• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
766
561
93
Chennai
அத்தியாயம் 6

"புகழுக்கு கல்யாணமா?" திவி கேட்க,

"உன்னை விட நாலு வயசு மூத்தவன் டி. உனக்கு அப்புறம் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சோம்.. அதே மாதிரி இப்ப தான் உனக்கு நல்ல இடமா முடிஞ்சிடுச்சே! இனி அவனுக்கும் ஒரு பொண்ணை தேட வேண்டியது தான்" சுகுணா சொல்ல,

நல்ல இடம் என்றதில் கொஞ்சம் கோபம் கொஞ்சம் கேலி என கலந்து கார்த்தியை புகழ் பார்த்ததாகவே கார்த்திக்கு தோன்றியது.

"ஆமால்ல! இப்ப தான் நானும் புகழும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்ட ஞாபகம்.. அதுக்குள்ள அடுத்தடுத்த கல்யாணம்.. எவ்வளவு வேகமா போகுதுல்ல காலம்?" திவி உணர்ந்து சொல்ல,

"இதெல்லாம் உன் கல்யாணத்து அப்ப உனக்கு தோணலையா திவி?" என்றான் புகழ்.

"ப்ச்! அது வேற புகழ். அப்ப தான் கல்யாணம்னு வீட்ல எந்த பேச்சும் இல்லையே? ஆனா இப்ப வீட்டுல ஒரு விஷேஷம்னு சொல்லும்போதே ஒரு மாதிரி ஜாலியாவும் இருக்கு... இனி இப்படியே சண்டை போட்டு விளையாட முடியாதேன்னு கவலையாவும் இருக்கு" திவி சொல்ல, அனைத்தும் பார்த்து அமைதியாய் அமர்ந்திருந்தான் கார்த்தி.

"ம்மா! என்னம்மா இவ? கல்யாணம் ஆன மூணு நாள்ல முன்னூறு வயசு கிழவி மாதிரி பேசுறா!" திவியை கிண்டல் செய்த புகழ்

"ஏய்! உனக்கு அவ்வளவு கஷ்டம் தர்ற யாரும் நம்ம வீட்டுக்குள்ள வர மாட்டாங்க. சரியா?" என்றவன் அவள் தலையை சிறிதாய் ஆட்டி கார்த்தியை ஒரு பார்வை பார்த்து எழுந்து விட்டான்.

அவன் கூறிய வார்த்தை எல்லாம் தன் சகியை மனதில் கொண்டு மட்டுமே! இப்போதும் அன்னை மீண்டும் திருமண பேச்சை எடுக்கவும் இனி தன் தங்கையை தவிர யாரும் தனக்கு உதவ முடியாது என புரிந்து அவளிடம் சீக்கிரமே சகியை அறிமுகபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து அறைக்கு சென்றுவிட்டான்.

"வீட்டுக்கு எப்ப போலாம் திவ்யா?" அறைக்கு வந்ததும் கார்த்தி கேட்க,

'மறுபடி திவ்யானு இழுக்க ஆரம்பிச்சாச்சா?' என நினைத்தவள் "போராடிக்குதா இங்கே?" என்றாள்.

"ச்ச! ச்ச! அப்படி எல்லாம் இல்ல. அம்மாவை ரொம்ப மிஸ் பன்றேன். டெய்லி அம்மா வாய்ஸ் கேட்டு பழகிட்டேன்ல அதான்... நீயும் இந்த ரெண்டு நாள்ல உன் அம்மா, அப்பா, அண்ணனை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணியிருப்ப இல்ல?" கார்த்தி கேட்க,

"ம்ம் ரொம்ப ரொம்ப! ஆனா அது கூட இங்கே வீட்டுக்கு வந்த அப்புறம் தான் மிஸ் பண்ண பீல். எல்லாத்தையும் என்னை மறக்க வைக்குற அளவுக்கு அத்தை பார்த்தாங்க தானே? பெருசா எந்த வித்யாசமும் தெரில.. புகழ் உங்ககிட்ட சரியா பேச மாட்டுறான்ல? கஷ்டமா ஐ மீன் அன்கம்ஃபார்டபிளா இருக்கா உங்களுக்கு?" - திவ்யா.

"டு பி பிரான்க் கொஞ்சம் அன்கம்ஃபார்டபிளா தான் இருக்கு.. பட் இட்ஸ் ஓகே உனக்காக தானே!" என்றவன் சொன்ன வார்த்தையை நம்ப முடியாமல் அவள் கண்களை விரிக்க, "ஏய் ஓவர் எமோஷனல் ஆகாத!" என்ற கலா அத்தையின் குரல் அசரீரியாய் கேட்டது.

கார்த்தியும் இப்படி பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. தோன்றியதை அப்படியே சொல்லியிருந்தான். சொல்லியவன் கண்களை மூடி படுத்துவிட, இவளே அவனை பேச வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.

"புகழ் எப்பவும் இப்படி தான். அம்மா ஒரே பையன்னு ஓவர் செல்லம்" அவள் சொல்ல, கண் விழித்து அவளை பார்த்தவன் "அப்ப நீ ஒரே பொண்ணு இல்லையா?" என்றான் புன்னகையை மறைத்து.

"ம்ம்ம் அப்படி இல்ல. எல்லா வீட்லயும் கடைக்குட்டின்னு லாஸ்ட்ல பொறந்ததை தானே செல்லம் கொஞ்சுவாங்க? ஆனா அம்மாக்கு எப்பவுமே புகழ் தான் செல்லம்.. என்னை திட்டிட்டே இருப்பாங்க" என்றாள்.

"ஹ்ம்ம்"

"அவன்.. கொஞ்சம் ஸ்டேட்டஸ்.. பார்ப்பான்... கெட்டவன் எல்லாம் இல்ல.. உங்களை பத்தி தெரிஞ்சா புரிஞ்சிக்குவான்.. அப்புறம் இப்படி பண்ண மாட்டான். சாரி" அவள் விளக்கம் சொல்ல,

"என்னை பத்தி என்ன தெரிஞ்சா... என்ன புரிஞ்சுக்குவான்?" அவள் பதிலையே இவன் கேள்வியாக்கி கேட்க, அவள் பேந்த பேந்த முழித்தாள்.

அதில் சிரித்தவன் "சொல்லி புரிஞ்சுக்குற அளவுக்கு நான் எதுவும் செய்யலயே.. பாத்தாதத்துக்கு ஒருத்திகிட்ட ஏமாந்து இன்னொருத்திகிட்ட மேடையேறி பல்பு வாங்கி இருக்கேன்.. இதெல்லாம் வச்சு பார்த்தால் புகழ் என்னை பத்தி என்ன மாதிரி மைண்ட் செட் வச்சிருப்பாருன்னு எனக்கு தெரியாதா? யாரு தான் இப்படிபட்டவனுக்கு தன்னோட தங்கையை கொடுப்பாங்க? சரியா தான் யோசிக்குறாங்க. அதனால தான் எனக்கு அவரை பேஸ் பண்ண முடில" உண்மையை தெளிவாய் கூறினான்.

"அதெப்படி? யாரோ பணத்து பின்னாடி போனதுக்கும்... இன்னொருத்தரை லவ் பண்ணி போனதுக்கும் நீங்க எப்படி பொறுப்பாக முடியும்?" அவனுக்காக அவனிடமே வாதாடினாள்.

"இருக்காலாம் தான். அப்படி பார்த்தால் அதுகூட தெரியாத முட்டாளா தானே நானும் இருந்திருக்கேன்?" அவனையும் அறியாமல் அவளுடன் அவன் அடுத்தடுத்து பேச,

"ப்ச்! போங்க.. நான் அத்தைகிட்டயே கேட்டுக்குறேன்" என்றவள் அவனிடம் வாதாட முடியாமல் போனை எடுக்க போக,

"ஏய்! அப்பா டேப்லெட் போட்ருப்பாங்க. மார்னிங் பேசிக்கலாம். குட் நைட்" என்றவன் அவளை பார்த்து சிரிப்போடே கண்களை மூடிக் கொண்டான்.

இதுகூட ஒருவித சுகமாய் தான் இருந்தது அவனுக்கு. அவளுக்கு தான் அவனை அவனே குறைத்து பேசியதில் கடுப்பாகியது.

அன்னை சாரதா ஊட்டிவிட கண்களை நோட்புக்கில் மேய விட்டிருந்தாள் பிரியசகி.

"சாப்பிடும்போது சாப்பாட்டை தான் கவனிக்கணும்னு சொன்னா கேட்குறதே இல்ல.. இப்படி சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும்.. எப்பபாரு புக்கும் கையுமா சுத்துறது" சாரதா திட்டிக் கொண்டே ஊட்ட,

"ப்ச் ம்மா! டிஎல் டூ டேஸ் லீவ் மா. பையர் அச்சிடேன்ட்ல எவ்ளோ லாஸ் ஆச்சுன்னு பாத்து சொல்லலின்னா அந்த காண்டா மிருகம் என்னை வச்சு செய்யும்" என்றவள் கணக்கு வழக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ம்ம் இந்த கணக்கை எல்லாம் வேலை செய்யுற இடத்தோட நிறுத்திக்கோ! வீட்டுக்கு வந்தா ரெஸ்ட் எடுக்கணும்னு எவ்வளவு சொன்னாலும் உனக்கு புரியாது"

"புரியுது மா! நான் என்ன செய்யுறது.. ஒரு ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அப்புறம் நான் பிரீ தான்" என்றவள் கண்கள் மட்டும் திரும்பவே இல்லை.

"காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடனும். எவ்வளவு நாள் தான் நீயும் இப்படியே இருக்க முடியும்? இதுல இவளுக்கு வர்றவன் என்னையும் சேர்த்து பார்த்துகிட்டா தான் கல்யாணம் செஞ்சுப்பாளாம்! இதெல்லாம் நடக்குற காரியமா?" சாரதா புலம்பலை ஆரம்பிக்க,

'அதெல்லாம் புகழ் உங்களை அவன் அம்மா மாதிரியே பார்த்துப்பான் மா' என நினைத்தவள்,

"ம்மா! ஆரம்பிச்சுட்டிங்களா? போய் தூங்குங்க.. நான் கொஞ்சம் லேட்டாகும்" என்று அன்னையை அனுப்பிவிட்டாள்.

சாரதாவின் ஒரே மகள் சகி. தந்தையை முகம் அறியும் முன்னவே இழந்தவள். தந்தைக்கும் சேர்த்து தாய் பாசத்தை கொட்டி வளர்த்து தன்னால் முடிந்த மட்டும் படிக்கவும் வைத்துள்ளார்.

வசதி என்று எதுவும் தாயும் மகளும் அறிந்தது இல்லை. சாரதாவை ராணியாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் பிரியசகியின் ஒரே கனவு. அப்படி இருந்தவளை தான் புகழ் கொஞ்சம் கொஞ்சமாய் காதலில் விழ வைத்தான்.

அப்போதும் அன்னையையும் தன்னையும் பற்றி அவனிடம் கூறி அவளையும் அவள் ஆசையையும் நன்கு புரிந்து கொண்ட பின் தான் இவளும் இவள் காதலை ஒத்துக் கொண்டதே!

புகழின் குணம் நன்கு தெரிந்தவள். ஆனால் இவளிடம் ஏகத்துக்கும் அவனுக்கு விதிவிலக்கு தான். அப்பாடாக்கர் என்ற வார்த்தையை அவனை சீண்ட மட்டுமே உபயோகப்படுத்துவாள்.

இதுவரை அவனிடம் இருந்து எதையும் பெற்று கொண்டதில்லை காதலை தவிர. அவளுக்காவே தான் புகழும் மாறியது. அவளின் தன்மானம் புரிந்து அவளை அவளாக ஏற்று தன்னுடைய சம்பாத்தியத்தில் அவளை பார்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசையை உருவாக்கி இருந்தாள் அவனுக்குள். அதன்பின் தான் தந்தை தொழிலை இவன் கற்று கொள்ள ஆரம்பித்தது.

ஆனாலும் தங்கை கணவன் கார்த்தி விஷயத்தில் இவனின் மூளை வேலை செய்யவில்லை. எல்லாரும் தன் சகி போல இருப்பார்களா என்ன என்ற எண்ணம் கூட.

அடுத்தநாள் காலை எழுந்ததும் குளித்து கிளம்பி தயாராய் திவ்யா வெளிவந்த போது கார்த்தி வாக்கிங் முடித்து அப்போது தான் வீட்டிற்குள் வந்தான்.

"என்கிட்ட சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் தானே? தெரியாத இடத்துல எப்படி போனீங்க?" அவள் கேட்க,

"சும்மா கொஞ்ச தூரம் நடந்திட்டு வந்தேன்" என்றவன் அறைக்குள் செல்ல, அங்கே கிளம்புவதற்கு தயாராய் பேக்கை வைத்திருந்தாள் திவ்யா.

கார்த்தி கேள்வியாய் அவளை பார்க்க, அவனை பார்த்து கண் சிமிட்டியவள் எதுவும் சொல்லாமல் அவனுக்கு காபி எடுக்க சென்றுவிட்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் டிபனை முடித்துக் கொண்டு அன்னை தந்தையிடம் ஆசி வாங்கி புகழ் வழியனுப்பி வைக்க கார்த்தியுடன் அவன் இல்லம் நோக்கி பயணமானாள்.

"ம்மா!" அழைத்துக் கொண்டே கார்த்தி வீட்டிற்குள் வர, வேகமாய் வெளிவந்த கலா அவனை தாண்டி சென்று திவ்யாவை கட்டி வரவேற்றார்.

கார்த்தி அன்னையை முறைத்து நிற்க, திவ்யா அவனை பார்த்து சிரிக்க, வெளிவந்த ஜெகதீசன் அவன் தோள் தட்டி சிரித்தார்.

"இப்படி தான் டா ஏடாக்கூடமா பண்ணி ரெண்டு நாளா என்னை டார்ச்சர் பண்றா. நல்லவேளை இப்பவாச்சும் வந்திங்களே!" ஜெகதீசன் சொல்ல,

"இங்க பாரு திவி இனி எங்கேயும் போறதா இருந்தா கையோட என்னையும் கூட்டிட்டு போய்டுங்க.. இந்த ஆளு கூட என்னால தனியா எல்லாம் இருக்க முடியாது" என கலாவும் சொல்ல,

"ஆமா டா தயவு செஞ்சு அவளை கூட்டிட்டு போய்டு. கிழவிக்கு சமைக்கவும் தெரில.. ரசனையும் இல்ல" என சண்டையை தொடர்ந்தார் ஜெகா.

"ஐயோ கருமம் கருமம்! டேய் கண்ட பொண்ணுங்க கருமாந்திரமா டிரஸ் பண்ணிட்டு வர்றதை இருந்து டிவில பார்த்துட்டு இருக்காரு டா"

"அடிங்க.. நான் என்ன எப் டிவியா பார்த்தேன்? ஏதோ ட்ரடிஷனல் பஸ்ஸன் தானே பார்த்தேன்!"

வந்தவர்களை உள்ளே அழைக்கும் எண்ணம் இல்லாமல் சண்டை தாராளமாய் தொடர, கார்த்தி ஒரு தலையசைவுடன் உள்ளே சென்றுவிட்டான். அங்கேயே வேடிக்கை பார்த்து அமர்ந்துவிட்டாள் திவி.

காதல் தொடரும்..