• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் -1

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 1

கண்ணீர்...!!


அது அவள் விழிவழி காணும்போது மட்டும் முற்றிலும் சக்தியற்றவனாய் போய்விடுகிறேன். என் முன் அழவே கூடாதென அவளும், அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமென்று நானும் நினைத்தாலும் தவித்தாலும், இருவராலும் அது முடிந்ததே இல்லை. மனதுக்கு அருகிலும் பார்வைக்கு தூரத்திலும் வாழும் இவ்வாழ்க்கை, எங்களுக்கோர் நரகசொர்க்கம்..!!

அவளது கண்ணீர்... வலியும் கொடுக்கும் வலியும் போக்கும் ஓர் ஆகச்சிறந்த வலிநிவாரணி..!!!இருந்தும் அக்கண்ணீர் என்போல் வீணனுக்காக சிந்துகிறாளே...? என்பதே என் வருத்தம். அவளை அழவைத்துப் பார்ப்பதல்ல என் நோக்கம். அவள் சந்தோசமாக, இப்பொழுதும், எப்பொழுதும் இருக்க... இருக்க வேண்டுமென்ற என் வேண்டுதல் புரிந்து, சிந்தும் கண்ணீரோடு அவளுக்கான வழியில் நடக்கிறாள். என்னை சுமந்து கொண்டே.!!

எங்கள் இருவரின் எண்ணமும் ஒன்றுதான். இந்த பொல்லாத காலம் எங்களை மீண்டும் சந்திக்க வைத்துவிடக் கூடாதென்பதே அது.!!
இம்முறையாவது காலம் அதை நிறைவேற்றி வைக்கட்டும்.....


டட் டட் என்று தனது லேப்டாப்பில் இவையனைத்தையும் டைப் செய்து கொண்டிருந்தான் அவன்.

அவன் ..?
வாசுதேவ்.
வாசுதேவ நாராயண அனிருத்தன்.!! (ஷ்ஷ் பெயரைக் கொஞ்சம் சிறியதாய் வைத்திருக்கலாம்.. என்ன செய்ய அவனின் அம்மா அப்பா அப்படி பெரிய பெயரை அவனுக்கு வைத்திருக்கிறார்கள்.. )

அவனது ஸ்மார்ட்னெஸ், அறிவின் விசாலம், இதோ காற்றிலாடும் அவன் முன்முடியின் அழகு. இதற்கெல்லாம் மயங்காப் பெண்களுமுண்டோ?? இருந்தும் அவன் உடல்/மனம்/ஆவி அனைத்தையும் அவன் இரண்டிற்கே சமர்ப்பித்திருந்தான்.

ஒன்று...எழுத்து.
இரண்டு..? அவள்.!

நீங்கள் முதல் பாராவில் படித்த அவள்.!


அனைத்து வேலையையும் முடித்தவன் தன் கைவிரல்களை நெட்டி முறித்துவிட்டு கழுத்தைப் பிடித்துக் கொண்டான்.

இதுவரைக்கும் அவனுக்குப் பிடித்த எழுத்துலகத்தினுள் இருந்ததால் தெரியாத தலைவலி இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வெளியே வரத் தொடங்கியிருந்தது.


காஃபி வேண்டுமென அவனது தவித்த மூளை கேட்க... "இரு வர்றேன்..!" என்று அதைக் கட்டுப்படுத்தியவன் உள்ளே சென்று காஃபி போட்டு எடுத்துவந்து அதே இடத்தில் அமர்ந்தான்.

கண்கள் கணினியையே வருட ஏதாவது பிழை இருக்கிறதா என தலைவலியையும் மீறி அவன் பார்த்துக் கொண்டிருந்தான். காபியின் நறுமணம் நன்றாக மூளைக்குள் இறங்க அதற்காகவே பிழையையெல்லாம் வேகமாக சரிபார்க்கத் தொடங்கியது அவனது மூளை..

'எல்லாமே சரியாக இருக்கிறது இப்பவாவது காபியை குடியேன் வாசுதேவா' என கிட்டத்தட்ட சோர்வின் உச்சியில் இருந்து கொண்டு அவன் மூளை கெஞ்சியது..

"ஓகே ஓகே.. சில்!" என்றவன் தனது பைலை சேவ் செய்துவிட்டு காபியை ரசித்துக் குடிக்கத் தொடங்கினான். சூடாய் காபி தொண்டையைத் தாண்டி உள்ளே இறங்க இறங்க அவன் மூளை கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

சற்றுமுன் எழுதி முடித்திருந்த அந்த கதையின் இதமும் அவனுள் சொட்டு சொட்டாய் இறங்கிக் கொண்டிருந்தது.

அவன் இப்படித்தான். சற்று வித்தியாசமானவன். அவனுக்கென்று உள்ள வாசகர்கள் மிக அதிகம். அதிலும் குறிப்பாக பெண் வாசகர்கள் தான் அதிகம். ஆனாலும் அவன் பெரியதாய் அலட்டிக் கொண்டதே இல்லை. இதெல்லாம் எழுத்துக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதில் கவனமாக இருப்பான்.

அந்த நினைவே அவனை இன்னும் இன்னும் எழுத தூண்டிக் கொண்டே இருந்தது. நான் ஏற்கனவே சொன்னது போல அவன் கொஞ்சம் வேறு மாதிரி..

தனியாகவே இருந்து பழகியவன் ஆதலால் இப்போதும் அதையே தன் பழக்கமாக வைத்துக் கொண்டிருந்தான். எழுதும் போதெல்லாம் எங்கயாவது தூரமாய் தொலைந்து போய்விடுவான். அங்கே இரைச்சலில்லாது இதம் மட்டுமே நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்வான். எழுதும் அவன் எழுத்துக்களில் இதம் வேண்டுமெனில் அவன் முதலில் இதமாய் உணரவேண்டும் அல்லவா!!! உணராமல் ஒன்றையும் எழுத முடியாது என்பது அவனுக்கும் தெரியும்.

ஒவ்வொரு கதை எழுதும் போதும் அவன் மனம் அவனுக்கென்று தனியாய் ஓரிடம் தேடி ஒதுங்கும். கதை முடிந்ததும் அங்கிருந்து கிளம்பிவிடுவான் அடுத்த இடத்தைத் தேடி... கூடவே அடுத்தக் கதையையும் தேடி...!

காபியை குடித்தபடி ஓரமாய் வைத்திருந்த மொபைலைப் பார்த்தவன் எடுத்து நெட் ஆன் பண்ண மறுநிமிடம் மொபைல் விடாது டிங் டிங் என்ற சத்ததுடன் விநோதமாய் ஒலிக்க அவன் மனதுக்குள் சலிப்பு குடி கொண்டுவிட்டது...

அத்தனையும் அவனுக்கு வந்திருக்கும் சேதிகள்.. இதற்காகவே அவன் அதை எடுத்துப் பார்க்கவே மாட்டான். இந்த மிட்நைட்டிலும் எப்படித்தான் இப்படி விடாது செய்தி அனுப்புகிறார்களோ என்று அவன் கடுப்பில் யோசித்துக் கொண்டிருந்தான்.

பிரைவசி என்பது இந்த காலத்தில் யாருக்குமே கிடையாது போல என்று சோகமாய் முணுமுணுத்தவன் அடுத்த வாய் காபியைக் குடித்தான்..

வந்திருக்கும் செய்திகளில் எழுத்தைப் பாராட்டி சொல்லியிருக்கிறார்கள் என்றால் கூட அவன் ஏற்றுக் கொள்வான். ஆனால் அப்படி அத்தி பூத்தாற்போல ஏதாவது ஒன்றிரண்டு தான் இருக்கும். மற்றவை எல்லாம் ஹாய்.. ஹலோ.. என்ன பண்ணுறீங்க.. ப்ளீஸ் ஆன்ஸர் மீ.. ப்ளீஸ் ரிப்ளை மீ.. இந்தமாதிரியான உரையாடலை பார்க்க பார்க்க என்ன சொல்ல... ம்ஹூம்.. அவன் அதையும் அமைதியாக கடந்துவிடுவான்.

ஆயினும் சமீபகாலமாக வரும் ஒரு மெஸேஜ் மட்டும் அவனுக்கு வித்தியாசமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. எல்லாரும் அவனைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கையில் அந்த ஒரு மெஸேஜ் மட்டும் அவனது எழுத்துக்களைக் கொண்டாடி வந்துவிழ அந்த கணத்தில் எழுத்தாளனாக அவன் பெரும் மகிழ்ச்சி கொள்வான். அந்த மகிழ்ச்சிக்கு கூடுதலாக இன்னொரு காரணமும் இருக்கிறது. அவனது கதை நாயகியின் பெயர் தான் அதை அனுப்புவளின் பெயரும்.


அதனாலயோ என்னவோ அவன் அந்த பெண்ணின் செய்திகளை மட்டும் ஓர் ஆர்வத்துடன் பார்ப்பான். இதுவரைக்கும் எந்த மெஸேஜ்க்கும் அவன் ரிப்ளை தந்ததில்லை. ஆனாலும் கூட அவனுடைய அந்த எத்திக்ஸ்ஸை விட்டுவிட்டு இந்த மெஸேஜ்க்கு மட்டும் பதில் அனுப்ப சொல்லி மனம் விரும்பும். இருந்தாலும் கூட கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக கடக்கப் பழகியிருந்தான்.


அவனுக்கு இந்த மக்களின் மனநிலை இப்போது மாறியிருக்கிறதை நினைத்துக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. யாரோ ஒருவன் தான் நான்... என்னைப் பற்றி என்ன தெரியுமென்று அவர்கள் இப்படி மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களைப் போல நானிருப்பேனென எண்ணமா?.. ஆனால் உண்மை அதுவல்லவே... நான் யாரென என்னால் மட்டும் தானே தெளிவாகச் சொல்ல முடியும் என்று அவன் தீவிரமாக யோசிக்க 'ஷ்ஷ் கொஞ்சம் அடங்கு காபி தீர்ந்து போயிடுச்சு' என்று மூளை அவனைக் கொட்ட அவன் அந்த நினைவுகளைத் தள்ளி வைத்து விட்டான்.


மீண்டும் காஃபி குடிக்க வேண்டுமென கெஞ்சிய மூளைக்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டு மொபைலை மட்டும் எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

மொபைலில்
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
பாடலை மெல்லியதாய் ஒலிக்க விட்டவன் ரிப்பீட் மோடில் செட் செய்துவிட்டு ஓரமாய் வைக்க அந்த பாடல் இரவின் ஏகாந்தத்தை ஏகமாய் கூட்டிக் காண்பித்தது...


S. ஜானகியின் குரலை தனக்குள்ளயே அசைப்போட்டவன் அப்படியே அந்த வெற்றுத் தரையில் படுத்தே விட்டான்.


தனக்கு எதிரே வெகுதூரத்தில் இருந்து அவனையேப் பார்த்த அந்த நிலவின் முகத்தில் அவன் கதையின் நாயகியை ம்ஹூம் அவனின் நாயகியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். பாடலும் அந்த மதியின்முகமும் ஏனோ அவளே அவனுடன் இருப்பது போலான ஓர் உணர்வினை அள்ளிக் கொடுத்தது...


கண்களை மூடி அந்த நிலவின் வெளிச்சத்தினை அவன் அழகாய் தன் மேல் ஏந்திக் கொள்ள அவளே தன் மேல் படர்ந்திருப்பதாய் அவனுக்குள் ஓர் இதம். அந்த இதத்தின் தன்மையில் அவன் தன்னையே தொலைத்துக் கொண்டிருக்க அவனது மொபைல் வைப்பிரேட் ஆகி அவன் ஏகாந்தத்தைச் சிதைத்தது.. 'ச்சே நெட் ஆஃப் பண்ணாம' என்று தன்னையே திட்டிக் கொண்டு அவன் அதைப் பார்க்க அந்த பெண்ணிடம் இருந்து தான் மெஸேஜ் வந்திருந்தது..

சலிப்பு தட்டிய போதும் சலிக்காமல் அதை ஓபன் செய்து பார்த்தவன் கண்கள் அப்படியே விரிந்தது. டேய் வாசு இது எப்படி? எவ்வாறு சாத்தியம் என்று அவனுக்குள்ளே பயங்கர குழப்பம்.

அந்த வேளையில் கீழே இருந்து ஏதோ ஒரு சத்தம்... சட்டென்று வேகமாய் அவன் கீழே ஓடினான். அவன் அறையில் எல்லாமே வைத்தது போல் தான் இருந்தது. வீடு முழுவதும் அவன் கண்கள் சுழல எந்தவித வித்தியாசமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.

ஏதாவது அமானுஷ்யமாக இருக்குமா? என்று அவன் மனம் அவனிடம் கேள்வி எழுப்ப அதைத் தட்டியவன் அப்படி எல்லாம் இருக்காது என்று அடக்கினான். ஆனாலும் மொபைலுக்கு வந்திருக்கும் அந்த மெஸேஜ் ஏதோ ஓர் அமானுஷ்ய உணர்வைத் தாங்கியிருந்தது.
இதுவரை ரசித்துப் பார்த்த அந்த விசயம் புதிதாய் மர்மத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தியது.


சற்றுமுன்னர் தான் அவன் அதை லேப்டாப்பில் டைப் செய்து வைத்திருந்தான். காபி குடித்துவிட்டு மாடிக்குப் போன கேப்பில் அந்த கடைசி அத்தியாயத்தின் கடைசி வரிகள் அத்தனையும் வார்த்தை மாறாமல் அவன் மொபைலில் வந்து விழுகிறதென்றால் அவன் மனம் என்னவென்று நினைக்கும்.

இதற்கு என்ன செய்யலாம் என தலையை அழுந்தக் கோதியவன் முதன் முதலாக கட்டுப்பாட்டை உடைத்து அந்த பெண்ணுக்கு பதில் அனுப்பினான்.


தன் மொபைலில் வந்து விழுந்த அந்த செய்தியில் அவள் மனம் உலகையே வசப்படுத்திய உணர்வை ஓர் நொடியில் அடைந்திருந்தது. இந்த நொடிக்காக எத்தனை நாட்கள் அவள் உறங்காமல் கண்விழித்துக் காத்திருந்தாள் என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

அவன் எழுத்தின் மீது பித்து பிடித்து சித்தம் கலங்கி அது அவனையே பிடிக்குமளவிற்கு மாறிப் போனதில் அவள் பலநாட்கள் உறங்காமலே இருப்பாள். கிட்டத்தட்ட பையித்தியக்காரியின் நிலைதான் அவள் நிலையும்.
அவன் ஏதாவது பதில் அனுப்பிட மாட்டானா என்றே ஏங்கிய நொந்த உள்ளம் இன்றுதான் ஆறுதல் அடைந்திருக்கிறது.

இதெல்லாம் பெரிய எழுத்தாளனென சொல்லிக் கொண்டு திரியும் அவனுக்கு எங்கே புரியப் போகிறது.


அப்படிப் புரியும் போது இந்த பையித்தியக்காரி என்ன செய்யக் காத்திருக்கிறாளோ..!!!
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
306
115
43
Tanjur
அருமை மா..!
அடுத்த பார்ட் எப்போன்னு எதிர்பார்க்க வைக்கிறீங்க.
உங்கள் கதையில் இதுதான் என் முதல் வாசிப்பு
வாழ்த்துக்கள் மா..
 
Jan 3, 2023
76
66
18
Theni
அருமை மா..!
அடுத்த பார்ட் எப்போன்னு எதிர்பார்க்க வைக்கிறீங்க.
உங்கள் கதையில் இதுதான் என் முதல் வாசிப்பு
வாழ்த்துக்கள் மா..
மிக்க நன்றி ❤️
 
Jan 3, 2023
76
66
18
Theni
NicVasu writer. Avanoda nilavu eppo intro varum. Intha paithiya Kara rasigai avan vazhkai la enna panna pora. Avan type pannathu epdi ava anupina. Ithu nijamave amanushyam ah illa computer hack ah...
Nice start
மிக்க நன்றி ❤️.. அது அமானுஷ்யமா இல்லை ஆசாமியின் சதியா என்பது விரைவில் தெரிந்துவிடும்
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் ஸ்டார்ட் சகி ♥️♥️♥️♥️♥️♥️
அவளின் கண்ணீர்
வலியும் கொடுக்கும்
வலியும் போக்கும்
வலிநிவாரணி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உண்மையும் கூட 👍👍👍👍👍👍
 
Last edited:
Jan 3, 2023
76
66
18
Theni
சூப்பர் சூப்பர் ஸ்டார்ட் சகி ♥️♥️♥️♥️♥️♥️
அவளின் கண்ணீர்
வலியும் கொடுக்கும்
வலியும் போக்கும்
வலிநிவாரணி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உண்மையும் கூட 👍👍👍👍👍👍
மிக்க நன்றி ❤️