• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 27

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 27

அன்றைய நாளின் விடியலில் வாசுதேவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம் இங்கிருந்து இவளிடம் இருந்து விலகி வெளியே சென்றுவிட வேண்டும் என்று தான்.

இங்கேயே இன்னும் சிலநாட்கள் இருந்தால் கண்டிப்பாய் அவன் மனம் அவனையும் மீறி அவள் பக்கமே போய்விடும் ஆபத்து இருக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது.

கற்பனையில் இருப்பவளே அவள் காதலை புரிந்துக் கொள்கிறாள் அப்படியெனில் நேரிலே கண்டு வியந்து விலகி நிற்கும் எந்நிலை பற்றி அவளுக்குத்தான் புரியவில்லை. ஆனால் எனக்கு கூட வா எனது மனநிலை புரியாது...

அவள் காதல் உன்னதமானது, உயர்வானது தான் ஆயினும் ஏற்றுக் கொள்ள இயலாத அளவிற்கு இடைவெளியில் ஒன்று உள்ளதே. அது என்னை நெருங்கவிடாத எல்லையாய் இருக்க... என்னாசைகளை மரணிக்கச் செய்து மரணத்தின் ரணத்தில் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த ரணத்தையும் மீறி அவளுக்கிடையில் சென்றால் அது இருவரது வாழ்வினையும் சேர்த்துத்தான் அழிக்கும்..

வேண்டாம் நான் இங்கிருந்து செல்லத்தான் வைண்டும் என்றவன் சட்டென்று தன் கழுத்தினை தடவிக் கொண்டான்.
நல்லவேளை அவள் இன்னும் எழவில்லை போல... இல்லையென்றால் நான் போகப் போகிறேன் என்று நினைத்தாலே மயங்கி கிடப்பேனே என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க பின்னால் இருந்து "என்னயவா தேடுறீங்க VNA" எனக் கேட்டாள் அவள்.


அவன் வந்துட்டா ராட்சஸி என்று நினைத்தபடி அவளைப் பார்க்க அவளோ "வாங்க சாப்பிடலாம்" என்றாள்.

"நீ தூங்குவயா.. தூங்க மாட்டயா"

"தூங்குவேனே .. நீங்க உங்க மடியில என்னை படுக்க வைச்சா"

"ச்சே.. உன்கிட்ட பேசுனதே தப்பு"

"உங்களால என்கிட்ட பேசாம இருக்க முடியாதே"

"சுஜாதா ஏன் இப்படி இருக்க நீ.. உன் இடத்துல நான் இருந்தா இந்த மாதிரி நான் நடந்துருப்பேனான்னு யோசிக்கவே முடியலை. ஆனா நீ இவ்வளவு தைரியமா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு கவலையே இல்லாமல் உன் மனசுல இருக்குற காதலை சொல்லுற... அது நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சும்"

"ரொம்ப தாங்க்ஸ் VNA இப்பவாவது என்னோடதை காதல்னு ஒத்துக்கிட்டீங்களே... அண்ட் நான் நினைச்சது நடக்கும் VNA" என்று சொல்கையில் அவன் எழுந்து சென்றுவிட்டான்.


"சாப்பிட வாங்க VNA" என்று சொல்ல அவனோ பதில் பேசாமல் அந்த அறைக்குள் நுழைந்தான்.

"அங்க ஏன் VNA போறீங்க" என்று அவள் கேட்டது அவன் காதில் விழுந்தாலும் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

அந்த அறையின் உள்ளே இருந்த எழுத்துக்கள் அவனது ரணத்தினை ஆற்றுவதைப் போல உணர அதில் கொட்டியிருந்த அன்பில் அவன் மூழ்கியிருந்தான்.

ஏகப்பட்ட புத்தங்கள் அங்கே இருக்க அதில் வித்தியாசமாயிருந்த டைரியினை அவன் எடுத்தான்.
அன்று பார்க்கையில் அது அங்கே இல்லை என்பது அதை பார்த்த மாத்திரத்தில் அவனுக்குப் புரிந்தது.

உடனே அவன் எடுத்து ஒவ்வொரு பக்கமாய் திருப்ப அதில்

ஏற்றுக்கொள்ள மனமிருப்பினும்
மறுப்பாயென தெரிந்தேயிவள்
காதல் செய்கிறாள்...
அதுதான் இன்றளவில்
தொடர்ந்து நடக்கிறது...!!!

நிராகரிக்கு
மென் காதலுக்கு
நின் மடி மீது பள்ளி கொள்ளும்
நேரமெப்போது கிடைக்குமென்று
நித்திரை விடுத்து
நின்னை குறிவைத்தே
நித்தமும் தவம் செய்கிறேன்
தவத்திற்கான பலனாய்
வரமாய் நீயுமதைத் தந்தால் தானென்ன...!!!

எவனோ யொருவனென
என்னை விட்டு விலகி தனியொருவனாய் வாழுமிவன்
எப்போதென் துணைவனாய் மாறுவானென ஏக்கத்தில் நானிளை(ரு)க்க...
நான் அவனில்லையென
விலகி ஓடும் உன்னை எப்படி தடுப்பதென்றே புரியாது
தவிக்கிறேன்....!!!

இரவெல்லாம்
இப்படியான இம்சையிலும் அவஸ்தையிலும் கழிய
இது வேண்டாமென
எத்தனையோ முறை
யார் யாரோ
ஏன் நீயே
சொன்னபின்னும்
ஏற்றுக் கொள்ள முடியாது
இன்றும் உன்னையே நினைத்து
உன்னருகிலே வாழ நினைக்குமிவள்
காதலுக்கு உன் பதிலென்ன?????


அதைப் படித்ததும் வாசுதேவனின் மனநிலை முற்றிலும் மாறியது.

அப்படியே கையில் இருந்த டைரியினை அவன் நழுவ விட அதில் இருந்து ஒரு புகைப்படம் வந்து விழுந்தது...

அந்த புகைப்படத்தில் இருந்தது சுஜாதா. கூடவே அவள் முகத்தோடு தன் முகத்தினை ஒட்ட வைத்தபடி இருக்கும் இன்னொருவன்...

அதைக் கண்டதுமே புரிந்தது போனதவனிற்கு இவன் தான் அவளின் கணவனாக இருக்க வேண்டுமென்று...

"VNA இதையெல்லாம் பாத்தீங்கன்னா என் பையித்தியம் உங்களுக்கும் பிடிச்சுடும். அப்பறம் நீங்களும் என்னை மாதிரியே உளறிட்டு இருக்க வேண்டியதுதான்" என்றபடி வந்தவளின் முகத்திற்கு முன் அந்த போட்டோவினை அவன் காட்ட அவளோ "ஏய் அரவிந்த் போட்டோ. இதுக்குள்ளயா இருந்தது" என்று வாங்கினாள்.

"இவன் தான் அரவிந்தா"

"ஆமா VNA" என்றவள் புகைப்படத்தினையே உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையில் எந்தவித துக்கமும் கலக்கமும் கவலையும் எதுவும் தெரியவே இல்லை. மாறாக பாசம் மட்டுமே தெரிந்தது...

அது ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் பாசம் தனக்கும் வேண்டுமென அவன் மனம் எதிர்பார்க்கத் தொடங்கியது...

ஆனால் அவன் மூளை சட்டென்று அவன் முகத்திலே காரித் துப்ப அதில் அவன் தெளிந்து "இவ்வளவு பாசம் இருக்கு தானே அவன் மேல... அப்பறம் எப்படி நீ என் மேல... இது எப்படி...????" என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டே கேட்க அவளோ "அவன்மேல பாசம் இருக்கு ஆனா உங்க மேல கூடுதலாய் காதலும் இருக்கே" என்று சொல்ல அவனுக்கு அது அருவெருப்பான ஒன்றாய் தோன்றியது..

அவள் கணவனுடன் ஏதாவது பிரச்சனையாக இருக்குமென்று கற்பனை உருவமமான சுஜாதா சொன்னதில் இருந்து அவனுக்கும் அதுவே தோன்றிக் கொண்டிருக்க இப்போது அவள் நடந்து கொள்வது அவள் மீது கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பினையும் அழித்துவிட்டது.

அவன் முகம் மாறியதில் அவள் "என்னாச்சு என்னைப் பார்த்தா ரொம்ப கேவலமா இருக்கா... " என்றாள் வேகமாய்.

"அதை நான் வேற தனியா சொல்லணுமா"

"சரி விடுங்க"

"இல்லை சுஜாதா. நீ அரவிந்த் கூட இருக்குறதுதான் நல்லது... ப்ளீஸ் இதையெல்லாம் மறந்துட்டு நாம இரண்டு பேரும் தனி தனியா நம்ம வழியில போயிடலாம்" என்று அவன் சொல்ல "நீங்க சாப்பிட வாங்க நாம அடுத்துப் பேசிக்கலாம்" என்று அவனிடம் சொல்ல அவனும் சாப்பிட சென்றான்.

சாப்பிட்டது மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் இருக்க அதன் பின் அவன் அங்கயே அந்த டேபிளில் மயங்கி விழுந்துவிட்டான்.


அதையே பார்த்தவளின் முகம் மாறியது. "என்னை என்ன கிறுக்குன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா... நீங்க என்ன நினைக்குறீங்கன்னு உங்க முகத்தைப் பார்த்தே சொல்லிடுவேன். அரவிந்த் வேணும்னு முடிவு பண்ணனும்னா அதுவும் நான் தான் பண்ணனும். நீங்க சொல்லி எதுவும் இங்க மாறாது விஎன்ஏ. என்னை எவ்வளவு கேவலமா நீங்க நினைச்சாலும் ஐ டோண்ட் மைண்ட். எனக்கு உங்களை விட்டு இருக்க முடியாது. உங்க கூட சேரவே முடியலைன்னா கூட பரவாயில்லை. நீங்க என் கூடவே தான் இருந்தாகணும்... அதுக்காகத்தான் நான் இவ்வளவு தூரம் போராடுறேன்... உங்களை மயக்கத்துல வச்சுருக்க எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. ஆனாலும் கூட இந்த வழிதான் இப்போதைக்கு வசதியான ஒன்றா இருக்கு. அதனால என்னை மன்னிச்சுடுங்க VNA..." என்று அவனிடமும் "அண்ட் சாரி அரவிந்த்" என்று புகைப்படத்தினையும் பார்த்துச் சொல்லிக் கொண்டவளின் முகம் புன்னகையினை தத்தெடுத்துக் கொண்டது.

---------------------------------
அவசர அவசரமாக சு...தா கிளம்பிக் கொண்டிருக்க நிவேதிதா தெளிவான முகத்தோடு வந்து நின்றாள்.

"ரவுடி என்ன?"

"நான் வீட்டுக்கு கிளம்புறேன்"

"ரியலி"

"ஆமா போலீஸ்... நான் என்ன பண்ணனும் எப்படி இருக்கணும்னு எனக்குப் புரிஞ்சுப் போச்சு. இதுவும் கடந்து போகும்னு நான் புரிஞ்சுக்கிட்டேன் ஆனா கொஞ்சம் லேட்டா... இப்போ என்னோட வாழ்க்கையினை எப்படி மாத்திக்கணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சுடுச்சு. உங்க ஆளுக்கு பர்சனால என்னோட நன்றியை சொல்லிடு... அந்த எழுத்துக்கள் தான் எனக்குள்ள உத்வேகத்தினை தந்தது. இனி நான் எதுக்கும் கலங்க மாட்டேன். நான் என்ன பண்ணனும்னு தெளிவா இருக்கேன் போலீஸ். தாங்க்ஸ்.. என்னை எனக்கே புதுசா உணர வச்சதுக்கு"

"ஏய் ரவுடி என்னதிது புதுசு புதுசா வார்த்தையெல்லாம் சொல்றீங்க. நன்றியெல்லாம் வேண்டாமே"

"ஓகே ஓகே நான் சொல்லலை. ஆனா நான் வீட்டுக்கு போகலாம்ல போலீஸ்"

"இப்போத்தான் என்னோட பழைய ரவுடியை பார்த்த பீல்.. இனி நீங்க தாராளமாக வீட்டுக்குப் போகலாம்" என்று அவள் சொல்ல அவளோ அவளைக் கட்டிக் கொண்டு "வர்றேன் போலீஸ்" என்று சொல்லி வெளியே வர அங்கு வாசலில் அவளின் கணவன் வந்து நின்றிருந்தான்...

"நான் நான் சொன்னேன் ரவுடி.. போ சந்தோசமா இரு.. எப்பவும் பொண்ணா தைரியமா இரு..." என்று சொல்லி அனுப்பி வைத்தாள்...


இருவரும் சென்றபின் அவள் வேகமாய் தனது போனை எடுத்துக் கொண்டு அரவிந்த்க்கு கால் பண்ணினாள். என்ன பேசினாளோ அவன் என்ன சொன்னானோ அவள் முகம் மாறி "சரி எதோ பண்ணு... ஆனா நான் சொன்னது நடக்கணும் அவ்வளவுதான்... புரிஞ்சதா அரவிந்த்" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்...


அடேய் அரவிந்த் கடைசியில உன் நிலைமை இப்படியாடா மாறணும் எல்லாம் நேரம் டா.. என்று போனைப் பார்த்துத் திட்டிக் கொண்டே இருந்தாலும் அவள் செய்து முடிக்கச் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தான் அவன்....


அவன் செய்யும் வேலை யாருக்கு சாதகமாக மாறப் போகிறதோ...!!!!!