• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் -16

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 16

அனைத்துப் பிழையையும் சரிசெய்த சுஜாதா அதனை சேமித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள்.

படுத்திருந்த அவனருகே வந்தவள் அவன் முகத்தினை எப்போதும் போல ஆசையாய் பார்க்கத்தொடங்கினாள்.

அவளுக்கு கதையில் வாசு சுஜாதாவுக்கு கொடுத்த இதழ் முத்தமே நினைவுக்கு வந்து இம்சை செய்தது...


"இவனோடு ஒட்டிக் கொண்டு இடையை கட்டிக் கொண்டு இதழோடு இதழ்நுழைத்து இன்பமதனை அனுபவிக்க நான் நினைத்திருக்க
இதெல்லாம் கனவாய் மட்டுமே
இரவுதோறும் தோன்றி இம்சிக்கிறது.... எழுத்தினை காதலிக்கும் உன் காதல் எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டுமென நான் நினைக்க
நீயோ எட்டியே நிற்கிறாய்...ஏனிந்த விலகல் கொஞ்சம் ஒட்டி வந்தால் தானென்ன... குறைந்து போய்விடுவாயா?

உன் எழுத்தின் வாசமதனை நான் உணர்ந்திருக்கிறேன்... உன் வாசமதனை கற்பனையில் கண்டு களித்திருக்கிறேன். அந்த கற்பனை நிஜமாய் மாற வேண்டும்..

உன் வாசத்தினை நாசி நுகர வேண்டும். உன்னை என் தேகம் உணர வேண்டும்... புத்தியும் புத்தியும் கலந்தது போல் மெய்யும் மெய்யும் பொய்யின்றி கலந்து உனக்குள் நானும் எனக்குள் நீயும் உருகி உறைந்து கரைந்து காணாமல் மாயமாய் மறைந்துபோக வேண்டும்... அது நடக்குமென நான் உன்னையே பார்த்திருக்க வலிக்க வலிக்க வலி தந்து வேறு வழியில் விலகி செல்கிறாய். அப்படியென்ன உனக்கு பிடிவாதம்.

என் மனம்படும் பாட்டினை உணர்ந்து கொள்ள நீ நானாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் நீயாய் இருந்திருந்தால் இப்படியொருத்தி உருகுவதைப் பார்த்து சும்மா இருந்திருக்க மாட்டேன். அவளை கும்பிட்டு அவள் பாதத்தினில் பள்ளி கொண்டிருப்பேன்... என்ன செய்ய நான் பெண்ணாய் நீ ஆணாய் பிறந்துவிட்டாயே..." என்று அவள் மெதுவாய் பேசிக்கொண்டிருக்க வாசுவோ மயக்கத்திலே "சுஜாதா எங்க இருக்க. என்கிட்டவா" என்று காற்றில் கைநீட்டி துழாவிக் கொண்டிருந்தான்.


அவன் கரத்தினுள் அவள் கரத்தினை வைக்க அவன் அவளை இழுத்துக் கொண்டு அணைத்துக் கொண்டான்.


அந்த நெருக்கம் அவளுக்குள் தீ முட்ட அவளோ அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள். அவன் மயக்கத்திலே அவள் மேல் புரள அவளோ அவனை அணைத்தபடியே அப்படியே கிடந்தாள்.

அவளுக்குள் இன்பம் ஊற்றெடுக்க அவள் பெண்மையெல்லாம் வழிந்துருக தொடங்கியது. அந்நேரம் அவன் "சுஜீ எனக்கு நீ மட்டும் தான் வேண்டும். உன்னோடு கனவுல இருக்குற இந்த சந்தோசமே போதும். வேறெதுவும் வேண்டாம்" என்று இறுக்கிக் கொண்டே பிதற்ற அதுவரை இருந்த இன்பமான மனநிலை முற்றிலும் உடைந்துவிழ அவள் அவனைத் தள்ளிவிட்டு எழுந்து போய்விட்டாள்.


நிழலோடு வாழ்கிறாய்
நிஜமதனை தள்ளி வைக்கிறாய்...
விசித்திரமானவன்தான்
இருந்தும்,
உன்னைத் தானே பிடிக்கிறதெனக்கு....!!!


படித்ததும்
கடந்துவிடுவதைப் போல
பலர் எழுத
நீயோ எழுத்தோடு ஒட்ட
வைத்தெழுதி உன்னையே
காதலிக்கவும் செய்துவிட்டாய்...
!


இம்மயக்கம்
உன்னெழுத்தாலா?
உன் பெயராலா..
?
உன் உருவத்தாலா...?
உன் உள்ளத்தாலா?
உன் கரம்வழியும் தமிழாலா...
?
எதனாலென
விளக்கிச் சொல்ல
யுகம் கோடி
ஆனாலுங் கூட போதாதெனக்கு...!!!


உருவங்கண்டு பெயர்கண்டு
காதல் கொள்ள
சாதாரணமானவளல்ல இவள்..!
உன்னெழுத்தின் எழுச்சிக்கண்டு
உன்னுள்ளத் தூய்மைகண்டு
காதல் கொள்ளும்
இறைவி...!

எல்லாவற்றையும்
புரிந்தெழுதுமுனக்கு
இதுமட்டும் ஏனோ புரியவில்லை.
உண்மையிலே புரியவில்லையா...
அதுவும்,
எனக்கு புரியவில்லை....?


ஒருநாள் உனக்கிது புரியும்...
அன்று உன்னருகிலே
நானிருக்க வேண்டும்
அது மட்டும் போதுமெனக்கு....
நடக்குமா...?


என்றவள் தனக்குள்ளயே கேட்டுக் கொண்டு நடக்கும் என்று அழுத்தமாக பதிலும் சொல்லிக் கொண்டாள்.

ஏனோ அவளுக்கு சத்தமாக அழ வேண்டும் போல் இருந்தது.
இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் அவன் இன்னமும் சுஜாதா என அவளுக்காய் உருகுகையில் அந்த பெயரையே நான் அடியோடு வெறுக்கிறேன்... என்று நினைத்துக் கொண்டே அவன் நினைவுகளில் வெந்து கொண்டிருந்தவளை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேண்டி அவள் கைப்பேசி இசைத்தது.

எடுத்துப் பேசியவள் வெகுநேரம் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் முகம் மிகவும் தீவிரமாக இருந்தது.

-------------------------------------------

உறங்கும் தனது ரவுடியினை பார்த்தபடியே "ஆமா ஆனா அவ ரொம்ப பீல் பண்ணுறா... எனக்குமே என்ன பண்ணுறதுன்னு தெரியலை. அதான் டாக்டரான உன்கிட்ட கேட்கலாம்னு... போன் பண்ணேன்..." என்று பேசினாள் சு...தா.

"....."

"இப்பவா அவ தூங்குறா. பட் ரொம்ப நாளா தூங்கவே இல்லை போல. அவளோட தம்பிகிட்ட கேட்டதுக்கு அவன் வேற மாதிரி சொன்னான். அவ திடீர் திடீர்னு வீட்டை விட்டு போயிடுவா போல... இரண்டு தடவை தூக்குப் போட போயிட்டாளாம். அவங்க ஹஸ்பெண்ட் கிட்ட ரொம்ப வயலண்ட்டா பிஹேவ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டே இருக்காளாம். இவளை எப்படி சமாளிக்குறதுன்னே அவருக்கும் புரியலையாம்"

".........."

"கவுன்சிலிங்கா... ம்ம் கூட்டிட்டு வர்றேன். அவளை கொஞ்சம் மனசை மாத்திவிடு. அவளை அப்படி என்னால பார்க்க முடியலை. நான் வைக்கிறேன்" என்று சு...தா சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

அவள் இவளிடம் பாரத்தினை இறக்கி வைத்துவிட்டு உறங்கிப் போயிருக்க இவள் மட்டும் உறங்காது அவ்விரவினை மனக்கலக்கத்துடன் கடந்துக் கொண்டிருந்தாள்.

அவ்வேளையில் பாப்பாவென அலறியபடி அவள் எழுந்தமர "ஏய் ரவுடி பாப்பா பத்திரமா இருக்கு நீ தூங்கு" என்று ஆறுதல் சொல்லி அவளை அமைதியாக மீண்டும் உறங்க வைத்தாள் இவள்.

-------------------------------------


மறுநாள் காலை மயக்கத்தில் இருந்தவன் கஷ்டப்பட்டு கண்களைத் திறக்க அவனால் முடியவில்லை.

மயக்கத்தின் மிச்சம் இன்னும் அவனை ஆட்கொண்டிருந்தது மட்டும் அதற்கு காரணமென சொன்னால் அது தவறு... அவன் தேகமே நெருப்பாய் கொதிப்பது போல் இருந்தது தான் சரியான காரணம்.

கண்ணைத் திறப்பதும் மீண்டும் மூடுவதுமாய் அவன் சோர்வின் பிடியில் உறைந்து மெதுவாய் அணத்திக் கொண்டிருந்தான்.
அந்தநேரத்தில் "VNA" என்றபடி அவள் உள்ளே நுழைய அவனது முணங்கல் குரல் அவளுக்கு கேட்ட மாத்திரத்தில் வேகமாய் அவனருகே வந்து அமர்ந்து அவன் கழுத்தினில் கைவைத்தாள்.

"VNA காய்ச்சல் பயங்கரமா அடிக்குது... நீங்க பேசாம கண்ணை மூடிப் படுங்க நான் இதோ வர்றேன்" என்று சொன்னவள் எழுந்திரிக்க அவள் கரம் அவன் கரத்தின் பிடியில் சிக்கியிருந்தது.

"VNA" என ஆச்சர்யமாக அவனைப் பார்த்து அழைக்க "சுஜாதா என் பக்கத்துலயே இரு" என்றான் அவன் மிகவும் சோர்வாக...

"நிசமாத்தான் சொல்லுறீங்களா"

"ம்ம் ஆமா..." என்று அவன் சொல்ல "காய்ச்சல்ல உளறுறீங்க VNA" என்று சொன்னாலும் அவனருகில் அவள் ஓட்டிக் கொண்டு அமர்ந்தாள் அவள்.


அவன் உடலிலிருந்த உஷ்ணம் அவளை அவனோடு ஒன்றாய் கலக்க சொல்லி வற்புறுத்தினாலும் அவள் என்னவோ அமைதியாகத்தான் இருந்தாள்.


"சு..ஜா..தா" என அவன் திக்க "சுஜாதா தான்" என்று அவள் சொல்கையிலே அவன் மடிமீது தலையை வைத்துக் கொண்டான்.

இவனுக்கு என்னாச்சு என்று மனம் நினைத்தாலும் அந்த நெருக்கம் வெகுகாலமாய் அவளுக்குள் எரிந்துக் கொண்டிருந்த தாபத்தினை சற்றே குளுமையாக்கத் தொடங்கியிருந்தது.


"என்னதிது VNA எவ்வளவு மெச்சூர்டா இருப்பீங்க. இப்போ என்ன சின்னக் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணுறீங்க... இது நீங்க மாதிரியே இல்லையே" என்று சொல்ல அவனோ அவள் இடையை கட்டிக் கொண்டான்.


"சுஜாதா நீ என்னை விட்டு எங்கேயும் போகாத.. "

"நான் போக மாட்டேன் நீங்க தான் காய்ச்சல் குறைஞ்சதும் இதையெல்லாம் மறந்துட்டு என்னையவே யாருன்னு கேட்டு விலகி நிப்பீங்க. உங்களை மாதிரி நான் யாரையும் பார்த்ததே இல்லை. பொண்ணுங்க கூட எப்போடா பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். பேசி பேசியே அவங்களை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைக்குறவங்களுக்கு மத்தியில வலிய வந்து பேசியும்... வெக்கமே இல்லாம ஆசையை, விருப்பத்தை சொல்லியும் விலகி போறீங்க பாத்தீங்களா.. அதுதான் VNA உங்ககிட்ட எனக்கு பிடிச்சது. அதுதான் உங்களை நோக்கி என்னை காந்தம் போல ஈர்க்குது...இந்த காலத்துல யார் இப்படி இருக்கா?.." என்று அவள் அவன் மார்பில் கைவைத்து பேசிக் கொண்டிருக்க அவனோ அவளை பார்த்தபடி இருந்தான்.


"என்ன பார்க்குறீங்க. இந்த லூசுக்கு வேற வேலை இல்லை. இவ எப்பவும் இப்படித்தான் புலம்புவான்னா" என்று கேட்க அவனோ இல்லையென்பதை போல தலையாட்டினான்.


"இல்லையா அப்பறமென்ன? என்று அவள் அவன் நெற்றியினை வருடியபடி கேட்க அந்த நெருக்கம் அவனை என்னென்னவோ செய்தது...

இருந்தும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு "நீ வித்தியாசமா இருக்க. இந்தமாதிரி யாருமே என்கிட்ட பேசுனதே இல்லை. யாரையுமே என்னை நெருங்க விட்டதே இல்லை. ஆனா நீ நெருங்கி வந்த... என்னை இவ்வளவு டீப்பா நேசிக்குற. இந்த அளவுக்கு உருகுற... இதையெல்லாம் கண்டும் காணாம போக என்னால முடியலை. உன்னோட நினைவுகள் எல்லாம் இப்போ எனக்குள்ளயும்... அது தர்ற இம்சையை என்னாலயும் தாங்க முடியலை" என்றான்.


"குட் சேஞ்ச்..." என்று அவள் சொல்ல அந்த குரலில் இருந்து உணர்வுகள் எல்லாம் அவனையும் எங்கயோ இழுத்துச் சென்றது....


அதை அனுபவித்தபடி அவன் கண்ணை மூடிக்கொண்டிருக்க "VNA திரும்பிப் படுங்க இன்செக்சன் போட்டு விடுறேன்..." என்ற சத்தம் சற்று தூரமாய் கேட்டது.


உடனே அவன் பட்டென்று கண்ணைத் திறக்க அப்போது தான் உள்ளே நுழைந்த அவள் தென்பட்டாள்...


இவ இப்போ என் பக்கத்துல இருந்தாளே... ஆனா அங்க இருந்து.... ஷ்ஷ்....வாசு உனக்கு என்னடா ஆச்சு என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் "வேண்...டாம்" என்றான்.

"காச்சல் ரொம்ப அடிக்குது VNA"

"சரியாப் போய்டும்... சுஜா..தா.."

"போகும் போகும் .மொத திரும்பி படுங்க" என்று அவள் சத்தமாக பேச அவன் அமைதியாக திரும்பிப் படுத்தான்.

ஊசி போட்டு முடித்தவள் "நல்லா தூக்கம் வரும் தூங்குங்க. சாப்பிடும் போது எழுப்பி விடுறேன்" என்று சொல்ல அவனும் அமைதியாக படுத்துக்கொண்டு

உன் வெம்மைதனை
தேகத்திற்கு கடத்தி
என்னையும் சேர்த்தே
உன்னோடு எரிய வைக்கிறாய்...
காய்ச்சலென இதற்கு பெயரிட்டாலும்
காதலெனவும் இதனை சொல்லலாம்...
! என முணங்க "இப்போ என்ன சொன்னீங்க VNA" என்று வேகமாய் வந்து அவன் தாடையை தாங்கியபடி கேட்டவளின் கண்களில் இருந்த உணர்வினை எழுத்தாளனென சொல்லிக் கொண்டிருக்கும் அவனாலயே வரையறுக்க முடியவில்லை ....

அப்படியெனில் எழுத்தாளனின் மனம் அவள் பால் கொண்ட நினைப்பினால் பற்றியெரிகிறதா???