அத்தியாயம் 23
அந்த நோட்டில் இருந்த வரிகளைப் பார்த்தவள் கூடுதலாய் அதில் இருந்த அந்த ஊசியினையும் பார்த்துவிட்டாள். அதுதான் அவளது அதிர்ச்சிக்கு காரணம்... உடனே அவள் அதை கர்சீப்பால் மறைத்து எடுத்துக் கொண்டு விஜய்க்கு தெரியாது அதை பாக்கெட்டில் வைத்துக் கொண்டாள்.
"சரி வாங்க விஜய்" என்று அவள் அழைக்க அவனோ "மேம் எந்தவித தடயமும் கிடைக்கலை. இப்போ எப்படி நாம கண்டுபிடிக்குறது" என்று கேட்க எனக்கு நான் தேடிவந்தது கிடைச்சுடுச்சு விஜய் என்று மனதுக்குள் நினைத்தவள் "கண்டுபிடிச்சுடலாம் விஜய் ஈசியா. வாங்க லேட்டாகிடுச்சு இப்போ வீட்டுக்குப் போகலாம்" என்று சொல்லவும் எப்பவும் போல் அவன் பிரமிப்பு மாறாமல் அவளைப் பார்த்தான்.
"என்ன அப்படிப் பாக்குறீங்க"
"எனக்கு ஒரு டவுட் இருக்கு மேம் ஆனா அதைக் கேக்கலாமா என்னென்னு புரியலை"
"எதா இருந்தாலும் கேளுங்க விஜய்"
"இல்லை மேம் நீங்க அந்த வாசுதேவனை காதலிக்கிறீங்களா?"
"என்ன திடீர்னு"
"இல்லை மேம். காலையில உங்க மொபைலை பார்த்தேன். அதுல அந்த ரைட்டரோட ஃபோட்டோ இருந்தது. அவரைப் பத்தி பேசுனாலே நீங்க கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுறீங்க. உங்க முகம் வேற பிரைட்டா ஆகுது" என்று அவன் சொல்லவும்
"ஓ அதனால உங்க போலீஸ் மூளை இதை லவ்னு கன்பார்ம் பண்ணிடுச்சாக்கும்" என்று சிரித்துக் கொண்டே வினவ.. "அது மேம்" என்று அவன் இழுத்தான்.
"தப்பில்லை... நீங்க கெஸ் பண்ணது ஓரளவுக்கு கரெக்ட்தான்" என்றாள் அவள்.
"அப்போ லவ் பண்ணுறீங்களா மேம்" என்று அவன் கேட்க "எஸ்... வாங்க போகலாம்" என்று அவனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தினை விட்டு கீழே வந்து நின்றனர்.
"விஜய் நாளைக்கு பார்க்கலாம் கிளம்புங்க" என்று அவள் சொல்ல அவனோ "சரி மேம்" என்று கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற பின்னரும் கூட அங்கயே நின்றிருந்தாள் அவள். இரவின் பனி வாசுதேவனின் எழுத்தாய் அவளை வருட அதில் லயித்திருந்தவளுக்குள் சட்டென்று ஒரு மாற்றம். உடனே அவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
--------------------------------------
வெகுநேரமாய் அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் காதல் உணர்வு வழிந்துக் கொண்டிருக்க மயக்கத்திலும் அவன் முகம் கடினமாய் இருந்தது.
இரவின் நிசப்தம் சப்தமாய் அதன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்த போதும் மெல்லியதாய் வீசிய காற்றில் அவனது முன்னுச்சி முடிகள் ஆடிக் கொண்டிருக்க அதில் அவள் கை தானாக அவன் தலையை வருடியது.
அவள் தொடுகை பட்டதும் அவன் தேகம் அதை உணர்ந்து இன்னும் விரைக்க அவள் கையை எடுத்துக் கொண்டாள்.
மயக்கத்திலும் அவள் மீதான கோபம் குறையாது அவனிருக்கும் அந்நிலை அவளுக்கு மிகவும் பயத்தினை அளித்தது.
"விஎன்ஏ நான் தப்பு பண்ணலை... நீங்க இப்படி இறுகி விலகி போறளவுக்கு நான் தப்பானவளும் கிடையாது. எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி ம்ஹீம் வேண்டாம்" என தலையை ஆட்டியவள்....
"எதுவுமே நான் சொல்லாம உங்களுக்கே என்னோட நிலை புரியும்... என்னோட காதலும் தெரியும். இந்த இறுக்கம் வேண்டாம் VNA.. எனக்கு மிகவும் வலிக்கிறது. இதில் கற்பு, கல்யாணம் என்ற சின்டெக்ஸ் சரியா இருக்கணும்னு நீங்க எதிர்ப்பார்க்காதீங்க. ஏன்னா இது கம்ப்யூட்டர் ப்ரோகிராம் கிடையாது. சிஸ்டத்துக்கு தான் எல்லாமே சரியா இருக்கணும்... ஆனா வாழ்க்கை நம்ம இஸ்டத்துக்குத்தான் இருக்கும். அது அப்படி இருந்தாத்தான் சரி... இல்லைன்னா எரர் தான் வரும்... எரரோட வாழ்றதுல எனக்கு விருப்பமில்லை. அதே மாதிரி என் காதல் தோற்றுப் போன ஒன்னா இருக்கவும் கூடாது. அதுக்காக நான் எந்த எல்லையினையும் கடப்பேன்" என்றவள் முதன்முறையாய் அவன் உணர்வுக்கு மதிப்பளித்து அவனை விட்டு விலகி படுத்துவிட்டாள்.
அவள் விரல்களால் அவனை வருட முடியாத நிலையினை கண்களால் அவள் செய்துக் கொண்டு ஆற்றிக் கொண்டாள்...
அவன் மயக்கந் தெளிந்து விழித்த நேரம் காலை வெகுநேரமாகியிருந்தது. தலையைப் பிடித்தவன் தரையில் படுத்திருப்பதை உணர்ந்து திருப்ப அவனுக்குத் தள்ளி சுஜாதா படுத்திருந்தாள்.
அவள் முகத்தில் கண்ணீர் வழிந்து காய்ந்து போயிருந்தது. அவள் உறங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தவன் இதுதான் சரியான சமயமென்று வேகமாய் எழுந்தான்.
உள்ளே சென்ற மயக்கமருந்தின் வீரியம் அவனைத் தடுமாறச் செய்த போதும் அவளிடமிருந்து விடுபட்டால் போதுமென அவன் பிடிவாதமாய் நடந்து வாசல் நோக்கி வந்தான்...
கண்கள் காட்சியினை இன்னமும் தெளிவாகக் காட்ட மறுக்க அதைப் பற்றிய கவலையே இல்லாது அவன் மூளை அவனை விரைந்து வெளியே போகுமாறு கட்டளை இட்டுக் கொண்டிருந்தது...
கதவின் மேல் அவன் கைவைக்கும் சமயம் "என்னை விட்டு ஓடிப் போக முடியுமா.. இனி முடியுமா.." என்ற குரல் இனிமையாய் இருந்த போதும் அவன் செவியில் நாராசமாய் வந்து விழுந்தது.
"என்ன VNA. தப்பிச்சு போகலாம்னு நினைச்சுட்டுட்டீங்களா.. என்கிட்ட இருந்தா... இங்க இருந்து போகணும்னா அதுக்கு நான் தான் மனசு வைக்கணும்.." என்று சொல்ல அவனோ வெறுத்து போய் அமர்ந்துவிட்டான்.
"அவ்வளவு வெறுப்பா இருக்கா VNA என்னைப் பார்க்கக் கூட முடியலை இல்லை.. என்னை உங்க அம்மாவாத்தானே.." என்பதற்குள் அவள் தலையில் ஏதோவொன்று வந்து மோதியது.
அவன் அருகே இருந்த கண்ணாடி ஜாடியினை அவள் மேல் விட்டெறிந்திருந்தான். இந்த அம்மா செண்டிமெண்ட் தான் அவனை மயக்கியது. அதையே அவள் மீண்டும் சொல்லவும் அசிங்கமாய் தோற்றுப் போனதன் வலி அவன் கண்களில் தெரிந்தது.
தாக்கியது அவனென்பதால் அதன் வலியையும் அவள் தாங்கிக் கொண்டாள். அவனுக்கு அவ்வளவு தூரம் கோபம் வருமென்பதே அவளுக்கு அப்போதுதான் புரிந்தது...
"VNA" என்று நெற்றியைப் பிடித்துக் கொண்டபடி அவள் பார்க்க அவள் விரல் தாண்டி உதிரம் வழிந்துக் கொண்டிருந்தது. அவ்வளவு இரத்தத்தினை பார்த்தபின்னும் அவனும் அவளும் பதறாது அமைதியாகவே இருந்தனர்.
அவளுக்கு தலை விண்ணென்று வலிக்க வலிக்க அவனோ அவளொருத்தி அங்கே இல்லாதது போல் பாவித்து இருக்க அவளும் இரத்தினை துடைக்காமல் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
இதயத்தின் மூலை முடுக்கெல்லாம் முணுக்கென்ற வலி மின்னி மின்னி மறைய இந்த வலி அப்படியொன்றும் பெரிதாய் தெரியவில்லை.
"ஒதுங்கியிருந்து
இவன் காட்டும்
ஒதுக்கத்தினை விடவா
உதிரங் கொட்டும் இவ்வலி
வலித்திடப் போகிறதெனக்கு...!!!
பிள்ளை பெறுமந்த அன்னைக்கு பிரசவவலி என்பது
பெரும் பொருட்டல்ல...!
என் காதலென்னும்
பேறுகாலத்தின்
பிரசவத்திற்கான தீட்டாய்
இக்கொட்டு முதிரத்தினையே பார்க்கிறேன்...
வலித்தாலும் இதழ் கடித்து நான் பொறுக்கிறேன்...!!!
முக்கித் தவித்து நான் திணறுமிந்த அவஸ்தையினை உன்னால் உணர முடியாது...
ஏனெனில் நீ ஆண்...!!!
தாங்க இயலா இந்நிலையில் தயக்கம் விட்டொழித்து நான் நின்றாலும்
ஏற்றுக் கொள்ள இயலாது கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறாய்...!
வேதனையின் சாயல்
சிறிதாவது தென்படுமா யென்று தேடிப்பார்த்துத் தோற்று நிற்கிறேன் உன்னில்...!
இவ்வளவு தவித்தும்
எனக்கு மிதற்கும்
யாதொரு
சம்பந்தமுமில்லை யென
எட்டியே நிற்கும் நீ
உண்மையிலே யார்???
வாசுதேவன்
என்
இறைவன்,
காதலன்,
தோழன்,
தகப்பன்,
என்னவனென
நான் மட்டும்
உருகியே நிற்க
"நீ அடுத்தவன் மனைவி" யெனச் சொல்லி வெகு சாதாரணமாய் காயப்படுத்தி ரசிக்கிறாய்...!
என்வலிதனில் உன் மனம்
ஆறுதல் கொண்டால் அதற்காய்
நான் எத்துனை வலியும் தாங்குவேன்...
வலிக்கச் செய்...
உன் நினைவால்
எனை மரணிக்கச் செய்...!
என்ன வேண்டுமானாலும் செய்...!!
விலகி மட்டும் செல்லாதே...
அது மரணத்தை விட...
ம்ஹூம்
அதை சொல்ல
அப்போது
நிச்சயமாய்
நானிருக்க மாட்டேன்...!!!!" என்றவளை
"ஜஸ்ட் ஸ்டாப்... டோண்ட் ஆக்ட் அஸ் அ எமோசனல் இடியட்..." என்று தடுத்து நிறுத்தினான் வாசு.
"நடிக்குறேனே நானா"
"எஸ்"
"அப்போ எதுக்குன்னு சொல்லிடுங்க அதையும் ஏன் விட்டு வச்சுட்டு"
"செக்ஸ்"
"ஓ... கண்டுபிடிச்சுட்டீங்களா..." என்றவளின் பேச்சில் விரக்தி தான் தென்பட்டது.
"அதுக்காக இல்லாம இதென்ன தெய்வீக காதலா யூ இடியட்.. வெறும் தேகங் கொண்ட பசி அவ்வளவுதான்..."
"யூ ஜஸ்ட் ஸ்டாப்பிட் VNA.. என்ன சொன்னீங்க வெறும் தேகங்கொண்ட பசியா... அந்த பசியா இருந்தா அதுக்கு நீங்கதான் வேணும்னு அவசியம் இல்லை. இங்க இப்போ எப்படியும் வாழலாம்னு ஒரு மனநிலை இருக்கு. நான் அப்படி நினைச்சா அந்த மாதிரியும் வாழுவேன். No one can question me... அதையெல்லாம் விட்டுட்டு ஒரு பையித்திக்காரி மாதிரி உங்க முன்னாடி நான் நிக்குறேன்ல... என்னை பார்த்து இப்படியும் சொல்லுவீங்க... இதுக்கு மேலயும் சொல்லுவீங்க...
உங்க எழுத்து எனக்கு ஒரு பூக்குவியல் மாதிரி... என்னவொன்னு அதோட எடை தான் நாளுக்கு நாள் என் மனசுல கூடிட்டே போகுது. அந்த எடையை அந்த கணத்தினை தாங்க முடியாமல் நான் கணந்தோறும் புதிதாய் பிறந்து பிறந்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் உங்கள் முன் புதுவித உணர்வோடு நானிற்க நாணமில்லா நங்கை நாட்டிற்கான நாசமென நிராகரித்து இப்போது என்னையே முடக்கி உட்கார வச்சுட்டீங்க. உங்க எழுத்து எனக்கு குடுத்த சிறகை உங்க பேச்சு புடுங்கி எறிஞ்சுடுச்சு. உங்க எழுத்து எனக்கு குடுத்த காதலை உங்க பேச்சு காமமா மாத்திடுச்சு... உங்க எழுத்து எனக்குத் தந்த தெய்வீக உணர்வை உங்க பேச்சு கொச்சைப்படுத்திடுச்சு. இதுக்கு மேல என்ன இருக்குன்னு தெரியாத மாதிரி இருட்டுக்குள் நான் ஒளியற்று உறைந்து நிற்க விழிவெளிச்சம் கொண்டு என்னை காப்பாற்றி தேற்றுவீர்கள் என்ற நூலிழை நம்பிக்கையில் தான் இன்னும் என் ஜீவன் வாலறுந்த பட்டமாய் துடித்துக் கொண்டிருக்கிறது...
இப்போ சொல்லுறேன் VNA...
உங்களுக்கு நிசமாவே என்னைப் பிடிக்கலை என்றால் உள்ளே மருந்து பெட்டியில் பாய்சன் இருக்கும். அதை எனக்கு இன்செக்ட் பண்ணிடுங்க உங்க கையால... ப்ளஸ் ஒரு நெற்றி முத்தம்... இட்ஸ் எனஃப் பார் மீ... முடிஞ்சா உங்க மடியில் தலையை சாஞ்சுக்க ஐஞ்சு நிமிசம் பர்மிசன் தந்துடுங்க.. சொர்க்கத்தினை உணர்ந்தபடி நான் இந்த நரக வாழ்வினை முடித்துக்கொள்கிறேன் கடைசி வரையில் உங்களை ஏற்றுக் கொள்ள வைக்க முடியவில்லை என்ற வருத்தத்துடன்....
இவ்வளவு பேசினாலும் அவள் நிற்பது அடுத்தவன் மனைவியென்னும் எல்லைக்குள் தான். அதனுள் புகுந்து வாசுவால் அவளோடு இணைய முடியாது என்பது அவளுக்குப் புரிந்தும் அவள் வாசுவிடம் அதையே எதிர்பார்க்கிறாள். அவளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? வாசுவின் அருள் கிடைக்குமா???