• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 3

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 3

அவள் எழுதியதைப் படித்துவிட்டு "இவளுக்கு என்ன பிரச்சனை..என்னதான் பண்ணுறது இவளை.." என்று திட்டிக் கொண்டிருக்க அவளே மீண்டும் வந்தாள்.


"VNA தலைவலி எப்படி இருக்கு" என அவள் அக்கறையுடன் சேதியில் வினவ

"ம்ம் இப்போத்தான் வந்துருக்கு. இனிதான் தெரியும் எப்படி இருக்குன்னு" என்றான் இவன்.

"ஹா ஹா ஹா"

"இங்க பாருங்க சுஜாதா. வெரி சாரி நேத்து அவசரப்பட்டு உங்களுக்கு மெஸேஜ் பண்ணிட்டேன்"

"அதனால இனி என்கிட்ட இருந்து மெஸேஜ் வராதுன்னு சொல்லப் போறீங்களா VNA"

"ஆமா.."

"நள்ளிரவு அனுப்பிய செய்திகளை
நகலெடுத்தே வைத்திருக்கிறேன் இதயத்துனுள்..
நான் நினைக்காமல்
அங்கிருந்து அது அகலாது.. இனி அனுப்பாது போனாலும்
இந்த சந்தோசமதே எனக்குப் போதும். நினைத்து நினைத்துப் பார்த்தே நெருக்கத்தில் வாழ்ந்திடுவேன்
" என்று வழக்கம் போல அவள் பிதற்றி அனுப்ப

"இப்படியெல்லாம் அறிவு கெட்டத்தனமா உளறாம உருப்படியான வேலை இருந்தா போய் பாருங்க சுஜாதா" என்று அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான்.

"VNA, இது உளறலா உங்களுக்கு தோணலாம். பட் இதுதான் உண்மை"

"டூ மச் இரிட்டேட்டிங்.. ஏன் இப்படி இருக்கீங்க. என்னைப் பத்தி ஏதாவது தெரியுமா?. வெறும் பேர், என்னோட எழுத்து இதை வச்சே என்னை நீங்க ஜட்ஸ் பண்ணிடுவீங்களா...! இது எங்க போய் முடியும்னு உங்களுக்குத் தெரியுமா? டெய்லி எத்தனை நியூஸ் இந்த மாதிரி எல்லாம் வருது. கொஞ்சமாவது மெச்சூர்டா பிஹேவ் பண்ணு சுஜாதா" என்றவனின் ஆவேசம் அவனது எழுத்துக்களில் தெரிவதைப் போல் இங்கேயும் பட்டுத் தெரிந்தது.


"ஆனா நீங்க அப்படி இல்லையே"

"ஓ காட்.. இப்படி கண்மூடித்தனமா நம்பாதீங்கன்னு தான் சொல்லுறேன். சுஜாதான்னு பேர் வச்சுட்டு அவ அவளுக்கு இல்லைன்னா கூட.. கொஞ்சமாவது உங்களை நீங்க மாத்திக்க முயற்சி பண்ணுங்க.. நான் ஒரு stranger அவ்வளவுதான். முன்ன பின்ன தெரியாத அவன்கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா..!!"

"பட் நான் அவள் இல்லை. அதாவது உங்க கதையில வர்ற சுஜாதா இல்லை... நான் இப்படித்தான்..." என்றவள் அவன் பின்பாதியை அப்படியே விட்டுவிட்டாள்.

"இங்கபாரு நான் ரொம்ப பொறுமையா உன்கிட்ட சொல்லுறேன். வெளிய பார்க்குறதை வச்சு யாரையுமே எடைபோடாதே. முக்கியமா என்னை‌...! நான் இதற்கெல்லாம் எதிரானவன்"

"தெரியும். ஆனா இப்போ மெஜேஸ் பண்ணுறீங்க தானே. அதுமாதிரி நீங்களே மனசு மாறி என் மனசை புரிஞ்சுக்குவீங்க" என்றாள் அவள் விடாப்பிடியாக.

"மண்ணாங்கட்டி.. உனக்குலாம் சொன்னா புரியாது.. எப்படியோ போ.. உன்கிட்ட பேசுனா என்னோட டைம் தான் வேஸ்ட் ஆகும்" என்று அவன் சொல்லிவிட்டு அவன் ஆப்லைன் சென்றுவிட

இவன் அந்த சுஜாதாவின் வலியையும் புரிஞ்சுக்க மாட்டான்... என்னையும் புரிஞ்சுக்க மாட்டான்.வாசுக்காக ஏங்குறதே சுஜாதாக்களின் வேலையா போச்சு.. ஆனால் அதையும் வெளிய காட்டக் கூடாது. சாருக்கு கோபம் வந்துடும். மெச்சூர்டா பிஹேவ் பண்ணு.. பண்ணுன்னு என் மைண்ட் மொத்தத்தையும் ஆக்ரமிச்சுட்டு வந்துட்டான் கருத்துச் சொல்ல..!! என்று அவள் கண்களில் வழியும் நீரை கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தாள்.
--------------------------

அன்றிரவு தலைமாட்டில் இருந்த போன் வைப்பிரேட் ஆக உடனே எழுந்தாள் அவள். இந்த நள்ளிரவில் யாராக இருக்கும் என்ற யோசனை எல்லாம் அவள் முகத்தில் இல்லை. எடுத்தவள் "எஎஸ்பி ஸ்பீக்கிங்" என்க "மேம்" என்று எதிர்முனை அழுகையுடனே அழைத்தது. அடுத்து என்ன சொன்னதோ "எங்க" என்று வெகு சாதாரணமாக அவள் கேட்டாலும் அவள் முகமும் கையும் வெகுவாக இறுகியது..

தன் பிஸ்டலை எடுத்தவள் விரிந்து கிடந்த முடியினை அள்ளி முடித்துக் கொண்டு விரைவாக தனது வண்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்கு விரைந்தாள்.

"விஜய் போயிட்டீங்களா.. எங்க இருக்கீங்க?" என்று அவள் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை அழைத்து வினவ "ஸ்பாட்டுல தான் மேம்" என்றான் அவன்.

"குட்.. நானும் வந்துட்டேன்" என்றவள் சில நிமிடங்களில் வந்து நின்றாள்.

"என்னாச்சு" என்று விஜய்யிடம் அவள் கேட்க "இரண்டு பேரைப் பிடிச்சாச்சு மேம்.. ஒருத்தன் எஸ்கேப்" என்றான் அவன்.

"சரி பாத்துக்கலாம். பொண்ணுங்க எங்க?"

"வண்டியில இருக்காங்க மேம்"
"வரச் சொல்லுங்க" என்று சொல்ல விஜய் அவர்களை அழைத்து வந்தான்.


அவர்களைப் பார்த்து "என்னாச்சு" என்று அவள் கேட்க அந்த மூன்று பெண்களில் ஒருத்தி முன் வந்து "மேம் திடீர்னு வந்து மிஸ்பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..ங்.." என்று வார்த்தை அந்த பயத்தில் திக்கித் திணறி வெளிவந்தது.


"சரி நீங்க மூணு பேரும் என்ன பண்ணுனீங்க" என்று அவள் ஆறுதல் சொல்லவதைப் போலக் கேட்க "பயத்துல என்ன பண்ணுறதுன்னே தெரியலை மேம்.. உடனே ஓட ஆரம்பிச்சுட்டோம் மேம்.." இன்னுமே பயத்தில் அவள் உடம்பு நடுங்கியது அவளுக்குத் தெரிந்தது.


"எதுக்குப் பயம்" என்று அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் குரலில் ஓர் அழுத்தம் தென்பட்டது.

"ஏதாவது பண்ணிட்டா" என்று அவர்கள் சொல்ல "ஓடுனா எதுவும் பண்ண மாட்டாங்களா??" என்றாள் இவள்.

"மேம்..." அவர்கள் முழிக்க ஆரம்பிக்க "ஐ வாண்ட் ஆன்சர்" என்றாள் அவள் தோரணையாக.

"பண்ணுவாங்க" என்று தயங்கிச் சொல்ல "அப்பறம் ஏன் ஓடுனீங்க??" என்றாள் மீண்டும்.

"மேம்" என்று அந்த மூவரும் முழித்து விட்டு பின் "அதுக்காக... அதுக்காக அவனுங்க என்ன வேணும்னாலும் பண்ணட்டும்னு படுக்கச் சொல்லுறீங்களா மேம். எப்படி மேம் இப்படி பேசுறீங்க. நீங்க இப்படி பேசுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை மேம்" இம்முறை அந்த பெண்களின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டியது.

"ஷ்ஷ்.. ஜஸ்ட் ஸ்டாப்பிட் த நான்சென்ஸ். எதுக்கு இப்போ இந்த கண்ணீர் டிராமா... ஏன் கொஞ்சங் கூட போல்டா இருக்கணும்னு நினைக்க மாட்டுறீங்க. உங்களைக் காப்பாத்த ஒவ்வொரு நாளும் நாங்க வந்துட்டே இருக்க முடியாது. இப்போ போன் இருந்துச்சு. அதுல என்னோட நம்பர் இருந்துச்சு.. சரியாப் போச்சு. இல்லைன்னா.. இல்லைன்னா.. என்ன பண்ணியிருப்பீங்க.. யூ இடியட்ஸ்" என்று அவள் காவல் அதிகாரியாய் நிமிர்ந்து நின்று கேள்விக் கேட்ட இவர்கள் தலையைக் குனிந்து கொண்டனர்.


"நிமிர்ந்து பாருங்க என்னை.. எதுக்கு இப்படி குனிஞ்சுட்டே இருக்குறீங்க" என்று கத்தியவளின் ரௌத்திரத்தில் அரண்டு மூவரும் திடுக்கிட்டு நின்றனர்.

அவள் பதில் வேண்டுமென விடாப்பிடியாக இவர்களையேப் பார்க்க "மேம் நீங்க போலீஸ்.. பட் நாங்க சாதாரணமான பொண்ணுங்க" என்றாள் ஒருத்தி.


"ஓ பொண்ணுங்க எல்லாம் சாதாரணம் இல்ல. உங்களைச் சொல்லித் தப்பில்லை. எல்லாம் அந்தமாதிரி ட்யூன் பண்ணி வச்சுருக்கவனுங்களைச் சொல்லணும். ஒரு இன்சிடென்ட் சொல்லுறேன். காலையில ஒரு எமர்சென்ஸி கேஸ். நான்தான் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சேன். அந்த லேடிக்கு அப்போ பெயின் வரலை. அங்க டாக்டர் அந்தப் பொண்ணுக்கு வஜினல் எக்சாமினேசன் பண்ண டிரைப் பண்ணுறாங்க.. அந்த பொண்ணு விடவே மாட்டுறா. டாக்டர்ஸ் எல்லாம் திட்டிப் பார்த்தும் நோ யூஸ்.. பட் கொஞ்ச நேரத்துல பெயின் வந்து அவளுக்கு பேபி பிறந்துடுச்சு... லேபர் பெயின் கம்பேர் பண்ணுறப்போ அந்த எக்சாமினேசன் பெயின் ஒன்னுமில்லை தான்.. பட் அப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவ குழந்தை பிறக்கப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே அத்தனை பெயினையும் தாங்குனா.. நான் பார்த்தேன்.. கூடவே நின்னு பார்த்தேன்..!! இதுல கடைசியா என்ன குழந்தைன்னு கேக்குறா... நீங்க சொல்லுற சாதாரண பொண்ணால இதை எல்லாம் தாங்கிக்க முடியும்னு நினைக்குறீங்களா...!!! இங்க ஒரு பொண்ணோட பலம் என்னென்னு அந்த பொண்ணுக்கேத் தெரியலை???. தெரிஞ்சுக்கவும் மாட்டுறீங்க.. அவ்வளவு வலியைத் தாங்குற அளவுக்கு பலம் இருக்குற பொண்ணால ஒரு பையன் தப்பா நடந்துக்க வந்தா ஓங்கி ஓர் அப்பு அப்புறதுக்கு என்ன? எட்டி ஒரு மிதி மிதிச்சா அவனால 'எந்திரிக்கவே' முடியாது சோ சிம்பிள். அந்த எண்ணம் ஏன் யாருக்குமே வரமாட்டேங்குது... கேட்டா பயம்... போய் அதை குப்பைத் தொட்டியில போட்டு ஒழுங்கா இருக்குற வழியைப் பாருங்க... போங்க.. விஜய் கூட்டிட்டுப் போங்க" என்று அவள் சொல்ல "ஓகே மேம்" என்று அவன் அருகே வந்தான்.


அவனுக்கு எப்போதும் அவள் மேல் பயங்கர மரியாதை... பெமினிசம் பேசும் பல பெண்களுக்கு அந்த வார்த்தையின் நிஜ அர்த்தம் தெரியாது இருக்க... இவளோ அந்த வார்த்தையின் ஒட்டு மொத்த உருவமாக இருக்கிறாளே என்ற ஆச்சர்யம், மதிப்பு எப்போதுமே அவனுக்கு அவளிடத்தில் உண்டு..


அந்த பிரமிப்பு மாறாமலே "வாங்க" என்று அந்த மூன்று பேரையும் அவன் அழைக்க அந்த மூன்று பேரில் ஒருத்தி மட்டும் "மேம் என்னோட மொபைல் அந்த பையன்கிட்ட இருக்கு மேம்.. வாங்கிக் கொடுங்க" என்றாள் தயக்கத்துடன்.


"விஜய்..." என்று இவள் அழைக்கும் முன்பே "இதோ மேம்" என்று அவன் சென்று அந்த பையனிடம் இருந்து மொபைலை வாங்கி அந்த பெண்ணிடம் நீட்ட அதை வாங்குவதற்கு முன் வேகமாக வாங்கியிருந்தாள் இவள்.

வாங்கியவளில் கண்கள் ஒருவித அனலுடன் "பாஸ்வேர்ட் ப்ளீஸ்" எனக் கேட்க அந்த மூவரது கண்களும் மாறிவிட்டது கண நொடியில்..
------------------------------------


"இதெல்லாம் நீ மாறிடும்னு நினைக்கிறயா சுஜீ" என்று வாசு கேட்க "ஏன் மாறாது வாசு" அவள் எதிர்கேள்வி கேட்டாள் சுஜாதா.

"எப்படி மாறும் சுஜாதா... இதைப் பத்தி எத்தனை தடவை பேசுனாலும் இதை மாத்தவே முடியாது அப்படிங்கிறதுதான் இங்க நிசர்சனம். இவங்களுக்கு தேவை பணம். அதை எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம்னு ஒரு எண்ணம். அதுக்குத்தான் இந்த மாதிரி சோசியல் மீடியாவை யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. முகம் சுழிக்க வைக்குற மாதிரியான பேச்சு. அரைகுறை ஆடை... சம்டைம்ஸ் அதுகூட இருக்கா இல்லையோன்னு ஒரு கன்ப்பியூசன்.. அப்படியே விர்ச்சுவலா.... சரி விடு.. இப்படி இந்த மாதிரியான விச ஜந்துகள் பண்ணுறதைப் பார்த்து பிரபலப்படுத்துறதே மக்கள் தானே.. இதுல இந்த ஜென்மங்கள் எல்லாம் என்ன சாதிச்சுதுன்னு இதுங்களையும் இன்டர்வியூ எடுத்து‌.. ச்சே ச்சே கருமம்... நாட்டுல எவ்வளவோ நல்ல விசயம் இருக்கும் போது இது மட்டும் இவ்வளவு பாஸ்ட்டா பரவுதே கேன்சர் மாதிரி... ஓரளவுக்கு மெச்சூர்ட் அப்படின்னு நினைக்கிற நானே டக்குன்னு பாத்துட்டு பதறிடுறேன். இதையெல்லாம் வளர்ற குழந்தைங்கள் பார்த்தா என்னாகுறது. அதான் சொல்லுறேன். இதெல்லாம் பத்தி பேசுனாலும் ஒன்னும் மாறப் போறது இல்லை" என்றான் அவன் சோர்வாக.


"நீ சொல்லுறது ரொம்ப சரிதான் வாசு. நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே... இதையே இரண்டுதா பாரு. ஒன்னு மாத்த முடியாதுன்னு ஒதுங்கிப் போறது. இரண்டாவது மாத்தலாம்னு நம்புறது. காலம் ஒரு தவறை உற்பத்தி செய்யும். பின்னாடி காலமே அதற்கான தீர்வையும் உற்பத்தி செய்யும். இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி நீளம் பொறுத்து மனித சமூகம் தன் குணாதிசயத்தை வகுத்துக்கொள்ளும். இப்போதைக்கு இதைப் பத்தி பேசுறாதால மட்டும் இது தீர்வாகாதுன்னு எனக்குப் புரிஞ்சாலும், நான் இதைப் பத்திப் பேசி கம்ப்ளையிண்ட் பைல் பண்ணப்போற அந்த நம்பிக்கைக்கு காரணம், பின்னால இது மாறும் அப்படிங்கிற ஒரு எண்ணம் தான். அட்லீஸ்ட் நம்ம முயற்சிக்கு உடனே பலன் கிடைக்கலைன்னா கூட எதிர்காலத்துல இந்த விசயங்கள் எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கு...

1. யூடியூப் இந்த மாதிரி பண்ணுறவங்களோட சேனலுக்கு குறைவான அமவுண்ட் கிடைக்குற மாதிரி பண்ணுறது.

2. ஆட் ப்ரமோட் பண்ணுறவங்க யூடியூப்ல டீசன்ட் வீடியோஸ்க்கு மட்டும் ஸ்பான்ஸ்சர் பண்ணுறது.

3. தப்பான கண்டென்ட்டை சென்சார் பண்ணுறது.

4. செக்ஸ் ரிலேட்டடு வீடியோஸ் வல்கர் கண்டென்ட் இதெல்லாம் அவாய்ட் பண்ணுறதுக்கு தனி டீம் வைச்சு மெயிண்டைன் பண்ணுறது.

5. இதையும் தாண்டி வீடியோஸ் வந்தா மக்களே அதை ரிப்போர்ட் பண்ணுற மாதிரியான ஆப்சன் குடுக்குறது...

இதில் ஐந்தாவதா சொன்ன விசயம் உன், என், மக்கள் கையில் இருக்கிறது. இதை மாத்தத்தான் நான் இறங்கிப் போராடணும்னு சொல்லுறேன்.

வளர்ற குழந்தைங்க நிசமாவே பாவம் வாசு. அவங்க என்ன தப்பு பண்ணாங்க. அவங்களுக்கு என்னென்னே தெரியாமலே இது அவங்க மேல திணிக்கப் படுது. நாம இதைப் பத்தின தெளிவான அறிவையும் தீர்க்கமான பாதையும் காட்டிட்டோம்னு வைச்சுக்கோ எல்லாமே மாறிடும்... இல்லை இதெல்லாம் மாறாதுன்னு ஒற்றைக் கருத்தோடு நிறுத்தினால், நீ சொல்லுற மாதிரி எதுவுமே மாறாதுதான்" என்று அவள் ஆதங்கத்துடன் பேசி முடிக்க

"புரியுது சுஜீ. இனிமேல் நானும் கொஞ்சம் பொறுப்போட நடந்துக்கிறேன்" என்றான் வாசு பட்டென்று.

"நீ பொறுப்பு தான் டா.." என்று அவனை விட்டுத் தராமல் அவள் பேச "இல்லை சுஜீ.. நாம மாறாமல் எதுவும் மாறாதுன்னு சொல்லுறவனே நான் தான். ஆனா நானே இதெல்லாம் வேண்டாம் வேஸ்ட் அப்படின்னு பேசிட்டேன். நீ பண்ணுறதுக்கு சப்போர்ட்டா இல்லாம நீ பண்ணுறதை தடுக்குற மாதிரி பேசிட்டேன் அதான். சாரி சுஜாதா" என்றான் உண்மையான வருத்தத்துடன்.

"ஏய் வாசு லூசு.. என்னாச்சு உனக்கு? நீ என்னை விட நிறைய யோசிப்ப.. பேசுவ. ஆக்சுவலா நான் இந்த அளவுக்கு யோசிக்கிறேன்னா அதுக்கு காரணம் கூட நீதான் வாசு. இதுல நீ நான் அப்படின்னு எதுவுமே இல்லை.. நாமன்னு யோசிச்சுப் பழகு. ஜஸ்ட் காம் டவுன்" என்றாள் அவள் வெகு சாதாரணமாக.

"இருந்தாலும் உண்மையை ஒத்துக்கனும் இல்லையா சுஜாதா"

"இங்க பாரு..." என்று அவள் அவனைத் தடுத்து நிறுத்த "வெயிட் சுஜீ நான் பேசி முடிச்சுக்கிறேன். இனி நான் இந்த மாதிரி முடியாது அப்படிங்கிற ஆங்கிள்ல பேச மாட்டேன். நீ பண்ணுறதுக்குப் புல் சப்போர்ட்டா இருப்பேன்... நீ என்ன நினைக்கிறயோ அதை உன் டிபார்ட்மெண்ட் மூலமா தாராளமாக பண்ணு. நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். தப்பு பண்ணுற எல்லாரும் கூட்டமா இருக்கும் போது நாமளும் கூட்டமா மாறலாமே சுஜாதா.. என்று சொல்ல அவளோ "தட்ஸ் மை ஸ்வீட் வாசு" என்று கொஞ்சினாள்..

அவளின் அந்த அழகினையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு...


இவ்வாறு டைப் பண்ணி முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு அந்த கதையின் முதல் அத்தியாயத்தினை நிறைவு செய்திருந்தான் வாசுதேவ நாராயண அநிருத்தன்...(VNA)

இவன் கதையில் ஒருத்திக்கு காக்கி சட்டை போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்க.., அங்கு ஒருத்தி நிசமாகவே காக்கிச் சட்டையில் காவல்காரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. அவளைப் பார்க்கையில் வாசுவின் மனம் என்ன நினைக்கும்... தடுமாறி விடுமா?????
 
Jan 3, 2023
76
66
18
Theni