அத்தியாயம் 11
சிஸ்டம் முன் வந்து அமர்ந்தவன் அந்த உலகத்தினுள் தன்னைப் பொருத்திக் கொண்டான்.. சற்று முன் அவனுக்கிருந்த கலக்கங்கள் அனைத்தும் காற்றோடு கரைந்து போனது போலிருந்தது இருக்காதா பின்னே...!!! அது அவனுலகம்... அவனுக்கான உலகம் அல்லவா!!!
அங்கே நுழைகையில் அவன் மனதில் எழும் உணர்வுகளை அவனாலயே விளக்குவது சற்று கடினம். அங்கே நுழைந்தவனை வேகத்துடன் அணைத்துக் கொண்டாள் அவனது காதலி சுஜாதா(கற்பனை உருவம்)...
ஏக்கத்தில் தவித்த அவனிதயம் அந்த ஒற்றை அணைப்பில் உயிர் பெற்றெழுந்தது என்றே சொல்லலாம். சுஜீ என்று இறுகத் தழுவியன் அணைப்பில் இருந்த உணர்வுகள் அவளுக்குள்ளும் கடத்தப்பட்டது...
வாசுவென அவளும் சுஜீ...சுஜாதாயென அவனும் மாறி மாறி பிதற்றிக் கொண்டே அணைப்பின் இறுக்கத்தினைக் கூட்டினர்...
தேகம் உரசும் இந்நேரம்
தேடியது கிடைக்கும்
மகிழ்ச்சியில் இவனும்
தேடல் தொடங்கிய
மகிழ்ச்சியில் அவளும்
நெகிழ்ந்தே கிடக்க...
நேசம் கரைபுரண்டோடியது அவ்விடத்தில்...
சற்று நேரத்தில் மீண்டவன் அவளருகில் இருக்கும் உணர்வினை ஆழ்ந்து நுகர்ந்தபடி அடுத்த அத்தியாயத்தினை எழுதத் தொடங்கினான்.
எண்ணங்களின் ஆர்ப்பரிப்பெல்லாம் வார்த்தைப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்க அவன் அவனுடைய கதாநாயாகியின் காவல் அதிகாரி தோற்றத்தில் மனம் மயங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கரங்கள் கீபோர்டில் நடனமாடிக் கொண்டிருந்தது.
அந்த சத்தம் மயக்கத்திலிருந்த சுஜாதாவின் செவியை அடைந்ததும் அவள் மயக்கம் விலகி அவன் மீதான மயக்கம் அங்கே ஆக்ரமித்துக் கொண்டது.
அதே மயக்கத்துடன் அவள் வெளியே வந்து அவனிருந்த அறையின் வாசலில் நின்றாள்...
இவள் வந்து நின்றதையோ அவள் தன்னை ரசிப்பதையோ அவன் கவனிக்கவே இல்லை. அந்தளவிற்கு அவனின் உலகத்தில் ஆழப் புதைந்து போய்விட்டான்.
ஆனால் அவனுக்குள்ளயே புதைந்து போய்விட நினைத்தவளுக்குள் எப்போதும் போல் ஆசை வந்து ஒட்டிக் கொண்டது... அவனங்கே எழுதிக் கொண்டிருக்க அவனுக்காக இங்கே இவளும் எழுதினாள். ஆம் அவள் மனதினை காகிதமாக்கி அந்த மாயக்கண்ணனையே தூரிகையாய் மாற்றியெழுதத் தொடங்கினாள்....
அவன் விரல்பட்டு
எழுத்துக்களெல்லாம்
மோட்சமடைந்தே வந்துவிழ
இவளின் நிலைபற்றி
சொல்லவும் வேண்டுமா?...
சொல்லத்தான் இயலுமா?...
மயிலிறகாய் வருடுமவனின் நினைவுகள் சிலசமயத்தில் முள்ளாய் குத்துக்கிறது...
வலித்தாலும் தாங்குகிறேன்
குத்துவது
அவன் நினைவென்பதால் அல்ல...!!! குத்தினாலும் வருடும் நினைவு
அவனது என்பதால்...!!!
வெட்கம் விட்டு
ஆசைதனை உரைத்தும்
விலகி நிற்கிறான் அவன் வழிதனில்..
இதற்குமேல் எப்படி உரைப்பதென்றே எனக்குப் புரியவில்லை...!
எழுதுபவனென சாதாரணமாய்
சொல்லிக் கொண்டு
திரியுமிவனே
அதற்கொரு வழியை
சுட்டினால் தான் என்ன???
என்று அவள் பாட்டுக்கு எழுதி(புலம்பி)க் கொண்டிருக்க தன்னையே குத்துமந்த உணர்வில் வாசுதேவன் திரும்பினான்.
கண்களில் மயக்கத்துடன் அவள் பார்வை அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் ப்ச் என்று சலித்துக் கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
"VNA" என்று அவள் அழைக்க அவனோ திரும்பியும் பார்க்கவில்லை. "VNA" என்று மீண்டும் அழைத்தபடி அவள் அவனருகே சென்று நின்றாள்.
"என்ன பண்ணுறீங்க" என்று கேட்க "பார்த்தா தெரியலையா..." என்றான் அவன் கண்களை நிமிர்த்தாமல்.
"கதை எழுதுறீங்களா... " அவள் கேட்க "ம்ம்" மெலிதாய் முணங்கினான் அவன்.
"என்ன சீன்.. இப்போ" என்று அவள் ஆர்வமாய் வினவ அவன் மௌனமாகிவிட்டான்.
"ஏதாவது பேசுங்க VNA" என்று அவள் சொல்ல அப்போதும் அவனிடம் மௌனம் மட்டுமே...
"மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன்" என்றவள் சொல்ல "என்ன?" என்றான் இவன்.
"ம்ம்.. பாட்டு பாடுனேன்...
மௌனமாய் உன்னை நானே
மனப்பாடம் செய்கின்றேன்...
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கின்றேன்...
புத்தகம் நடுவே
புகைப்படம் நீ...
வாரத்தின் ஏழு நாள்
விடுமுறை நீ...
இன்னொரு வானமாய் இருப்போமா...
பூமியைத்தாண்டி நாம் பறப்போமா..
பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே... என்றவள் உருகி பாடிக் கொண்டிருக்க
"காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதேன்னு... பிணாத்திட்டு பாட்டுப் பாடிட்டு திரியாம வேற ஏதாவது வேலை இருந்தா போய் பார். டோண்ட் டிஸ்டர்ப் மீ... இட்ஸ் வெரி டேஞ்சரஸ்" என்றான் அவன்.
"அது எவ்வளவு பெரிய ஆபத்தா இருந்தாலும் நான் சந்திக்க தயார்" என்றாள் அவள் திமிராக....
"ஜஸ்ட் கெட் அவுட்..." என்று அதைக் கேட்ட மாத்திரத்தில் கத்தியவனின் குரலில் "எங்க போகச் சொல்லுற உன்னை விட்டு. என்னால போக முடியாதுன்னு தானே நான் சொல்லிட்டே இருக்கேன் அதைக் கேக்கவே மாட்டுற. ஏன் நான் சொல்லுறது எதுவும் உன் காதுல விழலையா என்ன?... நான் தான் காதல்ல விழுந்த மயக்கத்துல சில நேரம் உலகின் ஓசையேதும் கேட்காத ஒரு நிலையில் சுத்திட்டு இருக்கேன். ஆனா நீ நல்லாத்தானே இருக்க!!! எந்நிலையை புரிஞ்சுக்குறது உன்னால ஈசியா முடியும் தானே!. அப்பறமும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்குற. உன்னோட பிடிவாதத்தினை விட என்னோட பிடித்தத்துக்கு வேல்யூ ஜாஸ்தி. சோ நீ என்னை மாத்துற முயற்சியைக் கைவிட்டுட்டு உன்னை எப்படி மாத்துக்கிடணும்னு யோசி..." என்றாள் நீளமாய்.
"ஏன் நீ இப்படி இருக்க..."
"பிகாஸ் ஐ லவ் யூ..."
"ஆனா ஐ ஹேட் யூ..."
"தட்ஸ் நாட் குட் VNA.. உன்னை என் பக்கத்துல கொண்டு வரத் தெரிஞ்ச எனக்கு உன்னைக் காதலிக்க வைக்குறது பெரிய ப்ராப்ளமா இருக்கு தான். ஆனாலும் காதலிக்க வைப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
"மண்ணாங்கட்டி.. தயவுசெய்து போறீயா ப்ளீஸ்... என்னோட மூடே ஸ்பாயில் ஆகிடுச்சு. என்னை எழுதவிடாம ஏன் இப்படி பண்ணுற. உன்னை சப்பு சப்புன்னு இறுக்கணும்னு புத்தி சொல்லுது. பட் வேண்டாம்னு விடுறேன். ஓழுங்கா போய்டு" என்றான் வாசு.
"அடி VNA... உனக்கந்த உரிமை இருக்கிறது. என் மனதை ஆள்பவன் நீ என்பதால் என் தேகத்தினை..." அவளை நிறுத்தியவன் "ஊப்ப்... எனஃப் ப்ளீஸ்... மூச்சு முட்டுது" என்றான் சட்டென்று.
அவன் தலையை அழுந்த பிடித்துக் கொண்டதை அறிந்தவள் "முழுதாய் ஒரு நாளாகவில்லை. அதற்குள் என் தொந்தரவினைத் தாங்க இயலாது தவிக்கிறாய்.. அப்படியென்றால் முழுதாய் எத்தனை நாட்கள் நான் எப்படியெல்லாம் தவித்திருப்பேன்" என்றதும்
"இதையே மறுபடியும் மறுபடியும் பேசாத. நீ பண்ணுறது தப்புன்னு உனக்குப் புரிய மாட்டேங்குது. அதுதான் இங்க பிரச்சனையே..." என்றான் வாசு.
"என்ன தப்பு பண்ணுறாங்க. ஏன் இதை தப்புன்னு சொல்லுற. எனக்கு உன்னைப் பிடிச்சுருக்குன்னு தான் தைரியமா சொல்லுறேன். ஆனா நீ அதை ஏத்துக்க மாட்டுற . ஆக்சுவலா நீதான் தப்பு பண்ணுற. நான் சரியாத்தான் பண்ணிட்டு இருக்கேன். காதல் ஒன்னும் தப்பான விசயம் கிடையாது. அது உனக்கும் தெரியும்"
"ஓ காட்... நான் வேற பொண்ணை விரும்புறேன்னு சொல்லுறேன். உனக்கது புரியலையா... புரிஞ்சுக்கோ...என்னால அவளைத் தவிர வேற யாரையும் என் மனசுக்குள்ள அலோவ் பண்ண முடியாது" என்று அவன் கத்திப் பேச அதில் தெரிந்த ஆத்திரத்தில் அமைதியானாள் அவள். அந்த அமைதி ஏதோ ஒரு புயலை அடக்கியதாகவே அவனுக்குப் புலப்பட்டது.
"உங்களுக்கு சூர்ப்பனகை தெரியுமா?"
"ம்ம் தெரியும்"
"அவ என்ன பண்ணா தெரியுமா? ராமன் கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சும் அவன்கிட்ட போய் நின்னா. உன்னை எனக்குப் பிடிச்சுருக்குன்னு.. ஆக்சுவலா அவளுக்கு அப்போ அது தெரியாது. அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு. ஆனாலும் அவ தைரியமா கெத்தா அவன் முன்னாடி நின்னு பேசுனா. பட் அவளுக்கு கிடைத்தது நிராகரிப்பு..." என்றவள் பேசப்பேச அவளது மாறுபட்ட கண்ணோட்டம் கண்டு அவனுக்கு ஆச்சர்யம் வந்து அப்பிக் கொண்டது...
"ஏற்கனவே நாம பேசுனதுதான் VNA. அவ்வளவு சீக்கிரம் மறந்துருக்க மாட்டீங்க தான்.. இருந்தும் இன்னொரு தடவை சொல்லுறேன்... இங்க பொண்ணுங்க தைரியமா வந்து அவங்க விருப்பத்தை சொன்னா எதிர்ல இருக்குறவங்க முதல்ல சொல்லுறது என்னென்னு தெரியுமா?...
கொஞ்சமாவது அடக்கத்தோடு இரு..
ஒழுங்கா இரு...
கற்பை கண்ணு மாதிரி மதி...
பண்ணு மாதிரி மிதி.
இதெல்லாம் குடும்ப பொண்ணுங்க பண்ணுற காரியமே இல்லை. இல்லவே இல்லை.... குடும்ப பொண்ணுங்க கிட்ட தயக்கம் தான் இருக்கணும். தயக்கமும் தவிப்புமுமாய் இருக்குறதைத்தான் ஆண்கள் பெண்கள்கிட்ட எதிர்பார்ப்பாங்க... இப்படி அப்படின்னு ஏகப்பட்ட விசயங்கள்...
சரி நாங்களும் நீங்க எதிர்பார்க்குற மாதிரியே நடக்குறோம்.. அப்போ நீங்க எல்லாரும் நாங்க எதிர்பார்க்குற மாதிரி நடந்துக்குவீங்களா?.. சொல்லுங்க VNA. நான் உங்களை பாய்ண்ட் அவுட் பண்ணி பேசலை. நீங்க இந்த வரையறைக்குள்ள வரமாட்டீங்க. பட் எனக்கு ரொம்ப காலமாவே மனசுக்குள்ள உறுத்துது.
கற்பு என்ற வரையறையை ஏன் பொண்ணுங்களுக்கு மட்டும் வைக்குறாங்க.
சீதையைப் பார்த்துட்டு வந்து அனுமன் ராமன் கிட்ட என்ன சொன்னான் தெரியுமா...?
கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்... அதாவது இங்க சீதை இன்னுமே கற்போட தான் இருக்கா அப்படின்னு ராமனுக்கு கன்வே பண்ணுறான். இதையே சீதை கிட்டயும் கன்வே பண்ணியிருக்கலாமே அனுமன்... ஏன் பண்ணலை..??? கேட்டா வர்ற ஒரே பதில் அவன் ஏகபத்தினி விரதன். அவனைப் போய் சந்தேகப் படலாமா...அப்படின்னு தான்.
அப்போ ஏகபத்தினி விரதனோட மனைவியும் அப்படித்தானே இருப்பான்னு ஏன் ஸ்ட்ராங்க நம்பலை" என்று அவள் கேட்க சத்தியமாய் வாசு இந்த அளவிற்கான அறிவின் விசாலத்தினை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ sapiophile effect அதான் புலம்பிட்டு இருக்கான்னு தான் நினைத்திருந்தான். ஆனால் இத்தகைய தெளிவு ம்ஹூம் வாய்ப்பே இல்லை..
அபாரம் ஆச்சர்யமென அவன் நினைத்துக் கொண்டே செல்ல... அவன் நினைப்பை அடுத்து அவள் பேசிய வார்த்தைகள் தடை செய்தது.
"பசங்க லவ் யூ சொன்னா வெட்கப்பட்டுட்டு அதை ஏத்துக்கிட்டு அதே வெட்கத்தோட இருக்குற பொண்ணுங்க தான் நல்ல பொண்ணுங்கன்னா ஐம் சாரி நான் அந்த கேட்டகிரியில வர மாட்டேன்...நான் இப்படித்தான். எனக்கு என் மனசுக்குள்ள இருக்குறதை தைரியமா வெளிய சொல்லணும். மனசுக்குள்ளயே என் விருப்பத்தை நான் ஏன் பூட்டி வைக்கணும். அந்த விருப்பம் யார் பேர்ல இருக்கோ அவன்கிட்ட சொல்லக் கூட தைரியம் இல்லாதவ நானில்லை. அவனைக் கடத்திட்டு வந்து காதலிச்சு அவனையே கைப்பிடிச்சு அவன் கூடவே வாழணும்னு நினைக்குறவ தான் இந்த சுஜாதா. நான் வேற மாதிரி. என்னைப் புரிஞ்சுக்குறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் உங்களால ஈசியா புரிஞ்சுக்க முடியும்...என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
"ஏதோ நாம பெண்களை மதிக்காத மாதிரி ஒட்டுமொத்த கோபத்தையும் நம்மகிட்ட கொட்டிட்டு போறா... ம்ம் பரவாயில்லை.. நல்லா பேசுறா... ஆனா ரொம்ப பேசுறா ...அதுதான் நமக்கு பிரச்சனை" என்றவனின் இதழ்கள் அநியாயத்திற்கு அழகாய் விரிந்தது....
அவனின் புன்னகையை அந்த பெண்ணவள் கண்டிருந்தால்????அப்படியே பிய்த்து தின்றிருந்தாலும் தின்றிருப்பாள் ராட்சஸி!!!!