அத்தியாயம் 22
அவனறையின் முன்பே பையித்தியக்காரியாய் அவள் அமர்ந்திருந்தாள். கசங்கியிருந்த ஆடையினை மாற்றவும் தோன்றாமல் அவிழ்ந்திருந்த கூந்தலினை அள்ளி முடிக்காமல் அவள் அமர்ந்திருந்த தோற்றம் கண்டு யாவருக்கும் இரக்கம் பிறக்கலாம். ஆனால் வாசுதேவனுக்கு????
அதைவிடுங்கள்... இந்த மாதிரியான நிலை வாசுதேவனை இன்னும் இறுக்கமாகத்தான் மாற்றும். இதை யார் ஏற்றுக் கொள்வார்...
அதுவும் அவன் வாழ்ந்த சூழ்நிலையில் அவள் காதலினை ஏற்றுக் கொள்ளவே அவன் மிகவும் போராட வேண்டியிருந்தது. அப்படி இருக்கையில் அவளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது என்பதை அவனால் தாங்கவே முடியாது என்பது தான் உண்மை.
அவள்தான் பையித்தியம் போல் முதலில் அவனிடம் உருகி நின்றாள். இப்போதும் நிற்கிறாள். இந்த நிலையில் இந்த விசயம் தெரிஞ்சாலும் கூட வேறொரு ஆணாய் இருந்தால் அவளை வசப்படுத்திக் கொண்டு அவளை உபயோகப்படுத்தி கைகழுவி விட்டிருப்பான். ஆனால் வாசுதேவன் அவனுக்கென்று தனியாய் கொள்கை தனிஉலகமென வாழ்ந்து வருபவன் அவனுக்கு இது எவ்வளவு பெரிய வலியைத் தருமென அவனாய் இருந்தால் மட்டும் தான் நாம் உணர முடியும்...
சுஜாதாவாலும் உணர முடியும். ஆயினும் அவனை நெருங்க இயலாத நிலையை எண்ணியே இப்போது தன்னை வருத்திக் கொண்டிருக்கிறாள்.
அவனது வலியை போக்க அவனருகே நானிற்க வேண்டும் என்று அவள் மனம் நினைத்தாலும் கண்கள் அந்த மூடிய கதவினையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தது.
இரவில் சென்று படுக்கையில் விழுந்தவன் தான் இப்போது வரை எழாமல் அப்படியே வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அவன் மூளை அவனை மோசமாய் திட்டிக் கொண்டிருந்தது.
'இல்லீகல் அப்பயர்' என்று அது அவனை சாட அதைக் கேட்க முடியாது அவன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டான்.
எந்த கணத்தில் அவள் மார்பிலிருந்த தாலியைப் பார்த்தானோ அப்போதே அவன் உணர்வுகளும் அவனது காதலும் மரணித்துப் போய்விட்டது.
அதையும் ஈசியாய் இதிலென்ன இருக்கிறது என்பது போல் சொல்லிய சுஜாதாவினை கொன்று விட வேண்டுமென வெறியே அவனுக்குள் எழுந்த போதும் அவனால் அதை செயல்படுத்த முடியவில்லை.
காரணம், இனி எந்த காரணத்துக்காகவும் அவளைத் தொட கூடாது என்று அவன் உறுதியாக இருந்தான்.
நேற்று வரை சிந்தை மயக்கி
சிந்திக்க விடாதென்னை தடுத்தவளை
சிந்தையிலிருந்து தூக்கியெறிந்து
சிந்திக்க அவன் உள்ளம் தெளிவானது...
அது எப்போதும் போல் அவனுக்கான அரணை பலப்படுத்தும் வேலையை செய்தது.
வெளியே இருந்தவளுக்கோ மனம் முழுதாய் வெறுத்துப் போனது. இதற்கு மேல்தாங்க முடியாது என்றெண்ணி கதவினை ஓங்கித் தட்டத் தொடங்கினாள். அந்த சத்தம் உள்ளே இருந்தவனை இன்னும் வெறுப்பேற்ற ஆரம்பித்தது.
"VNA" என்று அவள் கத்த அதைக் கேட்டாலும் அவன் எழாமல் அப்படியே படுத்திருந்தான். அவள் குரல்கூட கேட்காத தூரம் செல்ல வேண்டும். அதைவிட இன்றோடு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து அவன் எழுந்து வந்து கதவைத் திறந்தான்.
அவளது தோற்றம் அவன் கண்ணில் பட்டதும் அவன் மனம் ஒரு நொடி தடுமாறி பின் நார்மலானது.
"VNA நான் பேசணும் உன்கிட்ட"
"இனி பேச ஒன்னுமில்ல ப்ளீஸ் என்னை விட்டுடுங்க"
"விட்டுங்க... ஓ அவ்வளவுதான் இல்லையா VNA "
"வேறென்ன அவ்வளவுதான்" அவன் குரல் பாறையின் கடினத்தினை ஒத்திருந்தது.
அதைப் புரிந்துக் கொண்டவள் "வெல்...என் கழுத்தில் கிடக்கும் தாலி உன் எண்ணத்தினை மாற்றுகிறதென்றால் அதுதான் வலிமை வாய்ந்ததா??? அப்படியெனில் என்காதல்... அதற்கு எந்த மதிப்பும் இல்லையா உன்னிடம்" என்றாள் அவள் ஜீவனிழந்த குரலில்.
"அது காதல் அல்ல. வேண்டாம் என்னிடம் அடிவாங்கிவிடாதே உன்னை அதற்காகக் கூட அடிக்கக் கூடாதென்று பார்க்கிறேன்" சீறினான் அவன்.
"என்னளவில் அதுதான் காதல்.. அதுமட்டும் தான் காதல். இது புரிந்துக்கொள்ள உனக்குத்தான் மூளை இல்லை. எனக்கு அது நிறைய இருக்குறது. உனது எழுத்தின் பரிணாமத்தில் என் காதலும் வளர்ச்சி அடைந்து அடைந்து தான் அது காதலெனவும் காமமெனவும் மாற்றமடைகிறது... உனக்கு என்மேல் நேற்றிரவு இருந்த காதல் இப்போது இல்லைன்னு சொல்லாதே... அது பொய்" என்று அவள் சொல்லவும் "அடுத்தவன் மனைவியின் மீது ஆசைப்பட நானொன்றும் ராவணன் அல்ல..." என்றான் அவன் பட்டென்று.
"ராவணனையே ஏன் எல்லாரும் அப்படி சொல்லுறீங்க. அவனொன்னும் அப்படிப்பட்டவன் அல்ல.." என்றாள் அவள்.
"அப்பறமென்ன அவன் ராமனா..."
"அவன் ராமன் இல்லை... ராவணன். அவன் எப்பவும் ராவணன் தான்... அவனளவில் அவன் எப்போதும் சரியாகத்தான் இருந்தான். அவனுக்கென்று தனித்திமிர் வேறு இருந்தது" என்றாள் அவள்.
"அப்போ பிறன்மனை நோக்குனது சரின்னு சொல்ல வர்றயா.. எப்படி வேணும்னாலும் வாழலாம்னு சொல்ல வர்றயா"
"பிறன் மனை நோக்குவதை தவறென்று ராமாயணம் வலியுறுத்துன்னு சொல்லுறோமே... அந்த அவதாரத்துல தான் ராமன் சீதையை மட்டும் நினைச்சுட்டு வாழ்ந்தான். மத்த அவதாரத்துல எல்லாம் அவன் எப்படிப்பட்டவன் VNA...???? உங்களுக்கேத் தெரியுமே... அதைவிட இன்னொன்னு இருக்கு....ம்ம் அதெதுக்கு... அதை விடுங்க....அதனால இந்த மாதிரி காப்பியத்தை தூக்கிட்டு என்கிட்ட வராதீங்க. ஏன்னா உங்களை விட நான் அதைப் பத்தி ரொம்ப பேசுவேன். என்னைப் பத்தி தெரியும் தானே... பார்க்கும் பார்வையை பொறுத்து தான் எல்லாமே மாறுபடும். ராவணன்... அந்த பெயருக்கு பிறர்கில்லா அழகன் என்ற பொருள் உண்டு. அவன் கம்பீரத்துக்கும் அவன் திறமைக்கும் அவனது இசைக்கும் அவனது சிவபக்திக்கும் எவரும் ஈடாக மாட்டார்... அவனது சிவகானத்தினை கேட்டு சிவனே இறங்கி வந்துருக்கார்... எப்பவும் அவனை சொல்லி சொல்லாதீங்க VNA. அதேமாதிரி நீங்க ராவணன் இல்லை. ஏன் அப்படிச் சொல்லுறேன்னா... மாற்றான் மனைவியை அவன்தான் கவர்ந்து வந்துருக்கான். இங்க அதல்ல நிலை...? உங்களை நான் தான் கடத்திட்டு வந்துருக்கேன்.. அப்போ இங்க நான்தான் ராவணன்... அதே மாதிரி புராணத்தை எல்லாம் எடுத்துவிட்டா நிறைய ரூல்ஸ் ப்ரேக்காகி இருக்கும்.. அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஏத்த மாதிரி ப்ரேக் பண்ணிட்டாங்க. அதனால அதைப் பத்தி பேச வேண்டாம். அண்ட் ராவணனைப் பத்தி பேசவே வேண்டாம். ஏன்னா ராவணன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..." என்றாள் அவள்.
"சுஜாதா ஸ்மார்ட்டா பேசுறதா நினைச்சு நீங்க உங்களேயே ரொம்ப ஏமாத்திட்டு இருக்கீங்க. இதுலாம் சரியில்லை. நமக்குன்னு சில வரைமுறை இருக்கு. அந்த ரூல்ஸ் படி வாழ்றதுதான் நல்லது. இல்லைன்னா அது நம்மளை அழிச்சுடும். இப்போ நான் எழுதுறவனா இல்லாம சாதாரணமானவனா இருந்திருந்தா நீங்க என்னை காதலிச்சுருக்க மாட்டடீங்க. ஏன்னா நீங்க என்னை காதலிக்கலை... எழுத்தைத்தான் காதலிச்சுருக்கீங்க... "
"ஸ்டாப் எழுத்து தனி நீ தனியில்ல. இரண்டுமே எனக்கு ஒன்னுதான்..."
"நான் சொல்லுறதை உன்னால புரிஞ்சுக்க முடியாது ஏன்னா உன்னை மாதிரி பையித்தியத்துக்கு எப்படி சொன்னாலும் புரியாது. பேசுற டைம் தான் எனக்கு வேஸ்ட் ஆகும்... என்னை விடு. ஆனா ஒன்னு முடிவா சொல்லுறேன். இனி நான் இப்படித்தான். இனி உன்னால என்னை உனக்கேத்த மாதிரி மாத்தவே முடியாது"
"மாத்துவேன் VNA"
"அதுவரைக்கும் நான் இங்கே இருந்தா பார்க்கலாம்" என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவளை விட்டு கிளம்ப அவன் முற்பட்டாலே அவன் என்னாவான் என்று நமக்கேத் தெரியும் அல்லவா அதுதான் நடந்தது...
அவன் மயங்கிச் சரிந்தான் கீழயே..
அவனைத் தாங்காது அவள் கீழே விழுந்தவனை வேடிக்கைப் பார்த்தபடி அருகில் அமர்ந்தாள்.
------------------------------
"போலீஸ் என்னாச்சு நானும் நீ வந்ததுல இருந்தே பார்க்குறேன் ஒருமாதிரி இருக்க"
"ஒன்னுமில்லை" என்றவளுக்குள் மதியம் டாக்டர் சொன்னதே ஓடிக் கொண்டிருந்தது.
"அவளுக்கு இருக்குற மனநிலை ரொம்ப ஆபத்தானது அது அவளோட மனசுல என்ன தோணுதோ அதைத்தான் செயல்படுத்த சொல்லி சொல்லும். மத்த யாரோட கருத்தையும் அவங்க என்ன நினைப்பாங்க அப்படிங்கிறதை பத்தியும் கவலைப்படாது. எதிர்ல இருக்குறவங்களுக்கு இவங்களோட மனநிலை ரொம்ப டேஞ்சர்.. இது ஒருவிதமான அதீத பாசத்துல வெளிப்படுற உணர்வுகள். இதை அவங்களால அடக்கவும் முடியாது. அப்படி அடக்க நினைச்சா அது இன்னும் ஆபத்தாக தான் மாறும். இதை மாத்துறது அவங்களுக்கு பிடிச்சவங்க கையில தான் இருக்கு. அவங்க பிரசன்ஸ், அவங்களோட பேச்சு, அன்பு அதுதான் அவங்களை பழையபடி நார்மலாக மாத்தும்... ஆனா அது ரொம்பவே கஷ்டம்...
அதைப் பற்றியே நினைத்தவள் "ஏய் போலீஸ் உன் ஆள் எழுதுன புக் படிச்சேன் ரியலி சூப்பர். மைண்ட் அப்படியே ரிலாக்ஸ்ஸான பீல் தெரியுமா. நான் இப்போ ரொம்ப நிம்மதியா பீல் பண்ணுறேன்" என்ற நிவேதாவின் குரலில் சிந்தை கலைந்தாள்.
பின் அவளே "ரவுடி அதுதான் உன்னைப் படிக்க சொன்னேன். இன்னும் படி நீ உண்மையிலே உன்னையே புதுசா பாத்துக்க ஆரம்பிப்ப... சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ தூங்கு என்ன" என்று சொல்ல அவளோ "இல்லை நான் படிக்க போறேன் போலீஸ்" என்று சென்றுவிட்டாள்.
அப்போதுதான் விஜயிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது.
"சொல்லுங்க விஜய் அது என்ன இடம்னு பார்த்துட்டீங்களா. ஏதாவது கிடைச்சதா" என்று கேட்க "மேம் ஸ்பாட்டுல தான் இருக்கேன். பட் இங்க எதுவும் கிடைக்கல" என்றதும்
"இருங்க நான் அங்க வர்றேன் நீங்களும் வெயிட் பண்ணுங்க" என்று அவனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திற்கு விரைந்தாள்.
இரவில் ஊரே அடங்கியிருக்க அடங்காத மனம் கொண்ட இவள் வாசுதேவனைப் பற்றிய தகவலை தெரிந்துக் கொள்ள வேண்டுமென ஆவலில் அங்கு சென்றாள்.
அது வாசுதேவன் தங்கியிருந்த இடம். உள்ளே நுழைந்து தன் பார்வையால் அந்த இடம் முழுவதும் அவள் அலச ஓரிடத்தில் மட்டும் அவள் பார்வை பதிந்து அந்த இடம்விட்டு வெளியே வர மறுத்து அங்கயே நின்றது.
அந்த இடத்தினை நோக்கி இப்போது கால்கள் வேகமாக சென்று அந்த நோட்டினை விரித்துப் பார்க்க உடனே அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...
ஆச்சர்யப்படும் அளவிற்கு அதில் இருந்தது என்ன?