அத்தியாயம் 17
"இப்போ ஏதோ சொன்னீங்க தானே" என்று அவள் மீண்டும் கேட்க "ஒன்றுமில்லை" என்றான் அவன்.
"நிஜமா"
"நிஜமாவே ஒன்னுமில்லை சுஜாதா"
"நீங்க கூட பொய் பேசுவீங்களா VNA.. பட் இட்ஸ் ஓகே" என்று சொன்னவள் "சரி இன்னும் நாளிருக்கு. நீங்க எப்போ வேண்டுமானாலும் என்கிட்ட இதைச் சொல்லலாம். இப்போதைக்கு தூங்குங்க அப்போத்தான் காய்ச்சல் குறையும்..." என்று அவள் சொல்லவும் அவன் கண்களை மூடினான்.
ஆனாலும் அவன் மூடிய விழிகளுக்குள் சுஜாதாவே வந்து நின்றாள். அது நிழலுருவம் அல்ல என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது...
சட்டென்று கண்ணைத் திறக்க வாசலோரம் நின்று இவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்க்கும் அவள் தெரிந்தாள்...
என்ன என்று இவன் புருவமுயர்த்தி வினவ "இல்லை சும்மா பார்த்தேன்" என்று அவள் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
இவளோட என்று அவன் இதழ்களில் இப்போது புன்னகை ஒட்டிக் கொண்டது. சுஜாதா போதுமென நினைத்து வாழ்ந்த என்னை அன்பைக் கூட வெறித்தனமாய் கொட்டி மாற்றி இப்போது இவளையே நினைக்கும் வண்ணம் செய்துவிட்டாளே... இவள் அன்புக்கு வலிமை அதிகம் தான். தலைகோதும் போதெல்லாம் என் அம்மாவினை இவள் உணர வைக்கிறாள். உண்மையில் இவள் எனக்கானவள் தான். இந்த வாசுதேவனின் சுஜாதா... இனி இவளை விட்டு என்னால் இருக்க இயலாது. என்று அவன் மனம் சொல்லிக் கொண்டே செல்ல ஷ்ஷ் வேண்டாம் வாசு இது தவறென அவன் புத்தி அவனை இடித்துரைத்தது.
உனக்கு எப்போதும் எழுத்து மட்டும் போதும். மற்றவைகளில் கவனம் செலுத்தாதே. இது வலிதான் தரும். வேண்டாம் என்று சொல்லவும் அவன் மனம் சற்று அடங்கியது.
வாசுவுக்கு இப்போது காய்ச்சலின் வேகம் அதிகமாக இருக்க கூடுதலாய் காதலின் தாக்கமும் அதிகமாக இருந்தது.
இரண்டையும் அவன் தாங்க முடியாது தள்ளாட சுஜாதா போட்டுவிட்டு சென்றிருந்த ஊசி அந்த தாக்கத்தினை குறைத்து அவனை மெதுவாய் உறக்கத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தியது.
கிச்சனில் நின்று கொண்டு சமைத்துக் கொண்டிருந்தவளுக்குள் வாசுவின் தீடீர் மாற்றமே ஓடிக் கொண்டிருந்தது. இப்போதுதான் இந்த மாயக்கண்ணனுக்கு இந்த பெண்ணின் மீது சற்று கரிசனம் வந்திருக்கறது போலவே.
அவன் பார்க்கும் பார்வையின் மாறுதல்கள் மனதிற்கு சந்தோசம் தந்தாலும் இதில் இன்னமும் முழுதாய் சந்தோசப்பட்டுக் கொள்ள முடியாதபடி அவன் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.
ஒருவேளை நான் கண் வைத்தே இப்படி ஆகியிருக்குமோ... இருக்கும்.. என் கண் பட்டதால் தான் அவனுக்கு இப்படி காய்ச்சல் வந்துவிட்டது என அப்பழியையும் அவள் தன் மேல் சாரி சாரி கண்கள் மேல் போட்டுக் கொண்டாள்.
கூடவே இன்று இரவு அவனுக்கு சுத்திப் போட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
----------------------------------
"ரவுடி" என்ற அழைப்பில் பாத்ரூமிலிருந்து அவள் "என்ன போலீஸ்" என்றாள் மெல்லிய குரலில்.
"எவ்வளவு நேரம்... குளிச்சுட்டு சீக்கிரமா வா" என்று சொல்ல "இதோ வர்றேன்" என்றாள் அவள்.
இன்று அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும். எப்படி ரியாகட் பண்ணப் போகிறாளோ என்று சு..தாவிற்கு கவலையாக இருந்த போதும் அவளை நல்லபடியாக பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் என்ன செய்தாலும் அவளை சமாளிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
அவள் வந்ததும் "உக்காரு ரவுடி சாப்பிடு" என்று சொல்ல அவளும் மறுக்காமல் வந்து அமர்ந்தாள்.
"எங்கயாவது என்னைக் கூட்டிட்டுப் போகப்போறீயா போலீஸ்" என்று அவள் கண்களைப் பார்த்து கேட்ட அதற்கு மேல் உண்மையை மறைத்து வைக்க விரும்பாமல் "ஆமா ரவுடி ஹாஸ்பிட்டல் போகப் போறோம்" என்றாள் வேகமாய்.
"எனக்கு கவுன்சிலிங் தரவா போலீஸ்" என்று சொன்னவளின் இதழ்களில் விரக்தி சிரிப்பே நிறைந்திருந்தது.
"ஆமா ரவுடி..."
"ஏற்கனவே கவுன்சிலிங் எல்லாம் போய்ட்டு வந்துட்டேன் போலீஸ். நோ யூஸ்"
"உன் போலீஸ் மேல நம்பிக்கை இருந்தா நீ என் கூட வா... தட்ஸ் இட். இல்லைன்னா விட்டுடு" என்று சொல்லவும் சரியென வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
"ரவுடி நேத்து நைட் புல்லா நீ பேசுனயே இப்போ நான் பேசவா... நீ கொஞ்சம் கேட்கிறயா?" என்று கேட்க "இதென்ன கேள்வி போலீஸ்... அதுவும் என்கிட்ட... நீ பேசு" என்று சொன்னவளை ஆதுரமாக பார்த்தவள் தன் பேச்சினை தொடர்ந்தாள்.
"நான்லாம் உன்னைப் பார்த்துதான் போல்ட்டா பேசவே கத்துக்கிட்டேன். ஆனா உன்னை இப்போ இப்படி பார்க்கும் போது என்னோட ரவுடி மாதிரி எனக்குத் தெரியலை. காரணம் உன்னோட இழப்பு... எஸ் எனக்குப் புரியுது. என்னதான் ஆறுதல் சொன்னாலும் அது உன்னோட இழப்பினை ஈடு செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம். கர்ப்பப்பையே எடுத்துட்டு பிறந்த குழந்தையும் பறிகொடுத்துட்டு என்ன செய்யன்னு தெரியாம தடுமாறி நீ நிற்குறதைப் பார்க்கும் போது கடந்து போன்னு சாதாரணமா என்னால சொல்ல முடியலை ரவுடி... எனக்கு மனசு வலிக்குது. என்னதான் காக்கிச் சட்டை போட்டு என்னை நானே வலிமையானவளாய் காட்டிக் கொண்டாலும் என் இதயம் உணர்வுகள் நிரம்பிய சாதாரண சதை குவியல் தான். அதற்கும் வலிக்கும். அதுவும் நான் நேசித்த என் தோழிக்கு இவ்வாறு ஒரு பிரச்சனை என்னும் போது என்னால் உன்னை இப்படியே விட்டு விலகி செல்ல முடியவில்லை. எல்லாத்துக்கும் காலம் ஒரு சிறந்த மருந்து ரவுடி. உன்னோட வலியை இந்த வேதனையை வேறு வழியில போட்டு புதைக்க பாரு. இதுக்காக வாழ்க்கையையே முடிச்சுக்கிறேன்னு சொல்லுறதெல்லாம் அபத்தம்" என்று அவள் சொல்ல அவளின் ரவுடி அமைதியாகத்தான் இருந்தாள்.
"உன் பெயினை என்னால நிச்சயமா எக்சாட்டா உணர முடியாது தான். ஆனா உனக்கு கண்டிப்பா நான் எப்பவும் ஆறுதலா இருப்பேன் ரவுடி பேபி... ஆனால் அதுக்கு நீயும் கொஞ்சம் மனசு வைக்கணும்" என்று அவள் சொல்லவும் அவள் தலை தன்னாலே சரியென்று ஆடியது.
"இங்க பொண்ணுங்களுக்கு இந்தமாதிரி சில பிரச்சனைகள் பொண்ணுங்களாலயே வருது ரவுடி. எதிர்த்து நின்னா மட்டும் தான் நம்மளால வாழ முடியும்"
"எப்படி எதிர்த்து நிற்க முடியும்னு நீ நினைக்குற போலீஸ். முடியாது... உன்னை விட நான் அதிகமா பேசுனவதான். என்னேயே காலை ஒடச்சு போட்டுட்டாங்க..."
"நீ காலை ஒடிக்குறவரைக்கும் ஏன் காட்டிட்டு நிக்குற ரவுடி"
"போலீஸ் நீ கல்யாணம் பண்ணல...சோ உனக்கு அந்த ரிலேசன்சிப்ல இருக்கிற டாமினேசன் பத்தி தெரியாது. அவங்க சொல்லுறதை செய்யணும். இல்லைன்னா குத்துற மாதிரி பேசுவாங்க. நாம பதிலுக்கு பேசுனா அதை தாங்க முடியாமல் அழுதுட்டு போய் ஆளை கூட்டிட்டு வருவாங்க. அந்த மனுசங்கள் எல்லாம் மனுச தன்மையே இல்லாம உக்காந்து நமக்கு லெக்சர் எடுத்து சாவடிப்பாங்க. இல்லைன்னா நீதான் தப்பு பண்ணன்னு முத்திரைய குத்தி தண்டனைய குடுத்துடுவாங்க. இதையெல்லாம் பார்த்தா அடுத்து பேசவே தோணாது. நாமளும் பெண்சுதந்திரம் பெண்விடுதலைன்னு பேசுனாலும் இதெல்லாம் மாறாது.."
"அதெல்லாம் மாறும் ரவுடி. நான் மாத்துறதுக்குத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்"
"அது முயற்சியாய் மட்டுமே இருக்கும் போலீஸ். அனுபவப்பட்டவள் என்கின்ற முறையில் இதுதான் என் கருத்து" என்று அவள் சொல்லிவிட்டு முகம் திருப்பிக் கொள்ள அதற்குள் மருத்துவமனை வந்துவிட்டது.
உள்ளே அவளுடன் நுழைந்தவள் மருத்துவரை சென்று சந்திக்க அவள் என்னமோ பக்கத்துவீட்டு பெண் போல அவ்வளவு பாசமாய் பேசத் தொடங்க அந்த போலீஸ்காரியின் ரவுடியும் அடங்கி அந்த மருத்துவரிடம் பேசத் தொடங்கினாள்.
சற்று நேரத்திலே என்ன நினைத்தாளோ அந்த மருத்துவர் போலீஸ்ஸை வெளியே அனுப்பிவிட்டு இவளிடம் பேசத் தொடங்கினாள்.
"உன்னோட பேர்"
"நிவேதிதா"
"சூப்பர் எவ்வளவு பவர்புல்லான நேம் தெரியுமா?
"தெரியும். ஆனா நான் பவர்புல் கிடையாது. தோத்துபோன ஒருத்தி"
"தோத்துப் போனவர்களுக்கு தான் ஜெயிக்கணும்னு வெறி அதிகமாக இருக்கும் நிவேதிதா..."
"டாக்டர் ப்ளீஸ் என்னால போலீஸ் பேச்சை தட்ட முடியலை அதனால தான் வந்தேன். என்னை நீங்க என்ன சொல்லியும் மாத்த முடியாது ப்ளீஸ்"
"சரி நீ வெளியே உக்காரு"
"என்ன எதுவும் பேசலையா"
"மனசு மாறாதுன்னு சொல்லிட்ட அப்பறமும் உன்கிட்ட பேசுறது சுத்த வேஸ்ட் இல்லையா. அதனால நீ போ" என்று அவள் சொன்னதும் அவள் வெளியேறிவிட்டாள்.
நிவேதிதா வெளியே வந்ததும் போலீஸ் உள்ளே வந்து "டாக்டர் அவளுக்கு" என்று கேட்க...
"ஹார்மோன்ஸ் இம்பேலன்ஸ்ஸால வந்த மாற்றத்தினை தாங்க முடியலை. ப்ளஸ் எல்லாருக்கும் ஆப்டர் டெலிவரி சில பிரச்சனைகள் இருக்கும். எல்லாமே இவளுக்கு மொத்தமா வந்துடுச்சு. அதுதான் இந்த மாதிரி இருக்கா. ஒன்னும் பிரச்சனையில்ல அவ சரியாகிடுவா. ஏன்னா நீ அவகூடவே இருக்கலே... நான் சொல்லுற மாதிரி அவகிட்ட பேசு. உன்னால மட்டும் தான் அவ சரியாவா. இப்போதைக்கு அவளை உன்கூடவே வச்சுக்கோ" என்று சொல்ல சரியென்று தலையாட்டி வெளியே வந்தாள்.
---------------------------------------
"VNA கொஞ்சம் எழுந்திரிங்க ப்ளீஸ்" என்று அவன் தோளைத் தட்டா அவள் எழுப்ப "ஏன் சுஜாதா" என கண்ணைச் சுருக்கி அவன் கேட்ட தோரணையில் அவள் மனம் மயங்கினாலும் அவள் தெளிந்து "எந்திரிங்க சொல்லுறேன்" என்றாள்.
அவன் எழுந்தமர்ந்ததும் அவள் கரத்தினால் அவன் தலையினை சுற்றத் தொடங்கினாள்.
"ஏய் என்ன பண்ணுற" என்று அவன் பதற "ஷ்ஷ்" என்று அவள் சொல்ல அவனோ அவள் செய்வதையே வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று முறை அவன் தலையினை கரத்தினால் சுற்றியவள் கையினை அவன் முன் விரித்து அவனைப் பார்த்து துப்புமாறு சைகையில் சொல்ல அவனோ மாட்டேன் என்பதைப் போல் மறுத்தான்.
ப்ளீஸ் என இவள் சைகையில் கெஞ்ச அவன் லேசாய் அவள் கரத்திலிருந்த சூடத்தின் மீதே துப்ப அவள் வெளியே சென்று வாசல் படியில் வைத்ததை எரியவிட்டு வந்தாள்.
"இதென்ன பையித்தியக்காரத்தனம் சுஜாதா நீ இதையெல்லாம் நம்புவயா?" என்று உள்ளே வந்தவளைப் பார்த்து அவன் கேட்க "ஆமா VNA... நான் கண் வச்சதால தான் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போய்டுச்சு. அதான் சுத்திப் போட்டுட்டேன். இனி சரியாகிடும்..." என்றாள் இவள்.
"எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை. ஆனா அதுக்காக உன் நம்பிக்கையில தலையிட மாட்டேன். பட் இது ரொம்ப சின்ன புள்ளைத்தனமா இருக்கு... இன்னொரு தடவை இப்படிலாம் பண்ணாத..."
"பண்ணுவேன் VNA... நீங்க நல்லா இருக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவேன்"
"என்னை விட்டு விலகி போய்டுன்னு சொன்னாக்கூடவா" என்று அவன் ஒரு மாதிரியான குரலில் கேட்க "நான் உங்களை விட்டு விலகிப் போனாத்தான் நீங்க நல்லா இருப்பீங்கன்னா நீங்க நல்லாவே இருக்க வேண்டாம் VNA" என்று அவள் சட்டென்று சொல்லிவிட்டு பின் "வேண்டாம் VNA என்னை ஏடாகூடமா ஏதாவது பேச வைக்காதீங்க. ஏற்கனவே உங்களுக்கு உடம்பு வேற சரியில்லை" என்றவள் திரும்ப
"ஒருநிமிசம் சுஜாதா என்னோட லேப்டாப் வேண்டும்..." என்றான் அவன் புன்னகையை மறைத்த குரலில்.
"நான் உங்க ஸ்டோரியை போஸ்ட் பண்ணிட்டேன்... சோ டோண்ட் வொர்ரி... தூங்குங்க" என்று அசால்ட்டாய் சொல்லிவிட்டு நடந்தவளின் பின்னழகு முதன்முறையாக அவன் கண்ணில் பட்டுத்தொலைக்க அவன் அவனையே தொலைத்துக் கொண்டிருந்தான் அப்போது....
இதென்ன மாயம் VNA சுஜாதாவை ரசிக்கிறானா...???