அத்தியாயம் 13
"மேம் இந்த ரிப்போர்ட் பாருங்க மேம். அந்த நந்தினியோட ஐடியில இருந்த அவளோட கைரேகைக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம். அப்படின்னா நீங்க நினைக்குற மாதிரி இந்த மர்டரை வேற யாரோ தான் பண்ணியிருக்காங்க" என்று விஜய் சொல்ல "அதைத்தான் நான் அப்பவே சொன்னேன்ல விஜய்" என்றவளின் முகம் சுருங்க அதைக் கண்டவன் "என்னாச்சு மேம்" என்றான்.
"இல்லை ஒன்னுமில்லை" என்று அவள் அவசரமாக மறுக்க அதில் அவன் முகமும் மாறியது.
மேம் இப்படி இருந்ததே இல்லையே. அப்படியிருக்கும் போது இந்த மாற்றம் அவனுக்குள் ஏதோவொன்றை தோற்றுவித்தது.
"என்ன விஜய் ஏதாவது சொல்லனுமா" என்று அவன் முக மாற்றத்தினை உணர்ந்தவள் கேட்க "இல்லை.. இல்லை மேம்" என்றவன் மறுக்க "நீங்க கிளம்புங்க நான் கூப்பிடுறேன்" என்று அவள் சொல்லிவிட்டு தன் மொபைலை எடுத்துக் கொள்ள அவனோ அதையும் பார்த்துக் கொண்டே சென்றான்.
சு...தாவின் மனம் அந்த கவிதையிலே தொக்கி நின்றது. இதுக்கும் வாசுவுக்கும் நிச்சயம் சம்பந்தமில்லை. அப்படின்னா இதை எழுதுனது யாரு?... அவரோட எழுத்துக்களோடு இதையும் கலந்து எழுத யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கும். அப்படியெனில் நான் நினைப்பது சரிதானா... !!!!
அவள் அப்படியென்ன தான் நினைக்கிறாள்???? ம்ம் அவளே சொல்லுவாள்...
---------------------------------------------
"VNA எழுதி முடிச்சுட்டீங்களா"
"இல்லை"
"ஏன் VNA?"
"தோணலை எழுதலை?"
"உங்களுக்கா நம்பிட்டேன்"
"ஏன் நான் என்ன பெரிய இவனா. எனக்கும் சிலநேரம் மூளை வேலை செய்யாது. எழுத சுத்தமா வரவும் வராது. அப்படி இருக்கும் போது என்ன முயற்சி பண்ணாலும் என்னால முடியாது சுஜாதா... அதுவும் இல்லாம எதையுமே எனக்குப் பிடிக்காம நான் எழுத மாட்டேன். என்னோட எழுத்துக்களுக்கு நான் தான் முதல் ரசிகன். எழுதி முடிச்சுட்டு நான் வாசிச்சுப் பார்ப்பேன். அப்பவே என்னோட மைண்ட் சொல்லிடும் மயிறு மாதிரி எழுதியிருக்கன்னு. நிறைய விசயங்கள் இந்த மாதிரியே அடுத்து எழுதப் பிடிக்காம கிடப்பில் கிடக்கு"
"ஓ.. அப்படின்னா இப்போ மூளை வேலை செய்யாமல் இருக்குறதுக்கு நான்தான் காரணமா" என்று அவள் சற்றே சிரிப்புடன் கேட்க "உண்மைதான் சுஜாதா" என்றான் அவன் பட்டென்று.
"இதை கேக்குறதுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா?. ஏன் அப்படி... இதுக்கும் காரணம் ஏதாவது வச்சுருப்பீங்களே அதையும் சொல்லுங்க. கேக்கலாம்" என்று அவள் சொல்லவும் அவனிடம் சற்று நேரம் அமைதி நிலவியது.
பின் "சுஜாதா" என அவன் விளிக்க "சொல்லுங்க" என்றாள் அவள் ஆர்வத்துடன்.
அவன் இதழிலிருந்து விழும் அந்த முத்தங்கள் இன்னும் அவளுக்கு முழுமையாய் கிடைக்கவில்லை. ஆயினும் இந்த வார்த்தை முத்துக்கள்... அதுவும் அவளுக்காக அவன் உதிர்க்க இருக்கிறான்.
அப்படியெனில் அது அம்முத்தத்தினை விட மோகம் தரும் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை...
ஆனால் அவனோ அவள் மனம் படும் பாட்டினை உணராது "ஒன்னுமில்ல" என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்ப வேகமாய் அவன் கையைப் பிடித்து அவள் இழுத்து நிறுத்தினாள்.
அந்த தொடுகை அவனை சற்று அசைத்துப் பார்க்க மெதுவாய் மிக மெதுவாய் அவன் திரும்பி அவள் கரத்தினைப் பார்வையால் வருடினான்.
மெதுவாய் அவன் பார்வை அவள் கரத்தினையையே ஆக்ரமிக்க அந்த பார்வையின் வட்டத்தினுள் வந்து விழுந்தது அவளது கையில் போட்டிருந்த டாட்டூ.
அந்த டாட்டூவினை பார்த்தவன் வேகமாய் கரத்தினை பிடித்திழுத்து முகத்தினருகே கொண்டு சென்றான்.
"என்ன பார்க்குறீங்க VNA" என்று அவள் வெகு சாதாரணமாய் கேட்க "இல்லை இந்த டாட்டூ வித்தியாசமா இருக்கே. உண்மையிலே இதுக்கு அர்த்தம் தெரியுமா?. தெரிஞ்சுதான் இதைப் போட்டுருக்கயா?" என்றான்.
"எனக்குத் தெரியுறது இருக்கட்டும் உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியும் படிச்சுருக்கேன். இது வந்து Fertility மீன் பண்ணும்.. நீ எதை நினைச்சு இப்படி போட்டன்னு புரியலை. ஆனா நீ நடந்துக்குறதுக்கும் இதுக்கும்.... ஓ காட்... நீ உன்னை ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிற சுஜாதா. இதெல்லாம் வேண்டாமே. உன் அன்பு இந்த பிரபஞ்சம் மாதிரி முடிவேயில்லாதது. அதற்கு வேறு வர்ணம் பூசி ஏன் உன்னை நீயே கருப்பாக்கிற. நம்ம இரண்டு பேருக்கும் இடையில இருக்குற இடைவெளியை தாண்டி நீ வரப் பார்க்குற. அதுதான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது. ப்ளீஸ் நீ அந்தப்பக்கமே நில்லு சுஜாதா.. அதுதான் எல்லாருக்கும் நல்லது... என்று அவன் எப்போதும் போல் அறிவுறுத்த அவளோ அதைத் தூசி போல் தட்டிவிட்டு...
"Snake அதை மட்டும் குறிக்கலை VNA. அது ரொம்ப பவர்புல்... அது எப்பவும் ஒதுங்கிதான் இருக்கும் யாரும் ஹர்ட் பண்ணாத வரை. ஹர்ட் பண்ண பிறகுதான் அது அதோட வேலையை காட்டும். அண்ட் இன்னொரு விசயம் பெர்டிலிட்டி தப்பான விசயமாயிருந்தா இந்த உலகத்தோட இயக்கம் அப்படியே எப்பவோ நின்னு போயிருக்கும். இதுயெல்லாத்தையும் விட அன்புக்கு நான் வேறு வர்ணம் பூசலை. ஏனென்றால் என்னோட அன்பு எப்பவுமே வண்ணமயமானது தான் VNA. அது பார்க்குற உங்களுக்குத்தான் புரியாது. ஏன்னா நீங்கதான் கண்ணுல கருப்பு கண்ணாடி போட்டுட்டு சுத்திட்டு இருக்கீங்களே. அதைக் கழட்டி வச்சுட்டுப் பார்த்தா என்னோட அன்பு எப்படிப்பட்டதுன்னு உங்களுக்கே புரியும். சரி நான் ஒன்னு கேக்குறேன்... ஏன் என்னோட பிரியத்தை அன்பு என்ற வார்த்தைக்குள்ள மட்டும் அடக்கப் பார்க்குறீங்க?? அதான் உங்களுக்கு சேஃப் அப்படிங்கிறதாலயா???. காதல், காமம், பாசம், நேசம் எல்லாத்துக்குமே அன்பு தான் அடிப்படை. அந்த அன்பை அன்பா மட்டும் பார்த்து ஒதுங்கி என்னால நிச்சயமாக போகமுடியாது. என் காதலோட எடை நாளுக்கு நாள் கூடிக்கிட்ட போகுது. அதோட கணத்தினை என்னால தாங்க முடியலை. அதுக்காக அதை இறக்கி வைக்கவும் முடியலை. ஆனா நீங்க என்னென்னா ரொம்ப ஈசியா விலகியே நில்லு அப்படின்னு விலக்கி வைக்குறீங்க. என்னாச்சு VNA. இந்த காதல் உங்களுக்கு புரியவே இல்லையா...? இல்லை நடிக்குறீங்களா...?
உன்னெழுத்தோடு ஒட்டிக்கொண்டு
உனையிறுகப் பற்றிக்கொண்டு
பிறவிக் கடலை நீந்த
ஆசைதானெக்கு..!
ஆக்ரோசமாயடிக்கும்
அலைகூட மனங்கொண்ட
காதல்தனை
கரைத்துவிட முடியாது
போராட
உன்னெழுத்தின் தீண்டல் மட்டும் எப்படித்தான் எனையே
கரைத்து காணாமல்
போ(உரு)க வைக்கிறதோ..!!!
இதன் மர்மம் தான் யாதென்று
விளங்காது விழிக்கிறேன்
இன்று வரையில்...!!!
படித்ததும் கடந்து விடுவோமென
எண்ணியே நானுன்னை படிக்க
இப்படிக் கள்ளத்தனமாய்
எனையே நீ கடத்திச்சென்று
மாயங்களனைத்தும் செய்யும்
மாயக்கண்ணனாய் மயக்கும்
புன்னகையொன்றை சிந்த
காரணம் புரியாமல்
கவனம் சிதறியே
காதல் கொள்கிறேன்
நான் உன்னில்..!!!
என்று அவள் வாசுவின் பையித்தியக்காரியாய் மாறி உளறத் தொடங்க "நீ எழுதுறதுல எங்கயோ இருக்க... சீரியஸ்லி.. எனக்கும் மேல" என்றான் அவன் மனம் வருடும் குரலில்.
அவன் உணர்ச்சி வசப்பட்டிருந்தது அவளுக்கும் புரிந்தது. இருந்தும் அவள் எதிர்பார்ப்பது இதல்லவே...???
அதனால் "எனக்கு உங்களை விட மேல இருக்கணும்னு எண்ணமெல்லாம் சுத்தமாய் இல்லை. உங்க மனசுல நான் இருக்கனும் அது போதும். அது மட்டும் போதும்" என்றாள் உயிர் உருகும் குரலில்.
"அங்கயும் இருப்ப சுஜாதா" என்றான் அவன் சட்டென்று
"ரியலி" என்று கண்கள் மின்ன அவள் கேட்க "ம்ம் ஆனா நீ நினைக்குற மாதிரியான..." என்று அவன் அவளின் ஆர்வம் கண்டு தயங்க "இல்லை நீங்க சொல்லவே வேண்டாம். எனக்குப் புரியுது. VNA just Listen.... உங்க மனசுல எழுதுறவளா நான் இருக்க ஆசைப்படல. உனையே என் தேகம் கொண்டு எழுதிட தான் ஆசை கொள்கிறேன்... உன்னெழுத்தினை மட்டுமல்லாது உனையே படிக்கவும் நினைக்கிறேன்... " இன்னும் என்னென்ன சொல்ல வந்தாளோ
அதற்குள் வாசு "இப்படி இருக்காத சுஜாதா. இது எனக்குத்தான் கஷ்டமா இருக்கு. எனக்குன்னு சில எத்திக்ஸ் இருக்கு. சில விசயங்களை அதைத் தாண்டி என்னால யோசிக்க முடியலை. ப்ளீஸ் என்னை வற்புறுத்தாத.." என்று சொல்லி அவள் பேச்சினை தடுத்தான்.
"உங்களுக்கு இருக்குற மாதிரி எனக்கும் நிறைய எத்திக்ஸ் இருக்கு. எனக்குன்னு ஓர் உலகம். அதுல நான் மட்டும் தான் ராணி. நான் நினைக்குறது தான் நடக்கும். நடக்க வைப்பேன். எனக்கு இந்த ரூல்ஸ் படி வாழ்றதெல்லாம் பிடிக்காது. மனசுக்குப் பிடிச்சதை செய்ய முடியலைன்னா அப்பறமென்ன அது வாழ்க்கை அப்படின்னு யோசிக்குறவ நான். அதனால தான் என்னால என்னோட விருப்பத்தை விரசமே இல்லாம உங்ககிட்ட பேச முடியுது... ஆனா நீங்கதான் எத்திக்ஸ் அப்படின்னு சொல்லி உங்களையே ஏமாத்திட்டு இருக்கீங்க... கொஞ்சமாவது ப்ராக்டிக்கலா இருக்க பாருங்க VNA..."
"அம்மா தாயே உன்கிட்ட பேசுனா நீ மனசை மாத்திடுவ. என்னை ஆளை விடு" என்று அவன் வேகமாய் கும்பிட்டுவிட்டு வெளியேறிவிட்டான்.
'போங்க VNA...எத்தனை நாள் தான் என்கிட்ட இருந்து ஓடி ஒளிவீங்கன்னு நானும் பார்க்குறேன். இருந்தாலும் உங்க மனசு மாறிடும்னு சொன்னீங்க பாத்தீங்களா.. அந்த நேர்மை புடிச்சுருக்கு' என்று அவன் சென்ற திக்கினையே பார்த்தபடி அவளுக்குள்ளயே சொல்லிக் கொண்டாள்.
'இவ மட்டும் எப்படித்தான் இப்படி இருக்காளோ. இவளைப் பார்த்தாலே பயமா இருக்கு' என்று புலம்பியவன்
'இங்க இருந்து தப்பிச்சு போகணும். இவகிட்ட இருக்குறவரைக்கும் நமக்கு ஆபத்துதான்' என்று சிந்திக்க அந்நேரத்தில் அவன் கழுத்தில் வலியெடுத்தது.
"சுஜாதா... வேண்.....டாம்...சு....தா...." என அவன் வலியில் முகம் சுருக்க "என்னை விட்டு நீங்க போகணும்னு நினைச்சாலே நான் இப்படித்தான் பண்ணுவேன் VNA. நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம். நான் மயங்கியிருக்க மாதிரி நீங்களும் மயங்கியே இருங்க... அப்போத்தான் உங்ககூட நான் நெருக்கமாக இருக்க முடியும்" என்று அவள் சொல்லியபடி அவனைத் தாங்கிக் கொண்டாள்.
மெதுவாய் அவனை படுக்கையில் கிடத்தியவள் அவனருகே நெருங்கி படுத்து அவனுக்கே நெருக்கமாக மாறி அவன் கரத்தினை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.
உள்ளுக்குள் பலவித ஆசைகள் ஊற்றெடுக்க அவனை வெறித்தனமாக அணைத்து அவனை ஆசைதீர படுக்கையில் காதலிக்க வேண்டுமென அவளது பெண்மை கேட்டது.
ஆயினும் நினைவிழந்த அவன் குழந்தைமான முகம் ஒருவித போதையினை அவளுக்கு தந்திருக்க அதில் காதலென்னும் உணர்வினை விட தாய்மையெனும் உணர்வே மேலோங்கி இருந்தது.
அன்னையிழந்த குழந்தையென அவன்பால் அவளுக்கு அதீத அன்பு சுரந்தது. உடனே தன் விரல்களால் அவன் தலையை மென்மையாய் மிக மென்மையாய் வருடத் தொடங்கினாள்.
வாசு என அழைத்த அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.. ஆனால் ஆழ்ந்த மயக்கத்திலிருந்த அவனுக்கு அது கேட்டது. உடனே "அம்மா" என்றே அழைத்தான் அவன் அம்மயக்கத்திலும் சிறு முணங்கலாய்.
அவன் கரங்கள் அவள் மேல் படர அந்த ஸ்பரிசத்தில் அவளுக்கு அவனின் மீதான மயக்கம் எப்போதும் போல் அதிகமானது.
"எப்பவும் சொல்லுறதையே தான் இப்பவும் சொல்லுறேன் VNA. என்னை விட்டு விலகுறதுக்கு நீயொரு அடி எடுத்துவச்சா. உன்னை நெருங்கிவர நான் பத்தடி எடுத்து வைப்பேன். என்னை ரொம்ப சோதிக்காத VNA. உன்னோட அணைப்பின் இறுக்கத்தில் என்னையே தொலைத்து உன்னையே எனக்குள் நிறைத்து... ஷ்ஷ் ரொம்ப பேசுறேனோ... என்ன செய்ய என்னோட ஆசைகள் எல்லையில்லாதது... அதுக்கு அடக்கம் நாணமென எந்த வரைமுறையும் இல்லை. அது உனக்குத் தெளிவாகத் தெரியும் போது உன்னை நான் இழுத்துப் பிடித்து வைக்கத் தேவையே இல்லை. நீயே என்னை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்வாய் நிரந்தரமாக. அந்நாளுக்காய் நான் காத்திருக்கிறேன் கடைசி வரையில்... ஆனால் கடைசிவரைக்கும் காக்க வைக்க மாட்டாயென்ற நம்பிக்கையில்...
அவளது நம்பிக்கை ஜெயிக்குமா???