• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 3

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அத்தியாயம் 3

"ம்மா என்ன டிபன்?" கார்த்தி கேட்க,

"உன் பொண்டாட்டிகிட்ட தான் கேட்கணும் டா.. உள்ளே போய் ரெண்டு மணி நேரம் ஆச்சு.. சாப்பாடு கிடைக்குமான்னு சந்தேகம் தான்" என்றார் கலா கிண்டலாய்.

"சரி ஆபீஸ்க்கு டைம் ஆச்சு.. நான் கேன்டீன்ல சாப்பிட்டுக்குறேன்" கிண்டலை தொடர்ந்து கார்த்திக்கும் எழ,

"அய்யோ ஒரு நிமிஷம்... அத்தை நான் அப்பவே முடிச்சுட்டேன்.. எல்லாரும் வாங்க சாப்பிடலாம்" என்றாள் திவ்யா.

"ம்மா! ஏன் முதல் நாளே விஷப்பரீட்சை? நீங்க சாப்பிடுங்க.. ஈவினிங் நான் வரும்போது நீங்க நல்லா இருந்தால் நாளையில் இருந்து நான் கன்டினியூ பண்ணிக்குறேன்" என்றவனை திவ்யா முறைக்க,

"நேத்து கல்யாணம் பண்ணினவன் பேச்சாடா இது? இன்னைக்கு வீட்டை விட்டு வெளில போன..." கலா சொல்ல,

"அதுக்கு ஏன் அவனை சொல்ற? மருமக பண்ணின சாப்பாட்டை குடு.. ஒரு வாரம் வெளில போகவே மாட்டான்" என்றவாறு வந்தார் ஜெகதீசன்.

"மாமா! நீங்களுமா?" என்று திவ்யா பாவமாய் கேட்க, அதில் சிரித்துக் கொண்டிருந்தான் கார்த்தி.

அதன்பின் கதை அளந்து கொண்டே கலா பரிமாற திவ்யாவையும் கார்த்தியுடன் அமர்ந்து சாப்பிட வைத்தார்.

"இப்படி தான்மா.. ஒருவாட்டி என்ன பண்ணினான்! நானும் இவரும் என் மகனை பார்த்திங்களா... என் மகனை பார்த்திங்களானு அழுதுட்டே ஊரு முழுக்க இவனை தேடினோம். உன் மாமா என்னை பயங்கரமா திட்டவெல்லாம் செஞ்சாரு.. எங்கே தேடியும் கிடைக்காமல் வீட்டுக்கு வந்து அழுதுட்டு உட்கார்ந்தால்.... அம்மா.. அம்மான்னு சத்தம். எங்கேருந்து வருதுன்னு வீடு முழுக்க தேடினால் காஸ் சிலிண்டருக்கு பின்னாடி ஒளிஞ்சு கிடக்குறான். கேட்டால் இதுக்கு பேரு தான் ஒளிஞ்சு விளையாடுறதாம்... அப்ப குடுத்தேன் பாரு அடி..."

காலை டிபன் வைத்தவாறு பேச ஆரம்பித்த கலா திவ்யாவிடம் பேசிக் கொண்டே இருக்க, கன்னத்தில் கைவைத்து அமர்ந்து விட்டனர் கார்த்தியும் ஜெகதீசனும்.

கார்த்தியின் போன் அழைப்பில் தான் திவ்யாவின் கவனமும் கலாவிடம் இருந்து கலைந்தது. அவ்வளவு சுவாரஸ்யமாய் அவர் பேச பேச கேட்டுக் கொண்டிருந்தாள்.

"ம்மா! ஆபீஸ் கால்.. போயே ஆகணும். ஒன் ஹவர்ல வந்துடுறேன்.. இன்னும் கதையளந்துட்டு இருக்காமல் மதியத்துக்கு ஏதாவது ரெடி பண்ணுங்க" என்றவன் திவ்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.

"இவன் ஒருத்தன் ஊருல அவன் அவன் சும்மா உட்கார்ந்து வேலை பார்த்தேன்னு சொல்லிட்டு சம்பளம் வாங்கிட்டு போவான்.. இவன் என்னடான்னா நீதி, நேர்மை நியாயம்னு கூவுறான்" என்றவர் காய்களை எடுத்துவர திவ்யாவும் அவரோடு சேர்ந்து காய்களை அறிந்தாள்.

"அவங்க என்ன வேலை பார்க்குறாங்க அத்தை?" என்று அவள் கேட்க,

"அப்ப அதைகூட நைட்டு பேசலையா நீங்க?" என்ற கேள்வியில் தன் தவறு புரிந்தது திவ்யாவிற்கு.

"இல்லை அத்தை... அது டையர்ட்ல..."

"ரொம்ப இழுக்காத டி.. அதான் வரலைல விட்டுடு" என்றவர் "அவன் காதல் தோல்வினு தாடி வச்சுட்டு எல்லாம் சுத்தி திரியல திவி. பணத்துக்காக சுத்திறதுக்கு யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டா போல அது தான் அவனை ரொம்ப பாதிச்சுடுச்சி... கல்யாணமே வேண்டாம்னு எல்லாம் சொல்லல... இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னு தான் சொன்னான். நான் தான் கேட்காமல் ரெடி பண்ணினேன்.... அந்த பொண்ணு வெண்ணிலா எப்படி சிரிச்சு சிரிச்சு பேசினா தெரியுமா? நல்லா வாழைப்பழம் மாதிரியே பேசினா மா" எள்ளும் கொள்ளும் வெடிக்க கலா சொல்ல, கேட்டுக் கொண்டு வந்தவள் முடிவில் சிரித்துவிட்டாள்.

"ம்ம் இப்ப சிரிக்குறோம்! அந்த இடத்துல கார்த்திக்கு எப்படி இருந்திருக்கும்?" என்றவர் பேச்சில் சிரிப்பை நிறுத்தினாள்.

"ஏற்கனவே பணம்னு ஏமாத்திட்டு போய்ட்டா ஒருத்தி... இப்பவும் இன்னோருத்திட்ட ஏமாந்தா அவன் தாங்குவானா? இல்ல திரும்ப கல்யாணம் தான் பண்ணிப்பானா?" அவர் சொல்லும் போதே கண்ணீர் கட்டி விட்டது கண்களில்.

"இப்ப என்ன அத்தை அதான் நான் வந்துட்டேனே! இப்ப அந்த பொண்ணு போய்டுச்சேன்னு அழறீங்களா இல்ல இவள கட்டி வச்சுட்டோமேனு அழறீங்களா?" அவரை சிரிக்க வைக்கவே அவ்வாறு கேட்டாள் அவள்.

"அடி கழுத! என்ன பேச்சு பேசற? இப்ப தான் எனக்கு தங்கமான மருமக கிடைச்சுட்டாளே நான் ஏன் அழ போறேன். நான் என்ன சொல்ல வர்றேன்னா கார்த்திக்கு கோபம் எல்லாம் பெருசா வராது.. ஆனால் கொஞ்சம் முரண்டு பிடிப்பான்.. அதை மட்டும் பார்த்துக்கோ.. அவனுக்கு ஏத்த மாதிரி நீயும் பேசாமல் தள்ளியே போகாத! கொஞ்சம் இழுத்து புடி புரியுதா?"

கணவனை கைக்குள் வைத்துக் கொள்ளும் வித்தையை மருமகளுக்கு மாமியார் சொல்லி கொடுக்க புரிந்தோ புரியாமலோ கேட்டுக் கொண்டாள் திவ்யா.

"சரி நீ போய் ரெஸ்ட் எடு" என்று கலா சொல்ல,

"நீங்க இன்னும் அவர் என்ன வேலை பாக்குறாருன்னு சொல்லவே இல்லையே?" என்றாள் திவ்யா.

"அடியே போக்கத்தவளே! இவ்வளவு நேரம் அதை தானே சொன்னேன்? எல்லாமே நான் சொல்லிட்டா அவன்கிட்ட போய் என்ன பேசுவ?"

"ஓஹ் ஆமால்ல! தேங்க்ஸ் அத்தை"

"ஆண்டவா! மகனை மாதிரியே மக்கு மகளையும் கொடுத்துட்டியே!" என்றவர் அவளை சிறிது நேர ஓய்வுக்கு அனுப்பிவிட, இவளும் வேறு வழி இல்லாமல் வந்துவிட்டாள் அறைக்கு.

"இப்ப அத்தை என்னை என்ன பண்ண சொல்றாங்க? கார்த்தி பேச மாட்டாரு நானா போய் பேசணுமா இல்ல அவருக்கு பேச தெரியாதுனு நான் பேச வைக்கணுமா?" என்று யோசிக்க,

'உனக்கே ரெண்டும் தெரியாதே டி' என்று குமட்டில் குத்தியது மனசாட்சி..

"சரி அதான் பாயிண்ட் குடுத்துருக்காங்களே அத்தை... அதுலயே ஸ்டார்ட் பண்ணுவோம்" என நினைத்தவள் முதல் முதலில் மணமகனாய் மனமேடையில் அவன் அமர்ந்திருந்த தோற்றத்தை நினைத்தாள்.

பின் நினைவுகள் அடுத்தடுத்து நிகழ்வற்றை கண்முன் கொண்டு வர பாதகம் என எதுவும் இல்லை அவளுக்கு.

"இன்னும் சாப்பிடாமல் என்ன பண்ற?" என்ற கேள்வியில் அவள் திடுக்கிட்டு திரும்ப அங்கே கார்த்தி தான் நின்றிருந்தான்.

"இல்லை... சும்மா தான் யோசிச்சுட்டு இருந்தேன்"

"சரி வா சாப்பிடலாம். அம்மா கூப்பிட்டாங்க" என்றவன் பின் சென்றவள்,

இவ்வளவு நேரமாய் கனவிலா இருந்தோம் என்று தன்னை நினைத்தே அதிசயித்துக் கொண்டாள். எப்படியும் அவன் சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும்.

"ஏண்டி! அவனை பத்தி தெரிஞ்சுக்க சொன்னா, அவனே வந்து தட்டி எழுப்புற வர அதையே ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பியா?" கலா திவ்யாவிடம் கேட்க,

"வாவ்! சூப்பர் அத்தை எப்படி நான் அவங்களை பத்தி தான் நினைச்சுட்டு இருந்தேன்னு கண்டுபுடிச்சிங்க?" என்றாள் ஆர்வமாய்.

"உன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே! தூங்கின தடையமே இல்லை.. பின்ன புதுசா கல்யாணம் ஆனவ புருஷனை பத்தி நினைக்காமல் வேற என்ன நினைக்க போறா?" என்றவர் பதிலில் ஆ'வென அவரை பார்த்தாள் திவ்யா.

"நீங்க ரொம்ப ஷார்ப் அத்தை!"

"நீயாவது அப்பப்ப ஐஸ் வை மா... இவனுங்க எல்லாம் நல்லா கொட்டிக்கிட்டு நொட்டம் சொல்லத்தான் வருவாய்ங்க" என கணவரையும் மகனையும் சேர்த்தே வாரினார்.

"என்னடா புதுசா ஆள் கிடைச்சதும் உன் அம்மா ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு?" ஜெகதீசன் கேட்க,

"கேட்டால் ரசம் சாதம் தான் கிடைக்கும் பரவாயில்லையா?" என்ற கேள்வியில் அழுத்தமாய் வாயை மூடிக் கொண்டார் ஜெகா.

அன்று இரவு கார்த்தியிடம் அத்தை சொல்லி தந்தது போல பேசலாம் என இவள் வர அதற்கும் முன்பே தூங்கியிருந்தான் அவன். ஆனாலும் அப்படியே மகிழ்வாய் தான் அந்த நாள் கடந்தது திவ்யாவிற்கு.

அடுத்தநாள் சுகுணாவும் சண்முகமும் விருந்திற்கு அழைத்து செல்லவென வர, தன் அத்தையையும் உடன் அழைத்தாள் திவ்யா.

"சரியா போச்சு போ! உன் புருஷனை முந்தானையில முடிஞ்சு வச்சுக்க சொன்னா.. நீ என் முந்தானைல ஒளிஞ்சுக்க பாக்குற.. வெளுத்துபுடுவேன் டி உன்னை.. சந்தோஷமா போய்ட்டு சந்தோஷமா வாங்க" என்று வழியனுப்பி வைத்தார் கலா.

திவ்யா வீட்டை பார்த்தவன் நெஞ்சுக்குள் மீண்டும் ஒரு தாழ்வு நிலை.

சாதாரண பெண்களே செல்வ செழிப்பாய் இருப்பவனை தான் விரும்புவாள். இவள் இவ்வளவு வசதியாய் வாழ்ந்துவிட்டு... என நினைத்தவன் 'அப்ப அன்னையிடம் இவள் பேசுவது எல்லாம் நடிப்பா? என்றாவது இவன் எனக்கு வேண்டாம் என தூக்கிப்போட்டு விடுவளோ?' என கண்டதையும் மனது எண்ண தலையை உலுக்கிக் கொண்டான்.

"புகழ் எங்கேம்மா?" திவ்யா அன்னையிடம் கேட்க, 'அய்யோ அவன் வேற இருப்பானே!' என தான் தோன்றியது கார்த்திக்கு.

"அவனை உங்க அப்பா கம்பெனிக்கு அனுப்பிட்டாரு மா. மாப்பிள்ளைய பார்க்கணும்னு அப்பா போகல" என்றதும் தான் கொஞ்சம் மூச்சே வந்தது கார்த்திக்கு.

"தம்பி எப்படி மா.. நல்லா பாத்துக்குறாங்க தானே?" பெண் பிள்ளையை பெற்ற தாயாய் முதல்நாள் மகள் தனியாய் நின்றதை வைத்து ஏதேதோ கற்பனை செய்து திவ்யாவிடம் சுகுணா தனிமையில் கேட்க,

"அய்யோ ம்மா! ஏன் இவ்வளவு டென்ஷன்? அன்னைக்கு அவங்க வேலை பாக்குற ஆபீஸ்ல ஏதோ பிரச்சனைனு போயிருக்காங்க... வேற ஒன்னும் இல்லை" திவ்யா சிரித்த முகமாய் சொல்ல,

"நிஜமாவா?" என்றார் சுகுணா நம்ப முடியாமல்.

"நிஜமா தான் மா. அத்தை சோ ஸ்வீட் தெரியுமா? பேசினா சிரிச்சிட்டே இருக்கலாம். மாமாவும் தான். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மா அந்த வீடு"

மாடியில் இருந்து இறங்கிய கார்த்தியின் காதுகளில் தெளிவாய் விழுந்தது திவ்யாவின் வார்த்தைகள்.

தன் குடும்பம் பற்றிய அவள் கணிப்பு நூறு சதவீதம் சரி என்பதில் சிரித்துக் கொண்டவன் தன்னை பற்றி அவள் எதுவும் சொல்லவில்லை என்பதை மறந்திருந்தான்.

ஆனாள் சுகுணா அதை மட்டுமே கவனித்தவர் "தம்பி எப்படி? நல்லா பேசுறாரா?" என அதிலேயே நிற்க,

'அதுக்கு தான் மா நானும் பேச ட்ரை பன்னிட்டு இருக்கேன்' என மனதில் நினைத்தவள் அன்று ஆப்பிள் கேட்டு அதன்பின் நடந்த கதையை கூறவும் தான் மனம் கொஞ்சம் சமன்பட்டது அன்னைக்கு.

மதிய உணவை முடித்து டிவி முன் அமர்ந்திருந்தான் கார்த்தி.

"திவி! மாப்பிள்ளையை அருவி பக்கம் வேணா கூட்டிட்டு போய்ட்டு வாயேன். இந்த நேரம் கூட்டமும் இருக்காது.. வெயிலும் இருக்காது" என்று சொல்ல, அவனை பார்த்தாள் திவி.

போலாம் என்பதாய் அவன் தலையசைக்க, நடைபயணத்தில் இருக்கும் அந்த அருவி நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

அருவி அருகே சென்றதுமே ஒரு குளிர் காற்று முகத்தில் உரச அதை ஆழமாய் சுவாசித்தபடி நடந்தனர்.

காதல் தொடரும்..
 
LAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 6, 2021
13
3
3
Bangkok

Nice
 
  • Love
Reactions: Rithi