்தவன் ஐ லவ் யூ மித்து” என்றான்.

மூவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த மித்து “இதை நான் எதிர்பார்த்தேன் ...அந்த பெரிய ஆர்டர் வந்த போதே எனக்கு தெரியும் என்றவள் stictching செக்ஸ்னில் நடந்தவைகளை சொன்னவள் நானும் அதை கவனிச்சேன்.அப்பவே முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.

“என்னது அந்த ராஸ்கல் அப்படியா சொன்னான்” என அர்ஜுன் கோப பட

“விடு மச்சான்.அது மட்டும் அல்ல....இது நான் சுயமா எடுத்த முடிவு தான்” என்றான் அகில்.

“ஹப்பா ஒரு பெரிய பிரச்சனை கிளியர் ஆகிடுச்சு” என அர்ஜுன் பெருமூச்சுவிட

“அப்போ உன்னோட லட்டு மேட்டர் இனி ப்ரீ யா நீ காண்டினுயூ பண்ணலாம் அப்படித்தான” என அபி சொல்ல

“ஆமாமா என தலையை ஆட்டியவன் ..பின்னர் சுதாரித்து என்னது!!!!” என அதிர

“என்ன மச்சான் உன் மேட்டர் உன் வீட்டுக்கு தெரியுமா ? “என அகில் அப்பாவியாக கேட்க

“என்ன அர்ஜுன் ...என்ன லட்டு மேட்டர்...இவளும் அன்னைல இருந்து சொல்லிட்டே இருக்கா” என மஞ்சு கேட்க

“அது வந்தும்மா...வந்து...”என அவன் இழுக்க

“அம்மா நான் சொல்றேன் ...நான் சொல்றேன் என குதித்த அபி

அன்னைக்கு அந்த கார் மேட்டர் சொன்னேன்ல...அதுல இருந்த இரண்டு பேரில் ஒருத்தர் உன் சீமந்த புத்திரன் அர்ஜுன்...அந்த இன்னொன்னு யாருன்னு நீங்களே கேட்டுக்குங்க” என்றவள்

“நீங்க வாங்க மாமா ...இனி எங்க அம்மா என்னோட வேலையை பார்த்துக்குவாங்க என சொல்லிவிட்டு அர்ஜுனிடம் வந்து....மாட்னடா அர்ஜுனா” என கொக்கரித்து விட்டு ஓட

“இரு...இரு...உன்ன வந்து கவனிச்சுகிறேன்” என்றவன்,

அதற்குள் இங்கு மஞ்சு” இந்த வீட்ல எனக்கு தெரியாம என்னென்னமோ நடக்குது “என புலம்ப

“அம்மா அப்படி எல்லாம் ஏதும் இல்லை.நானே சொல்லலாம் என்று இருந்தேன் என் சொல்லி கொண்டே பத்மநாபனிடம் உதவி செயுமாறு கண்களாலே கெஞ்ச

அவரும் “யாமிருக்க பயமேன்” என மௌனமாய் தலை அசைக்க ...மீண்டும் ஒரு அத்தியாம் முதலில் இருந்து ஆரம்பித்தது.


மனதில் தோன்றும் வினாக்களுக்கு

எல்லாம்

விடை தேடி கிளம்பியவர்களில்

வெற்றி பெற்றவர் ஒரு சிலரே

வினாக்களை காலத்தின் கையில்

கொடுத்து விட்டு

வாழும் காலத்தை தன் வசமாக்கி கொள்பவர்களே

வாழ்வில் வெற்றிபெருகின்றனர்!!!!!!!!!!! .