• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 7

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 7

முதன்முறையாக எனக்கென உள்ள உலகத்தில் இன்னொருத்தி நுழைந்திருக்கிறாள் என் அனுமதி இல்லாமலே... என்ன செய்ய என்று தெரியாமலே நான் இப்படி இருக்கிறேனே என்ன காரணம்?... அவளை ஓங்கி நாலு அப்பு அப்பினால் என்ன? என்று உள்ளுக்குள் தோன்றினாலும் ஏனோ அமைதியாய் இருக்கச் சொல்லி உள்மனது சொல்லியது.


அதையும் மீறி அவளிடம் பேசக் கூட அவன் பிரியப்பட வில்லை. எப்படி என்னை கடத்தியிருக்க முடியும் என்று அவன் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.


"VNA எபி போஸ்ட் பண்ணிட்டேன்... செக் பண்ணிப் பார்க்குறீங்களா?" அவனிடம் பதிலில்லை.

"உங்ககிட்ட தான் சொல்லுறேன் VNA காது கேக்கலையா?" என்று அவள் மீண்டும் கேட்க அவனோ அசையாது கண்களின் மேல் தன் முழங்கையினை வைத்துபடி மௌனமாக இருந்தான்.


"இன்னுமா உங்களுக்கு மயக்கம் தெளியலை... "என்று அவள் ஆச்சர்யமாக கேட்க "எனக்குத் தெளிஞ்சுடுச்சு. ஆனா உங்களுக்குத் தான் தெளியாம இருக்கு.. ஒழுங்கா ஹாஸ்பிட்டல் போய் அட்மிட் ஆகிடுங்க ப்ளீஸ்" என்று அவன் தன்மையாக சொன்னான்.

"என்னையவா ஹாஸ்பிட்டல்ல போய் அட்மிட் ஆகச் சொல்லுறீங்க.. சரிதான் நீங்க சொன்னா கேட்டுக்கிட வேண்டியதுதான். ஆனா நான் போயிட்டா உங்களை யாரு பார்த்துக்குவா. அதுவும் இல்லாமல் ஹாஸ்பிட்டல் போறதுக்கு இன்னும் நாளிருக்கு. அப்போ நான் போகும் போது நீங்களும் தான் வருவீங்க என்று அவள் சொல்ல "உளறாம இருக்கீங்களா ப்ளீஸ்... தலை வலிக்குது" என்றான் அவன் பட்டென்று.


"ஓ தலை வலிக்குதா.. சாரி நேத்து கொஞ்சம் உங்களுக்கு ஓவர் டோஸ் குடுத்துட்டேன் போல" என்று அவள் வெகு சாதாரணமாக சொல்ல அவனோ அவளை வித்தியாசமாய் பார்க்கத் தொடங்கினான்.


"என்ன அப்படி பார்க்குறீங்க. பசங்க தான் பொண்ணுங்களை கடத்தணுமா என்ன? பொண்ணுங்களும் பசங்களை கடத்தலாம்"

"அதுக்கு பார்க்கலை. நிசமாவே உங்களுக்கு ஏதோ ப்ராப்ளம் இருக்கு அதுதான் பார்த்தேன்.."


"ஆமா எனக்கு ரொம்ப பெரிய பிரச்சனை இருக்கு.. சிலநேரம் தூங்கணும்னு தோணும்.. ஆனா தூக்கம் வராது உங்களோட எழுத்துதான் முன்னாடி முன்னாடி வந்து நிக்கும். VNA, உங்களை யாரு இவ்வளவு நல்லா எழுத சொன்னது. எனக்கென ஓர் உலகம்... என் வேலை.. அப்படின்னு தனியா ஜாலியா சுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் இந்த உலகமே அப்படியே வண்ணமயமானது மாதிரி ஆகிடுச்சு உங்களால..."

"அது எப்பவும் வண்ணமயமாத்தான் இருக்கும்"

"பட் எனக்கு அன்னைக்கு இருந்துதான் அப்படித் தோணுச்சு... அந்த ஒருநாள் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப் போடுமென நான் எதிர்பார்க்கவே இல்லை. படித்துவிட்டு கடந்து செல்பவள் தான் நான். ஆனால் முதன்முறையாய் படித்துவிட்டு வெறுமனே கடந்து செல்ல முடியாது கட்டுண்டு நின்றது உன் எழுத்தில் தான். மை வைத்து வசீயம் செய்வார்களென கேள்விப் பட்டிருக்கின்றேன்.. அதன் உண்மையான அர்த்தம் உன் எழுத்தின் வடிவம் உள்ளே இறங்கி என்னை மயக்கியதில் புரிந்து கொண்டேன்..." என்று அவனின் எழுத்துக்களை சிலாகித்து அவள் பாராட்ட

"வெயிட் வெயிட்... இது எல்லாருக்கும் இருக்குறதுதான். அதுக்காக இதை ரொம்ப பெரிய விசயமா திங்க் பண்ணி நீங்க காம்ப்ளீகேட் பண்ணிக்கிறீங்க அவ்வளவுதான் நான் சொல்லுவேன். எழுத்தை ரசிக்கும் போது ஒரு ஸ்டேஜ்ல இது இப்படி கன்வர்ட் ஆகும் தான். பட் கொஞ்சம் மெச்சூர்ட் மைண்டோட திங்க் பண்ணிப் பாருங்க. உங்களுக்கே இது புரியும். ரசனை என்பது..."


"VNA ஸ்டாப்.. எனக்கு உங்க எழுத்துக்களை பிடிச்சுருக்கு. அந்த எழுத்து உள்ள போய் போய்.. அதை எழுதுன உங்களை அதைவிடப் பிடிச்சுப் போயிடுச்சு. பிடித்தம் அப்படிங்கிறது எல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணமான வார்த்தை. என்னோட நிலையை விளக்கிச் சொல்ல தமிழ்ல வார்த்தை இல்லை அப்படிங்கிறது தான் உண்மை. ஏன் இவ்வளவு எழுதுறீங்களே உங்களால கூட என்னோட நிலைமையை சொல்ல முடியாது" என்றதும்

"எழுத்தின் மீது கொண்ட மயக்கம் எழுத்தாளனின் மீது இச்சையாக மாறிவிட்டது..." என்று அவனே சொல்ல "ம்ம் எக்சாட்லி.." என்றாள் அவள்.

"யோசிச்சுப் பார்த்தா இது சரியில்லைன்னு உங்க மனசே உங்ககிட்ட சொல்லும்"

"அது சொல்லாது. ஏன்னா அங்க VNA தான் இருக்காங்க. அதுமட்டும் இல்லாமல் நான் யோசிச்சா இது சரியில்லைன்னு என் மனசு சொல்லும்னா நான் கண்டிப்பா யோசிக்கவே மாட்டேன்... இதை தப்புன்னு யார் சொன்னாலும் நான் கேட்கவே மாட்டேன். அது நீங்களா இருந்தாலும் தான்‌. எனக்கு VNA கூட இருக்கணும். அதுக்காக உங்க கதையில வர்ற சுஜாதா மாதிரி உங்களை பிரிஞ்சு உங்களையே நினைச்சுட்டே இருக்க முடியாது. எனக்கு உன் கூடவே இருக்கணும். உன் கையைப் பிடிச்சுக்கிடணும். உன்னை கிஸ் பண்ணனும்... உன்னை.... " இன்னும் என்ன சொல்ல வந்தாளோ அதற்குள் வாசுவுக்கு கோபம் வந்துவிட்டது.


"இன்னொரு தடவை இந்த மாதிரி கிறுக்குத்தனமா உளருனா அவ்வளவுதான் அப்படியே அறைஞ்சுடுவேன். யார் நீ...? என்ன பேசுற. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா. படிச்சுருக்க.. பொறுப்பான ஒரு போஸ்ட்ல இருக்க. இப்படி இருந்தா நீ எப்படி பப்ளிக்க காப்பாத்துவ.. இங்க பாரு.. ஒழுங்கா இதையெல்லாம் மறந்துட்டு வேலையைப்பாரு" என்று அவன் வார்த்தைகள் சூடாய் வந்து விழுந்தது.


"அது ஏன் VNA பொண்ணுங்களா வந்து பேசுனா, அவங்க விருப்பத்தைச் சொன்னா உங்களுக்கு எல்லாம் ஏத்துக்கணும்னு மனசு வரமாட்டேங்குது. நானும் நிறைய பார்த்துட்டேன். அதுவும் கொஞ்சம் போல்ட்டா பொண்ணுங்க இந்த விசயத்தை அப்ரோச் பண்ணா பசங்க அப்படியே ஈசியா ரிஜெக்ட் பண்ணிடுறீங்க. ஏன்?"

"ஏய் நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசிட்டு இருக்க... உளறாத நான் அப்படி எல்லாம் நினைக்கல"

"பொதுவா தான் சொன்னேன். உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கிட்டோம்னா அதுல நீலாம்பரி போல்டா காதலை சொல்லுவாங்க. பட் அவங்க காதலை நான் ஒரு பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்னு மறுத்துடுவாங்க ஹீரோ சார். ஏன் ஹீரோவுக்கு ஈக்குவலா அந்த பொண்ணு போல்டா இருந்தா அவங்க பொண்ணு கிடையாதா... அது ஏன் யாருக்குமே பிடிக்குறது இல்லை. எல்லாரும் ஏன் இப்படி இருக்கீங்க"


"ஏய் நான் அப்படி இல்லை. என்னோட ஸ்டோரில எல்லாமே பொண்ணுங்களை டிபரண்ட் ஆங்கிள்ல தான் காட்டிருப்பேன். உனக்கேத் தெரியும் தானே"


"ஆமா காட்டியிருப்பீங்க. பட் அப்படிப்பட்ட உங்களாலயே என் மனசை புரிஞ்சுக்க முடியலையே"


"ஐயோ போல்ட்டா இருக்குறது வேற.. இன்னொருத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணுறதுங்கிறது வேற. நீ பண்ணுறது லவ்வுன்னு நீயே நினைச்சுட்டு இருக்க.. பட் இது லவ் இல்லை. அதுதான் உண்மை"


"அப்போ லஸ்ட் அப்படின்னு சொல்ல வர்றீங்களா.. அதுவும் லவ்ல ஒரு பார்ட்தானே..."

"ஓ காட்...ப்ளீஸ் என்னைத் தனியா விடு என்னால பதில் சொல்லக் கூட முடியலை" என்று அவன் சோர்வாய் சொல்ல "முடியாது. எனக்கு நீங்க வேண்டும்" என்று அவள் சொன்னதும் "கிடைக்க மாட்டேன்" என்று அழுத்தமாய் வெளியே வந்தது அவனது குரல். அதில் இரும்பின் உறுதியே தெரிந்தது.


"நான் அடைஞ்சே தீருவேன்" அதைவிட அதீத அழுத்தமாய் அவளது குரல் அந்த அறையின் சுவற்றில் பட்டுத் அவன் செவியை அடைந்தது.

"என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு. உன்னால என்னை நெருங்கவே முடியாது"

"நெருங்கிட்டா"

"இந்த வாசு இருக்கவே மாட்டான்"
"எஸ் கரெக்ட்.. இந்த வாசு இருக்க மாட்டான். என்னோட VNA வா மாறியிருப்பான்"

"அப்படி ஒன்னு நடக்கணும்னா அதுக்கு நான் மனசு வைக்கணும். என் மனசு சொல்லாத எதையும் நான் ஏத்துக்க மாட்டேன்"

"சொல்ல வைக்குறேன்"

"இங்க இருந்தாத்தானே நீ இந்த மாதிரி லூசுத்தனமான வேலை எல்லாம் செஞ்சுட்டு இருப்ப. நான் கிளம்புறேன் " என்று அவன் சொல்ல "அவ்வளவு சீக்கிரம் எல்லாம் என்னை விட்டுட்டுப் போக முடியாது VNA. ஏன்னா நமக்குள்ள டீல் பண்ண இன்னும் எவ்வளவோ விசயம் இருக்கு" என்று சொல்லச் சொல்ல அவன் கேட்காமல் அந்த அறையில் இருந்து வேகமாய் வெளியேறினான்.


ஸ்டூப்பிட்... நமக்குன்னே வந்து சேருவாங்க போல.. ச்சே ச்சே... இப்படியா பிஹேவ் பண்ணுவாங்க. எதிர்ல இருக்குறவங்க எந்த மாதிரிமான சூழ்நிலையில இருக்காங்கன்னு கூடத் தெரிஞ்சுக்காம அவபாட்டுக்கு இஷ்டத்துக்கு உளறிட்டு இருக்கா என்று புலம்பியபடி நடந்துக் கொண்டிருந்தவனின் கழுத்தில் திடீரென வலி ஏற்பட்டது...


என்ன நடந்ததென்று யோசித்துக் கொண்டிருக்கையிலே அவன் மூளை கொஞ்சங் கொஞ்சமாய் மயக்கத்திற்குத் தள்ளப்பட்டது.

தள்ளாடி தள்ளாடி சாய்ந்தவனை தன் மார்பில் சாய்த்துக் கொண்டதும் "சுஜாதா" என்றவனின் இதழ்கள் மெல்லமாய் முணுமுணுத்துக்கொண்டது.


"நாந்தான்... உங்க சுஜாதாவே தான்.. ப்ளீஸ் என்னை விட்டுப் போகாதீங்க VNA" என்றவளின் குரல் கரகரத்து ஒலித்தது.

அது அவனது சுஜாதாவினைப் போலவே இருப்பதாக அவனது மூளையும் மயக்கத்தின் மாயத்தில் எண்ணிக் கொள்ள.. அவன் கரங்களோ அவள் இடையினை அழுந்தப் பற்றிக் கொள்ள முற்றிலும் மயக்கத்தில் ஆழ்ந்துப் போய்விட்டான்.

அவனை படுக்கையில் கிடத்திவிட்டு அவன் அருகே தானும் படுத்துக் கொண்டாள் அவள். சீராய் வந்து கொண்டிருந்த அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் முட்டி மோத அந்த உணர்வின் தாக்கத்தினை அவளால் தாங்கவே இயலவில்லை.

இவ்வளவு நெருக்கத்தில் இப்போதுதான் அவனைப் பார்க்கிறாள்.
வீசிய காற்றின் வேகத்திற்கு ஏற்ப அவன் முடிகள் அடங்காது ஆடிக் கொண்டிருக்க அது அவனுக்கு இன்னும் கவர்ச்சியாக இருந்தது. இவனை யார் இவ்வளவு அழகா பொறக்கச் சொன்னது இடியட் என அவள் மனம் சந்தோசமாய் சலித்துக் கொண்டது.


இன்னும் அவன் அருகே தள்ளி வர அவன் மூக்கின் நுனி அவளின் கன்னத்தில் உரச அவ்வளவுதான் அப்படியே சிலிர்த்து விட்டாள்.

இன்னதென்று வரையறுக்க இயலாத உணர்வால் அவள் மனதோடு தேகமும் விண்ணில் பறப்பது போலானது.


"நீ மயக்கத்தில் இருக்கிறாய்
நான் மயங்கியே இருக்கிறேன்.
கிட்டத்தட்ட இருவர் நிலையும் ஒன்றுதான் VNA. ஆனாலும் உன்னால் என் நிலையை புரிந்துக் கொள்ள இயலாது. உன் உலகம் வேறு என்றே வரையறுத்து நீ வாழ்கிறாய். நான் உன்னையே உலகமாய் பாவித்து வாழ்கிறேன்.உன்னைத் தொட்டுப் பார்த்தே தினம் தினம் வாழவேண்டுமென்று நான் நினைக்க இப்போது அருகில் நீ இருக்கிறாய். ஆனால் நினைவற்றிருக்கும் இந்நிலையிலும் கூட உன்னால் சுஜாதாவினை மறக்க முடியவில்லை. நிழலுக்காய் நீ உருகித் தவிக்கும் இவ்வேளையில் அந்நிழலாய் இல்லையென மனம் தவித்தாலும் என்னை மாதிரி கிறுக்காய் அவளால் காதலிக்க முடியாதே என்ற ஒரு நினைவாலே நான் இன்னும் அவளைக் கொல்லாது விட்டு வைத்திருக்கிறேன்.. உன்னை நினைத்து உருகும் உரிமையும் உன்னை நினைப்போரை உருக்கும் உரிமையும் எனக்கு மட்டுமே உண்டு... எனக்கு மட்டுமே உண்டு‌" என்றவள் அப்படியே அவன் கன்னத்தின் மீதே தன் கன்னம் வைத்துவிட்டு அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு அவனுக்கு நெருக்கமாய் மாறிவிட்டாள்...

இவளின் உளறல், இவளின் நெருக்கம்.. மயக்கம் தாண்டி அந்த மனிதனுக்குப் புரியுமா???