அத்தியாயம் 2
இரவு விளக்கு ஒளியில் திவ்யாவை தன்புறம் கண்டவன் வேகமாய் விளக்கை எறியவிட்டான்.
"என்ன வேணும்?" குரலில் சற்றே எரிச்சல் வந்தது அவனுக்கு.
அனைவரும் எதிர்பார்த்த திருமணத்திற்கே அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருந்தவன் இப்போது எதிர்பாரா இந்த திருமணத்தில் கொஞ்சம் மனதை ஒருநிலைபடுத்த வேண்டி திவ்யாவிற்கும் சேர்த்து இவன் நேரம் எடுத்துக் கொள்ள, தன்முன் தானாய் வந்து நிற்பவளை பார்த்து கோபம் வெளிவரக் காத்துக் கொண்டிருந்தது.
"என்ன வேண்டும்?" என்று வேண்டாத குரலில் அவன் கேட்க, வாழ்க்கையில் முதல் முறையாய் மெலிதான கோபம் வந்தது திவ்யாவிற்கு.
எதையும் எளிதாய் ஏற்று கொள்பவள். மென்மையானவள். அதை விடவும் யாரையும் குறை சொல்ல பிடிக்காதவள். அன்னை கேட்ட ஒரே காரணத்திற்காக சொந்தம் என்றாலும் முன்பின் பார்த்திராத கார்த்திகேயனை மணமுடிக்க சம்மதம் கூறியவள்.
இவ்வளவு பெயர் கொண்ட திவி அவன்முன் நிற்பது தனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கவோ, கணவனான கார்த்திகேயனை பற்றி தெரிந்து கொள்ளவோ அல்ல. பசி என்ற வார்த்தையை சொல்லவே!
கார்த்திகேயன் வெண்ணிலா திருமணத்தை வேடிக்கை பார்க்க அன்னையோடு வந்திருந்தாள் திவி. காலையில் உப்புமா செய்து கொடுத்த அன்னை மதியம் திருமணம் முடிந்து மண்டபத்தில் சாப்பிட்டு கொள்ளலாம் என சொல்லி அழைத்து வந்திருக்க, நடந்த களேபரத்தில் திவியை சாப்பிட்டாயா என்று கூட யாரும் கேட்கவில்லை.
தன் அன்னையே மறந்திருந்த போது யாரை குற்றம் சொல்ல முடியும். சரி இரவு அதற்கும் சேர்த்து சாப்பிடலாம் என நினைத்தவள் கனவில் கல்லை போட்டு தூங்கும் நேரம் வந்து என்ன வேண்டும் என கேட்கிறானே! பின் கோபம் வராமல் என்ன செய்யும்?
"அது வந்து...நான் இந்த ஆப்பிளை எடுத்துக்கவா?" திவ்யாவிற்கு அவ்வளவு கஷ்டமாய் இருந்தது. வந்த முதல் நாளே தயங்கி கெஞ்சி நிற்க வேண்டிய நிலையை நினைத்து.
அவனும் கண்களை சுருக்கி புரியவில்லை எனும் பார்வை பார்த்தவன் "எடுத்துக்கோ" என்றுவிட்டு படுத்து கண்களை மூடியவன் சட்டென கண் திறந்து எழுந்து அமர்ந்தான்.
"ஆமா சாப்பிட்டியா?" ஒற்றை கேள்வி கேட்டதும் 'யப்பா! இப்பவாச்சும் கேட்டானே' என நினைத்தவள் வேகமாய் இல்லை என தலையாட்ட, இரு கைகளாலும் தன் தலைகோதிக் கொண்டவனுக்கு கோபம் இப்போது அன்னை மேல் திரும்பியது.
அவள் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவன் படிகளில் இறங்கிக் கொண்டே "ம்மா! ம்மா!" என கத்த, அப்போது தான் உறங்க சென்றவரும் எழுந்து வேகமாய் வந்தார் உடன் ஜெகதீசனும்.
"என்னடா என்னாச்சு?" இன்னும் அவள் கைப்பிடித்து அவன் நிற்க, அவளோ 'இதேதடா வம்பா போச்சு' என்று தான் நின்றாள்.
"இப்போது தானே வந்தான்.. அதற்குள்ளா சண்டை இருவருக்கும்?" என்று கலா பார்த்து நின்றார்.
"இவளை எதுக்காக இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க?" கார்த்திகேயன் கேள்வியில் 'ங்யே' என திவி முழிக்க, இதென்ன கேள்வி என்று பார்த்தனர் பெரியவர்கள்.
"என்னடா கேள்வி இது? அவளுக்கு நீ தாலி கட்டியிருக்குற.." என்ற கலாவிற்கு ஏடாகூடமாய் ஒரு சந்தேகம் வர திவி அருகே வந்தார்.
"என்னம்மா பண்ணினான்? எதாவது..." அவள் காதுக்குள் கேட்டாலும் அவன் காதுகளிலும் விழ தவறவில்லை.
"ம்மா!" அவன் கத்திவிட, திவ்யாவிற்கும் தன் அத்தையின் எண்ணம் புரிந்து சிரிப்பை அடக்கி நின்றாள்.
"அட இரேன்டா" என்றவர் மேலும் திவ்யா காதை கடிக்கும் முன்
"ஏய்! நீ என்கிட்ட சொன்னதை இவங்ககிட்ட சொல்லு" என்றான் அவன்.
'பசிக்கு ஒரு ஆப்பிள் கேட்டது குத்தமாடா?' என நினைத்தவள் பசி என்பதை சொல்ல தயக்கமாய் நிற்க அப்படியே நின்றாள்.
"என்னம்மா சொன்ன? டேய் கார்த்தி நீயாவது சொல்லேன்.. உன் அப்பா அப்பவே டேப்லெட் போட்டாச்சு.. அங்கே பாரு நிற்க முடியலை அவருக்கு.. என்ன பிரச்சனையோன்னு நிக்கிறாரு"
"ப்ச்! இப்ப சொல்ல போறியா இல்லையா நீ?" அவன் விடப் போவதில்லை என தெரிந்ததும் விவரமாய் கூறினாள் திவ்யா.
"இல்ல அத்தை, நான் காலையிலே கல்யாணத்துக்கு வரும்போது சாப்பிட்டது... அப்புறம் நடந்த பிரச்சனைல சாப்பிடல.. இப்பவும்..." என்று இழுக்க, மகனின் கோபம் புரிந்த கலாவிற்கு தன்மேலேயே கோபம் வராமல் இல்லை.
"ச்ச! வயசாக வயசாக எனக்கு அறிவும் கம்மியாகிட்டே போகுது போல டா. மன்னிச்சுடு மா.. இவனை காணும்னு பார்த்துட்டு இருந்ததுல நீ சாப்பிட்டியானு கூட கவனிக்க மறந்துட்டேன்" பேசிக்கொண்டே கையோடு அழைத்து சென்று டைனிங் டேபிள் முன் அமர வைத்தார்.
தோசை வார்ப்பதற்கு கல்லை அடுப்பில் வைக்கவும் திவ்யா எழுந்து சென்றாள்.
"நான் போட்டுக்குறேன் அத்தை" என்றவளை விடாமல் மாவை ஊற்றவும் கார்த்தியும் சமையலறை உள்ளே சென்றான்.
"ம்மா! நீங்க போய் அப்பாவை பாருங்க" என்றவன் வார்த்தைகளில் அவனை கூர்ந்து பார்த்தவர்
"பொண்டாட்டிக்கு சமைச்சு குடுப்பானா இருக்கும்... நாம எதுக்கு இடையில" சத்தமாய் அவர் சொல்லவும் அவன் முறைக்க அதையும் பார்த்துக் கொண்டே சென்றுவிட்டார் கலா.
அத்தையின் பேச்சுக்கள் யாவும் திவ்யாவிற்கு ஒரு புன்னகையை தர சிரிப்புடனே பார்த்து நின்றாள்.
"அம்மாக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி" என்றவன் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
"முதல் தோசையை அவள் எடுக்கவும் "சாப்பிடுறீங்களா?" என்று கேட்க,
"ம்ம்! ஓகே" பிகு செய்யாமல் கூறியவன் அப்படியே அமர்ந்து இரண்டு தோசை சாப்பிட, மீண்டும் உள்ளே வந்தார் கலா.
அவர் வரவும் வாய் வரை கொண்டு சென்ற தோசை அப்படியே நிற்க அவரை பார்த்தான் கார்த்தி
இருவரையும் மாறி மாறி பார்த்த கலா "ம்ம்ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்... நான் தண்ணீர் எடுக்க தான் வந்தேன்.. ஒன்னும் உளவு பார்க்க வரல" என்றவர் நீரோடு சென்றுவிட கார்த்திக்கும் இப்போது சிரித்துவிட்டான்.
திவ்யாவும் சிரித்தவள் தனக்கு தேவையானதை போட்டுக் கொள்ள அவள் சாப்பிடும் வரை அவளருகில் அமர்ந்திருந்தான் கார்த்தி.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வரவும் கார்த்தி கதவை அடைத்து விளக்கை அனைத்து படுத்துவிட,
'இவன் ஒரு பொண்ணை லவ் பண்ணினதாவும் அந்த பொண்ணு விட்டு போய்ட்டதாவும் அம்மா சொன்னாங்களே! அப்பவும் கூட இன்னொரு பொண்ணை அம்மாக்காகனு சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகியிருக்கான். அதுவிட்டு போகவும் யாருன்னே தெரியாத என்னையும் சரின்னு கட்டிகிட்டான். இவன் நல்லவனா கெட்டவனா?' என்ற ஆராய்ச்சியில் இறங்கியவாறு படுத்திருந்தாள் திவ்யா.
அவனை சம்மதிக்க வைக்க கலா குட்டிக்கரணம் எல்லாம் அடித்ததை இவள் அறியவில்லை.
"ரொம்ப மோசமானவனா எல்லாம் தெரியலை.. ஆஊனு கத்தி சண்டை போடாமல் நல்லா தான் இருக்கிறான்" என அவனை பற்றி மனதுக்குள் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவள் அப்படியே தூங்கியும் போனாள்.
கார்த்தியும் திவ்யா மற்றும் அவள் குடும்பத்தை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
தன்னைவிட வசதியான வீட்டுப் பெண். எப்படி இங்கே பொருந்தி போவாள்? என்ற ஒரு எண்ணம் தான் திவ்யா மேல் முதலில் வந்தது.
அதுவும் புகழ் தன்னை பார்த்த பார்வை. அது ஏனோ இன்னும் அவனை விழ செய்தது. ஆனாலும் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை என்ற பார்வை பார்த்து தான் நின்றான் புகழைப் பார்த்து.
இப்போது ஆப்பிள் கேட்டு தன்முன் வந்து நின்றவளை தவறாய் நினைக்கவும் முடியவும் இல்லை.
காதல் தோல்வியில் அவன் துவண்டு போகவெல்லாம் இல்லை. அவளே வந்து காதலை கூறினாள். மறுக்க காரணம் இல்லை என்பதால் ஏற்று கொண்டான். மூன்றே மாதங்களில் வேண்டாம் என்று சொல்லிச் சென்றாள். வருத்தமாய் தான் இருந்தான்.
முதலில் எதுவும் புரியவில்லை அவனுக்கு. பணம் தான் அவள் விட்டு செல்ல காரணம் என்று தெரிந்த போது அப்போதே அவளின் நினைவுகளை விட்டுவிட்டான். மீண்டு தெளிந்து வந்துவிட்டான்.
இருந்தாலும் திருமணம் பற்றி யோசிக்க கூட முடியவில்லை. வேண்டாம் என்றவனை அன்னையின் போலி மிரட்டல் தெரிந்தாலும் அவருக்காக மணமேடை ஏறியவன் பெண்ணை காணவில்லை என்றதும் பெண்கள் மேல் கோபம் தான் வந்தது.
தனக்கு என்ன வேண்டும், எந்த நேரத்தில் வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என தான் அவன் மனம் குறை சொல்லிக் கொண்டிருந்தது.
அப்போது சுகுணா அத்தையிடம் போய் அன்னை நின்றதும் இன்னும் கோபம். முதலில் அன்னை ஏன் இன்னொருவர் முன் கெஞ்சி நிற்க வேண்டும் என்ற கேள்வி.. இரண்டாவது அவர்கள் குடும்ப அந்தஸ்து பார்த்து வேண்டாம் என்றால் இன்னும் அசிங்கம்.. மூன்றாவது பெண்களே இப்படி தானோ என்ற எண்ணம். இதில் புகழின் 'இவனுக்கா?' எனும் பார்வை வேறு.
இப்படி குழம்பி இருந்தவனை கலா சம்மதிக்க வைத்தது எல்லாம் தெய்வ செயல் தான்.
திவ்யாவை பற்றி எதுவும் தெரியாது. இப்போது கேட்கும் எண்ணமும் இல்லை. சில நாட்கள் போகட்டும் என நினைத்து கண்மூடியவனும் தூங்கிவிட்டான்.
காலையில் கார்த்தி கண் விழித்த போது அவனுக்கு வெகு அருகில் இருந்தது திவ்யாவின் முகம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
தூக்கத்தில் இருவரும் திரும்பியிருக்க, அவள் முகத்தை அருகில் பார்த்தவன் அதிரவும் இல்லை, நெருங்கவும் இல்லை, விலகவும் இல்லை.
அப்படியே அவள் முகத்தை பார்த்தவாறே அவன் படுத்திருக்க, உறக்கத்தில் எழுந்த கையை தலையணையில் கை வைப்பதாய் அவன் முகத்தில் போட்டாள் திவ்யா.
அதில் விழி விரித்து அவளை பார்திருந்தவன் இதழ்களும் லேசாய் விரிந்தது.
லேசான தாடி குத்தவும் அவள் விழித்திருக்கலாம். மேலும் கைகளால் தலையணை என நினைத்து தடவி பார்த்தவள் அதன் சொரசொரபில் மெலிதாய் கண் விழிக்க, விரிந்த கண்களும் சிரித்த உதடுகளுமாய் காட்சி அளித்தான் கார்த்தி.
திடுதிடுவென எழுந்தவள் சுற்றிமுற்றி பார்க்க அப்போது தான் நேற்றைய தன் திருமணமும் அடுத்து நடந்த நிகழ்வுகளும் ஞாபகம் வந்தது. அதில் இன்னுமே சத்தமாய் சிரித்தான் கார்த்தி.
அசடு வழிய சிரித்தவளும் பாத்ரூம் சென்று ஓடி ஒளிந்து கொண்டாள்.
காலையிலே ஒரு இதமான மனநிலை தான் இருவருக்கும். வேறெதுவும் நினைக்க வேண்டாம் என்பதாய் இருந்தது அந்த இதம்.
காதல் தொடரும்..