• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 5

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 5


"ஹேய் சாரி டி! நான் என்ன பண்றது சிட்டுவேஷன் அப்படி. ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோயேன்" புகழ் தனது பாதியாகி உயிரில் கலந்து விட்டவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் போனில்.


"புரிஞ்சிகிட்டேன் டா.. நல்லா புரிஞ்சிகிட்டேன்.. பிராடு! பிராடு! உன்னை போய் லவ் பண்ணேன் பாரு.. என்னை சொல்லணும்"


"சகிம்மா...." புகழ் குரல் அவ்வளவு இறங்கி இனிமையாய் ஒலித்தத்தில் பெண்ணவள் மயங்காவிட்டால் அதிசயம் தான்.


ஒரு நொடி மயங்கியவள் உடனே தெளிந்தும் விட்டாள். அவனை நன்கு அறிந்தவள் ஆகிற்றே இந்த ஒரு வருடத்தில்.


"கூப்பிடாத டா! அப்படி என்னை கூப்பிடாத! இப்படி பேசி பேசி தானே என்னை மயக்கிட்ட... இனி என்னை பார்க்க வந்த.. மவனே செத்த நீ!"


'அய்யோ செம்ம கோபத்துல இருக்குறா போலயே! இன்னைக்கு தானா எனக்கு இந்த சோதனை எல்லாம் நடக்கணும்' தனக்குள் நொந்து கொண்டான் புகழ்.


புகழ் இங்கே தன்னை தானே திட்டிக் கொண்டிருக்க, அந்த பக்கம் தன்னவள் அவளின் அன்னையுடன் பேசுவது தெளிவாய் காதில் கேட்டது.


"இந்நேரம் யார்கிட்ட பேசிட்டு இருக்க அம்மு! சாப்பிட்டு தூங்கு"


"தோ மா! ஆபீஸ் கால் தான்" என்றவள் "கேட்டுச்சுல்ல? போனை வை" என்றாள் புகழிடம்.


"நீ இப்படி கோபமா வச்சேன்னா எனக்கு எப்படி டா தூக்கம் வரும்? அதுவும் இன்னைக்கு நமக்கு ஸ்பெஷல் நாள் சகிம்மா!" இந்த முக்கியமான நாளில் அவளருகே இல்லாமல் போய்விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவன் குரலிலும் தெரிய, கொஞ்சம் இறங்கி வந்தாள் அவள்.


"சரி விடு! உன் சிஸ்டர்க்காக உன்னை மன்னிச்சு விடுறேன்!" அவள் சொல்ல,


"இன்னைக்கு ஆபீஸ்க்கு அப்பா என்னை தனியா அனுப்புவாங்கனு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை டா.. திவி வர்றான்றதையே மறந்துட்டேன்.. இல்லைனா வேற பிளான் கூட பண்ணியிருப்பேன்"


"ஹ்ம்ம்! புரியுது! பட் ஐ மிஸ் யூ புகழ்" என்ற குரலில் அவள் இவனை எவ்வளவு தேடியிருப்பாள் என்பது தெரிந்து இன்னும் வருந்தினான் அவன்.


இருவரும் அறிமுகமான முதல் நாள். முதல் சந்திப்பை அசைபோட விரும்பி இருந்த இருவரின் கனவையும் தானே அறியாமல் கலைத்திருந்தார் சண்முகம்.


கல்லூரி முடித்து சில மாதங்கள் கழிந்த பின்னும் எந்த கவலையும் இல்லாத சாதாரண இளைஞனாய் சுற்றிக் கொண்டிருந்த புகழை சண்முகம் ஒரு நாள் வலுகட்டாயமாக கம்பெனி விஷயமே ஒருவரை பார்க்க அழைத்து சென்றார்.


ஏனோ என்று உடன் சென்ற புகழ் உள்ளே செல்லாமல் காரில் அமர்ந்திருந்தான். அப்போது காரினை ரிவேர்ஸ் திருப்புகையில் கவனியாமல் பின்னால் நின்ற ஸ்கூட்டியை தள்ளி விட்டான்.


தள்ளிவிட்ட பின்பும் பெரிதாய் அதை கண்டு கொள்ளாமல் அவன் கார் உள்ளேயே இருக்க, தூரத்திலேயே அதை கண்டுவிட்டவள் வேகமாய் அந்த காரை நோக்கி ஓடி வந்தாள்.


"ஹெல்லோ மிஸ்டர்!" விண்டோ கண்ணாடியில் ஒரு விரலால் தட்டி அவள் அழைக்க, அப்போதும் அலட்டிக் கொள்ளாமல் கண்ணாடியை மட்டும் இறக்கி விட்டான்.


அதில் இன்னும் கடுப்பாகி போனாள் அவள். அதையும் அவன் கண்டு கொண்டானில்லை. இரு புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க,


கொஞ்சம் கீழே இறங்குங்க சார்!" என்றாள் தன்மையாய். அதே புருவங்களை நெற்றி நடுவே சுருங்கப் பார்த்தவன் அவள் சொல்படி இறங்கவும் செய்தான்.


"எஸ்!"


"என்ன எஸ்? அந்த வண்டி சாயும்போது நீங்க பார்த்திங்க தானே?" அவள் கேட்க,


"ஓஹ்! ஆமா.. ஆனா ஒன்னும் வேணும்னு செய்யலையே?"


"ஹான்! அப்ப நான் போய் ஒரு லாரி எடுத்துட்டு வந்து உன் காரை இதே மாதிரி தள்ளி புரட்டி போடுறேன். அதுவும் தெரியாமல் தான்.. வேணும்னு எல்லாம் இல்லை.. ஓகேவா?" என்று கேட்க, அவள் பிரச்சனையை பெரிந்தாக்குவதாய் தோன்றியது அவனுக்கு.


"லுக் மேடம்! ஐம் சாரி போதுமா! அதுக்கு எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க நான் பே பண்றேன்" என்றவன் பர்சை திறக்க,


"பத்தாயிரம்" என்றாள் கொஞ்சம் இழுத்து.


அவள் சொன்னது என்னவோ அவன் வாயை பிளக்க வேண்டும் என்று தான். ஆனால் இறுதியில் அவன் செய்கையில் இவள் தான் வாயை பிளக்கும்படி ஆனது.


எந்தவித ஆட்சேபனையும் இன்றி சாதாரணமாய் அவள் கேட்டதை எடுத்து இவன் நீட்டவும் இவள் கண்களை அப்படி விரித்துப் பார்த்தாள்.


"வாங்கிக்கோங்க மேம்! ஐம் சாரி ஓகே!" அவன் தன்மையாய் தான் இப்போது கூறினான். ஆனால் அதிலும் அவனின் பணத்திமிரே அவளுக்கு தெரிந்தது.


நோட்டை நீட்டியபடி அவனும், வாயையும் கண்களையும் விரித்தபடி அவளும் நிற்க, நல்லவேளையாய் வந்து சேர்ந்தார் சண்முகம்.


"யாரு டா இது?" புகழிடம் அவர் கேட்க, அவரை பார்த்தவன்,


"அவங்க ஸ்கூட்டியை தெரியாமல் டேமேஜ் பண்ணிட்டேன் பா" என்றவன் பின்னால் நின்ற வண்டியை காட்ட, அதை இன்னொரு பெண் தூக்கிக் கொண்டிருந்தார்.


'ரொம்ப பெரிய அப்பாடக்கர் போலயே!' என நினைத்து நின்றவளும் அப்போது தான் அருகில் நின்றவரை பார்த்தாள்.


"உங்க பையனா சார்?" அவள் கேட்க,


"ஆமா மா! அது உங்க வண்டி இல்லையா?" வண்டியை எடுத்துக் கொண்டு சாதாரணமாய் ஸ்டார்ட் செய்து, சென்று கொண்டிருந்த பெண்ணை பார்த்தபடி கேட்டார் சண்முகம்.


"ஹப்பா! நீங்க உங்க பையன் மாதிரி இல்லை சார். முதல்ல கொஞ்சம் யோசிக்க கத்துக் கொடுங்க... அப்புறமா இவ்வளவு காசு கையில கொடுங்க" என்ற ப்ரியசகி அவனையும் அவன் கையையும் பார்த்தபடி பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள்.


"ஏன் டா! யார்? என்ன? வண்டிக்கு என்ன ஆச்சு? இப்படி எதுவுமே கேட்காமல் தான் நோட்டை எடுத்து நீட்டுனியா? நல்ல பொண்ணா இருக்க போய் பணம் தப்பிச்சுது.. அந்த பொண்ணு சொன்னதும் சரி தான்.. ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்த உன் அம்மாவை சொல்லனும்" என்றபடி அவர் காரில் ஏற, அவளை முதலில் முறைத்து பின் கோபம் கொண்டு பின் யோசித்து என குழம்பி காரை ஸ்டார்ட் செய்தான்.


இதுதான் அவர்களது முதல் சந்திப்பு.. அவள் முதல் முதலாய் வேலையில் சேர்ந்த தினம் அது. அவ்வளவு எளிதில் மறக்க கூடியதும் அல்லவே!


அது மற்றவர்களை பொறுத்தவரை சாதாரண இன்சிடென்ட் தான்.. ஏன் அவர்களுக்கும் கூட... அடுத்தடுத்த சந்திப்புகள் நிகழும்வரை.


அதன்பின் தான் தந்தையுடன் கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் இப்போது வரையிலுமான பொறுப்பு வரை அனைத்தும் அதன்பின்னானது தான்.


இரண்டாம் முறை புகழை அவள் கண்ட நேரம் "ஹாய் அப்பாடக்கர்" என அவளே முன்வந்து நிற்க, சில நொடிகளில் அவளை கண்டு கொண்டவன் முறைத்தபடி நின்றான்.


"சாரி உங்க நேம் தெரில.. அதான்..."


"ஏங்க! ஏதோ தெரியாமல் அந்த வண்டியை இடிச்சுட்டேன்... அதை வண்டி ஓனரே பெரிசு பண்ணாம கிளம்பிட்டாங்க.. நீங்க ஏங்க என்னை நிக்க வச்சு கிளாஸ் எடுத்தீங்க? இதுல பத்தாயிரம் பணம் வேற! என் அப்பா வரலைனா என்னை ஏமாத்திட்டு போயிருப்பிங்க தானே?"


கோபம் எல்லாம் இல்லை.. அன்றைய தினத்தை கடந்து வந்துவிட்டான் தான்.. ஆனாலும் அவனையே ஏமாற்றி ஒரு பெண் பணம் பறிக்க பார்த்த எண்ணம் அவனை விட்டு போகாமல் இருக்க அந்த ஆதங்கத்தை தான் குரலில் காட்டினான்.


"அட! இது நல்லாருக்கே! ஏன் சார்.. அது என் வண்டினு நான் சொன்னேனா? இல்லை பணம் வேணும்னு நான் கேட்டேனா? நீங்களா தானே எடுத்து நீட்டினிங்க?" சரியான கேள்வி!.


"ஆமா தான்... ஆனால் ஏங்க அடுத்தவங்க வண்டிக்கு என்கிட்ட சண்டைக்கு வந்திங்க?"


"அய்யயோ! சத்தியமா நான் சண்டைக்கு எல்லாம் வர்ல.. ஜஸ்ட் இப்படி தப்பு பண்ணிட்டு கண்டுக்காத மாதிரி போனீங்க இல்லையா? ஒரு உணர்ச்சி வேகத்துல பொங்கிட்டேன்.. தப்பா எடுத்துக்காதிங்க!"


எப்படி சொல்வது? ஒரு ஆணை கவர்வதற்கான எந்த ஒரு சொல்லோ, செயலோ அவளிடம் இல்லை.. அவன் பணத்தை நீட்டியதில் அவனின் பகட்டு தெரிந்து பழகவெல்லாம் முயலவில்லை.. தெரிந்தவரிடம் சகஜமாய் பேசுவது போல அவள் பேச்சிருக்க, இரண்டாம் சந்திப்பில் கொஞ்சம் உன்னிப்பாய் அவளை கவனிக்க வைத்திருந்தாள் அவளறியாமல்.


இப்படி ஏற்பட்ட சந்திப்பு காதலானது எல்லாம் சரித்திர நிகழ்வு தான்...


"ஹெல்லோ! டேய் இருக்கியா?" என்றழைப்பில் நினைவுகளில் இருந்து மீண்டான்.


"ம்ம் இருக்கேன் சகிம்மா! ஐ லவ் யூ சோ மச்!" - புகழ்.


"க்க்கும்ம்! போதும் போதும்.. அம்மா கூப்பிடுறாங்க.. பை.." என்றவளுக்கு அவனின் ஐ லவ் யூ கொஞ்சம் வேலையை காட்டத் தான் செய்தது.


"ம்ம் பை டா!" என்றவன் எழுந்து சாப்பிட ஹாலிற்கு வந்த நேரம் கார்த்தியும் திவ்யாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.


"வா டா! எவ்வளவு நேரமா கூப்பிட்டேன்? உள்ள என்ன தான் பண்றியோ?" சுகுணா பேசிக் கொண்டே அவனுக்கும் சப்பாத்தியை தட்டில் வைத்தார்.


கார்த்தி புகழை பார்த்துவிட்டு அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


"புகழ் மார்னிங் வெளில போலாமா?" திவ்யா கேட்க, கார்த்தி கரங்கள் ஒரு நொடி அப்படியே நின்று விட்டது சாப்பாட்டுத் தட்டில்.


காலையில் எழுந்ததும் சென்று விடலாம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தான். 'அதை அவளிடமும் நீ சொல்லி இருக்கலாம்' என்றது மனசாட்சி.


"தெரிலயே திவி! அப்பாகிட்ட கேட்கணும்.. ஒர்க் இல்லைனா போகலாம்" என்ற புகழுக்கும் உடன் கார்த்தியும் வருவானே என்ற எண்ணம் தான்.


இருவருக்கும் சகஜமாய் பேசிக் கொள்ள ஏதோ ஒன்று தடுத்தது. புகழ் பக்கம் கார்த்தியை ஏற்க மறுக்கும் காரணம் அவன் மாதசம்பள வர்க்கம் என்பது தான். ஆம் நிச்சயம் அது தான். புகழின் இயற்கை குணம் அது தானே? அவனின் சகிக்காக மாற்றிக் கொண்டதை எல்லா விஷயத்திலும் ஏற்று கொள்ள முடியுமா என்ன? நியாயவாதி தான் புகழ்.


கார்த்தி பக்கம் பெரிதாய் காரணம் ஒன்றும் இல்லை.. அன்னை, தந்தை, தான் என இருந்தவன். இடையில் வந்தவள் இடையிலேயே சென்றுவிட இவன் அதிகம் பேசிய மூன்றாவது நபரே திவ்யா தான். பின் எப்படி தன்னை கண்டால் முகத்தை லேசாக எனினும் திருப்பும் புகழிடம் பழகிட முடியும்?.


"அப்பா எங்கேம்மா?" - புகழ்.


"யாரோ கால் பண்ணினாங்க டா. பேசிட்டு இருக்காங்க" என்றவர் மீண்டும் புகழ் திருமணம் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.


காதல் தொடரும்...
 

Vinolia Fernando

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 7, 2021
Messages
6
Dai pugal in sagi ya mattum ethukitta karthik kitta pesi paru appo pudikkum ( 🤔🤔🤔🤔 aaaaaana karthik pesuvana athu konjam doubt than😁😁😁)
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
Dai pugal in sagi ya mattum ethukitta karthik kitta pesi paru appo pudikkum ( 🤔🤔🤔🤔 aaaaaana karthik pesuvana athu konjam doubt than😁😁😁)
அதானே கார்த்தி யாரு 🤣🤪
 
Top