• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 2

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 2

'ஹலோ' என்று வந்து விழுந்த அந்த செய்தியையே ஆயிரம் முறை அவள் பார்த்திருப்பாள். அந்த சந்தோசத்தினையே மனம் ரசித்து அனுபவிக்க அதில் நேரம் கடந்ததை எண்ணி தன்னையே நொந்தவள் அவனை காக்க வைத்துவிட்டோமே என அவசரமாக "சொல்லுங்க VNA" என டைப் செய்து அனுப்பினாள்.


"வாட் ... VNA????"


"ம்ம் எஸ்.. வாசுதேவ நாராயண அநிருத்தன். சுருக்கமாக VNA.. அவ்வளவு பெருசா எல்லாம் என்னால கூப்பிட முடியாது"


"ஓகே.. ஓகே.. லிசன் இப்போ ஒரு மெஜேஸ் அனுப்புனீங்க தானே"


"இப்போ மட்டும் அல்ல. இதுக்கு முன்னாடி கூட அனுப்பியிருக்கேன்.. இனிமேலும் அனுப்புவேன்"


"ஓ கமான்... சுஜாதா"


"ஓ காட்... நீங்க என் பேரைச் சொல்லிக் கூப்பிடுறீங்க. இது எவ்வளவு நல்லா இருக்குத் தெரியுமா???.. பட் ஆடியோவில கேட்டுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். அதை விட நேர்ல நீங்க என் கண்ணைப் பார்த்து கூப்பிட்டிருந்தா இன்னும் இன்னும் நல்லா இருந்திருக்கும்" அவள் எழுத்துக்களிலே தெரிந்தது அதன் மயக்கம்...


"இங்க பாருங்க.. ஏற்கனவே நான் வொர்க் பண்ணி ரொம்ப டயர்டா இருக்கேன். லேட் நைட் ஆகிடுச்சு. இந்த நேரத்தில இப்படி பேசி... சரி அதைவிடுங்க.. இந்த லைன்ஸ் உங்களுக்கு எப்படித் தெரியும். அதை மட்டும் சொல்லுங்க" என்றான் வாசு விடாப்பிடியாக.


"தெரியும்"


"அதான் எப்படின்னு கேக்குறேன்"


"நீங்க எழுதுனா எனக்கு அது தெரியும்"


"இதென்ன மாயம் மந்திரமா"


"இல்லை மயக்கம். உங்கள் மீதான மயக்கம்.. உங்களின் எழுத்துக்கள் மீதான மயக்கம்.."


"ஸ்டூப்பிட் மாதிரி பேசாம எப்படி தெரியும் அதை மட்டும் சொல்லுங்க"


"நான் ஸ்டூப்பிட் தான்" உடனே ஒத்துக் கொண்டாள் அவள்.


"சுஜாதா.. ப்ளீஸ் பயங்கர தலை வலி எனக்கு. இப்போ அதை இன்னும் ஏத்தாதீங்க. நான் இப்போத்தான் அந்த எபியை டைப் பண்ணிட்டு வந்தேன். அதுக்குள்ள இட்ஸ் இம்பாசிபிள்.. எப்படித் தெரியும்?"


"எப்படின்னா.. நான் உங்க வீட்டுக்குள்ள ஒரு சிசிடிவி கேமரா செட் பண்ணியிருக்கேன்.. ஹா.. ஹா"


"சுஜாதா..."


"VNA இன்னைக்கு நீங்க இவ்வளவு பேசுனதே போதும்.‌ பேசாம போய் தூங்குங்க. நாளைக்கு மறுபடியும் மெஜேஸ் பண்ணுறேன்.. குட் நைட்" என்றாள்.


"ஹேய் வெயிட் வெயிட்..." இவன் பதில் அனுப்ப.... அவ்வளவுதான் அவள் ஆப்லைன் போய்விட்டாள்.


இறங்கியிருந்த தலைவலி சட்டென்று ஏற அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை. ஒருவேளை அவ சொன்னமாதிரி சிசிடிவி... இல்லை நாம மாடிக்குப் போன நேரத்துல இங்க யாராவது வந்து.. இல்லை ஒருவேளை இந்த ஆவி.. ச்சே ச்சே அறிவில்லையா வாசு.. கம்முன்னு போய் தூங்கு என்று அவன் மூளைத் திட்ட அவன் படுத்துவிட்டான்.


ஆனாலும் இதை அவனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எப்பவுமே கதையை போஸ்ட் பண்ண பிறகுதான் அந்த சுஜாதா என்பவளிடம் இருந்து இப்படி செய்திகள் வரும். இன்று அவனே அப்போதுதான் டைப் செய்து வைத்திருக்கிறான். அது உடனே வருகிறது என்றால் நிச்சயமாக இதன் பின் மர்மம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் அந்த பெண்??? அதற்கு மேல் நினைத்து பார்த்தாலும் அந்த நினைவுக்கு எந்தவித அர்த்தமும் கிடைக்கப் போவதில்லையென எண்ணியவன் அமைதியாய் கண்ணை மூடினான். களைப்பில் கண்கள் தானாய் சொருகிக் கொள்ள அவன் மெதுமெதுவாய் உறக்கத்திற்கு தள்ளப்பட்டான்.


இவன் உறங்கிவிட அங்கே இவனாலே ஒருத்தி உறங்காமல் இருந்தாள். அவளது மொபைல் ஸ்கீரினில் இருந்த அந்த புகைப்படத்திற்கு முத்தமிட்டவள் அவன் தன்னுடன் உரையாடிய சந்தோசத்தினையே அசைப்போட்டு படுத்துக் கிடந்தாள்.


இப்போது அவன் திட்டிய ஸ்டூப்பிட் என்ற வார்த்தை அவளுக்கு இனித்தது. அதையே நினைத்தவளுக்கு உறக்கம் வருமா என்ன??.. அதுவும் இல்லாமல் இப்படி உறங்காமல் விழித்திருப்பதும் அவளுக்கு புதிது இல்லையே...


மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படிக்க படிக்க அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவ்வளவு வலியையும் இந்த வார்த்தைகளுக்குள்ளயே அடக்கிவிட அவரால மட்டும் தான் முடியும். எப்படித்தான் எழுதுறாரோ.. மனம் எப்போதும் போல் ஆச்சர்யத்தில் குதித்துக் கொண்டது. கண்ணீர், ஆச்சர்யம் என மாறி மாறி... அவள் இப்படித்தான் அவனுக்கு நேரெதிர்.


அதனால் தானோ என்னவோ அவனை அவ்வளவு பிடித்திருந்தது அவளுக்கு. இது ஒருவிதமான பையித்தியம் என்று அவளுக்குத் தெரிந்தும் அவளால் அதை மாற்றிக் கொள்ளவே முடிந்ததில்லை. எழுத்தின் மீது கொண்ட மயக்கம் அவன் மேல் மாறியதில் இருந்தே இப்படித்தான்...


மறுநாள் காலை எழுந்தவனுக்கு இரவில் நடந்தது எல்லாம் சட்டென்று கண்முன் வந்து போனது. சரி விடு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் தனது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு லேப்டாப் முன் வந்து அமர்ந்தான்.


நேற்று சேமித்து வைத்திருந்த அந்த பைலை எடுத்தவன் மீண்டும் அதன் மீது தன் கண்களை ஓடவிட்டான். இல்லை எந்தவித பிழையும் இல்லை... மிகச் சரியாக இருந்தது. கண்கள் அந்த கடைசியாய் இருந்த வரிகளை அடையும் போது மட்டும் அவள் ஞாபகத்துக்கு வந்தாள். சரியான ஸ்டூப்பிட்.. VNA வாம் VNA அவளுக்கு என்னதான் வேண்டுமாம் என்று அவன் மனம் அவளைத் திட்டியது.
(அவளுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால் அவன் நிலைமை இன்னும் கவலைக்கிடம் தான்..)


அந்த கடைசி அத்தியாயத்தினை அவன் தனது பக்கத்தில் போஸ்ட் செய்துவிட்டு... அந்த லிங்கை அவனது FB id யில் ஷேர் செய்துவிட்டு... அப்படியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். மொபைல் எங்கிருங்கிறது என்று பார்க்க அது சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது. போனை எடுப்போமா...இல்லை வேண்டாம் வேண்டாம் என்று அவன் அமைதியாக இருந்தான்.


இந்த கதையினை இங்கே வெற்றிகரமாக முடித்துவிட்டான். இனி அடுத்தக் கதை எழுத வேண்டும். அதைப் பற்றியே அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவனுக்குக் கதைக்கான கான்செப்ட் கிடைத்துவிட்டது. இதுவரைக்கும் இந்த மாதிரியான கதைக்களம் அவன் தேர்ந்தெடுத்தது இல்லை. அதனாலயே அவனுக்கு அது அவ்வளவு பிடித்திருந்தது.


பர்ஸ்ட் டைம் சுஜீயை போஸீஸ்காரியாக பார்க்கப் போறேன்.. இதுகூட நல்லா இருக்கே என்று அவன் மனம் அவனது கதையின் நாயகியோடு டூயட் பாடக் கிளம்பிவிட்டது அப்போதே...


-----------------------


"எக்ஸ்க்யூஸ் மீ மேடம்" என்றவாறு உள்ளே ஒருவன் நுழைய "எஸ்" என்றாள் அவள் கம்பீரமாக.


நுழைந்ததும் அவன் விரைப்பாய் சல்யூட் அடிக்க "ம்ம் சொல்லுங்க" என்றாள் அவள்.


"மேடம், இன்ஸ்பெக்டர் உங்களைப் பார்க்க வந்துருக்காரு"


"ம்ம் வரச் சொல்லுங்க" என்று சொல்ல அவளுக்கு முன் இருந்த அந்த நேம் போர்டை முன்னால் இருந்த பென் ஸ்டேண்ட் நடுவிலிருந்த அந்த ஒற்றை எழுத்தை மட்டும் மறைத்திருக்க... மறையாத அந்த இடத்தின் வழியே அவளது பெயர் சு...தா எனக் காட்டியது. நடுவில் என்ன எழுத்து இருக்கும்... என்னவாக இருந்தால் என்ன? இப்போது அவளைப் பற்றிப் பார்க்கலாம்.


அவள் முகத்தில் கம்பீரமும் ஒருவித இறுக்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. அந்த காக்கி யூனிபார்ம் அவளது கம்பீரத்தினை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


அவ்வேளையில் "எக்ஸ்க்யூஸ் மீ மேம்.." என உள்ளே நுழைய "எஸ்" என வரவேற்றாள் இவள்.


அவன் விரைப்பாய் சல்யூட் அடித்து "குட்மார்னிங் மேம்" என்க "மார்னிங் சொல்லுங்க இன்ஸ்பெக்டர்" என்றாள் இவள்.


"மேம் ரிப்போர்ட்" என்றதும் "வச்சுட்டுப் போங்க நான் பாத்துக்கிறேன்" என்று அவள் சொன்ன மறுகணம் மொபைல் லேசாய் சப்தமிட அதை எடுத்துப் பார்த்தவளின் முகம் சட்டென்று மென்மையாய் மாறியது. அதைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்குள் சட்டென்று குழப்பம்.


இன்னும் அவன் கிளம்பாமல் இருப்பதைக் கண்டவள் மொபைலில் இருந்து நிமிர்ந்து பார்த்து "என்ன, வேற ஏதாவது சொல்லனுமா?" என்று அவள் புருவத்தினை உயர்த்தி வினவ "சாரி மேம் நோ மேம்... ஐ கோ மேம்..." என்று திணறிவிட்டு அவன் வெளியே சென்றுவிட்டான்.


அவனுக்குத் தெரிந்து அவளின் முகம் இப்படி மென்மையாய் இருந்தில்லை. எப்போதும் அதில் அந்த பதவிக்கே உரிய உணர்வு மட்டுமே நிறைந்திருக்கும்.. இந்த மாதிரியான மென்மை, வெட்கம் இதெல்லாம் ஒருவேளை.. மேம் யாரையாவது.. ச்சே ச்சே இதெல்லாம் அவங்க பர்சனல். நாம எதுக்கு இதைப் பற்றி யோசிச்சுட்டு.. என்று அவன் அந்த நினைவை அந்த எஸ்பி ஆபிஸ்லயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். விட்டுவிட்ட நினைவும் பின்னால் ஒருநாள் அவன் நினைவிற்குச் சரியாக வருமென்று அப்போது அவனுக்குத் தெரியவே இல்லை.


மொபைலை பார்த்தவள் அந்த நாவலின் கடைசி அத்தியாயத்தினை படிக்கத் தொடங்கினாள். படிக்கும் போதே அவள் இதழ்களில் லேசாக துடிப்பு... தவிப்பு சிரிப்பு.. என மாறி மாறி நர்த்தனமாடிக் கொண்டிருக்க அதன் பின் அந்த கடைசி வரியில் சட்டென்று அவள் கண்களுக்குள் லேசாய் கண்ணீரின் ஈரம் தட்டுப்பட ஆரம்பித்துவிட்டது.


அதுவும் சுஜாதா சுஜாதாவென அந்த நாயகன் உருகிய இடங்களிலெல்லாம் அவளுக்கு என்னவோ ஒரு புதுவித உணர்வை அனுபவித்தது போல் இருக்கும். கடமை அவள் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாலும் அந்த கடமையின் களைப்பினைப் போக்கும் இவ்வெழுத்துக்கள் மீதான காதலினை அவள் அந்நேரம் ஆழ்ந்து அனுபவித்திருந்தாள்.


வெறும் வாசிப்பாய் இருந்தால் படித்தவுடன் கடந்துவிட முடியும். அதையே சுவாசிப்பாய் கொண்டவளுக்கு அப்படியே விட்டுவிட்டு செல்ல முடிந்ததே இல்லை. உடனே அவள் சிலாகித்த உணர்வை அவனுக்குக் கடத்திவிட்டவள் கடமை அழைக்க அப்படியே மொபைலை ஓரமாய் வைத்துவிட்டு அதனுள் மூழ்கிவிட்டாள்.


டிங் டிங்...


கவனம் சிதற..
அவன் பார்க்க..
அந்த செய்தி அவளிடமிருந்து தான்.. ஓ காட் இவளுக்கு வேற வேலையே இல்லையா... என்று புலம்பியவன் அதை எடுத்தான்... இத்தனை நாளும் அவள் செய்தி தந்த இதத்தினை இரவு பேசியது முற்றுமாக தகர்தெறிந்ததிருந்தது...

இருந்தும் அந்த செய்தியினை பார்க்க....


கண்ணீர்


அவள் அழுதால்
ஆறுதலளிக்க
நீ முயலவில்லை...
நான் அழுகிறேன்
நீ ஏன் முயற்சி செய்ய கூடாது
என்னை சமாதானப்படுத்த..??


உன் எழுத்துகளில்
உன் வாசம் தேடியலைந்தே
உணர்வைத் தொலைத்து
திரியுமிவளின்
நிலையை என்று நீ உணர்வாய்..!


எதோ கிறுக்கு
கிறுக்கிக் கொண்டிருக்கிறாளென
நீ நினைக்கலாம்...!


உன்னளவுக்கு
எனக்கு எழுத வராது தான்
ஆம்..!!!
உன்னளவுக்கு
எனக்கு எழுத வராது
...
இருந்தும்
இறுமாப்புடன் இருக்கிறேன்
என்னளவுக்கு உனக்கு காதல் வராதென்று...!!!



இதைப் படித்ததும் ஸ்டூப்பிட்... என்று அவன் இதழ்கள் சத்தமாக முணுமுணுத்தது...

இன்னும் அந்த ஸ்டுப்பிட் அவனை என்ன செய்யக் காத்திருக்கிறாளோ...!!!
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
விரைப்பான காக்கி சட்டைக்குள் காதல் என்னும் ஆத்மார்த்த உணர்வு அரிது இதோ உங்கள் எழுத்தில் சாத்தியம் 👌👌👌👌👌👌
 
Jan 3, 2023
76
66
18
Theni
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
விரைப்பான காக்கி சட்டைக்குள் காதல் என்னும் ஆத்மார்த்த உணர்வு அரிது இதோ உங்கள் எழுத்தில் சாத்தியம் 👌👌👌👌👌👌
மிக்க நன்றி ❤️🥰