அத்தியாயம் 6
"மேம்... குட்மார்னிங்... வரச் சொன்னீங்க" என்றவாறே உள்ளே நுழைந்தான் விஜய்.
"ஆமா விஜய்.. கமிஷ்னர் கிட்ட பேசணும் அதான் உங்களையும் வரச் சொன்னேன்"
"நேத்து நடந்த விசயத்தைப் பத்தியா மேம்"
"ஆமா விஜய்..."
"நான் கூட கம்ப்ளையிண்ட் பண்ணுறேன் மேம் பர்சனலா"
"பாரேன் விஜய் கூட கொஞ்சம் பொறுப்பா இருக்காங்க"
"உங்ககூட இருக்கேனே மேம்.. இப்படி கூட யோசிக்கலைன்னா எப்படி?"
"பரவாயில்லையே விஜய் குட் ... சரி சார்கிட்ட பேசிட்டு அப்பறமா என்ன பண்ணுறதுன்னு நான் சொல்லுறேன்.. அடுத்து நாம பர்தரா ஆக்சன் எடுக்கலாம். பட் இது கொஞ்சம் பெரிய ப்ராசஸ்தான் ரிசல்ட் உடனே எல்லாம் கிடைச்சுடாது" என்று அவள் இறுக்கத்துடனே பேச "ம்ம் புரியுது மேம். பார்த்துக்கலாம்.. எதுக்குமே ஒத்துவரலைன்னா உங்க ஸ்டைல்ல ஏதாவது பண்ணிக்கலாம்" என்றான் அவன்.
"சரி வாங்க போகலாம்" என்றதும் அவன் முன்னால் சென்றுவிட ஒரு நிமிடம் மொபைலை பார்த்துவிட்டு அந்த இடத்திலே தேங்கி நின்றுவிட்டாள் அவள்.
அவள் முகத்தில் ஒருவித சலிப்பு படர்ந்திருந்தது. என்னதிது அப்டேட் வரலை இன்னைக்கு வந்துடும்னு நேத்தே ஒரு போஸ்ட் இருந்ததே.. சொன்னா சொன்ன நேரத்துக்கு கரெக்டா போஸ்ட் வந்துருக்கும். ஆனா இன்னும் காணோம்... என்னாச்சு அந்த ரைட்டருக்கு என்று அவள் அந்த பக்கத்தையே நூறு முறை refresh செய்து பார்த்துவிட்டாள். ஆனால் ஒன்றும் பலனில்லை..
தனக்கு பின்னால் மேடம் வரவில்லையென்பதை அறிந்ததும் அவன் மீண்டும் வந்து பார்க்க அவளோ அப்போது கைப்பேசியிலே மூழ்கிப் போய்விட்டிருக்க "மேம் எஸ்பி சாரைப் பார்க்கணும்" என்றான் விஜய்..
"ம்ம் வர்றேன்" என்றவள் சலிப்பைத் துடைத்துவிட்டு வேகமாய் அவனுடன் சென்றாள்..
கமிஷ்னருடன் இதைப் பற்றி அவள் பேச அவரோ பொறுமையாக கேட்டுக் கொண்டு "உனக்கு என்ன தோணுதோ... எப்படி இதை மூவ் பண்ணனும்னு நினைக்கிறயோ அப்படியே கொண்டு போ. என்கிட்ட இதுக்கு பர்மிசன் கேக்கணும்னு அவசியமே இல்லை. உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்" என்று சொல்ல "சரிங்க சார். தாங்க்யூ" என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே வந்த மறுநிமிடம் மொபைலை எடுத்துப் பார்த்தாள். ம்ஹூம் அந்த அத்தியாயம் வரவே இல்லை...
"ச்சே" என்று எரிச்சலில் அவள் பக்கத்தில் இருந்த சுவற்றில் குத்த "மேம் என்னாச்சு" என்று அருகே வந்தான் விஜய்.
"நீங்க இன்னுமா உங்க ஸ்டேசன் போகாம இங்க சுத்திட்டு இருக்கீங்க... போங்க" என்று சொல்ல அவனோ வேகமாய் பின்னால் அடியெடுத்து வைத்து அப்படியே ஓடிவிட்டான்.
வாசு.. இப்போ எப்படி நான் கதையை படிக்காம என்னோட வேலையை பார்க்குறது. எப்பவும் பொறுப்பா இருப்பயே. இன்னைக்கு என்னாச்சு உனக்கு... சீக்கிரமா அப்டேட் பண்ணிடு என்று அவள் உள்ளுக்குள்ளே கத்திவிட்டு போய் அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள். முதலில் கஷ்டமாக இருந்தது அதன் பின் வேலையில் கவனத்தைச் செலுத்தியதும் எப்போதும் போல் மாறிவிட்டது.
----------------------------------------
லேசாய் கசிந்து வந்த வெளிச்சத்தின் உதவியால் அந்த அறையின் இருள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி ஓடியிருந்தது. அந்த அறையின் நடுவில் இருந்த அந்த பெரிய படுக்கையில் படுத்திருந்தான் வாசுதேவ்...
மெல்லமாய் அவன் கண்விழிக்க முயல இரண்டு இமைகளும் ஒட்டிக் கொண்டு வரமாட்டேனென அடம்பிடித்தபடி இருந்தது.
மிகவும் சிரமப்பட்டு அவன் கண் விழிக்க அந்த கண்வழியே தெரிந்த மங்கலான காட்சியில் அவனால் எதையும் கிரகிக்கவே முடியவில்லை.
மீண்டும் மூடச் சொல்லி விழிகள் கெஞ்ச பட்டென்று இமைகள் மூடிக் கொண்டது. மூடிய கண்ணுக்குள் காட்சிகள் நிழல் வடிவத்தில் தெளிவில்லாமல் தெரிய ஆரம்பித்தது...
சுஜாதாவின் மடியில உறங்கிட்டு இருந்தோம்... திடீர்னு யாரோ வந்தமாதிரி இருந்நது... நிமிர்ந்து பார்த்தா... இங்க இருக்கோம்.. இது எப்படி??? என அவன் மூளை நடுவில் சிலபக்கத்தினை மறந்துவிட்டு புலம்ப அவனோ மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தான்...
ஓரளவுக்கு இப்போது கண்கள் அதன் வேலையை தெளிவாகவே செய்யத் தொடங்க அந்த அறையினை அவன் அவதானித்துக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை வட்டமடிக்க அந்த வட்டத்துக்குள் வந்து விழுந்தது ஒரு சட்டம்..
அதிலிருந்து அவன் பார்வை அங்கும் இங்கும் நகரவே இல்லை. அதையே உற்று நோக்கியது.
அளவெடுத்து தைத்த காக்கி சீருடையில் அழகாய் அதைவிட முக்கியம் கம்பீரமாய் அந்த சட்டத்தினுள் இருந்த அவளின் தோற்றத்தில் அவன் மனம் ஆச்சர்யம் கொண்டது.
அவனது கதையில் சுஜாதாவின் முகம் அந்த யூனிபார்ம்ல் இருக்கும் போது எந்த உணர்வினைக் கொண்டிருக்குமோ அப்படியே இருந்தால் யாருக்குத்தான் அதிர்ச்சி வராது...
அவன் அதிர்ச்சி இன்னமும் விலகாமல் இருக்க அதை இன்னமும் அதிகப்படுத்துவதைப் போல அவள் வந்து நின்றாள்.
"VNA எந்திரிச்சுட்டீங்களா... " என்ற சத்தத்தில் அவன் "நீயா?" என்றான்.
"நான்தான் VNA.. எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க"
"சுஜாதா" என்று அவன் தயக்கமாய் அந்த போட்டோவினைப் பார்த்தபடி அழைக்க "நான்தான்" என்றாள் அவள்.
"ஆர் யூ மேட்.. என்ன பண்ணுறேன்னு தெரிஞ்சுதான் நீ பண்ணுறயா" என்று அவன் கோபமாய் பேச "இப்போ ஏன் இவ்வளவு டென்சன் VNA.. ரிலாக்ஸா இருங்க... இன்னைக்கு ஒரு எபி போடணும்ல இவ்வளவு டென்சனா இருந்தா எப்படி போடுவீங்க.. நான் வேணும்னா உங்களுக்குப் பதிலா போட்டுவிடவா?" என்றாள் அவள்.
"என்ன???"
"இதுக்கும் இவ்வளவு ஷாக்கான ரெஸ்பான்ஸ்தான் தருவீங்களா.. வெயிட். நான் வந்துடுறேன்" என்று சொன்னவள் அவனின் லேப்டாப்பினை எடுத்து வந்தாள்.
தலை கிர்ரென்று சுத்தத்தொடங்க அவனோ அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டான்.
"VNA நீங்க தூங்குங்க. நான் அப்லோட் பண்ணிடுறேன்" என்று சொல்ல அவனின் அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.
இவள் அவன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு அவனது லேப்டாப்பினை ஓபன் செய்து பாஸ்வேர்ட்டையும் தெளிவாத அடிக்க அவன் அதையும் அதிர்ச்சியுடன் உள்வாங்கினான்.
"என்ன பார்க்குறீங்க VNA... பாஸ்வேர்ட் எப்படி இவளுக்குத் தெரியும்னா... என்ன பெருசா வச்சுருக்க போறீங்க அதே ஏழு எழுத்து Sujatha... இதுதான் உலகத்துக்கே தெரியுமே... இதைக் கூடத் தெரியலைன்னா நான் எப்படி உங்களோட காதலியா இருக்க முடியும்..."
"ஜஸ்ட் ஸ்டாப்பிட் சுஜாதா.. you are not my lover... எனக்கு காதலியாகவும் மனைவியாகவும் இருக்குற உரிமையும் தகுதியும் சுஜாதாவுக்குத்தான் இருக்கு... உன் பேர் சுஜாதாவா இருக்கலாம். ஆனால் நீ அவளில்லை.. அவளில்லை.. அவளாகவும் ஆக முடியாது..."
"இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இந்த அளவுக்கு கூவுறீங்க. எஸ் கரெக்ட் தான்...நான் அவளில்லை... நான் அவளாக மாறவும் முயற்சி செய்யவில்லை. உன்னை மாற்றத்தான் முயற்சி செய்கிறேன். இடைவிடாது புலம்பும் உன் இதழ்களுக்கிடையே சுஜாதா எனும் பெயர் சிக்கித் தவிப்பதைப் போல... உன் இதழ்களுக்கிடையே என் இதழ்கள்...." அவள் முடிக்கவில்லை. அதற்குள் VNA எனும் முந்திரிக்கொட்டை முந்திக் கொண்டு வந்து "வில் யூ ப்ளீஸ் ஸ்டாப்பிட்" என்று அவளது கற்பனையை தடுத்து நிறுத்தினான்.
"VNA" என அவள் புரியாமலே அழைக்க "இது தப்பு.. இப்படி பேசாதீங்க ப்ளீஸ்.. என்னால இதையெல்லாம் ஏத்துக்க முடியலை... " என்று கத்தத் தொடங்கினான் வாசு.
"இன்னைக்கு ஒரு நாள் அதுவும் ஒரு தடவை பேசுனதுக்கே உங்களால தாங்க முடியலை.. எத்தனை நாள் நீங்க கதையில இப்படி புலம்புனதைக் கேட்டு எப்படியெல்லாம் நான் துடிச்சுப் போயிருப்பேன். அதுவும் சுஜீ, சுஜா, அப்படின்னு விதவிதமா நீங்க கூப்பிடுறதைப் பார்த்து சுஜாதாங்கிற பேர்லயே ஒரு வெறுப்பு... இந்த வெறுப்பை எப்படிக் காட்டுறது எங்க காட்டுறதுன்னு தெரியாம ஒரு நாள் கையை கிழிச்சுட்டு அடுத்து என்னோட மனவேதனையை தீர்த்துக்குறதுக்கான ஒரு வழியா அதுதான் மாறிப்போச்சு..." என்றாள் அவள்.
அவளது பேச்சியில் அவன் குழப்பமான மனநிலைக்கு ஆளாகி விட்டான்.கையை கிழிக்குறாளா... அப்போ இது அடிக்சனையும் தாண்டிய வேறு கோணம் என அவனுக்குப் புரிந்தது.
அவனின் மௌனத்தினை பார்த்தவள் "யார் நீ?... எங்க இருந்த இத்தனை நாளா?.. இந்த கேள்விதான் என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு" என்றாள் அவசரமாய்.
"வெயிட் வெயிட் சுஜாதா... ஒரு நிமிசம் நான் சொல்லுறதை தெளிவா கேட்டுட்டு அப்பறமா பேசு... ஒருத்தவங்களைப் பிடிச்சுட்டா நாம காரணமேயில்லாம அவங்க மேல அட்ராக்ட் ஆவோம்.. இது ஒருவிதமான அப்நார்மல் கண்டிசன் தான். ஆனா நம்ம மைண்ட் அதைக் கண்டினியூ பண்ணச் சொல்லி சொல்லிட்டே இருக்கும். இப்போ for example, ஏதாவது புடிச்ச ஆக்டர் அப்படின்னா அவங்களோட போட்டோவை டிபில வைக்குறது, அவங்க வீடியோ ஸ்டேட்டஸ்ல வைக்குறது, அவங்க பேஜ், இன்ஸ்ட்டா, டிவிட்டர்அக்கவுண்ட் எல்லாமே பாலோ பண்ணுறது. அவங்ககிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வராதுன்னு தெரிஞ்சும் ரிப்ளே பண்ணுறது... கொஞ்ச நாள் இப்படியே போறது அடுத்து மாறிடும். அதனால இதை ப்ராக்டிக்கலா புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க" என்றான் அவன் நீளமாய்.
"VNA இது எனக்குப் பொருந்தாது சாரி.." என்று அவன் மூச்சு வாங்க பேசியதற்கு பட்டென்று சில வார்த்தையில் சொல்லி முடித்தே விட்டாள்.
"லூசா நீ.. நான் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்கிறேன் நீ கேக்க மாட்டயா"
"நான் சொல்லுறதை நீங்க கேட்டா... நான் கேட்கிறதை நீங்க தந்தா.. நீங்க சொல்லுறதை நான் கேட்பேன்" என்று அவள் புதிர் போல சொல்ல "என்ன சொல்லு" என்றான் அவன்.
"இப்பவேவா..அதுக்குன்னு ஒரு டைம் இருக்கு அப்போ சொல்லுவேனாம். இப்போ வாசு தூங்குவீங்களாம். நான் போய் அப்லோட் பண்ணிட்டு வருவேனாம்" என்று சொல்ல அவன் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டான்.
"VNA நான் நீங்க தப்பிச்சு வெளிய போக டிரைப் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்"
"இவ்வளவு தூரம் நீ என்ன பாலோ பண்ணி என்னையே கடத்திட்டு வந்திருக்கேன்னா... நீ அவ்வளவு சீக்கிரமாக என்னை வெளிய போறதுக்கு அலோவ் பண்ண மாட்டேன்னு தெரியுது.. அப்பறம் ஏன் வீணா ரிஸ்க் எடுத்துட்டுன்னு தான் உக்காந்துட்டேன். ஆனா நீ உன்னோட லிமிட் தாண்டி வரமாட்டேன்னு நான் நம்புறேன். இல்லைன்னா அப்பறம் என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது.. பார்த்துக்கோ"
"ஆனா எனக்குத் தெரியும். நான் நினைச்சது நடக்கும். அவ்வளவுதான் so simple..." என்று அவள் சொல்ல அவனோ தன் கண்களை மூடிக் கொண்டு மௌனத்தில் உறைந்து போய்விட்டான்.
இனி அவனிடத்தில் இருந்து பதில்வராது என்று அறிந்தவள் அந்த லேப்டாப்பில் அவன் சேமித்து வைத்திருந்த அந்த பைலை ஓபன் செய்து அதில் கண்களை ஓடவிட்டாள்..
எப்போதும் போல் அவனது எழுத்துக்கள் மிகத் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருக்க இவள் வேகமாய் அதன் கீழே சில வார்த்தைகளை மட்டும் சேர்த்துக் கொண்டாள்...
இவன் பேரில்
இத்தனை மயக்கமேன்...
அப்படி எதுதான் மயக்கியது...
என்றே கேட்கிறது
அவன் விழிகள் அவளிடம்...!
ஒன்றா.. இரண்டா...
ஓராயிரம் காரணமிருக்கையில்...
இப்படிக் கேட்டால் எப்படியவள் சொல்வாள் பதில்...!!!
ஒன்றிரண்டை
மட்டுமாவது சொல்லேன்
இம்முறை
கெஞ்சியேக் கேட்க
ஒன்று நீ...
இன்னொன்றும் நீயென...!!
அவளுரைக்க அவன்
இதழ் விரிந்தது அழகாய்...
ப்ப்ப்....ப்ப்ப்பா....
இதோ அடுத்த காரணமென
நாணத்தோடு அவள் தயங்கிச் சொல்ல
அவள் முகம் இப்போதவன் கரத்தில்...
ஏந்திய வதனமதில்
மயக்கமும் தயக்கமும்
சரிக்குச் சரியாய் போட்டியிட
தயக்கம் தோல்வியால்
பின்வாங்கியது சட்டென...!!!
காரணம் கேட்டவனே
மயக்கத்தின்
காரணமாய் மாறியிருக்க...
தீரா மயக்கம்..
தீவிர காதலாய்...
காதல் தாண்டிய
காமமாய் உருமாற முயற்சிக்க...
காவல்காரியின்
கைப்பேசி சப்தமிட்டு
முத்தத்தின் முகவுரை எழுதுமுன்னரே
முடிவுரையை எழுதவைத்து
பெருஞ்சாபத்தினை பெற்றுக்கொண்டது...!!!
இவ்வாறு எழுதி டைப் செய்து முடித்ததும் வாவ் சுஜாதா நீ கூட நல்லாத்தான் எழுதுற... ஆனால் என்னதான் ஆயிரம் குட்டிக் கரணம் அடிச்சாலும் நீ VNA அளவுக்கு எழுத முடியாது. அந்த அளவுக்கு அறிவும் உனக்குக் கிடையாது என்று அவளையே அவள் திட்டிக் கொண்டு அந்த அத்தியாயத்தினை அப்லோட் செய்திருந்தாள்...
வாசுதேவன் தனது எழுத்துக்களால் எண்ணற்ற இதயங்களை கடத்தியிருக்க, இங்கு சுஜாதா அவனையே கடத்தியிருக்கிறாளே.. அவளது கடத்தல் திட்டம் வெற்றி பெறுமா..??? அவன் மனம் மாறுவானா???