• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-18

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஓலை - 18

பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்த சுஜாதாவிற்கு எப்போதுடா வீடு வரும் என்றிருந்தது.

அவருக்கு சத்யபிரகாஷையும், கோபியையும் ஒரு வழியாக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். அதற்காக அவர் காத்திருக்கத் தொடங்கினார்.

சத்யபிரகாஷோ, சுஜாதா வந்தால் எப்படி ரியாக்ட் பண்ண வேண்டுமென்று யோசித்து ப்ரிப்பேராக இருந்தார்.

தனியாக இருந்தால், சுஜாதா வந்து வைத்து செய்வது உறுதி என்று நினைத்தவர், அதற்கு இடம் கொடுக்காமல் ஹாலில் அமர்ந்துக் கொண்டார்.

சுஜாதாவோ அவரது எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி கொண்டு ஹாலில் இருக்கும் போதே அவரை உண்டு இல்லை என்று ஆக்கினார்.
வீட்டிற்குள் மூவரும் நுழையவும், " ஹேய் திடீர்னு வந்துட்டீங்க. நான் தான் வேலை முடியவும் வரேன்னு சொல்லியிருந்தேனே." என்று ஆச்சரியமாக வினவ.

" ஏன் எங்க அண்ணன் போன் பண்ணி சொல்லி இருப்பாங்களே. நாங்கள் கிளம்பிட்டோம்னு சொல்லலையா?" என்று அவர் வீசிய முதல் கேள்விக்கான பதிலிலே, சத்யபிரகாஷின் வாயை மூட செய்தார்.

சத்யபிரகாஷோ, " ஹான்… சொன்னான். நான் மறந்துட்டேன்." என்று ஏதோ சொல்லி சமாளித்தார்.

" எங்களையாச்சும் மறக்காமல் இருக்கீங்களே… அதுவே பெரிய விஷயம்." என்று அவரிடம் கூறிய சுஜாதா, நேராக கிச்சனுக்கு சென்றார்.

அங்கு சமைத்துக் கொண்டிருந்த சமையல் அம்மாவிடம், " அக்கா… சமையல் முடிஞ்சிருச்சா‌." என்று வினவ.

" முடிஞ்சிருச்சுமா. நீங்க சாப்பிடுறீங்களா? இல்லை ஜுஸ் போட்டு வச்சிருக்கேன். அதை எடுத்துட்டு வரட்டுமா?"என்று வினவ.

"ஜூஸ் தாங்க கா. நாங்க அப்புறமா சாப்பிடுகிறோம். உங்களுக்கு வேற வேலை இல்லைன்னா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. சாயந்திரம் வந்தா போதும். என்று அவரை அனுப்புவதில் குறியாக இருந்தார் சுஜாதா.

அவரும், " வேற வேலை இல்லைங்க மா." என்று விட்டு எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து விட்டு கிளம்பினார்.

டிரைவரும் லக்கேஜை வைத்து விட்டு கிளம்பியிருக்க. வீட்டில் இவர்கள் நால்வர் மட்டுமே. சுஜாதாவோ பொறுமையாக ஜுஸ் அருந்தி விட்டு சத்யபிரகாஷிடம் திரும்பி, " அப்புறம்?" என்று வினவ.

" என்ன?" என்று சத்யபிரகாஷ் திருப்பி வினவினார்.

" நீங்க தான் சொல்லணும். இப்போ ஊருக்கு வந்த போது ஃப்ரெண்ட பார்க்க போறேன்னு வெளியே கிளம்புனீங்களே… யாரை பார்க்க போனீங்க?" என்று வினவ.

" நான் யாரை வேணும்னாலும் பார்க்க போவேன். உனக்கு என்ன வந்துச்சு." என்று கோபமாக பேசுவது போல் நடிக்க.

அவரது பொய் கோபத்தைக் கண்டு கொண்டார் சுஜாதா.

' ஓஹோ.' என்று நக்கலாக எண்ணியவர், நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "ஆமாம்… உங்க ஃப்ரெண்ட் கிரிதரன் என்ன பண்றாரு?"

" எனக்குத் தெரியாது." என்றார் சத்யபிரகாஷ்.

" அப்போ உங்களுக்குத் தெரியாது."

" ஆமாம். தெரியாது. எதுக்கு இப்போ தேவையில்லாமல் க்ராஸ் கொஸ்டீன் கேட்டுட்டு இருக்க." என்று சத்யபிரகாஷ் கடுப்பாக…

" அம்மா… ப்ளீஸ் விடுங்க. அப்புறம் பேசலாம்." என்று சந்தியா தடுக்கப் பார்த்தாள்.

" ப்ச் நீங்க ரெண்டு பேரும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க. இடத்தை காலி பண்ணுங்க." என்று எரிந்து விழுந்தார் சுஜாதா.

" ஹேய் சுஜாதா. பிள்ளைங்க கிட்ட எதுக்கு கோபத்தை காண்பிக்குற.எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்." என்றார்‌.

" எல்லாம் அவங்களுக்குத் தெரியும். " என்றவர், " நான் உங்க அப்பா கிட்ட கொஞ்சம் பேசணும். அப்புறமா உங்க கிட்ட சொல்றேன். இப்போ உங்க ரூமுக்கு போங்க." என.

சந்தியாவும், சுனிதாவும் அம்மாவின் பேச்சை மீற முடியாமல் தயங்கித், தயங்கி அங்கிருந்து கிளம்பினர்.

" இப்போ நான் கேட்கறதுக்கு முதல்ல ஒழுங்கா பதில் சொல்லுங்க. உங்க ஃப்ரெண்டு இன்னும் போஸ்ட்மேனா தான் இருக்காரா."

" ஆமாம். எதுக்கு கேட்குற."

" ஓஹோ இப்போ தானே தெரியாதுன்னீங்க… அதுக்குள்ள ஞாபகம் வந்துடுச்சா? அதுவுமில்லாமல் உங்க ஃப்ரெண்ட் இருபத்தி ஐந்து வருஷமா போஸ்ட்மேனாவே இருக்கார்றா." என்று கேலியாக வினவ.

" அது வந்து…." என்று சத்யபிரகாஷ் தடுமாற…

" அவர் நிறைய புரோமஷன் வாங்கி ஹையர் பொஸிஷன்ல இருக்கார். எனக்குத் தெரியும். " என்றார் சுஜாதா.

' அப்புறம் ஏன் என்னைப் போட்டு படுத்துற ராட்சசி.' மனதிற்குள் தான் பேசினார். வெளியே பேசினால் அவ்வளவு தான்.

" என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க. சரி விடுங்க."

' அப்பாடி.' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

ஆனால் சுஜாதா அவ்வளவு எளிதில் விடமாட்டார் என்பதை, சற்றே மறந்து விட்டார்.

" இந்த தடவை ஊருக்கு வந்த போது, உங்க ஃப்ரெண்ட் கிரி அவரை போய் பார்த்தீங்க தானே. " என்று வினவியவளின் பார்வையோ, ' இல்லைன்னு மட்டும் பொய் சொன்னீங்க. அவ்வளவு தான். நீங்க காலி.' என்று மிரட்டுவது போல தோன்ற,

" ஆமாம் போனேன்." என்றார் சத்யபிரகாஷ்.

அப்போ அந்த லெட்டர் இருபத்தி ஐந்து வருஷமா உங்க கிட்ட தான் இருந்திருக்கு. அதை இப்போ நீங்க தான் உங்க ஃப்ரெண்டுக் கிட்ட கொடுத்து போஸ்ட்ல வந்த மாதிரி ட்ராமா பண்ணியிருக்கீங்க. ரைட்… இப்பவாவது உண்மையை சொல்றீங்களா? இல்லையா ?" என்று வினவ.

ஆமாம், இல்லை என்று கூறாமல், " அந்த கோபி சொன்னானா…" என்று உளறி வைத்தார்.

" என்னது கோபிக்கு அந்த லெட்டரை இவ்வளவு நாளா நீங்க குடுக்காமல் வச்சிருந்தது தெரியுமா?" என்று அதிர்ந்து கேட்டார் சுஜாதா.

" ம் அவனுக்கு தெரியும். கிரி உளறிட்டான். அந்த கோபி எருமைக்கு தெரிஞ்சதும், அதை வைச்சு ப்ளாக்மெயில் பண்ணான்." என்று சொன்னவர், இன்னும் முழு உண்மையை கூறவில்லை.

" இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலை இல்லையா? இல்லைன்னா என்ன நடந்ததுன்னு என் கிட்ட முழுசா சொல்லியிருப்பீங்க." என்று நா தழுதழுக்க வினவினார் சுஜாதா.

" சுஜாதா உனக்கு வந்த லெட்டரை வச்சுக்கிட்டு நான் உன்னை ஏமாத்தலை." என்று சத்யபிரகாஷ் ஏதோ கூற வர.

" எனக்கு எல்லா உண்மையும் தெரியும்." என்று அழுத்தமாகக் கூறினார் சுஜாதா.

" அப்போ நான் யாருன்னு உனக்குத் தெரியுமா? ." என்று தடுமாறிக் கொண்டே வினவ.

" நல்லாத் தெரியும். நீங்க ஒரு ரைட்டர். அதுவும் எனக்கு மிகவும் பிடிச்ச இதய உதயன் நீங்க தான் என்பதும், எனக்குத் தெரியும்."

" எப்போ தெரியும்? " என்று தடுமாற்றத்துடன் சத்யபிரகாஷ் வினவ.

" எப்போன்னா சென்னைக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும். இன்னும் சரியா சொல்லணும்னா இருபத்தி ஐந்து வருஷத்துக்கு முன்பே தெரியும். அதான் நம்ம கல்யாணம் ஆன ஒரு வாரத்திலேயே கண்டு பிடிச்சுட்டேன்."

" எப்படி?" என்று நம்ப முடியாமல் சத்யபிரகாஷ் வினவ.

" ம்… இன்னும் உங்களுக்கு சந்தேகம் தானா. கல்யாணம் முடிஞ்சதும், என்னை அம்போன்னு விட்டுட்டு இங்கே வந்துட்டீங்க. அங்க நான் பாட்டுக்கும் வேலையை முடிச்சிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தப்ப, எங்கம்மா தான், உங்க ரூம்ல உள்ள கஃப்போர்டு எல்லாம் அடுக்கி கிளீன் பண்ணி வைக்க சொன்னாங்க.
அம்மா படுத்துன பாட்டுக்கு அந்த வேலையை செய்ய போனேன். அதனால் தான் நீங்க செய்த எல்லா வேலையையும் கண்டு பிடிக்க முடிஞ்சது
அவ்வளவு அலட்சியம். இவ இங்க வரமாட்டானு அப்படியே எல்லாத்தையும் போட்டு வச்சிருந்தீங்க.
நீங்க சின்ன வயசுல இருந்தே என் மேல் வைத்திருந்த அன்பை, அங்கிருந்த டைரியில படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
நான் உங்களுக்கு அனுப்பின லெட்டர்… ஐ மீன் இதய உதயனுக்கு அனுப்பிய லெட்டர் எல்லாம் பத்திரமாக வைச்சிருந்ததைப் பார்த்தேன்…
நீங்க தான் என்னுடைய பிரியமான ரைட்டர்னு தெரிஞ்சதும் எப்படி இருந்துச்சு தெரியுமா? அந்த ஃபீல்… அதை வார்த்தையால சொல்ல முடியாது. எப்படா உங்கக் கிட்ட வருவேன்னு காத்திருந்தேன்.
நான் முட்டாள் தானே. சின்ன வயசுல என்னை பிடிச்சிருக்குனு டைரியில் எழுதி வச்சிருந்த நீங்க, அதுக்கப்புறம் என்னை பிடிக்கும்னு எழுதி வச்ச ஞாபகம் இல்லை.
நான் லூசு தானே. நீங்க பார்க்க வரலைன்ற , கவலையில எதுக்கெடுத்தாலும் அழ ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் பெரியவங்க உங்களை வர வச்சு, வலுக்கட்டாயமா உங்க தலையில கட்டிட்டாங்க.

ஆனால் சென்னைக்கு வந்ததும் நீங்கள் முகத்தை திருப்பவும் தான் உண்மை எனக்கு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது.

உங்களுக்கு என்ன பிடிக்கலை. அதுவும் ஒரு ரைட்டரை நான் காதலிச்சதை உங்களால் ஏத்துக்க முடியல போல‌. வீட்ல சொல்றதை மீற முடியாமல் தான் நம்ம கல்யாணம் நடந்தது. அதானே." என்று தனது இத்தனை வருட வேதனையெல்லாம் வார்த்தையில் கொட்டினார் சுஜாதா.

" ஹேய் சுஜா! அப்படியெல்லாம் எதுவுமில்லை. எனக்கு சின்ன வயசுல இருந்து உன்ன ரொம்ப பிடிக்கும். ஆனால் பெரிய மனுஷி ஆனதுக்கப்புறம் நீ என்னை பார்த்து ஒதுங்கி, ஒதுங்கிப் போன‌. அது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
உனக்கு என்ன பிடிக்கலையோன்னு தோணுச்சு. சரி தான் படிக்கும் வரை உன்னை தொந்தரவு பண்ண வேணாம்னு ஒதுங்கி போக நினைச்சேன்.
நான் தள்ளி இருந்தாலும், நான் உன்ன மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன். உன் நல்லது மட்டும் தான் நினைச்சேன்." என.

" நான் என்ன பண்றது உங்க அம்மா, எங்க அம்மா எல்லாரும் பண்ண வேலை. நீங்க இருக்குற இடத்துல நான் இருக்க கூடாதுன்னு திட்டுவாங்க. அதான் நீங்க வந்ததும் எந்திரிச்சு போயிடுவேன். ஏதாவது சொல்லி, சொல்லியே உங்க மேல வெறுப்ப வர வச்சுட்டாங்க. அந்த கோபத்தைத் தான் உங்ககிட்ட காண்பிச்சேன். சத்யா." என்று மெதுவான குரலில் கூறினார் சுஜாதா.

" அதான் சொல்றேன் சுஜா. எப்படியும் உனக்கும் எனக்கும் தான் திருமணம் நடக்கும். அப்போ என்னோட அன்பை உனக்கு புரிய வச்சுக்கலாம். இப்போ பெரியவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கலாம்னு தான் நானும் உன் கிட்ட இருந்து தள்ளிப் போனேன்.
திடீர்னு மனோ கல்யாணத்தோட, நம்ம கல்யாணத்தையும் சேர்த்து நடத்தணும்னு சொல்லவும் எனக்கு ஷாக்காயிடுச்சு‌.
உனக்கு மேல படிக்கணும் ஆசை இருக்குனு எனக்கு தெரியும். நான் இங்கே இருந்தா அதை, இதையும் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களோன்னு தான் சென்னையில் படிக்கணும்னு போயிட்டேன்.
இல்லன்னா இங்கே ஏதாவது ஒரு டிகிரி படிச்சிட்டு, எனக்கு கடையை பார்த்துக்கணும் தான் ஆசை. " என்றவர் சுஜாதாவைப் பார்க்க.

அவளோ நம்ப முடியாமல் திகைத்து
நின்றார்.

" என்ன நம்ப முடியலையா சுஜா? முதல்ல உட்கார்." என்று கூறியவர், அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்து விட்டு, அவரும் ஒரு நாற்காலியை போட்டு உட்கார்ந்தார்.

" நான் சொல்றது அத்தனையும் உண்மைதான் சுஜா உனக்காக தான் நான் சென்னையில் போய் இன்ஜினியரிங்ல சேர்ந்தேன்.
அப்புறம் அங்க படிக்க ஆரம்பிச்சதும், எனக்கு அதில் ஆர்வம் வந்துடுச்சு. அப்புறம் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிக்காக கதை, கவிதை, கட்டுரைன்னு ஏதாவது செய்ய சொல்ல.
நான் கதை எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் என்னுடைய தனிமையை, கதை எழுதறதோட கழிச்சேன்.

திடீர்னு ஒரு நாள், அந்த பத்திரிக்கை ஆஃபிஸ் வாசல்ல கோபியை பார்த்தேன்.

அவனை ஒரு வழியா சமாதானம் செய்து, என் கூட தங்க வெச்சேன்.
ஆக்ச்சுவலா நான் எழுதிய கதையை, பத்திரிக்கைக்கு அனுப்பனும்னு கூட நான் நினைக்கலை.
ஜஸ்ட் ஹாஃபியா தான் எழுதுனேன். அதைப் படிச்ச கோபி தான், உன் எழுத்துநடை சூப்பரா இருக்கு. பத்திரிக்கைக்கு அனுப்பலாம்னு சொன்னான். அவன் வொர்க் பண்ற பத்திரிக்கையிலே கதை போடுறதற்கு ஹெல்ப்பும் பண்ணான்.
அப்படித் தான் நான் கதை எழுத ஆரம்பிச்சேன். முதன் முதல்லா உன் கிட்ட இருந்து பொங்கல் வாழ்த்தட்டை வந்த போது, அவ்வளவு சந்தோஷமா இருந்தது.
என் எழுத்தை நீ ரசிக்கும் போது, எனக்கு ஆகாயத்துல பறக்குற ஃபீல் தெரியுமா? அப்படி இருக்கும் போது, நான் உன்னை சந்தேகப்படுவேனா?" என்று ஆதங்கமாக வினவ‌…

" அப்போ ஏன் என் லவ் லெட்டருக்கு, பதில் எழுதி நீங்களே வச்சுக்கிட்டீங்க." என்று விடாமல் கேள்வி எழுப்பினார் சுஜாதா.

" நீ எழுதினதை நீ தான் லவ் லெட்டர்னு மெச்சிக்கணும்." என்று சத்யபிரகாஷ் கிண்டலடிக்க.

" எதா இருந்தா என்ன? நீங்க அதுக்கு கூட பதில் அனுப்பாமல் நீங்களே தானே வச்சுக்கிட்டீங்க." என்று ரோஷம் வர, பதிலுக்கு எகிறினார் சுஜாதா.

" நீ அதில் காதலை சொன்னதை விட, உன் கனவு நிறைவேற, உதவி தான் கேட்ட. எனக்கு உன் லெட்டர், ஊருக்கு கிளம்புற நேரத்தில தான் கிடைச்சது‌.
சரி அங்க வந்து பதில் அனுப்பலாம்னு நினைச்சேன். அது தான் நான் பண்ண பெரிய தப்பு.
திருவண்ணாமலைக்கு வந்ததும், நான் முதல்ல உன்னோட லெட்டருக்கு பதில் எழுதிட்டு, போஸ்ட் போட போனேன்.
அப்போ தான் என் ஃப்ரெண்ட்… இல்லை இல்லை… அந்த துரோகி கிரியை பார்த்தேன்.
அவன் அதி புத்திசாலித்தனமா, எதுக்கு போஸ்ட் பாக்ஸ்ல போட்டு டைமை வேஸ்ட் பண்ற.
நான் தான் லெட்டரை டெலிவரி பண்ணுவேன். அப்போ இதையும் கொடுத்துறேன்னு சொன்னான். நானும் அவன் கிட்ட நம்பிக் கொடுத்திட்டேன்.
அவன் வேலையில் மறந்துட்டான்.
நான் லெட்டர்ல சொல்லியிருந்த படி உனக்காக கோயில்ல காத்திருந்தேன்‌ நீ வரவே இல்லை. எனக்கு ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு. நீ சும்மா டைம்பாஸ்ஸுக்காக லெட்டர் எழுதி இருக்க போலன்னு நினைச்சேன்.
எனக்கு உன் மேலே செம கோபம்.
அந்த டென்ஷனோடு தான் கல்யாணத்திலே இருந்தேன்.
அப்புறம் கல்யாணம் ஆனதுக்கு பிறகு, உன்கிட்ட நான் யாரையாச்சும் லவ் பண்றியானு கேட்டேன். நீ அப்ப இல்லைன்னு சொல்லவும் எனக்கு ஏமாற்றமா போச்சு." என்று வருத்தமாக சத்யபிரகாஷ் கூற‌.

" சாரிங்க. எனக்கு அது காதலான்னே தெரியல. எனக்கு அந்த வயசுல கல்யாணம் வேணாம்னு தோணுச்சு. ஏதாவது சாதிக்கணும் அதுக்கு இதய உதயன் தூண்டுகோலா இருப்பார்ன்னு நெனச்சேன். அதான் அந்த லெட்டரை எழுதுனேன். பதில் வரலைன்னதும் என்னை நானே சமாதானம் படுத்திக்கிட்டேன். அதான் காதலிக்கிறீயான்னு நீங்க கேட்ட போது இல்லைன்னு சொல்லிட்டேன்." என்று சுஜாதா விளக்கம் கூற.

" எனக்கு அப்ப கோபம் சுஜாதா. ஆனால் அடுத்த நாளே உன் மேல தப்பில்லை என்பது புரிந்தது‌. மறுநாள் காலையில என்னோட சாத்தனூர் டேமுக்கு வர மாட்டேன் சொல்லவும், கோவத்தோட போனேனே…
நேர என் ஃப்ரண்ட தேடிக்கிட்டு தான் போனேன்.
அப்போதான் அந்த கிரி, நான் லெட்டர போட மறந்துட்டேன்னு அந்த லெட்டர் என் கிட்ட திருப்பிக் கொடுத்தான்.
எனக்கு ரொம்ப அதிர்ச்சி. சரி தான் எழுத்தாளரா உன் கிட்ட அறிமுகம் ஆகுற கொடுப்பினை இல்லை போல. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் நெனச்சேன். உன் அத்தை மகனா, உன் கணவனா உன் வாழ்க்கையில் எனக்கான இடத்தை பிடிக்கணும்னு நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிச்சேனா? இல்லையான்னே எனக்கு தெரியவில்லை.
நம்ம இல்வாழ்க்கை ஆரம்பிச்சதிலே உன் காதலை நான் புரிஞ்சுக்கிட்டேன். என் காதலும் உனக்கு புரியும் நினைச்சேன். வாய் விட்டு சொல்லாமல் உன்னையும் இத்தனை வருஷமா கஷ்டப்படுத்தியிருக்கேன் சாரி சுஜா‌" என்று நடந்த எல்லாவற்றையும் கூறி சத்யபிரகாஷ் மன்னிப்பு கேட்க.

" எதுக்கு சத்யா சாரி எல்லாம் கேட்டுட்டு.‌.. என் மேலயும் தப்பு இருக்கு. நீங்கதான் இதய உதயன்னு தெரிஞ்சதும் நான் வந்து உங்க கிட்ட பேசி இருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.
நீங்களோ நான் உண்மையைச் சொல்லலைன்னு கோபத்தில இருந்திருக்கிறீங்க. நானோ, நீங்க என்ன சந்தேகப்படுறீங்களோன்னு நெனச்சேன். எழுத்தாளர விரும்பினது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைச்சுட்டேன்.
ரெண்டு பேரும் மனசு விட்டு பேசாதது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.இதெல்லாம் மனசு விட்டு பேசியிருந்தா, இத்தனை வருஷமா வாழ்க்கையை வீணாக்காமல் இருந்தாருக்கலாம். " என்று சுஜாதா ஆற்றாமையாக வினவ.

" சரி விடு சுஜா. இனி மிச்சமிருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம். இனி எதா இருந்தாலும் மனசு விட்டு பேசு. நானும் எதா இருந்தாலும் கேட்குறேன். இப்பக் கூட உன் கிட்ட எனக்கு ஒரு கேள்வி இருக்கு." என்று சுஜாதாவை பார்த்துக் கொண்டே கூற.

" என்ன?" என்றாள் சுஜாதா.

" இல்ல உன்னோட பிரியமான எழுத்தாளர் நான் தான் உனக்கு தெரிஞ்சிருச்சு. அப்பறமாவது ஏன் எழுதலைன்னு கேட்டீயா? அவ்வளவு தானா என் எழுத்து மேலே உள்ள பிரேமை." என்று வினவ.

" ஹலோ… நீங்க இன்னமும் எழுதிட்டு இருக்கிறது எனக்குத் தெரியும். உங்களுடைய ஃபர்ஸ்ட் ஃபாலோயரே நான் தான்.
உங்க பிளாக்ல நானும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்." என்று சொல்ல.

" ஹேய் சுஜாதா… சும்மா போட்டு வாங்குறீயா."

" சுஜா ரவிச்சந்திரன்… நீங்க தானே." என.

" எப்படி என்னுடைய பெயர கண்டுபிடிச்ச. " ஆச்சரியமாக வினவினார் சத்யபிரகாஷ்.

" சிம்பிள். லைப்ரரியில் அந்த பேர பார்த்தேன். என் பேருன்னதும் எடுத்து படிச்சேன். அப்புறம் உங்க எழுத்து எனக்கு தெரியாதா? ஈஸியா கண்டுபிடிச்சிட்டேன். இது யாரோட பேரு. சுஜா என் பேரு. ரவிச்சந்திரன் யாரு? ஏன் இந்த பேரு வச்சீங்க."

" அதுவா சுஜான்னா என்னுடைய இதயம். ரவிச்சந்திரனா சூரியன், உதயன்னு அர்த்தம் வரும். அதான் இதய உதயனுக்கு பதிலா சுஜா ரவிச்சந்திரன்னு அந்த பெயரை வைச்சேன்." என்று சத்யபிரகாஷ் சொல்ல…

" அரிய பெரிய கண்டுபிடிப்பு தான். ஆமாம் இவ்வளவு நாள் கழிச்சு திடீர்னு ஏன் லெட்டரை என் கிட்ட கொடுக்கணும்னு நினைச்சீங்க. "

" அதுவா வெளிநாட்டில்ல இப்படி தான் ஒரு லெட்டர இருபது வருஷம் கழிச்சு, சம்பந்தப்பட்டவங்கக் கிட்ட கிடைச்சது. சரி தான்… நானும் அதே மாதிரி‍, கிரி மூலம் உன் கிட்ட சேர்ப்போம்னு நினைச்சேன். நீ புத்திசாலி கண்டுபிடிச்சுட்ட." என்றவர் பெருமூச்சு விட.

" நீங்க என் மேல சந்தேகம் பட்டு தானே அனுப்புனீங்க. " என்றாள் சுஜாதா.

" ஹேய் சுஜா‌. அப்படியெல்லாம் இல்லை. எப்படியும் இந்த லெட்டரை பார்த்து விட்டு, எனக்கு உங்களைத் தான் பிடிக்கும்னு மனசு விட்டு உன்னோட அன்பை வெளிப்படுத்துவேனு நினைச்சேன். ஆனால் அதுலையும் பல்பு தான் வாங்கினேன்.

இருபத்தைந்து வருட வாழ்க்கையை வீணாக்கிட்டேனு நீ சொல்லவும், எனக்கு ஒரே ஷாக். எங்கே இங்கே இருந்தா எதாவது பிரச்சனை வருமோன்னு பயந்தேன். கோபியும் கன்ஸ்ட்ரெக்ஷன்ல பிரச்சனைனு சொல்லவும், அதை சாக்கா வச்சு கிளம்பிட்டேன்." என‌.

" எனக்கும் அந்த லெட்டரை பார்த்ததும் ஷாக் தான். நீங்க அனுப்பி எனக்கு கிடைக்கவில்லைனு தான் வருத்தப்பட்டேன். இது தெரியாமல் வாழ்க்கையை தொலைச்சுட்டேனு தான் புலம்புனேன்.
அப்புறம் தான தெரிஞ்சது உங்க ப்ராடுதனம். அந்த லெட்டரையே இப்போ கொடுத்தீங்கனு." என்றார் சுஜாதா.

" சரி பழசை விடு சுஜா. இனி நாம வாழுற வாழ்க்கையை காதலோடு வாழ்வோம்." என்று காதலுடன் கூற.

" ஏது… இந்த வயசான காலத்திலா." என்று சுஜாதா நக்கலடிக்க.

" ஐம்பதிலும் ஆசை வரும்.
ஆசையுடன் காதல் வரும்…" என்று பாடிய சத்யபிரகாஷ், அவளை நெருங்கி வர.

" என்ன பண்றீங்க." என்று சுஜாதா பதற…

அவளை தன் கை வளைவில் கொண்டு வந்த சத்யபிரகாஷ், "இழந்ததை மீட்க வேண்டாமா?" என்று ரகசியம் பேச.

" ஐயோ! என்ன இது பட்டப்பகல்ல, நட்ட நடு ஹால்ல." என்று கோபமாக கேட்க முயன்றவள், முகம் சிவக்க… அவரது நெஞ்சிலே சாய்த்துக் கொண்டார்.
இருவரது முகத்திலும் நிம்மதியான புன்
னகை மலர்ந்தது.
ஆனால், அதை கெடுப்பது போல் சுஜாதாவின் செல்ஃபோன் இசைத்தது.